Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral kaatrum - 13 (1)

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்- 13 (1)
அழகுக்கு குழந்தை
அன்புக்கு அன்னை
அறிவுரைக்கு தந்தை
ஆற்றலுக்கு ஆசான்
உயிர்ப்பிற்கு உதரம்
உதிரத்திற்கு சகோதரம்
காதலுக்கு மனைவி
கனிவிற்கு கணவன்
ஆளுமைக்கு அரசு
தோழமைக்கு நட்பு
உறவாகும் சொந்தங்கள்
உயர்வாகும் பந்தங்கள்


“சிவா இன்னும் உள்ள என்ன பன்றீங்க… சீக்கிரம் வாங்க, உங்களுக்குத் தான் எல்லாரும் வைடிங்…” என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள் சஷ்டிகா..

“ம்ச்… இருடி வரேன்… சும்மா நொய்யி நொய்யினுட்டு…” என அவளுக்கு மேல் கத்தியபடி கதவைத் திறந்தான்.

“எதுக்கு இப்படி கத்துறீங்க, சீக்கிரம் வாங்கன்னு தான் சொன்னேன்… கீழ என்னை இருக்க விடாம விரட்டி விடுறாங்க அத்தை.. போ.. போய் பாலாவைக் கூப்பிட்டு வான்னு.. நான் என்னமோ உங்களை பூட்டி வச்சிட்டு வந்த மாதிரி.. க்கும்..”

“வரேன்.. வரேன்னு சொல்லிட்டு இருக்கும் போது ஏன் கதவை அந்த தட்டு தட்டுற, அதான் கத்திட்டேன்.. ஏன் நீயும் தான் கத்துன, நான் எதுவும் சொன்னேனா.. இப்போ எதுக்கு எங்கம்மாவை இழுக்குற.. பாவம் அவங்க…” என்று அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவனை மொத்தியவள், கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போகப் பார்க்க, அவளை லாவகமாக மடக்கியவன் தனக்கு பின்னே கொண்டு வந்து, கதவை இழுத்துப் பூட்டி சாவியையும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“அதான் அம்மா கூப்பிடுறாங்களே, அங்க போலாம், ரூமுக்குள்ள போய் என்ன செய்ய போற…” என்றபடியே அவளைத் திருப்ப… “ஹேய் என்ன பன்றீங்க… விடுங்க… எனக்கு உள்ள போகனும்.. என் கூடவே தான கிளம்புனீங்க… மறுபடியும் ரூமுக்குள்ள போய் என்ன செஞ்சீங்க…. அதுவுமில்லாம ஏன் டோர் லாக் பன்னீங்க… சொல்லுங்க சிவா…” என்று அவன் கைகளை விலக்க போராடியபடியே பேச,

“அதெல்லாம் தெரியும் போது தெரியும்… இப்ப ஃபங்க்ஷன் அட்டெண்ட் பன்னலாம்… வாங்க மேடம்…” விடாமல் கீழே அழைத்து வந்தான். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த அரவிந்த் ஸ்ருதியை கண்களால் தேட, அவளோ அமராவதியின் அருகில் அமர்ந்து தன் மருமகளை கொஞ்சிக் கொண்டு இருந்தாள். ‘எல்லாருக்கும் எப்படி அமையிறாங்க, நமக்கு மட்டும் எப்படி அமையுது பாரு…’ என்று மனதுக்குள் அவளை வறுத்த படியே, கண்களில் கடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தான்.

“கார்த்திக், உனக்கு எதுவும் தீயிற ஸ்மெல் வருதா… எனக்கு வாமிட் வர அளவுக்கு வருது..” என அரவிந்தை கலாய்க்க,

“ஹா..ஹா… எனக்கும் கூட இப்ப ஸ்மெல் வருது கார்த்திண்ணா, காஞ்சிப் போய் கிடந்தா தானே தீயும்… நாங்க என்ன இவங்க மாதிரி காஞ்சி போயா கிடக்குறோம்..” என்று அரவிந்த் பதிலுக்கு கலாய்க்க,

“ஹேய் வேனாம்… ஹனிமூனுக்கு போயிட்டு வந்துட்டமேன்னு அதப்புல பேசுற, அதெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத மாப்ள, நாங்களும் போவோம்…” என்றவனின் கடுப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “போடா… போடா.. உனக்கு டியுஷன் வேனுமான்னு சொல்லு… ஃபீஸ் வாங்காம சொல்லித் தரேன்.” என்றதும், சிவா மீண்டும் முறைக்க, அதைக் காற்றில் விட்டவன், கார்த்திக்கிடம் திரும்பி “யூ நோ கார்த்திண்ணா இந்த காட் கனேஷ் இருக்காருள்ள, அவர் எப்படி ஞானப்பழத்தை டேக் பண்ணாருன்னு தெரியுமா..?” என்றதும் சிவா அவனை கொலைவெறியோடு முறைக்க,

“ஹா ஹா, எதுக்கு இப்போ முரைச்சிங்க் மச்சான்… நானும் அதே மாதிரி தான் எங்க ஃபஸ்ட் நைட் மேட்டரை டேகிள் பன்னேன். ஆனா சிலர் முருகன் பேரையே வச்சிட்டு, முருகன் மாதிரி உலகத்தையே சுத்தி வந்தும், ஒன்னும் கிடைக்காம அலையுறாங்க..” என்று மேலும் தன் நக்கலைத் தொடர,

“டேய்… என் தங்கச்சி வாழ்க்கை வீனா போனாலும் பர்வாயில்லன்னு, உன்னை சாவடிச்சிடுவேண்டா..” என அரவிந்தின் மேல் பாய இருந்த சிவாவைத் தடுத்து நிறுத்திய கார்த்திக், “விடு…விடு டா… அவன் உன்னைக் கிண்டல் தான் பன்றான், அதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ஷன்.. அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை அதை மனசுல வச்சுக்கோ…” என்று ஆரம்பிக்க, அதில் அரவிந்த் மீண்டும் சிவாவை நக்கலாய் பார்க்க… ‘போங்கடா….ங்க…’ என்று ஒரு பார்வையை அற்பமாய் அவர்களை நோக்கி வீசிவிட்டு, ஷ்ருதியிடம் சென்றான்.

அவன் செல்வதைப் பார்த்த அரவிந்த், ‘இவன் ஏன் அவக்கிட்ட போறான், எதுவும் சொல்லிக்கொடுத்து நம்ம வாழ்க்கையில சூனியம் வச்சுட போறான்.’ என்று மனதில அலறியவன், அதை வெளிப்படையாய் கார்த்தியிடமும் புலம்ப, அவனோ “இதுக்குத்தான் அவனை ரொம்ப சீண்டாதேன்னு சொன்னேன் கேட்டியா.. இப்போ பாரு… இனி சிவாக்கிட்ட பார்த்து இரு…” என்று கடுப்படித்து விட்டு சென்றான்.

அரவிந்தோ ‘இந்த மூனுங்களும் ஒரே மாதிரி தானே இருக்கும், கார்த்திண்ணா சப்போர்ட் பன்ற மாதிரி பன்னி, இப்படிக் கவுத்துட்டு போயிட்டாரே..” என்று நொந்து போனான், பார்வை மட்டும் ஸ்ருதியிடமே இருந்தது.

“அமரா… நல்ல நேரம் போகுது பாரு, குழந்தையைத் தூக்கித் தொட்டில்ல போட சொல்லு, மஹாலக்ஷ்மியே உனக்கு மூத்த வாரிசா வந்து பிறந்துருக்கா, எல்லாம் இனி சரியாகிடும்..” என்று வயதில் மூத்த் பெண்மனி ஒருவர் சொல்ல, “இதோ அத்தை..” என அவரிடம் சொல்லிவிட்டு, கார்த்தியைக் கண்களால் தேட, அவனும் சிவாவும் ஏதோ மும்முரமாகப் பேசுவது தெரிந்தது. அவர்களது ஒற்றுமையைப் பார்த்து, தான் அவர்களை பிரிக்க எண்ணீயதை நினைத்து மனதுக்குள் வருந்திக் கொண்டார்.

பின் அருகில் சென்று கார்த்திக்கின் தோல் தொட்டு, “கார்த்திக், நான் கூப்பிட்டது கேட்கல, நல்ல நேரம் முடியப்போகுது, வாங்க குழந்தையைத் தொட்டில்ல போடனும்..” என்றார் மிகவும் கனிவோடு.

“இல்லை.. கேட்கலம்மா… சரி வாங்க போகலாம்…. வாடா நீயும்….” என சிவாவையும் அழைக்க, “பாருடா… உங்க கண்ணூக்கு நானும் தெரியிறேனே… மம்மி நீ பன்றது ஓவர் பார்த்துக்கோ…” என்று கிண்டலடிக்க…

அமராவோ சிவாவின் செய்கையை பொருட்டாக கூட கருதாமல் ‘போடா..போடா..’ என்ற பார்வையை பரிசளித்துவிட்டு, கார்த்தியின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்துவிட்டார். அவர் செய்கையில் சிவாவின் உள்ளம் எத்தனை நிம்மதியடைந்தது என்று அங்குள்ள, அவனை சார்ந்த அனைவருக்கும் தெரியும்.

“ம்ம்.. போலாம்மா…” என அமராவின் பின்னே வந்தவன், குழந்தையைக் கையில் வைத்திருந்த ஷ்ரவந்தியைப் பார்த்து மூச்சு விடவும் மறந்தான். முதன்முதலாக அவளைச் சேலையிலும், அதற்கேற்ற அலங்காரத்திலும் பார்க்கிறான். முன்னே இருந்ததற்கு அவள் உடல் மெலிவைக் காட்டினாலும், குழந்தைப் பிரந்ததும் உண்டாகும் அந்தப் பொழிவு, குடும்பத்தாரின் கவனிப்பு என அவள் இப்பொழுது நன்றாகவே மெருகேறியிருந்தாள்.

இப்படி மனைவியைப் பார்த்தவனுக்கு, அவளைத் தவிர அந்த இடத்தில் வேறெதுவுமோ, மற்றவர்களோ யாருமேத் தெரியவில்லை. கண்களில் காதல் வழிய, விழிகள் மூடாமல் அவளையேப் பார்த்திருந்தான்.

“ப்ரோ… திஸ் இஸ் நாட் யுவர் ஃபங்க்ஷன்… திஸ் இஸ் யுவர் பேபி ஃபங்க்ஷன்… சோ.. க்ளோஸ் த டோர்…” என்று அரவிந்த் கார்த்திக்கின் வாயை லேசாய் மூடுவது போல் சைகை செய்ய, மற்ற அனைவரும் சிரிக்க, கார்த்தியோ ஸ்ருதியை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, கொலைவெறியோடு அரவிந்தைப் பார்த்தான்.

“நோ.. நோ… கார்த்திண்ணா.. நான் உங்க உடன்பிறவா தம்பி, நீங்க பார்த்து வளர்ந்த பையன், என் ஆருயிர் பொண்டாட்டியோட பாஸ்மலர், உங்க ஒரே தங்கச்சிக்கு வாக்கப்பட்டு வாயில புண்ணான மாப்பிள்ளை, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து என் குடும்பத்துல கும்மியடிச்சிட்டு போயிடாதீங்கடா… நான் ரொம்ப பாவம்…” என்று கதறியவனை ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை. ஸ்ருதி மட்டும் அடிக்கடி அவனை நமுட்டுச் சிரிப்போடு பார்த்து வைத்தாள். அதுவே அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அந்த பெரிய வீட்டின் ஹாலில் நடுனாயகமாய் வீற்றிருந்தது. அந்தக் குடும்பத்தினரின் வாரிசுகளை முதன்முதலில் தாங்கும் தேக்குமத்திலாலான தொட்டில். அன்னப்பறவையின் வடிவத்தில் அமைந்திருந்த அந்த தொட்டில் முழுவதும் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உள்ளே பட்டு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது.

கார்த்தியும், ஷ்ரவந்தியும் குழந்தையை அந்த தொட்டிலில் இட்டு, “வர்ணா” என்று மூன்று முறை அழைத்து விழாவை ஆரம்பித்து வைத்தனர். அடுத்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குழந்தையின் பெயரைச் சொல்லி விழாவைக் கொண்டாடித் தீர்த்தனர்.

தங்கள் வெறுமையான வாழ்க்கையில் வண்ணங்களை வாரி இறைத்து வர்ணஜாலங்களை மாயங்களாய் செய்த மகாலக்ஷ்மிக்கு வர்ணா என்றுப் பெயரிட்டான் கார்த்திக். வீட்டிலும் இதையே சொல்ல, அவர்களுக்கும் மறுப்பு ஏதும் இல்லை. பிள்ளைகளீன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து அமராவிற்கு தான் செய்த தவறின் அளவு புரிந்தது. சிவாவும், ஸ்ருதியும் அப்படி செய்யவில்லை என்றால், வீடே சூனியமாகி, கார்த்திக்கின் நிலை முற்றிலும் மோசமாகி, பாவத்திற்கு மேல் பாவம் சேர்த்திருப்போம் என்று தன்னையே நொந்து கொண்டார்.

அன்றைக்கு நடந்தது இப்போது மனக்கண்ணில் ஓடியது.. ஸ்ருதியும், லிங்கேஸ்வரனும் கிளம்பியதும், அவரால் அங்கே இருக்க முடியவில்லை.. கார்த்திக், சிவா, அரவிந்த் மற்றும் ஸ்ருதி நால்வரும் சேர்ந்து எடுத்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தார். மனம் முழுவதும் கார்த்திக்கிற்கு செய்த துரோகமே படமாய் ஓடியது.. ‘அம்மா.. அம்மா என்று தனக்கு பின்னே திரிந்த அந்த ஐந்து வயது சிறுவன் தான் கண் முன்னே வந்தான்.

கண்களை இறுக மூடினாலும் போகவில்லை… அழுத முகமாய் அவனே வந்தான். மற்றவர்களீன் பேச்சைக் கேட்டால் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று அந்த நொடி அவருக்கு புரிய, கார்த்திக்கையோ தன் பிள்ளைகளையோ ஒரு போதும் தன்னால் இழக்க முடியாது என்று தோன்ற, யாரிடமும், எதையும் சொல்லாமல், சிவாவிடம் சில விசயங்களைப் பேசிவிட்டு, அடுத்த ஐந்து மணி நேரத்தில் கார்த்திக்கின் மகளை, தன் வீட்டு முதல் வாரிசை கையில் வாங்கியிருந்தார். இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமராவிடம் நிறைய போராட வேண்டியிருக்கும் என்று நினைத்த அனைவருக்கும் அத்தனை அத்தனை மகிழ்ச்சி.

அடுத்து அவர் சென்று நின்றது ஷ்ரவந்தியிடம்தான். அவளது கைகளைப் பிடித்தபடியே நின்றிருந்தார் சில நிமிடங்கள். பிறகு “உன் வாழ்க்கைல நடந்த அத்தனை இழப்புக்கும் நான் மட்டும் தான்மா காரணம். உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு, நான் ஏன் எதுக்கு இப்படி செஞ்சேன்னு என்னால காரணம் சொல்ல முடியல, ஏன்னா அந்த அமராவை எனக்கேப் பிடிக்கல. அவ்வளவு மோசமானவளா நான் இருந்துருக்கேன். தெரிஞ்சோ, தெரியாமலோ உங்கப்பா உங்களை விட்டுப் போக நான் காரணமாயிட்டேன். அப்போ இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தோனவே இல்ல. தப்புத்தான், ரொம்ப பெரிய தப்புத்தான். நானே என் பிள்ளைங்கள பிரிச்சுப் பார்த்திருக்கக் கூடாது.”

“’அம்மா.. அம்மான்னு’ என் பின்னாடி அலைஞ்சவனுக்கு துரோகம் பன்னிருக்க கூடாது. என் பையன் என் மேல வச்ச நம்பிக்கையை, பாசத்தை நானே கொன்னுட்டேன். என்னால அவன் பட்ட கஷ்டத்தை… ஐயோ… நான் எந்தளவுக்கு மோசமானக் கொடுமைக்காரியா மாறிப்போயிருக்கேன்… கடவுளே.. என் பிள்ளை என்னை மன்னிக்கனுமே.. இல்லை மாட்டான்… என்னை மன்னிக்கவே மாட்டான்..” சாதாரணமாய் பேச ஆரம்பித்தவர், பெருங்குரலெடுத்துக் கதற, சத்தத்தில் அழுத குழந்தையை எடுத்துக் கொண்டு பத்மா வெளியேற, அமராவின் தோளைத் தாங்கிப் பிடித்தது வேறு யாரும் இல்லை கார்த்திக் தான்.

“அம்மா.. ப்ளீஸ், நீங்க என்ன செய்தீங்க, உங்க மேல ஒரு தப்பும் இல்லை. எந்த அம்மாவும் தன் குழந்தையைக் கஷ்டப் படுத்த மாட்டாங்க, இப்படித்தான் ஆகனும்னு இருந்தா, அது நடக்கத்தான் செய்யும். தயவு செய்து எமோஷனல் ஆகாதீங்க.. ப்ளீஸ்..” என்று பலவாறு அவரைத் தேற்றி, அங்கே அனைவரிடமும் ஒரு மன்னிப்புப் படலத்தை முடிக்க, லிங்கேஸ்வரன், தனஞ்செயன், அரவிந்த் ஸ்ருதி என நால்வரும் வந்திறங்க, அந்த அறையே உறவினர்களால் சூழ்ந்து கிடந்தது.

பத்மா மட்டும் நடப்பதை அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். மகள்களின் வாழ்க்கை சீராகிவிட்டது, அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை. நிச்சயம் மகள்கள் இருவரும் தன்னைத் தனியாக விடப்போவதில்லை. அதற்கு ஒரு போதும் அவர் சம்மதிக்கப் போவதில்லை, தஞ்சாவூருக்கே போவது தான் முடிவு. நாளைத் தன் பிள்ளைகளுக்கு தாய்வீடு என்பது கண்டிப்பாக வேண்டும் என்று நினைத்து அதில் உருதியாகவும் இருந்தார்.

அமராவும், லிங்கேஸ்வரனும் பத்மாவிடம், மன்னிப்பைக் கேட்க, அவர் “நான் பழசை மறந்துட்டேன், இதுதான் விதின்னா அதை யாரால் மாற்ற முடியும்’ என்று கூறி ஒதுங்கி விட்டார். பட்டும் படாமலும் பேசுவதில் இருந்தே அவரது கோபம் புரிய, சில நாட்கள் பொறுக்கத்தான் வேண்டும் என்று நினைத்து அமைதியாகிவிட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் தாயகம் திரும்ப, அடுத்து வர நல்ல நாளில் குழந்தைக்குப் பெயர் வைத்து தொட்டிலில் இடும் விழாவை முடித்து, பத்மா தஞ்சாவூர் கிளம்புவதாக முடிவு செய்யப்பட்டது.

அன்று காலைதான் பெரியவர்கள் மட்டுமே சூழ நெல்லையப்பர்- காந்திமதி தாயாரின் சன்னதியில் கார்த்திக் ஷ்ரவந்தியின் கழுத்தில் பொன் மாங்கல்யத்தை அணிவித்தான். குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா பற்றி பேச்சு வர, முதன் முதலாக பத்மா வாய் திறந்து பேசியது ஷ்ரவந்தியின் கழுத்தில் கார்த்திக் மாங்கல்யம் அணிவிக்க வேண்டும் என்பது தான்.

அதுவரை யார் கருத்திலும் உரைக்காதது அவர் கூறியதும் உரைக்க, விழா நாளன்று காலையில் திருமணமும் மாலையில் பெயர் சூட்டும் நிகழ்வும் நடத்தலாம்’ என்று முடித்தனர். அதன்படியே விழ்ழவும் மிகவும் சிறப்பாக முடிய, தங்கள் பிள்ளைகளின் ஜோடிப் பொருத்தத்தை எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டனர்.

விழாவிற்கு வந்த அத்தனை பேரின் பார்வையும் மூன்று ஜோடிகளின் மேலுமே விழ, அன்றிரவு அனைவரையும் நிற்க வைத்து திருஷ்டி பூசனிக்காயொன்றை சுற்றிப் போட வைத்துதான் அவர்களது அறைகளுக்குள் விட்டார் அமராவதி.

உள்ளே வந்த ஸ்ருதி, கொஞ்சமும் தாமதிக்காமல் அரவிந்தைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தாள். ‘என்னை மேரேஜ் செஞ்சு உனக்கு வாயெல்லாம் புண்ணா போச்சா.. இதெல்லாம் கேட்குற என்னோட காதுதாண்டா புண்ணா போச்சு..’ என்று அவனை மொத்த, ‘ஏய்.. இருடி.. விடுடி… ராட்சசி…’ என்று அவளிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தவவன், முடியாமல் அவளை இழுத்து இதழில் அழுத்தமாய் இதழ் பதிக்க, தினறி, தடுமாறி ஒரு வழியாய் அடங்கிப் போனாள்.

தன் ராட்சசியின் பேச்சை நிறுத்த அவனது முத்தத்தால் மட்டுமே முடியும் என்று அவனுக்குத் தெரியும். ஆழ்ந்து அமிழ்ந்துப் போனவளின் இதழை விட்டவன், தன் உதட்டால் செவிகளை உரசி,

“லிப் கிஸ்ஸடிச்சா வாய் புண்ணாகாதா, அதைத்தான் சொன்னேன்..” என்று ஹஸ்கியில் பேச,

“ம்ம்… ம்ம்” என்றபடியே அவனது அடுத்தக் கட்டத் தாக்குதலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தாள் இம்சையின் ராட்சசி.
 
ஹப்பா இப்போவாவது இந்த அமராவதி திருந்தினாளே
அதுவரைக்கும் நல்லது
 
Last edited:
Top