Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne--5

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
மூவரையும் அவர்களது உடமைகளையும் மாறி மாறிப் பார்த்தாள் ..அவள் கண்கள் அலட்சியம் ,ஆச்சரியம் ,அதிர்ச்சி,மகிழ்ச்சி,என்று உணர்வுகளால் முன்னேறியது ,,,கடைசியில் வாய் விட்டு வைஷூ என்று கத்தி அழுதவள் ஓடி வந்து அக்காவைக் கட்டிக் கொண்டாள் ...இருவரும் வாசலிலேயே கரைந்து முடித்தார்கள்
..சிறிது சுதாரித்து கண்களைத் துடைத்துக் கொண்ட சத்யா சுஜியை தூக்கிக் கொண்டு அக்கா,அத்தானை ‘’வாங்க ,,உள்ளே வாங்க’’என்றாள்
..தயங்கியபடி இருவரும் வீட்டுக்குள் சென்றார்கள் ..உள்ளே விளக்கேற்றி க்கொண்டிருந்த்த அவள் அம்மா ஹாலில் எட்டிப் பார்த்து மகளைக் கண்டதும் ‘’அடி என் ராஜாத்தி’’என வேக நடை போட்டு வந்து மகளைக் கட்டிக் கொண்டாள் .
.சத்யாவைப் போல பிரேமாவிற்கு அதிர்ச்சி ஆச்சரியம் எல்லாம் இல்லை .ஏனெனில் அது தாய்மை ..மகளைக் கண்ணால் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் ,எப்பொழுதும் மகளை அகக்கண்ணில் நிறுத்தி ஆசை ஆசையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ,நிழல் திரண்டு நிஜமாய் நின்றது பரவசம் மட்டுமே!!
...அது வரை உள்ளே உறைந்திருந்த தாய்மை திரவ வடிவில் ,கண்வழி கண்ணீராய் ,கை வழி ஆதூரத் தழுவலாய் உடல் வழி பாசப் பதிவுச் சிதறலாய் ,வெளிப்பட ,மகளை இறுக்கி அனைத்து ஒரு உம்மா கொடுத்தாள் அம்மா
..அம்மாவின் பாதங்களை கண்ணீரால் நனைத்தாள் வைஷாலி ...அவளது கண்ணீர்த் துளிகள் தாயிடம் மன்னிக்கச் சொல்லி கதறின ..மீண்டும் தன்னை மனதுக்குள் கருவாய் ஏற்று கன்றாய் பிரசவிக்க கோரின ....தாய் மக்களின் பாசப்ரவாகத்தில் திகைத்து நின்றார்கள் புருஷோத் –சுஜித்ரா
...’’அம்மா இவ தாம்மா உன்னோட பேத்தீ ‘’ என்று மகளை இழுத்து தாயின் மீது தள்ளினாள் வைஷாலி ..வைஷாலி பேத்தியைத் தூக்கி முத்தமிட்டு இறக்கி விட்டு மருமகனைப் பார்த்தாள்
...இவரை மாப்பிள்ளை ஆகவும் பார்த்ததில்லை.. மணவறையிலும் பார்த்ததில்லை ..ஐந்து வருடங்களுக்குப் பிறகு ,கணவனையும் மகளையும் சேர்த்தே அறிமுகம் செய்கிறாள் பெற்ற பெண் ,,,இது காலக்கோடுமையா அல்லது முன் ஜென்ம வினையின் மிச்சமா ?எச்சமா ?...வணக்கம் என்று கை கூப்பினான்புருஷோத்...பதிலுக்கு வணங்கி விட்டு ,அவனை இருக்கையில் அமரச் சொல்லி கை காட்டினாள் பிரேமா
...சத்யா புருஷோத் சுஜி இருவருக்கும் பிஸ்கட் காபி தந்து கவனித்துக் கொள்ள ,அம்மாவும் பெண்ணும் உள்ளறையில் அமர்ந்து ,பிரிவுக்கதை பேசி ,அழுது, ஆத்திரப்பட்டு ,சமாதானமாகி ,மகிழ்ந்து எல்லா வேலையும் முடித்தார்கள் ...
சிதம்பரமும் தேவாவும் வீட்டில் இல்லையாதலால் ,புருஷோத் தனித்து விடப்பட்டான் ....எனவே வைஷாலியைக் கூப்பிட்டு வெளியே ஒரு ரவுண்டு போயி வருவதாகச் சொல்லி கிளம்பினான். சத்யாவும் சுஜியும் ஒட்டிக் கொள்ள ,பிரேமா வைஷாலி பேச்சை தொடர்ந்தார்கள் ...ஒரு பெரிய களேபரத்தை எதிர் பார்த்து வந்தவன் ,நிலைமை கைக்கு அடக்கமாய் இருப்பதை உணர்ந்து ,நிம்மதிப்பெருமூச்சுடன் செருப்பை மாட்டிக்கொண்டு லிஃப்டைத் தவிர்த்து படி வழி இறங்கி நடந்தான் ,,,
அத்தியாயம்—4
சென்னையில் என்றும் மாறாத ஒரு விஷயம் மக்கள் கூட்டம் ..எதிரெதிர் திசைகளில் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ..இன்று நானும் அந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு துளியாகப் போனேன் என்று எண்ணிக்கொண்ட புருஷோத் மணி பார்த்தான் ,,ஒன்பது ..வீட்டை விட்டு வந்து இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டதா?வயிறு பசி எடுத்தது .முதன் முதலாய் மாமனார் வீட்டில் சாப்பிடப் போகிறோம் என்று கவனமாக வெளி உணவுகளைத் தவிர்த்துவிட்டு வந்திருந்த்தான் புருஷோத்,மாமியார் நன்றாக சமைப்பாள் என்று வைஷூ சொல்லியிருக்கிறாள் ...ஒரு நல்ல சாப்பாட்டை இழக்க மனமில்லாமல் போன மாதிரியே திரும்பி வந்த்திருந்த்தான்
..வீட்டை அடைந்த்ததும் அழைப்பு மணியை அழுத்கப்போனான் ,,,கதவிடுக்கின் வழியே வெளிச்சம் தெரிந்தததால் ,கதவைக் கைகளால் தள்ளினான் ..உண்மைதான்,,,கதவு திறந்த்துதான் இருந்தது ...உள்ளே சென்று செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நோக்கினான் ...சத்தமே இல்லை ..அதற்க்குள்ளாகவா எல்லாரும் தூங்கி இருப்பார்கள்
?வாய்ப்பில்லையே !சுஜிக்குட்டி கூடவா இங்கு வந்து அமைதி யாகிவிட்டாள் ....ஹாலில் போய் எட்டிப்பார்த்தான்,,அங்கு பின்பக்கம் காட்டிக்கொண்டு சிதம்பரமும்,,தேவாவும் ஆளுக்கொரு பக்கமாய் நின்று கொண்டிருந்த்தார்கள் ...இவர்களை என்ன சொல்லி அழைப்பது?எப்படி பேச்சைத் துவங்குவது ,என்று யோசித்துக்கொண்டே பார்வயை சுழற்றிய போதுதான் அந்த காட்சி கண்களுக்கு தெரிந்தது.
...கீழே தரையில் தலை விரி கோலமாய் கண்கள் சிவந்து ,கன்னம் வீங்கி, வாயில் ரத்தம் வழிய விக்கி விக்கி அழுபவள் யார்?வைஷாலியா?என் காதல் மனைவியா?ஐயோ என் கண்மணிக்கு என்ன ஆயிற்று?
மாமனார் வீட்டுக்கென ஆசையுடன் வாங்கி வந்த இனிப்பு பழங்களை ,நின்ற நிலையில் ‘’தொப்பென போட்டு விட்டு ,ஓடிப்போய் மனைவியைத் தூக்கி தன்னோடு சேர்த்தான் புருஷோத்
...’’வைஷூ ,என்னாச்சு? ஏன் அழறே ?எப்பிடி ரத்தம்?’’என்று கேட்டுக் கொண்டே தனது கைக்குட்டையால் அவளது முகத்தை துடைத்து ,தலை முடியை ஒதுக்கி விட்டு ,தண்ணீர் குடிக்க வைத்தான் ....வைஷூவின் அண்ணனும் அப்பாவும் கோபம் குறையாமல் மூச்சிறைத்தபடி நின்றிருத்தனர் ,,என்னதான் ஆயிற்று இவர்கள் எல்லோருக்கும் ?
அப்பாவும் மகனும் புருஷோத்தை ஒரு புழுவைப் பார்ப்பது போல் அற்பமாக பார்த்தார்கள் ..’’வைஷூ..என்ன நடந்துச்சுன்னு சொல்லு ‘’என்றான் கண்டிப்பாய் ....
‘’ஒண்ணுமில்ல...கீழே வழுக்கி விழுந்துட்டேன் ....வாயில இடிச்சிருச்சி ‘’என்று உள்ளங்கையைத் திறந்தாள் ...அதற்குள் ரத்தம் தோய்ந்த பல் ஒன்று இருந்தது ..மாமியாரரும் கொழுந்தியாளும் எங்கே போனார்கள்?

‘’உங்க அம்மா எங்கே/’’...பதிலில்லை ..மகளைத்தேடினான் ...டைனிங் டேபிளுக்கு கீழே நடுங்கியவாறு மிரண்ட கண்களுடன் அமர்ந்திருந்த சுஜியை மறு கையால் அனைத்துக் கொண்டான் ..
‘’அம்மா கீழ விழுந்ததுல பயந்த்துட்டியாடா?’’
‘’இல்ல டாடி ,,மம்மி பொய் சொல்றாங்க..கீழ விழல ..அவங்க அடிச்சு கீழே தள்ளிட்டாங்க ...’’என்று தேவாவைக் கை காட்டினாள் குழந்தை. ..இப்பொழுது புருஷோத்துக்கு முழுப்படமும் கிடைத்து விட்டது ...நினைத்தேன் ..நினைத்தேன்..இப்படி ஏதாவது நடக்குமென்று எதிர் பார்த்தேன் ...ஆனால் நடக்காமலிருக்கட்டும் என விரும்பினேன் ..ஆனால் எனது விருப்பம் தொலைந்து ,நான் எதிர் பார்த்தது போலவே நடந்து விட்டது,,,புருஷோத் மனைவி மகளை விட்டு எழுந்து ,தேவாவை முறைத்துப் பார்த்தான் ,,,உள்ளே பொங்கிய ஆத்திரமும் ,தான் மனைவியை அடித்து விட்டானே என்ற ஈகோ வும் வார்த்தைகள் வழி வக்கிரமாய் வந்து விழுந்தது .....
‘’ஏண்டா !நீயெல்லாம் ஒரு ஆம்பளையா ?....பொட்டை மாதிரி பொம்பளையைப் போயி கண்ணு மன்னு தெரியாம அடிச்சுப் போட்டிருக்கிறே ..ஃபூல் “”......சிரித்தான் தேவா ,,தலையை மேலும் கீழும் ஆட்டினான் ....
‘’வாங்க சார் ,,,ஆம்பள சிங்கம்...ஒரு பொம்பளப் புள்ள அகப்பட்டான்னு ,கூட்டிக்கிட்டு வேர ஸ்டேட் ஒடினிங்களே ....நீங்க பண்ணின வேலைக்குப் பேரு பொட்டைத்தனமில்லையா ?’’என்று எகிறினான் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் தட்டி விட்டபடி ...
‘’அட!மூளையில்லாதவனே ....அது என் ஊருடா...எனக்கு வீடு வாசல் வேலை எல்லாம் அங்கதான் ...அதான் போனேன் ,,,ஓடிபோகணும்னு எனக்கு என்னடா அவசியம் ?சம்பந்தமில்லாம உளறிக்கிட்டு இருக்கரே ..’’
‘’நீ இந்த வீட்டுக்கே சம்பந்த்தமில்லாத ஆளுய்யா ..நடு வீட்டுல நிணுக்கிட்டு நியாயம் பேசிக்கிட்டிருக்கரே ...’’
‘’உன் அக்காவோட புருஷனுக்கும் ,உங்க வீட்டுக்கும் சம்பந்தம் இல்லையாடா.....?
‘’அக்கா புருஷனா ,,,ஹ ...இங்க பார்யா காமெடியை ...அப்பிடின்னு நாங்க சொன்னமா?...அவளா சொல்லிக்கிட்டா...அவளா கட்டிக்கிட்டா...இந்தா இன்னிக்கு கண்ணைப் பூழிஞ்சிக்கிட்டு வந்து நீக்காறா ...’’என்றான் தேவா படு அலட்சியமான முக பாவத்துடன் ...புருஷோத்துக்கு சகலமும் ஆடிப்போனது....ஓ ...இவர்களுக்கு அடிப்படையில் என்னை வீட்டு மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொள்வதிலேயே பிரச்சினை இருக்கிறதா?அப்படியென்றால் மற்ற எதைப் பற்றியும் பேசுவது அழகில்லை தான் ..ஆதி அர்த்தமும் இல்லைதான் ...திரும்பி மாமனாரைப் பார்த்தான்...அவர் தனது காதுகளை வீட்டுக்குள்ளும் ,கண்களை வெளியேயும் வீசியபடி தனக்கும் நடந்து கொண்டிருக்கும் சண்டைக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது போல நின்றிருந்தார்.....சுத்தம் ....!புருஷோத் மகளைத் தூக்கிக்கொண்டு பால்கனியில் போயி நின்று கொண்டான்...அவர்கள் வீட்டு விவகாரத்தை அவர்களே பேசித்தீர்த்துக் கொள்ளட்டும் ..என்னைத்தான் மூன்றாவது மனிதன் என்று சொல்லி விட்டானே அந்த முண்டக்கண்ணன் ....உள்ளே சத்தம் நின்ற பாடில்லை ...வைஷூ அழுதபடி ஏதோ சொல்கிறாள் ...தேவா பதிலுக்கு கத்துகிறான் ..சாபமிடுகிறான் ,,சிதம்பரம் கனத்த குரலில் கர்ஜிக்கிறார்.,,,திடீர் என்று பெண்கள் சத்தம் பெரிதாகக்கேட்கவே ,திரும்பிப் பார்த்தான் புருஷோத் ..உள்லறையிலிருந்து ,பிரேமாவும் சத்யாவும் ,வெளியே வந்து சண்டையைப் பார்த்து அழுகிறார்கள் ...சண்டையின் டெசிபல் கூடுகிறது ...நேரம்தான் கடந்து கொண்டிருந்ததே தவிர சண்டை ஓய்ந்து சமாதானக்கொடி பரப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் தென்படவில்லை ...மணி பத்தரை ..இனியும் இங்கிருப்பதில்,நம்பிக்கையுடன் காத்திருப்பதில்,புண்ணியமில்லை ...நரகலில் (மலம் )அமர்ந்திருப்பது போல அருவெறுப்பாக இருக்கிறது..கிளம்ப வேண்டியதுதான்...உள்ளே சென்று மனைவியிடம் ‘’வைஷூ...கிளம்பு.ஊருக்குத் திரும்பிடலாம்...”’என்றான்.
’’கிளம்பும்மா ,,,கிளம்பு...நீ போன முறை இவரு கூடப் போனப்போ ,போயிட்டியென்னு இருந்துச்சு....இப்ப வந்துட்டீயேனு இருக்கு....நீ நல்ல நேரத்துல உம் புருஷன் புள்ளையை,கூட்டிக்கிட்டு இடத்தை காலி பண்ணு... அதான் பெட்டர்..’’’என்றான் தேவா ...
‘’இது உன் வீடா?பெரிசா அதிகாரம் பண்றே’’—வைஷூ
‘’இது என் வீடா இல்லையாங்கிரது முக்கியமில்ல...ஆனா நிச்சயமா உன் வீடு இல்ல...அது உறுதி..’........பொறுமையிழந்து ‘’ப்ளீஸ் பேச்சை நிறுத்திட்டு வா வைஷூ’’’’என்றான் புருஷோத் கெஞ்சியபடி .
‘’இல்ல..புருஷோத்..எங்க அம்மா,அப்பா,எண்ணய ஏத்துகிட்டாங்க,,,இவன் கொழுத்துப்போய், கலாட்டா பண்ணிக்கிட்டிருக்கான் ..’’

‘’அப்ப, அதை அவங்க வாயால சொல்ல சொல்லு ,,,உங்க அண்ணனை அடக்கச் சொல்லு......நான் ஒத்துக்கறேன் ‘’என்று நியாயமான ஒரு வாதத்தை முன் வைத்தான் புருஷோத்.
...கணவன் கூற்றில் உண்மையும்,நியாயமும்,இருப்பதாகத் தோன்றவே ,வைஷூ அம்மா அப்பாவை மாறி மாறிப் பார்த்தாள் ..ஏக்கத்துடன் ....அவர்கள் வாயைத் திறந்து இவன் வாயை மூடமாட்டார்களா?....
.அம்மா தலையைகுனிந்து கொண்டாள் ..அப்பா தலையை நிமிர்த்தி விட்டார்....இருவரிடமிருந்தும் பதிலில்லை....வைஷூ பரிதாபமாக கணவனைப் பார்க்க,அவன்,’’நான் என்னவென புரிந்து கொள்வதேன நீயே சொல் ‘’என்பது போல மனைவியைப் பார்த்தான் ...பேச்சடங்கிய சூழலில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனக்கொதிப்பு மேலோங்கியது
..கணவன் சொற்படி கேட்பதுதான் சரி என முடிவு செய்தவளாய் ,வைஷூ,தலையை அள்ளி முடிந்து,முகத்தைகழுவி ,துப்பட்டாவால் துடைத்து,தண்ணீர் கோரி குடித்து விட்டு ,பெட்டியைக் கையில் எடுக்கவும்,கதறி விட்டாள் பிரேமா..
‘’பாவி!நான் பேச வாயில்லாதபடி பண்ணிட்டியெடி....!நீ தப்பு செஞ்சுட்டு வந்து நிக்கறே !,,அவன் தட்டி கேக்கறான் ..இதுல யாருக்குன்னுடி பேசுவேன் நான் ?....இந்த ராத்திரியில எங்கேடி போவ நீ?’’என்று தலையில் கை வைத்து உட்கார்ந்த்தாள் பிரேமா ...
;;ஏம்மா/அப்பா கூட எங்கே போவன்னுதான் கேட்கறியே தவிர,எதுக்குடி போறேன்னு சொல்ல மாட்டேங்கறே பார்த்தியா ?பரவாயில்லம்மா ..போறதுன்னு ஆயிருச்சி ...அது எப்பவா இருந்தா என்ன ...நான் கெளம்பறேன்...என்னய பிளேஸ் பண்ணும்மா’’ என்று வைஷூ அம்மா காலில் விழ,அவள் அழ ,இவள் எழ ,சத்யாவும் அழுகையில் கலக்க,இவர்களைப் பார்த்து குழந்தை கத்த,புருஷோத் மகளைத் தேற்ற ,மனைவியை ஆற்ற ,ஏகக் களேபரத்துடன் இருந்தது,சி-5 பிளோட்டின் அன்றய இரவு..
.அப்பாவும் மகனும் ,மேற்கண்ட காட்சிகளை உள்ளுக்குள் ஒரு குரூர திருப்தியுடன் ,பார்த்துக் கொண்டிருந்தார்கள்..ஆனால், அவர்களையும் அவசரப்பட்டு வில்லன்கள் பட்டியலில் சேர்த்து விடமுடியாது ...ஏனெனில் ,,ஐந்து வருடங்களுக்கு முன்பாக ,வைஷூ,காதலனுடன் ,படி தாண்டி சென்றபோது,அவள் தன்னுடனே எடுத்துச் சென்ற ,குடும்பத்தின் மானம்,வீட்டின் கௌரவம் ,வீட்டில் இருப்பொருக்கான சமூக மரியாதை ,பல நாள் இரவுத்தூக்கம்,ஆகியவற்ற்றுக்கு பலி கடா ஆனது அவர்கள்தானே ,,,,,வீணர்களின் கேலிப்பார்வை ,கிண்டல் பேச்சுகள்,சாடல் குறிப்புகள்,இவற்றை எதிர் கொண்ட வலி அவர்கள்தானே அறிவார்கள். அவளால் பறி போன தூக்கத்தையும் ,பகைத்துக் கொண்ட ,நெருங்கிய உறவுகளையும்,கெடுத்துக் கொண்ட உடல் நலத்தையும் ,படுத்து விட்ட மன நலத்தையும் ,வைஷாலியால் இன்று திருப்பித் தர இயலுமா என்ன? பொதுவாக தவறுகள்,திருத்தப்படலாம்,என்று சொல்லப்படுவது உண்டு...ஆனால் ,எப்பொழுதும்,எவராலும்,எதனாலும்,சரி செய்ய இயலாத,தவறுகளில் ,காலங்களைக் கடந்து நிற்கும் வசவுகளில் ,கரைக்க முடியாத கறைகளில் ,பெண்களின் காதலன் உடனான இந்த உடன் போக்கும் ஒன்று..அத்தகையதொரு தவறைச் செய்து விட்டு ,இன்று செய்வதறியாது,கை பிசைந்து,நிற்பவள் வைஷாலி..உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்..ஐயோ அம்மா என்றால்தான் முடியுமா அல்லது முடிந்து விடுமா?
அத்தியாயம்--5
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு இரவு என்றும் பாராமல் ,ஒரு மெட்ரோ பாலிட்டன் சிட்டி யின் வேறொரு முகம் பற்றிய பயமும் இல்லாமல்,மனைவி மகளுடன் ,சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து அமர்ந்து விட்டான் புருஷோத்....புனைவிற்கு இப்பொழுது ரயில் எதும் இருக்கிறதா?ஒன்றும் தெரியவில்லை.
...ரயில் வரும் வரை மனைவி மகளைப், பாதுகாக்க வேண்டும்..அம்மா வீட்டில் தன் பவிஷூ காண்பிப்பதற்க்காக வைஷூ நகைகளை வேறு அதிகப்படியாக போட்டுக்கொண்டு வந்திருந்த்தாள்....ஆனால் அவள் வீட்டில் வைஷூவிற்க்கும் வரவேற்ப்பில்லை...அவள் பவிஷூக்கும் பலனில்லை...சரி! நல்லாயிருக்கட்டும் நம்மைத் துரத்தியவர்கள் என்று நினைத்துக் கொண்டான் புருஷோத்.
..நல்ல ஆத்மாக்கள் புண்படும்போது ,அவர்களுடைய வாழ்த்தோலி கூட எதிர்மறை பலன் களையே தரும் என்பது தேவா குடும்பத்திற்க்கு தெரியாது போலும்..தெரியாததைக் கற்றுக் கொடுப்பதுதானே காலத்தின் பணி...புருஷோத் இடுப்பில் கை வைத்தவாறு ஸ்டேஷனை நோட்டம் விட்டான்...இதோ படுத்துக்கிடக்கிறார்களே ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள்தான் இப்போதைய துணை....!உறவென்று நம்பிப் போனவர்கள் கையை உதறி விட்டார்கள்..இருக்கின்ற நபர்களை,கிடைக்கின்ற மனிதர்களை உறவாக ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்...மாத்தி யோசி என்பது இதுதான் போலும்...நீள நாற்காலிகளில் சுஜியைப் படுக்க வைத்துவிட்டு,உடைமகளுடன் கணவனும் மனைவியும்,அமர்ந்த்தார்கள்...
‘’போன மச்சான் திரும்பி வந்தான்ற கதையா,ஸ்டேஷன்லேர்ந்து,போன வேகத்துல,யு டர்ன் அடிச்சி திரும்ப வந்துட்டோம் பார்த்தியா?’’ என்று சோக சூழலை ஜோக் சூழலாக மாற்ற முயன்றான் புருஷோத்
...ஆனால் இதைக்கேட்ட வைஷூவின் முகம் மேலும் இறுகியது...இரண்டு விரல்களால் உதடுகளைத் தட்டிக் கொண்டான் புருஷோத்...’’தப்பான நேரத்தில் தப்பான ஜோக்....கீப் கோயட் ‘’என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்..
..சிறிது நேரம் கழித்து,’’சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வறேன்....டேக் கேர் ‘’என்று வைஷூவிடம் சொல்லி விட்டு கடைப்பக்கமாக போனான் புருஷோத்......அவன் எப்பொழுதடா நகருவான் என்று காத்திருந்தது போல ,துப்பட்டாவால் ,தலையை மூடிக்கொண்டு ,உள்ளுக்குள் தேங்கிய வெப்பம் தீர,ஒரு பாடு அழுது தீர்த்தாள் வைஷாலி ....அழுத தடம் தெரியாமல் இருக்க,ஈரத்துனியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் ...சப்பாத்திகள் வாங்கி வந்தான் புருஷோத்...’’சாப்பிடு,வைஷூ...வீட்டுல சுஜி ஏதாவது சாபிட்டாளா?’’என்றவன் தானும் சாப்பிடத் துவாங்கினான்...’’
‘’இல்ல’’-என்றபடி சாப்பாட்டில் கை வைத்தாள்...வைஷூ...
‘’ஒன்பது மணி வரைக்கும் அவளுக்கு எதுவும் ஊட்டி விடாமலா இருந்தே?’’என்றான் ஆச்சரியமாக....
‘’ஊட்டி விடறாப்புல இல்ல வீட்டு சூழ்நிலை’’
‘’வைஷூ..ப்ராப்ளம் எப்ப ஸ்டார்ட் ஆச்சு?நான் வெளியே கிளம்பும் போது ,ஹாப்பி யாகத்தானே ,பேசிக்கிட்டு இருந்தீங்க..’’
‘’ஆமா...அப்புறமும் நல்லாத்தான் போயிட்டு இருந்த்ச்சு...’’
‘’சரி..’’
‘’நான் என்ன சினிமா கதையா சொல்லிட்டிருக்கேன் ,,ஆர்வமா கேக்கறீங்க...’’
‘’இல்லம்மா...இன்னும் எனக்கு வீட்டுல என்ன நடந்திருக்கும்னு கிளியராப் புரியல...அதான் கேட்டேன்..நத்திங் ராங்’’
‘’ப்ச ,,,என்னத்த சொல்ல...தேவா வெளிய இருந்து வரும் போதே புயலாகத்தான் வந்தான் ..அவன் ஃபிரண்ட் எவனோ ,நம்மளைப் பார்த்துட்டு,இவன் கிட்டப் போட்டுக்குடுத்திருக்கான்....அவன் என்ன சொன்னானோ தெரியல,,வீட்டுல வந்து குதிகுதின்னு குதிச்சான் ,,,கத்தினான்...’’
‘’‘என்னதான் சொல்றான் அவன்?’’
‘’உன்னை யாருடி இங்க வெத்தலை பாக்கு வச்சு அழைச்சா?..நீ பண்ணி வச்சுட்டுப் போன கேவலம்லாம் பத்தாதா?அதெல்லாம் இப்ப ஆறியிருக்கும்...மாறியிருக்கும்...ரெனிவல் பண்ணிட்டுப் போலாம்னு வந்தியா?இல்ல..இன்னுமா இதுங்க நாலும் ,கயித்துல தொங்காம.காலத்தை ஒட்டிக்கிட்டு இருக்குதுங்கன்னு பார்க்க வந்தியா?அப்பிடின்னு என்னென்னவோ பேசறான் ...நடுவுல அப்பாவும் வந்துட்டாரு ‘’
‘’அவரு ஒண்ணும் சொல்லலையா?’’
‘’எண்ணயப் பார்த்தது அழுதாரு...என்‌ அப்பாகிட்டப் போனேன் ,,என்கிட்ட எதுவும் பேசல.....அம்மாகிட்ட’’ஏண்டி..உன் ரெண்டாவது பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் கட்டி அனுப்பணும்னு எண்ணமில்லையா உனக்கு?ஓடுகாலியை உள்ள கூப்ட்டு உக்கார வச்சி கொஞ்சிக்கிட்டு இருக்கே..’’அப்பிடின்னு திட்டீ அம்மாவை அடிக்கப் போனாரு ...சத்யா தடுத்துட்டா,,’’
‘’சரி அவரு கதை அப்பிடி..தேவா எதுக்கு உன்னைய அடிச்சான்?’’
‘’அதான்..இப்பிடி ஆள் ஆளுக்காய் பேச,பேச்சு வளர்ந்துருச்சூ....நீ வீட்டை விட்டு ஓடிப்போனதால்தான் சத்யாவுக்கு மாபிள்ளையே அமைய மாட்டேங்குதுன்னு பொலம்பினான்...ஒனக்குத்தான் புத்தியில்ல..உலக அறிவில்ல ...படிச்சா முட்டாளாப் போன...உன்னயை கூட்டிக்கிட்டுப் போனானே,ஒரு முட்டாப்பய ,அவனுக்கும் அறிவில்லையா?உனக்கு அடுத்து ஒரு பொண்ணு இருக்காள்னு நினைக்காம சுயநலமாக் கிளம்பிட்டீங்களே ,,,,’’அப்பிடி இப்பிடினு பேசிக்கிட்டே போறான்.’’
‘’அடப்பாவி..அப்பிடியெல்லாமா பேசினான்..?’’
‘’ஆமா..பின்ன பொய்யா சொல்றேன்....உங்களை ரொம்ப மோசமாத்திட்டவும் தான் எனக்குப் பொறுக்கலை ...இங்க பாரு..என்னயத் திட்டு...உன் கூடப் பொறந்த பாவத்துக்காக கேட்டுத் தொலைக்கிறேன்....அவரைப் பத்திப் பேசறதுக் கெல்லாம் உனக்கு உரிமையும் கிடையாது...அருகதையும் கிடையாதுன்னு சொன்னேன் ‘’
‘’அப்புறம்’’
‘’அதுக்குத்தான் ,,,செய்யறதையும் செஞ்சுட்டு, வாய் வேறயாடி பேசறன்னு பாய்ஞ்சு வந்து அடிச்சி கீழே தள்ளி,மிதிச்சான்...நான் ஐயோ அம்மானு கத்தவும்,நடிக்காதேடின்னு திரும்பவும்...’’
‘’வேண்டாம்.. வேண்டாம்....சொல்லாத..போதும்..என்னால கேக்க முடியல....அந்த பேச்சை விட்டுடு’’என்று சொன்னவன் ,கை கழுவி விட்டு வந்து நாற்காலியில் சாய்ந்து கொண்டான்
..வைஷாலிக்கு கணவனை பார்க்க சங்கடமாக இருந்தது...என்னை ஒருவன் அடித்தான் என்பதை பார்க்கக் கூட அல்ல..கேட்கவே சகிக்காத இவர் எங்கே! தங்கை என்றோ பெண் என்றோ பாராமல் மாட்டை அடிப்பது போல் அடித்த தேவா எங்கே?ஆண்கள் தான் இருவரும்...ஆனாலும் எத்தனை வித்தியாசம்?உறவேன்று வந்ததெல்லாம் உறவாகிடுமா என்ன..
.ஒரு பெரிய கொதிகலனுக்குள் போய் மீண்டு வந்த ஆயாசத்திற்கு வந்து விட்டிருந்தாள் .வைஷூ---ஐந்து மணி நேரத்திற்குள்....போதுமடா சாமி....நான் வளர்ந்த வீடா அது! நம்ப முடிய வில்லையே .....ரத்த பந்தங்களும் சொந்தங்களும் உள்ளதோரு ஊரில் ,ரயில் நிலயத்தில் ,அனாதைகளாய் ,உடமைகளுள் ஒன்றாய் படுத்துக் கிடந்தன....அந்த மூன்று ஜீவன்கள்...நித்திரையாவது நிம்மதி தரட்டும் ,,,தூக்கம் என்பது தற்காலிக மரணம்தானே...ஃபீனிக்ஸ் பறவைகளாய் அவை மரணத்திலிருந்து மீண்டெழுந்து மண்ணில் மகிழ்வுடன் வாழட்டும்,,,,,
 
Top