Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankatrum Thendral Katrum - 13(2)

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..
தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் கதை இந்த எபியோடு முடிகிறது. மாத நாவலிற்காக எழுதியதால் சிறிதாக முடித்துவிட்டேன்.. முடிந்தால் இரண்டு நாட்கள் கழித்து எபிலாக் தருகிறேன்.. கதையோடு பயணித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் ஃப்ரண்ட்ஸ்..


தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் - 13(2)


மகளுக்கு தன் உதிரத்தை உணவாக்கிக் கொண்டிருந்தவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தான். கைகள் குழந்தையை வருடினாலும், கண்கள் என்னமோ அவனையே தான் பார்த்திருந்தது. காதல் சொட்டும் பார்வை. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்பது போல் ஒரு பார்வை. உன்னை, உன் சூழ்நிலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது போல் ஒரு அர்த்தமான பார்வை. வாய்ப் பேச்சுத் தேவையில்லை அவர்களுக்கு, அவர்களது விழிகளே மௌனமாய் தங்களது கடந்து போன காலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பேசிக் கொண்டது. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும், நடந்ததும் நடந்ததாகவே இருக்கட்டும், இனி நடக்கப் போவது மட்டும் நல்லதாகவே நடக்கட்டும். அவர்களது வாழ்க்கையும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கட்டும்….

“சசி...”

“ம்ம்ம்..”

“சரி..”

“ம்ம்..”

“தூங்கிட்டியா..”

“ம்ம்ம்ம்..”

“ஏய் அதுக்குள்ள தூங்கிட்டியா..”

“ம்ம்ம்..”

“ம்ப்ச்..” என்று சலித்தவன், அவனது அணைப்பை இறுக்க, அதில் அவளது உடல் குழுங்க, சிரிக்கிறாள் என்று தெரிந்து விட்டது அவனுக்கு. அணைப்பை இறுக்கியபடியே அவளது மேனியை தீண்ட, அதில் நெளிந்து திமிறியவள், அவனிடமிரிந்து வெளியேறி வாய்விட்டு சிரிக்க,

“ஹேய் சிரிக்காதடி... என் ஃபீலிங்க்ஸ் உனக்கு சிரிப்பா..” என்று மீண்டும் அவளைத் தனக்குள் கொண்டு வந்தவன், தன் தேடலைத் தேட துவங்க, “ம்ம்..சிவா... ப்ளீஸ்... மறுபடியும் ஆரம்பிக்காதீங்க, நான் பேசனும்னு சொல்லும்போது விடாம உங்க காரியத்தை சாதிச்சிட்டீங்க, இப்போ மறுபடியும் போங்க... நீங்க..” என்று சினுங்கினாலும், அவனிடமிருந்து விலகவில்லை.

“ம்ம்..ம்ம்ம்... பேசலாம்.. பேசலாம்... இன்னும் கொஞ்ச நேரம்..” என்று ஆரம்பித்தவன், சில மணி நேரங்களில் அவளை விட்டு, “நீ டயர்டா இருக்க, இப்பவும் பேசனுமா.. என்ன..?” என்று கண் சிமிட்ட,

“ப்ராடு... ப்ராடு...” என்று கணவனை மொத்தியவள், “இன்னைக்கு சிவராத்திரின்னு தெரிஞ்சிடுச்சு, அப்புறம் எங்க தூங்க, எனக்கு நெறைய கேட்கனும், சோ எனக்கு சொல்லிட்டு நீங்க தூங்குங்க..” என்றபடியே அவன் மீதேறி அமர, அவனும் அவளை வாகாக பிடித்தபடி, “இப்படி கேட்டா என்னோட பதில் வேற மாதிரி தான் இருக்கும், உனக்கு ஓகே வா...” என,

“நோ வே..” என்று அவன் மீசையைப் பிடித்து ஆட்டியபடியே, “எல்லாமே நீங்களூம், மாமாவும், தனாப்பாவும் சேர்ந்து போட்ட ப்ளான் அப்படித்தானே.. அரவிந்த் அண்ணாக்கு கூட தெரியல,கார்த்திக் அத்தானைப் பத்தி உங்களுக்கு முன்னாடியே டவுட் வந்துருக்கு, அதான் அத்தை அவரைப் பத்தி சொன்னதும் எதுவும் சொல்லாம, ஆனா அத்தைக்கு டவுட் வராம, அவரைப் பத்தி விசாரிச்சிட்டே இருந்துருக்கீங்க... அப்படித்தானே...” என்று மூச்சு விடாமல் கேட்க, அவனிடம் புன்னகை மட்டுமே பதிலாக இருந்தது.
அவன் சிரிப்பில் கடுப்பானவள், கையில் சிக்கியிருந்த மீசையை வேகம் கொடுத்து இழுக்க, அந்த வலியில் அவளைக் கீழேத் தள்ளி, இவன் மேலேறி, “வலிக்குதுடி பிசாசு...” என தன் மீசையை தடவி விட்டுக் கொண்டே, “நாங்க இங்க வந்து கொஞ்ச நாள்லயே எனக்கு எல்லாமேத் தெரியும், ஆனா அப்போ கார்த்திக் எங்க இருக்கான்னு தெரியாது, அவன் கிடைக்கவும் தான் எல்லாத்தையும் ப்ளான் பன்னனும்னு முடிவு பன்னேன்.”

“அரவிந்த் கிட்ட சொல்ரது பெரிய விசயம் இல்ல, அவன் ஸ்ருதிகிட்ட போய் கத்துவான், அவ அம்மாட்ட சண்ட போடுவா... அப்புறம் அம்மா கர்த்திக் மேல இன்னும் கோபத்த வளர்த்துப்பாங்க, அதான் அமைதியா எல்லாத்தையும் செய்ய வேண்டியதா போச்சு.. அதுவும் உன்னை டேக் பன்றது தான் எனக்கு பெரிய வேலையே, அன்னைக்கு மட்டும் உன்னை தனியா போக விட்டுருந்தா, என்னோட எல்லா ப்ளானும் சொதப்பி, ஏறுக்கு மாறா போய்ருக்கும்...”

“தனா அங்கிள் ரொம்ப ஹெல்ப் பன்னார், அப்பா மேல எனக்கு இருந்த கோபத்தை சொல்லி புரியவச்சதும் அவர்தான். ரெண்டு பேரும் எனிமிஸ் மாதிரி நடிக்க ஒத்துக்கவே இல்ல, ஆனா ஸ்ருதியும் அம்மாவும் நம்பனும்னு தான் ஒத்துக்கிட்டாங்க, அம்மாவோட நச்சரிப்புத் தாங்க முடியாம தான் வேற இடத்துல சம்மந்தம் பேசவே அப்பா கிளம்புனாங்க, அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தெரியுமே, அம்மா ஒன்னும் கெட்டவங்க இல்லடா, சொல்பேச்சுக் கேட்டு இப்படி ஆகிட்டாங்க, இப்போ திருந்திட்டாங்க, எப்படி இருந்தாலும் அவங்க என்னோட அம்மா... அவங்களை நீங்க தான் மரியாதையா நடத்தனும், எந்த சூழ்நிலையிலும் அவங்க செஞ்ச தப்பை சொல்லிக் காட்டி, குற்ற உணர்ச்சியைக் கொடுத்துடக் கூடாது... எனக்காக இதை செய்யனும் ப்ளீஸ்..” எனவும்,

உணர்வுப் பெருக்கோடு பேசியவனை இழுத்து, இதழோடு இதழனைத்து மீண்டுமொரு யுத்தத்தை அவள் ஆரம்பித்து வைக்க, அவள் செய்கையை எப்பொழுது தனதாக்கிக் கொண்டானோ.... ஈருடலும், ஓருடலாய் காதல் யுத்தத்தில் போரிட்டுக் கொள்ள, வெண்ணிலவு வெட்கம் கொண்டு, மறைந்து கொள்ள, கீழ்வானம் மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது போல் அவர்களது வாழ்வும் புலர ஆரம்பித்தது...

முற்றும்
 
Really Super....moonu jodiyume sema...master plan Bayangarama work out agi elam subam ah mudinjuruchu....oru story ah fast forward la patha feel...keep rockingggg dr...
 
Top