Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 1 ( Re-run )

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 1

அந்திமாலை வேளையில் கோவை மாநகரின் முக்கியஸ்தர்கள் வசிக்கும் அந்த பெரிய வீதியில் பரமேஷ்வரனின் வீட்டின் முன்னால் ஹோண்டா கார் ஆவேசத்தோடு கீரிச்சிட்டு நின்றது. அதிலிருந்து இறங்கிய திருவேங்கடத்தின் முகத்தில் அக்கினியின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிந்தது.

வாட்ச்மேன் வைத்த வணக்கத்தை கூட பெரும் முறைப்போடு உதாசினப்படுத்திவிட்டு விடுவிடுவென அந்த பெரிய வீட்டை நோக்கி உள்ளே நடந்தார்.

அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி சகுந்தலா முகத்திலும் அதே கோவம் தாண்டாமாடியது. அதையும் மீறி அவரது முகத்தில் எதுவும் எல்லைமீறி கலவரமாகிவிடுமோ என்ற அச்சமும் சிறிதளவு ஒட்டியிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், “டேய் பரமு. டேய் வெளில வாடா. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்காம போகமாட்டேண்டா...” என காட்டுத்தனமான கத்தலில் பூஜை அறையிலிருந்து சற்று பதட்டமாக வெளியே வந்தார் பரமேஷ்வரன்.

பரமேஷ்வரன் கோவை மாநகரின் டெக்ஸ்டைல் மில், மற்றும் ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷாப் ஒன்றையும் நிறுவி அதை திறம்பட நடத்தி வரும் தொழிலதிபர். அவரின் மனைவி சுந்தரபரணி. வெளியில் இவரது ராஜ்ஜியம் என்றால் வீட்டினுள் சுந்தரபரணியின் ஆட்சி மட்டுமே. மனைவியின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாதவர்.

சுந்தரபரணியே பலமுறை கண்டித்தும் பரமேஷ்வரன் கேட்காத அலட்சியப்படுத்திய ஒரே விஷயம் தன் செல்ல மகளின் சுதந்திரத்தில் மட்டுமே. அவளின் கண்ணசைவில் கட்டுண்டு நிற்பவர். இப்போது அதுவே அவருக்கு வினையாக நிற்கிறது மகளின் உருவில்.

அதற்குள் சமையலறையிலிருந்து வெளியே வந்த பரமேஸ்வரின் மனைவி சுந்தரபரணி, “அடடே!...” வாங்க அண்ணே. வா சகு. எப்டி இருக்கீங்க?... கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?...” என்று கேட்டதுதான் தாமதம் படபடவேட பொரிந்து தள்ளிவிட்டார் திருவேங்கடம்.

“இங்க பாரும்மா. இந்த அண்ணே தங்கச்சி எல்லாம் இனிமே ஒத்துவராதும்மா. அப்டி கூப்பிடவும் கூப்பிடாத. இனிமே இவனை என்னோட உயிர் நண்பன்னு சொல்லிக்கவே மாட்டேன். பொண்ணா பெத்து வச்சிருக்கீங்க?...” என ஆக்ரோஷமாக பேசியவரின் முகத்திலும் பேச்சிலும் இருந்த பேதத்தை உணர்ந்த பரமேஸ்வரன் மேலும் பதட்டமானார்.

“டேய் திரு. என்னடா? எதுக்குடா இவ்வளோ கோவமா இருக்க? என்ன நடந்துச்சுடா?...”

“இன்னும் ஒன்னும் நடக்க போறதில்லை. கல்யாணம் நின்னு போச்சு. அதுவும் உன் பொண்ணால. எங்க உன் பொண்ணு?...” என கேட்டதும்,

முதலில் தடுமாறிய பரமேஷ்வரன் பின் நொடியில் சுதாரித்து, “அவ வெளில போய்ருக்கா. இப்போ வர நேரம் தான். என்கிட்டே சொல்லுடா...” என்றவரை இகழ்ச்சியாக பார்த்தவர்,

“விளக்கு வைக்கிற நேரமாகிடுச்சு. இன்னும் வீட்டுக்கு வரலை. என்ன லட்சணத்துல வளர்த்து வச்சிருக்க பாரு உன் பொண்ணை?...” என தானும் அவளை சொந்த மகளாக பாவித்து வளர்த்ததை அப்போதைய நேரத்தில் தனக்கு வசதியாக மறந்துவிட்டு தன் நண்பனின் இதயத்தை வார்த்தைகளை கொண்டு குத்திட்டீயாக கிழித்தவர் அத்தோடு நிறுத்தாமல்,

“நான் சொல்லவா அவ எங்க இருப்பான்னு?... இந்நேரம் ஏதாவது ஒரு வீட்டோட சுவரேறி குதிச்சு அங்க நடக்கிறத விஷயங்களை நோட்டம் விட்டு அவளோட கேமராலையும், செல்போன்லையும் ரெக்கார்ட் பண்ணிட்டு இருப்பா. அந்த வீட்டுக்கும் ஒரு நாள் குண்டு வைக்கிறதுக்கு. எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணித்தொலைச்சியோ?... உனக்குன்னு வந்து பொறந்திருக்கா பாரேன்!!!...”என தன்னால் முடிந்தளவு பரமேஷ்வரனை காயப்படுத்தி தன் மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றார் திருவேங்கடம்.

அவரது எகத்தாளமான பேச்சில் கலவரமாகி, “என்னாச்சு சகு?... எப்படி கல்யாணம் நின்னு போச்சு. இன்னும் பத்துநாள் தானே இருக்கு கல்யாணத்துக்கு?.இதுல என் பொண்ணு என்ன பண்ணினா?...” என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்ட சுந்தரபரணியை முறைத்த சகுந்தலா,

“என்ன பண்ணினாளா?... போனமுறை என்ன செஞ்சாளோ அதைத்தான் இந்த முறையும் செஞ்சிருக்கா உன் பொண்ணு. என்ன ஒரு வித்யாசம் போனமுறை யாருக்கு தெரியிறதுக்கு முன்னால வாய் வார்த்தையா பேசி முடிச்ச கல்யாணத்தை நிறுத்தினாள். இந்த முறை நிச்சயம் பண்ணி ஊருக்கே பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைச்சதுக்கு பின்னால நிப்பாட்டி எங்களோட மானம், மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் மொத்தமா அழிச்சுட்டா. அவளுக்கு நாங்க என்ன பாவம் செஞ்சோம்?...” என திருவேங்கடத்திற்கு சற்றும் குறையாத கோவத்தோடும் வேகத்தோடும் சுந்தரியை பார்த்து கேட்டார் சகுந்தலா.

“பார்க்கிற சம்பந்தத்தை எல்லாம் தட்டிவிட்டுட்டே இருந்தா என் பிள்ளைக்கு எப்போ கல்யாணம் நடக்கிறது?... அப்படி என் பிள்ளை மேல என்னதான் கோவம் உன் பொண்ணுக்கு?... அவனோட கல்யாணத்தை நிறுத்துறதுல இவளோ ஆர்வமா இருக்கா?...” என கண்ணீரோடு கேட்ட சகுந்தலாவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலைகவிழ்ந்து நின்றிருந்தார் சுந்தரபரணி.

அவருக்கு தெரியும் தன் மகளின் செயலுக்கான காரணம் என்னவென்று. அதை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையே!!!

பரமேஸ்வரனும், சுந்தரபரணியும் தம்பதி சகிதமாக அமைதியாக நிற்பதை பார்த்த திருவேங்கடம், “இவங்ககிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு தெரியுமே சகுந்தலா. அந்த அதிகபிரசங்கி மட்டும் என் கண்ணுல சிக்கட்டும். அடுத்து என்ன நடக்குதுன்னு பாரு. இதுதான் என்னோட கடைசி எச்சரிக்கை. இதுக்கு மேலயும் உன் பொண்ணு என் பையன் விஷயத்துல தலையிட்டா அடுத்து நடக்கிற கதையே வேற. நியாபகம் இருக்கட்டும்...” என சுட்டுவிரலை நீட்டி எச்சரித்தவர் வாயிலை நோக்கி சென்றார்.

“ஹப்பாடா!!! நல்லவேளை கிளம்பிட்டாரு...” என்ற பாவனையை சுந்தரபரணி தன் முகத்தில் கொண்டுவர முயன்ற போது பாதி வழியில் திடுதிப்பென்று திரும்பிய திருவேங்கடத்தை பார்த்து விழி பிதுங்கி நின்றார். எங்கே தான் நினைத்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ என்ற படபடப்பே அவரின் முகத்தை அவருக்கு சாதகமாக பதட்டமாக வைத்துக்கொண்டு அவரை காப்பாற்றியும் விட்டது.

வேகமாக திரும்பியவர், “பரமேஷ்வரா இத்தோட நம்மோட நட்பு முறிஞ்சு போச்சு. என் பிள்ளையை விட எனக்கு வேற யாரும் பெருசில்லை. அவனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும். இனி நீ யாரோ, நான் யாரோ. நமக்குள்ள எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இனி நண்பன்னு சொல்லிக்கிட்டு என்னை தேடி வந்திடாதே...” என கறாராக சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே கிளம்பியும் விட்டார்.

திருவேங்கடத்திற்கும், பரமேஷ்வரனுக்கும் பால்ய காலத்திலிருந்து தொடர்ந்த நட்பு இப்படி வேரோடு சாய்க்கப்படுமென்று கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் அதற்கு தான் பெற்ற செல்லமகளே காரணமாக இருப்பாள் என்று எண்ணிப்பார்க்கவுமில்லை. இனி அதை எண்ணி வருத்துவது பிரயோஜனமற்றது என நினைத்துக்கொண்டார்.

அதுவரை மௌனம் காத்த பரமேஷ்வரன் தன் மனைவி தன்னையே நோக்குவதை புரிந்து திருவேங்கடத்தின் கார் கிளம்பியதை உறுதிபடுத்திக்கொண்டு தாம்தூம் என குதிக்க ஆரம்பித்தார்.

"பரணி, எங்க போய் தொலைஞ்சா உன் பொண்ணு?... இன்னைக்கு வரட்டும் வச்சிக்கறேன். செல்லம் குடுத்து குடுத்து கெடுத்து வச்சிருக்கிற அவளை..." என்றவர் சுந்தரபரணியின் முறைப்பை பார்த்து அடங்கியவராய்,

"உன்னை சொல்லியும் தப்பில்லை பரணி. அவளோட சேர்க்கை சரியில்லை. எப்போப்பாரு அந்த தடியனோடையே சுத்திட்டு இருக்கா. இன்னைக்கு அவனுக்கும் சேர்த்து கச்சேரி நடத்துறேன். அப்போதான் ரெண்டும் அடங்கும்..." என உள்ளடங்கிய குரலில் பரணிக்கு பவ்யமாக பதில் கூறினார் பரமேஷ்வரன்.

பரணியோ அவரது பேச்சில் சற்றும் கவனமில்லதவராக டைனிங் டேபிளை நோக்கி சாவாகாசமாக சென்று அங்கிருந்த தண்ணீரை அருந்தியவர் அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டார். இதில் கடுப்பான பரமேஷ்வரன்,

“பரணி நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்?... நானே நம்ம பொண்ணை சரியா வளர்க்கலைன்னு அந்த திருவேங்கடம் சொல்லிட்டு போய்ட்டானேன்னு வருத்தத்துல இருக்கேன். நீ பாட்டுக்கு கண்டுக்காம போனா என்ன அர்த்தம்?...” என ஹாலில் இருந்தவாறே சத்தமாக கேட்டார்.

“இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க? அவங்க பேசினது தான் தப்பா?... அப்போ உங்க பொண்ணு செய்யிறதெல்லாம் சரின்னு சொல்றீங்களா?... ப்ச். இதை பேசி எந்த பயனும் இல்லை. அதை விடுங்க. நீங்க கடைக்கு போகலையா?...” என மேலும் அவரின் பொறுமையை சோதிக்கவென எதிர்க்கேள்வி வேறு கேட்டு வைத்தார்.

“என்ன பேச்சு இது பரணி? நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரிஞ்சும் இப்படி கேட்கலாமா நீ?...”

“எல்லாம் தெரியுது. அதுக்கு இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க? நம்மபொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?... நீங்க வேற சும்மா எதாச்சும் பேசனுமேன்னு பேசாதீங்க. எனக்கும் திரு அண்ணா பேசினதுல வருத்தம் தான். இதுல நாம என்ன செய்ய முடியும்? பொண்ணை நம்ம பேச்சை கேட்கிறது போலவா வளர்த்திருக்கோம்?...” என்று தன் கணவர் செய்த தவறுக்கு பெருந்தன்மையாக தன்னையும் சேர்த்தே குற்றவாளி ஆக்கிக்கொண்டார் சுந்தரபரணி.

“என்ன பரணி நீ? நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆனா எல்லாம் தானா சரியாகிடும். நீ அதையெல்லாம் நினச்சு கவலைப்படாதே. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வராங்க. அதனால நாம அதுக்கு வேண்டிய வேலையை கவனிப்போம். இன்னும் கொஞ்ச நேரத்துல பட்டுபுடவைங்க வந்திடும். நாளைக்கு என் பொண்ணு சும்மா தேவதை போல ஜொலிக்கணும். அது உன் பொறுப்பு...” எனன்றார்.

சுந்தரபரணியை திசைதிருப்ப எண்ணி அவர் பேசியது மேலும் பரணியை கவலைக்குள் ஆக்கியது. அவரது கவலை என்னவென்று பரமேஷ்வரனுக்கும் தெரியாமலில்லை. ஆனாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாதே?

“இன்னும் எத்தனை தடவைதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க? அவங்க வரதும், அதுக்கு ஒவ்வொரு முறையும் நீங்க புது பட்டுப்புடவை எடுக்கிறதும், வந்தவங்க வந்த வேகத்திலேயே பின்னங்கால் பிடறில பட தெறிச்சு ஓடுறதும் தான் வாடிக்கையாகிட்டு இருக்கே?... பட்டுப்புடவையா வீடு முழுக்க நிறையிறது தான் மிச்சம்...” என நொடித்துக்கொண்டார்.

“இல்ல பரணி. இந்த தடவை கண்டிப்பா இந்த சம்பந்தம் செட் ஆகிடும். பையனை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். அது போல நம்ம பொண்ணை பத்தியும் அவங்ககிட்ட தெளிவா எடுத்து சொல்லிட்டேன். அதனால நாளைக்கு கண்டிப்பா நம்ம பொண்ணு கல்யாணம் முடிவாகிடும். எனக்கு அப்படித்தான் தோணுது...” என சிறுகுழந்தை போல பேசியவரை பரிதாபமாக பார்த்த பரணி,

“நீங்க கனவு கண்டுட்டே இருங்க. உங்க பொண்ணு இந்நேரம் அவ வேலையை ஆரம்பிச்சிருப்பா...” என்று கடுப்பாக கூறியதும் கனிவாக சிரித்தார் பரமேஷ்வரன்.

“இல்லை பரணிம்மா. நிச்சயமா நாளைக்கு வரபோற மாப்பிள்ளையை நம்ம குட்டிம்மாக்கு பிடிக்கும் பாரேன். என்மனசு அடிச்சு சொல்லுது...” என அப்போதும் விடாமல் பேச தன் கணவரின் எண்ணமும், பேச்சும் பலிக்கபோவது தெரியாமல் சுந்தரபரணி விட்டேற்றியாக இருந்தார்.

“சரி, அதை விடுங்க. இப்போ உங்க பொண்ணு எங்க போய்ருக்கான்னு தெரியுமா? உங்ககிட்ட எங்க போறேன்னு சொல்லிட்டாச்சும் போனாளா?...” என்று கேட்ட பரணியை பார்த்து திருத்திருத்த பரமேஷ்வரனின் முழியிலேயே தெரிந்துவிட்டது.

அவரை முடிந்தமட்டும் முறைத்த பரணியிடம், “இன்னைக்கு நீ வேணும்னா பாரேன். அவ வரட்டும். நான் கண்டிக்கிறேன். என் பொண்ணு நிச்சயமா என் பேச்சை கேட்ப்பா...” என்று நம்பிக்கையில்லா குரலில் தீர்மானமாக கூறிய பரமேஷ்வரனின் மனம் தன் மகளை எண்ணி குழம்பியது.
 
“இப்போ எங்க, எந்த ஏழரையை இழுத்துவைக்க போய்ருக்காளோ?... கடவுளே என் பொண்ணுக்கிட்ட இருந்து எல்லாரையும் காப்பாத்து...” என்று வேண்டுதல் வைத்தார் மனதிற்குள்ளேயே.

-------------------------------------------------------------------------------​

அந்த பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடர்ந்த இருள் கவிழ்ந்திருந்தது. அதன் பார்க்கிங் அருகில் இருந்த மரத்தின் பின்னால் தீவிரமான முகச்சுழிப்போடு ஹரியும், ஹரியின் விழிகளில் மின்னும் தீவிரத்தை பார்த்து மிரண்ட முகத்தோடு நிஷூவும் நின்றிருந்தனர்.

“ஹரி கொஞ்சம் யோசிடா, கண்டிப்பா நீ இதை செய்துதான் ஆகனுமா? யாராச்சும் நம்மளை பார்த்துட்டா பெரிய பிரச்சனை ஆகிட போகுது...” என எச்சிலை கூடி விழுங்கியவாறு அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே . அதில் கடுப்பான ஹரி,

“இங்க பாரு நிஷூ, இந்த எஸ்கேபிசம் தானே ஆகாதுன்னு சொல்றேன். அதென்ன நான் மட்டும்? நீயும் சேர்ந்துதான் எனக்கு துணையா இருக்க போற. நாம ரெண்டுபேரும் தான் இதுக்கு பொறுப்பு...” என நிஷூவின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து சொல்ல ஹரியின் பேச்சில் நிஷாவிற்குதான் தொண்டை வறண்டது.

“இங்க நடக்கபோற விஷயம் மட்டும் அந்த பரமேஸ்வரருக்கு தெரிஞ்சா என்னை உயிரோட குழி தோண்டி புதைச்சிடுவாரே. இன்னைக்கு எனக்கு சங்குதான். ஊ ஊ ன்னு ஊதிடுவானுங்க. இந்த ஹரி பிசாசும் அடங்கித்தொலையமாட்டீங்குது...” என தனக்குள்ளேயே பேசி பீதியாகி கொண்டிருக்க, அதற்குள் ஹரி தன் திட்டத்தை இன்னொரு முறை மனதில் ஓட்டி பார்த்துவிட்டு,

“ஓகே நிஷா, அந்த ரூம் தானே, நான் மேலே போறேன், நீ இங்க கவனமா இரு. யார் கண்ணிலையும் சிக்கிடாம ஓரமா போய் நில்லு. நான் வந்த வேலையை முடிச்சிட்டு வரேன்...” என்று நகரப்பார்க்க,

“ஹரி நான் சொல்றதை கேளேன் ப்ளீஸ். இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகலை. நாம நல்லா யோசிச்சு வேற எதாச்சும் ஐடியா சிக்குதான்னு பார்ப்போமே. வா வீட்டுக்கு போகலாம். அப்பா காத்திட்டு இருப்பாங்க...” என்று காலில் விழாத குறையாக கெஞ்ச,

“இங்க பாருடி நிஷூ செல்லம்...” என்ற ஹரியை இடைமறித்த நிஷூ,

“வாடி போடின்னு சொன்ன பல்லை பேத்துடுவேன்...” என்று கோபமாக சீற அதை பார்த்த ஹரி,

“ஹ்ம். நான் உன்னை வாடி, போடின்னு சொல்றதை நிறுத்தப்போறதும் இல்லை. அதுக்கு நீ ஆட்சேபனை செய்யிறதை தடுக்கப்போறதும் இல்லை. சரி, சரி, அதை விடு. நல்லா விசாரிச்சா தான. ரூம் மாறிடலையே...” என மீண்டும் தன் முகத்தில் தீவிரத்தை கொண்டுவந்து ஹரி கேட்க,

“ஆமா, அந்த ரூம்தான். மத்யானம் ரிசப்ஷன்ல அவனோட பேர் சொல்லி விசாரிச்சுட்டேன். அதுக்கப்றமா இந்த பால்கனியில அவனை நான் பார்த்தேன். கரெக்ட் தான்...” என்று சலிப்பாக கூறிவிட்டு திரும்பிய நொடியில் ஹரி தன் முகத்தை குல்லாவை வைத்து மூடிக்கொண்டு அங்கிருந்த பைப்லையனை பிடித்துக்கொண்டு சரசரவென மாடி ஏறுவதை பார்த்து வெறுத்துப்போனான்.

“முகமூடி திருடனாட்டம் மடமடன்னு மேல என்னமா ஏறிடுச்சு இந்த பிசாசு? ஹ்ம் கொஞ்ச நஞ்சமா. மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் ஆச்சே. நம்ம தலையெழுத்து இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ?...” என்று நொந்தபடி ஹரி நான்காம் மாடியில் அந்த பால்கனியில் குதித்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து மறைவான இடத்தை நோக்கி அகன்றது நிஷூவின் உருவம்.

மாடியில் அந்த அறையின் பால்கனியின் கதவை உட்புறமாக அழுத்தமாக தள்ள அது பூட்டாமல் லேசாக சாற்றி வைத்திருக்க கதவு திறந்துகொண்டது.

இரவு விளக்கொன்றிலிருந்து மெல்லிய வெளிச்சம் அந்த அறை முழுவதுமாக கசிந்து பரவி இருந்தது.

ஹரி துரிதமாக ஓசை எழுப்பாமல் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த உருவத்தை நெருங்கி தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து முன்னேற உருவத்தின் அசைவில் பதட்டமாகி தன்னையுமறியாமல் கத்தியை ஓங்கிக்கொண்டு அதன் மேல் பாய்ந்துவிட அவ்வுருவம் திமிறியது.

“ஹேய்!!! கத்தின குத்திடுவேன். மவனே அசையாம நான் சொல்றதை கேட்டுட்டு இருக்கனும்...” என்ற ஹரியின் குரலில் அவ்வுருவம் தன் அசைவை நிறுத்தி பேச்சை கவனிக்க ஆரம்பித்தது. பேச்சை மட்டுமல்ல. ஹரியின் முகத்தையும் கூட.

அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ஹரி மிதப்பாக, “ஹ யார்க்கிட்ட? ஏய் சிலிண்டர். உன்கிட்ட நேத்து போன்ல என்ன சொன்னேன்? ம்ம் சொல்லுடா என்ன சொன்னேன். எனக்கு உன்னை பிடிக்கலை. அதனால பொண்ணு பார்க்க வராதன்னு சொன்னேனா இல்லையா?...” என ஹரி என்ற ஹர்ஷிவ்தாவர்ஷினி கேட்டதும் அவ்வுருவம் பொதுவாக தலையை மேலும் கீழுமாக போனால் போகட்டுமென்று ஆட்டிவைத்தது.

ஹர்ஷிவ்தாவர்ஷினி பரமேஷ்வரனின் செல்ல புதல்வி. கண்டிப்பான சுந்தரபரணியின் வயிற்றில் பிறந்த ஆழிப்புயல். யாருக்காகவும், எதற்காகவும் தேங்கி நிற்காமல் கட்டுக்கடங்காமல் பாயும் காட்டாற்று வெள்ளமான இவளை தன் அன்பால் கட்டுப்படுத்தி அமைதியாக நிற்கவைத்த ஒரே ஒரு நபர் உண்டு. அவர் இப்போது?

“என்னடா தலையை ஆட்டுற? கரப்பான்பூச்சிக்கும், கட்டெறும்புக்கும் பயப்படற உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா? அதுவும் தி க்ரேட் டெக்ஸ்டைல் ஓனர் பரமேஷ்வரனோட பொண்ணு கேட்குதோ?...” எனவும் அவ்வுருவத்தின் விழிகள் மின்னியது.

“நானும் எத்தனை தடவைத்தான் எங்கப்பாம்மாவுக்காக அலங்காரம் பண்ணிட்டு வந்து நிக்கிறதும், வரவங்களை மிரட்டி விரட்டுறதும்னு எனக்கே போர் அடிச்சுப்போச்சு. உன்னைப்பத்தி உன் ஊருக்கே வந்து விசாரிச்சேன். உன்னோட ஆக்டிவிட்டீஸ் எல்லாமே எனக்கு அத்துப்படி. சோ, நீ எனக்கு செட் ஆகமாட்ட. புரிஞ்சதா?...”என கேட்டும் அவ்வுருவம் பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க அதில் கடுப்பானவள்,

“என்னா லுக்கு? நாளைக்கு பொண்ணை பார்க்கறேன் அவ கண்ணை பார்க்கறேன்னு அரை இன்ச்சுக்கு மேக்கப் போட்டுட்டு வந்து நின்ன கொன்னுடுவேன் ஜாக்கிரதை. காலையில எழுந்ததும் சொல்லாமாக்கொல்லாம உன்னோட அப்பாம்மாவை கூட்டிட்டு ஓடிடனும். மீறி என்னை பார்க்க வந்தா உன் உயிருக்கு உத்திரவாதமில்லை சொல்லிட்டேன். என்னை பத்தி இப்போ நல்லா புரிஞ்சிருக்குமே...” என்று அவ்விடத்தை விட்டு எழுந்தவள் அப்போதான் காற்றில் பறக்கும் தன் முடியை கவனித்தாள்.

பின் அலட்சியமாக, “உன்னை பார்க்க வரதை யாரும் பார்த்திட கூடாதுன்னு தான் குல்லா போட்டுட்டு வந்தேன். எதுலயோ சிக்கி இழுத்திடுச்சு போல. மத்தபடி உனக்கு பயந்து இல்லை. அப்புறம் நீ உன் ஊருக்கு போனதுக்கப்பறமா தான் அங்க இருந்து போன்ல எங்கப்பாக்கிட்ட உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்லனும். புரியுதா?...” என்று கட்டளையாக கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் பால்கனியை அடைந்து பைப்லையனை தொற்றி வந்த வழியே இறங்கிப்போனாள்.

கீழே இறங்கியவள் நிஷூ அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி சென்று காதினருகே குனிந்து, “ஐயோ திருடன், திருடன்...” என கொஞ்சம் சப்தமாகவே கூவ, ஹரி சென்ற சிறிதுநேரத்தில் தூக்கம் கண்களை சுழற்றிய வேகத்தில் அப்போதுதான் கண்ணயர்ந்த நிஷூ அவளது திருடன் என்ற விளிப்பில் பதறியடித்து எழுந்து,

“ஐயோ!!! அது நான் இல்லை... அது நான் இல்லை...” என தன் பங்குக்கு பதற அதைப்பார்த்து வாய்விட்டு சிரித்தாள் ஹரி.

“அச்சோ நிஷூக்குட்டி பயந்துக்குச்சா?...” என அப்பாவியாக கேள்விகேட்க,

“கொன்னுடுவேன். இந்த நிஷூக்குட்டின்னு சொல்றதை முதல்ல நிப்பாட்டு. ஏன் என்னோட பேரை இப்படி கொலை செய்யற?...” என இப்படி பதறடித்துவிட்டாளே என்ற கடுப்பில் காயவும்,

“ஏன் நிஷூக்குட்டிக்கு என்ன குறைச்சலாம்? பேரை பாரு பேரை. நிஷாந்தாம் நிஷாந்த். பொண்ணோட பேரை பந்தாவா பாதி வச்சிக்க மட்டும் தெரியுது. கூப்பிட்டா குத்தமாக்கும். போடா டேய்...” என விட்டேற்றியாக கூறியவள் அப்போதுதான் நியாபகம் வந்தவளாக,

“ஆமா, திருடன்னு கத்தவும் நான் இல்லை, நான் இல்லைன்னு கூவினையே. நான் சிக்கிட்டா என்னை கழட்டிவிட்டு தப்பிச்சிடலாம்னு ப்ளான் தானே?...” என்று மடக்க,

அவனும் அசராமல், “ஆமா, அப்டியே தப்பிக்கணும்னு நினச்சா மட்டும் அப்பாவும் பொண்ணும் விட்டுடுவீங்க பாரு...” என உங்களை பற்றி எனக்கு தெரியும் என்பது போல பேசியவன்,

“அதை விடு. என்னாச்சு உன் சிலிண்டர் மேட்டர்? என்ன சொல்லுச்சு அந்த பேரல்?...”எனவும்,

“அவன் என்ன சொல்றது? நான் தான் அவனை பேசவே விடலையே. கத்தியோட என்னை பார்த்து பையன் மிரண்டுட்டான். இதுக்குமேலையும் நாளைக்கு வந்தான்னா அவனுக்கு குடுக்கிற காபியில பேதி மாத்திரையை கலந்திடுவேன். பெரிய தியாகியா அவன்? ஆனா வரமாட்டான்னு தான் நினைக்கிறேன் நிஷூ. என்னை மீறி எதுவும் நடந்திடுமா? நடக்க விட்டுடுவேனா?...” என கெத்தாக தன்னையே பெருமை பீற்றிக்கொண்டு பேச,

“போதும்மா தாயே. இப்போவே மணி இரண்டரை ஆகுது. வா கிளம்புவோம். உங்கப்பா நாளைக்கு என்ன சொல்லப்போறாரோ?. என்னைக்குத்தான் இந்த ராத்திரி உலாவுக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகுதோ?...” என புலம்பியபடி அவளை இழுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஹோட்டலை விட்டு வெளியேறினான் நிஷாந்த்.

ஹரி அகன்ற பின்னால் பால்கனிக்கு வந்த அவ்வுருவத்தின் இதழ்களில் மென்னகை உருவானது. அதுவரை அடக்கிவைத்திருந்த சிரிப்பை கட்டவிழ விட்டவன், “யம்மாடியோவ். என்னா பொண்ணுடா சாமி. ஷக்தி உன் பாடு திண்டாட்டம் தான் போல?...” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

தலைமுதல் போர்த்திருந்ததால் ஹரி செய்த காரியத்தின் விளைவாக பெட்ஷீட் ஷக்தியின் விழிகளை விட்டு மட்டும் இறங்கியிருந்தது. அதனால் ஹரி ஷக்தியின் முகத்தினை பார்க்கமுடியவில்லை. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் ஹரியின் குரலை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்டவன் முகத்தை விட்டு வேறெங்கும் பார்வையை செலுத்தி தேவையில்லாமல் விரயமாக்கவில்லை. அவள் சென்றதும் அவள் வந்த காரணம் தெரிந்த நொடியிலிருந்து அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றானது.

ஒருவிதமான மோனநிலையிலேயே தன் மொபைலை எடுத்து சென்னையிலிருக்கும் தன் தந்தைக்கு அழைத்தவன் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “என்ன புருஷ் தூங்கிட்டீங்களா?...” என உற்சாகமாக கேட்டுவைத்தான்.

“ஏண்டா கேட்கமாட்ட? குரல்லையே ஒரு குதூகலம் தெரியுதே!!! என்ன விஷயம்?...” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஷக்தி என்ற கௌரவ் ஷக்திவேலின் தந்தை புருஷோத்தமன்.

“சும்மா சிம்பிள் மேட்டர் தான். நாளைக்கு விடியும் போது நீங்க இங்க இருக்கனும். உங்க ப்ரெண்ட் பரமேஷ்வரரோட பொண்ணை எனக்கு நிச்சயம் செய்ய போகனும். அதனால இப்போவே பேக் பண்ணிட்டு கிளம்புங்க. நான் சும்மா சொல்றேன்னு நினச்சு திரும்ப படுத்து தூங்கிடாதீங்க. விளைவுகள் விபரீதமாகிடும்...” பாதி மிரட்டலும் மீதி உத்தரவுமாக சொல்லிமுடித்தான்.

“டேய்!!! இது உனக்கு சிம்பிள் மேட்டரா? நான் சொன்னப்போ பொண்ணை கூட பார்க்காம வேண்டாம்னு சொன்ன?..... இப்போ என்னடா இப்படி திடுதிப்புன்னு சொல்ற?... உனக்கொன்னும் ஆகலையே?...” என பதட்டமாக கேட்க,

“நல்ல அப்பா தான் நீங்க. பெத்தபையன் ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்றேன். அதை விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க?...” என்று எகிற,

“சரிப்பா கேட்போம். கண்டிப்பா உனக்காக பொண்ணு கேட்கறேன். அதுக்குன்னு உடனேவா? கொஞ்ச நாள் போகவும் நானே ஈஷ்வர்க்கிட்ட பக்குவமா பேசி...” என்று அவர் பேச்சை முழுவதுமாக முடிக்கவிடாமல் இடையிட்டவன்,

“மிஸ்டர்.புருஷ், நான் ஒன்னும் உங்ககிட்ட அபிப்ராயம் கேட்கலை. அப்பாவா லட்சணமா எனக்காக பொண்ணு கேட்டு இந்த கல்யாணத்தை நடத்திவைங்க. இல்லைனா நான் பொண்ணை தூக்கிடுவேன்....” என்ற ஷக்தியின் குரலில் இருந்த தீவிரத்தில் சத்தியமாக நொந்தே போனார்.

“நான் சொல்றதை கேளேன். இது கல்யாண விஷயம் ஷக்தி. முதல்ல முறையா பேசனும். இந்த சம்பந்தத்துல அவங்களுக்கும் சம்மதம் இருக்கனும். அடுத்து ஜாதகம் பார்க்கனும். இன்னும் எவ்வளவோ இருக்கே?...” என்ற கெஞ்சும் குரலை அலட்சியப்படுத்தியவன்,

“நீங்க சீக்கிரமே கிளம்பி வர்றீங்க. காலையில வந்ததும் டிபன் சாப்ட்டுட்டு உங்க ப்ரெண்டை பார்த்து அவர் பொண்ணோட இல்லையில்ல. என் வருங்கால மாமனார் கிட்ட என் வொய்ப் ஜாதகம் வாங்கறீங்க. நல்ல ஜோசியரா பார்க்கறீங்க. பொருத்தமெல்லாம் சரியாதான் இருக்கும். ஈவ்னிங் நாம போய் பொண்ணை பார்த்துட்டு பேசிமுடிச்சு தாம்பூலத்தட்டு மாத்தி நிச்சயம் செய்திடுவோம். இந்த மாதக்கடைசியில கல்யாணத்தை வச்சுக்குவோம். கல்யாணவேலைக்கும் டைம் வேணுமில்ல...” என வரிசையாக திட்டங்களை வகுத்தவனை எண்ணி அடிவயிறு கலங்கிப்போனார்.

இதற்குமேல் பேசமுடியாது. இப்போதான் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் அவனே கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறான். நாமே கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்து அவனின் விருப்பப்படி நடக்க முடிவெடுத்தார்.

“ஓகே ஷக்தி. நான் இப்போவே தயாராகறேன். ப்ளைட் டிக்கெட் வேற புக் பண்ணனும்...” என இழுக்க,

ஷக்தியோ, “அதெல்லாம் பண்ணிட்டேன் புருஷ். நீங்க கிளம்புங்க...”என சந்தோஷமான குரலில் கூற அவனது இந்த அசுர வேகம் சரியா தவறா என தெரியாமலே இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நிலைக்க வேண்டுமென்று கடவுளை பிராத்தித்தபடி கிளம்ப ஆயத்தமானார்.

நாளை ஹர்ஷிவ்தாவர்ஷினியை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையோடும், உதட்டில் உறைந்திருக்கும் புன்னகையோடும் கனவில் மூழ்கிப்போனான் கௌரவ் ஷக்திவேல்.

கௌரவ் ஷக்தியின் எண்ணம் கைகூடுமா? ஹர்ஷிவ்தாவர்ஷினியின் முடிவு ஷக்திக்கு சாதகமாக அமையுமா?

நதி பாயும் ...
 
:love::love::love:

புள்ளையா குரங்கா......... என்னா ஆட்டம் காமிக்கிறா????
ரொம்ப செல்லம் கொடுக்குறாங்க போல........ அவ கல்யாணத்தையும் கெடுக்குறா...... அடுத்தவன் கல்யாணத்தையும் கெடுக்குறா.....

சக்திக்கு பேதி மாத்திரையாயா இல்லை இவளுக்கு அவன் கொடுப்பானா???
 
Last edited:

Supera iruku sis
 
Top