Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne--10

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அன்னை தெரசா ஆதரவற்றோர் விடுதி அது,அன்னை தெரசா உடலால் மறைந்தாலும்,அவரது ஆன்மாவும் ,அவரது பெயரும்,பல வழிகளில் ,பலர் மூலமாக,தன்னுடைய சேவையைதொடர்கின்றன,,,சுமார் இருநூறு பேர் தங்கியுள்ள,விடுதி அது,,,நீண்ட ஹாலும்,பல சிற்றறைகளும்,சுற்றிலும் தோட்டமும்,சிறிய கோவிலும் ,தியான அறையும்,பொழுது போக்கு அறையுமாய் ஆசிரமம் பார்வைக்கும் மனதுக்கும்,ரம்மியமாக,இருந்தது,
,,ஆசிரம நிர்வாகி,வைஷாலியை வரவேற்று,காபி தந்து உப சரித்து,ஆசிரமத்தை சுற்றிக் காண்பித்தார்,,,ஆங்காங்கே ஒடுங்கிய உடம்பும்,நடுங்கிய சுபாவமும் ஏங்கிய கண்களுமாய்,முதியோர்கள் உட்கார்ந்து கொண்டும் ,நின்று கொண்டும் இருந்த்தார்கள்...வேத னை யாகவும் வெறுப்பாகவும் இருந்தது,,வைஷாலிக்கு,,,உணவில் போட்டு தூக்கி எறியும் கறிவேப்பிலைக்கும் ,,தன்னை கருவாக்கி, உருவாக்கியவற் க்கும்,வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதே மனிதர்க்கு,என்று நினைத்துக் கொண்டாள் வைஷாலி,
,,தம்பதிகளாக இருக்கும் முதியோருக்கு,சிறிய தனியறை தரப்பட்டிருந்தது,,,இதை மிகவும் ரசித்தாள் வைஷாலி,,வயதான காலத்தில் தோள் சாய துணையும் தனிமையும் தேவைதான் முதியோருக்கு.
,,நல்ல உளவியல் அறிவும்,சிந்தனையும்,செயல்பாடும் உடைய வார்களால்தான் விடுதி நிர்வகிக்கப்படுகிறது என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் வைஷூ..விடுதி வாசிகளில் சமீபத்திய வரவுகளை,வைஷாலிக்கு,அறிமுகம் செய்து வைத்தாள் நிர்வாகி,
‘’இவங்க மிஸ்டராண்ட்மிசஸ் பூரணம்’’
‘’வணக்கம்’’கும்பிட்டாள் வைஷூ..
‘’இவங்க திருமதி,ரோசம்மாள்’’
நல்லாயிருக்கீங்களாம்மா?’’
‘’இவர் திரு,சம்பந்தம்’’
‘’ஐயா வணக்கம்’’
‘’இவங்கதிரு மற்றும் திருமதி சிதம்பரம்’’என்று சொல்லி முடிக்கவும்,நிர்வாகி கை காட்டிய திசையில் கண்களை பரவவிட்டவள்,நின்ற இடத்தில் அப்படியே உறைந்து போனாள்,,,,கடற்கரை மணலில் நிற்கையில்,அலை ஓடி வந்து திரும்புகையில்,கால்கள் ஈர மண்ணுக்குள் புதையுமே,அது போல தான் நிலத்திற்குள் செல்வதாய் உணர்ந்தாள்..உதடு உலர்ந்து போனாள் வைஷாலி,,ஏனெனில் அவள் எதிரில் கை கூப்பியபடி ,கூனி குறுகி நின்றது,வைஷாலியின் அப்பாவும்,அம்மாவும்
,,,இதயம் முழு வேகத்தில் அடித்தது வைஷாலிக்கு,,,எதையெல்லாம் மறக்க வேண்டுமென எதிர் திசையில் ஓடினேனோ ,சுற்றி வந்து தொடங்கிய புள்ளியிலேயே நிற்கிறேனே,,,,உலகம் உருண்டை என்பதை எனக்கு உரத்து சொல்கிறதா?அதுவும் இப்படி ஆதரவற்றோர் விடுதியில் எண் பெற்றோரா?நான் உயர்ந்து,எண் பெற்றோர் பொருளாதார நிலையில் தாழ்ந்து,,,,,இன்று நேருக்கு நேர் சந்தித்து,,,இது என்ன விளையாட்டு? யார் நடத்துவது?சரி,,ஆனது ஆயிற்று...இப்பொழுது என்ன செய்வது?அம்மா அப்பா வெனக் காட்டிகொண்டால்,என்னைபற்றி நிர்வாகி என்ன அபிப்ராயப் படுவார்? என்னுடைய இமேஜ் எவ்வளவு தூரம் டேமேஜ் ஆகும்?,,,அது ஒரு புறமிருக்க,எண் பெற்றோரின் ஆசிரம இருப்பிற்க்கும்,நிர்வாகி உடனடியாக உலை வைத்து விட்டால் என்ன செய்வது? அவர்கள் இங்கு என்ன சொல்லி ,எதற்க்காக சேர்ந்திருக்கிறார்கள்...என்பது தெரியவில்லை,,,
‘’மேடம் மேடம்,,,’’
‘’எஸ் ,,ப்ளீஸ்’’என்று சுதாரித்து. முன்னேறி,நடந்து,அடுத்தடுத்த முதியவர்களை சந்தித்து,முடித்து,சமையல் வகுப்பு எடுக்க அழைத்து செல்லப்பட்டாள்,,,மூளை வெற்றிடமாக இருந்தது,,,வழக்கமாக மைக்கை கையில் பிடித்ததும்,தங்கு ,தடையின்றி வந்து விழக்கூடிய செய்திகள்,இன்று தொண்டைக்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருக்கின்றன..எதையோ வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு,விட்டால் போதுமென,விமானம் ஏறி வீடு வந்து விழுந்தாள்..பசி தூக்கமில்லை...லதா அருகில் வந்து விசாரித்தாள்
‘’வைஷூ,,,சாப்பிட வாம்மா’’
‘’இல்ல அத்தை ,,தலை வலிக்குது,,,எனக்கு எதுவும் வேண்டாம்’’
‘’ஆமா!......இருக்காதா பின்னே!ஓயாத அலைச்சல்...அதன் டென்ஷன்ல தலை வலி வந்திருக்கும்,,பால் கொண்டு வந்து தரேன் ,,,சூடா குடிச்சிட்டுப் படு,,,’’என்று யதார்த்தமாக பேசிவிட்டு நகர்ந்தாள் லதா..மாமியாரின் உண்மையான,பாசாங்கில்லாத பாசமும் பரிவும்,அவளுள் சுய பச்சாதாபத்தை தோற்றுவித்தது,,,கண்களில் நீர் முட்டியது
,,,என் விதி என்னை துரத்தி துரத்தி அடிக்கிறது,,,ஓடவும் விடாமல்,ஒதுங்கவும் விடாமல் ,பாடாய் படுத்துகிறதே....நானெல்லாம் வாழ்வில் மகிழ்ச்சியாகவே இருக்கக்கூடாதா? நான் அதற்கு தகுதியற்றவளா?
ஒரே நாளில் மனம் குப்புற விழுந்து விட்டதே!இத்தனை நாட்கள் கழித்து,இத்தனை கருத்து வேறுபாடுக்ளுக்கு இடையில்.அப்பா அம்மாவை முழுதாகப் பார்த்து விட்டு,ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்ட பாவி நான்,,
,,மேலும் மேலும் பாவ மூட்டைகளை முதுகில் சுமக்கிறேனே,,,என்று மனம் குமைந்தவள்,உடல் அழுந்தியவள், அப்படியே தூங்கி போனாள்,,தூக்கத்தை பேய் என்கிறார்கள்...ஆனால் ,அது தான் அளவற்ற துன்பத்தில்,ஆறுதல் தருவதற்காய்.தாயாய் வந்து அனைத்துக் கொள்கிறது,,

அத்தியாயம் 17
தூங்கி எழுந்த பிறகு,உடல் ஓரளவு தெம்புக்கு வந்திருந்தாலும்,மனப் போராட்டம் ஓயவில்லை வைஷாலிக்கு,,பெற்றவர்களை பார்த்தும்,கட்டியணைத்து பேச முடியாத நிலை ஒரு பெண்ணுக்கு வருமா:?அதிலென்ன சந்தேகம்,,,இதோ வந்திருக்கிறதே எனக்கு!
அது சரி,,,அப்பா அம்மா ஆசிரமத்துக்கு வர வேண்டிய அவசியமென்ன?சொந்த வீடு என்னவாயிற்று?சத்யா,தேவா,,,எங்கே எப்படி யிருக்கிறார்கள்?நான்தான் பல குழப்பங்களில்,,பழைய வலியில்,ரணத்தில் இப்படி ஏதோ ஒன்றில் வாயடைத்துப் போனேன்,,,
அவர்களும் என்னிடம் பேசாமல் கம்மென்று இருந்து விட்டார்களே ,,அவர்களுக்கு என்ன தடை என்னிடம் பேச,,,,இன்னும் என் மீதுள்ள கோபம் தீரவில்லையா?அல்லது வைஷாலி என்ற மகளையே மறந்து விட்டார்களா? இப்பொழுது ஆதரவில்லாமல் இருக்கும் அவர்களை,ஆசிரம நிர்வாகியிடம் பேசி,இங்கே அழைத்து,வந்து விடலாம்,,,அது ஒன்றும் பிரச்சினை இல்லைதான்,,,ஆனால்,அது சரி வருமா?புருஷோத் ஒப்புக்கொள்வாரா?
இரவோடிரவாக,பெட்டி,படுக்கையுடன்,சிறு குழந்தையுடன்,தங்களை அடித்து விரட்டி நடுத்தெருவில் நிறுத்தியதை,புருஷோத் மறந்திருக்க வாய்ப்பில்லை,,,மறக்கக் கூடிய இரவா அது?என் பெற்றோரை சுயநல மனதுடன் நான் இங்கே அழைத்து வந்தால்,அது என் கணவனின் மனதை கொலை செய்வதற்கு சமம்,,,அத்தைமாமாவுக்கு கூட,நடந்தவை அத்தனையும் தெரியும்,
,அவர்களும் என் வீட்டாரை,எந்த விட மனத்தடையுமின்றி ஏற்க வேண்டுமென நான் எதிபார்ப்பது.,எவ்வகையில் நியாயம்?இவையெல்லாம் ஒரு புறமிருக்க,நான் சொகுசாக, கட்டில் மெத்தை,வசதிகளோடும்,உறவுகளோடும்,வாழும் பொது, என் பெற்றோர்,ஒரு வேளை உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை..கடவுள் மன்னிப்பாரா என்னை?
ஆனால் அவர்களை என்னுடன் வைத்துக்கொள்ளமுடியாத சூழல்,,,திரு விளையாடல் திரைப் படத்தில்.சாவித்திரி,சொன்னது போல,புகுந்த வீட்டிற்கும் ,பிறந்த வீட்டிற்கும்,பிரச்சினை ஏற்ப்பட்டபின்,பெண்ணாகப் பிறந்தவள் இருப்பதை விட இறப்பதே மேல் என்பது சரியான கூற்று தானோ..பின்னுக்குப் போனால் தள்ளவும்,முன்னுக்குப் போனால் முட்டவும் ,ஏகக் குழப்பத்தில் இருந்தாள் வைஷாலி,,,பாசமும்,ஏக்கமும்,கோபமும்,வலியும்,இயலாமையும் ஆக,எல்லா உணர்வுகளும் அவள் மனதை அழுத்த .வைஷாலி ,புருஷோத் வீட்டின் இளவரசி, மாமியார் மெச்சிய மருமகள் ,சுஜியின் அன்புத்தாய்,தன் நிலையிலிருந்து மெது மெதுவே பிறழ்ந்து கொண்டிருந்தாள் --அவளரியாமலே ......
 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:
வைஷாலி புருஷோத்திடம் மனம் விட்டு பேசி இருக்கலாமே
 
Top