Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uyir Kaakkum Uyir Kolli -3

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
உயிர் காக்கும் உயிர் கொல்லி - 3

அன்று இரவு அனைவரும் தூங்கிய பின்பு வழக்கம் போல தனது அத்தை தனக்காக கொடுத்து அனுப்பிய அதிரசத்தை சாப்பிட சமையல் அறைக்குள் நுழைந்தான் இளம்பரிதி.
அவன் பாத்திரத்தை திறந்து ஒரு அதிரசத்தை எடுத்து வாயில் வைக்கவும் திடிரென ஒரு ஒளி. நளினி தான் அவனை புகைப்படம் எடுத்திருந்தாள்.
"மாட்டுனீங்களா? அத்தான்..... அப்பப்பா எவ்வளோ சீன் போட்டீங்க ..... நாளைக்கு பாருங்க எல்லார் கிட்டயும் இந்த ஃபோட்டோவ காட்டி உங்க இமேஜ டமேஜ் பண்றேன்.

"நளினி அந்த போட்டோவ டெலிட் பண்ணு"

"டெலீட் பண்றதுக்கா இவ்ளோ நேரம் தூங்காமல் முழிச்சிருந்து போட்டோ எடுத்தேன்...... முடியாது"

"என் கிட்ட முடியாதுன்னு சொல்லாத நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்று கூறியவாறே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

"என்ன பண்ண முடியும் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க"

"என்னவேணா பண்ணலாமா?" மையலாக கேட்டவாறே அவளை நோக்கி சென்றான். அவள் அருகில் சென்றதும் தன் ஒரு கையால் அவளுடைய இடுப்பை வளைத்து அவளை தன்னுடன் சேர்த்து இருக்கி அவள் இதழ்களை நோக்கி குனிந்தான். பாவையவள் கள் உண்ட வண்டாய் கண்மூடி மயங்கி நின்ற வேலையில்........

"என்ன பண்ண முடியும்னு கேட்டல்ல..... நானே டெலிட் பண்ணிடுவேன் .......... பண்ணிட்டேன்"

நடந்ததை அவள் கிரகித்துக் கொள்ளவே சில நொடிகள் பிடித்தது. அதற்குள் அவன் அவளை விட்டு வெகு தூரம் சென்றிருந்தான்.
" அத்தான் நீங்க ரொம்ப மோசம்..... இது சீட்டிங்" என்ற அவள் குரல் காற்றில்கரைந்துது.

பல்லாயிரம் மையில்களுக்கு அப்பால் .......

இன்றைய சூழ்நிலையில் ஆராய்ச்சி என்பது மனிதனை அழிவை நோக்கி இழுத்து சென்று கொடிருக்கிறது. இத்தகைய ஒரு ஆராய்ச்சியை தான் செய்து கொண்டிருந்தார் ஜின்வான்.

வைரஸ் என்பது ஒரு நச்சுக்கிருமி. உலகம் முழுதும் ஆயிரகணக்கான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சில வைரஸ்கள் மட்டுமே மனிதனை தாக்கும் தன்மை உடையனவாய் உள்ளன. ஒரு சில வைரஸ்கள் விலங்குகளை மட்டும் தாக்கும். ஒரு சில வைரஸ்கள் பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கும். ஒரு வைரஸ் பெருக வேண்டுமென்றால் அதற்கு ஒரு உடல் கண்டிப்பாக தேவை அது மனிதனாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, வேறு எந்த ஒரு உயிரினமாகவோ இருக்கலாம். ஆனால் எந்த ஒரு வைரஸிற்கும் தனித்தியங்கும் தன்மை கிடையாது.

இப்பொழுது மக்களுடைய உயிர்காக்கும் மருத்துவமும்...... வியாபாரம் ஆகி கொண்டிருக்கும் நிலையில், புதிது புதிதாண வைரஸ்களையும் உருவாக்கி கொண்டிருந்தனர் விஞ்ஞானிகள், என்னும் பெயரில்....... சுற்றிக் கொண்டிருக்கும் அரக்கர்கள்.

அந்த ஆராய்ச்சி மையத்திலும் இத்தகைய ஒரு அநியாயம் தான் நடந்துகொண்டிருந்தது. பறவைகளை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த ஒரு நச்சுக்கிருமியின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி அதை மனிதனை தாக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இப்பொழுது அந்த கிருமியை தான் ஒரு மனிதன் உடம்பில் செலுத்தி அது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அதற்கான மாற்று மருந்தும் இன்றளவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பது பெரும் குற்றம்தான் என்றாலும்...... அது மிகவும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்ததால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த கிருமி இந்த மனிதனின் உடம்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினால் அது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

அதன் செயல்பாட்டை கண்டறியவே இத்தகைய ஒரு ஆபத்தான ஆராய்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் அந்த வைரஸ் அவன் உடம்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? தன்னையே பெருக்கி கொள்கிறதா? என்பதனை தெரிந்துகொள்வார்கள். அதன்பிறகு அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிந்துகொண்டு அதற்கான மாற்று மருந்தை தயாரிக்க ஆரம்பிப்பார்கள் அப்படி மாற்று மருந்து தயாரித்த பின்பு நோயையும் மருந்தையும் சேர்த்து விற்பனை செய்து விடுவார்கள்.

இது இவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்யப்போவது இல்லை. இன்றைய அவர்களுடைய நோக்கம் வேறு........ பொருளாதாரத்திலும் மற்ற அனைத்து விஷயங்களிலும் தங்கள் நாடே சிறந்து விளங்க வேண்டும் என்பதே இப்பொழுது அவர்களுடைய நோக்கம்.....அந்த நோக்கத்தை செயலாகவே இந்த ஆராய்ச்சி அவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

காரணம்...... இந்த வைரஸ் எளிதில் பரவும் தன்மையுடையது. இது மட்டும் ஒரு நாட்டில் பரவ ஆரம்பித்தால் அந்த நாடு மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். ஒருவர் வீழ்ந்தால் இன்னொருவர் வளர்வது நிதர்சனமான உண்மை தானே. அதற்காகவே இவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் அக்கிரமங்களை சகித்து கொண்டிருப்பான் தான்..... ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு..... அந்த எல்லை கூடிய விரைவில் தகர்த்தெறியப்பட இருக்கிறது. இன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் அந்த மனிதனே, கடவுள் இவர்களுக்கு எதிராகபயன்படுத்த இருக்கும் ஆயுதமாக மாற இருக்கிறான். இவர்கள் இன்று பலி ஆடாக அடைத்து வைத்திருப்பவன் இவர்களை மட்டுமின்றி பலரையும் பலி கேட்க இருக்கிறான்.

......................

"ஓய் இங்க வா" என்று தன் வகுப்பறையை நோக்கி சென்று கொண்டிருந்த நளினியை அழைத்தான் இளம்பருதி.
"என்னய்யா கூப்பிட்டீங்க" என்றாள் அவள் பதிலுக்கு. "ஆமா உன்ன தான் சீக்கிரமா வா"
"என்ன விஷயம் சொல்லுங்க"
"நம்ம காலேஜ்ல பிரஷ்ஷா்ஸ்க்காக ஒரு டேலண்ட் ஷோ நடத்துறோம் உங்க கிளஸ்ல யாரெல்லாம் சேர விருப்படுறாங்களோ அவங்களுடைய பெயர் வாங்கிட்டு வந்து கொடு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கைபேசி அடிக்க "மச்சான் ஜெயராஜ் சார் கூப்பிடுராரு டா என்னன்னு தெரியல நான் போய் கேட்டுட்டு வந்திடுறேன் நீ இவளுக்கு அத பத்தின டீடெயில்ஸ் எல்லாமே சொல்லி அனுப்பிடு" என்றவாறு பொருப்பை ரகுவிடம் ஒப்படைத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்
"ஓகேடா நீ போ நான் மத்த டீடெயில்ஸ் நான் சொல்லிடுரேன்"
"சொல்லுங்க அண்ணா என்ன காம்பெடிஷன்லாம் இருக்கு" என்று அவள் வினவ......
"நான் மட்டும் தான் அண்ணனா.... அவன நீ அண்ணானு குப்பிட்ட மாதிரியே இல்லையே அவனும் சீனியர் தான?" நேற்று அவள் அவனை (பரிதியை) முறைத்து சென்றதையும் இன்று அவன் அவளை உரிமையாய் அழைத்ததையும் கவனித்ததால் ரகுவிற்கு அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்குமோ என்ற ஐயம் ஏற்பட்டிருந்தது அதன் பொருட்டே இந்த கேள்வி. "அவரை எப்படி அண்ணான்னு கூப்பிடுரது அவர் என்னோட கனவுக்கண்ணனாச்சே" என்றாள் அபிநயம் பிடித்து. "கண்ணா வா..... ஆமா... அவனுக்கு இந்த விஷயம் தெரியுமா? "
"அத்தானுக்கு தெரியாமலா...... தெரியுமே" என்றபடி அங்கிருந்து அகன்று அவள் வகுப்பறையை நோக்கி சென்றாள்.

'என்னது அத்தானா....... அடப்பாவி நேத்து தானடா காலேஜ் ஆரம்பிச்சது ஜெட் ஸ்பீடா இருக்கானே அவன்கிட்ட இருந்து நம்ம நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு' என்றபடி தன் பெண் பார்க்கும் பணியை தொடர்ந்தான்.

இளம்பருதி தன் ஆசிரியர் ஜெயராஜை பார்க்க ஆய்வுக்கூடத்திற்கு சென்றான்.

ஜெயராஜ் மற்ற ஆசிரியர்களை போல் அல்லாது மாணவர்களிடம் சகஜமாய் பழகுபவர். எப்போதும் மாணவர்களை ஊக்குவிக்கும் குணம் கொண்டவர். அதனாலேயே இளம்பருதி அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான். "அவரைக் கண்டதும் சார் கூப்பிட்டீங்க என்ன விஷயம்" என்றான்
"ஆர் யு ஃப்ரீ மை பாய்" என்றார் அவர் இன்முகத்துடன்.
"எஸ் சார் இன்னிக்கி பிரஷர்ஸ் டேலண்ட் ஷோ இருக்கிறதுனால கிளாசஸ் கேன்சல் பண்ணிட்டாங்க நீங்க சொல்லுங்க" என்றான்..... அவர் உடனே உட்கார்ந்து பேசலாம் வா என்று அவனை ஒரு இருக்கையில்அமரவைத்து தானும் அமர்ந்து கொண்டார்.
"உன்னோட ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் கூப்பிட்டேன் ..... அன்னைக்கு ஸ்டீபன் சார் உன் ப்ராஜெக்ட் பத்தி கேக்காம ரிஜக்ட் பண்ணிட்டாருனு நீ ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த சோ நீ என்கிட்ட சொன்னா நான் அவர சம்மதிக்க வைக்கிறேன்" என்றார்.
"தேங்க்யூ சார்...... சார் என்னோட பிராஜக்ட் மூலமா வைரஸ்சால வர்ற எல்லா நோயையும் குணமாக்க முடியும் அதுவும் ஒரு வைரஸை வச்சே" என்றான் அவன்.

"இட்ஸ் இம்பாஸிபில்" என்றார் அவர் அவன் கூறுவதில் நம்பிக்கை இன்றி.

"ஐ மேடு இட் பாஸ்சிபில் சார்"

"என்ன சொல்ல வர்ற ஹெச் ஐ வி ய கூட குணப்படுத்த முடியும்னா?"

"ஆமா சார் சாதாரண சளி இருமலில் இருந்து ஹெச் ஐ வி வரைக்கும் எல்லா வைரல் டிசிஸ் கும் ஐ ஹவ் அ சொல்லுசன்"

"நீ உண்மையிலே ஜீனியஸ்தான் கிரேட் கீப் இட் அப். ஆமா..... உன்னோட இந்த இன்வென்ஷன்ஸ் அந்த வைரஸ் அப்புறம் அதற்கான தீசீஸ் டேடா எல்லாம் எங்க வச்சிருக்க" என்றார்
"என்னோட லாக்கர்ல தான் சார்" என பதிலளித்தான்...... ஆனால் ஏனோ அவர் குரலில் இருந்த தடுமாற்றம் அவனுக்கு ஏதோ தவறாக நிகழப் போவதாய் உணர்த்தியது...... ச்ச ச்ச ஜெயராஜ் சார தப்பா நினைக்கக் கூடாது அவர் ரொம்ப நல்லவர் என நினைத்தபடி அவன் மனதை நிலைபடுத்திக் கொண்டு அங்கிருந்து அகன்றான்"

ஆனால் அவன் மனம் கொடுத்த எச்சரிக்கை உண்மைதான் ஜெயராஜ் ஆசிரியர் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அன்னிய உளவாளி

"ஹலோ மிஸ்டர் ஜெயராஜ் சொல்லுங்க என்ன விஷயம் திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க" என்றவர் வேறு யாரும் அல்ல அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி சாட்டர்ஜி தான்
"எஸ் விஷ்யம்
ரொம்ப சீரியஸ் மிஸ்டர் சாட்டர்ஜி மிஸ்டர் ஜின்வான் இருக்காரா?

"இருக்காரு ஒரு நிமிஷம்" என்றவன் கைபேசியை ஜின்வானிடம் நீட்டியவாறு.... "சார் மிஸ்டர் ஜெயராஜ் ஆன்லைன்" என்றதும் கைபேசியை வாங்கி "எஸ் மிஸ்டர் ஜெயராஜ் சொல்லுங்க என்றதும் "யுஅர் பிஸ்னஸ் இஸ் அண்டர் பிக் ட்ரபுல்"

"என்ன சொல்றீங்க ஜெயராஜ்" என்று அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கேட்க....... "எஸ் நீங்க பண்ற அத்தனை ஆராய்ச்சியும் இனி யூஸ்லெஸ்"

"இங்கே ஒருதன் உங்களுடைய எல்லா ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி ஒரு......." என்று அவர் நடந்ததை கூற.....

"ஜஸ்ட் ஸ்டாப் ஹிம். ஐ வான்ட் ஹிஸ் தீசீஸ் உடனே அனுப்புங்க."

"அனுப்புனா? எனக்கு என்ன ஆதாயம்.....?" தன் நாட்டு மக்களின் உயிரை பேரம் பேசினான் அவன்

"எவ்வளவு வேண்டும்? ........ஒரு கோடி"

"இதனால உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?"

" அஞ்சு கோடி. இது தான் முடிவான விலை. அவன் இனி ஒன்னு அந்த ப்ராஜெக்ட் பத்தி யோசிக்க கூடாது இல்லனா யோசிக்க உயிரோடயே இருக்கக்கூடாது.... அது உங்க பொறுப்பு." என்றவாறு இனைப்பை துண்டித்தான்

இந்த உலகில் பல ஜெயராஜ் கள் இருக்கிறார்கள் அவர்கள் பணத்திற்காக தாய் நாட்டையும் விற்க தயங்குவதில்லை தாயையும் விற்க தயங்குவதில்லை.

___________________

This is purely a work of fiction based on imagination.
 
Last edited:
அடப்பாவி ஜெயராஜ்
தாய்நாட்டுக்கு துரோகம் பண்ணுற நாசமாப் போன இவனையெல்லாம் அவனோட அம்மா கருவிலேயே கொன்றிருக்கணும்ப்பா
 
Last edited:
கடைசி பாராவுக்கு முந்தின பாராவில் தப்பு இருக்குப்பா
"அஞ்சு கோடி இதுதான் முடிவான விலை ஒண்ணு அவன் இனி அந்த ப்ராஜெக்ட் பத்தி யோசிக்கக் கூடாது இல்லன்னா யோசிக்க உயிரோடவே இருக்கக் கூடாது........"ன்னு வரணும்ப்பா
 
Last edited:
கடைசி பாராவுக்கு முந்தின பாராவில் தப்பு இருக்குப்பா
"அஞ்சு கோடி இதுதான் முடிவான விலை ஒண்ணு அவன் இனி அந்த ப்ராஜெக்ட் பத்தி யோசிக்கக் கூடாது இல்லன்னா யோசிக்க உயிரோடவே இருக்கக் கூடாது........"ன்னு வரணும்ப்பா
ok banu ma naa maathiduraen
 
Top