Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 01 ( PART 01)

Advertisement

வணக்கம் தோழமைகளே!

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்களில் பலருக்கும் என்னை யாழ்வெண்பா என்னும் புனைப்பெயரில் நினைவிருக்கலாம். இனி முழுக்க முழுக்க சுகமதி என்னும் பெயரில் தான் கதைகள் வரும் FRIENDS :)

இந்த பொங்கல் திருநாளில் எனது கதை "விரல் மீறும் நகங்கள்" தொடங்குகிறேன்.

அறிமுகம் :

விரலை மீறி வளரும் நகங்கள் வெட்டி வீசப்பட்டு விடும் அல்லவா?

நடைமுறையிலும் அவ்வாறே! மனிதர்களின் வாழ்க்கை முறையில் சில கொள்கைகள், கோட்பாடுகள், எல்லைக்கோடுகள் இருக்கின்றது. அது மனிதனுக்கு மனிதன், குடும்பத்திற்கு குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடும்.

நமது கலாச்சாரத்தில் ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு குடும்பமும் கட்டுப்பாடுகள் நிறைந்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து கட்டுப்பாடுகளும் சரியானது என்றும் இல்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிய வேண்டும் என்றும் இல்லை. சரிதானே?

சிலது அவசியம்; சிலது தேவையற்றது; அது ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடும்.

கதாநாயகன், நாயகி இருவரும் இது போன்ற ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கென விதிக்கப்பட்ட சிலவற்றை மீறி செயல்புரிய வேண்டிய நிலை. அதில் அவர்கள் இருவருமே குடும்பத்தை விட்டு தனித்து நிற்கிறார்கள்.

இனி கதையை தொடரலாம் FRIENDS :) நான் மீண்டும் மீண்டும் தங்களிடம் கேட்பது உங்களது உண்மையான விமர்சனத்தையே! நல்லதோ, கெட்டதோ மறவாமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்மறை விமர்சனங்களை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நான் வேலை, குழந்தைகள் இவற்றிற்கு இடையே எழுதுவதால் உங்கள் கருத்துக்கள் மட்டுமே என்னை வழிநடத்தும். நன்றி!

விநாயக பாத நமஸ்தே!

விரல் மீறும் நகங்கள் – 01

“மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;”

உரத்து இனித்து ஒலித்தது செந்தாமரையின் குரல். பாரதி என்றால் அவளுக்கு அத்தனை பற்று, விருப்பம், நேசம், ஈர்ப்பு எல்லாமும். வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கூட பாரதியை மேற்கோள் காட்டாமல் அவளால் இருக்க முடியாது.

பள்ளி ஆண்டுவிழா கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய ஊர்த்தலைவர் இன்னும் வராமல் இருந்த காரணத்தினால், மாணவர்களின் சலசலப்பை குறைக்கும் வழி தெரியாமல் மேடையில் ஏறி பாடிக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது மாணவர்களின் சத்தம் சற்று மட்டுப்பட்டிருக்க, அவர்களை அந்த வழியிலேயே சிறிது நேரம் கட்டுக்குள் வைத்திருக்கும் வண்ணம், நன்றாக பாடும் மாணவர்களை வரிசைப்படுத்தி மேடைக்கு ஏற்றி விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த வேலை ஒருபுறம் நடந்தாலும், ‘ஏன் இத்தனை நேரம் செய்யறாரு? இதே பரமேஸ்வரன் ஐயாவா இருந்திருந்தா சரியான நேரத்துக்கு வந்திருப்பாரு’ என ஊர்த்தலைவரை அவரது தந்தையோடு ஒப்பிட்டு மனதிற்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

இதற்கும் செந்தாமரை, இறந்துபோன பரமேஸ்வரன் ஐயாவை ஒரே ஒரு தரம் தான் பார்த்திருக்கிறாள். ஆனால், கடந்த மாதம் இந்த ஊருக்கு ஒத்தையாய் வந்தவளுக்கு, தற்போதைய ஊர்த்தலைவரான வெற்றிச்செல்வனால் தான் இந்த ஆசிரியை வேலையும், ஆதரவும் கிடைத்தது. அப்படியிருந்தும் இப்படியொரு எண்ணம்.

அது என்னவோ அவளுக்குள் தானாகவே தந்தையையும், மகனும் ஒவ்வொரு செயலிலும் ஒப்பிடும் எண்ணம் வந்துவிடும். அவள் பாரதியை அடுத்து மிகவும் மதித்த மனிதர் என்றால் அது பரமேஸ்வரன் ஐயாவைத் தான். வாழ்க்கையில் அடுத்து என்ன என்ற பெரும் வினா அவளை துவள வைக்க முயற்சித்த பொழுது, அவள் மனதில் உதித்த பற்றுக்கோல் அவர் மட்டுமே!

அப்படி தேடி வந்தவர் உயிரோடு இல்லை என்கிற செய்தியை அவளால் தற்போது வரையிலும் ஜீரணிக்க இயலவில்லை. அவரை ஏதோ ஒருவகையில் வெற்றிச்செல்வனிடம் தேடுவது அவளையும் அறியாமல் வாடிக்கையாயிற்று.

ஆனால், அவள் மனதிற்குள் வசைபாடும் வெற்றிச்செல்வனுக்கு நேரம் தாழ்த்தி வருவது பழக்கமில்லை. இதை புதிதாய் இங்கு வந்த அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!

“என்ன வெற்றிச்செல்வன் ஐயாவை இன்னும் காணோம்” அவரது வருகைக்காக காத்திருந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னுடன் இருக்கும் மற்ற ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“சொன்னா சொன்ன நேரத்துக்கு இருப்பார் சார். இன்னைக்கு ஏன் தாமதம்ன்னு புரியலையே சார்!”

“கூப்பிட்டு பார்க்கலாமா சார்?”

“வேணாம் வேணாம். அது மரியாதையா இருக்காது. இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்போம்” என தலைமை ஆசிரியர் முடித்து விட்டார்.

இவர்கள் அனைவரும் காத்திருந்த வெற்றிச்செல்வனோ, வேஷ்டியின் நுனியை தனது கரங்களில் பிடித்தபடி எதிரில் வீழ்ந்து இருக்கும் தடியன்களை மேலும் துவம்சம் செய்யும் உக்கிரத்துடன் நின்றிருந்தான்.

“டேய் எல்லாரும் அங்க உட்காருங்க!” என்று அதட்டலிட்டது வெற்றிச்செல்வனின் வலதுகை வீரமணி. இதற்கு மேலும் அடி வாங்கினால் அவர்களுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்னும் பயம் அவனுக்கு.

கூடவே, ‘இவர் ஏன் வேலையாட்களிடம் ஒப்படைக்காமல் இவராகவே இதையெல்லாம் செய்கிறார்?’ என வழக்கமான தவிப்பு அவனிடம்.

வெற்றிச்செல்வனது செவ்வரி ஓடிய விழிகளும், இறுகிய தாடையும், விடைத்த மார்பும், முறுக்கேறிய தோள்களும் எதிரில் இருப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்த, தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர் அந்த தடியன்கள்.

அவனது உக்கிரமான தோற்றத்தில் அவனுடனேயே இருக்கும் வீரமணிக்கே இன்னும் என்ன செய்வாரோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

மெதுவாக தயங்கியபடி, “ஐயா, ஏற்கனவே நிறைய அடிச்சுட்டீங்க. அந்த இன்ஸ்பெக்டர் வேற ரொம்ப பேசுவான். போதுங்க ஐயா. யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி தென்னந்தோப்பு ஒட்டியிருக்க குடிசைக்கு கொண்டு போயிடலாம்” என பவ்வியமாகக் கூற,

வெற்றிச்செல்வன் அவனைப்பார்த்த பார்வையில், ‘போலீஸா?’ என்னும் கேலி நிறைந்திருந்தது.

“ஐயா போனமுறையே போலீஸ் வரைக்கும் பிரச்சனையை கொண்டு போய் விட்டுட்டானுங்க” என்று சொன்ன வீரமணி, சட்டென்று, “பள்ளிக்கூடத்துக்கு வேற வரதா சொல்லி இருந்தோம்” என அவன் எதற்குக் கட்டுப்படுவானோ அதனை நினைவு படுத்த,

“ச்ச…” என்று சலித்துக் கொண்டவன், “எல்லாம் இவனுங்களால” என்று கூறி, முன்னால் அமர்ந்திருந்த ஒருவனை எட்டி உதைத்தான். ஏற்கனவே அடி வாங்கி சோர்ந்து போயிருந்தவர்களாதலால், இந்த உதையில் கீழே சுருண்டு விழுந்தான் அவன். வெற்றிச்செல்வனின் ஆத்திரம் இன்னமும் மட்டுப்படுவதாக இல்லை.

“ஐயா…” என மீண்டும் பரிதாபமாக வீரமணி அழைக்க,

“நம்ம சின்னச்சாமி ஐயாவும் அங்க தான் இருப்பாங்க, அவரை பள்ளிக்கூடத்துல தலைமை தாங்க சொல்லிடு” என்று வீரமணியிடம் கூறியவன், களைந்து போயிருந்த தனது ஆடைகளை ஆராய்ந்தவாறே, “இப்ப ஸ்கூலுக்கு போக முடியாது” என்று கூற, உடனடியாக விழாவிற்கு தலைமை ஏற்க வேண்டிய விஷயத்தை சின்னச்சாமி ஐயாவிற்கும், பள்ளிக்கும் தெரியப் படுத்தினான் வீரமணி.

“சொல்லிட்டேங்க ஐயா” என உடனே வந்து நின்றான் வீரமணி. இது அவனது வாடிக்கை தான். செய் என்றால் உடனடியாக செய்து முடித்துவிடுவான். இது பழகிப்போன ஒன்று என்பதால், வெற்றிச்செல்வனிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை. அடுத்த கட்டளைகளை வழங்கினான்.

“நம்ம ஆளுங்களை டிராக்டர் கொண்டு வந்து இவனுங்களை அள்ளிட்டு போக சொல்லு” என அடுத்த பணியை ஒப்படைத்தான்.

“ஐயா தென்னந்தோப்பு குடிசைக்கு தானே?” என சந்தேகம் கேட்ட வீரமணியை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் வெற்றிச்செல்வன்.

அவனது பார்வையின் செய்தியை உணர்ந்தவன், உடனடியாக திரும்பி, “ஏலே யாரு அங்க இருக்கா? சீக்கிரம் ஒரு டிராக்டர் கொண்டு வாங்கடா” என தோப்பினுள் நோக்கி குரல் கொடுக்க, அதற்கடுத்த வேலைகள் துரிதமானது.

வாகனம் வந்துவிட, “இதப்பாரு நம்ம தென்னந்தோப்பு குடிசைக்கு கொண்டு போய், எல்லாரையும் கட்டி போட்டுட்டு, காவலுக்கு கொஞ்ச பேரை நிக்க சொல்லு. இனி இவனுங்க உடம்புல அடி தாங்க சக்தி இருக்காது. அதுனால விசாரிக்கிறேன்னு எவனும் கையை வெச்சுட போறானுங்க. ஐயா சொல்லாம எதுவும் செஞ்சிடக்கூடாது. புரிஞ்சுதா? அப்பறம் சூதானமா போங்க லே. வண்டில என்ன போகுதுன்னு யாருக்கும் சந்தேகம் வந்துடாம, இவனுங்க மேல வைக்கோலை அள்ளி போட்டுட்டு போங்க” என வீரமணி சத்தம் வெளியே கேட்காதவாறு கட்டளைகளை கொடுக்க,

நடக்க கூட முடியாமல் தொய்ந்து போய் இருந்தவர்களை அள்ளி வாகனத்தில் போட்டு, மேலே வைக்கோலால் நிறைத்து… அந்த வாகனம் தென்னந்தோப்பு குடிசையை நோக்கி பயணப்பட்டது.

‘இந்த வேலையை ஏன் தான் ஒப்புக் கொண்டோம்’ என அந்த நாளின் நூறாவது முறை மனம் வருந்தினர் அந்த தடியன்கள். வெளியூர்க்காரர்கள் என்பதால், அவர்களுக்கு வெற்றிச்செல்வனைப் பற்றித் தெரியவில்லை.

தலையையே கொத்தாக வீசி எரியும் கூட்டத்தினருக்கு கையை வெட்டி வீழ்த்தும் வேலை வெகு சுலபமாகத் தெரிய, எளிதாக இருக்கும் என நினைத்து வந்தவர்கள் நன்றாக மாட்டிக்கொண்டனர்.

வீரமணி வேலையாட்களிடம் வேலையை ஒப்படைத்து விட்டு திரும்ப, அதற்குள் வெற்றிச்செல்வன் தன்னுடைய காரை அடைந்திருந்தான்.

விரைந்து ஓடிய வீரமணி வெற்றிச்செல்வனுக்கு கார் கதவை திறந்து விடும் முன் அவனே திறந்து ஏறியிருக்க, அவசரமாக பின்பக்க கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்து கொண்டான்.

அவர்கள் தற்போது இருந்தது சிறு பண்ணையும், நெல் வயல்களும் இருந்த பகுதி. காலையில் பண்ணைக்கு வந்து ஆடு, கோழி தீவனங்களை சரிபார்த்து, அனைத்து இடங்களையும் மேற்பார்வை பார்த்துவிட்டு, விவசாயத்திற்கு ஆட்களை பிரித்து அனுப்பி வைத்துவிட்டு பள்ளிக்கு செல்ல நினைத்தவனை சூழ்ந்திருந்தது அந்த தடியன்களின் கூட்டம்.

அவர்களை துவம்சம் செய்யும் வேகத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே வெற்றிச்செல்வனுக்கு மறந்திருந்தது.

காரில் ஏறிய வீரமணி, “மில்லுக்கு வண்டியை விடு” என காரோட்டி பாண்டியை பணிக்க,

“வீரா…” என்று அழுத்தி அழைத்தான் வெற்றிச்செல்வன்.

“வேற எங்க போகணுங்க ஐயா?” என கேட்டபோதே அவனது நா வரண்டிருந்தது. வெற்றிச்செல்வன் மிகமிக வேகமானவன். அவனுக்கு மட்டுமல்ல இந்த தடியன்களை அனுப்பியது யாரென்று அனைவருக்கும் தெரியும். ஒருவேளை அனுப்பியவர்களைத் தேடித்தான் போகலாம் என்று சொல்ல வருகிறானோ என்று பயந்து போனான்.

ஆனால் வெற்றிச்செல்வனோ நிதானமாக “வீட்டுக்கு வண்டியை விடு” என்றான் காரோட்டியிடம். அந்த வார்த்தைகளைக் கேட்டு வீரமணியின் செவிகளில் பாலாறு ஓடியது சில நிமிடங்களே!

அதற்குள் அவன் மனம் ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து கதறத் தொடங்கியிருந்தது. வெற்றிச்செல்வன் வேகத்தைக் கூட ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த நிதானம்? என்ன வருமோ என்ற பயத்தைக் கிளப்பியது.

அதோடு இன்னொன்றும் இப்பொழுது தான் நினைவில் வந்தது. எப்பொழுதும் இதுபோன்று வரும் தடியன்களை என்ன வற்புறுத்தியும் தனிமையில் வைத்து கவனிக்க அனுமதி தராமல் அடித்து ஓடவிடும் வெற்றிச்செல்வன், இந்தமுறை அவர்களை தன் சொல்லிற்கிணங்க மறைக்க முயன்றது, ஏன் என புரியாமல் பதற்றத்தைத் தந்தது.

‘தென்னந்தோப்பு குடிசைக்கு அனுப்பியது நம்ம சொன்னதால தானா? இல்லை இது ஐயா ஏற்கனவே முடிவு செஞ்சிருந்த திட்டமா?’ ஒன்றுமே Vவிளங்காமல் குழப்பமும், பீதியுமாய் வீரமணி அமர்ந்திருந்தான்.

அவனது முகத்தில் இருந்த பீதியைக் கண்ட டிரைவர் பாண்டி, “என்னண்ணே எங்கேயும் ஓரமா நிறுத்தவா? அவசரத்துக்கு எதுவும் ஒதுங்கணுமா?” என்று அவனின் நிலைமை புரியாமல் கேட்டு வைக்க,

“அடேய்ய்ய்ய்… என்னைப் பார்த்தா உனக்கு அவசரத்துல அவதிப்படற மாதிரியா தெரியுது?” என பாண்டியிடம் சீறிக்கொண்டு நின்றான் வீரமணி.

“வீரா…” என்று அழுத்தமாக உச்சரித்து அவனது கோபத்தை பஸ்மாக்கிய குரல் வேறு யாருடையதாக இருக்கும்? சாட்ஷாத் வெற்றிச்செல்வனே தான்.

ஒரு வழியாக அமைதி காத்த வீரமணிக்கு, இப்பொழுது வீட்டிற்கு எதற்கு செல்கிறோம் என்றும் புரியவில்லை. அந்த தடியன்களைக் கொண்டு என்ன திட்டம் என்றும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு வெற்றிச்செல்வனின் அடுத்த நகர்வு என்னவென்றும் புரியவில்லை. மொத்தத்தில் தானொரு வெத்துவேட்டு வலது கை என்று மட்டும் நன்றாக புரிந்தது.

‘கடவுளே, நானே என்னைப்பத்தி கண்டுபிடிச்ச இந்த அரியவகை கண்டுபிடிப்பை வேற யாரும் கண்டுபிடிக்காம பார்த்துக்கோப்பா’ என மேலே பார்த்து இறைவனிடம் அவசர வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தான்.

இந்த முறையும் பாண்டி, “அண்ணே ஆத்திர அவசரத்துக்கெல்லாம் நம்ம ஐயா தப்பா எடுத்துக்கிட மாட்டாங்க. இதுக்குபோயி சாமியை கும்புட்டுட்டு இருக்கீங்க. நான் ஓரமா நிறுத்தறேன். மெதுவா ஒதுங்கிட்டு, பின்னாடி எதுவும் நம்ம தோட்டத்து மாட்டு வண்டியோ, டிராக்டரோ வரும் அதுல ஏறி வீட்டுக்கு வந்துடுங்கண்ணே” என தீவிரமான முகபாவத்தோடு ஆலோசனை கூறினான்.

“ஐயாயா… இவன் என்னை ரொம்ப சோதிக்கிறான். இவனை வண்டியிலிருந்து இறங்க சொல்லுங்க” என ஆக்ரோஷமாக தொடங்கி, கெஞ்சலாக முறையிட்டு வெற்றிச்செல்வனை பாவமாக ஏறிட்டான் வீரமணி.

இந்த கீரியும், பாம்பும் செய்யும் வேலைகளை தினமும் கவனிப்பவன் ஆதலால் இவர்களது பஞ்சாயத்தில் வெற்றிச்செல்வன் தலையை விடவேயில்லை.

பாண்டியோ வெகு நிதானமாக, “என்னண்ணே பொசுக்குன்னு என்னை இறங்க சொல்லிட்டீங்க. உங்களுக்கு தான் வண்டியை ஓட்டவே தெரியாதே! தள்ளிட்டே போவீங்களா ண்ணே.. நீங்க பெரிய ஆளு தான் போங்க” என கூறி அது ஏதோ பெரிய நகைச்சுவை என்ற பாவனையில் ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

இப்பொழுது பாண்டியை துவம்சம் செய்யும் வேகம் வீரமணிக்குள் பிரவாகம் எடுத்து மேலுழும்ப, ‘சாந்தி! குஷ்பூ! திரிஷா! நயன்தாரா!’ என தன்னைத்தானே முயன்று அமைதி படுத்திக் கொண்டிருந்தான்.

அவனது மைண்ட் வாய்ஸ் கேட்காதவர்கள் தத்தம் வேலையை அமைதியாக தொடர்ந்தனர். பாண்டி மட்டும், ‘பாவம் அண்ணனுக்கு அவசரம் போல தியானமே செய்ய ஆரம்பிச்சுட்டாரு. விரசா வீட்டுக்கு போயிடணும்’ என மனதிற்குள் எண்ணியபடி வாகனத்தின் வேகத்தை கூட்டினான்.

-- to be continued...

பேரன்புடன்,
சுகமதி
ஆகா
நல்லா சிரிச்சு lovelyம்மா.
இதே மாதிரியே தொடரவும்.
வாழி
 
Nice title
 
Top