Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnaalae Ellam Unnaalae அத்தியாயம் - 5

janaki janu

New member
Member
sorry for the delay frnds
இனிமேல் கரெக்ட் ஆஹ் இரண்டு நாளுக்கு ஒரு அப்டேட் அவரும்

அத்தியாயம் - 5


அடுத்து வந்த நாட்களில் அர்ஜுன் அவனுடைய ப்ராஜெக்ட் இல் பிஸியாகவும் , அஸ்வினி அவளுக்கு கிடைத்த அடிமை அனுவுடன் டான்ஸ் கிளாஸ்லியும் , அஸ்வின் அவன் நண்பர்களுடன் ஆனா சுற்றுலாவுக்கு சென்று இருந்தான்.

இந்த முறை தீபா அவளை தன்னுடைய தோழியின் மூலம் தெரிந்த ஒருவருடைய பரத நாட்டியம் வகுப்பில் சேர்த்து விட்டார்

இப்பொழுது கூட அதற்கு தான் அஸ்வினி கிளம்பி கொண்டு இருந்தால் , அவளை பார்த்த தீபா சாப்பாடு எடுத்து வைக்கறேன் சாப்பிட்டு போ என்றார்

இல்ல மாம் தேவி ஆண்ட்டி இன்னைக்கு எனக்கு பிடிச்ச டிஷ் செய்யறேன்னு சொல்லி இருக்காங்க சோ இன்னைக்கு முழு நாளும் அங்க தான் என்றவளை முறைத்து பார்த்தார் தீபா

ஏன் டி தூங்க மட்டும் ஏன் இங்க வர அங்கே இருந்துக்கலாம் இல்ல , அப்படி என்னடி பண்ணன அவங்கள அங்க போய் சேந்து முழுசா ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள வாரத்துல மூணு நாள் அங்க தான் சாப்பிடற

அது எல்லாம் ஒரு தனி கலை அவங்களுக்கு என்னோட அருமை தெரியுது ஆனா ஒரு சிலருக்கு எங்க அது எல்லாம் புரியுது என்றால் தீபாவை பார்த்து கொண்டே

அதை கவனித்தவர் ஹ்ம்ம் அவங்களுக்கு இன்னும் உன்னை பத்தி தெரியல ஒரு வாரம் தான ஆகுது அப்பறம் பாரு இருக்கு உனக்கு

ஹலோ ஹலோ மம்மி அங்க வந்து பாரு என்னோட பவரை என்ன மாதிரி அவங்க பொண்ணு இல்லனு கவலை படறாங்க , நானும் கவலை படாதீங்க ஆண்ட்டி என்ன மாதிரி உங்க பொண்ண மாத்தறேன் வாக்கு குடுத்து இருக்கேன்

இன்னைக்கு தான் அந்த பொண்ணு வரேன் சொல்லி இருக்கு எப்படியும் இன்னேரேம் அவங்க பொண்ணு வந்து இருக்கும் சோ நான் இப்ப கிளம்பறேன் என்று அவளுடைய வண்டி இல் பறந்தால் .

அந்த வீட்டின் பெயர் தேவி இல்லம் அந்த குடும்பத்தின் தலைவி தேவிப்ரியா அது வீடு மட்டும் அல்ல குட்டி பங்களா
அவருடைய பரத நாட்டிய வகுப்பும் அங்கே சிறிய அளவில் நடத்தி வருகிறார்.

கணவர் தனியார் கல்லூரில் ஆசிரியர் , ஒரே மகள் சத்யா அவளும் ஹாஸ்டேலில் தங்கி படித்து வருகிறாள், இப்பொழுது தான் 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வை முடித்து கொண்டு வருகிறாள். இவர்களுடைய குடும்பம் பரம்பரை பணக்காரர்கள் ஆனால் இப்பொழுது அவர்களுக்கு என்று இருப்பது இந்த வீடு மட்டும் தான்

அஸ்வினி வரும் வழியில் அவளுடைய தோழி அனுவையும் கூட்டி கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தால் , வண்டியை நிறுத்தி விட்டு தன்னை ஒரு முறை பார்ப்பதற்க்காக வண்டியின் கண்ணாடியை பார்த்தவள் அதில் தெரிந்த உருவத்தை பார்த்து அப்படியே நின்று விட்டால்

ஒரு முறை தன்னை குலுக்கி கொண்டு மறுபடியும் கண்ணாடியை பார்த்தவள் தன் இரு கைகளையும் கொண்டு கண்ணாடியில் தெரிந்த உருவத்தை வலித்து முத்தம் இடுவது போல் செய்து சோ cute சோ நைஸ் சோ ஸ்வீட்

அவள் செய்வதை பார்த்த அனு இவளை வச்சிக்கிட்டு இன்னும் என்ன என்ன பாக்க போறானோ இவர்களை தாண்டி பைக் எடுக்க வந்த ஒருவன் எந்த இடத்துல பாத்தாலும் tiktok பைத்தியங்களை இருக்கு

அவனை பார்த்த அனு ஹலோ சார் நீங்க பாத்திங்களா நாங்க tiktok எடுக்கறதா அப்படியே எடுத்தாலும் உங்களுக்கு என்ன அதுல பிரச்சனை

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீங்க நகந்தாதான் நான் என்னோட வண்டியை எடுக்க முடியும் என்றான் முறைத்து கொண்டே

அப்பொழுது தான் வழியை பார்த்தவள் பல்பு வாங்கினாலும் அவனை முறைத்து கொண்டே , அடியே என்னடி ஆச்சி எதுக்கு இப்படி பண்ணி கிட்டு இருக்க வாடி இந்த பக்கம் என்று அவளை இழுத்து கொண்டே சென்றால் , அவளோ இன்னும் அந்த வண்டியின் கண்ணாடியை பார்த்து கொண்டே இருந்தால் .

அதை பார்த்து இன்னும் கடுப்பு ஆனா அனு அவளை ஒரு கிள்ளு கிள்ளினாள் ,ஹாஆஆ என்று கத்தி கொண்டே அனுவை முறைத்தாள் அவளை விட அதிகமாக அனு முறைத்தாள்

அவளை முறைத்து கொண்டே மனதினுள் என்ன இந்த பக்கி இவளோ பாசமா பாக்குது என்று சுற்றிலும் பார்த்து பார்க்கிங்கை விட்டு கொஞ்ச தூரம் வந்து இருப்பதை உணர்ந்தாள் .

என்னடி எங்க இருக்கம்னு தெரியுதுதா இல்ல நான் எங்க இருக்கேன்னு கேட்க போறியா. ஹீஹீ என்னடி இப்படி கேட்டுட்ட நான் தான உன்ன தினமும் கூட்டி கிட்டு வரேன்

இனிமேல் உன்கூட நான் வராத இல்லையானு, உன்கூட வந்தா என்னோட உயிர்க்கு கேரண்டி இல்லடி அம்மா

இப்ப எதுக்குடி இத எல்லா சொல்லி கிட்டு இருக்க ,

ஹ்ம்ம் நீ இப்போ வண்டி கண்ணாடில என்னடி பண்ணி கிட்டு இருந்த, இதை கேட்டவுடன் அஸ்வினி வெக்கப்பட ஆரம்பித்து விட்டால்

அதை பார்த்து இன்னும் பயந்த அனு அடியே தயவு செய்து சொல்லிட்டு எத இருந்தாலும் பண்ணு

அதுவாவா என்று இழுத்து அந்த படத்துல (sarileru neekevvaru) ரஷ்மிக்கா மகேஷுபாபுவை பாத்ததும் செய்வாங்க இல்ல அதுதான் நானும் செஞ்சேன்

முதலில் ஒன்றும் புரியாமல் முழித்த அனு பிறகு புரிந்தவுடன் ஓ மேடம் இப்போ உங்க ஆள பாத்துட்டீங்க அதுக்கு தான் இந்த ரியாக்ஷன்
அஸ்வினியும் வெக்கப்பட்டு கொண்டே ஆமா என்று தலை அசைத்தால் (அது தாங்க நம்ப ஹீரோ சக்தி )

அதை பார்த்து கேலியாக சிறிது கொண்டே அப்போ உன்னோட அண்ணி எங்கடி அவங்களையும் பாத்தியா என்றால்

அப்பொழுது தான் அவளுடைய சபதம் நினைவிற்கு வந்தது அதை நினைத்ததும் அனுவை பாவமாக ஒரு லுக் விட்டால் , அதை பார்த்த அனு மனதிற்குள் உங்க அண்ணாவுக்கு இப்படித்தானா இருந்து இருக்கும் என்று நினைத்தால்
 
Top