Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 12.2

Advertisement

ஹர்ஷு சும்மா இருக்க நினைத்தாலும் அவளை சீண்டிப் பார்க்க நினைக்கிறார்களே
 
Part 2

“யாரவன்...” என எதிரே நின்றவனை ஏறிட இன்னும் பெரிதாக அதிர்ந்துபோனான். அவனையறியாமல் ஷக்தியின் இதழ்கள், “ராபர்ட்...” என அவனையறியாமல் முணுமுணுத்தது. அதெல்லாம் உணரும் நிலையில் ஹர்ஷிவ்தா இல்லை.

ராபர்ட் ஷக்தி வேலை பார்க்கும் சாப்ட்வேர் சொல்யூஷன் கம்பெனி CEO வில்லியம்ஸின் ஒரே புதல்வன். கண்டிப்புக்கு பேர் போனவராக இருந்தாலும் மகனென்று வரும் போது அவரது நியாயம் மகனை தானே சேரும் என எண்ணியவன் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு சேந்தான்.

அக்கம்பெனியின் ப்ராஜெக்ட் மேனேஜரான தன்னிடம் விளக்கம் கேட்கும் பொழுது நடந்ததை விளக்கிவிடுவோம். அதன் பின் என்னவேண்டுமென்றாலும் நடக்கட்டும் என நினைத்தான். அவனுக்கு ஹர்ஷூவின் மேல் எந்த தவறும் இருக்காது என்பது உறுதி.

அந்த ராபர்ட்டோ, “வாட் பேபி? உன்னை என்னோட ரூம்க்கு தானே கூப்பிட்டேன். என்னையே அடிச்சிட்டியா? உனக்கு என்ன விலையோ நான் தர தயாரா இருக்கேன் பேபி...” என குழறிக்கொண்டே நிதானமில்லாமல் பேச ஷக்தியின் காதில் ராபர்ட்டின் பேச்சு அமில மழையை பொழிந்தது.
ஆனால் ஹர்ஷூவோ, “டேய் ஆகாஷ், உன்னை இங்கயே கொன்னுடறேன்டா. உன்னை சும்மா விடவேமாட்டேன். நீ கையால சாகவேண்டியவன். உன்னை கொள்ளாம விடாமட்டேன் ஆகாஷ்...” என ஷக்தியிடம் இருந்து திமிறிக்கொண்டு அவன் மீது பாயமுயன்றாள். இப்போதே ராபர்ட்டை துவம்சம் செய்துவிடும் வெறி ஹர்ஷூவின் கண்களில் பளபளத்தது.

அவளுக்கு தெரிந்ததெல்லாம் கண்முன் இருப்பது ராபர்ட்டின் முகம் அல்ல. அவனை ஆகாஷ் என நினைத்தாள். இப்படி ஒரு வெறித்தனத்தை ஷக்தியால் தாங்க முடியவில்லை. அவளது இந்த முகம் பெரிதும் பயத்தை தந்தது ஷக்திக்கு. அதே நேரம் “யார் அந்த ஆகாஷ்?...” என முதல் முறையாக மனதில் யோசனை படர்ந்தது.

அதற்குள் தன்னுடைய கெஸ்ட், அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தவர்கள் என பெரும்பானோர் கூடிவிட்டனர். ஹோட்டல் மேனேஜர் செய்தியறிந்து அவ்விடம் வந்து சேர்ந்தவர் உடனடியாக ராபர்ட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்.

அவனோ நகலாமல், “ஹேய் மேனேஜர், எனக்கு இந்த பொன்னை ஏற்பாடு செய். உனக்கு எவ்வளவு கமிஷன் வேணுனாலும் வாங்கிக்கோ...” என பணத்திமிராக பேசவும் அவருக்கே இவனுக்கு இன்னும் நாலு அடி குடுத்தாலும் தப்பில்லை என நினைக்க தோன்றியது.

ஆனாலும் ராபர்ட் மறுக்க மறுக்க இரண்டு பேரை அழைத்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவனது ப்ரெண்ட்ஸிடம் ஒப்பைடைக்க சொல்லி அனுப்பினார்.

அவன் செல்லும் போதே, “ஏஞ்சல், உன்னை விடமாட்டேன். ஐ வாண்ட் யூ பேபி...” என கூச்சல் போட்டுக்கொண்டே சென்றான். அவன் செல்வதை ஷக்தியின் உடன் வேலை செய்பவர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சதீஷிற்கு சொல்லவும் வேண்டுமா? ஏற்கனவே அவனது பயத்தை உமா அளவிற்கதிகாமாகவே தூண்டிவிட்டிருந்தான். இப்போது ஹர்ஷிவ்தாவின் சுயரூபத்தை நேரிலும் பார்த்தவன் உமாவின் முதுகின் பின்னாலே ஒண்டிக்கொண்டான்.
“சற்றுமுன் தான் செய்த செயல் எங்கே இந்த நேரத்தில் நியாபகம் வந்து கோவத்தில் தன்னையும் பிடித்து நாலு சாத்து சாத்திவிட்டால் என்ன செய்ய?...” என்று அரண்டுவிட்டான்.

அங்கிருந்த பணியாள் ஒருவன் முன்வந்து, “சார் மேடம் கார்டன்ல இருக்கும் போதே ராபர்ட் சார் அவங்களையே பார்த்திட்டு இருந்தாரு, பக்கத்துல போறதுக்குள்ள மேடம் கிளம்பி இங்க வந்துட்டாங்க. அவங்க பின்னாடியே வந்தவரு மேடத்துக்கிட்ட ரொம்ப மோசமா பிகேவ் பண்ணிட்டாரு...” என நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.

கார்டனில் அமர்ந்திருந்த ஹர்ஷிவ்தா இப்போது கோவம கொஞ்சம் குறைந்து கணவனுக்காக நினைக்க ஆரம்பித்தாள்.
“ஹரிம்மா நீ சரியான லூஸுடா. பாவம் கௌரவ். அந்த ஜொள்ளு சதீஷ் பண்ணினதுக்கு உன் புருஷன் என்ன செய்வான்? பாவம் அவனை வீட்ல வச்சு என்னவேணும்னாலும் செஞ்சுக்கோ. இங்க எல்லோர் முன்னாடியும் நீ இப்படி நடந்தா அது மத்தவங்க என்ன நினைப்பாங்க?...” என தானே தன்னவனுக்கு ஆதரவு திரட்ட கொஞ்சம் சமாதானம் ஆகி பார்ட்டி ஹால் நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

யாரோ தன்னை தொடர்வதை தன் உள்ளுணர்வு தெரிவித்தாலும் அதை அசட்டை செய்து முன்னேற தூரத்தில் தெரிந்த ஹாலை நோக்கி வேக நடை போட்டாள். ஆனால் அவளை மறுத்து ஒருவன் முன்னாள் வந்து நின்றதும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
“ஹாய் பேபி, வாட் எ பியூட்டிஃபுல் ஏஞ்சல்...” தன்னை வழிமறித்ததும் இல்லாமல் அநாகரீகமாக நடந்துகொண்டவன் குடித்திருக்கிறான் என்பதை அவனது சிவப்பேறிய கண்களே காட்டிக்கொடுத்தது.

சுறுசுறுவென ஏறிய கோவத்தை தூரத்தில் தெரிந்த ஷக்தியின் வருகையை பார்த்து முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவனை விட்டு விலகி நடக்க முயன்றாள்.

அதற்கும் விடாமல் அவளை தடுத்து “ஹேய் பதில் சொல்லு பேபி. என்னோட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென் பண்ணேன். வா என்னோட ரூம்க்கு போகலாம்...”என கூறிக்கொண்டே கையை பிடித்த நிமிடம் எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ பளாரென அறிந்ததும் அந்த சப்தம் காரிடர் முழுவதும் எதிரொலித்தது. அந்த நொடி அவளின் கண்களுக்கு ஆகாஷ் மட்டுமே தெரிந்தான்.

குடியின் போதையில் இருந்தவனால் அவளை எதிர்க்க முடியவில்லை. தடுமாற்றத்தால் தடுக்கவும் இயலவில்லை. இல்லை என்றாலும் ஹர்ஷூவின் இந்த தாக்குதலுக்கு அவனால் பதில் கொடுத்திருக்க முடியாது என்பது ராபர்ட்டிற்கு தெரியாதே?

இவ்வாறு நடந்ததை கூறிய பணியாள், “இவரு நல்லா முட்ட முட்ட குடிச்சிட்டு இருந்தாரு சார். அதனால இவரோட வந்த ப்ரெண்ட்ஸ் அவனைக் புக் பண்ணிருக்கற ரூம்ல இவரை விட சொல்லி என்னை கூட அனுப்பிவிட்டாங்க. நான் எவ்வளவோ தடுத்தேன் சார். அந்தாளு கேட்கலை. சரியான அடி சார் அந்தாளுக்கு. உங்க வொய்ப் செய்ததுதான் சார் சரி...” என கூறிவிட்டு அகன்றுவிட்டான்.
இதையெல்லாம் கேட்ட ஷக்தியின் முகத்தில் ராபர்ட்டின் மீதான கொலைவெறி தாண்டவமாடியது. ஆனாலும் அதை காண்பிக்கும் சமையம் இதுவல்ல என உணர்ந்து தன்னை அடக்கினான்.

ஷக்தியின் கட்டுப்பாட்டில் இருந்த ஹர்ஷூவோ ஆகாஷின் வேண்டாத நினைவு தந்த தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தின் பிடிக்குள் சென்றுகொண்டிருந்தாள்.

தங்களை சுற்றி வேடிக்கை பார்த்தவர்களை கண்டவன் இனி இங்கே ஹர்ஷூ இருப்பது சரியில்லை என உணர்ந்து அவளை பார்க்க அதற்குள் தன்மீதே மயங்கி சாய்ந்திருந்தவளை கண்டு துணுக்குற்றான். உடனடியாக அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு தன்னுடைய ஹெஸ்ட் அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டும் பார்வையை விடுக்க,

“ஷக்தி சார் நீங்க கிளம்புங்க. நாங்க ஒன்னும் தவறா நினைக்கலை. பிரச்சனை ஒண்ணுமில்லை. நீங்க மேடத்தை பாருங்க...” என் அவர்கள் கூற,

“ஆமாம் ஷக்தி, நீ கிளம்பு. இங்க நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு கால் பண்ணு. நான் இங்க முடிச்சிட்டு வந்திடறேன்...” என உமாவும் தைரியமாக கூறவும் அவர்களின் புரிந்துகொண்ட பாவனையில் விருட்டென வெளியேறினான்.
ஷக்தி ஹர்ஷூவை காரில் கிடத்தி சீட்பெல்ட் போட்டுவிட்டு தன் புறம் வந்து காரெடுத்து செல்லும் வரை இரண்டு விழிகள் அவர்களையே வன்மத்துடன் வெறித்தது.

“ஹர்ஷூ நீ கடைசியில சென்னைக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறாயா? இனி என்னிடமிருந்து எப்படி தப்பிக்கிறன்னு நான் பார்க்கறேன்...” என பழிவாங்கும் வெறியில் வார்த்தைகளை பற்களுக்கிடையில் சிக்கி சிதறி வெளியில் வந்து விழுந்தன.

அவனது மூளை அடுத்து எப்போது எப்படி ஹர்ஷூவை பழிவாங்குவது என குறுக்குபுத்தி கொண்டு சிந்திக்க ஆரம்பித்தது.
இவனது எண்ணம் ஈடேறுமா? நெருப்பாய் தகிக்கும் ஹர்ஷூவை நெருங்க இவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிபெறுமா? இல்லை அந்த நெருப்பினாலே இவனுக்கான முடிவும் எழுதப்படுமோ?


நதி பாயும்...
Nice
 
Top