Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne11

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அடுத்தடுத்த நாட்களில்,சுஜி புட்ஸ்,சிறிது நொண்டியடிக்கத்தான் செய்தது,,,வைஷாலி எழவில்லை,,,சமையற் கட்டுக்கு வரவில்லை,,,நல்ல காய்ச்சல்
...இப்போழுது,லதாவிற்க்கு, கைகள் சற்று தேறியிருப்ப்தால்,அன்றைய மெனுவான,கேழ்வரகு களி,துவையல்,,ஓட்ஸ் புட்டு,ஆகியவ்ற்றை எப்படியோ தயார் செய்து முடித்தாள்..அங்குமிங்கும்,அலைவதாலும்,கூடுதல் பொறுப்பு மற்றும் உழைப்பாலும்,வைஷாலிக்கு,அலுப்புக் காய்ச்சல் ஏற்ப்பட்டிருக்கலாமென்று தான் முதலில் வீட்டிலுள்ளவர்கள்,நினைத்தார்கள் ,மாலையில் புருஷோத் வந்ததும் கேட்டான்’’
‘’அம்மா,இன்னும்,வைஷூ எழுந்திரிக்கலை,,,’’
‘’ஆமாம்ப்பா,,மதியம் கூட சாப்பிடலை,,ரெண்டு பிரட் தான் எடுத்துக்கிட்டா..’’என்றாள் லதா கவலையுடன்,,,
‘’சரி நான் போய்ப் பார்க்கறேன்’’என்று படுக்கை அறைக்குள் நுழைந்து,மனைவியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து ,அவள் முகத்தை நிமிர்த்தினான்,,,,
‘’என்னம்மா’’என்றான் பாசத்துடன்,
,,தன்னுடைய உடல் நலக் கோளாறைக் கூடப் பொறுத்துக் கொள்வான்,,,மனைவி படுத்து விட்டால் தாங்காது அவனுக்கு,,,அவள் நடமாடிக் கொண்டிருப்பது தான் அவனுக்கான எனர்ஜி பானம்,
,,,கணவனின் கேள்விக்குப் பதிலாக,வைஷாலி அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தாள்,,அந்த பார்வை புருஷோத்துக்கு எங்கேயோ இடித்தது,,,,அதில் எந்த வித பொருளுமில்லை,,,பாசம்,பரிவு,மகிழ்ச்சி,வேதனை,என எதுவுமில்லாத,ஒரு வெறுமை இருந்தது,,,எங்கேயோ தவறு இருப்பதாகவும்,அவளுடையது,உடல் நலக் கோளாறில்லை,என்றும் தோன்றியது,,,,புருஷோத்துக்கு,
ஆனால் அறிவு சொன்னதை மனம் ஏற்க வில்லை,,ஏற்க விரும்ப வில்லை,அறிவு உண்மையைப் பார்க்கும்,,,மனம்,உணர்ச்சியைப் பார்க்கும்,,,எனவே அப்படியேதும் இருக்காது என தன்னை சமாதானப் படுத்தி கொண்டான்,,,
‘’வைஷூ,,ஹாலுக்கு வர்றியா’’
‘’வரலை’’என்று தலை அசைத்தாள்,,,
இப்பொழுது,ஜுரமீல்லையே ,,,ஏன் படுத்தேயிருக்க விரும்புகிறாள் இவள்?
‘’ஏம்ப்பா,,,,என்ன ப்ராப்ளம்,’’என்றான் தலையைத் தடவிக் கொடுத்தபடி..
‘’உனக்கு நான் ப்ராப்ளம்,,,,எனக்கு நீ ப்ராப்ளம்’’என்றாள் வாயை அகாலத் திறந்து,,,சாதாரணமாக,உதடு பிரியாமல்,அழகாகப் பேசக்கூடியவள்.,ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?
‘’வைஷூ ,,சாப்பாடு கொண்டு வரட்டுமா?’’
‘’சாப்பிடறதெல்லாம் வேஸ்ட்,,,எதுக்கு சாப்பிடணும்’’என்று சொல்லி விட்டு ,திரும்பிப் படுத்துக் கண்களை மூடிக்கொண்டாள்,,,,,அதற்கு மேல் அவளிடம் பேசிப் பயனில்லை என்பது புரிய,விளக்கை அனைத்து,கதவைச் சாத்திவிட்டு,குழப்பத்துடன் வெளியே வந்தான்,புருஷோத்,,,,,
ஒரு வாரம் இப்படியேதான் ஓடியது,,,வைஷூ அறையே கதியேனக் கிடந்தாள்..தனக்காகத் தோன்றும் போதூ வெளியே வந்து,சமயலறையில் இருப்பதை தட்டில் போட்டு சாப்பிட்டு விட்டு,வீட்டில் எவரையும்,நிமிர்ந்து பார்க்காமல்,மீண்டும் அறைக்குள் முடங்கி கொள்வாள்..
.லதா எதிர்ப்பட்டு ஏதாவது கேட்டாலும்,அவளை அலட்சியமாய் ஒரு பார்வை,,,மகள் ஓடி வந்து மேலே ஒட்டினாலும் கூட,ஏதோ அறியாத நபர் போல தள்ளி விட்டு விடுவாள் அவளை..
.,,முக்கிய உழைப்பாளியான வைஷாலியின் பங்களிப்பு இல்லாததால்,சுஜி புட்ஸ் சரியத் தொடங்கியது,,,வருகின்ற ஆர்டர்களில் பாதிக்கு,மேலானவற்றை தட்டி விட்டு,பெயருக்கு ஏதோ செய்து வியாபாரம் முற்றிலும் முடங்காமல் பார்த்துக் கொண்டாள் லதா,
,,லதாவிற்க்கு இப்பொழுது உடல் நான்கு தேறி விட்டது,,நார்மலுக்கு அருகே வந்து விட்டாள் ...ஆனால் மருமகளைக் குறித்த,கவலை தான் படுத்துகிறது அவளை,,,,
''லதா,, வைஷூவை சாப்பிடக் கூப்பிட்டுப் பாரேன்''---ஜீவன்,,,
''நான் கூப்பிட்டதும் எழுந்து வந்துடவா போறா?காதுல விழுந்தாலும் விழாதபடி எங்கேயோ வெறிச்சுப் பார்க்கறா ,,,என்னா செய்யறது,ஏது செய்யறதுன்னு,ஒண்ணும் புரிய மாட்டேங்குது..''
''ஏன் லதா?ஒரு மாசம் இருக்காது-லதாவுக்கு உடம்பு சரியில்லாமப்போயி''
''இருக்கும்,,இருக்கும்,,புருஷோத்தும் பாவம்,,,,,நொடிஞ்சிட்டான்''
''பின்னே ,,,,,இவள் இப்படிப் பண்ணினாள்னா?''
''இல்லப்பா,,அவ,வேணும்னு பண்ணலை...அவளுக்கு என்னமோ பண்ணுது,,,அதைக் கண்டு பிடிக்க நமக்குத் தெரியலை...''
''லதா !நீ புருஷோத் கிட்ட சொல்லி, வைஷூவை ஒரு நல்ல,லேடி சைக்கியாடிரிஸ்ட் கிட்ட கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லேன்''
''அவன் தப்பா நினைச்சுக் கோபப்பட்டுடான்னா?''
''இதிலே என்ன இருக்கு,,,உடம்பு மாதிரியே மனசும் நோய்வாய்ப் படக்கூடியதுதான்,,,,உடல் நோய்க்கு எடுத்துகிறாப்புல,,மன நோய்க்கும், ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா சரியாப்போகுது....அவ்வளவுதான்,,,இதிலே,தப்பா நினைக்கறதுக்கும்,தயங்கறதுக்கும்,என்ன இருக்கு?தவிரவும்,இப்ப வேற வழியுமில்லையே!எத்தனை நாள் இப்படியே ஓட்டறது/,,அவனுக்குத் தெரியல...இல்ல அவனுக்கு தெரிஞ்சும் இருக்கலாம்,,பட்,ஸ்டெப் எடுக்கப்,பயப்படறான்,,மனைவிக்கு,மனநோயாளின்னு பேர் வந்துடுமோன்னு,தயக்கமா இருக்கலாம்,,,நாமதான் எடுத்து சொல்லணும்’’என்று,மனைவியைத் தேற்றினார்,,,,
அத்தியாயம் 19
சைக்கியா டிரிஸ்ட் ஆஸ்தா மரத்துவமனையில்,வெளியே நாற்காலியில் காத்திருந்தான்,புருஷோத்,,,உள்ளே,கவுன்சிலிங் அறையில்,வைஷாலியும்,டாக்டர் ஆஸ்தாவும் மட்டும்,,,,புருஷோத்துக்கு ஒரு விட பட பட ப்பு இருந்தது,,,,உள்ளே,வைஷாலியை அனுப்பி ஒரு மணி நேரமாயிற்று,,,வெளியில் வந்து,மருத்துவர் என்ன சொல்வாரோ,என்ற தவிப்புடனே அமர்ந்திருந்தான்,
,,கடந்த பத்து நாட்களாகவே,புருஷோத் மனதில் ,நினைத்துக் கொண்டுதானிருக்கிறான்,--வைஷாலியை ஒரு மனநல நிபுணரிடம்,அழைத்துப் போக வேண்டுமென்று,,
,,ஆனால் அது நினைப்போடு நின்றது...நடப்பில் கொண்டுவர விடாமல் அவனை எதுவோ ஒன்று,தடுத்தது உண்மைதான்,,,ஒரு வேலை இன்றோ நாளையோ தானாகவே சரியாகி விட்டால்?என்ற நப்பாசையிலேயே காலம் கடத்தி வந்தான்,,
,,ஆனால் அம்மா,அப்பா,மற்றும்,நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில்,மனதைத் தயார் செய்து கொண்டு,மனைவியை அழைத்து வந்து விட்டான்,,,,,உள்ளே அழைக்கப்பட்டான்,புருஷோத் ,,,வெளியே அமர்த்தப்பட்டாள் வைஷாலி,,,,இந்த உள்ளே வெளியே விளையாட்டில்தான் ,வைஷூவை,அவள் மனதை ,படித்து முடித்தார் மருத்துவர் ,,,,
‘’உக்காருங்க புருஷோத்,,,ஏன் இவ்வளவு சோகம் முகத்துல?’’
என் மனைவி நலமாக இல்லையே,,,அதனை நான் கோழி அடித்து,குழம்பு வைத்தா கொண்டாட முடியும்?என்று நினைத்துக் கொண்டான்,,,சொல்லவில்லை,,,
‘’இல்லை மேடம்,,,வைஷாலி பத்தின கவலைதான்’’
‘’நோ,,நோ,,நாட் நெஸசேரி ,,,அவளுக்கு ஒண்ணுமில்ல,,சின்ன மன அழுத்தம்,,டிப்ரெஷந்தான்,,,,சீக்கிரம் சரியாயிடுவா’’
டாக்டர் ஆஸ்தாவிற்கு ,வயது எழுபதுகளில்,இருக்குமென்பதால்,உரிமையுடன் ஒருமையில்,விளித்தாள் வைஷாலியை,,,,
‘’மேடம்,,,லைஃப் நார்மலாதான் போயிட்டுருக்கு,,,ஏன் இப்படின்னு’’
‘’அப்பிடி நீங்க நினைக்கிறீங்க,,,,ஆனா,அவ நார்மல் லைஃப் ல இல்ல...சமீபத்துல,அவளுக்குப்,பிடிக்காத,விரும்பத்தகாத.கொஞ்சம் அதிச்சியானதுன்னு கூட சொல்லலாம்,அப்படிபட்ட ஏதோ ஒரு சம்பவம் அவ வாழ்க்கையில,இடறியிருக்கு,,,,வைஷாலியோட மனசு அதிலேயே,சிக்கிருச்சி....அவளாலதன்னை மீட்டுக் கொண்டு வரமுடியல.....பெரும் போராட்டத்துக்குப் பின்னால,மைண்ட் டிப்ரேஷனுக்குப்,போயிருச்சி,,,,’’
‘’உங்ககிட்ட ஏதாவது சொன்னாளா,மேடம்’’
‘’தெளிவா எதுவும் சொல்லலை,,பட், அவ பிறந்த வீட்டு சமாச்சாரங்கள் தொடர்பா,ஏதாவது பாதிப்பு இருக்கலாம்னு,அவ கூடப் பேசினதுல ஒரு மாதிரியா நான் புரி ஞ்சிக்கிட்டேன், ,,,’’
‘’மேடம்,,ஐ ஆம் ஷாக்கிங்க்....என் ஃபாதர் இன் லா வீட்டோட நாங்க,டச் லேயே இல்லையே,,,,!தென்,ஹவ் இஸ் இட் பாசிபிள் ?
‘’ஐ டோன்ட் நோ யுவர் ஃபேமிலி மேட்டர்ஸ்,,,,பட்,நிச்சயம் ஏதோ நடந்திருக்கு,, இனி,நீங்க இந்த ஆங்கிள்ல யோசிச்சு,ஏதாவது கண்டுபிடிக்க முடியுமான்னு பாருங்க,,,,ஒரு வாரம் கழிச்சி,அவளையும் கூட்டிக்கிட்டு வந்து,என்னன்னு,சொல்லுங்க,,,அதுவரை டேப்லட்ஸ்சை கண்டினியு பண்ணட்டும்,,,பட்,புருஷோத்,,,திஸ் இஸ் வெரி வெரி சுமால் பிராபளம் ...காரணத்தை மட்டும் கண்டு பிடிச்சிட்டோம்னா,ஈஸியா சரி பண்ணிடலாம்,,,,’’என்று ஒரு வாறாக,புருஷோத்தை தேற்றி அனுப்பினார் ஆஸ்தா,,,
 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Nice update. What she is doing is not absolutely right. She can talk to her husband openly. She is putting everybody life in a critical way.
 
Top