Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singa penne-7

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
டெட்டால் கலந்த நீரால் வீட்டை துடைத்து முடித்து,விட்டு கை கழுவுகையில்,காலிங் பெல் ஒலிக்க ,கதவைத்திறந்தாள் வைஷாலி..அங்கே புருஷோத்தின் அப்பா ஜீவனும்,அம்மா லதாவும்,புன்னகைத்தபடி நின்றிருந்த்தனர் சடாரென்று குனிந்து,மாமனார்,மாமியார்,கால்களைத் தொட்டு ,கண்களில் ஒற்றினாள் ,,,வைஷாலி..
‘’ஜீத்தே ரஹோ,,,பூலோ பலோ ‘’என்று வழக்கமான ஹிந்தி மொழியில் மருமகளை ஆசீர்வதித்து விட்டு,உள்ளே நுழைந்தார்கள் இருவரும்
...ஜீவன்-லதா ஜோடி பல காலமாக புனையில் செட்டில் ஆனவர்கள்...ஆனால் பூர்வீகம் தமிழ் நாடுதான்...ஹிந்தியைப் படித்துப் புரிந்து கொண்ட அளவு மராட்டி அவர்கள் மனதில் நிற்கவில்லை......எனவே ஹிந்தி கலந்த தமிழ்தான்....அம்மா அப்பா மகன் மூவர் நாவிலும் நடமாடும்
,,,,சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றாலும்,தமிழ் மொழி மட்டுமே அவர்களுடன் இணைந்தது..மனம்,எண்ணம்,கலாச்சாரம்,பழக்க வழக்கங்கள் யாவும்,வட இந்தியாவை சேர்ந்ததுதான்,,,,அவர்கள் தோற்றமும் அப்படித்தானிருக்கும்,,,நிறத்தை போலவே மனமும் வெள்ளை,,,,வைஷாலியை மறு மகளாய் பார்க்கும்,முக்கியமாய் அவளையும் ஒரு மனுஷியாகப் பார்க்கும் பரந்த மனதுடைய பக்குவப்பட்ட தம்பதிகள் ......மகனோடு சேர்த்து,அவனது காதலையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள்,,,,விமான் நகரில் வீடு...ஜீவன் பி,எஸ்,என்,எல்..நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்...வருகின்ற ஓய்வூதியமும்,இருவரிடையே இன்னுமிருக்கும் பரஸ்பர அன்பும் அவர்களைத் தனியே வாழ வைக்கிறது,,,,
‘’அத்தை-மாமா உட்காருங்க;;’’என்று சொல்லிவிட்டு,தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் வைஷாலி...
‘’வைஷூ...ஏம்மா டல்லா இருக்கறே ?..ஊருக்குப் போயிட்டு வந்ததையே நினைச்சிக்கிட்டு இருக்கியா?’என்றாள் லதா பரிவுடன்..தலை குனிந்தாள் வைஷூ...ஆமோதிக்கவுமில்லை....மறுக்கவுமில்லை...இவர்களிடத்தில் எதை சொல்வது/ எதை விடுவது/
‘’புருஷோத் வந்து சொன்னான் எல்லாத்தையும்...ஐயோன்னு இருந்துச்சு....புள்ள,வாடிப் போயிருப்பாளே ,,,பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம்...’’
‘’சுஜிக் குட்டி ஸ்கூலுக்கு போயிட்டாளாமா?’’
“”ஆமா..மாமா,,,எக்ஸாம் நடந்திட்டுருக்கு..இப்ப வந்துடுவா..’’
‘’வரட்டும்..வந்தப்புறம் ,அவளைப் பார்த்துட்டு ,நாங்க கிளம்பறோம் வைஷூ’’
‘’அத்தை,,,இன்னிக்கு,,,இங்க சாப்பிடுங்க,,,மேத்தி பரோட்டா பண்ணியிருக்கேன்’’
‘’இல்லம்மா..நான் வீட்டுல சமைச்சது வீணாயிடும்,,,சண்டே அன்னிக்கு வந்து சாப்பிடறேன்...இப்ப உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?’’
‘’வீடு க்ளீன் பண்ணிட்டிருந்தேன் அத்தை’’என்றவள் டீ போட்டு வந்து இருவருக்கும் தந்து தானும் குடித்தாள்...லதா டீ குடித்துவிட்டு,கோப்பைகளை கொண்டு போய் பாத்திரத் தொட்டியில் போட்டு,அங்கு கிடந்த பாத்திரங்களோடு சேர்த்து கழுவத்தொடங்கினாள் ..
.வைஷூ,பாத்திரம் கழுவும் மாமியாரை ,ஒரு மரியாதைக்கு கூட வேண்டாம் என்று சொல்லத் தோன்றாமல்,அப்படியே வைத்த கண் மாறாமல்,மாமியாரை பார்த்தபடி நின்றாள்,,,கண்கள்தான் ஒரு புள்ளியின் நின்றன...மனம் முன்னோக்கியும்,பின்னோக்கியும்,தாறு மாறாய் ஓடியது
,,உயிராய் வளர்த்த பெற்றோரும்,உடன் பிறப்பும்,கை கழுவி விட்ட நிலையில்,ரத்த உறவில்லாத இந்த பெண்மணி,என்னைக் கண் கருவிழிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்...இதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?கால காலமாய் ,எனக்குள் பொதிந்திருந்த,எனது குடும்பம் சார்ந்த நம்பிக்கைகள்,தரை மட்டமாய் இடிந்து விழுகின்றது.
..ஆனால்,அருகிலேயே,அழகாய்,அன்பாய்,எனக்கென்று ஒரு குடில்,ஒயிலாய் அமர்ந்திருக்கிறது...அதனுள் எனது அமைதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது,,,இழத்தலும் பெறுதலுமாய்,பெரும்‌கணக்காய் இருக்கிறது வாழ்க்கை,,,என் வாழ்வே,என் கண் முன் பிற மொழித் திரைப்படம் போல் திகைப்புடன் நகர்கிறது,,,காணுகின்ற காட்சியை புரிய முயல்வதற்குள்,புது,காட்சி திரையில் தோன்றி மிரட்டுகிறது...இது எனக்கு மட்டும்தானா?அல்லது எல்லோருக்கும்,இதுவே தானா? குமைந்தாள் மனதுக்குள் வைஷாலி...
அத்தியாயம் 9
பார்வை விரியும் போது மனமும் விரிவடையத்தான் செய்கிறது.....விசாலமாக சிந்திக்கத்தான்,செய்கிறது...வீட்டிற்குள் பத்துக்கு பத்து அறைக்குள் சுற்றி சுற்றி வருகையில்,அதே பிரச்சினைகள்,அதே துருப்பிடித்த சிந்தனைகள்,எண்ண ஓட்டங்கள்,இவற்றை தவிர்க்க முடிவதில்லை....இதோ இந்த மகா பலேஸ்வரர் சுற்றுலா தளத்தில்,மனம் எலாஸ்ட்டிக்காய் மந்திரம் போட்டது போல ,இழுத்த இழுப்புக்கு வருகிறதே
,,,,மனைவியின் அலைபாயும் மனதை சமநிலைக்கு கொண்டுவர,புருஷோத் இந்த குறுஞ்ச் சுற்றுலாவிற்க்கு ஏற்பாடு செய்திருந்தான்,,கண் பார்த்த வேலைகளைக் கை செய்வதைத் திறமை என்பர்,
,,வாழ்க்கைத்துணையின் முகக் குறிப்புகளுக்கேற்ப,ஈடு கொடுப்பதே இல்லறத்தானுக்கு,திறமையும் பெருமையும் ஆகும்,,,சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள,மகா பாலைஷ்வர் காயத்ரி மலைத் தொடரில்,1372 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது...லாட்விக் பாயிண்ட்,ஆர்த்தர் கென்ட்,பாபிங்க்டன் பாயிண்ட்,வில்ஸோன் பாயிண்ட்,,கேட் பாயிண்ட்.,லிங்க மாலா அருவி,பஞ்ச காணி பொன்ற முக்கிய இடங்களால்,அதன் அழகு உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.....க்ரிஷ்ணா நதிதான் தாய் வீடு...பஞ்ச கணியில் கிருஷ்ணா,கொய்னா,வென்னா,சாவித்திரி,காயத்ரி,என்ற ஐந்து நதிகளும்,பொங்கி எழுந்து,பூமியை,நனைக்கின்றன,,,,,அப்பா,அம்மா,மகள் மூவரும்,பொறுமையாய்,இடங்களைப் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.....அதிகம் பேசவில்லை,,,,இதெல்லாம்,ஏற்கனவே,பார்த்த இடங்கள்தான்,,,அதனால் என்ன ,,,செயற்கை காட்சிகளால் கோர்க்கப்பட்ட,திரைப்படங்களே,நம்மை திரும்ப,திரும்பப் பார்க்கத் தூண்டுகின்றன..
..ஆனால் இவை....பேசாமல் பேசி,சிரிக்காமல் சிரித்து,சொல்லாமல் சொல்லி,மிரட்டும் ஆளுமை அழகு அல்லவா?அது சலிக்குமா என்ன,,,,அவ்வப்போது,மனைவியைத் திரும்பிப் பார்த்து பூடகமாக சிரித்துக் கொண்டான் புருஷோத்....இந்த காந்த வெளியில் உன்னுடிய கவலைக்லைக் கரைத்து விடம்மா,,,,என்று சொல்வது போலிருந்தது,அவனுடைய பார்வையும் புன்னகையும்
...இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லோரும் ஞானிகள் ஆக த்தான் மாறி விடுகிறார்கள்,,தபோலா என்ற இடத்தில் சுஜி விருப்பத்திற் க்காக,படகு சவாரியும்,குதிரை,ஏற்றமும் போய் வந்தார்கள்,,,அங்கு கிடைக்கக் கூடிய சுத்தமான தேனை வாங்கிக் கொண்டு,அஸ்தமன தரிசனத்திர்க்காக அனைவரும் ஓரிடத்தில் கூடினார்கள்,,,இங்கு சூரிய உதயமும் அஸ்தமனமும்,அப்படி ஒரு சிறப்பாம்,,,மதுரை ஆயிரம்‌ கால் மண்டபத்து,ஒலி ஒளி காட்சி போல,வானம்,மெது மெதுவாக,மாயாஜாலம் காட்டத்துவாங்கியது,
,,பள்ளி பிள்ளைகள் காம்பஸ் வைத்து வரைந்தது போல,சிறிதும் பிசகாத,பிசிறடிக்காத தங்க வட்டம்,,குறுக்கே கோடுகள் தோன்றுவதும் மறைவதுமாய்,மெதுவாய் தங்க கிண்ணம் ,நீருக்குள் இறங்கத் துவங்குகிறது...வானத்தின் நிறம் சிவப்பு,ஆரஞ்சு,,இரண்டும் கலந்த கனகாம்பரக்கலர்,என்று மாறி மாறி வண்ணம் காட்டுகிறது,,,இப்பொழுது,கால்வாசி வெட்டியெடுத்த,மஞ்சள் பூசணிக்காய் போல ஒரு தோற்றம்,,,பார்த்துக்கொண்டிருக்கையிலேயே,தங்க நிலவு,கீழிறங்கி,கீழுறங்கி,சூரியன் முற்றிலும்,மறைந்து விட,அடர் மஞ்சள் வண்ணம் மட்டும் வானத்தில் தங்கி விட,பார்ப்பதற்கு,காலி செய்யப்பட்ட,அல்வா கிளறிய,உருளி போலிருந்த்து,-வானத்தின் தோற்றம்,
,,வாய்திறந்து,கண் விரித்து,முகம் மலர, பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டம்,அருகில் நிற்போரை,பெருமூச்சுடன்,பார்த்தபடி,நகர்கிறார்கள்,,,ம்ஹூம்....இந்த எண்ணு ம் வேலைக்கும்,எழுத்து வேலைக்கும்,எந்திரங்களை கையாளும் வேலைக்கும்,மனிதர்கள் எவ்வளவு பெரிய அலப்பறையைக் கொடுக்கிறார்கள்,,,!ஆனால்,இவன்,,,இந்த கதிரவன்,,,?ஆதவன்?பல்லுயிர்களும்,தாவரங்களும்,இயற் கையும்,நீர்நிலைகளும்,மலையும்,மடுவும்,கோள்களும் கொண்ட,இந்த அண்டத்தை ,,அசால்ட்டாக,இயக்கிவிட்டு,பசுவைப் போல பதுங்க செல்கிறான்,,,குறைகுடம் கூத்தாடும்,நிறைகுடம் தழும்பாது,என்று இதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது போலும்,,,மனிதர்கள் குறை குடங்களாக ,இருந்தால் கூட நிரப்பிக்கொள்ளலாம்,,,குற்றமுள்ள குடங்களாக அல்லவா இருக்கிறார்கள்...
மூன்று நாள்டூர் முடிந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்-புருஷோத்,வைஷாலி,சுஜி மூவரும்,,,காதில் மாட்டியிருந்த ஹெட் செட்டை கழட்டிப்போட்டு விட்டு,மனைவியிடம் திரும்பினான் புருஷோத்,,,
‘’வைஷூ,,என்ன ,,சைலன்ட் ஆயிட்ட..’’
‘’அப்புறம் என்ன செய்யனும்?’’என்றால் தலை முடியை சரி செய்து கொண்டே,,,,,
‘’ஒண்ணுஞ்ச்செய வேண்டாம்,,,,ஏதாவது சொல்லலாம் இல்ல ‘’
‘’என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கறீங்க?’’
‘’அதயும் நான்தான் சொல்லணுமா ‘’என்று சலித்தவன்;;’’டூர் எப்பிடிப்பா இருந்துச்சு?’’என்றான் சத்தமாக,,
‘’நல்லாவே இல்ல டாடி’’என்றால் சுஜி பட்டென்று...
‘’ஏண்டா’’
‘’நீங்களும் மம்மியும் பேசிக்கவேயில்ல...எனீமீஸ் மாதிரி இருந்தீங்க...மகாபலைஷ்வர்ல.’’
‘’அதுவா’’என ஒன்று போல் சிரித்தனர் இருவரும்,,,சமயங்களில் குழந்தைகளின் மனநிலையை வசதியாய் மறந்து விடுகிறோம்...
‘’அது ஒண்ணுமல்லடா சுஜி...நாம பேசாம இருக்கறப்பதான்,கடவுள் நம்ம கூட பேசுவாராம்,,இயற்கையும் ஒரு கடவுள் தானே,,அதான் அமைதியா என்ஜாய் பண்ணினோம்’’-புருஷோத்...
‘’சுஜி கண்ணா,ஐஸ் கிரீம் சாபிடறப்ப ஆடி பாடிகிட்டே சாப்பிடுவோம்,,,ஆனா,மருந்து குடிக்கறப்ப அமைதி ஆயிடுவோம் இல்லியா...அது போல ‘’—வைஷூ’’
‘’அப்ப இந்த டூர் உனக்கு மருந்து மாதிரி இருந்துச்சா மம்மி?;என்று மடக்கினாள் சுஜி,,,
‘’மருந்துதான்,,,ஆனா தேன் மாதிரி இனிப்பு மருந்து ..உள் காயங்களை குணப்படுதியிருச்சில்ல,,,’’
‘’ஓ ;என்றால் சுஜி புரிந்தும் புரியாமலும்,,,ஆனால் புரிய வேண்டியவனுக்கு புரிந்து விட்டது..மனைவியின் மன வலியறிந்து ,புரிந்து,வாஞ்சையுடன் மருந்திட்டவன் அவனல்லவா,,,மகிழ்ந்து கொண்டான் மனதில்,,,ஓகே,,,க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டது,,,,இத,,,இத,,இதத்தான் எதிபார்த்தேன் நான்,,,என்று பூரித்துப் போனான் புருஷோத்,
 
Top