Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 25 2

Advertisement

Admin

Admin
Member
சித்தார்த்துக்கு இப்போது ஆஷிக்கின் பேபிம்மாவின் அழைப்பில் ஒரு உரிமை இருப்பதாக தோன்றியது. அதுவும் அவர்கள் வரும் போது பரினிதா அமைச்சரிடம் சொன்ன ஆஷிக்கை திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்ற பேச்சும், அவன் நினைவில் வந்து சென்றன.

பரினிதா ஆஷிக்கிடம் சிரித்தவாரே “வலி எல்லாம் இல்லை மாமா. இங்கு அவர்களை பார்த்தும் முதலில் பயமாகத்தான் இருந்தது. பின் அவர்களே உங்களிடம் பயப்படுவதை கேட்டதும் என் பயம் போய் விட்டது மாமா.” என்று சொல்லி சிரிப்பவளை பார்த்து அவனுக்கு பரினிதாவை பயப்பட வைத்த அந்த அமைச்சரை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் போல் இருந்தது.

பரினிதாவின் தலையை தடவி விட்டு அவள் கைய் பிடித்து சித்தார்த்தின் அருகில் அழைத்து வந்தான். சித்தார்த் அடப் பாவிங்களா...நான் அவள் அண்ணன் அந்த நினைவு கூட இல்லாமல் என் எதிரிலேயே தலையைய் தடவுவது என்ன…? கைய் பிடித்து அழைத்து வருவது என்ன…? என்று நினைத்துக் கொண்டே ஆஷிக்கின் கைய் பிடியில் இருந்த பரினிதாவின் கையைய் பார்த்தான்.

சித்தார்த்தின் பார்வையைய் பார்த்த ஆஷிக் தானும் ஒரு பெண்ணின் சகோதரன் என்ற நினைவில் பரினிதாவின் கையைய் விட்டு சித்தார்த் அருகில் வந்து அவன் காதில்.

“கைய் விட்டது டெம்ரவரி தான். அடுத்த தடவை நான் கைய் பிடித்தால் அது நிறந்தரமான பிடியாக தான் இருக்கும்.” என்று சொன்னவன் “வாங்க போகலாம் சாயந்திரம் நடக்க இருக்கும் ரிசப்ஷனுக்கு தேவையான ஏற்பாடு செய்ய வேண்டாமா….” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த ஒரு போலீஸ்காரனின் மேல் சாவகாசமாக கைய் போட்டவாரே பேசிக் கொண்டு போகும் ஆஷிக்கை சித்தார்த் வியந்து பார்த்தான்.

ஆம் வியந்து தான் பார்த்தான் சித்தார்த். பரினிதா கடத்தப்பட்டால் என்று கார் டிரைவர் சொன்னதும் ஒரு நிமிடம் தன் உலகமே சுற்றுவது போல் இருந்தது.அப்படியே பக்கத்தில் உள்ள ஹோபாவில் தோய்வுடம் சரிந்தான். ஆஷிக்குக்கும் ஒரு நிமிடம் உறைந்து போய் விட்டான்.

அடுத்து என்ன என்று யோசிக்கும் சிந்தனை அற்றவனாக இருந்தவனை பாட்டிம்மாவின் பேச்சித்தான் அவனை யோசிக்க வைத்தது. “சித்து இது அமைதியாக இருக்கும் சமயம் அல்ல. மாலையில் ரிசப்ஷன் இருக்கு அதற்க்குள் நம் பரினிதாவை மீட்டாக வேண்டும். இந்த விஷயம் வெளியில் சென்றால் பெண் பிள்ளை காது மூக்கு வைத்து கதை கட்டி விடுவார்கள்.” என்ற பேச்சி தனக்கே சொன்னது போல் இருந்தது ஆஷிக்குக்கு.

ஆஷிக் யாராய் இருக்கும் என்று சிந்தனை ஓடும் போதே...சித்தார்த் தன் பாட்டிம்மாவிடம் “பாட்டிம்மா அந்த வினோத் நம்பர் இருக்கா தாங்க.” என்று கேட்டதிலேயே சித்தார்த் எதற்க்கு கேட்கிறான் என்று புரிந்துக் கொண்ட ஆஷிக்

“இல்லை இது அவன் வேலையாக இருக்காது.” என்று திட்டவட்டமாக சொன்னவனை பார்த்து ஆரு “அண்ணா ஒரு வேலை அந்த மத்திய மந்திரி” என்று சொன்னவளிண் பேச்சைக் கேட்ட ஆஷிக் சட்டென்று தன் போனை எடுத்து யாரையோ அழைத்து பேசிய ஆஷிக்.

பின் “இல்லை அந்த மந்திரி இல்லை.” என்று சொன்னவன் சித்தார்த்திடம் “சித்தார்த் சமீபத்தில் யாரேனும் பெரிய இடத்தை பகைத்துக் கொண்டீர்களா…” என்று கேட்டவனின் பேச்சிக்கு.

சிறிது நேரம் யோசித்து விட்டு “என் பதவியில் நிறைய பெரிய மனிதர்களின் பகையைய் நான் சம்பாதித்து தான் இருக்கிறேன். யாரை என்று சொல்ல...அதுவும் இல்லாமல் நான் அவர்களுக்கு சாதகமாக செய்ய விட்டால் இடம் மாற்றம் தான் செய்வார்கள். இப்படி என் குடும்பத்துக்கு எதுவும் செய்தது கிடையாது.” என்று சொல்பவனை இவன் இவ்வளவு நல்லவனாக இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று தான் நினைக்க தோன்றியது.

தானே முதலில் இதனை தானே செய்ய எண்ணினான் என்று நினைக்கும் வேலையிலேயே ஏதோ நினைவு வந்தவனாக சித்தார்த்திடம் “சித்தார்த் அமைச்சரின் பெயர் சொல்லி அவர் உங்களிடம் ஏதாவது விஷயம் முடித்து கொடுக்க கேட்டு உங்களிடம் வந்தாரா…”

“இல்லை உதவி இல்லை. ஆனால் அவர் கட்டிய ஒரு ஏழு அடுக்கு மாடி கட்டிடம் வரம்பு மீறி கட்டி இருந்தார். அதை இடிக்க நோட்டிஸ் அனுப்பினேன்.” என்று சொன்னது தான்.

ஆஷிக் ஸ்ரீதருக்கு அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்து “ நான் சொன்னதை விசாரித்து எனக்கு தகவல் சொல். சீக்கிரம் என்று சொன்னவன்.அந்த கார் டிரைவரிடம் இப்போ சில ஆல்பத்தை எடுத்து வருவார்கள் அந்த ஆல்பத்தில் இருப்பவகள் யாராவது பரினிதாவை கடத்தியவர்களில் இருக்கிறார்களா என்று பார்த்து சொல்.” என்று கூறிவிட்டு வாசலை பார்த்து காத்திருந்தான்.

சிறிது நேரத்துக்கு எல்லாம் வேர்க்க விரு விருக்க ஸ்ரீதர் கையில் ஒரு ஆல்பத்தோடு சித்தார்த்தின் வீட்டுக்கு வந்தடைந்தான். ஸ்ரீதரின் தலை வாசலில் கண்டதும் ஸ்ரீதர் ஹாலில் வருவதற்க்குள் ஆஷிக் விரைந்து சென்று அவரிடம் இருந்த ஆல்பத்தை பெற்றுக் கொண்டு கார் டிரைவரை அருகில் வரும் படி சைகை செய்தான்.

டிரைவர் அருகில் வந்ததும் தன் கையில் உள்ள ஆல்பத்தை அமர்ந்த வாரே தானே ஒவ்வொறு பக்கமாக புரட்டி காண்பித்தான். ஒவ்வொறு பக்கம் புரட்டும் போது டிரைவரின் முகபாவத்தையே பார்த்திருந்த ஆஷிக் ஆல்பத்தின் ஐந்தாம் பக்கத்தை தான் புரட்டும் போது டிரைவரின் வெறித்த பார்வையில் அடுத்த பக்கத்தை திருப்பாது என்ன இவனா…? என்று ஆக்ரோஷத்துடன் கேட்டான்.

அவன் கோபக்குரலுக்கு அந்த டிரைவர் பயந்து ஆம் என்று தலையாட்டினான் என்றால் ,அங்கு இருந்த மற்றவர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர். ஆனால் இது பற்றி யோசிக்கவோ,விசாரிக்கவோ, நேரம் இது அல்ல என்று புரிந்த அனைவரும் ஆஷிக்கிடம் பரினிதாவைம் கடத்தியவர்கள் யார் என்று தெரிந்துக் கொள்வதற்க்ககா பார்வையை செலுத்தினார்கள்.

ஆஷிக் டிரைவர் காட்டிய போட்டோவை தன் போன் மூலம் படம் எடுத்து ஒரு மூன்று நம்பருக்கு அனுப்பி வைத்து அந்த நம்பரில் இருந்து வரும் செய்திக்கு காத்திருந்தான்.ஆஷிக்கின் நடவடிக்கை மூலமே அவனின் நடவடிக்கையை அறிந்துக் கொண்ட சித்தார்த் அமைதியுடன் இருந்தான்.

பின் சிறிது நேரம் சென்றதும் ஆஷிக்குக்கு ஒரு போன் வர அதை சட்டென்று ஆன் செய்து காதில் வைத்து .

“ சொல் மூர்த்தி அது யாரோடு அடியாள் என்று தெரிந்ததா…” அந்த பக்கத்தில் என்ன சொன்னானோ முகம் எல்லாம் சிவந்து போனை அணைத்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திடம்.

“ அந்த அமைச்சரின் ஆட்கள் தான் கடத்தியிருக்கிறார்கள். நீங்கள் அவன் கட்டிய அடுக்கு மாடியை இடிக்க நோடீஸ் விட்டீங்க இல்லையா அதற்க்காக .”என்று சொன்னவனிடம்.

பாட்டிம்மா இப்போ எங்கே வைத்திருப்பார்கள் ஆஷிக் என்று பயந்து தான் கேட்டார். என்ன தான் தைரியமாக தொழில் செய்தாலும் ஒரு வயது பெண் கடத்தப்படுவது சாதரண விஷயம் இல்லையே...இது வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக கதை கட்டி விடுவார்கள்.

அதனால் எவ்வளவு சீக்கிரம் பரினிதாவை மீட்கிறோமோ...அவ்வளவு நல்லது என்று உணர்ந்தவராக ஆஷிக்கிடம் கேட்டார்.

பாட்டிம்மாவின் பயம் அறிந்தவனாக “கவலை வேண்டாம் பாட்டிம்மா….அவனுக்கு மூன்று குடோன் இருக்கு மூன்றிலும் விசாரிக்க சொல்லி விட்டேன். மேலும் அவள் கடத்தப்பட்டது யாருக்கும் தெரியாது.” என்று சொன்னவனை பாட்டிம்மா ஆச்சரியத்துடன் பார்த்தான்.

இந்த ஒரு மணி நேரமாக அவன் நடவடிக்கையை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.பரினிதா கடத்தப்பட்ட செய்தி அறிந்து ஒரு நிமிடம் செய்வதறியது நின்றாலும் அடுத்த நிமிடமே….அவன் அடுத்து அடுத்து எடுத்த நடவடிக்கை அதில் இருந்த வேகம் கோபம் அனைத்தும் பார்த்ததில் அவருக்கு விளங்கி விட்டது ஆஷிக்குக்கு பரினிதாவின் மேல் விருப்பம் என்று.

பாட்டிம்மாவுக்கு ஆஷிக்கின் திறமையை பார்த்து மலைத்தே போனார் என்று தான் சொல்ல வேண்டும். பதவியில் இருக்கும் தன் பேரன் செய்ய முடியாதது கூட தன் திறமையால் செய்து முடித்து விட்ட ஆஷிக்கை நினைத்துஅவருக்கு பெருமையாக தான் இருந்தது.

அதுவும் தான் கேளாமலேயே இந்த விஷயம் வெளியில் செல்லாது என்று சொன்னது அவரை அசத்தியே விட்டது.அவர் இப்படி எண்ணமிடும் போதே திரும்பவும் ஆஷிக்க்குக்கு அழைப்பு வந்தது அதனை எடுத்து பேசிமுடித்த ஆஷிக் சித்தார்த்திடன்.

“ பல்லாவரம் குடோனில் தான் வைத்திருக்கிறார்கள்.” என்று சொன்னது தான்.

உடனே தன் ஆபிசுக்கு போன் செய்யும் சித்தார்த்தை தடுத்த ஆஷிக் “போலீஸை கூப்பிட வேண்டாம். இதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றவனிடம்.

“தப்பு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும் ஆஷிக்.” என்று சொல்பவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று இவன் யோசிக்கும் போதே…

பாட்டிம்மா “வேண்டாம் சித்தார்த் இது ஒரு பெண்ணின் விஷயம் ஆஷிக் எப்படி செய்கிறாறோ அப்படி செய்யட்டும்.” என்ற பேச்சில் ஆஷிக் வியப்புடன் அவரை பார்க்கும் போது ஒரு புன்சிரிப்புடன்.

“பரினிதாவை கூட்டிட்டு வாப்பா. பிறகு அனைத்தும் பேசிக் கொள்ளலாம்.” என்பதிலேயே தன் விருப்பம் அவருக்கு தெரிந்து விட்டது என்றும் அதற்க்கு அவர் பச்சை கொடியும் காட்டி விட்டார் என்று தெரிந்துக் கொண்ட ஆஷிக்.

“நன்றி பாட்டிம்மா.” என்று கூறிவிட்டு சித்தார்தோடு பல்லாவரம் குடோனுக்கு சென்றான்.
 
Top