Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 8.1

Advertisement

Admin

Admin
Member
தடையில்லை நதியே பாய்ந்தோடு


நதியோட்டம் – 8


ஷக்திக்கு நடந்தவை எதையும் சத்தியமாக நம்பமுடியவில்லை. ஹர்ஷிவ்தாவை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறவே செய்தான். வானிலை மாற்றம் போல் சடுதியில் இறுக்கம் தளர்ந்து கொஞ்சமும் ஈகோ இல்லாமல் தன் மனதை பகிர்ந்துகொண்டவளை மெச்சாமல் தான் இருக்க முடியவில்லை.

“ஆமா, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. இது காதல் இல்லை ஜஸ்ட் ஒரு ஈர்ப்புதான்...” என பளிச்சென எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாத வெளிப்படையான பேச்சில் பிரமித்தவன் கடைசியில் அவள் தன்னையே கலாய்த்து எதிர்பாரா நேரத்தில் முத்தமிட்டு சென்றதில் திளைத்திருந்தான்.

இதில் தன்னை நினைத்துக்கூட கொஞ்சம் வெட்கித்தான் போனான் ஷக்தி. இதுவரை தான் ஹர்ஷிவ்தாவை விரும்புவதை வாய் வார்த்தையாக அவளிடம் சொல்லவில்லையே என்ற வருத்தமும் எழத்தான் செய்தது.

இப்படியாக இவன் இங்கே சிந்தனை வளையத்திற்குள் சிறையிருக்க இவனின் சண்டிராணி குளியலறையில் இருந்து வெளியேறினாள்.

அதிலும் கூட தன் மோனநிலையை கலைக்காமல் இருந்தவனை பார்த்து, “ஒரு முத்தத்துக்கே இப்படி பேயறைஞ்சதை போல இருக்கான். இதுக்கே ஆள் ப்ளாட்டா?...” என நினைத்து,

“என்ன கௌரவ் ட்ரீம்சாங் தானே?...” என அவனை உலுக்கி கேட்டதும் தெளிந்தவன்,

“ஹ்ம், பாடலாம் தான். ஆனா என்னோட வொய்ப்க்கு குத்துசாங் தானே பிடிக்கும். என்ன செய்யனு யோசிக்கிறேன்?...” என அவளை பார்த்து உல்லாச குரலில் கூற,

“ம்ம் அப்டியே யோசிச்சிட்டு இருங்க, நான் தூங்கறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும். அப்புறம் சு-ன ப-ன என்னை உயிரை வாங்க ஆரம்பிச்சிடுவாங்க...” என கூறிக்கொண்டே லைட் ஆஃப் செய்துவிட்டு இழுத்து போர்த்தி படுத்துவிட்டாள்.

அவளருகில் படுத்த ஷக்தியும் அவளை நெருங்கி தன் கரத்தை கொண்டு அவளை தன்னோடு இழுத்து அணைத்தவாறே படுக்க அவன் புறம் திரும்பி லேசாக தலைசாய்த்து ஏறிட்டவள்,

“ஏன் சார் கொஞ்சம் கேப் விட்டு படுக்ககூடாதோ?...”

“ஹ்ம், இருக்கிற கேப்பை கொஞ்சமாவது குறைக்கலாம்னு தான் கை மட்டும் போட்டேன். வேண்டாம்னா சொல்லு. வேற ட்ரை பன்றேன்...” என்றவனின் குரலில் காதல் எக்கச்சக்கமாக வழிந்தோடியது.

“கேப்பை குறைக்கிறேன், கம்பை அரைக்கிறேன்னு டயலாக்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பாரு, உன் பார்வைதான் சரியில்லை. கொஞ்சம் இடம் குடுத்தா ஓவரா போற? கண்ணுமுழியை நோண்டிடுவேன். ஜாக்கிரதை...”என்றவள் முகம் மீண்டும் பழையபடி தீவிரத்தை காட்டியது.

“மறுபடியும் என்னடா?...” என கேட்டவனின் வார்த்தையில் கொஞ்சம் ஆயாசம் எட்டிப்பார்த்ததோ? அதை சரியாக உணர்ந்துகொண்டவள்,

“நான் இப்படித்தான் கௌரவ். ஒரு நிமிஷம் கூட ஒரே மாதிரி மனநிலையில இருக்க மாட்டேன். அதனால என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு கஷ்டத்தை குடுக்கறேன்னு தெரிஞ்சாலும் என்னை மாத்திக்க நான் முயற்சி கூட செஞ்சதில்லை. அதை நினைச்சு நான் கவலைப்பட்டதில்லைன்னு சொல்லமுடியாது. அது பெருசா என்னை பாதிக்கலை. அதுதான் உண்மையும் கூட...”

“ஆனா இப்போ இந்த ஒரு நாள்லயே உன்னையறியாம உன் மனசுல இந்த நொடி சின்ன சுணக்கம் வந்து போச்சு தானே?, நான் செய்யறது எல்லாமே எனக்கு நியாயமாத்தான் இருக்கும். இனி இது போல பல விஷயங்கள்ல நீ என்னை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க போற கௌரவ். அதனால பாதிக்கப்படப்போறது நானும் நீயும் மட்டுமில்லை. இதுவரைக்கும் நான் எதுக்கும் பயந்ததில்லை...”

“ஆனா என் மேல நீ வச்சிருக்கிற இந்த காதலை, நானே அழிச்சிடுவேனோன்னு எனக்குள்ள ஒரு சின்ன பயம் வர ஆரம்பிச்சிருக்கு. ஏனோ இந்த காதல், நீ, இதையெல்லாம் என்னோட நடவடிக்கையால இழந்திடுவேனோன்னு ஒரு நினைப்பு என்னை படுத்தி எடுக்குது. இதுவரைக்கும் இதை போல ஒரு உணர்வு எனக்கு வந்ததில்லை. அதான்...” என்றவளது கண்களில் கூட கலக்கம் கொஞ்சம் ஒட்டிகொண்டிருந்தது.

தன்னாலே, தன் நடவடிக்கையாலே தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் காதல் பாதிக்கப்படுமோ என நினைத்து மனைவியவள் கலங்குவதை பொறுக்காமல் அவளை மென்மையாக அணைத்தவன் அவளை இப்போதைக்கு இதை யோசிக்க விடக்கூடாது என எண்ணி ஆறுதல் படுத்த முனைந்தான்.

“லூசு மாதிரி பேசாத தேனு. நீ பயப்படறது போல எல்லாம ஒன்னும் ஆகாது. நீ உன்னை மாத்திக்க முயற்சி பண்ணனும்னு நினைக்கிறதே போதும்...” என அவளது நெற்றியில் தன் முதல் இதழ் ஒற்றலை பதித்தான்.

அதில் நெகிழாமல் சிலிர்த்துகொண்டவள், “என்னது?... யோவ், நான் எப்போ என்னை மாத்திக்க முயற்சி பன்றேன்னு சொன்னேன். கேட்கிறதை முழுசா கேளு, அதையும் தெளிவா கேளு. என்னால என்னோட ஆக்ட்டிவிடீஸ் எதையும் மாத்த முடியும்னு தோணலை. வேணும்னா நீ என்னை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. தெரிஞ்சுதானே கல்யாணம் செஞ்சுக்கிட்ட. அதுவும் என்னை கார்னர் பண்ணி...” என கேலியாக கூறவும் அதில் முறைத்தவன்,

“ஆமாமா நான் மிரட்டவும் அப்டியே பயந்துட்டியாக்கும்?...” என அவளது காதை பிடித்து திருகியவன் , “தூங்கு, காலையில பேசிக்கலாம்...” என அவளை விடாமல் அணைத்தவாறே உறங்க ஆரம்பித்தான்.

ஆனால் ஹர்ஷிவ்தாவோ அவனது அருகாமையில் துளியளவு தூக்கம் கூட வராமல் மனதோடு போராடிக்கொண்டிருந்தாள். நரேந்திரனிடம் இருந்து தனக்கு ஏன் அழைப்பு எதுவும் வரவில்லை என நினைத்தவள் தீட்சண்யா பற்றி ஷக்தியிடம் சொல்லவேண்டும் என நினையாமல் போய்விட்டாள்.

அவளுக்கு தோன்றவில்லையா? இல்லை தோன்றியதை செயல்படுத்த முடியவில்லையா? என அவளுக்கே பிடிபடவில்லை. ஆனால் தீட்சண்யாவை பற்றி ஷக்தியிடம் கூற அவளது ஆழ்மனம் விரும்பவில்லை என்பதே உண்மை.

தூங்குவதற்காக பிரம்மபிரயத்தனம் செய்து கண்களை மூடி வலுக்கட்டாயமாக தூக்கத்தை வரவழைக்க முயன்று வெற்றிகரமாக தோல்வியை தழுவினாள். விழிகளை மூடினாலே அதில் வந்து தீட்சண்யா தான் நின்றாள்.

அவள் மறக்க நினைக்கும் பழைய நினைவுகள் மீண்டும் மேலெழும்பவும், தன்னை மீறி நினைவு வருவதை விரும்பாமல் அதை உள்ளத்தின் ஆழத்தில் அமிழ்த்தவும் என மாறி மாறி போராட அதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு மூச்சடைக்க தன் உடலை முறுக்கினாள்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஷக்தி அவளின் அசைவை உணர்ந்து அவளின் தலையை கோதியவன், “தூங்குடா தேனு...” என மென்மையாக வருடியும் விட அந்த நேரத்தில் அவளுக்கும் அது தேவையாக இருந்ததோ? சிறிதுநேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் தானும் உறங்க தொடங்கினாள்.

மறுநாள் வழக்கம் போல விடிய காலையிலேயே செல்வமும் சரஸ்வதியும் புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைக்க வந்துவிட்டனர். கோவிலுக்கு சென்றுவிட்டு அப்படியே நிஷாந்தின் வீட்டிற்கும் சென்று விருந்தை முடித்துக்கொண்டு கிளம்புகையில்,

“ஹர்ஷூ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன். அதுவரை நிஷாந்த் கூட இரு. சரியா?...” என்றவனுக்கு சந்தோஷமாக தலையாட்டினாள் ஹர்ஷூ.

அவளது வேகத்திலேயே அவனுக்கு புரிந்து போனது. இனி நிஷாந்த் பாடு படு மோசம் என்பது. ஆனால் அவனால் ஹர்ஷூவை அழைத்துகொண்டு செல்ல இயலாது. புருஷோத்தமன் அவனிடம் வெளியில் எங்கேயாவது தனியாக பேசவேண்டும் என்றும், முக்கியமாக ஹர்ஷூவோடு வரவேண்டாம் என்றும் காலையிலேயே சொல்லியிருந்தார்.

அதை ஹர்ஷிவ்தாவிடம் கூறமுடியாதே? எதற்கு தன்னை தவிர்க்கிறார்? என கேட்டால் என்ன பதில் சொல்வது என நினைத்தவன் அதைப்பற்றி பேசாமல் வெறுமனே வெளியே செல்கிறேன் என்று மட்டும் கூறி வெளியேறினான்.

நேராக அந்த ரெஸ்டாரெண்ட்டினுள் நுழைந்தவன் புருஷோத்தமன் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி சென்றான்.

“வாட் புருஷ்?... யாருக்கும் தெரியாம பேசற அளவுக்கு என்ன விஷயம்?...” என வந்ததும் வராததுமாக கேள்வியை எழுப்ப,

“கொஞ்சம் பொறுமையா கேளேண்டா. பேசத்தானே வர சொல்லிருக்கேன். அதுக்குள்ளே படபடக்காதே. இரு, ஜூஸ் சொல்லிருக்கேன் வரவும் குடிச்சுட்டே பேசலாம்...” என பேசியவரது முகத்தில் அப்பட்டமான கவலை ததும்பியது. ஜூஸ் வரும் வரை இருவரிடமும் மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.

சிறுது நேரத்தில் பேரர் வந்து ஜூஸ் வைத்து விட்டு நகரவும் தனக்கொன்றை எடுத்துகொண்டு ஷக்தியின் புறம் ஒன்றை நகர்த்தியவர்,

“எடுத்துக்கோ ஷக்தி. முதல்ல குடி...” அவரது பேச்சை மறுக்காமல் கேட்டவன் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

அவனுக்கு தெரியும் ஹர்ஷூவை வேண்டாம் என்று சொல்லியதிலேயே கொஞ்சம் விளங்கியது. அவளை பற்றித்தான் பேச நினைக்கிறார் என்பது. எதுவாக இருப்பினும் அவரே கூறட்டும் என அமைதியாக இருந்தான்.

அவனை பேசாமல் இருக்க சொன்னவரே அவனின் அமைதியை பொறுக்கமுடியாமல், “என்ன ஷக்தி ஒன்னும் பேசாம இருக்க?...”

“முதல்ல நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்கப்பா. அதுக்கப்பறமா என்ன பேசறதுன்னு பார்க்கலாம்...” என்றவன் குரல் சாதாரணமாக இருந்தாலும் புருஷோத்தமன் இப்போதிருக்கும் மனநிலையில் அவருக்கு அது அந்நியமாக ஒலித்தது போல ஒரு பிரம்மையை தோற்றுவித்தது.

“எல்லாம் ஹர்ஷூவை பத்திதான் ஷக்தி...” அவன் ஏதாவது கேட்பான என்பது போல ஷக்தியின் முகத்தி பார்க்க அவன் வாயையே திறக்கவில்லை.

இனியும் பேசாமல் இருப்பதில் அர்த்தமில்லை என உணர்ந்தவர், “நேத்து மிட்நைட் நீங்க ரெண்டுபேரும் தனித்தனியா வெளியே போனதை நான் பார்த்தேன் ஷக்தி...” அவன் அதிர்ச்சி அடைவான் என எதிர்பார்த்தவரது மனதில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஷக்தியோ எந்தவிதமான பாவனையையும் முகத்தில் காட்டாமல் வெறுமனே, “ம்ம்..” என்று மட்டும் சப்தம் எழுப்பினான்.

“கொஞ்ச நேரத்திலேயே நீ மறுபடியும் அவளோடு ஒண்ணா வீட்டுக்கு வந்ததையும் பார்த்தேன் ஷக்தி...”

“இப்போ என்ன சொல்ல வரீங்கப்பா? நேரடியா சொல்லுங்க...”

“எனக்கு உன்னோட வாழ்க்கையை, எதிர்காலத்தை நினைச்சு கொஞ்சம் குழப்பமாவும், கவலையாவும் இருக்கு ஷக்தி. அவசரப்பட்டு ஹர்ஷூவை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டோமேன்னு இப்போ மனசு கிடந்து அடிச்சுக்குது. தப்புப்பண்ணிட்டோமோன்னு நினைக்கிறேன் ஷக்தி...” என தன் மனதில் இருந்தவற்றை கொட்டித்தீர்த்தார்.

அவரை தீர்க்கமாக பார்த்தவன், “நீங்க எங்களை பார்த்தது எனக்கு தெரியும். என்னோட எதிர்காலத்தை பத்தி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது நானா தேடிக்கிட்ட வாழ்க்கை. அதுவும் அவளை விரும்பி அவளோட குணநலன்களை தெரிஞ்சிக்கிட்டு காதலிச்சு பிடிவாதமா கல்யாணம் பண்ணிக்கிட்டவன் நான்...”

“இல்லைப்பா, நான் என்ன சொல்றேன்னு...”

“நான் பேசி முடிச்சிடறேன்ப்பா. நீங்க தானே எனக்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஹர்ஷூவை கல்யாணம் செய்துக்க சொல்லி சம்மதம் கேட்டீங்க? அப்போவே நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சு மேரேஜ் முடிஞ்சதுக்கப்பறம் ஹர்ஷூவை பத்தி தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?...”
 
Top