Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNWriter_027 அவர்கள் எழுதிய "முத்தத்தின் ஈரத்தில்"

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

‘ஆஜானுபாகு’, ‘ஆக்ரோஷம்’, ‘ஆத்திரம்’ என ‘ஆன்ட்டி ஹீரோ’வின் மொத்த உருவமாக ஜாகுவாரை ஆவேசமாக ஓட்டிய நாயகன், அகம் நுழைந்த தன் ஆருயிரின் தரிசனம் கிட்டியதும் ‘அன்பு’, ‘அக்கறை’, ‘அனுசரணை’ என்று இரண்டாம் அத்தியாயத்திலேயே அந்தர்பல்டி அடிக்கின்ற கதையின் துவக்கம் வித்தியாசமாகவும், மேலும் படிக்கும் ஆவலையும் தூண்டியது.

நாயகியின் தோற்ற அமைப்பு, அவளின் மனப்போராட்டம் என்று நீங்கள் ஆங்காங்கே தந்த வர்ணனைகள் யாவும் இது உருவ கேலி சம்பந்தமான கதை என்றும் தெள்ளத் தெளிவாகக் காட்டியது.

மறைமுகமான கிண்டல் பேச்சுகளைச் சகித்தும் கடந்தும் வர பழகிய நாயகியின் நிமிர்வான சுபாவம் நீங்கள் அவளை ஒப்பிட்ட பாரதி கண்ட புதுமை பெண்ணாக நியாயப்படுத்தியது. அதே சமயத்தில், கணவனின் ஒரு சொல்லில் புழுவாய் துடிதுடித்து அவனின் கண்ணம்மாவாகக் குமுறிய இடங்களும் தத்ரூபம்.

மலையளவு காதலும் புரிதலும் கொண்ட சுசீந்தரனின் விடாமுயற்சிகள் அனைத்தும் சூப்பர். வயதிற்கே உண்டான உணர்ச்சிகளின் பிடியில் தவித்தும், கண்ணியம் கடைப்பிடித்தும் அவன் தன் கண்ணம்மாவின் நம்பிக்கையை மீட்டெடுத்த நிதானம் அழகிலும் அழகு.

முத்தத்தின் ஈரத்தில் என்ற தலைப்புக்கு Total Justification கொடுக்கும் அளவிற்கு, Thames Bridgeல் மஹிமா செய்த அலப்பறைகள் கொள்ளை அழகு ஆத்தரே. இப்படியெல்லாம் செய்தால், London Bridge is falling down என்று பாடத்தான் செய்வார்கள்.

தேக்கிவைத்த காதலை சொல்ல முடியாமல் சுசி தவித்ததும், கணப்பொழுதில் மஹிமா அதை வெளிப்படுத்தியதையும் காணும் போது, “அட ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்; அவள் வருவாளே!” என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

புத்தர் சிலை காதல் பரிசாகத் தருகிறானே என்று நொந்த வேளையில், அதன் மர்மத்தை அறிந்தபோது, மஹிமாவுக்கு மட்டுமில்லை; எங்களுக்கும் பிரமிப்பாக இருந்தது. Again hats off to your imagination.

கவி பாரதி, கடுப்பேத்தும் பாரதி, காதல் பாரதி, கவலை பாரதி என்று அவன் மனநிலைக்கு ஏற்ப அடைமொழிகள் இணைத்த உங்கள் கற்பனை திறன் அழகு. சூழ்நிலைக்கு ஏற்ப கதை முழுவதும் பாரதி பாடல்களையும், சினிமா பாடல்களையும் இணைத்ததும் ரசனையாக இருந்தது.

நவீனின் தோழமையும், ஓரகத்திகள் புரிதலும் நெகிழ்வாக இருந்தது. இவர்களைப் போல தார்மீக ஆதரவு தரும் உறவுகள் இருந்துவிட்டால், வாழ்க்கையில் எத்தனை நெருக்கடியும் எளிதில் கடந்து விடலாம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களை நீங்கள் சித்தரித்த விதம் அற்புதமாக இருந்தது.

கதையில் செம்ம ட்விஸ்ட் என்று சொன்னால் ஜெயாத்தை கதாபாத்திரம் தான். மாமியார் வேடம் அணிந்ததும் அவளின் எதிர்பார்ப்புகளும், புலம்பல்களும்…அம்மம்மா எதிர்பார்க்கவே இல்லை ஆத்தரே. இருந்தாலும் அதுவும் நிதர்சனமான ஒன்று என்று கூறும் வகையில் நீங்கள் காட்சியமைத்த விதம் ஏற்கக்கூடியதாக இருந்தது. அதிலும் அவளிடம் சுசி செய்யும் சமரசங்களும், மஹி தரும் நெத்தியடி பதில்களும் மிக மிக இயல்பாக இருந்தது.

சதீஷின் கதாபாத்திரமும் அழகு. யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்று அழகாகச் சொல்லிவிட்டீர். வீட்டிற்கு வந்தவர்களை உபசரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே சமயத்தில் நம் வீட்டிலுள்ள வசதிகளை உணர்ந்து செயல்படுவதும் அவசியம் என்று அவனைத் தங்க வைத்த காட்சியில் எதார்தத்தை நேர்த்தியா சொல்லிட்டீங்க. அங்கேயும் சுசி தான் ஸ்கோர் பண்ணான் ஆத்தரே.

மசாலா தேநீரும், வெண்டைக்காய் வறுவலும், மோர்குழம்பும் பார்க்கும் போது இவர்கள் நினைவு கட்டாயம் வரும். சாய்வு நாற்காலி பார்த்தால் கூட இனி உங்கள் ஹீரோ தான் நினைவில் வருவார் தோழி.

உருவ கேலி பற்றி கம்பீரமாகத் தொடங்கிய நீங்கள், அதன் பின்விளைவுகளை அழுத்தமாகக் கூறும் வகையில் இன்னும் சில காட்சிகளை வைத்திருந்தால், இக்கதை குடும்ப, காதல் கதை என்பதைத் தாண்டி, சமுதாயத்திற்கு விழிப்பூட்டும் வகையிலும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

காலச்சக்கரத்தின் முன்னும் பின்னும் சென்று சுசி-மஹியின் மனப்போராட்டங்களை வர்ணிக்க நினைத்த உங்கள் பாங்கு நன்றாக இருந்தது. ஆனால் எந்தெந்த காட்சிகள் எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி திட்டமிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். Flashbackக்குள் Flashback என்ற சில இடங்கள் சற்று குழப்பமாக இருந்தது.

இத்தகைய காட்சி அமைப்புகள் படித்துப் பழக்கமில்லாத வாசகர்கள், கதையைப் புரியாத புதிர் என்று தள்ளிவைக்க வாய்ப்புகள் அதிகம். நல்ல கதை நிறைய வாசகர்களை சென்று சேர வேண்டும் அல்லவா.

கதை முழுவதும் உங்கள் எழுத்துநடை மிக மிக அருமையாக இருந்தது. ஆனால் தன் சரிபாதியின் பிழையை மன்னிக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தத்தளிக்கும் மஹியின் “எதிர்பார்ப்பு தான் என்ன?” என்று ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிவிட்டது. கதையின் ஓட்டத்தைக் குறைக்கும் வண்ணமாக இருந்தது.

இவர்கள் காதலை எதிர்த்த பெற்றோரின் மனநிலை பற்றியும் அவர்களுக்கு மஹி பற்றி இருந்த அபிப்பிராயங்களைப் பற்றியும் அழுத்திக்கூறிய நீங்கள், கதையின் முடிவில் அவர்கள் இயல்பு மாறியதா அல்லது அப்படியே இருந்ததா என்று எதுவும் கூறாமல் விட்டது ஒரு Incomplete Feel தந்தது.

இத்தகைய நற்சிந்தனை நிறைந்த கதையில் இவை எதுவும் பெரிய குறைகளே இல்லை. ஆன்கோயிங்கில் எழுதியதன் தாக்கமாக இருக்கலாம். மறுபடி படித்துப் பார்த்து ஒரு சில முன்னேற்றங்கள் செய்தால் அற்புத படைப்பாக உருமாறும் என்பதில் ஐயமே இல்லை.

நாம் அலட்சியமாக நினைக்கும் சில விஷயங்கள் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் என்றும், நாம் பூதாகரமாக நினைத்து பயமும் கவலையும் கொள்ளும் சில விஷயங்கள் கடுகளவு கூட முக்கியமானது அல்ல என்றும், கிண்டலும் கேலியும் கூட யார் மனத்தையும் புண்படுத்தாத வகையில் கவனமாகப் பேச வேண்டும் என்று அழகிய கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
நன்றி நன்றி நன்றி !!! ☺☺☺

இதை தாண்டியும் உங்களுக்கு சொல்ல வார்த்தைகள் இருக்கான்னு எனக்கு தெரியல.

முதல் முதலா ஒரு விமர்சனம், அதுவும் ஆழ்ந்த புரிதலோடு, என் கண்களின் ஈரம் கன்னம் நனைத்தது. உங்களின் கன்னங்களையும் என் அன்பு முத்தத்தின் ஈரம் நனைக்கட்டும் சகோதரி. ???

என்னோட எழுத்தும் அதன் தாக்கமும் ரொம்ப புரிஞ்சு அதோட உணர்வோடு ஒன்றி படிச்சுருக்கீங்கன்னு, உங்களோட அழகான கருத்துக்களால் காட்டீருக்கீங்க.

அதுல வர்ற உருவ கேலியை ஆழமா மைய படுத்தாத காரணம் இதை காதலின் கதையாக உருவாகப் படுத்தணும்ன்னு நான் நினைச்சது தான்.

உருவ கேலியை அதிகமா எழுதினா, அவங்களோட காதல் பேசு பொருளா இருக்காதுன்னு நினச்சு அதை ஒரு outline மட்டும் தான் சொல்லி இருக்கேன்.

கண்டிப்பா அதுவே நான் சொல்லல நினைச்சதை வாசகர்களுக்கு புரிய வைக்கும்ன்னு நம்புறேன்.

மஹிமா பல இடங்களிலே சொல்லுவா, 'நானும் அவனை பிரிஞ்சு வந்து, புற தோற்றத்தை மாத்தி, கோவப்பட்டு தப்பு தான் பண்ணுறேன்னு.' ஆனா அவளை நிலைப்படுத்த அது அவளுக்கு தேவைப்படுது.

அவளோட எதிர்பார்ப்பு என்னனு அவளுக்கே புரியாட்டியும் அவளின் காயத்துக்கு மருந்தாக அவள் தேடியது அவன் கொடுக்கும் அந்த நிபந்தனைகள் அற்ற காதல் மட்டுமே.

அதேபோல ஜெயா அத்தையோட மனநிலையை கடைசி அத்யாயத்தில் ஒரு கோடா காட்டி இருப்பேன். மருமகளிடம் அவளை குறையா சொன்னாலும் மகனிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவாங்க. அது தான் நம்ம நிஜத்தில் பார்க்கும் பல மாமியார்கள். நம்மிடம் கோடி குறை சொன்னாலும் வெளியில் விட்டுக் கொடுக்காது பேசும் அன்பு நெஞ்சங்கள்.

ஆனா இதெல்லாம் இன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதி இருக்கணும். அதேபோல கதையோட ஓட்டமும் கண்டிப்பா என் அடுத்தடுத்த கதைகள்ல திருத்திக்கிறேன்.

பாராட்டுக்கு முத்தங்களும் தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகளும் சகோதரி.

ஜேம்ஸ் பாண்ட் அடி பட்டு மிதி பட்டு காயம் பட்டு கஷ்டப்பட்டாலும் கடைசியா கேஸ் ஜெயிச்ச பீல் இந்த ஒற்றை விமர்சனத்தில்.

நன்றிகள் பல சகோதரி. :love::love::love:
 
ஆழ்ந்து படிப்பவர்கள் தான் ...தாங்கள் என்பதற்கு இந்த விமர்சனம் சான்று ?சூப்பர் டூப்பரா இருக்கு ?
அப்ப்பா ....!!!என்ன ஒரு தெளிவான விமர்சனம் ??
 
Splendid review??
 
என் அனைத்து ஜயங்களுக்கும் நிதானமாகப் பதிலளித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

நல்ல கதை; நற்சிந்தனைகள் நிரம்பி இருந்தது. அதனால் தான் விமர்சனமும் நீண்டு கொண்டே போனது. உங்கள் எழுத்துப்பயணம் தொடரட்டும் என்றென்றும்??
 
தங்களின் அன்புக்கு நன்றி தோழி :love::love::love:
 
Top