Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthidu 5.1

Advertisement

Admin

Admin
Member
தடையில்லை நதியே பாய்ந்தோடு


நதியோட்டம் – 5


இப்போது நினைத்தாலும் ஷக்தியால் நம்பமுடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் தனது தாய் துர்கா தவறிபோன சிலமாதங்களுக்கு பின் ஒருநாள் தன் தந்தை வந்து பரமேஷ்வரனின் பெண்ணை தனக்கு பார்த்திருப்பதாகவும், துக்கம் நடந்த வீட்டில் சீக்கிரமே ஒரு சுபகாரியம் நடக்கவேண்டுமென்றும் கேட்டபோது இப்போதைக்கு தனக்கு திருமணம் செய்துகொள்வதாக உத்தேசமில்லை என உறுதியாக தான் மறுத்ததென்ன? இப்போது அவளின் பின்னாலேயே தன் மனம் பித்துப்பிடித்தது போல சுற்றுவதென்ன?

“டேய் ஷக்தி, அவ சும்மாவே ஆடுவா, இப்டி அவமேல பைத்தியமா நீ சுத்துறது தெரிஞ்சா சலங்கையை கட்டிவிட்டு கைல உடுக்கையை குடுத்த கதைதான் உனக்கு. ஆட்டோ ஆட்டுன்னு உன்னையும் ஆட்டிவச்சிடுவா. அடக்கிவாசி மகனே. இல்லைனா நீ காலி. அவ கிட்ட ஸ்ட்ராங்கா இருந்து தொலை...” என தன் மனதிற்கு தானே கடிவாளமிட்டுகொண்டான்.

முதல் நாள் காலை தன் தோழனின் திருமணத்திற்காக சென்னையிலிருந்து தன் நண்பர்கள் பட்டாளத்தோடு வந்தவன் மருதமலையில் நடக்கும் திருமணத்திற்கு சென்றுவிட்டு கோவையில் உள்ள புகழ்பெற்ற ஷாப்பிங் மாலுக்கு தன் நெருங்கிய நண்பனான உமா மகேஷ்வரனோடு சென்ரான். அங்கே அனைத்தையும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு காபி ஷாப்பினுள் வந்தமர்ந்தான்.

காலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் பார்வையிட்டுக்கொண்டே தங்களுக்குள் முணுமுணுப்பாக ஏதேதோ பேசி சிரித்து கொண்டிருந்தவனது கவனத்தை அந்த குரல் கலைத்தது. நிமிர்ந்து பார்த்தவனது பார்வை வட்டத்தில் பக்கத்து இருக்கையில் இரண்டுபேரில் ஒருவர் ஷக்திக்கு முதுகு காட்டி ஒருவரும், நேர் எதிரில் ஒருவரும் இருக்க, நேர் எதிரில் இருந்தவன்,

“ஹரி, கொஞ்சம் பொறுமையா இருடா. அவன் இங்கதான் வரான் போல. சட்டுன்னு முகத்தில் அடிச்சது போல பேசிடாத. நான் பார்த்துக்கறேன்...” என அமைதிப்படுத்தியவந்து குரலில் கவலை அப்பட்டமாக தென்பட ஏனென்று புரியாமலையே அவர்களின் கவனத்தை கவராமல் கண்டும் காணாமல் அவர்களை பார்த்தான்.

அந்த முகம் தெரியாத ஒருவரோ, “இங்க பாரு நிஷூ, என் பொறுமையை பத்தி உனக்கே தெரியும். அவன் பேசறதை பொருத்து நான் பேசனுமா வேண்டாமான்னு நான் தான் அதையும் நான்தான் முடிவு செய்வேன். ஏற்கனவே அந்த மைதாமாவு ஆறுமுகம் டென்ஷன்ல இருக்கேன். இப்போ இவன் வேற. ஹ்ம், அவன் தலையெழுத்து. ..” என பேசியவளின் குரலிலேயே ஒரு பெண்ணால் இந்தளவுக்கு குரலில் அலட்சியத்தை கொண்டுவரமுடியுமா என திகைத்துபோனான்.

அந்த குரலில் தென்பட்ட தெனாவெட்டும், திமிரும் எந்தளவிற்கு அவனை எரிச்சல் படுத்தியதோ அதே அளவிற்கு வசியம் செய்ததையும் அவன் மனம் மறுப்பதற்கில்லை. இதை அதிர்வாக உணர்ந்தவன் ஆராய்ச்சியை விடுத்து முதலில் அங்கு நடப்பதை, நடக்க போவதை பார்க்க ஆயத்தமானான்.

புதிதாக ஒருவன் பக்கத்து இருக்கையை நெருங்க ஷக்தியின் சுவாரஸியம் கூடி கண்களில் ஒரு எதிர்பார்ப்பு வந்தமர்ந்தது.

“ஹாய், ஐ ஆம் சிவதாஸ். உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்...” என ஹரியிடம் நேரடியாக கொஞ்சம் வெட்கத்தோடு பேசியவனை பார்த்த நிஷூ,

“ஹலோ பாஸ். என்ன விஷயம்? எதுவானாலும் என் கிட்ட பேசுங்க...” என அவனை காப்பாற்றத்தான் நிஷாந்த் அவனிடம் கேட்டான். ஆனால் அந்த சிவாவோ வில்லனை பார்ப்பது போல ஒரு ஒட்டாத பார்வையை அவன் புறம் வீசிவிட்டு அவர்களின் பக்கவாட்டில் உள்ள சேரில் அமர்ந்துகொண்டான்.

ஹர்ஷிவ்தாவிடம் மீண்டும் திரும்பியவன், “நான் இந்த மால் வந்ததிலிருந்து உங்களைத்தான் பார்த்துட்டு இருக்கேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ...” என படபடப்பாக சொல்லி முடித்தும் ஹர்ஷிவ்தா எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் அமர்ந்திருக்க நிஷாந்த் தலையில் அடித்துகொண்டான்.

அவனின் செய்கையை குழப்பமாக பார்த்த ஷக்தியோ ஹர்ஷிவ்தாவின் பதில் என்னவாக இருக்கும் என தெரிந்துகொள்ள ஆவலாதியாக இருந்தான். தனக்கு எதற்காக இந்த பரபரப்பு என புரியாமல் அவர்களையே பார்த்திருக்க ஹர்ஷிவ்தாவோ,

“ஓஹ். லவ். ஹ்ம். ஓகே. பண்ணலாமே...” என சாதாரணமாக கூறியவள், “நீங்க என்னைத்தான் சுத்தி சுத்தி வந்தீங்கன்னு நானும் புரிஞ்சுக்கிட்டேன் மிஸ்டர் சிவா. யூ நோ. நீங்க இப்போ பேச வரலைனா நானே உங்களை தேடி வந்திருப்பேன்...” என்றவளது வார்த்தையில் இருந்த உள்குத்தை புரியாத சிவா,

“ஓ மை காட்!!! என்னோட லவ்வை நீ அக்செப்ட் பண்ணிட்டியா. வாவ். லவ் யூ டியர். என்னால நம்பவே முடியலை. தேங்க்யூ சோ மச்...”என சட்டென ஒருமைக்கு தாவ அதில் ஹர்ஷிவ்தாவின் முகம் ஜிவுஜிவுத்ததில் நிஷாந்தின் வயிற்றுக்குள் கலவரப்பந்து ஒன்று சுழன்றடித்தது.

“அடேய் மடையா, போய்டுடா. உனக்கு இன்னைக்கு நேரமே சரியில்லை. உன்னோட லெவலை நீ ஓவரா க்ராஸ் பண்ணிட்டியே?... இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசிடாத...” என சிவாவுக்காக நிஷாந்த் கடவுளை வேண்டிகொண்டிருந்தான்.

சேரில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவள், “ஓகே சிவா. லெட்ஸ் கோ...” என கேட்டதும்,

“எங்க போகலாம் நீயே சொல்லு ஹர்ஷூ...” என அவளின் பெயரை செல்லமாக அவளிடம் கொஞ்ச,

“செத்தாண்டா சேகரு. நீ வசமா சிக்கிட்டடி. உன் வாய்க்கு தேவைதான். நல்ல ஆப்பா வைப்பா. வாங்கிட்டு முடிஞ்சா வீடு போய் சேரு...” என மனதிற்குள் வசைபாடினான் நிஷாந்த்.

“என்னோட பேரு உனக்கெப்படி தெரியும்?...” என தானும் ஒருமைக்கு தாவியபடி அவனிடம் வினவ,

“என்ன ஹர்ஷூ நீ இங்க வந்து மூணுமணி நேரத்துக்கு மேல ஆகுது. இவன் எத்தனை முறை உன்னை அப்டி கூப்பிட்டான். அதுலயே தெரிஞ்சிடுச்சு...”

“ஹ்ம், ஓகே வா, உன் வீட்டுக்கு போகலாம்...” என இலகுவாக கேட்டதும் அதில் திடுக்கிட்ட சிவா,

“வீட்டுக்கா? எதுக்கு ஹர்ஷூ?...”

“நீ என் கிட்ட ப்ரப்போஸ் பண்ணிருக்க சிவா. நீ யாரு, என்னனு நான் தெரிஞ்சுக்கனுமே? அதுவும் இல்லாம எல்லாம் ஒத்துவந்தா பேசாம கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சிடுவோம். அதுக்குதான் உன் வீட்டுக்கு போகலாம்னு சொன்னேன். ரெடியா?...” என துளைக்கும் பார்வையோடு கேட்டவளை பார்த்து தடுமாறியவன்,

“அது வந்து ஹர்ஷூ, உடனே எதுக்கு கல்யாணத்துக்கு அவசரப்படனும்?... நாம முதல்ல நல்லா பழகலாம், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுப்போம். அதுக்கு அப்பறமா ரெண்டு வீட்லயும் பேசி ஒத்து வந்தா பார்ப்போம், இல்லைனா இப்டியே ப்ரெண்ட்ஸா பிரிஞ்சிடலாம்...” என கூற அவன் மீது பாய்ந்துவிட்டான் நிஷாந்த்.

ஷக்திக்கே இதில் கோவம் எழுந்த பொழுது நிஷாந்தின் கோவத்தில் ஆச்சர்யமில்லை. அவன் சிவாவை அடித்தது சரியே என நினைத்து இதற்கு ஹர்ஷிவ்தாவின் பதில் என்னவென அறிய காத்திருந்தான். இப்போது வரை அவளின் முகத்தை ஷக்தி பார்க்க முனையவில்லை. முடியவும் இல்லை.

நிஷாந்தை சிவாவிடமிருந்து பிரித்தவள், “விடு நிஷூ. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல. நீ வேடிக்கை மட்டும் பாரு. இதில் தலையிடாதே...” என அவனை அடக்கியவளிடம்,

“அறிவிருக்கா ஹரி. இவன் பேசறதுக்கு முழு அர்த்தம் என்ன தெரிஞ்சுமா நீ அமைதியா இருக்க சொல்ற? இந்த நாயை நான் சும்மா விடமாட்டேன்...” என மீண்டும் அவனை தாக்க நினைக்க அதை தடுத்தவளின் பார்வையில் அமைதியாக நின்றான். இந்த ரகளையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் இதை கவனிக்க ஆரம்பித்தனர்.

நிஷாந்தை தடுத்த ஹர்ஷிவ்தாவின் செயலை தவறாக கணித்தவன், “இந்த மாதிரி ஆட்களோட பழக்கம் வச்சா இப்டிதான் ஹர்ஷூ. பாரு பப்ளிக் ப்ளேஸ்ல எவ்வளோ சீப்பா பிகேவ் பன்றான்னு?...” என சிவா அவளுக்கு எடுத்துகொடுக்க,

“அதை விடு. இன்னைக்கு உன் கூட ஒரு பொண்ணு வந்துச்சே. யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்த மாட்டியா?. நான் உன்னோட லவ் மேட்டர்லாம் சொல்லமாட்டேன். என்னை நீ உனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்லு போதும்...” என வலைவிரிக்க பாந்தமாக போய் சிக்கிகொண்டான் சிவா.

“அதுக்கென்ன ஹர்ஷூ. நீயே புரிஞ்சிட்டு பேசும் போது நான் என்ன மாட்டேனா சொல்லுவேன். அவ என்னோட சிஸ்டர் பைரவி தான். இரு மேல தான் எதாச்சும் வாங்கிட்டு இருப்பா. போன் செய்து இங்க வர சொல்றேன்...” என தன்னுடைய மொபைலில் அப்பெண்ணிற்கு அழைப்புவிடுத்து தான் இருக்குமிடத்தை சொல்லி வரவழைத்தான் சிவா.

ஹர்ஷிவ்தாவின் எண்ணம் என்னவென தெளிவாக நிஷாந்திற்கு புரிய அவளிடம் மறுப்பாக தலையசைத்தான். ஷக்திக்கும் ஹர்ஷூ என்ன பேச போகிறாள் என்பது கொஞ்சம் அனுமானம் தான். தன் நண்பன் கிளம்புவதாக கூறியும் விடாமல் அவனையும் தன்னோடு இருத்திகொண்டான் ஷக்தி.

சில நிமிடங்களில், “என்ன அண்ணா? எதுக்காக இங்க வர சொன்ன?...” என கேட்டுகொண்டே அப்பெண் புரியாமல் அவர்களை பார்க்க,

“ஹாய் பைரவி. என் பேரு ஹர்ஷூ. இவன் நிஷாந்த். நான் தான் உன் அண்ணாக்கிட்ட சொல்லி உன்னை இங்கே கூப்பிட சொன்னேன். உன் கிட்ட ஒரு விஷயம் பேசனும்னு தான் வரவழைச்சேன். விஷயம் என்னனு நான் பட்டுன்னு சொல்லிடறேன்...” என்றவள் சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“உன்னோட அண்ணா மிஸ்டர் சிவதாஸ் என்னை கொஞ்ச நாளைக்கு அவரோட பொழுதுபோக்குக்கான லவ்வரா இருக்க சொல்றார். நான் சொன்னேன் உங்க வீட்லயும், எங்க வீட்லயும் போய் இந்த விஷயத்தை சொல்லி கல்யாணத்துக்கு பேசலாம்னு சொன்னேன். அதுக்கு அவர் கொஞ்சநாள் பழகி பார்ப்போம். கல்யாண விஷயத்தை பத்தி இப்போ பேச வேண்டாம்னு சொல்றார்...” என பேசியவளை அதிர்ச்சியுடன் பார்த்த சிவாவை இடைபுக விடாமல்,

“இதுல என்ன விஷயம்னா, லவ்னா ஒரிஜினல் லவ் இல்லை. கொஞ்ச நாள் பழகி பார்க்கணுமாம். ஒத்துவந்தா கல்யாணம் இல்லைனா, யாருக்கு தொந்தரவில்லாம பிரிஞ்சிடனுமாம். டீல் நல்லா இருக்குல...” எனவும் தன் அண்ணனை அதிர்ச்சியோடும், அருவருப்போடும் பைரவி பார்க்க அவளை தன் புறம் திருப்பிய ஹர்ஷிவ்தா,

“இதுல எனக்கு ஓகே தான் . ஆனா பாரு. என்னோட நிஷூவுக்கும் நான் எதாச்சும் செய்யனுமில்ல. அதான் சிவாவோட உன்னையும் இங்க நான் பார்த்தேன். சரி நீயும் ப்ரீ. நிஷூவும் ப்ரீ தான். சோ எங்க நிஷூவுக்கு நீ கொஞ்ச நாள் டைம்பாஸ் லவ்வரா இரேன். வேற யாரும்னா அடிக்க வந்திடுவாங்க. உன்னை எதுக்காக கேட்டேன்னா நீயும் உன் அண்ணனை போல்தான இருப்ப. அதுக்குத்தான். பின்னால பிரச்சனை வராது பாரு...” என சொல்லிமுடித்த நிமிடம் சிவா எழுந்து ஹர்ஷிவ்தாவை அடிக்க கையை ஓங்கியிருந்தான்.

அவனால் கையை ஓங்க மட்டும் தான் முடிந்தது. அதற்கு மேல் ஒரு அடி கூட கையை நகர்த்தவும் முடியவில்லை, அவனால் நகரவும் முடியவில்லை. ஹர்ஷிவ்தாவின் இரும்பு பிடியில் அவனது கை இருக்க பிடியின் இறுக்கத்தை அவள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்ட அது கொடுத்த வலியில் உயிர் போகும் அளவிற்கு அலறினான்.

அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஆனால் ஒருவருமே இதை தடுக்க முன்வரவில்லை. இவனுக்கு நல்லா வேணும் தான் என்பது போல வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தனர். செக்யூரிட்டிகள் கூட இதில் செய்வதறியாமல் நின்றார்கள்.

அந்த பெண் பைரவியோ ஹர்ஷிவ்தா பேசிய பேச்சில் கூசிப்போய் விட்டாள். அவளிடம் மன்னிப்பை கேட்ட நிஷான் நடந்ததை அவளிடம் விளக்கிகொண்டிருந்தான். இவ்வளவு நேரம் முதுகை மட்டும் பார்த்துக்கொண்டு குரலை கேட்டிருந்தவன் இப்போது அவளது முகத்தையும் அதில் ஜொலித்த கோபக்கனலையும் பார்த்த ஷக்தியோ அயர்ந்துவிட்டான்.

“ஏன்டா நாயே!!! நீ என் கிட்ட கேட்டதை தானடா நானும் உன் தங்கச்சிக்கிட்ட கேட்டேன். உன் வீட்டு பொண்ண சொன்னா மட்டும் உனக்கு இவ்வளவு கோவம் வருதே. இம்புட்டு ரோஷப்படுறவன் நீயும் ஒழுக்கமா இருக்கனும். இப்போ நான் கேட்ட கேள்வியைத்தான்டா நாளைக்கு ஊர்ல இருக்கிறவனும் கேட்பான். அண்ணனே இப்டி ஊர்பொறுக்கியா இருக்கானே அவன் கூட பொறந்தவ எப்டி இருப்பாளோன்னு?...” என அவனது கையை இன்னமும் விடாமல் முருக்கியவள்,

“நீயெல்லாம் இப்டி பொறுக்கித்தனமா சுத்துற அளவுக்கு உன்னை பெத்து விட்ருக்காங்களே அவங்களை சொல்லனும். நிஷூ போலீஸ்க்கு போன் பண்ணு. இவனை சும்மா விடகூடாது. ஜெயில்ல களி தின்னாதான் உடம்புல இருக்கிற கொழுப்பு குறையும். ஜாலிக்காக லவ்வா கேட்குது. இன்னைக்கு உன்னோட ஜவ்வை கிழிக்கிறேன் பாரு...” என அவனை அடித்து துவம்சம் செய்துவிட்டாள்.

இப்படி ஒரு கோவத்தை எந்த பெண்ணிடமும் கண்டிறாத ஷக்தி எச்சிலை கூட்டி விழுங்கியவன் எதற்கும் இருக்கட்டுமென நான்கடி பின்னால் போய் நின்றான். நிஷாந்த் வந்து தடுத்த பின் தான் சிவாவை அடிப்பதை நிறுத்தினாள் ஹர்ஷூ.

ஹர்ஷிவதாவை நெருங்கிய பைரவி அவளை பார்த்து கண்ணீர் மல்க கைகூப்பி மன்னிப்பை வேண்ட,

“இங்க பாரு உன் கிட்ட நான் பேசினதுக்கு சாரிலாம் கேட்கமாட்டேன். யார்க்கிட்டயும் மன்னிப்பை கேட்கிற அளவிற்கு என்னோட பேச்சு இருக்காது. உன்னை நான் பேசினது உன் அண்ணன் என்னை பேசினதுக்கான தண்டனை. உன்னோட அண்ணன் செஞ்ச தப்புக்கு இன்னைக்கு நான் இந்த தண்டனையை குடுக்கலைனா நாளைக்கு இதை விட பெரிய தப்பா அவன் செஞ்சு அதனால நீ இன்னமும் அவஸ்தை படுவ...” என்றவள் சிவாவை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு,

“இவனை உன் அண்ணனே சொல்லாத. எப்டி தான் இவனை நம்பி நீ வெளியில வந்தியோ? நாளைக்கே எதாச்சும் பிரச்சனைனா உன்னை அம்போன்னு விட்டுட்டு இவன் ஓடிடுவான். அடுத்த வீட்டு பொண்ணை இவ்வளவு கேவலமா பேசற பேச்சுதான் இப்போ அவனோட தங்கையையே பதம் பார்த்திருக்குன்னு அவன் உணரனும். உங்க வீட்ல சொல்லி அவனை திருத்த பாருங்க. இல்லைனா வீட்டை விட்டு தொரத்த பாருங்க...” என்றவள்,
 
:love: :love: :love:

அடுத்தவீட்டு பொண்ணை எது வேணா சொல்லலாம் பண்ணலாம் தன் வீட்டு பொண்ணை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது.......
நிறைய அண்ணன்கள் இப்படித்தான்.....
நீ சும்மா போற வம்பை விலை கொடுத்து வாங்குற ஹர்ஷ்.....
 
Last edited:
Top