Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW_03 அவர்கள் எழுதிய மனவீணையின் புது ராகமே

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே.

First Impression is the Best Impression என்பதற்கு இணையாக, மனவீணையின் புதுராகமே என்று கதையின் தலைப்பே வசீகரிக்கும் விதத்தில் மிக அழகாக இருக்கிறது.

அதிர்துடியன், மெல்லிண்யாழி என்ற நாயகன் நாயகி பெயர் தேர்வும் புதுவிதமாக அருமையாக இருக்கிறது.

துடியனின் நிமிர்வான குணமும், தெளிவான சிந்தனையும் மிகவும் ரசனையாக இருந்தது. தொழில், குடும்பம், திருமண வாழ்க்கை என்று அத்தனையிலும் நிதானத்துடனும், தொலைநோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் திறனும் சூப்பர்.

சமீப காலமாக நிமிர்வான, துணிவான பெண் கதாபாத்திரம் கொண்டுள்ள கதைகளையே படித்து வந்த எனக்கு, யாழியின் சுட்டித்தனமும், வெகுளித்தனமும் ரொம்பப் பிடித்தது. கதையின் முதல் பாதியில், அவளும் அவள் தம்பி விஷ்ணுவும் செய்த அலப்பறைகள் சான்சே இல்ல. சிரிச்சு சிரிச்சு மாளல போங்க.

அதுவும் விஷ்ணுவின் கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் மிகவும் ரசனையாக இருந்தது. டேய் தம்பி! கொஞ்சம் வாய்க்கு ரெஸ்ட் கொடு டா என்றும் சொல்லும் அளவிற்கு சூப்பர் லொட லொடா கேரக்டர்.

மகேஷ் மற்றும் சுகமதியின் காட்சிகளும் வெகு இயல்பாக இருந்தது. நவீன வளர்ச்சியின் பின்விளைவுகளைப் பற்றி சற்றும் அறியாமல், பிள்ளைகளைக்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக்கொடுத்து திண்டாடும் பெற்றொர்களை அவர்கள் மூலம் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டீர்.

மாமியார் கேரக்டரில் கள்ளம் கபடமில்லாத மரகதம் வந்த காட்சிகள் படிக்க, இதயத்திற்கு இதமாக இருந்தது. துடியனின் குடும்பத்தினரும் கொள்ளை அழகு.

மகேஷ் ஒளிவுமறிவின்றி துடியனிடம் பிள்ளைகளைப் பற்றி சொல்வதும், அதற்கு துடியன் தந்த பதிலும் மெய்சிலிர்க்க வைத்தது. மனைவியையும் மச்சானையும் வழிநடத்த அவன் எடுத்த முயற்சிகள் அத்தனையும் அழகு. அவன் கடமைகளுக்கும், காதலுக்கும் இடையே சிக்கித்தவித்து, உணர்வுகளைக் கண்ணியமாகக் கடந்து வந்ததும் சூப்பர்.

விஷ்ணுவின் தமக்கை மீதான பாசமும், தந்தைக்காகச் சிந்தித்த தருணமும் மனத்தைக் கவர்ந்தது.

பலர் இக்கதையை கருத்து கதை என்று கூறியதாகச் சொன்னீர்கள். என் மனத்திற்குப் பட்ட நிறைகுறைகள் இரண்டையுமே சொல்கிறேன் ஆத்தரே. It is purely my personal thought.

உண்மையிலேயே நீங்கள் இணைத்த தகவல்கள் விழிப்புணர்வூட்டும் விதமாக இருந்தது என்பதில் துளிக்கூட சந்தேகமே இல்லை.

Peer Pressure, Likes, Trend, Selfie, PreWedding Shoot என்று நீங்கள் சொன்ன அத்தனையும் நிதர்சனத்திலும் நிதர்சனம். நீங்கள் தந்த கருத்துக்களை உள்வாங்க சில எபிசோடுகளை ஒன்றுக்கு இரண்டுமுறை படித்து ரசித்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதே சமயத்தில் சில காட்சிகளும் வர்ணனைகளும் தேவைக்கு மீறி நீளமாக இருப்பதாக உணர்ந்தேன். Fictionஆ அல்லது Non-Fictionஆ என்று கேட்க தோன்றியது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால், பெண்களின் சில YouTube Videos பதிவுகள்.

அதைப்போலவே, குடும்பத்தினர் யாழிக்கு அறிவுரை சொல்லும் காட்சிகளும் மிக நீளமாக இருந்ததாகத் தோன்றியது. உரையாடல் என்று வரும் போது, இருவரின் சம்பாஷணையும் ஓரளவிற்குச் சமமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்தக் காட்சிகளில் யாழி மண்டையை மட்டும் ஆட்டுவது போலவும், அல்லது சிந்தனையில் சஞ்சரிப்பதுமாக இருக்க, மற்றொருவர் கூறும் அறிவுரை வெறும் கருத்து பதிவாகத் தான் தோன்றியது. வசனமாகத் தெரியவில்லை.

ஸ்மார்ட் ஃபோன் மோகத்தைப் பற்றிக் கதைக்கரு எடுத்த உங்கள் எண்ணம் சூப்பர். அதை இணைத்து தான் பிர்த்வி காதல் வாழ்க்கை பற்றி சொன்னீர்கள் என்றாலும் யாழி ஓரகத்தியிடம் பேசுவதும், விஷ்ணு ப்ரித்வியிடம் பேசுவதும் ஒரே விஷயமாக இருந்த பட்சத்தில் இரு வேறு காட்சிகள் தேவையா என்று சிந்தித்தேன்.

IAS படிப்பதற்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்த உங்கள் பாங்கு சூப்பர். அதுவும் கூட ஒரே விஷயத்தைக் கூறுவது போல ஒரு சில இடங்களில் இருந்தது. ஆன்கோயிங்கில் எழுதும்போது ஒரே விஷயத்தை மறுபடியும் எழுத நிறைய வாய்ப்புள்ளது. ஆனால் அதுவே ஒரே மூச்சாகப் படிக்கும் போது கதையின் விறுவிறுப்பைக் குறைக்கிறது.

அதிர்துடியனின் காதலும், தாபமும் என்னவென்று ஒரு சில காட்சிகளிலேயே புலப்பட்டுவிட்டது. அதையும் அளவாக, தேவைக்கு ஏற்ப சொல்லியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

தவறாக நினைக்க வேண்டாம்; தம்பதியர்களுக்குள் Code Words & ரகசிய பரிபாஷணைகள் எப்போதும் அழகு தான். ஆனால் அத்தகைய வார்த்தைகளின் உபயோகம், எந்தவொரு விஷயத்தின் மதிப்பை குறைக்கும் வண்ணமாக இருக்கக்கூடாது. குறிப்பாக, விழிப்புணர்வூட்டும் வகையில், நற்சிந்தனைகள் நிரம்பிய கதை இது என்பதால் சொல்கிறேன் ஆத்தரே.This is also just my personal thought.

இவை அனைத்தும் பெரிய குறையே இல்லை. மறுபடியும் படித்துப் பார்த்தால் நற்சிந்தனை நிரம்பிய நல்லதொரு படைப்பாக நிச்சயமாக உருமாற்றலாம்.

சமூக வலைத்தளங்களின் நிறைகுறைகளை விவரமாகவும் , முற்றிலும் நேர்மறையான பாங்கில் எடுத்துக்கூறும் கருத்தாழம் மிக்க இயல்பான குடும்ப கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:
Very nicely reviewed .A good mass entertainer love story with a social message woven nicely in to the story.Kudos to the author for her thorough detailing and making it enjoyable

I was thinking on the same lines as you on a few points in the story -elaborate
-write up on video lecture topics The author could have stopped with giving highlights and continue with the narration.Or may be attach a ppt on the topic or a video which would have helped in my view.
Since I had read it as ongoing I had rushed through certain episode so wanted to comment only after reading certain chapters again.But this review made me post this comment.The reviewer being a writer is obviously good with her analysis and words.It is easy to agree with her.
All the Best to the author of this story
 
நன்றிகள் பல பல நட்பே!

கத்துக்குட்டி எழுத்தாளரான நானும் இதே தவறுகளைச் செய்திருக்கிறேன் நட்பே. நல்லுள்ளம் படைத்த கைத்தேர்ந்த எழுத்தாளர்களின் அறிவுரைகளும், வாசக தோழமைகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுமே என் பிழைகளைத் திருத்திக்கொள்ள பேருதவி புரிந்தது.

கருத்தாழம் மிக்க அழகான இக்கதை பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் குறைகளையும் வெளிப்படையாக குறிப்பிட்டேன்.
 
நன்றி நன்றி மீண்டும் நன்றி... நான் fbல சொல்லிய மாதிரி I'm totally impressed with your review... and do respect your opinion... எப்பவும் போல நடுநிலையான விமர்சனம் இந்த அளவு குறையை அழகா சொல்லிய உங்களுக்கு முதல்ல ஒரு பெரிய ஓஓ போட தோணுது... கண்டிப்பா இதன் பின் எழுத போகும் கதைகளில் இதையெல்லாம் கவனத்தில் கொள்கிறேன்... சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் இந்த கதை இன்னும் பலரை சென்றடைய நினைக்கும் உங்களுடைய எண்ணம் புரியுது என்னுடையதும் அதே தான் ... அதே நேரம் இது காதல் கதை என்ற வரையறையுள் வரும்போது நான் இரண்டையும் balance பண்ணி எடுத்துட்டு போக வேண்டியதா இருக்கு... லைக் ஒரு கமெர்ஷியல் படத்துல கருத்து சொல்ற மாதிரி தான் இதுவும் வித் ஆல் factors so that it can reach mass audience... கொஞ்சம் dry ஆ வெறும் கருத்து மட்டும் சொல்ற மாதிரி இருந்திருந்தாலோ இல்லை எதிர்மறையா நகர்த்தி இருந்தாலோ அழுத்தமா உருமாறி அழுகாச்சி கதையாகி பெருமளவானவர்க்கு சேராம போயிருக்க வாய்ப்பு உண்டு ... அதனாலேயே நேர்மறையாக ரொம்ப ஜாலியா கொண்டு வந்தேன்... ஒரு வேலை குழந்தைகளை மையபடுத்தி இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் நான் எழுதும் போது நீங்க சொல்ற விஷயம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.. எழுத வேண்டிய அவசியமும் இல்ல... இது கணவன் மனைவிக்கு இடையிலான காதல் என்று வரும்போது கதையின் தன்மைக்கு அவர்கள் உரையாடல் தவிர்க்க முடியாததாகிறது... But your suggestions will be considered if this gonna be printed will try to make it as much as possible... Thank you sooo much dear ❤❤❤
 
Very nicely reviewed .A good mass entertainer love story with a social message woven nicely in to the story.Kudos to the author for her thorough detailing and making it enjoyable

I was thinking on the same lines as you on a few points in the story -elaborate
-write up on video lecture topics The author could have stopped with giving highlights and continue with the narration.Or may be attach a ppt on the topic or a video which would have helped in my view.
Since I had read it as ongoing I had rushed through certain episode so wanted to comment only after reading certain chapters again.But this review made me post this comment.The reviewer being a writer is obviously good with her analysis and words.It is easy to agree with her.
All the Best to the author of this story
வாவ் well said dear... Exactly I wanna give it as mass entertainer நன்றிகள் பல.. Yeah well analysed and constructively criticised by the writer critic and I am totally impressed and really found it very helpful... உங்கள் கருத்தை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்...
 
நன்றி நன்றி மீண்டும் நன்றி... நான் fbல சொல்லிய மாதிரி I'm totally impressed with your review... and do respect your opinion... எப்பவும் போல நடுநிலையான விமர்சனம் இந்த அளவு குறையை அழகா சொல்லிய உங்களுக்கு முதல்ல ஒரு பெரிய ஓஓ போட தோணுது... கண்டிப்பா இதன் பின் எழுத போகும் கதைகளில் இதையெல்லாம் கவனத்தில் கொள்கிறேன்... சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் இந்த கதை இன்னும் பலரை சென்றடைய நினைக்கும் உங்களுடைய எண்ணம் புரியுது என்னுடையதும் அதே தான் ... அதே நேரம் இது காதல் கதை என்ற வரையறையுள் வரும்போது நான் இரண்டையும் balance பண்ணி எடுத்துட்டு போக வேண்டியதா இருக்கு... லைக் ஒரு கமெர்ஷியல் படத்துல கருத்து சொல்ற மாதிரி தான் இதுவும் வித் ஆல் factors so that it can reach mass audience... கொஞ்சம் dry ஆ வெறும் கருத்து மட்டும் சொல்ற மாதிரி இருந்திருந்தாலோ இல்லை எதிர்மறையா நகர்த்தி இருந்தாலோ அழுத்தமா உருமாறி அழுகாச்சி கதையாகி பெருமளவானவர்க்கு சேராம போயிருக்க வாய்ப்பு உண்டு ... அதனாலேயே நேர்மறையாக ரொம்ப ஜாலியா கொண்டு வந்தேன்... ஒரு வேலை குழந்தைகளை மையபடுத்தி இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் நான் எழுதும் போது நீங்க சொல்ற விஷயம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.. எழுத வேண்டிய அவசியமும் இல்ல... இது கணவன் மனைவிக்கு இடையிலான காதல் என்று வரும்போது கதையின் தன்மைக்கு அவர்கள் உரையாடல் தவிர்க்க முடியாததாகிறது... But your suggestions will be considered if this gonna be printed will try to make it as much as possible... Thank you sooo much dear ❤❤❤
First of all Thanks for writing such a thought provoking story ma.

உங்க கதையில் எதுவுமே குறையில்ல....எல்லாமே ஜாஸ்தியா தான் இருந்துது;););)It usually happens when we write ongoing. நமக்கு நாம எழுதின எல்லாமே முக்கியமான காட்சியா வசனமா தோணும். கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் திரும்ப படிச்சு பாருங்க. எந்தவொரு காட்சியையும் வசனத்தையும் நீக்காமல், ரத்தின சுருக்கமாக மாத்திட முடியும். இது என் personal experience....கதைகளில் நான் செய்த தவறும், அதை சரிசெய்ய பயன்படுத்தி வெற்றி கண்ட யுக்தியும் உங்களோட ஷேர் பண்ணறேன். அவ்வளவுதான்.

விமர்சனங்கள் எழுதுவதில் எனக்குப் பெரிய அனுபவம் இல்லை. Just பிடித்த விஷயங்களைப் பட்டியலிட்டு சொல்றேன்.

Best Wishes ma:love::love:
 
விமர்சனம் எழுதி அனுபவம் இல்லையா ...😂அடக்கொடுமையே 🤧
பக்கம் பக்கமா எழுதி நல்ல பெயர் எடுத்ததெல்லாம் மறந்திருச்சு போல் ரைட்டர் ஜி க்கு🤔நீங்க எழுதிய விமர்சனத்தை பாத்து படிக்க வந்த வாசகிகள் கோவிச்சுக்க போறாங்க ....ரொம்ப பெரிய தன்னடக்கம் தான் போங்க ரைட்டரே..💕
 
Top