Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnaalae Ellam Unnaalae அத்தியாயம் - 1

Advertisement

janaki janu

New member
Member
UEU - 1


காலை பொழுதில் தன் மனைவி தந்த காஃபியை பருகி கொண்டே அன்றைய நாட்டு நிலவரத்தை படித்து கொண்டு இருந்தார் அந்த வீட்டின் தலைவர் வெற்றி .(வெற்றி IAS ஆஃபீசர் ) அவரின் மனைவி தீபா (முன்னாள் CPI ஆஃபீசர் ஆனால் இப்பொழுது குடும்ப தலைவி ) காலை உணவை சமைத்து கொண்டு இருந்தார்.அவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள்.

முதல் மகன் அர்ஜுன் கடைசி வருடம் இன்ஜினியரிங் படித்து கொண்டு இருக்கிறான் , அதற்கு அடுத்து இரட்டை குழந்தைகள் மகன் அஸ்வின் மகள் அஸ்வினி இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கின்றனர்.

அப்பொழுதுதான் அர்ஜுன் ஜாகிங் முடித்து வந்தான் குட் மோர்னிங் அப்பா ஆபீஸ் கிளம்பலையா ,நேரம் இருக்குடா இன்னைக்கு ஒரு முக்கியமான விசிட் இருக்கு சோ 9 .30 கிளம்புனா போதும் , உனக்கு காலேஜ் எப்படி போகுது அர்ஜுன் ...சூப்பர் ஆஹ் போகுது டாட் இன்னைக்கு காலேஜ் டே சோ டுடே ஒன்லி செலிப்ரஷன் சீக்கரம் போகணும் டாட் ஜூனியர்ஸ்க்கு கையேடு பண்ணனும் அடுத்த வருஷம் நாங்க இருக்கா மாட்டோம் அதுதான் கொஞ்சம் ஹெவி ஒர்க் டாட்

அர்ஜுன் இந்தா காபி அதை வாங்கி பருகி கொண்டே மாம் இன்னைக்கு எனக்கு லஞ்ச் வேணாம் நான் காலேஜ்ல போய் பாத்துக்கறேன் . அஸ்வின் அஸ்வினி எங்க மாம் இன்னும் காணோம் எங்க போய் இருக்காங்க , அத ஏன்டா கேட்கற ரெண்டு பேரும் இன்னைக்கு டியூஷன் கடைசி நாலுனு நண்பர்கள பார்க்க போய் இருக்காங்கடா அவங்க வர நேரம் தான் வந்துருவாங்க..

என்ன என்ன இங்க மாநாடு நடக்குது நாங்க இல்லாம அர்ஜுன் அண்ணா நீங்க காலேஜ் கிளம்பலையா என்று கேட்டு கொண்டே அவள் அப்பாவின் அருகில் அமர்ந்தாள். தீபா அவளை பார்த்து அஸ்வின் எங்க டி அவன காணும் நீ மட்டும் வர , அவனா ரோடு ரோடு ஆஹ் நாய் தேடி கிட்டு இருக்கான். நாயா அது எதுக்கு தேடறான் ஹ்ம்ம் அத நான் சொல்லறேன் மாம் அந்த நாய் வச்சி இவளை கடிக்க விடத்தான் என்று சொல்லி கொண்டே வந்தான் அஸ்வின்.

அவனை பார்த்த அர்ஜுன் டே என்னடா ரெண்டு காதுலையும் பூ, எல்லா இவளால தான் அண்ணா அவளையே கேளுங்க இவ என்கூட இருக்கற வரைக்கும் எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது . அதை கேட்ட வெற்றி டே உனக்கு என்ன வயசுடா இப்பவே கல்யாணம் பத்தி எல்லாம் பேசற, உன் அண்ணன் காலேஜ் முடிக்க போறான் அவன்கூட அமைதியா இருக்கான் உனக்கு இப்பவே கல்யாணம் நினைப்பா, அப்படி கேளுங்க டாட் இவனால எனக்கு எவளோ வேல தெரியுமா என்றவளை அஸ்வின் முறைத்தான் .

அப்படி என்னடா பண்ணான் என்றார் வெற்றி கதை கேட்க்கும் நோக்கில் , உங்க எல்லாருக்கும் தெரியும் தான என்னோட சபதம் பத்தி என்றவளை தீபா முறைத்து பார்த்தார் அதுல தான என்னோட நிம்மதியே போச்சி என்றவனை யாரும் கண்டு கொள்ளவில்லை அர்ஜுன் வெற்றி இருவரும் சிரிப்பை மறைத்து கொண்டு அவளை பார்த்தனர் , அவன் கல்யாணம் பண்ற பொண்ணுக்கு கண்டிப்பா அண்ணன் இருக்கணும்னு சொன்னானா இல்லையா அப்பத்தான் நம்மளோட உறவு கடைசி வரைக்கும் தொடரும் நம்ப குடும்பமும் பிரியாது என்றால், ஆமா சொன்ன அதுக்கு இப்ப என்ன என்றார் தீபா

இவன் அத கண்டுக்கவே இல்ல டாட் இவனால இவன் பாக்கற எல்லா பொண்ணுங்க வீட்டு முகவரியும் கண்டு பிடிச்சி அண்ணா இருக்க இல்லையானு பாக்கறதே என்னோட வேலையா போச்சி ,அந்த வேலைய மட்டுமா பண்ணுன பிரிச்சி விடற வேலையும் தான பாத்த என்றவனுடன் சேர்த்து இருவரையும் மூவரும் முறைத்தனர்.

இப்பொழுது அஸ்வினி அவனை பார்த்து நீ ஏன்டா எப்பவும் அண்ணன் இல்லாத பொண்ண பாக்கற இல்ல தம்பி இருக்கற பொண்ண பாக்கற என்றால்,அவனோ ஏண்டி அந்த பொண்ணுக்கு அண்ணன் இருக்க இல்லையானு பாத்தா காதலிக்க முடியும் அந்த ப்ரியாவுக்கு அண்ணன் இருந்துச்சி தானடி அவளை ஏன் பிரிச்ச, அவனை முறைத்தவள் அவன் தேவாங்கு மாதிரி இருக்காண்டா என்றவளை கொலைவெறியுடன் பார்த்தான்

இது எல்லாம் கூட நான் பொறுத்துக்குவேன் ஆனா இன்னைக்கு நீ பண்ணனதா தான்டி என்னால தாங்க முடியல என்று அவளை துரத்த ஆரம்பித்தான். அண்ணா காப்பாத்துடா நான் உன்னோட செல்ல தங்கச்சி இல்ல என்று அர்ஜுனையே சுத்தி ஓடி கொண்டு இருந்தால், டே அஸ்வின் விடுடா அம்மு பாவம் அந்த வார்த்தையை கேட்டவுடன் அடப்பாவி அவளா பாவம் நான்தான்டா அவளால பாவம் என்றான் அழுவது போல்.

தீபா அவளை பார்த்து அப்படி என்னடி பண்ணுன இன்னைக்கு என்றார், அத நான் சொல்லற மாம் எங்களோட டியூஷன் படிக்கற பொண்ணுகிட்ட நான் பேசத்தான் போனேன் இவ எங்க இருந்து வந்தானே தெரியல அவ பாட்டுக்கு வந்து அந்த பொண்ணு கிட்ட உனக்கு அண்ணா இருக்கானு கேட்ட அந்த பொண்ணு என்ன பாத்துட்டு இல்லனு சொன்ன இவ என்ன பேசவே விடல மாம் இவபாட்டுக்கு அப்ப நீ இவன் கூட இனிமேல் பேசவே கூடாது அப்படி நீ பேசறதை பாத்தேன் அப்பா தெரியும் இந்த அஸ்வினி யாருனு "அர்த்தம் ஆவுதுத்துந்ததா" அப்படினு எதோ வில்லி மாதிரி டைலாக் பேசிட்டு போரா.

அது என்னடா வார்த்தை "அர்த்தம் ஆவுதுத்துந்ததா" என்று கேட்டார் வெற்றி (இவளோ சொல்றன் அதுல இத மட்டும் கேட்கறாரு பாரு என்று மனதிற்குள் நினைத்தவன் )ஹ்ம்ம் அவ இந்த வருஷம் Rashmika mandanna fan சோ இனிமேல் மேடம் அந்த பட டயலாக் தான் பேசுவாங்க

எஸ் அர்த்தம் ஆவுதுத்துந்ததா அர்த்தம் ஆவுதுத்துந்ததா அர்த்தம் ஆவுதுத்துந்ததா என்று ஒரு ஒருவரையும் பார்த்து தனி தனியாக சொல்லி காட்டி அவளுடைய ரூம்க்கு ஓடிவிட்டாள் அதை பார்த்து எல்லாரும் சிரித்து விட்டனர் .

சிரித்து கொண்டே வெற்றியும் தீபாவும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர் . அஸ்வினை பார்த்த அர்ஜுன் டே விடுடா அவ சும்மா விளையாட்டுக்கு பண்ணி இருப்ப அதுக்கு போய் நீ டென்ஷன் ஆகிக்கிட்டு இருக்க , இல்ல அண்ணா எனக்கு என்னமோ அவ இதுல ரொம்ப சீரியஸ் ஆஹ் இருக்கானு தோணுது அந்த இன்சிடென்ட் அவள ரொம்ப பாதிடுச்சினு நினைக்கறேன்

விடு அஸ்வின் எல்லாம் உன்மேல இருக்கற பாசத்துல செய்யறா போக போக செரி ஆகிடும் ஹ்ம்ம் எனக்கும் புரியுது அண்ணா அதுனாலதான் நான் அவளை அவ்ளோவா திட்டறது இல்ல , நீ காலேஜ்க்கு கிளம்பிட்ட போல என்றான் ரெடியாக இருந்த அர்ஜுனை பார்த்து ஹ்ம்ம் ஆமா டா இன்னைக்கு function அதுதான் பாய் டா நேரம் இல்ல சாயந்தரம் பாக்கலாம் , ஓகே அண்ணா பாய் .

அர்ஜுன் அவனோட பைக்கை எடுத்து கொண்டு xxxxxx காலேஜ்க்கு கிளம்பினான் . அங்கே அவனோடைய நண்பர்கள் அவனை காணாமல் தேடி கொண்டு இருந்தனர் .அப்பொழுதுதான் அர்ஜுன் காலேஜ்க்குள்ள நுழைந்தான் . அவனோடு சேர்ந்து ஏழு பேரும் ஆடிட்டோரியும் நோக்கி சென்றனர்
 
:D :p :D
உங்களுடைய "உன்னாலே
எல்லாம் உன்னாலே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஜானகி ஜானு டியர்
 
Last edited:
Top