Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnodu kaikorkka 4

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 4

அம்பிகா சம்யுக்தாவை நினைத்து அழுதுகொண்டே இருந்தார்.அமராவதி அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தார்.
சம்யுக்தா எங்கே போனால்.இப்போ எப்படி இருக்கிறாள் என்ற கவலை எல்லாருடைய மனத்திலும் ஓடிக்கொண்டு இருந்தது.

ஆனால் அவள் எழுதியிருந்த கடிதத்தில் "என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க..எனக்கு இப்போ கல்யாணம் செஞ்சிக்க விருப்பம் இல்லை.. ஒரு மூன்று மாதம் மட்டும் டைம் கூடுங்கனு கேட்டேன்...பெரியப்பா சம்மதிக்கல..அதுனால நா கொஞ்ச நாள் எனக்கு புடிச்ச வேலைய செய்ய போறேன்.. என்ன யாரும் தேட வேனா..நா பத்திரமான இடத்தில தான் இருக்க போறேன்..என்ன புரிஞ்சிப்பிங்கனு நம்பறேன்..சாரி பெரியப்பா", என்று எழுதி இருந்தாள்.

"சித்தப்பா வாங்க நாம போய் அவளை தேடலாம்", என்று ஆஷிக் அமரேந்திரனை அழைத்தான்.

அவரும் இதுக்கு மேல பொறுமையா உக்காந்துட்டு இருக்க கூடாது என்று "சரி வாப்பா.. நாம போய் பாக்கலாம்", என்றார்.

அவர்கள் கிளம்பும் நேரம் "யாரும் எங்கயும் போக வேண்டாம்.அவ தெளிவா சொல்லிட்டு தான போய் இருக்கா.அவளே வரட்டும்.போய் அவங்க அவங்க வேலைய பாருங்க", என்று ஆதிசேஷன் இது தான் முடிவு என்பது போல சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஆதிசேஷன் இப்படி சொன்னதும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.அவர் அப்படி சொன்ன பிறகு மறு பேச்சு இல்லை என்பது போல் அனைவரும் தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

அம்பிகா தான் மிகவும் மனமுடைந்து போனார்.அவரின் செல்ல மகள் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விட்டாள் என்று வருந்தினார்.

அமரேந்திரன் தான் அவருக்கு தைரியம் சொன்னார்."கண்டிப்பா அவ பத்திரமா தான் இருப்பா..எனக்கு நம்பிக்கை இருக்கு..நீ எதுவும் யோசிக்காம தைரியமா இரு", என்றார்.

"நீங்க குடுக்கிற செல்லம் தான் இப்போ இங்க வந்து நிக்குது..பேசாம போங்க", என்று கோவாமாகா பேசிவிட்டார்.

இப்பொழுது என்ன பேசினாலும் தப்பாக தான் போகும், பிறகு புரியவைத்து கொள்ளலாம் என்று அவர் அமைதியாக சென்றுவிட்டார்.

ஆஷிக் மிகவும் கோவமாக இருந்தான்."என் தங்கச்சி எப்படி இருக்காளோ..என்ன கஷ்ட பட்ராளோ தெரில", என்று அனுவிடம் புலம்பிக்கொண்டு இருந்தான்.

"கவல படாதீங்க..பெரிய மாமா யோசிக்காம எதுவும் சொல்ல மாட்டாரு..அவர் பத்துப்பார்", என்று ஆறுதல் சொன்னாள்.

அவனுக்கும் அது உண்மை தான் என்று தோன்ற சற்று தெளிந்தான்.

அமராவதி எதுவும் பேசவில்லை. ஆதிசேஷன் அவளை பார்த்து"நா சொன்னதுக்கு நீ எதுவும் சொல்லவே இல்லையே", என்றார்.

அவர் அதற்கு ஒரு புன்னகையுடன் "நீங்க பாத்துப்பீங்க..எனக்கு நம்பிக்கை இருக்கு", என்று சொன்னார்.

அவரின் மனதில் மனைவியின் நம்பிக்கையை பார்த்து பெருமிதம் வந்தது.

பிரவீன் உள்ளே வருவது கூட தெரியாமல் தீவிர யோசனையில் இருந்தாள் பிரணவீ. அதை பார்த்த பிரவீன் "என்ன ஆச்சு பிரணவீ..ரொம்ப டீப்பா திங்க் பண்ற மாறி இருக்கு", என்றான் அவளின் முகத்தை பார்த்து கொண்டு.

எதுவும் மறைக்காமல் சொல்லிவிடலாம் என்று "பிரவீன் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..சொன்னதும் கோவ பட கூடாது என்றாள்".

"உன்மேல நா எப்போ கோவ பட்டு இருக்கேன்..எதுவா இருந்தாலும் சொல்லு தயக்காம".

"உங்க தங்கச்சி இப்போ என் பெரியப்பா வீட்டுக்கு தான் போய் இருக்கா", என்று பயந்துகொண்டே சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டதும் அவனுக்கு பயங்கர கோவம் வந்தது.இருந்ததும் பொறுமையாக பேசினான்."என்ன சொல்ற.. அங்க எதுக்கு அவ போனா..தெரியாத எடத்துல என்ன பண்ணுவா".

அவன் தனக்காக தான் கோவத்தை வெளிப்படுத்தாமல் பேசுகிறான் என்று தெரிந்து "அவளுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லனு சொன்ன.. ஒரு மூணு மாசம் எங்கயாச்சும் போய் இருந்துட்டு வரேன்னு சொன்ன.. அதான் தெரியாத இடத்துக்கு போறதுக்கு எங்க ஊருக்கு போக சொன்னே", என்று பயத்துடன் சொன்னாள்.

"பிரணவீ !.. நீ என்ன பண்ணி வச்சி இருக்க..உன்ன யாரு இப்படிலான் ஐடியா குடுக்க சொன்னது..இது என்ன சின்ன விஷயமா.. வீட்ல இருக்கவங்ளுக்கு நம்பள சும்மாவே ரொம்ப பிடிக்கும்.. இப்போ நீ இந்த மாறி வேலைய செஞ்சி இருக்கிறது தெரிஞ்சுது அவ்ளோதான்.. அவ அங்க பத்திரமா இருப்பா.. எனக்கு தெரிது..ஆனா வீட்ல புரிஞ்சிப்பாங்கலா", என்றான்.

"சாரிங்க.. இப்போ தான் எனக்கு நா செஞ்ச தப்பு புரிது", என்றாள் கவலையாய்.

"சரி விடு...இதை பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணாம்..எல்லாம் நல்லதுக்குனு விட்ருவோம்".

பிரணவீ தயங்கி கொண்டே, "அத்தகிட்ட மட்டும் சொல்லலாம்..பாவம் ரொம்ப அழுதுட்டு இருக்காங்க".

"இப்போ வேண்டாம்..கொஞ்ச நாள் போகட்டும்.. இப்போ சொன்னா பிரச்சனை இன்னும் பெருசாகும்..சம்யுக்தாகும் கஷ்டம்", என்றான்.

அவளும் சரி என்று விட்டுவிட்டால்.

தேவலோகபுரத்தில்

பாட்டி அவளை யார் என்று பார்த்துக்கொண்டு இருக்க..கண்ணனோ அவளை முறைத்துக்கொண்டு இருந்தான்.

"அய்யயோ.. இவன் நம்பள கொல பண்ண போற மாறி பாத்துட்டு இருக்கான்.இப்போ என்ன பண்றது", என்று யோசித்தாள்.

அவன் அவளை கோவமாக ஏதோ சொல்ல வர..அதை பார்த்தவள் உடனே கோதை பாட்டியை கட்டிக்கொண்டு அவரின் காதில் "பாட்டி நான் சம்யுக்தா..சென்னைல இருந்து பிரணவீ அண்ணி அனுப்பி இருக்காங்கு", என்று அவனுக்கு கேட்காதவாறு மெதுவாக சொன்னாள்.

அதை கேட்டதும் பாட்டிக்கு சந்தோஷம் தாளவில்லை.உடனே அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவர் "என் பேத்தி எவ்ளோ அழகா இருக்கா", என்று கன்னம் வழித்து திருஷ்டி சுற்றியவர் அவளை தன்னோடு அணைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றார்.அவளும் சந்தோஷமா அவருடன் ஒட்டிக்கொண்டு சென்றாள்.

கண்ணனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை."இவ யாரு.. இந்த பாட்டி வேற அவள தெரியாத மாரி என்ன கேட்டுச்சு.. இப்போ இவ்ளோ பாசமா முத்தம் குடுத்து கட்டிபுடிச்சிட்டு போகுது..அவ பாட்டி காதுல என்ன சொல்லி இருப்பா", யோசித்து யோசித்து அவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். சரி உள்ள போய் பாக்கலாம் எல்லார்கிட்டயும் இருந்து என்ன ரியாக்ஷன் வருதுன்னு பாப்போம் என்று உள்ளே சென்றான்.

ஹாலில் உள்ள மர நாற்காலியில் ஜனார்த்தனன் தாத்தா அன்றைய நாளிதழை படித்துக்கொண்டு இருந்தார். டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தார் தயாநிதி.. அவருக்கு பரிமாறிக்கொண்டிருந்தார் துளசி அவரின் மனைவி.இவர்கள் தான் கண்ணனின் பெற்றோர்.

இவர்கள் அனைவரையும் பார்த்த சம்யுக்தா பாட்டியின் கைகளை இறுக்கமாக பிடிக்க அதை உணர்ந்த கோதை பாட்டி னா பாத்துக்கிறேன் என்று கண்ணை முடி திறந்தார்..அதை பார்த்து கொஞ்சம் தைரியம் பெற்றாள்.

"என்னங்க யார் வந்து இருக்காங்கனு பாருங்க", என்று தன் கணவனிடம் சொன்னார்.

தேவேந்திரன் அவர்களை நிமிர்ந்து பார்த்தார்.சம்யுக்தாவை பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது யார் என்று.பாட்டியை ஒரு முறை பார்த்து விட்டு"வாம்மா..பிரயாணம் எப்படி இருந்தது..ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா", என்று விசாரித்தார்.

"அப்பாடி தப்பிச்சோம்..பாட்டி நமக்காக தாத்தாகிட்ட பேசி இருப்பாங்கு போல", என்று மனதில் நினைத்து கொண்டு.."நல்லா இருக்காங்க தாத்தா", என்றாள் புன்னகை முகமாய்.

இதை பார்த்து கொண்டே சாப்பிட்டு முடித்து வந்தவர்.."யாருப்பா இந்த பொண்ணு", என்று அவளை பார்த்துக்கொண்டே கேட்டார் தயாநிதி.

"நம்ப சொந்தம் தான்..உனக்கு தெரியாது..பட்டணம் போய் ரொம்ப வருஷம் ஆச்சு..", என்பதோடு முடித்து கொண்டார்.அதற்கு மேல் யாரும் அவரை கேள்வியும் கேட்க மாட்டார்கள் அந்த வீட்டில்.

"அப்படியா சரிங்கபா", என்றவர்..சம்யுகதாவிடம் திரும்பி, "உன் பேரு என்னமா"என்று கேட்டார்.

"சம்யுக்தா அங்கிள்".

"என்ன நீ..அங்கிள்னு கூப்டுட்டு இருக்க..அழகா மாமானு கூப்டு..அது தான முறை", என்றார் பாட்டி.

அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்.

"சம்யுக்தா"..பெயருக்கு வலிக்குமோ என்பது போல் சொல்லி பார்த்துக்கொண்டான் கண்ணன்.

துளசி உள்ளே சென்று அவள் அருந்த தண்ணி எடுத்து வந்தார்.

"தண்ணி குடிமா", என்று அவளிடம் குடுத்தார்.அவளும் வாங்கி பருகினாள்.

இவை அனைத்தையும் தனது அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வதி,தயாநிதியின் கூட பிறந்த ஒரே தங்கை வேறொன்றும் கவனித்தார்..அது கண்ணனின் பார்வை சம்யுக்தாவை விட்டு துளியும் நகரவில்லை என்று.கோபம் தலைக்கு ஏற அறையில் இருந்து வந்தவர் "சொந்தம்னு சொன்னிங்க சரி..என்ன விஷயமா வந்து இருக்காங்க",என்றார் அவளை முறைத்துக்கொண்டு.

"இந்தம்மா ஏன் இப்படி முறைக்குது..என்னவோ அது சொத்த நா ஏமாத்தி எடுத்துக்குட்ட மாறி"என்று நினைத்துக்கொண்டே சம்யுக்தாவும் பார்வதியை முறைத்தாள்.

இதை பார்த்த பார்வதிக்கு இன்னும் கோபம் வந்தது.

"நம்ப ஸ்கூல்ல டீச்சர் வேளைக்கு வந்து இருக்கு", என்றார் தாத்தா.

இதை கேட்டதும் கண்ணன் மனதில் ஒரு மகிழ்ச்சி..ஏன் என்று அவனுக்கே காரணம் தெரியவில்லை.

"அப்போ மத்த ஸ்டாப்லான் தங்கி இருக்க வீட்லே தங்க வைங்க", என்றார் பார்வதி.

"பார்வதி நம்ப வீட்டு பொண்ணு எல்லாரும் ஒன்னா..பாத்து பேசு", என்று குரலில் கண்டிப்போடு சொன்னார் ஜனார்த்தனன்.

உடனே வாயை மூடிக்கொண்டார் பார்வதி.

"கண்ணா இவ பேக் எல்லான் எடுத்துட்டு போய் மாடி அறைல வச்சிடு",என்றார் கோதை பாட்டி.

அவன் எடுக்கப்போக "ஊருக்கே ராஜாவ இவ பேக எடுக்க சொல்றிங்க..இந்த வீட்டு எஜமான் அவன் இவளுக்கு வேல செய்ய சொல்றிங்க", என்றார் பார்வதி.

"உனக்கு இப்போ தான் சொன்னேன்..நம்ப வீட்டு பொண்ணுன்னு..அடிக்கடி சொல்ற மாறி வசிக்காத..", என்று கர்ஜித்தார் ஜனார்த்தனன்.

உடனே வாயை மூடிக்கொண்டார் பார்வதி.அந்த பயம் இருக்கட்டும் என்பது போல் பார்வையை பார்த்தாள் சம்யுக்தா.இதை பார்த்தவர் நேரம் வரும்போது உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டார்.

"ஐயோ இவன் வேலக்காரனு நெனச்சி ரொம்ப பேசிட்டோமே..இப்போ என்ன பண்றது..அப்பவே நெனச்சேன் பாக்க ஆளு செமயா இருக்கான்னு..", அலை அலையாய் கேசம் காற்றில் அடங்காமல் ஆட, மாநிறம் ஆறடி உயரம், கூர் நாசி, அழுத்தமான உதடு, எவரையும் பார்த்தவுடன் எடை போடும் கண்கள்..மொத்தத்தில் பார்ப்பவரய் வசீகரிப்பவன் என்று மனதில் நிலைகொண்டே அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

அதை பார்த்தவன் ஒரு சிரிப்புடன் கண்டித்து கண்களால் என்ன என்று கேட்க..அவள் விழி அகல அவனை ஆவென பார்த்தாள்.

இவர்கள் செய்யும் மௌன பாஷயைய் பொறுக்காமல் பார்வதி உள்ளே சென்றுவிட்டார்.
 
Hai epi konjam valanthudujupa.
Super.
Appo samuva parkka vantha payanthan herova?
Periyappa ku aval s aagaporathu therinju irruku pola.
 
Thatthavum periyappa vum kootta.prani nee onnum tension edukkatha veetula ulla periyavar randu perukum ellam theriyum pola.
 
Top