Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 5

Advertisement

Sameera?

Well-known member
Member
Next update nalaiku post panren makkale???

அத்தியாயம் 5


மறுநாள் வழமைக்கு மாறாக விடியும் முன்பே விழித்துக் கொண்ட மதிவாணன் தன் எதிரில் ஆழ்ந்த நித்திரையின் பிடியில் உறங்கும் மனைவியை இமைக்காமல் பார்த்தான்.



இன்று அவர்களது பத்தாவது திருமண நாள்..!!அன்று விடிந்ததும் முதலில் அவன் மூளை யோசித்த விஷயம் அதுதான்..!!



அந்த பெரிய மரக்கட்டிலில் ஒருமுனையில் இவனும் மறுமுனையில் அவளும் என்று இருக்க நிஜத்தில் இடைவெளி அதீதம் இல்லை எனினும் மனதளவில் வெகு தூரமாய் அவள் இருப்பதுப்போல் தோன்ற பத்து வருட திருமண வாழ்க்கையில் என்ன பெரியதாக வாழ்ந்து விட்டோம் என்ற சலிப்பு அவனுள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.



எழுந்துக்கொள்ளவும் மனம் இல்லாமல் உறங்கும் மனைவியின் வரிவடிவத்தை ஆசை தீர அவன் கண்கள் உள்வாங்கி தன் மனப்பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டது.



இடது கை கன்னத்தை தாங்கி மறுக்கை இடையில் தவழ இவன் புறம் ஒருகளித்து படுத்து இருந்தவளின் முகத்தை பார்த்தால் எந்த கபடமும் அறியாத குழந்தையின் முகம் போல் அத்தனை அழகாய் இருக்க அவளை முதன்முறையாய் சந்தித்த தினத்தை நோக்கி அவன் நினைவலை சுழன்றது.

.

.

.

"எனக்கு சுத்தமா பிடிக்கல ம்மா..நீங்க வேணா போயிக்கோங்க..நான் வரல.."



எரிச்சலாய் கூறிய மதிவாணன் தன் முன் இருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்து தன் வேலையில் கவனமாக அவனருகில் வந்தமர்ந்த நாகஜோதி,



"மதி..நீயில்லாம எப்படிடா பொண்ணு பாக்க போறது...கொஞ்ச நேரம் தான் மதி..இப்படி போயிட்டு இப்படி வந்திடலாம்..உங்க அப்பாவும் கிளம்பிட்டாரு..நீ வரலேனு சொல்றது தெரிஞ்சா அவரும் இதான் சாக்கென போகவே வேணானு சொல்லிடுவாரு..கிளம்புடா.."



என்று எட்டி கீழே தன் கணவன் மீது ஓர் கண்ணை வைத்துக் கொண்டு மகனிடம் கெஞ்சலாய் சொல்ல,



"ம்ச்..அப்புடி ஏன் போகணும்..ஃபோன் பண்ணி வரலேனு சொல்லிறதுல என்ன கஷ்டம்.."

என்றான் அதே குரலில்..



"அது நல்லா இருக்காது மதி..நாம வருவோம்னு எதிர்பார்த்துட்டு இருப்பாங்க..திடீர்னு வரலேனா மரியாதையா இருக்காது.."



"ஹோ..அப்போ மெனக்கெட்டு போய் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னால் மட்டும் உங்களுக்கு நல்லா இருக்குமாக்கும்..."



"சும்மா என்னுட்டையே பாயாதடா..நான் என்ன கனவா கண்டேன்..இந்த மனுஷன் இப்போ திடுதிப்புனு இந்த சம்பந்தம் வேணானு வந்து நிற்பாருனு.."

என்று தலையில் கைவைத்தார்.



மதிவாணனிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து தரகரிடம் சொன்னபின்பு வழக்கமான மகனை பெற்ற தாயாய் திருமண வயதையொத்த பெண்களை காணும்போது தோன்றும் ஆர்வமே அவரிடமும் இருக்க உறவினர் ஒருவரின் வீட்டு திருமணத்தில் மணப்பெண் தோழிகளின் கூட்டத்தில் அழகோவியமாய் இருந்த வெண்பாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது நாகஜோதிக்கு..!!



அதீத அலங்காரங்கள் இன்றி இயற்கையாகவே அத்தனை அழகாய் இருந்த பெண்ணவள் அதிகம் பேசவில்லை எனினும் புன்னகை முகமாய் தோழிகளின் கிண்டல் கேலிகளை இரசித்த வண்ணம் அமர்ந்திருக்க அவளை மதிக்கு பார்க்க ஆசைப்பட்டவர் அதனை தன் கணவரிடமும் தெரிவித்தார்.



கேட்டதும், "போகிற இடத்துல எல்லாம் மகனுக்கு பொண்ணு தேடுறியா.." என்று கடிந்துக் கொண்டாலும் வெண்பாவை பார்த்ததும் அவருக்கும் கேட்கலாமே என்ற எண்ணம் வந்தது.

மணப்பெண் ஆழிக்கண்ணனின் ஒன்றுவிட்ட அண்ணனின் பேத்தி என்பதால் பெண்ணின் தந்தையான சுந்தரேசனிடம் விசாரிக்க அவருக்கும் வெண்பாவின் தந்தையோடு நல்ல பழக்கம் என்பதால் நல்லவிதமாகவே சொல்ல அப்பொழுது கேட்டுக் கொண்டு வந்துவிட்டாலும் இரண்டு நாள் சென்று சுந்தரேசன் மூலம் வெண்பாவை பெண் கேட்டார் ஆழிக்கண்ணன்.



ரெண்டு குடும்பமும் சுந்தரேசனிற்கு நெருக்கம் தான் என்பதால் இந்த பேச்சு அவருக்கும் மகிழ்வை தர,



"நல்ல பொண்ணு சித்தப்பா..நான் பேசி ஜாதகம் வாங்கி தரேன்..நாம பார்க்கலாம்.."

என்றார் சந்தோஷமாய்.. அதன்படி எல்லாம் சரியாக அமைந்து பெண் பார்க்க வருவதாக சொல்லிவிட இன்று காலையில் வெளியே சென்று வந்த ஆழிக்கண்ணன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்றார் திடீரென்று..



அவரை சமாதானம் படுத்த முயன்று முடியாமல்,



"இத முந்தியே சொல்லிருக்கனும்..இன்னைக்கு போறதுக்கு மதி கூட லீவ் போட்டு இருந்துட்டான்.இப்போ திடீர்னு வந்து சொல்றீங்க..சுந்தரேசன் அண்ணா நமக்காக பேசியிருக்காங்க..இவ்வளவு தூரம் பேச்சிட்டு போகலேனா அண்ணனுக்கு தான் சங்கடம்..போய் சம்பிரதாயத்துக்கு பொண்ணு பார்த்துட்டு வருவோம்..அப்புறம் எதாவது சொல்லி விலகிடலாம்.."



என்று ஒருவாறு அவரை பேசி சரிக்கட்டிவிட்டு வந்தால் தற்போது மகன் முரண்ட 'என்னடா இது..' என்றானது நாகஜோதிக்கு..!!



மதி இன்னும் பெண்ணை பார்க்கவில்லை எனினும் எல்லாம் நன்றாக ஆர்வம் காட்டிவிட்டு இப்பொழுது தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வீட்டுக்கு போவது பிடிக்கவில்லை.எப்படியும் இந்த பெண்ணுடன் திருமணம் இல்லை என்னும்போது நாம ஏன் போய் பார்க்க வேண்டும் என்று எரிச்சலாய் வர அதை மறையாமல் அன்னையிடம் காட்டினான்.



"நீங்களா புடிச்சு போய் தானே பெண் கேட்டீங்க..இப்போ என்ன திடீர்னு வந்துச்சு.."



"அந்த பொண்ணு நல்ல குணமா அழகா இருந்தாடா..சுந்தரேசன் அண்ணாவும் நல்ல விதமா சொல்லவும் மேற்கொண்டு பேசினோம்..இப்ப உங்க அப்பா வெளியவும் விசாரிக்க சொல்லிருப்பார் போல..அவங்களுக்கு பெருசா வசதி இல்லையாம்..அதுக்கூட பரவாயில்லை..அந்த பொண்ணோட அப்பா - அம்மா கலப்பு திருமணம் போல..நம்மாளுங்க இல்ல..அதனால உறவு ஜனங்களும் அவ்வளவாக இல்லையாம்..அதான் அப்பா வேற நல்ல இடமா பார்த்துபோம்னு சொல்றாரு.."



"ம்மா...இதெல்லாம் ஒரு ரீசனா மா..எந்த காலத்துல இருக்கீங்க..ஒரு படிச்ச டீச்சரே இப்படி யோசித்தால்..மத்தவங்க எப்படி யோசிப்பாங்க..உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.."



என்றதோடு விட்டுவிட்டான்.அவர்களுக்கு விருப்பம் இல்லை என்னும்போது மேற்கொண்டு இந்த சம்பந்தத்தை குறித்து அவன் பேச விரும்பவில்லை.



"நாங்க திருத்தறத அப்புறம் பார்த்துகலாம்..இப்போ நேரம் ஆகுது..வா..சும்மா சொந்தக்காரங்க வீட்டுக்கு போகிறா மாதிரி போயிட்டு வந்திடலாம்.."



என்று அவர் சொல்ல அரைமனதுடனே சம்மதித்தான்.உதயாவும் ஜெகனும் பள்ளி சென்றிருக்க தயாளன் ஸ்டெடி ஹாலிடேவில் இருந்ததால் அவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.



அங்கே பெண் வீட்டில் இவர்களை இன்முகமாய் வரவேற்று விருந்தோம்பல் செய்ய இவனுக்கு தான் மிகுந்த சங்கடமாய் போய்விட்டது.ஆழிக்கண்ணன் - நாகஜோதியோ அவர்களோடு இயல்பாய் அளாவளா தயாளன் கூட பெண்ணின் தம்பியோடு பேச மதி மட்டும் தான் தேமே என்று அமர்ந்திருந்தான்.



சற்று நேரம் சென்று பெண் அழைத்துவரப்பட நிமிராமலே அமர்ந்திருந்தான்.

சம்பரதாயமாக நாகஜோதி அவளிடம்,



"உன் பேரென்ன ம்மா.."

என்று கேட்கவும் "வெண்பா ஆண்டி.." என்றவளின் குரல் அவனை பார்க்க தூண்ட விழியை உயர்த்தியவனின் கண்கள் அவளிடம் இருந்து நகர மறுத்தது.



அடர் நீல பட்டுப்புடவையில் மிதமான அலங்காரத்தையும் மீறி அழகிய அணிகலனாய் அவளது புன்னகை அவனை காந்தமாய் ஈர்த்தது.



இடதுகையின் மணிக்கட்டை வலது கையால் பிடித்துக் கொண்டு அவளது தம்பியின் அருகில் நின்றவள் நாகஜோதி பேச்சு கொடுக்கவும் தயக்கமோ நாணமோ இன்றி இயல்பாய் அவரோடு உரையாடும் அவளையே தான் பார்த்திருந்தான் மதிவாணன்.



'அம்மா..உன் இரசனையே தனி ம்மா..' என்று தாயிக்கு சபாஷ் போட்டவன் நினைவில் தந்தையின் கூற்றும் நினைவு வர,



"அடேய்..என்னை ஆசை காட்டி மோசம் செய்துவிடாதே..' என்று சிணுங்கியது மனம்..!!



அவளை தவிர்க்க முடியாமல் தனக்குள்ளே தத்தளிக்க நேரம் சென்றதே தெரியவில்லை.தந்தை விடைப்பெறும் விதமாய் பேச தொடங்கவும்,

'இனி இவள் தனக்கு இல்லை..அவளை இழக்க போகிறோம்..' என்று மனம் அடித்துக்கொள்ள தன்னையும் மீறி,



"நான்..நான் உங்க பொண்ணுட்ட தனியா பேசலாமா.."



என்று அவள் தந்தையிடம் நேராய் கேட்டுவிட அதுவரை இயல்பாய் இருந்த அவன் குடும்பம் அதிர்ந்து நோக்க அவனோ பார்வை அவள் தந்தை மீதிருந்து இம்மியும் நகர்த்தவில்லை.



அவர்கள் முன் மகனை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் உள்ளுக்குள் குமைந்தாலும் வெளியே அவர் சங்கடமாய் வெண்பாவின் தந்தையை பார்க்க அவரும்,



"சரிங்க தம்பி.." என்றவர் வெண்பாவிடம்,



"மாடிக்கு கூப்பிட்டு போமா.." என்று சொல்ல லேசாய் வாய் திறந்து ' தன் அண்ணனா..' என அதிர்ந்து நோக்கிய தயாவை நோக்கி கண்சிமிட்டியவன் நல்ல பிள்ளையாய் வெண்பாவை பின் தொடர்ந்தான்.





ஒரு வேகத்தில் தனியாக பேசவேண்டும் என்று கூறிவிட்டான்.ஆனால் எதில் தொடங்கி என்ன பேசுவது என்று தெரியாமல் அவளை பார்ப்பதும் தலையை கோதுவதும் அக்கம் பக்கம் சுற்றி பார்ப்பதுமாய் அவன் நிற்க,



"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கலாம்னு இருக்கீங்க.."

குறுநகையோடு அவளே முதலில் பேசினாள்.



"ஆங்..அது எங்க ஆரம்பிக்கிறதுனு தெரியல.."

என்று அவனும் சின்ன சிரிப்போடு சொல்ல,



"நானே ஆரம்பித்து வைக்கவா..?? ம்ம்ம் உங்களுக்கு இந்த மேரெஸ்ல விருப்பம் இல்லையா..?கட்டாயாப்படுத்தி கூட்டிட்டு வந்திட்டாங்களோ.."

என்று குறும்பாய் கேட்டு புருவம் உயர்த்த அவனோ அதிர்ந்து,



"ஏங்க..ஏன் இப்படி.."

என்றான்.



"இல்ல நீங்க பேசணும்னு சொன்னதும் உங்க அப்பா - அம்மா எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க..நீங்களும் ஒருமாதிரி சங்கடமாவே உட்கார்ந்திருந்தீங்க..சோ சும்மா கெஸ் பண்ணேன்.."

என்று தோள் குலுக்கி புன்னகைக்க,



"நல்லா கெஸ் பண்ணீங்க.." என்று கேலியாய் சிரித்தவன்,



"வெண்பாவிற்கு என்னை பிடிச்சிருக்கா.."

என்றான் கண்சிமிட்டி..



அவனது திடீர் கேள்வியில் தடுமாறியவள் பின்பு,



"தெரியலையே.." என்க,



"இதென்ன பதில்.."



"ஆமா..பார்த்த உடனே எப்படி ஒருத்தவங்களை பிடிக்கும் பிடிக்காதுனு சொல்ல முடியும்.."



"ஏன் முடியாது..நானும் உங்களை இப்போ தான் பார்த்தேன்..ஆனால் பார்த்ததும் பிடிச்சிருச்சே.."



அன்றைய நாளில் முதல் முறையையாய் அவள் முகத்தில் வெட்கத்தின் சாயல்..என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் முழிக்கவும் சிரித்தவன்,



"வெண்பா..என்னை பத்தி சொல்லியிருப்பாங்க...நான் வீட்டுக்கு மூத்த மகன்..தயா..ஜெகன்..அப்புறம் கடைசியா உதயா...ஜெகனும் உதயாவும் இன்னும் ஸ்கூல் தான் படிக்கிறாங்க..ஏஜ் டிஃப்ரென்ஸ் அதிகம்..அதனாலேயோ என்னவோ சிப்ளிங்ஸ்ங்றதை தாண்டிய ஓர் பாண்டிங் எப்பவும் இருக்கும்..மூத்த மகனாய் என் கடமையை செய்ய நிறையவே ஆசை..இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த குடும்பம் இப்படியே இருக்கணும்..அதுக்கு முக்கிய பங்கு என் மனைவியிடம் தான் இருக்கு..இது என் விருப்பம்..என் ஆசை தான்..இதே மாதிரி உங்களுக்கும் உங்க வாழ்க்கை குறித்து ஆசைகள் வேற மாதிரி இருக்கலாம்..நான் தப்பா சொல்லல..யதார்த்தம் இது தான்..என்னோடான வாழ்க்கை இப்படி தான்னு சொல்ல வந்தேன்..இதில் விருப்பம் இல்லைன்னா..நீங்க நேராகவே சொல்லிடலாம்...நான் புரிஞ்சிப்பேன்..நோ வொரீஸ்.."



அந்த நேரத்தில் தோன்றியதை அப்படியே பேசியவன் 'த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..' என்று இலகுவாய் விட்டுவிட,



"இப்போ கொஞ்சம் உங்களை பிடிக்கிறா மாதிரி தான் தோனுது.."



என்று அந்த கொஞ்சத்தில் சற்று அழுத்தம் கொடுத்து கண்கள் சுருக்கி சொன்ன அந்த முகம் அழியா ஓவியமாய் இன்னமும் அவன் நெஞ்சில் செதுக்கப்பட்டிருந்தது.



'அன்று அவள் கொடுத்த வாக்கை இன்று வரையில் தொடர்கிறாள்.ஆனால் நான் என்ன செய்தேன்..?? அவள் அன்று தன்னை நம்பி பகிர்ந்துக் கொண்ட ஒன்றை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளை ப்ளாக்மேயில் செய்ய அல்லவா பயன்படுத்திக்...ம்ச்..மனுஷனே இல்ல நான்..எனக்கு இது தேவை தான்..உன் குடும்பத்தை அவளுடையதாய் அவள் பார்த்தால்..பார்க்கிறாள்...ஆனால் அதே எண்ணம் ஏன் உனக்கு இல்லாமல் போனது..எப்பவும் நீ சுயநலமாக மட்டும் தான் யோசித்திருக்க மதி..'



ஆழிபேரலையாய் அவன் எண்ண அலைகளே அவனை சுழற்றி வீச அதன் கணம் தாங்காமல் எழுந்தவன் மீண்டும் மனைவியின் முகத்தை நோக்கி, "ஸாரி வெண்பா..ரியலி ஸாரி.." என்றான் ஆழ்ந்த குரலில்..இத்தனை வருடங்களில் இது எத்தனையாவது மன்னிப்பு என்று கணக்கிலே இல்லை.ஆனாலும் தோன்றும் போதெல்லாம் அவன் உதடுகள் தானாய் முணுமுணுக்கும்...



அவள் விழிப்பது போல் தோன்ற எழுந்து குளியலறையில் புகுந்துக் கொண்டவன் காலை கடமைகளை முடித்து வந்த போது அவள் கட்டிலில் எழுந்தமர்ந்திருந்தாள்.



அவனை நிமிர்ந்து ஒர் பார்வை பார்த்தாலும் அதில் எந்த உணர்வும் இல்லை.அவன் வந்ததும் இவள் உள்ளே சென்றுவிட எதுவும் செய்ய தோன்றாமல் மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.



குளித்து வந்தவள் தன் போக்கில் சென்று கதவை திறக்க முயல அது வர மறுத்தது.நோப்பை மீண்டும் மீண்டும் பிடித்து அழுத்தமாய் இழுத்தும் அது நகர்கின்ற வழியை காணாமல் பொறுமை இழக்க,



"என்னாச்சு.." என்று அருகில் வந்தவன் தானும் முயன்று விட்டு, "வெளியே யார் லாக் செஞ்சது.."

என்று தனக்குள் முணுமுணுத்தவன் கதவை படபடவென தட்ட கீஹோலில் சாவியை நுழைக்கும் அரவம் கேட்கவும் "யாரு இந்த வேலையை பார்த்தது.." என்று எரிச்சலாக

கதவு திறக்கப்பட்ட மறுநொடி திட்ட வாயெடுத்தவன் மொத்த குடும்பமும் கூடி நிற்பதை கண்டு முழித்தான்.





"ஹாப்பி வெட்டிங் அனிவெர்சரி...."



மலர்ந்த சிரிப்போடு அனைவரும் கோரஸாய் வாழ்த்த இதனை எதிர்பார்க்காத தம்பதியினர் திகைத்து நிற்க உதயாவின் பிடியில் இருந்து ஓடி வந்த நிலா இருவரையும் இரண்டு கையால் அணைத்து குதித்தப்படி,



"ஹாப்பி அனிவெர்சரி ம்மா..ப்பா.."

என்று உற்சாகமாய் கூச்சலிட அதிர்ச்சி நீங்கி சிரித்த மதிவாணன் மகளை தூக்கி,



"தேங்க்ஸ்டா பட்டும்மா..." என்று கன்னத்தில் முத்தமிட்டு இறக்கிவிட்டவன்,



"கதவு தாழ்பாள் போட்டு இருக்கவும்..என்னவோன்னு டென்ஷன் ஆகிட்டேன்.."

என்று சிரித்தான்.

சின்ன செய்கை தான் எனினும் மனதிற்கு அத்தனை மகிழ்ச்சியை வாரி வழங்க அது அப்படியே மறையாமல் அவன் முகத்தில் பிரதிபலித்தது.



அதற்கு மாறாக வெண்பாவின் முகம் உணர்ச்சிகள் தொலைத்து இறுகியிருந்தது.அவளுக்கும் இன்று திருமண நாள் என்று தெரியும் தான்..ஆனால் அது அவளுக்கு வெறுமையை தவிர எந்த உணர்வையும் தரவில்லை.மகளின் முகத்திற்காக எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள்.



"திருமண நாள் வாழ்த்துக்கள்.."

அவர்கள் அருகில் வந்த ஆழிக்கண்ணன் இருவருக்கும் பொதுவாய் சொல்ல ஒரே நேரத்தில் இருவரும் தனிச்சையாய் அவர் காலை தொட குனிந்தனர்.அவர் வாழ்த்தும் போது வெண்பாவால் முகம் திருப்ப முடியவில்லை.



முகம் கொல்லா சிரிப்போடு இருவர் தலையிலும் கைவைத்து,



"ரெண்டு பேரும் நீண்ட காலம் சந்தோஷமா வாழணும்..எம்பெருமான் உங்களை ஆசிர்வதிப்பார்.."

என்றார் மனம் நிறைய..!!

அப்பொழுது தான் மனைவி முகத்தை பார்த்த மதி அதில் தெரிந்த இறுகத்திலே அவளது மனநிலை புரிந்துவிட அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி மறைய மனம் வாடியது.





"அக்கா..வாங்க...மாமா நீங்களும் தான்.."

என்ற லாவண்யா வெண்பாவின் கையை பற்றி கூடத்திற்கு அழைத்துவர அங்கே நடுநாயகமாய் மேசை போட்டு அதன் மீது இதய வடிவில் ரெட் வெல்வெட் கேக்..!!அதில் 'ஹாப்பி டெந்த் அனிவெர்சரி..' என்ற வாசகத்திற்கு மேல் மதி மற்றும் வெண்பா பெயர் எழுதி இடையில் ஒரு சின்ன ஹார்ட் என்று பார்க்கவே அழகாய் இருந்தது.



"டேய்..என்னங்கடா இது..சின்ன புள்ள மாதிரி.."

என்று மதி சங்கடமாய் சொல்ல,



"அண்ணா..செலிப்ரேட் செய்ய வயசு வேணுமா என்ன..!! இதெல்லாம் மெமரீஸ் ண்ணா..ஜெஸ்ட் ட்ரெஷர் இட்.."

என்ற ஜெகன் நிலாவை, "போ.." என்று அவர்கள் அருகில் அனுப்பி வைக்க இருவருக்கும் நடுவில் வந்து நின்றவள்,



"வாங்க...கட் செய்யலாம்..ப்பா..நீங்களும் மம்மியும் இந்த நைஃப் அஹ் புடிங்க.."

என்று இருவரையும் சேர்த்து கத்தியை பிடிக்க வைக்க எதுவும் சொல்லாமல் வெண்பாவே அதனை வாங்கினாலும் மதிக்கு தான் பயமாக இருந்தது.கோபமாய் இருக்கிறாளே என்ன செய்வாளோ என்று..!!





அனைவரும் உற்சாகமாய் கைத்தட்ட முதல் துண்டை வெட்டி வெண்பா எடுக்கவும் அதனை மதிக்கு ஊட்ட சொல்வோம் என்ற எண்ணத்தோடு லாவண்யா



"அக்கா.." என்று ஆரம்பிக்க அவள் எண்ண போக்கை யூகித்த உதயா சட்டென்று அவள் கையை பற்றி,



"வேணாம் அண்ணி..ஒழுங்கா சைலண்ட் மோடில் இருங்க..அண்ணி பேஸை பார்த்தால் தெரியலை..சிங்கம் ஏற்கெனவே சீரியஸாக இருக்கு..நீங்க வேற சீண்டுனீங்க கடிச்சு குதறிடுவாங்க..நான் எல்லாம் கம்முனு இல்ல..?? அனுபவசாலி சொன்னால் கேட்டுகனும்.."

என்று கிசுகிசுப்பாய் எச்சரிக்க வெண்பா முகத்தை பார்த்துவிட்டு தானும் அமைதியாகிவிட்டாள்.



வெண்பா எடுத்த துண்டை மகளின் வாயில் வைக்க அதே போல் தான் மதியும் மகளுக்கு மட்டும் ஊட்ட இருவருக்கும் நிலாவே ஊட்டிவிட என்று அவளே அவர்கள் இடைவெளியை நிறைவு செய்தாள்.





'உஃப் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது..' என்று மதி எண்ணி மூச்சு விடவில்லை அதற்குள் தயாளன்,



"உங்க மேரெஜ் அனிவெர்சரிக்கு என்னோட கிப்ட்..மாட்டேன்னு சொல்ல கூடாது.."

என்றபடி ஒருகவரை நீட்டியவன்,



"உங்க மூணு பேருக்கும் மூணார் போக டிக்கெட் போட்டுடேன்...த்ரீ டேஸ்..ரூமில் இருந்து அங்கே சுற்றி பார்க்க கேப் வரைக்கும் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.."



என்று சொல்ல இது நிலாவிற்கும் புதிய தகவல் என்பதால் கண்கள் விரிய,



"வாவ்..சித்தப்பா..செம்ம..செம்ம.." என்று அவள் இப்போவே குதிக்க,



"ஏண்டா..எல்லாருக்கும் போட்டிருக்கலாம்ல.." என்று மதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,



"நிலா..மொதல்ல குதிக்காத நில்லு..நாம போக போறது இல்ல.."



என்று பட்டென்று அதட்டிய வெண்பா,



"யாரை கேட்டு இதை ஏற்பாடு பண்ணீங்க...என்னால போக முடியாது..நீங்க கேன்சல் பண்ணிடுங்க..இல்லேனா நீங்களும் லாவண்யாவும் போயிட்டு வாங்க.."

என்றாள் தீர்க்கமாக...


"இல்ல அண்ணி..சர்பரைஸா இருக்குமேன்னு.."

என்று அவன் தயக்கமாய் இழுக்க, "எனக்கு எங்கேயும் போக விருப்பம் இல்ல தயா.."

என்றாள் பளீச்சென்று..



"ம்மாஆஆ...ப்ளீஸ் ம்மா..எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..போயிட்டு வரலாமே..என்னை எங்கயுமே அழைச்சுட்டு போக மட்டேங்கிறீங்க..எனக்கு மூணார் போகணும்...அப்பா சொல்லுங்க ப்பா.."



வெண்பாவின் கையை பிடித்துக் கொண்டு நிலா பிடிவாதமாய் சிணுங்க,



"குழந்தை ஆசை படுறா ம்மா..போயிட்டு வாங்களேன்..மூணு நாள் தானே.."

என்று அவளுக்கு சார்பாய் பேசிய ஆழிக்கண்ணனிடம்,



"இவ எல்லாத்திற்கும் தான் ஆசை படுவா..வேணாம் மாமா பிடிக்கலைன்னா விட்றுங்களேன்.."

என்று மறுத்துப் பேச நிலாவின் முகம் அழுகையில் சிணுங்க ஆரம்பித்தாள்.



"ப்பா...பாருங்க ப்பா அம்மாவை..நீங்களாவது சொல்லுங்க ப்பா..ப்ளீஸ்..ப்ளீஸ்.."

என்று தந்தையிடம் அவள் தாவ அவன் என்னவென்று அவளை சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் திணற குழுந்தைக்கு தேவையில்லாமல் ஆசைக்காட்டி விட்டோமோ என்று தயாவிற்கு தான் சங்கடமாய் போய்விட்டது.



அவன் முதலிலே இதற்கு யோசித்தான். நிலாவிற்காக அண்ணி சம்மதிப்பாங்க என்று ஜெகன் தான் ஊக்கினான்.



யாருடைய சமாதானமும் எடுபடாமல் நிலாவின் அழுகை அதிகமாக கோபித்துக் கொண்டு மாடி படிக்கட்டில் சென்று அமர்ந்துக் கொள்ள காலையில் இருந்து வெண்பாவை சூழ்ந்த இறுக்கம் மகளின் அழுகையில் கோபமாய் மாறியது.



"நிலா..இதென்ன பழக்கம்..இப்படி அழுது அடம் பண்ணினால் நீ கேட்டது கிடைச்சிடுமா..?? எந்திரி முதல்ல..ஸ்கூலிற்கு நேரம் ஆகிடுச்சு..கிளம்பணும்.."



"நீ மட்டும் அடம்பிடிக்கிற வர மாட்டேன்னு.."

தேம்பிக் கொண்டே சொன்னாள் அவளது மகள் என்பதை நிரூப்பித்தவளாய்..!



"இன்னோர் வாட்டி போயிக்கலாம் நிலா..சொன்னால் கேளு.."



"போ..நீ பொய் சொல்ற..நீ அழைச்சுட்டு போக மாட்டே.."



"நிலா.."



"என்னுட்ட பேசாதீங்க போங்க..எனக்கு தெரியும்..உங்களுக்கு அப்பாவோட வர பிடிக்காது..அதுக்கு தானே இப்படி பண்ணுறீங்க.."



கோபமாய் கத்திய மகளை அவள் அதிர்ந்து நோக்க தாய் மகளின் சம்பாஷணையை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்த மொத்த குடும்பமும் திகைத்தது.
 
Last edited:
விஷயம் தெரியாதென்று யாவரும் நினைத்திருக்க...
நிலாஉடைத்துவிட்டாள்......பட்டென்று

வெண்பாவின் கோபத்தின் அளவை பார்க்கும் போது...
மிகப் பெரிய விஷயமோ....என்னவா இருக்கும்...???? :unsure: :unsure: :unsure:
 
Top