Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 11

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் : 11


நீயும் நானும்
ஒன்றாய் போகும்போது
நீளும் பாதை
இன்னும் நீள
நெஞ்சம் ஏங்குதடி..

“கார்த்திக்.. எதுக்கு இப்படி இருக்கீங்க, நடந்து முடிஞ்சதை நினைச்சு உங்களை விட எனக்குத் தான் வருத்தமா இருக்கு, அதைவிட பயம்மாவும் இருக்கு. என் பேரண்ட்ஸ் என் மேல வச்சுருந்த நம்பிக்கையை கொன்னுட்டு உங்க முன்னாடி இப்படி நிக்குறேன். அவங்ககிட்ட நான் என்ன சொல்லுவேன், எனக்குத் தெரியல, அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க வேண்டியது தான். ஆனால் அதுக்காக நீங்க இப்படி இருக்குரது சரியில்ல..”

“இப்போ இங்கே நடந்ததுக்கு, நாம ரெண்டு பேருமே தான் பொறுப்பு. அதுக்கான தீர்வை நாம தான் தேடனும். அதை அப்புறம் பார்ப்போம். இப்போ வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்.. ப்ளீஷ் கார்த்திக்..” என ஷ்ரவந்தி அவனைக் கட்டாயப்படுத்த,

“இல்லை வது எனக்கு இப்போ ஒன்னும் இல்ல, ஃபீவர் கூட இல்ல, விட்டுடுச்சு, ரெஸ்ட் எடுத்தா போதும். பட் நான் உன்னை இப்படி பன்னிட்டேனே, எப்படி நான் இவ்ளோ கீழ்தரமா போயிட்டேன். நான் உன்னை உன் மனசைத் தானே விரும்பினேன். ஆன எப்படி தடம் மாறி உன்னை மனைவின்னு அங்கீகாரம் கொடுக்காம எடுத்துக்கிட்டேன். உணர்ச்சி வசத்தால உன்னையும், நம்ம காதலையும் அசிங்கப்படுத்திட்டேன்..” என்றவன் சற்றும் யோசிக்காமல் அவள் கால்களில் விழுந்திருந்தான்.

“என்னை மன்னிச்சுடு வது.. என்னை தப்பா நினைச்சுடாதே.. நான் உன்னை உண்மையாதான் நேசிக்குறேன். உனக்குப் புரியுதா… ஐ யாம் சாரி டா.. ப்ளீஸ்..” எனக் குரல் கரகரக்க கூற,

அவன் காலில் விழுந்ததுமே, பட்டென்று தரையில் அமர்ந்தவள் “ஏய் உனக்கு அறிவு இருக்கா.. இல்லையா, என்ன பன்ற..? உன்னை..” என்று கத்தியவள்,
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். இதுக்கு நீ மட்டும் காரணம் இல்லன்னு புரியுதா..? புரியலையா..?” என்று அவன் சட்டையைப் பிடித்து உழுக்கவும், அவனும் எழுந்து அமர்ந்தான்.

அன்று மருத்துவமனையில் அவளை அடிக்கவும், அவள் மிரண்டுத் தன்னைப் பார்த்ததைக் கண்டதும், அணைத்துக் கொள்ள,
அவளுக்குள்ளும் அதுவரை உண்டான குழப்பங்களும், போராட்டங்களும் முடிவுக்கு வந்ததைப் போல் இருந்தது.

அப்படியேக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் தங்களது காதலை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ள, நாட்கள்
அதன் போக்கில், அழகாக சென்றது அவர்களுக்கு..

பட்டாம்பூச்சியாய் திரிந்த அவர்களுக்குள் அழகான புரிதலும் உண்டாகி இருந்தது. வண்ணமாய் கழிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருனால் மிகவும் சோர்வாய் கார்த்திக் வகுப்பெடுப்பது புரிந்தது.

எப்பொழுதும் அவளைப் பார்க்காமல் தான் வகுப்பெடுப்பான். பார்த்தால் தன் மனம் தன் பேச்சைக் கேட்காது என்பது அவன்
எண்ணம். உண்மையும் கூட.. அவளுக்கும் அப்படித்தான். அதற்காக முற்றிலும் தவிர்க்கவும் மாட்டான். ஆனால் இன்று என்னவோ, அவளை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பது போல் தோன்றியது.

வகுப்பு முடிந்தும் கூட அவன் தன்னைக் கானாமல் சென்றது, வருத்தம்மாய் இருந்தாலும், கார்த்திக்கின் கண் சிவப்பு அவளுக்கு குழப்பமாய் இருந்தது. அடுத்த நாளும் அப்படியே செல்ல, அதற்கடுத்த நாள் கல்லூரிக்கே வரவில்லை.. அதில் பயந்து அன்று மதியமே அவனைக் காண சென்றிருந்தாள்.

வீடு உள்பக்கமாய் பூட்டியிருக்க, காலிங்க்பெல்லை விடாமல் அழுத்தியிருந்தாள். இரவெல்லாம் காய்ச்சலின் வீரியத்தில் உறங்காமல் இருந்த கார்த்திக், விடியலில் தான் உறங்கியிருந்தான். எங்கோ ஒலிப்பது போல் சத்தம் வந்ததைக் கண்டு கொள்ளமால் மீண்டும் உறக்கத்திற்குச் சென்றவன், தொடர்ந்து ஒலித்த சத்ததில், எழுந்தவன், சற்று சூழ்னிலையை உள்வாங்கி, அதன்பிறகு தடுமாறியபடியே கதவை நோக்கி நடந்தான்.

நம்மளைத் தேடி யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தபடியே கதவைத் திறக்க, அங்கு ஷ்ரவந்தியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகம் முழுவதும், பதட்டமும், பயமும், விழிகளில் தேங்கிய நீருமாய் அவள் நின்று கொண்டிருந்தாள்.

கதவைத் திறக்கவும், “என்னாச்சு, கார்த்திக்… ஏன் இப்படி இருக்கீங்க, காலேஜுக்கும் வரல, உடம்பு சரியில்லையா..? என்ன பன்னுது..?” என்று வரிசையாக கேள்விகளை கேட்டவள், அவன் நெத்தி, கழுத்து, தலை என்று அனைத்தையும் தொட்டு பார்த்திருந்தாள்.

“என்ன கார்த்திக் இது, ஃபீவர் இப்படிக் கொதிக்குது, என்ன பன்னிட்டு இருந்தீங்க..? டாக்டர்கிட்ட போனீங்களா..? ஏன் எங்கிட்ட சொல்லல, டேப்லட் எதுவும் போட்டீங்களா..?” கதவைச் சாத்திவிட்டு சோபாவில் அமர வைத்திருந்தாள்.

“நீ எப்படி வந்த..? காலேஜ் போகலையா..” யாரும் பார்த்தா தப்பாகிடும் கிளம்பு..” என்றான் சோர்விலும் பதட்டமாய்..

“என்ன பேசுறீங்க, உங்க கூட சண்டை போடனும்னு தான் வந்தேண், இப்படி இருக்கவும் தான் சும்மா விடுறேன், யாரும் எதுவும் நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். நீங்க ஏன் எங்கிட்ட சொல்லாம விட்டீங்க, நான் சொல்லாம விட்டா, உங்களுக்கு ஃபீல் ஆகாதா.? அதே மாதிரி தானே எனக்கும். ஏன் உங்களுக்கு ஒன்னுனா அது எனக்கும் தானே கார்த்திக்..” என்று கரகரப்பாய் பேசியவள்,

“சரி என்ன சாப்பிட்டீங்க.. எதுவும் செஞ்ச மாதிரியே தெரியலயே..” என்று கிட்சனுக்குள் நுழைந்தவள், அடுப்பில் வென்னீரை வைத்துவிட்டு, கஞ்சி வைக்கலாம் என அரிசியைத் தேட, அது இல்லை. அதர்கு பதிலாக அங்கிருந்த ஓட்ஸை எடுத்து, வறுத்து மிக்ஸியில் சுத்தி கஞ்சியாக்கினாள்.

அவனுக்கு வென்னீரில் முகத்தைத் துடைத்து, கஞ்சியைக் கெடுக்க, பதிலேதும் பேசாமல் வாங்கிக் கொண்டான். ஏதேனும் உள்ளே போனால்தான் பேசுவதற்கு கூட தெம்பு வரும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் குடித்தான்.

குளிர் வேறு, கொதித்த காய்ச்ச்கலில் உடல் வேறு தூக்கிப் போட்டது. உடல் சோர்வும் சேர, அவளிடம் பேச சக்தியே இல்லை. அவளே பேசிக்கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருந்தாலும், காதுகள் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அவனது அறையைச் சுத்தம் செய்து, கட்டிலில் படுக்க வைக்க அழைத்துப் போனாள். கார்த்திக்கும் அவளது அருகாமையை உள்வாங்கியபடியே மெதுவாக எழுந்தான். எழுந்ததும் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டது வயிற்றைப் பிரட்ட, அப்படியே அவள் மீது மொத்தமாய் வாந்தி எடுத்திருந்தான்.


“சாரிடா… சாரி.. சாரி…” என்றபடியே மயங்கிவிட, “கார்த்திக்.. என்ன… இங்கே பாருங்க, கார்த்திக்.. கார்த்திக்..” என்று வேகமாய் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளிக்க, அவன் லேசாக அசையவும், சோர்வு தான் என்று தெரிய, வேகமாய் வந்து அவனது உடைகளில் ஒன்றை எடுத்து பாத்ரூமிற்குள் நுழைந்தவள், தன்னதைக் கழட்டி அலசி ட்ரையரில் போட்டுவிட்டு, அந்த உடைகளை மாட்டி வந்திருந்தாள்.

பிறகு கார்த்திக்கிற்கு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு, கட்டிலில் படுக்கச் செய்தாள். ‘இவன் இப்படி இருந்தால் என்ன செய்வது. சுய உணர்வே இல்லாமல் காய்ச்சல் வரும் அளவிற்கு என்ன செய்து கொண்டிருந்தான்,’ என்ற யோசனையிலேயே அவளது உடையை காயப்போட்டிருந்தாள்.

அவனிடம் கேட்டுத் தன் அப்பாவிடம் சொல்லலாம் என்று அவனிடம் செல்ல, அவன் முன்னிலும் இப்போது அதிகமாய் அனத்துவது தெரிய, தனக்கு நேர போகும் பின்விளைவுகள் எதைப் பற்றியும் யோசிக்காமல், அவனது ரஜாயிற்குள் அவளும் நுழைந்து, அவனை இறுக்கமாய், மிக இறுக்கமாய் அணைத்திருந்தாள்.

அவன் உடற்சூட்டை தணிப்பதாக நினைத்து மேலும், மேலும் அவனிடம் நெறுங்க, அவனோ குளிருக்கு இதமாய் அவளுக்குள் புதைய, இருவருக்கும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளுமுன் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

யாரைத் தப்பு சொல்ல, என்று தெரியாத நிலை. தப்பென்றால் இருவர் மீதும் உண்டு, அல்லது இருவர் மீதும் இல்லை . விதியின் மீதா..? அவர்களின் கூடல் முடிந்து, அது கூடலா.. எப்படி என்று யோசிக்கும் முன்னே கார்த்திக்கின் கொதிக்கும் காய்ச்சலும் விட்டிருந்தது.

குற்ற உணர்ச்சியில் அவள் முகத்தைப் பார்க்காமல் தரையைக் குணிந்திருந்தவனின் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டவள், “கார்த்திக்… அடுத்து என்ன செய்யலாம்னு தான் யோசிக்கனுமே தவிர, நடந்ததையே நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க கூடாது. இனி என்ன செய்றது அதை சொல்லுங்க… டாடிக்கிட்ட பேசுவோமா…” என்றாள்.

“இல்ல.. இல்ல.. வேண்டாம் அது சரியா வரும்னு தோனல, ஃப்ர்ஸ்ட் என்னோட வீட்டுல பேசுறென். அவங்க நான் சொன்னதும் உடனே ஒத்துப்பாங்க, என்னோட அப்பா அம்மாவோட வந்து உங்க வீட்ல முறையா பேசுறேன். அதுதான் சரி, எல்லாமே முறையா நடந்து, நீ நம்ம வீட்டுக்கு முறையா வரனும். அதுதான் நான் உனக்கும் நம்ம காதலுக்கும் கொடுக்குற மரியாதை..” என்றவன்,

தன் கழுத்தில் இருந்த செயினை அவள் கழுத்தில் போட்டுவிட்டு, “இந்த நிமிசத்துல இருந்து நீ என்னோட மனைவி, அதை எப்பவும் மறந்திடாதே, நான் எந்த சூழ்னிலையிலயும் உன்னை விட்டுட மாட்டேன். ஐ ப்ராமிஸ் யு.. ட்ரஸ்ட் மீ..” என்றதும்,

“உங்களை நம்பலன்னா நான் என்னையே நம்பலன்னு அர்த்தம். நீங்க என்னை விரும்புறதுக்கு முன்னமே உங்களை நான் விரும்பி என்னோட ஹஸ்பண்டா மனசுல பதிய வச்சிருக்கேன். அப்படி இருக்கும் போது, இப்போ நீங்களும் என்னை உயிரா நேசிக்கிறீங்கன்னு தெரிஞ்சும் உங்களை நான் எப்படி நம்பாம விடுவேன்… இந்த செயின் இதெல்லாம் ஒன்னுமே இல்ல, நான் உங்க மனைவி, நீங்க என்னோட கணவர், இதுல எப்பவும் மாற்றம் இல்ல, என அவன் கணகளைப் பார்த்து சொல்ல,

அவள் கைகளை எடுத்துக் கண்களில் வைத்தவன், “நான் ஊருக்கு கிளம்புறேன், இனி எதையும் தள்ளிப் போட முடியாது. நான் வர வரைக்கும் நீ வீட்ல எதையும் சொல்ல வேண்டாம். நானே அங்கிள்கிட்ட சொல்லிட்டுப்
போரேன். என் பேரன்ட்ஸோட வந்து பேசுறேன், அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும் சரியா..” என்றான் ஆழமாய்.

“இன்னைக்கேவா ஹெல்த்த இப்படி வச்சுக்கிட்டு, வேண்டாம் கார்த்திக் ஒரு டூ டேஸ் போகட்டும்..” என அவள் கூற,

“இல்லடா.. இப்போ எனக்கு ஒன்னுமில்ல… ஐ யாம் ஆல்ரைட்.., டாக்டரை விட பெஸ்ட் மெடிசின் நீங்க கொடுத்தீங்களே.. சோ என் ஃபீவர் போயிடுச்சு, ஆனாலும் பவர் ஃபுல்லான மெடிசின் தான் மேடம் ப்ரிஸ்க்ரைப் பண்ணது..” என அவன் குறும்பாய் ஆரம்பிக்க,

“ச்சூ.. போங்க கார்த்திக்… என சினுங்கியபடியே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு, “எப்போ வருவீங்க, உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் கார்த்திக்…” என்றாள் இன்னும் ஆழமாய் அவன் தோளில் புதைந்துக்கொண்டு..

“உன்னை விட்டுட்டு நான் எப்படி இருக்கப்போறேன்னு எனக்கேத் தெரியலடா.. ஆனால் இப்ப போனாதான் நான் உன்னை முழுசா என் கூட வச்சுருக்க முடியும். இனிமேலும், ஒளிஞ்சு மறைஞ்சு உங்கூட பேசுறது, பழகுறது என்னால முடியாது. உன்னை நிமிசம் கூட பிரியாம என் கைக்குள்ளயே வச்சுக்கனும் வது. அதுக்காக சில பிரிவுகள் நமக்குள்ள வருவதை ஏத்துக்கத் தான் செய்யனும்..” என்றான் பொறுமையாய். காலம் அவனுக்கு வைத்திருக்கும் அவலத்தை எண்ணாமல்.

காற்று இதமாகும்..
 
Top