Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthidu 8.2

Advertisement

அப்பாவிடம் மனைவிய விட்டு
கொடுக்காமல் பேசுவது
நல்லா இருக்கு
 
“இல்லைப்பா, அவ கொஞ்சம் துடுக்குத்தனமான பொண்ணுனும், கல்யாணத்துக்கு பிடிகொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறதாகவும் தான் பரமேஷ்வரன் சொன்னான். எனக்கு அப்போவும் இப்படி ஒரு பொண்ணா இருப்பான்னு நான் நினைக்கலை. நடு ராத்திரில சுவர் ஏறி குதிச்சு வீட்டை விட்டு வெளில போய்ட்டு வரது என்ன பழக்கமோ?...” என முகச்சுழிப்போடு பேச பேச இங்கே ஷக்தி தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்று அதற்கு மேல் தாளமுடியாமல்,

“அப்பா ப்ளீஸ், இப்படி சொல்றேனேன்னு நீங்க வருத்தபடாதீங்க. இது என்னோட லைஃப், ஹர்ஷூ என்னோட மனைவி. இப்போ நீங்க இது போல பேசறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னோட அப்பான்றதால சில விஷயங்களை நான் அனுமதிக்க முடியாது. நீங்க கோவப்பட்டாலும் என்னோட மனசை நான் மாத்திக்க முடியாது. யாரா இருந்தாலும் அவளை ஒரு வார்த்தை பேச நான் அனுமதிக்கவும் மாட்டேன். எதுக்காகவும் விட்டுகொடுக்கவும் மாட்டேன். புரிஞ்சுக்கோங்க...”

“இது நீ மட்டும் சம்பந்தப்பட்டதில்லை ஷக்தி, நம்மளோட குடும்பத்தோட நிம்மதியும் இதில தான் அடங்கி இருக்கு. எனக்கு உன்னோட சந்தோஷமும் நிம்மதியும் தான் முக்கியம்...” என ஒரு தந்தையாய் தன் கவலையை கூற,

“நீங்க பேசறது சரியில்லைப்பா. அது என்னோட மனசையும், எங்க ரெண்டுபேரோட வாழ்க்கையையும் பாதிக்கும். உங்க குரல்ல ஏமாற்றம் தெரியுது எனக்கு. ஈஷ்வர் மாமா உங்களோட ப்ரெண்ட் தானேப்பா? நீங்களே அவங்களை புரிஞ்சுக்காம பேசறது தப்பு...”

“அதுவுமில்லாம நான் அவளை விரும்பி கல்யாணம் செய்துக்கிட்டவன். அவளோட இந்த செயல்கள், தைரியம், பேச்சு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவ என்னை கல்யாணம் செய்துக்கிட்டது தப்போன்னு நினைக்காத அளவுக்கு நான் அவளோட வாழனும்னு ஆசைப்படறேன். அவளை நான் அந்த அளவுக்கு விரும்பறேன். காதல் கல்யாணம் செய்துக்கிட்ட உங்களுக்கு என் மனசு புரியலையாப்பா?...” ஆதங்கத்தோடு கேட்டான் ஷக்தி.

என்ன மடத்தனம் செய்துவிட்டேன்? என் மகன், என்னுடைய மருமகள். என் குடும்பத்தை தழைக்க வைக்க வரும் தேவதையை நானே தவறாக பேசலாமா? இப்படி ஒரு எண்ணம் எனக்கு வரலாமா? அதுவும் என் மகனிடமே பேசிவிட்டேனே? என கூனிக்குறுகி போனார் புருஷோத்தமன்.

“சாரி ஷக்தி. எனக்கு உன்னோட மனசை சரிவர தெரியாம நான் பாட்டுக்கு மடத்தனமா யோசிச்சு பேசிட்டேன் ஷக்தி. மனசுல வச்சிக்காதப்பா. ஹர்ஷூ என்னோட மகளா பார்க்காம போய்ட்டேன் போல. நான் என் மகனோட வாழ்க்கையை மட்டும் தான் சுயநலமா நினச்சு பார்த்தேனே தவிர அவனோட வாழ்க்கையே என் மருமகளை சார்ந்திருக்குன்னு புரியாம பேசிட்டேன்ப்பா...” என தயங்காமல் மன்னிப்பை யாசிக்க பதறிப்போனான் ஷக்தி.

“என்னப்பா நீங்க இப்படிலாம்...”

“இல்லை ஷக்தி. இனிமே நான் கிறுக்குத்தனமா யோசிக்கமாட்டேன். என் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு மட்டும் என் பரமுக்கு தெரிஞ்சா நொறுங்கிபோவான். இனிமே நான் பார்த்துக்கறேன். நீ ஹர்ஷூவை கவனமா பார்த்துக்கோ...” என தன் நண்பனையும் நினைத்து மருகியவர் முகத்தில் கொஞ்சம் சஞ்சலம் மிச்சம் இருக்கத்தான் செய்தது.

அதை உணர்ந்தவன் போல, “சென்னை வந்தா எல்லாம் சரியாகிடும்ப்பா. நான் அவளை மாத்துவேன். என்னோட காதல் அவளை மாத்தும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு...” என இவன் திட்டம் தீட்டிகொண்டிருக்க இவனது மனைவி இவனது நம்பிக்கையை பொய்யாக்குவதில் தீவிரமாக இருந்தாள்.

“இப்போ உங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லைதானேப்பா?. ரிலாக்ஸ் ஆகிட்டீங்களா?...” என எதிர்பார்ப்போடு கேட்டவனிடம் ஆமாம் என் புன்னகையை பூசிக்கொண்டு தலையசைத்தவர் தன்னை திருவேங்கடத்தின் வீட்டில் தன்னை கொண்டுபோய் விடுமாறு கூறி ஷக்தியோடு சென்றார்.

ஹர்ஷூவோ புருஷோத்தமன் எதை நினைத்து அஞ்சினாரோ அதை தப்பாமல் நிறைவேற்ற தயாராகிகொண்டிருந்தாள். நிஷாந்த் தான் அவளிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றான்.

“சொல்லு நிஷூ, மீனுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையை பத்தி விசாரிச்சாச்சா?...”

“ஹரி, சொல்றதை கேளேன். இப்போ அதையெல்லாம் விசாரிக்க நேரமில்லை. நம்ம வீட்லையே ஆயிரம்வேலை நிறைஞ்சிருக்கு. உன்னை வேற ஊருக்கு கொண்டுபோய் விடனும். அதுக்கு சீர் பொருட்கள் எல்லாம் வாங்கனும். எவ்வளோ வேலை தலைக்கு மேல இருக்கு தெரியுமா?...”

“நீ சீர் குடுக்கிறதெல்லாம் அப்பறமா பார்த்துக்கோ. இப்போ அந்த மாப்பிள்ளையை பத்தி என்னவெல்லாம தெரிஞ்சு வச்சிருக்க? அப்பாக்கிட்ட கேட்டா வாயே திறக்கமாட்டிக்காரு. சு-ன ப-ன சுத்தம் முறைச்சே ஆளை காலி பண்ணிடுவாங்க. ராமன் அங்கிள்க்கு போன் பண்ணினேன் அவர் என்னை பேசவே விடமாட்டிக்கார். இப்போலாம் என் போனை எடுக்க கூட மாட்டிக்காருடா. மீனுக்குட்டியையும் மீட் பண்ண முடியலை...” என அவள் பாட்டுக்கு புலம்பித்தள்ள,

“எப்டி எடுப்பாரு? அவருக்கு வாய்ச்சிருக்கிற சம்பந்தம் பெரிய இடத்து சம்பந்தமா ஆச்சே. எங்க நீ உள்ள புகுந்து குழப்பி விட்டுட்டன்னா அந்த பணக்கார சம்பந்தம் கைவிட்டு போய்டுமே. அதான் மனுஷன் எஸ்கேப் ஆகிட்டே இருக்காரு. மாப்பிள்ளை சென்னை. பிக் ஷாட். பையன் நல்லா தான் இருக்கிறதா பேசிக்கிட்டாங்க. அதை தவிர வேற எதுவும் தெரியலை...”

“என்ன கொடுமைடா இது? பெரியாளுங்க அப்டினா எதுவுமே விசாரிக்காம பொண்ணை கட்டி வச்சிடுவாங்களா? நாளைக்கு எதுவும் பிரச்சனைனா அந்த பணமா வந்து தீர்த்துவைக்கும்?...” என்றவள்,

“பணம், பணம்னு போய் தானே நிறைய பேரோட வாழ்க்கையை சூனியமாக்கிடறாங்க. இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது நிஷூ. சரியான தண்டனையை வாங்கிக்குடுக்கனும். பெத்த பொண்ணை ஒரு நல்லவனுக்கு கட்டிவைக்க கூட துப்பில்லாதவங்க எதுக்குடா குழந்தை பெத்துக்கறாங்க...” என்றவள் விழிகள் அக்கினியாய் தகித்தது.

அவளின் ஆவேசத்தை தணிக்கும் விதமாக தன் தோள் சேர்த்து அணைத்துகொண்டவன் உடைந்த குரலில், “ஹர்ஷூம்மா, அதையெல்லாம் மறக்க முயற்சி பண்ணுடா...” எனவும் அவனது இந்த குரலே அவளை மீட்டெடுத்தது.

வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், “நிஷூ, மாப்பிள்ளை சென்னைனு தானே சொன்ன?...ஹுரே, சூப்பர்டா. ஆமா நான் என்னைக்கு சென்னை போகனும்?...” ஹர்ஷூ அசராமல் கேட்டதும் நொந்தேவிட்டான் நிஷாந்த்.

“ஏண்டா ஹர்ஷூ, எங்களை விட்டு போறோமேன்னு கொஞ்சம் கூட வருத்தமில்லையா?...” அவனது குரலில் மிதமிஞ்சிய கவலை இருந்தது.

“நிஷூ...” என்றவளது வார்த்தை முழுதாக வெளிவராமல் தொண்டை அடைத்தது. அதை சமாளித்தவள்,

“அட நீ வேறடா, எவ்வளோ நாள் தான் உங்களையே ட்ரில் வாங்குறது. சென்னை மக்களுக்கு நாம யாருன்னு நிருபிக்கிற நேரம் வந்தாச்சு நிஷூ. தயாரா இரு. நீயும் அங்க வந்துடு...” என கலகலத்து பேசினாலும் அவளது கண்களில் அந்த உற்சாகம் எட்டவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

எப்படியும் போக போக சரியாகிவிடும் என்று எண்ணியவனது நிம்மதியை குழிதோண்டி புதைக்கும் விதமாக சென்னை சென்றதும் தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள்.

மாலை நெருங்கியதும் ஷக்தி வந்து ஹர்ஷூவை அழைத்து சென்றான். மறுநாள் திருவேங்கடத்தின் வீட்டில் விருந்தை முடித்துகொண்டு அங்கிருக்கும் நெருங்கிய சொந்தங்களின் வீட்டிற்கு செல்வதுமாக அடுத்த ஒரு வாரமும் கடகடவென ஓடியது.

திருவேங்கடம் ஹர்ஷூவிடம் பழையபடி கலகலப்பாக பேசவில்லை என்றாலும் பாராமுகத்தையும் காட்டவில்லை. ஆனால் சகுந்தலா எப்போதும் போல அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டார். ஷக்திக்குத்தான் கொஞ்சம் சங்கடமாக போய்விட்டது.

ஆனால் ஹர்ஷூவோ திருவேங்கடத்தின் வருத்தத்தை சட்டை பண்ணாமல், “பிள்ளையை சரியா வளர்க்க முடியலை. இதுல என்னை கோவிக்கிறாங்கலாம். எல்லாம் என் நேரம். இதுக்கெல்லாம் நீதான் கௌரவ் காரணம். அத்தைக்காக வந்தேன். நல்ல வேளை அந்த மூஞ்செலி இங்க இல்லை. இல்லைனா செவில்லையே நாலு குடுத்திருப்பேன்...” வரும் வழியில் கௌரவிடம் புலம்ப அவனது பிபி எகிறியது.

அவனுக்குமே இப்போது ஹர்ஷூவின் பேச்சில் , “நல்லவேளை ப்ருத்வி இல்லை அங்கே. இருந்திருந்தா அவனை கூட கண்ட்ரோல் பண்ணிடலாம். ஆனா என் பொண்டாட்டி சண்டிராணியை. ம்ஹூம். யாருக்கும் அடங்கமாட்டாளே?...” என நொந்துகொண்டான்.

சென்னை கிளம்பும் நாளில் காலையிலிருந்தே பரணியின் மனம் மகளின் பிரிவை எண்ணி கலங்கிப்போய் இருந்தது. பரமேஷ்வரனை சொல்லவா வேண்டும்? அழுகாத குறைதான். ஹர்ஷூவை எங்கும் நகரவிடாமல் கையை வருட, தலையை வருட என தன் அருகிலேயே உட்கார வைத்திருந்தார்.

அவரது இந்த பாசத்தில் அனைவருக்குமே பயம் தொற்றிக்கொண்டது. ஹர்ஷூ கிளம்பவும் பரமேஷ்வரனை எப்படி சமாளிக்க போகிறோம் என கவலையும் ஒட்டிக்கொண்டது.

அனைத்து சீர்வரிசைகளும் எடுத்து வைத்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புருஷோத்தமனும் திருவேங்கடமும் சகுந்தலாவோடு முன்னால் கிளம்பிவிட்டனர்.

செல்வம் தன்னால் முடிந்தளவிற்கு அறிவுரை கூறி ஹர்ஷூவின் பொறுமையை சோதித்தார். சரஸ்வதி புன்னகையோடு போய் வா என்பதோடு நிறுத்திகொண்டார். அதுதான் அவருக்கும் சேர்த்து செல்வமே பேசிவிட்டாரே.

ஹர்ஷூவும்,ஷக்தியும் பரணி, பரமேஷ்வரனின் காலில் விழுந்து ஆசி வாங்கி நிமிரும் போது ஹர்ஷூவின் விழிகளை நீர் நிறைத்திருந்தது.

அனைவருக்குமே இது ஆச்சர்யம் தான். நான்கு வருடங்களுக்கு முன் அழுத ஹர்ஷூவின் கண்கள் அதன் பின் லேசாக கலங்கியது கூட இல்லை. இப்போது பெற்றோரின் பிரிவை நினைத்து கலங்குகிறதே என அந்த துயரத்திலும் வியக்காமல் அவர்களால் இருக்கமுடியவில்லை.

அனைவரிடமும் பிரியா விடை பெற்று காரில் சென்னையை நோக்கி தங்களின் வாழ்க்கை பயணத்தை துவங்கினார்கள் ஷக்தியும் ஹர்ஷிவ்தாவும். அவர்களை வழியனுப்ப உடன் சென்றான் நிஷாந்த். அதிகாலை கிளம்பியவர்கள் மாலை மயங்கும் வேளையில் சென்னையை வந்தடைந்தனர்.

எந்த சென்னை வந்தால் புது மனிதர்களோடு இருந்தால் ஹர்ஷிவ்தாவின் மனநிலை மாறும் என நம்பிக்கை கொண்டிருந்தானோ? அந்த சென்னை அவளை பழிவாங்க காத்திருப்பதை அறியாமல் போனான் ஷக்தி.

அவளுக்கு வரவிருக்கும் பேராபத்தை எப்படி தடுக்க போகிறான்? அது தீட்சண்யாவை சேர்ந்தவர்களால் உருவாகுமா? இல்லை வேறொரு நபரால் உருவாகுமா?


நதி பாயும்...
Nice
 
Top