Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - Final

Advertisement

Sema entertaining story idhu.. super... Sattunu ellathaiyum maathama future a athan pokkula vittadhu romba arumai.. maamiyaar pathi sonnadhu toppu
 
அய் செமயா இருந்துச்சிப்பா...அந்த வயல் ..கோவில்.. superb..மருதாணி என்ன போல heroவ பார்த்தா ஒரு excitement இருக்கும் இல்லையா.....
 
தோகை 22:

அதற்கு பிறகு சேர்ந்து சாப்பிடும் போதும்..சக்தி அமைதியாக இருக்க...அவளின் அப்பாவும்,பாட்டியும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“இவங்க பேசுறதைக் கேட்க தான் இங்க வந்தேன்னா..?” என்று எரிச்சலுடன் அவன் அவளை முறைக்க..அவளோ கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்பா..நான் தோப்பு வரைக்கும் போயிட்டு வரேன்..!” என்றாள்.

“மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போமா..!” என்றார்.

“இல்லப்பா...அவர் வந்தாலே..யாராவது வந்து அவரை தொந்தரவு பண்றாங்க...அதன் அவர் வரலைன்னு சொல்லிட்டார்..நான் மட்டும் போன உடனே வந்துடுறேன்..!” என்றாள்.

“தம்பிக்கு சரிண்ணா எனக்கும் சரிதான்மா..!” என்றார்.

“சரிப்பா..!” என்றாள் அவனைக் கண்டு கொள்ளாமல்.

அதற்கு பிறகு சக்தியை கையில் பிடிக்கவே முடியவில்லை. வயல்,வரப்பு என்று சுற்றி விட்டு வர...மாலை நேரம் இருள் சூழ ஆரம்பித்து இருந்தது. ஆனால் அஜய்க்கு தான் எரிச்சலாய் இருந்தது.செல்போனில் டவரும் சரியாக கிடைக்காமல் போக... எரிச்சல் அடைந்தான்.பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடலாமா என்று கூட நினைத்தான். ஆனால் முடியவில்லை.அவளை விட்டு செல்ல மனம் வரவில்லை. கண்ணனும் ஊருக்கு சென்று வருவதாய் சொல்லி சென்றிருந்தான்.
ஒரு வழியாக பொழுதை நெட்டித் தள்ளியவன்..அப்போது வீட்டிற்குள் நுழைந்த சக்தியை கடுப்புடன் பார்த்தான்.

“என்னங்க எப்படி இருந்தது இந்த பொழுது..!” என்றாள்.

“என்ன நினச்சுட்டு இருக்குற உன் மனசுல...?” என்று எரிந்து விழுந்தான்.

“ஏன் இப்போதைக்கு உங்களைத்தான்..!” என்றாள்.

“நீ பேசாம போயிட்ட..எனக்கு இங்க பொழுதே போகலை..நான் சென்னைக்கே போகலாம்ன்னு நினைச்சேன்..!” என்றான்.

“இப்ப புரியுதா..?” என்றாள்.

“என்ன புரியுதா..?” என்றான்.

“எனக்கும் உங்க வீடு புதுசு தான்...அந்த ஊரு புதுசு தான்... உங்கம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்காது தான்...அதான்.. அன்னைக்கே..விட்டுட்டு போனிங்களே..! எனக்கும் இப்படி தான் இருந்தது.கிட்டத்தட்ட பைத்தியம் புடிக்கிற மாதிரி..!” என்றாள்.

“சக்தி..!”என்றான்..கொஞ்சம் இறங்கிய குரலில்.

“உங்களை குத்திக் காட்ட சொல்லலை..! என்னோட அப்போதைய மனநிலையை சொன்னேன்..! சரி வாங்க சாப்பிடலாம்..!” என்றாள்.

“எனக்கு பசிக்கலை..வேண்டாம்..!” என்றவன் அறைக்குள் சென்று முடங்க...அவனைப் பார்த்த அவளுக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது.

“ரொம்ப படுத்துறமோ....பாவம் முகமே சரியில்லை...!” என்று வருந்தி.. பெண்ணின் குணம் இது தான் என்று சரியாக நிரூபித்தாள்.
இருந்தாலும் அவனை சட்டை செய்யாமல்..குளித்து முடித்து பாவாடை தாவணியுடன் வர...

“என்னடி கோலம் இது...?”

“எது..?”

“சேலை தான கட்டியிருந்த..? இப்போ எதுக்கு தாவணி கட்டியிருக்க..?” என்றாள் மருதாணி.

“எனக்கு இது பிடிச்சிருக்கு ...கட்டியிருக்கேன்..ம்ம் அவ்வளவு தான்..!” என்றாள்.

தலையை வாரிப் பின்னியவள்..லேசாக பவுடர் பூசி பொட்டிட்டு கொள்ள... “ம்ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்..!” என்று மருதாணி கிண்டல் அடிக்க..

“அடிங்க..!” என்று அவளை விரட்ட...

“நான் சின்ன பொண்ணுப்பா..நான் எதையும் பார்க்கலை..பார்க்கவும் மாட்டேன்..!” என்றபடி ஓடி விட்டாள்.
மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவள்.. திருப்தியுற்றவளாய்...அஜய்யை தேடி சென்றாள்.
அவனோ..அவளுடைய கட்டிலில் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான். வேகமாய் அவன் அருகில் சென்றவள்...”ம்ம் எழுந்திருங்க..!” என்றாள் அவன் கையைப் பிடித்து.

“ம்ம்பச் கையை விடு..!” என்றான் அவளைப் பார்க்காமல்.

“முடியாது..!” என்றாள்.

“இங்க என்னை பாருங்க...நான் நல்லா இருக்கேனா..!” என்றாள் சுற்றி சுற்றி காண்பித்தபடி. அசுவாரஸ்யமாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன்..”ம்ம் நல்லா தான் இருக்க..!” என்றபடி குனிய..

“நல்ல்லா இருக்கேனா..? இல்லை நல்லாத்தான் இருக்கேனா..?” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“ஐயோ சாமி..நல்லா இருக்க..போதுமா..?” என்றான் வெடுக்கென்று.

அவளின் முயற்சி புரிந்து அமைதியாய் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“சரி வாங்க..!” என்றாள்.

“எங்க..?”

“ஒரு இடத்துக்கு..ப்ளீஸ்..வாங்க..!” என்றாள் கெஞ்சியபடி.

“இவளுக்கு கெஞ்சக் கூடத் தெரியுமா..?” என்று வியந்தவன்..

“சரி வரேன்..!! ஆனா மணி என்னன்னு பாரு..இருட்டா இருக்கே..” என்றான்.

“எட்டு மணிதான் ஆகுது...! வாங்க..!” என்றாள் கையைப் பிடித்து இழுத்தபடி.

“இல்லை..” என்று அவன் இழுக்க...

“யோவ்..இப்ப வரப் போறியா இல்லையா..?” என்று அதட்டவும்.. அவளிடம் இருந்து அதை எதிர்பார்த்தவன் போல்..சிரித்துக் கொண்டே..

“வரேண்டி பொண்டாட்டி..வா போகலாம்..எங்க போகணும்ன்னு சொல்றயோ போவோம் சரியா..?” என்றபடி அவனும் உடன் வர..அவன் கைகளோடு கையைக் கோர்த்துக் கொண்டவள்..அவனை உரசிக் கொண்டே நடக்க...

“இப்ப எதுக்கு உரசிட்டு வர..நேரா வா..யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்றான் சிரிப்புடன்.

“என் புருஷன்..நான் உரசுறேன்..எவ கேட்பா...?” என்றாள் தெனாவெட்டாய்.

“அது சரி..! ஆமா நாம எங்க போறோம்..!” என்றான்.

“போன உடனே தெரிஞ்சுக்கங்க..!” என்றபடி அவள் நடக்க..

அந்த இருட்டிலும்...பயப்படாமல் அவள் லாவகமாய் நடப்பதைப் பார்த்தவனுக்கு...இது இவளுக்கு புதிது இல்லை என்று தெளிவாய் தோன்றியது.

“சக்தி..! எங்கடி என்னை கடத்திட்டு போற..?” என்றான்.

“ஆமா..இவரை கடத்திட்டு வேற போவாங்க..! காலையில ஒரு உண்மையை சொல்றேன்னு சொன்னிங்க..அப்பறம் சொல்லவே இல்லை..அதான் கடத்திட்டு போறேன்..” என்றாள் தலையை ஆட்டியபடி.

சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க...அந்த நேரக் குளுமைக் காற்று..அவனை வருடிச் செல்ல..அருகில் மனதிற்கு இனிய மனைவி வேறு...சொல்லவா வேண்டும்.. அவனுக்குள் உணர்வுகள் பேயாட்டம் போட..சக்தியோ அதை அறியாமல் வள வளவென்று பேசிக் கொண்டே வந்தாள்.

“சக்தி..” என்றான்.

“ம்ம்..!” என்றாள்.

“கொஞ்சம் தள்ளி நடந்து வரியா..?” என்றான்.

“ஏன்..?”

“ஏன்னா..? எனக்கு என்ன என்னவோ தோணுது..” என்று அவன் முனங்க..அவனின் முகத்தைப் பார்த்தவள்...அவன் இடது கையை எடுத்து தன தோளின் மேல் போட்டுக் கொண்டாள்.

“பேசாம வாங்க..!” என்றபடி நடக்க..

“எங்கடி போறோம்..!”

“தெரியலை..!”

“தெரியலையா..?” என்றான் அதிர்ச்சியாய்.

“ம்ம்ம் ஆமா..!” என்றாள்.

“பிறகு எதுக்கு என்னையும் கூட்டிட்டு வந்த..?” என்றான்.

“தெரியலை..! எனக்கு உங்க கூட இப்படி எங்க ஊருக்குள்ள சுத்தனும்ன்னு ஆசை...எங்க நீங்கதான் வர மாட்டேன்னு சொல்லிட்டிங்க..! இப்ப நைட் தான..இப்ப யாரும் உங்களைப் பார்க்க மாட்டாங்க தான...அதான்...!” என்று போற போக்கில் சொல்லிவிட்டு அவள் செல்ல...அவனோ திகைத்து நின்று விட்டான். அவளின் சின்ன ஆசையை கூட தன்னால் நிறைவேற்ற முடியாமல் போனதை எண்ணி...அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது.

“சாரிடி..” என்றான்.

“எதுக்கு சாரி..! உங்களுக்கு பகல் தான் அலர்ஜி..அதான் நைட் இருக்கே..! இப்போ சுத்துங்க என்கூட..” என்றாள் ஒரே போடாய்.

“அடிப்பாவி..அதுக்குன்னு..இப்படி இருட்டுலையா..?” என்றான்.

“ம்ம்.. ஆமா..!” என்றவள் அவனுடன் இணைந்து நடக்க...சிறிது நேரத்தில் ஆற்றங்கரையை அடைந்தனர்.

“ஹேய்..! இங்க எப்படி வந்தோம்..! எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும்...ஷூட்டிங் வந்தப்போ கூட..நைட் இங்க தான் நின்னு ரசிச்சுட்டு இருந்தேன்..!” என்றான்.

“தெரியும்..!” என்றாள்.

“எப்படி தெரியும்..?”

“அதான்..சார்..அன்னைக்கு என்கிட்டே சவால் விட்டிங்க தானே..! அப்பறம் எப்படி மறக்கும்..!” என்றாள்.

“அன்னைக்கு நடந்ததை நான் மறந்தாலும்..நீ மறக்கலை போல இருக்கே...” என்று அவன் கண்ணை சிமிட்ட...

“உங்களை..” என்று அடிக்க போக..

“தேங்க்ஸ் சக்தி..” என்றான்

”ஏன்..!”

“இதை நான் எதிர்பார்க்கலை...ஐ லவ் நேச்சர்..” என்றான்.

“அந்த கரையோரமா உட்காரலாமா..?” என்றான்.

“ம்ம் இங்க வேண்டாம்..அங்க வாங்க..அந்த கோயில் படிக்கட்டு இருக்கு..அதுல உட்காரலாம்..!” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு சென்றாள். இரவின் ஏகாந்தமும்...ஆற்று நீரின் சலசலக்கும் சத்தமும்...வண்டுகளின் இனிய ரீங்காரமுமாய் அவ்விடம் இருக்க..அவனின் கைகளோடு கை கோர்த்து அமர்ந்திருந்தவள்...அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.அவனும் அவளை வாகாக அணைத்துக் கொள்ள..

“என்னால நம்பவே முடியலை..!” என்றான்.

”எதை..?”

“இவ்வளவு சீக்கிரம் உன் கோபம் போகும்ன்னு..!” என்றான்.

“அது எப்படியோ போய்ட்டது..! சரி அந்த போட்டோவ எப்ப எடுத்திங்க..?” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன்..அவளை முதன் முதலில் டிவியில் பார்த்ததையும்....அதன் பிறகு அவன் பட டீசரை விட..அவளின் வீடியோ..அதிகமாக பார்வை இடப்பட்டதையும்..அதைப் பார்த்து அவனுக்கு வந்த கோபத்தையும் சொன்னவன்...

“உன்மேல இருந்த கோபத்தில்..உன்னை அடிக்கடி அந்த போட்டோவில் பார்க்க..என்னையறியாம ஒரு ஈர்ப்பு.ஆனால் நான் அதை கோபம்ன்னு நினச்சேன்..!

அப்பறம் மூணு வருஷம்...உன் முகம் என் மனசை விட்டு மறையலை..அப்போ கூட தெரியலை..இது காதல்ன்னு.
ஆனா..முதன் முதல்ல..நான் வயல்ல விழுந்து..நீ கைகொடுத்த பார்..அப்ப உணர்ந்தேன்...அந்த நிமிஷம் உன்னை விடவே கூடாதுன்னு மனசுல ஒரு எண்ணம். ஆனா..நீ என்னடானா ..என்னை செருப்பால அடிக்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தியா...மறுபடியும் எனக்கு கோபம்..என்றான்.

“அப்பறம் அப்படி நடந்துகிட்டா உங்களைக் கொஞ்சுவாங்களா..? அதுவும் அன்னிக்கு தான் என்னை முதன் முதலா நேர்ல பார்த்து இருக்கீங்க...” என்றாள்.

“யார் சொன்னது..?” என்றான்.

“அப்போ இல்லையா..? என்றாள்.

“அதுக்கு முதல் நாள்...நீ மழையில் நஞ்சுட்டு..நடந்து வந்தது..அப்பறம் அந்த ஆலமரத்தடியில் நின்னு..அந்த பாட்டி கூட வாய் பேசுனது... அப்பறம் உன் அறை ஜன்னல்ல இருந்து பார்த்தது.... இப்படி உன்னை மட்டும் தான் அன்னைக்கு பார்த்தேன்..நீ மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச..!” என்றான்.

“நிஜமாவா..?” என்றாள்.

“பிராமிசா.. உன்னை ரசிச்சு பார்த்தேன்..! அப்போ எனக்குத் தெரியலை.இந்த அளவுக்கு லவ் பண்ணுவேன்னு நானே நினைக்கலை....ஆனா இப்போ...நீ இல்லாம..சான்சே இல்ல..” என்றான்.

“பொய் சொல்லாதிங்க..!” என்றாள்.

“நிஜமா சக்தி...! என்னோட கோபம்,விருப்பு,வெறுப்பு,காதல் இப்படி எல்லாமே உன்னை சுத்தி தான் இருக்கு..இப்பவும் எப்பவும்..இப்படியே எனக்கு நீ வேணும்..!” என்றான் அவள் கண்களைப் பார்த்தபடி.

அவள் பதில் சொல்லாமல்..அவன் நெஞ்சில் புதைந்து கொள்ள... அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.மூச்சு முட்டும் அளவிற்கு.

“அன்னைக்கு ஏன் அப்பாவை ஹாஸ்பிட்டல இறக்கி விட்டுட்டு...நீங்க கூட வரலை..!” என்றாள்.

“நான் வந்திருந்தா...எல்லாரும் என்னை சுத்தி நிக்க..அவரைப் பார்த்திருக்க மாட்டாங்க..! அதுவுமில்லாம.. தேவையில்லாத இஸ்யூசை கிளப்ப வேண்டாம்ன்னு தான் வரலை..!” என்றான்.

“சாரிங்க..! நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்..!” என்றாள்.

“நீ நினச்சதில் தப்பில்லை..!” என்றான்.

“அப்பறம் ஏன் அன்னைக்கு என்னைத் தெரியாதுன்னு சொன்னிங்க..?” என்றாள்.

“உங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை...நீயும் என்மேல செம்ம கோபத்துல இருந்த..இந்த சமயத்துல..நான் ஏதாவது சொல்ல போய்...அது உனக்கு பிடிக்காம..எங்க சுத்தமா விலகிப் போய்டுவியோன்னு தான் அப்படி சொன்னேன்..நீயும் அப்படி தான் சொல்லுவன்னு நினைச்சேன்..! ஆனா நீ அன்னைக்கு சொன்னதைக் கேட்டதும் நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா..அதை..அந்த நிம்மதியை வார்த்தையால சொல்ல முடியாது..!” என்றான்.

“அவளை இறுக அனைத்து..அவளின் இதழை சிறை செய்து விடுத்தவன்...இப்படி தேங்க்ஸ் சொல்லனும்னு நினச்சேன்..” என்றான்.

அவனை ஆச்சர்யமாக அவள் பார்க்க..

“என்னடி..இப்படி பார்க்குற..சைட் அடிக்கிறியா..?” என்றான்.

“ம்ம்..எப்படி உங்களுக்கு போய் என்னை பிடிச்சது..?” என்றாள்.

“இதென்ன கேள்வி..?” என்றான்.

“இல்ல நீங்க எவ்வளவு பெரிய ஹீரோ..!” என்று அவள் இழுக்க...

“ஏண்டி எனக்கு எல்லாம் எந்த ஆசையும் இருக்க கூடாதா..? நானும் மனுஷன் தான்...எல்லாருக்கும் இருக்கும் சாதாரண உணர்வுகள் எனக்கும் இருக்கும்..உன்னைப் பார்த்த உடன் பிடிச்சது...மத்தபடி நீ எப்படி...ஏன்..? என்னன்னு..? எனக்கு பார்க்க தோணலை..” என்றான்.

“ஒரு நாளைக்கு பாதி நாள் சண்டை தான் போடுறோம்..! எப்படி கடைசி வரைக்கும் சேர்ந்திருப்போம்..?” என்றாள்.

“பரவாயில்லை..சண்டை போட்டாதான்...அது கிக்கா இருக்கு..அப்பதான் இன்னும் நீ தேவைப்படுற..” என்றான் ஒரு மார்க்கமாய்.

“எதுக்கு தேவைப் படுறேன்..?” என்றாள்.

“அடியேய் மக்குப் பொண்டாட்டி...!” என்று அவள் காதோடு உரசி..சரசம் பேச...

“இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு மோசம்..!” என்றாள்.

“இதென்னடா வம்பா இருக்கு...நான் மோசமா இருந்தா தான..நீ மாசமாக முடியும்..!” என்றான்.

“ஐய..! நல்லா டயலாக் பேசுறிங்க..” என்று அவள் குனிந்து கொள்ள...

“ஐ லவ் யு சக்தி..!” என்றான் ஆத்மார்த்தமாய்.

“இருங்க இன்னும் முடியலை..!” என்றாள்.

“இன்னும் என்னடி...!”

“உங்கம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கலை..!” என்றாள்.

“எங்கம்மாவுக்கு பொதுவா யாரையும் அதிகம் பிடிக்காது..பணத்தை தவிர...அதனால...இந்த மாமியார்,மருமக சண்டைக்குள்ள என்னை இழுக்காம..அந்த டிப்பார்ட்மெண்ட நீயே பார்த்துக்க...!” என்றான்.

“ம்ம்..” என்று அவள் முனுமுனுக்க..

“என்ன சொன்ன...?”

“ஒன்னுமில்லையே..?” என்றாள்.

“சக்தி...உன்னால சென்னையில இருக்க முடியலைன்னா..பேசாம இங்கயே இருந்திடேன்..! நான் வேணா..அப்ப அப்ப வந்திட்டு போறேன்..!” என்றான் சிரிப்பாய்.

“என்னது வந்துட்டு போறிங்களா..நீங்க அப்ப அப்ப வந்துட்டு போக..நான் என்ன செட்டப்பா..கொன்னுடுவேன் கொன்னு..!” என்றாள் மூச்சு வாங்க..!

காற்று வேகமாய் வீச...சக்தியின் தாவணி காற்றில் பறக்க...அந்த நிலையில் அவளைப் பார்த்தவனுக்கு...உணர்வுகள் பேயாட்டம் போட..

“குளிருதுங்க..! போகலாமா..?” என்றாள் அவனைக் கவனியாமல்.

“போகலாமே..!” என்றான் காதல் குரலில்.

அவன் குரல் வேறுபாட்டில் அவனைக் கண்டவள்...அவன் கண்கள் சொன்ன செய்தியில் முகம் செவ்வானமாய் சிவக்க...திரும்பி நடக்கத் துவங்க..அவளின் கையைப் பிடித்து இழுத்தான் அஜய். அவள் இரண்டெட்டு பின்னே அவனை நோக்கி வர...அவளை இழுத்து அணைத்தவன்...முகம் எங்கும் முத்தமழை பொழிய....இறுதியில் முத்தம் சாரலாய்..இதழில் தேங்கியது.

“இப்படி கடைசி வரைக்கும் என்கூட வருவியா..?” என்றான்.

“மூச்சு இருக்கிற வரைக்கும் வருவேன்..!” என்று அவள் காதலாய் சொல்ல....அவளை அணைத்தபடியே நடந்து சென்றான் அஜய்.

அந்த இருளும் விடியலை நோக்கிக் கொண்டிருந்தது..அவர்களைப் போல். இருவருக்கும்..இருவரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை... வாழ்க்கையை அதன் போக்கில் வாழ தயாராகினர்.. அவர்கள் செல்லும் வாழ்க்கைப் பாதையில்...எவ்வளவு இடர் வந்தாலும்..இணைந்தே களைவார்கள்...என்றும் அன்புடன்.
Super story
 
Top