Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 29

Advertisement

அத்தியாயம்---29

ஆஷிக்கிடம் இருந்து அழைப்பு வந்ததும் சட்டென்று எடுத்து காதில் வைத்தவளாள். எப்போதும் போல் பேச முடியவில்லை.அதற்க்கு காரணம் இப்போது தான் தனக்கே தெரிந்த காதலாக கூட இருக்கலாம்.

பரினிதா பேசாமல் இருந்த போதும் ஆஷிக் “என்ன பேபிம்மா என் மீது கோபமா…” என்ற அந்த வார்த்தையில் ஐஸ்க்ரீமுக்காக பேபியாக உருகுபவள் அந்த பேபிம்மா...என்ற வார்த்தையில் ஐஸ்க்ரீமாக உருகினாள்.

தான் கேட்டும் பதில் இல்லாது போக “என்ன பேபிம்மா பேச்சே காணும்.உன்னிடம் நான் என்ன என்னவோ பேச வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இப்போது நான் பேசுவதை விட என் பேபிம்மாவின் கோபத்தை போக்குவது தான் எனக்கு முக்கியம்.நாளை காலை பத்திரிகையை பார் பேபிம்மா….உன்னை கடத்தியவனை அவ்வளவு சீக்கிரம் சும்மா விட்டு விடுவேனா பேபிம்மா…”

என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அவன் செல்லுக்கு வேறு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வர அதை பார்த்த ஆஷிக் பதட்டத்துடன் “பேபிம்மா நான் பிறகு பேசுகிறேன்.” என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சட்டென்று அணைத்து விட்டான்.

தனக்கு பேசவே இடம் தராமல் பேசி வைத்தவனை நினைத்து கோபம் வராமல் பயம் தான் வந்தது. அய்யோ நாம் நினைத்த மாதிரி அந்த அமைச்சரை ஏதாவது செய்து விடுவாரோ...என்று பயத்துடன் அவன் செல்லுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்த போது அவன் அலை பேசியில் அவன் குரலுக்கு பதிலாக ஒரு இனிமையான பெண் குரலே நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறு ஒரு தொடர்பில் உள்ளார் என்ற வார்த்தையே திரும்ப திரும்ப கேட்டு வெறுத்து போய் போனை வீசி எறிந்தாள்.

இவள் கோபத்தை ஆஷிக் தான் பொறுத்து கொள்வான் போனுமா பொறுத்து கொள்ளும்.உன் கோபத்துக்கு எல்லாம் நான் பொருப்பு இல்லை என்ற பட்சத்தில் அந்த செல் அனைத்து பக்கமும் சிதரியதில் அதில் உள்ள சிம் மற்றும் பேட்டரி என்று அனைத்தும் உள்ளே இருக்க வேண்டியது வெளியே காட்சி தந்தது.

அதனை பார்த்து தன் முட்டாள் தனத்தை நினைத்து தானே நொந்தவளாக அய்யோ இப்போ ஆஷிக் அழைத்தால் என்ன செய்வது என்று நினைத்து வேகமுடன் சிதறிய பாகத்தை ஒன்று கூட்டி செல்வடிவில் வடிவமைத்து அதை ஆன் செய்து பார்த்தாள்.

நான் பார்வைக்கு தான் செல் என்று சொல்லாமல் சொல்லியதில் நொந்து போனவளாக தன் அண்ணன் அறை நோக்கி விரைந்து சென்று கதவை தட்டிய பிறகு தான் தன் முட்டாள் தனமே தெரிந்தது.ஆம் அவள் கதவை தட்டும் போது மணி சரியாக பதினொன்று முப்பது .

அய்யோ இப்போது கதவு திறந்தால் என்ன சொல்வது என்று இவள் யோசனை ஓடும் போதே…. பதற்றத்துடன் கதவை திறந்த ஆருண்யா தன் இரவு உடை கீழே சரிந்து இருப்பதை சரி படுத்திக் கொண்டே “என்ன பரினிதா என்ன விஷயம்.” என்று கேட்டதற்க்கும் பதில் சொல்லாது தன் நினைவலையிலேயே மூழ்கி இருந்தாள்.

அவள் குழந்தை தனத்துடன் நடந்துக் கொண்டாலும், அவளும் வளர்ந்த பெண் தானே...தன் அண்ணியின் தோற்றமே எந்த மாதிரி சமயத்தில் நாம் கதவை தட்டினோம் என்று நினைத்து தலை குனிந்துக் கொண்டாள்.

சித்தார்த்தோ ஆரு கேட்க கேட்க யார் அது பதில் சொல்லாமல் இருப்பது என்று நினைத்தவனாக தன் உடையை சரிபடுத்திக் கொண்டு வந்து பார்த்தால். அங்கு பரினிதா இருப்பதை பார்த்து பயந்தவனாக “ குட்டிம்மா என்னடா விஷயம்” என்ற அண்ணனின் பதட்டத்தில் இன்னும் நாம் பேசவில்லை என்றால் இந்த விஷயம் பாட்டிம்மா காது வரை போகும் என்று நினைத்தவளாக …

“இல்லை அண்ணா என் செல் உடைந்து விட்டது.அது தான் அண்ணி செல் கேட்கலாம் என்று.” அவள் இழுத்து நிறுத்தியளின் பேச்சில் எதையோ அறிந்துக் கொண்ட சித்தார்த் “போன் எப்படி உடைந்தது.” என்றதற்க்கு.

“கீழே விழுந்து விட்டது அண்ணா…”

“அது தான் தவறி விழுந்ததா...இல்லை”

இது வரை தன் குற்ற உணர்வில் பொறுமையாக இருந்த பரினிதா தன் அண்ணாவின் குறுக்கு விசாரணையில் பழைய பரினிதாவாய் மாறி “உங்க போன் கொடுங்க எப்படி உடைஞ்சிடுச்சின்னு செயல் முறையிலேயே விளக்கம் கொடுக்கிறேன்.”

அப்போதும் சித்தார்த் விடாமல் “அது என்ன அண்ணி போனை உடைக்காமல் என் போனை உடைப்பது.” என்று கேட்டவன் தொடர்ந்து “என் போனிலும் ஆஷிக் நம்பர் இருக்கிறது.” என்று சொல்லி தன் போனை எடுத்து வந்து கொடுக்க போனவன் கொடுக்காமல் “இப்போ உடைக்க மாட்ட தானே…” என்று சொல்லி விட்டு.

“ விளையாட்டு போதும் குட்டிம்மா என்ன பிரச்சினை .இந்த நேரத்துக்கு எல்லாம் நீ முழிச்சிட்டு இருக்க மாட்டாயே…?” என்று கேள்வி எழுப்பியவனிடம் என்ன சொல்வது என்று முழித்து இருந்தாள்.

அவளும் தான் தன் அண்ணனிடம் எப்படி சொல்லுவாள். நான் இன்று தான் ஆஷிக்கின் மீது உள்ள காதை உணர்ந்தேன் என்றா...இல்லை அதை பற்றி பேசுவதற்க்குள் அந்த அமைச்சரை இவன் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் தான் நான் போனை உடைத்தேன் என்று சொல்லவா முடியும் என்று யோசித்தவளை…

அண்ணியின் குரல் தடுத்து நிறுத்தியது.”எது என்றாலும் உள்ளே வந்து பேசு வா…?” என்ற அழைப்புக்கு சித்தார்த் பதட்டத்துடன் ஆருண்யாவை முறைத்துக் கொண்டே பரினிதாவுக்கு முன்பாக அறைக்குள் நுழைந்து கட்டில் மேல் உள்ள துணியை சட்டென்று எடுத்து கட்டிலுக்கு அடியில் தள்ளினான்.

அப்போது தான் தன் முட்டாள் தனத்தை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டே உதடு அசைவில் சாரி என்று சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே பரினிதாவிடம் “வா பரி” என்றதற்க்கு அவர்களின் நடவடிக்கையை பார்த்து பரினிதா சே நம்மால் அண்ணிக்கும், அண்ணாவுக்கு எவ்வளவு சங்கடம். இனி நாம் இது போல் யோசிக்காமல் எதுவும் செய்ய கூடாது.ஆஷிக்குக்கு ஏத்த மாதிரி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவளாக உள்ளே...செல்லாமல் “சாரி அண்ணி, சாரி அண்ணா எது என்றாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்.” என்று திரும்பியவளின் கைய் பிடித்து நிறுத்திய சித்தார்த் .

“என் குட்டிம்மா எப்போது இவ்வளவு பெரியவளாக வளர்ந்தாங்க. என்று சொன்னவன். குட்டிம்மா எனக்கு எப்போதும் நீ குழந்தை தான். ஆருவை பார்த்துக் கொண்டே எங்களுக்கே ஒரு குழந்தை பிறந்தாலும் நீ தாண்டா என் முதல் குழந்தை” என்பவனை அணைத்துக் கொண்ட பரினிதாவின் முதுகை தடவிக் கொண்டே அறைக்குள் அழைத்து சென்ற சித்தார்த்.

“இப்போ சொல்லுடா அந்த ஆஷிக் என்ன சொல்கிறான் சொல்.உன்னை ஏதாவது சொன்னனா பயப்படாமல் சொல். நாம் வேறு மாப்பிள்ளை பார்த்து விடலாம்.” என்றதும் உடனே..

“அய்யோ வேண்டா அண்ணா...இந்த பெட்ரோமாஸே...போதும் அண்ணா.” என்பவளின் தலையில் கொட்டியது சித்தார்த் இல்லை ஆருண்யா…”யாரு பெட்ரோமாஸ் இப்போ நீ வேண்டாம் என்று சொல்லு.என் ஆஷிக்குக்கு பெண்கள் க்யூவில் நிப்பாங்க.” என்பவளிடம் பரினிதா.

“நான் இல்லை என்று சொல்ல வில்லையே….ஆனால் என் மாமா க்யூவில் நிக்காத என்னை தானே திருமணன் செய்துக் கொள்வார்.” என்ற பேச்சில் சித்தார்த் ஆருண்யா இருவரும் மலைத்து போயினர்.

எட்டு வருடமாக காதலித்த தங்களுக்கு இருந்த புரிதலை விட சில நாட்கள் பேசிய இவர்களுக்குள் எப்படி ஏற்பட்டது என்று வியந்து பார்த்தனர். இருந்து பரினிதா ஏன் செல்லை உடைத்தால் என்று சித்தார்த்துக்கு தெரிய வேண்டி இருந்ததால் “சரி விடு குட்டிம்மா உன் அண்ணி பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துக்காதே...இப்போ சொல் ஏன் செல்லை உடைத்தாய் என்றதற்க்கு,இனியும் சொல்லாது இருந்தால் சரியில்லை என்று நினைத்தவளாக …

தான் காதலை உணர்ந்ததை தவிர அனைத்தையும் சொன்னவள் “எனக்கு பயமாக இருக்கிறது அண்ணா...அந்த அமைச்சரை மாமா ஏதாவது செய்து விட்டு இவர் பிரச்சினையில் மாட்டிக் கொள்வாரோ…” என்று பயத்துடன் பேசும் பரினிதாவின் இந்த பேச்சும், செயலும் சித்தார்த்துக்கு புதுமையாக இருந்தது.

பரினிதாவுக்கு அனைத்தும் விளையாட்டு தான். அப்படி இருந்தவள் எப்படி இப்படி மாறினாள்.ஏதும் நடக்காமலயே இப்படி பயப்படுகிறாள் என்றால் ஆஷிக் மீது இவளுக்கு எவ்வளவு அன்பு என்று நினைத்தவன் இது அன்பா இல்லை காதலா...என்று யோசனையின் முடிவு சித்தார்த்துக்கு தெரியாவிட்டாலும், பரினிதா முதல் போல் இல்லை.

குழந்தை போல் இருப்பவளை திருமணம் செய்து வைக்கிறனே என்ற கவலை இனி வேண்டாம் . அவள் இனி பொறு0ப்புடன் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் இனி பாட்டியிடம் சொல்லி திருமணத்தை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே பரினிதாவிடம் அவன் பேசுவதற்க்குள் ஆருண்யா

“சித்து வாங்க என் வீட்டுக்கு போகலாம்.” என்று பதட்டத்துடன் சொன்னவளை பார்த்து “என்ன ஆரு என்ன விஷயம் இப்போ நீயும் ஏன் இவ்வளவு பதட்டப்படுறே…”

“இல்லே சித்து ஆஷிக்குக்கு போன் போட்டால் அதை அணைத்து வைத்திருக்கிறான். சரி லான் லைனிலாவது பேசுவான் என்று பார்த்தால் அவன் அதை எடுத்து வைத்து விட்டான் போல் எங்கேஜுடாகவே வருகிறது. உங்களுக்கு அவனை பற்றி தெரியாது சித்து.பரினிதா சொன்ன மாதிரி அந்த அமைச்சரை அவன் ஏதாவது செய்ய போகிறான்.” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு செல்ல இரவு உடையில் இருந்து சுடிதாருக்கு மாறி கார் சாவியை எடுக்கும் போது பரினிதா “நானும் வருவேன்.” என்று அடம்பிடிக்க சரி என்று மூவரும் ஆஷிக் வீட்டுக்கு சென்றனர்.

இவர்கள் மூவரும் உள்ளே நுழையும் போது ஒரு இளம் பெண் அந்த அர்த்த ராத்திரியில் ஆஷிக்கின் வீட்டில் இருந்து வெளியேறினாள். அதனை பார்த்த ஆரு ஆஷிக்கிடம் “இதற்க்கு தான் என் வீட்டுக்கு வராமல் போனையும் எடுக்காமல் இருந்தாயா…” என்பவளுக்கு பதில் அளிக்காமல் ஆஷிக் பரினிதாவையே தான் பார்த்திருந்தான்.

பரினிதா சுத்தி வலைத்தெல்லாம் கேட்க வில்லை நேரிடையாக “இப்போது போன பெண் அந்த அமைச்சருக்கு எந்த வகையில் தொடர்பு .” என்ற அந்த கேள்வியில் ஆஷிக்கின் முகம் மலர்ந்தவனாக ஆருவிடம் “நீ என்னை அறிந்து இருபத்தொன்பது வருடமும் எட்டு மாதமும் முடிந்தும் என்னை பற்றி தெரிந்துக் கொள்ளவில்லை. என் பேபிம்மாவுக்கு என்னை இருமாதமாக தான் தெரியும். ஆனால் என்னை பற்றி எவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறாள் பார்…?” என்ற ஆஷிக்கின் பேச்சுக்கு பதில் அளிக்காமல் “அது என்ன இருபத்தொன்பது வருடத்துக்கு மேல் சொல்கிறாய். நமக்கு இருபத்தியெட்டு தானே...ஆகிறது.” என்றதற்க்கு.

சித்தார்த் தலையிலேயே அடித்துக் கொண்டு “அவன் நீங்கள் இரண்டு பேரும் வயிற்றில் இருந்ததையும் சேர்த்து சொல்கிறான்.ஏண்டி நான் தெரியாமல் தான் கேட்கிறான். இங்கு எவ்வளவு பெரியவிஷயம் ஒடிட்டு இருக்கு. ஆனால் உனக்கு அதெல்லாம் தெரியாமல் உன் வயதை கூட்டி சொல்லிட்டான் என்று அதற்க்கு விளக்க வேறு கேட்கிறே...பாரு” என்று சொல்லி விட்டு தன்னை கவலையுடன் பார்த்திருந்த பரினிதாவை பார்த்து விட்டு தன் விளையாட்டு பேச்சை விடுத்து.

“ஆஷிக் உன் திட்டம் தான் என்ன.பார் குட்டிம்மா எவ்வளவு பயந்து போய் இருக்கா…”

“பயமா அவள் ஏன் பயப்படனும்.அவளை பயமுறுத்தியவன் தான் இனி பயப்படனும்.”

“அது தான் அவனை என்ன செய்தாய் முதலில் அதை சொல்.நீ அந்த அமைச்சரை ஏதாவது செய்து விட்டு பிரச்சினையில் மாட்டிக் கொள்வாயோ என்று பயப்படுகிறாள்.” என்ற சித்தார்த்துக்கு பதில் அளிக்காமல் பரினிதாவை பார்த்து.

“பேபிம்மா உனக்கு என்ன பயம் அவனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் விடுவேன் என்றா…? உனக்கு அந்த பயமே வேண்டாம்.ஏன் என்றால் இவனை மாதிரி ஒருவனை கொலை செய்து விட்டு உன் கூட வாழும் வாழ்வை இழக்கமாட்டேன். ஆனால் அதற்க்காக உன்னை பயமுறுத்தியவனை சும்மாவும் விட மாட்டேன்.” என்று அவன் சொல்லி முடிப்பதற்க்கும் ஸ்ரீதர் பத்திரிகையோடு உள் நுழைவதற்க்கும் சரியாக இருந்தது.

அனைவரையும் பார்த்து “ அவனை என்ன செய்தாய் என்ன செய்தாய் என்று தானே கேட்டீங்க இதோ …” என்று ஸ்ரீதரின் கையில் உள்ள பத்திரிகையைய் வாங்கியவன் அதை புரட்டி தான் எதிர் பார்த்த செய்தி வந்திருந்த பக்கத்தை எடுத்து சித்தார்த்திடம் கொடுத்தான்.

சித்தார்த்தை அதனை பார்ப்பதற்க்குள் பரினிதா அவனிடம் இருந்து பிடுங்கி அந்த பக்கத்தை பார்த்தாள். அதில் இப்போது ஆஷிக்கின் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் பேட்டி கொடுத்திருந்தாள்.

அதில் அந்த அமைச்சர் உதவி கேட்க போன என்னை குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கெடுத்து விட்டதாகவும்,பின் அதனை போட்டோ எடுத்துக் கொண்டு தான் அழைக்கும் போது எல்லாம் வரவேண்டும் என்று தன்னை நிற்பந்தம் படுத்துவதாவும் சொல்லியதோடு மட்டும் அல்லாமல் அந்த பெண்ணும் , அமைச்சரும் நெருக்கமான போட்டோவும் அந்த பக்கத்தில் இடம் பெற்று இருந்தது.

பரினிதா படிக்கும் போதே சித்தார்த்தும், ஆருண்யாவும் சேர்ந்தே தான் படித்தனர்.அதை படித்த ஆருண்யா “இது உண்மையா இல்லை நீ அந்த ஆளை பழி வாங்க இப்படி செய்தாயா…?”

உடனே பரினிதா “என்ன தான் அந்த அமைச்சர் மீது கோபம் இருந்தாலும் மாமா இப்படி எல்லாம் வீண் பழி போட மாட்டார்.”

அதை சித்தார்த்தும் ஆமோதித்தான். ஆனால் வேறு மாதிரி “அந்த அமைச்சர் அப்படி பட்டவன் தான்.” என்று சொல்லி விட்டு ஆஷிக்கிடம் “என் தங்கைக்கு என்ன சொக்கு போடி போட்ட இப்படி நீ செய்வதற்க்கு எல்லாம் நியாயம் கற்பிக்கிறாள்.” என்றதற்க்கு.

ஒன்றும் சொல்லாமல் பரினிதாவையே பார்த்துக் கொண்டு “அது தான் நானும் யோசிக்கிறேன்.நான் என்ன செய்தேன் என்று .என்னை பற்றி ஆரு தெரிந்து வைத்திருப்பதை விட குழந்தை என்று நினைத்துக் கொண்டு இருந்த என் பேபிம்மா இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாள். சத்தியமாக சொல்கிறேன் எனக்கே அவளை பற்றி அவ்வளவு தெரியுமா...என்று சந்தேகமாக இருக்கிறது.” என்று சொல்லி விட்டு பரினிதாவை காதலோடு பார்த்தான்.

ஆனால் பரினிதாவோ அவன் பார்வைக்கு எதிர் பார்வை பார்க்காமல் ஒரு கேள்வியோடு தான் அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.அதை உணர்ந்த ஆஷிக் “இன்னும் உனக்கு என்ன சந்தேகம் பேபிம்மா எது என்றாலும் தயங்காமல் என்னிடம் கேள். அதற்க்கு முழு உரிமையும் உனக்கு மட்டும் தான் இருக்கிறது.”

“இல்லை இந்த செய்தியால் அந்த அமைச்சரின் குடும்பம் பாதிக்காதா…?”

“பாதிக்கும் கண்டிப்பாக பாதிக்கும் பாதிக்க வேண்டும் என்பதற்க்கு தானே...நான் அப்படி செய்தேன்.” என்பவனை பார்த்து முறைத்தாள்.

“பேபிம்மா உன்னிடம் நான் காதல் பார்வை எதிர் பார்த்தால் இப்படி முறைத்து பார்க்கிறாயே...சரி கோபப்படதே….நான் சொல்வதை பொறுமையாக கேள். இந்த பத்திரிகையில் வந்தது அனைத்தும் உண்மை தான்.எனக்கு இது ஒரு மாதம் முன்பே தெரியும் .” என்பவனை மீண்டும் முறைத்தாள்.

“சாரி பேபிம்மா தப்பு தான். நான் சித்தார்த் மாதிரி எல்லாம் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் இல்லை. எனக்கு என் குடும்பம் என் தொழில் இது தான் முக்கியம்.அதுவும் என் தொழிலுக்காக நான் எந்த எல்லைக்கு என்றாலும் செல்வேன். அதற்க்காக மற்றவர்களின் வீக் பாயிண்டை நான் அறிந்து வைத்திருப்பேன். அப்படி சேகரித்த விஷயம் தான் இந்த பெண்ணின் விஷயம்.அப்போது எனக்கு ஒரு சாதரண விஷயமாக தான் நினைத்து விட்டு விட்டேன்.

ஆனால் எப்போது அவன் உன்னையே கடத்தி சென்று நீ பயப்படும் படி செய்தானோ...அவனை அப்படியே விட்டு விடுவேனா...ஆனால் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.

அவன் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்றாலும்,தன் மூன்று பெண்கள் மீதும் தன் மனைவி மீதும் உயிரையே வைத்திருக்கிறான். அவர்களும் மிக நல்லவர்களே...இவனின் எந்த விஷயமும் அவன் குடும்பத்துக்கு தெரியாது.

அதனால் தான் இந்த பெண்ணை வைத்து செய்தியை வெளியில் கொண்டு வர செய்தேன்.இதனை பார்த்து கண்டிப்பாக அவன் மனைவியும், அவன் பெண்களும் அவன் மூஞ்சியிலேயே...முழிக்க மாட்டார்கள். இது தான் நான் அவனுக்கு தரும் தண்டனை.” என்று ஆவேசத்துடன் கூறுபவனை அச்சத்துடன் பார்த்தாள் பரினிதா.

பேசி முடித்தது விட்டு தான் ஆஷிக் பரினிதாவையே பார்த்தான். அவள் அச்சத்துடம் தன்னை பார்ப்பதை பார்த்து விட்டு அப்போது தான் தன் தவறை உணர்ந்தவனாக அவள் அருகில் சென்று அவள் தோளில் கைய் போட்டு “என்ன பேபிம்மா...என்னை பார்த்து ஏன் பயப்படுகிறே நான் உன் மாமா தானே…?”

“அப்போ ஏன் அவ்வளவு கோபமா பேசுறீங்க. நீங்க இப்படி கூட பேசுவீங்களா…?”

“நான் இப்படி தான் பேபிம்மா...ஆனால் உன்னிடம் கண்டிப்பாக இப்படி இருக்க மாட்டேன்.” என்று வித விதமாக பேசி அவளை சாமதான முயற்ச்சியில் அவன் இறங்க அதனை பார்த்த சித்தார்த்.

“ஆஷிக் நான் அவள் அண்ணன். என் எதிரிலேயே அவள் தோளில் கைய் போடுகிறாய்.”

“ உன்னுடைய நினைவை ஒரு மாதம் முன் கடந்து பார். டெல்லி வீட்டில் இது போல தானே ஆரு மீது கைய் போட்டு இருந்தாய். எங்களுக்காவது நிச்சயம் முடிந்து விட்டது. ஆனால் உங்களுக்கு அது கூட அப்போது ஆகவில்லை.உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா…” என்பவனிடம் மேலும் பேச்சை வளக்காது கவுரவமாக அவர்களுக்கு திருமணம் செய்யும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கி அடுத்த பத்து நாட்களில் முடித்தும் விட்டான்.
Pari super sis
 
Top