Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 26

Advertisement

அத்தியாயம்---26

குடோன் இருக்கும் இடத்திற்க்கு ஒரு இருபது அடி முன் ஒரு கார் இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தது. ஆஷிக் தன் வண்டியை அதன் பக்கத்தில் நிறுத்தியதும் காரில் இருந்து இரு போலீஸ் காரர்கள் இறங்கி வந்து ஆஷிக்கிடம்

“எல்லா ஏற்பாடும் செய்தாச்சி சார். உள்ளே ஏழு பேர் இருக்கிறார்கள். இப்போ போனா சரியா இருக்கும் சார்.” என்ற அந்த போலீஸ்காரனை சித்தார்த் அதிசயத்துடன் பார்த்தான்.

தன்னிடம் போலீஸ் வேண்டாம் என்று சொன்னவன் இங்கு தாங்கள் வருவதற்க்கு முன்னே போலீஸை வரவழைத்து விட்டான் என்றால் அந்த போலீஸ் காரன் ஒரு கலெக்டர் என்னை கண்டுக் கொள்ளாமல் ஆஷிக்கின் அனுமதி வாங்குகிறானே என்று நினைத்துக் கொண்டே …

அந்த போலீஸ் காரனிடம் “நீ எந்த ஸ்டேஷன் .” என்று கடுமையுடம் கேட்டான்.

அதற்க்கு அந்த போலீஸ் பதில் அளிக்காமல் ஆஷிக்கை பார்க்க ஆஷிக் அந்த போலீஸ் காரனை “நீ போ முருகா…” என்று அனுப்பி விட்டு சித்தார்த்திடம் கூலாக “அவன் போலீஸ் இல்லை. என்னிடம் வேலை பார்ப்பவன்.” என்று சொன்னவனிடம் கடுமையாக ஏதோ சொல்லும் சித்தார்த்திடம்.

“உங்கள் நியாயம்,நீதி,நேர்மை,கடமை,பற்றி எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போ பரினிதாவை கூட்டிட்டு போய் உங்க பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு ரிசப்ஷன் வேலையைய் வேறு பார்க்க வேண்டும்.” என்று சொன்னவன்.

முருகனிடம் “என் காரை பாலோ செய்.” என்று சொல்லி விட்டு தன் காரை எடுத்தான்.

பின் ஆஷிக்கின் நடவடிக்கை அனைத்தும் அதிரடியாக தான் இருந்தது. அந்த அமைச்சரை ஒரு போலீஸ்காரர் கையில் விலங்கு மாட்ட அந்த அமைச்சர் ஆஷிக்கிடம் “எல்லா கட்சியாளும் உன் பாக்கெட்டில் இருப்பதாலும், இப்போ கலெக்டருக்கே உன் சகோதரியை கொடுத்துட்டதாலும் தானே இவ்வளவு ஆடுகிறாய். என் வக்கீல் என்னை பெயில் எடுப்பார். பிறகு நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.” என்பவனை பார்த்து ஒரு நக்கலாக சிரித்தவாரே…

“நீ சுப்ரீம் கோட்டுக்கே போனாலும் உனக்கு பெயில் கிடைக்காதுடா…” என்று சொல்லி விட்டு அந்த போலீஸ் உடையில் இருப்பவனிடம் ஏதோ சொல்லி விட்டு சித்தார்த்தை பார்த்தான்.

இவை அனைத்தையும் ஒரு திரைப்படம் போல் பார்த்த சித்தார்த் இவன் நல்லவனா… கெட்டவனா...என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழித்திருந்தவனின் காதில் ஆஷிக் “நான் எப்படி இருந்தாலும் நீ உன் தங்கையை எனக்கு தான் கொடுத்தாக வேண்டும். இது உங்க வீட்டு சீப் மினிஸ்டரோட விருப்பம். அப்புறம் இன்னொறு விஷயம் இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் டெல்லியில் ஜார்ஜ் எடுத்துக்க வேண்டி வரும். அதற்க்கு உண்டான ஏற்பாட்டை நான் செய்து விட்டேன். நீங்கள் இங்கு கலெக்டராக இருந்தால் உங்களுக்கும் பிரச்சனை எனக்கும் பிரச்சனை அது தான் .

அது மாதிரியே ஆருக்கு அவள் வேலை பார்த்த பத்திரிக்கை ஆபிசையே வாங்கி விட்டேன். அவளுக்கு பத்திரிக்கை தான் பிடித்தமானது அதனால் தான்.” என்று பேசுபவனை ஒரு புன்சிரிப்போடு பார்த்து.

“ஆரு உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள். ஆனால் நீ அதை எல்லாம் தாண்டி விட்டாய். ஆனால் உனக்கும் பரினிதாவுக்கும் செட்டாகுமா என்று தான் தெரியவில்லை.” என்பவனிடம் “ முதலில் கட்டி கொடுங்கள் பிறகு நாங்கள் எப்படி செட்டானோம் என்று காட்டுகிறேன்.” என்ற அவனின் பேச்சுக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன்னே ஒரு போலீஸ் காரனிடம் இவ்வளவு நேரம் கதை அளந்து விட்டு அப்போது தான் அங்கு வந்து சேர்ந்த பரினிதா சித்தார்த்திடம் “அண்ணா எனக்கு அந்த போலீஸ் காரர் மீது டவுட்டாக இருக்கிறது.” என்ற பரினிதாவின் பேச்சிக்கு

சித்தார்த் ஆஷிக்கிடம் “ நீ ஏற்பாடு செய்த போலீஸ் பரினிதாவே சந்தேகப்படும் அளவுக்கு இருக்கிறது.” என்பவனிடம்.

“அது என்ன பரினிதாவா சந்தேகப்படும் அளவுக்கு. என் பேபிம்மா புத்திசாலி அது தான் எவ்வளவு கச்சிதமாக போலீஸ் மாதிரி நான் ஏற்பாடு செய்தாலும் சட்டென்று அவள் தெரிந்துக் கொண்டாள்.” என்றவனுக்கு அப்போது தான் நான் வரும் போது இவள் அந்த அமைச்சரிடம் நானும் ,ஆஷிக்குக் திருமணம் செய்துக் கொள்ள போகிறோம் என்று கூறியது நியாபகத்துக்கு வந்தது.

அதை பற்றி அவன் கேட்க்கும் முன்பே பரினிதா “அய்யோ அப்போ அவர்கள் போலீஸ் இல்லையா….இது தெரியாமல் நான் என் போன் நம்பரை அவர்களிடம் கொடுத்து விட்டேனே….” என்று பயந்து போய் சொன்னாள்.

இது வரை பயம் அறியாமல் தான் இருந்தாள். ஆனால் தான் கடத்தப்பட்டதும் அந்த கொஞ்ச நேரம் என்ன செய்வார்களோ...என்ற அந்த நினைவே அவளுக்கு மிக பயங்கரமாக இருந்தது. பின் ஆஷிக்கை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிந்ததும் கொஞ்சம் பயம் போனாலும், ஆஷிக்கும்,அண்ணாவும் வரும் வரையில் மனதில் ஒரு நடுக்கம் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

அதனால் தான் இப்போது யாரோ ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து விட்டோமே இதனால் ஏதாவது பிரச்சனை வருமே என்று பயந்து போய் உரைத்தாள்.

அவள் பயத்தை அறிந்துக் கொண்ட ஆஷிக் “கவலை படதே பேபிம்மா அவர்கள் நம் ஆள் தான். இருந்தாலும் இனி இது போல் உன் போன் நம்பரை கொடுக்க கூடாது சரியா…” என்று ஒரு குழந்தைக்கு சொல்வதை போல் சொல்லும் அவனை சித்தார்த் இவனா கொஞ்சம் நேரம் முன் அமைச்சரை பார்த்து அவ்வளவு ஆக்ரோஷமாக கத்தினான் என்று சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு வேளை ஆஷிக் தான் பரினிதாவை நன்றாக பார்த்துக் கொள்வானோ...அந்த நம்பிக்கையில் தான் பாட்டிம்மாவும் அவ்வாறு பேசினார்களோ...என்று தோன்றியது. ஆம் பாட்டியின் பேச்சியில் இருந்தே ஆஷிக்குக்கு மறைமுகமாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை அவனுமே அறிந்துக் கொண்டான்.

சரி என்னை பொறுத்த வரை என் தங்கை நன்றாக இருக்க வேண்டும். அவ்வளவு தான் என்ற வகையில் சித்தார்த் ஆஷிக்கை பார்த்து “வா போகலாம் மச்சான் .” என்று அழைப்பு விடுத்தான்.

ஆஷிக்குக்கு பரினிதா எதற்க்கு அந்த அமைச்சரிடம் அப்படி சொன்னாள் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் அதை பற்றி கேட்காது நிதானமாக கேட்கலாம் என்று முடிவு எடுத்தவனாக சித்தார்த்திடம் “வா சித்தார்த் போகலாம்.” என்று சொல்லி விட்டு பரினிதாவை கூப்பிட அவளை பார்த்தால்.

அவள் போன் நம்பர் கொடுத்த அந்த போலி போலீஸ் காரனின் போனை வாங்கி அவள் நம்பரை டேலிட் செய்து கொடுத்து விட்டு ஆஷிக்கின் அருகில் வந்து நின்று “ நீங்க பார்த்துப்பீங்க இருந்தும் கொஞ்சம் பயமாக இருந்தது. அது தான்.” என்று இழுத்தவளின் பேச்சியில் இருந்தே இந்த கடத்தல் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது என்று அறிந்துக் கொண்ட ஆஷிக்.

மனதில் அந்த அமைச்சரை இருடா முதலில் இந்த பங்ஷன் நல்லபடியா முடியட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு கச்சேரி என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் வேலையிலேயே சித்தார்த் ஆஷிக்கிடம்.

“இப்போ அந்த அமைச்சரை எங்கே அழைச்சிட்டு போக சொல்லி இருக்கே…?” என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதிலேயே இவன் ஏதோ வில்லங்கம் தான் செய்ய போகிறான் என்று அறிந்தவனாக.

“வேண்டாம் ஆஷிக். அவனை என்னிடத்தில் ஒப்படைத்து விடு.” ஆஷிக் கேள்வியோடு பார்க்க.

“நான் இதில் பரினிதா பெயர் வராமல் பார்த்துக் கொள்வேன்.” என்றவனிடம்.

“இல்லை அவனை நானே நன்றாக பார்த்துக் கொண்டால் தான் எனக்கு திருப்தி.” என்று சொல்பவனிடம் சித்தார்த் ஏதோ சொல்ல வர பரினிதா தன் அண்ணாவிடம்.

“மாமா சொல்வது தான் சரி அண்ணா. அந்த அமைச்சர் உங்க தங்கை என்று தான் கடத்தினார். ஆனால் என்னை பார்த்ததும் ஆஷிக்குக்கு நீ என்ன உறவு என்று பயந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் மாமாவின் செல்வாகை. அண்ணா இந்த காலத்தில் ஜென்டிச் மேனாக இருப்பதை விட. வில்லன் கலந்த ஹீரோ தான் செட்டாகும்.” என்று பேசுபவளை பார்த்து ஆஷிக் மனதுக்குள் நான் உனக்கு செட்டானால் போதும் பேபிம்மா...என்று கூறிக் கொண்டான் என்றால்.

சித்தார்த் இவன் ஏற்கனவே ஆடிக் கொண்டு தான் இருக்கிறான். இவள் என்ன என்றால் அவனுக்கு சலங்கையும் சேர்த்து கட்டி விடுகிறாளே என்று நினைக்கும் வேலையில் பாட்டிம்மாவிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்து தான் அய்யோ பரினிதா கிடைத்து விட்டதை நான் இன்னும் பாட்டிம்மாவிடம் சொல்ல வில்லையே என்று பதட்டத்துடன் போனை பார்க்கும் வேலையில்

பரினிதா தன் அண்ணாவிடம் “அண்ணா நான் பாட்டியிடம் சொல்லி விட்டேன் .” என்று கூறி அவன் வயிற்றில் பாலை வார்த்தாள்.

அதற்க்கு ஆஷிக் “என் பேபிம்மா என்ன அறிவு பார்த்தியா சித்தார்த். நமக்கு கூட வீட்டில் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை பார்த்தியா….ஆனால் பரி நீ க்ரேட்டா…” என்ற ஆஷிக்கின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டு இருப்பவளை சித்தார்த்தின் ஒத்தை வார்த்தை கடும் வெயிளில் தள்ளியது போல் இருந்தது.

“முதலில் அவளை அந்த எட்டு அரியஸை முடிக்க சொல். அப்போ நான் ஒத்துக் கொள்கிறேன் அவள் க்ரேட் என்று.” சொல்லும் சித்தார்த்தை பரினிதா கொலை வெறியோடு பார்த்தாள்.

இவன் என் அண்ணனாக போய் விட்டான் இல்லை என்றால் நடப்பதே….வேறு. பின் அவளும் தான் என்ன செய்வாள் எப்போதும் தன் அரியஸை பற்றி பேசியே மக்கள் மனதில் இருக்கும் தன் இமேஜை சரிக்க நினைத்தால் அவளுக்கு கோபம் வர தானே செய்யும்.

அவள் கோபமுகத்தை பார்த்த ஆஷிக் “சரி விடு பேபிம்மா…தெரியாமல் சொல்லிட்டார். உன் அண்ணன் தானே பெரிய மனது பண்ணி அவரை மன்னித்து விடு.” என்றதற்க்கு.

“ சரி உங்களுக்காக நான் மாமா நான் அவரை விட்டுகிறேன். ஆனால் ஒன்று இனி அவர் என் படிப்பை பற்றி பேசக் கூடாது என்ன.” என்று ஆஷிக்கை பார்த்து பரினிதா பேரம் பேச ...அவள் பேச்சில் மயங்கியவனாக அவள் காதருகில் “சரி இனி உன் அண்ணன் இனி உன் படிப்பை பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதற்க்கு நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்ன…?” என்று அவளிடம் அவள் பேசிய பேரத்துக்கு மறு பேரம் பேசினான்.

இனி அவள் படிப்பு பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் ஆஷிக்கை அந்த பெருமாளையே பார்த்த மாதிரி பயபக்தியுடன் பார்த்து வைத்து “எப்படி…? எப்படி…?” என்று அவனை போலவே ரகசியமாக காதில் கேட்டு வைத்தாள்.

அவள் மூச்சு காற்று தன் காதில் மோதியதில் அவன் மயிர்கள் எல்லாம் சிலிர்த்து எழ இருக்கும் இடம் கருதியும்,மாலை நடக்க இருக்கும் ரிசப்ஷன் வேலை மலை அளவில்

காத்திருப்பதிலும் தன் உணர்ச்சியை அடக்கிய படி… “இன்று பங்ஷன் முடியட்டும் பேபிம்மா...நாளை உன் வீட்டில் வந்து அனைவரின் முன்னிலையிலும் சொல்கிறேன் என்ன..? ஆனால் அதற்க்கு நான் ஏதாவது கேட்டால் நீ ஆமாம் என்று சொல்ல வேண்டும் சரியா…?” என்று அவள் வீக் பாயிண்டை பிடித்து தான் நான் அவளை மணக்க முடியும் என்று நினைத்து அவளிடன் கேட்டான்.

ஏன் என்றால் இவளிடம் நான் காதலை சொன்னால் கண்டிப்பாக அதையும் இவள் விளையாட்டாக தான் எடுத்துக் கொள்வாள்.அதனால் தான் இந்த ஐடியாவில் அவளை மணக்க திட்டம் தீட்டினான்.

என்ன தான் பரினிதாவின் பாட்டி மறைமுகமாக தனக்கு பரினிதாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாலும், பரினிதா சரி என்றால் தான் தனக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள். அதனால் தான் பரினிதாவிடம் முதலிலேயே இப்படி பேசி அவளை தன் வழிக்கு கொண்டு வந்தான்.

பரினிதாவை திருமணம் செய்து கொண்டு பின் தன் காதலை அவளுக்கு புரிய வைத்து விடலாம் என்று எண்ணியே இந்த திட்டதை வகுத்தான்.அவளும் ஆஷிக்கின் திட்டத்துக்கு சரி என்று தன் தலையை ஆட்டி வைத்தாள்.

சித்தார்த் சிறிது தள்ளி ஆஷிக், பரினிதாவின், பேச்சி காதில் விழாத . அளவுக்கு நின்று இவர்களின் பேச்சை ஒரு ஊமை நாடகம் போல் பார்த்துக் கொண்டு இருந்தவன் பரினிதாவின் தலையாட்டாளை பார்த்து அட பாவி இன்னும் அவள் கழுத்தில் தாலியே கட்டவில்லை அதற்க்குள் இவன் பேச்சிக்கு தலையாட்ட வைத்து விட்டானே….என்று நினைத்தவன் இவனே...இப்படி என்றால் இவன் சகோதரி என்று எண்ணமிடும் போதே….

“அதோ கதி தான்.” என்று ஆஷிக் சித்தார்த்திடம் சொன்னான்.

“இப்போ எதற்க்கு அப்படி சொன்னே…”

“நீ எதை நினைத்தாயோ….அதற்க்கு தான் சொன்னேன்.” என்று சொன்னவன்.

“சரி சீக்கிரம் போகலாம் வா….எனக்கு இனி தான் நிறைய வேலை இருக்கிறது.” என்று சொல்லி விட்டு தான் அனுப்பிய ஆள் கொண்டு வந்து கொடுத்த ஐஸ்கீரிமை பரினிதாவிடம் கொடுத்து “டையடாக இருக்கிறாய் பார்.இதை சாப்பிட்டு விட்டு வா போகலாம்.” என்று சொன்னவனை மகிழ்ச்சியுடன் பார்த்த பரினிதா அதனை வாங்கி ஆசையுடம் சாப்பிட ஆராம்பித்தாள்.

அதனை காதல் பொங்க பார்த்திருந்த ஆஷிக்கிடம் “ ஐஸ்கீரிம் வாங்க எப்போது ஆளை அனுப்பினாய்.” என்றதற்க்கு…

“என் பேபிம்மா…நானும், ஆஷிக்கும் கல்யாணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று அந்த பொறுக்கியிடம் சொன்னதை கேட்டதுமே நான் ஆளை அனுப்பி விட்டேன். ஏன் என்றால் நல்ல விஷயத்தை இனிப்போடு தான் கொண்டாட வேண்டும். அதனால் தான் ஐஸ்கீரிம் வாங்கி வர சொன்னேன். ஐஸ்கீரிம் இனிப்போடு என் பேபிம்மாவுக்கும் பிடித்தது பாரு அதனால் தான் அதையே.. வாங்க வரச் சொன்னேன்.”

என்பவனை பார்த்து “உன்னிடம் நான் கத்துக் கொள்ளவது நிறைய இருக்கிறது.”

“இனி நம் உறவு நீண்டு இருக்கிறதே….பொறுமையாக நான் உனக்கு சொல்லி தருகிறேன். இப்போது இன்று மாலை நடக்கும் விசேஷத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.” என்று சொல்லி விட்டு பரினிதாவிடம்.


“சாப்பிட்டு விட்டாயா...பேபிம்மா வா போகலாம்.” என்றவன் அருகில் சென்று சரி என்று தலையாட்டியவளை பார்த்த சித்தார்த் இனி நாம் பரினிதாவை பற்றி கவலை பட தேவை இல்லை.ஆஷிக் பார்த்துக் கொள்வான் என்ற மனநிறைவுடன் அந்த இடத்தை விட்டு ஆஷிக் பரினிதாவுடன் அகன்றான்.
Enjoyed sis .... Super epi ..
 
Top