Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 4

Advertisement

Sameera?

Well-known member
Member
அடுத்த பதிவு எப்போ தரலாம்? ?

கதையை பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க மக்களே?

அத்தியாயம் 4

சூரியன் தன் கடமையை முடித்து கிளம்ப ஆயத்தமாகிவிட்டான் என்பதற்கு ஆதாரமாய் மரங்கள் தலையசைத்து குளுமையான காற்றை வீசி சூரியனின் உக்கிரத்தை தணித்துக் கொண்டிருந்த இதமான மாலை வேளை அது..!!



அந்த காவல் நிலையத்தின் வாயிலில் கலைந்த தலையோடு ஓர் நலிங்கிய தோற்றத்தில் உதயாவும் அவள் அருகில் முகத்தில் ஆங்காங்கே காய்ந்த காயங்களோடு ஆஷிக்கும் நின்றுக் கொண்டிருந்தனர்.



"போலீஸிடம் உண்மையை சொல்ல வேண்டியது தானே..என்னை ஏன் காப்பாற்றிவிட்ட என்ன சிம்பத்தியா..??இல்லை பயமா..??"



உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு தலையை கோதியபடி அழுத்தமாய் கேட்க தன் தோளில் தொங்கிய கைப்பையின் பிடியை பிடித்து திருக்கியபடி பார்வையை அவன் முகத்தில் இருந்து வேறு புறம் திருப்பி,



"பயமா..?? நீ அவனை போடலேனாலும் அந்த நேரத்துல அவன் செத்து தான் போயிருப்பான் என் கையால..."

என்று அவள் சொன்னபோது, "கட்.."

என்று கோபமாய் ஒலித்த உதயின் குரலில் இருவரும் திரும்பினர்.



அவர்கள் முன் ட்றிப்போடில் இருந்த கேமராவழி சசியும் அவன் அருகில் உதய்குமாரும் நிற்க இதர உபகாரணங்களோடு அவர்கள் குழும் சுற்றி நின்றனர்.



"எத்தனை வாட்டி சொல்றது உதயா..ஒரு தடவ சொன்னால் புரிஞ்சிக்க முடியாத குழந்தையா நீ...அவன் குவஷின் பண்ணதுமே ஒரு சட்டயரிக் லாஃப் கொடுக்கணும்..அண்ட் 'என் கையில' சொல்றதுக்கு முன்னாடி கேப் விட்டு அந்த வொர்ட் சொல்லும் போது உன் ஃபேஸிலையும் ஐஸ்லையும் அந்த ரேஜ் தெரியணும்..ஏதோ செய்தி வாசிக்கிறா மாதிரி படிச்சிட்டு போற..இந்த சின்ன விஷயத்தை உன்னால ஃபாலோ பண்ணிக்க முடியாதா..அப்புறம் எதுக்கு நீ எல்லாம் நடிக்க வர...இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும்..அதுக்கும் மேல ஸூட் பண்ண முடியுமா..?இதுலே நின்றால் மிச்ச ஸீன் எல்லாம் என்ன நாளைக்கு வந்தா எடுக்க முடியும்.."



என்று ருத்ரமூர்த்தியாய் குதிக்கும் இவன் தான் அன்று சிரித்த முகமாய் இனியவனாய் இருந்தானா என்று நமக்கே சந்தேகம் வந்தது.



ஆம்! வேலை என்று வந்து விட்டால் அப்படியே வேறு முகம் தான்.தன் வேலையில் எப்பொழுதும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்..சிறு பிசகு என்றாலும் அதனில் திருப்திக்கொள்ளாது மீண்டும் மீண்டும் முயற்சித்து சரியாக வரும்வரை ஓயமாட்டான்.தன் கற்பனையில் உள்ள காட்சி அவன் கண்முன் கொண்டு வரவேண்டும்.அப்படியாக பட்டவனை கடந்த இரண்டு நாள் படப்பிடிப்பிலும் படுத்தி வைத்திருந்தாள் உதயா.



அதிலிருந்து இவளுக்கும் நடிப்புக்கும் வெகு தூரம் என்பதனை புரிந்துக் கொண்டாலும் இனி பாதியில் ஆள் மாற்றுவது சிரமம் என்பதால் மிகுந்த பொறுமையை இழுத்து பிடித்து அவளுக்கு ஒவ்வொன்றையும் சொல்ல அவள் சொதப்பும் பொழுதுகளில் கோபம் பொங்கியது.இதே இடத்தில் ஒரு பையன் இருந்திருந்தால் காதில் இரத்தம் வரும் அளவு பேசியிருப்பான்.பெண்ணாகி போக ஒர் அளவிற்கு மேல் தன் கோபத்தை காட்ட விரும்பாமல் தன்னை கட்டுப்படுத்தி இருந்தவன் இன்று எல்லாம் எல்லையை கடந்துவிட ஆடி தீர்த்துவிட்டான்.



எல்லோரின் முன்பும் அவன் திட்டுவதில் அவள் முகம் கூம்பிவிட மெல்ல மெல்ல கோபமும் எட்டி பார்த்தது.



இதே இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் 'போய்யா நீயும்..உன் படமும்..' என்று அவனுக்கும் மேல் சண்டையிட்டு அந்த இடத்தையே இரணகளம் ஆகியிருப்பாள்.



ஆனால் உதய்யிடம் அவ்வாறு சண்டைப்போட அவள் மனம் விழையவில்லை.அத்தோடு ஆஷிக் தனக்காக இங்கே பேசியிருக்க தான் எதாவது செய்யபோகி அவனுக்கு தேவையில்லாத சங்கடம் என்றே அமைதிக்காத்தாள். அவள் திட்டு வாங்குவதை காண பொறுக்காமல் ஆஷிக்,



"அண்ணா..ப்ளீஸ் ண்ணா..திட்டாதீங்க..சொன்னா புரிஞ்சிப்பா..நான் சொல்றேன்.."



என்னும்போது, "நீ பேசாதடா..சினி ஃபீல்ட்லையோ இல்ல மாடலீங்ல இருக்கிற யாரையாவது பாத்திருக்கணும்..நீ சொல்லவும் சரியாக இருக்கும்னு நம்பினேன் பார்..என்னை சொல்லணும்.."

என்று அவன் கூறவும் அவளது கண்கள் கலங்கிவிட அதனை கண்டதும் அவனுக்கும் மேலே பேச நா எழவில்லை.அவளது கண்ணீர் இதயத்தை ஏதோ செய்தது.



ரோஷத்தோடு நிமிர்ந்தவள்,



"தேவை இல்லாமல் ஆஷிகை எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க ண்ணா..மறுபடியும் டேக் போகலாம்..இந்த தடவ சரியாக வரலேனால் என்னானு கேட்க சொல்லுங்க.."

என்று சசியை பார்த்து கூறினாள் அவன் பக்கமே திரும்பாது...



சசி உதய்யை பார்க்க அவனோ உதயாவை பார்த்த வண்ணம் தலையசைத்தவன் மீண்டும் அக்காட்சியை படமாக்க தொடங்க இம்முறை அவன் கூறியதை சிறு பிழை இல்லாமல் செய்துக் கொடுத்தாள்.அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வசனங்களையும் சொல்லி அவன் காட்சியை விளக்க முறைத்தபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.



அவளது முறைப்பில் அவனுள் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து சிரிப்பு வந்தது.அவளது முறைப்பு ஏனோ குழந்தையின் கோபம் போல் இரசிக்க கூடியதாய் இருக்க,



'பொண்ணுங்க கோபப்படும் போது தான் அழகா இருப்பாங்க போலவே..'

என்று தோன்ற மானசீகமாய் சிரித்துக் கொண்டான். (இதை வெளியே சொல்லிடாத உதய்..அப்புறம் வரும் சேதாரத்திற்கு நான் பொறுப்பு இல்லை..)



அந்த கடைசிக் கட்ட படபிடிப்பும் முடிந்துவிட,



"ஓகே..குட்.."

என்று புன்னகையோடு சொன்னவன் சசியிடம்,



"எல்லாம் ஓகேவா பார்த்துட்டு இருடா..நான் போய் ராமை பார்த்துவிட்டு வரேன்.."

என்றான்.அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ராம் அவனது நண்பன் என்பதால் அங்கே படப்பிடிப்பு நடத்த எளிதாய் அனுமதி கிடைத்தது.இவர்கள் வந்தபோது ராம் ஏதோ விசாரணைக்காக வெளியே சென்றிருந்தவன் தற்போது தான் வந்திருக்க அவனை காண்பதற்காக உள்ளே சென்றுவிட்டான்.



போகும் அவனை முறைத்து பார்த்தபடி உதயா,

'திட்ட மட்டும் நல்லா வாய் கிழிய பேச தெரியுதுல..இப்போ நல்லா பண்ணும்போது பாராட்ட மனசு வந்துச்சா.. குட் ஆம் குட்டு..'

என்றெண்ணி நொடித்துக் கொள்ள,



"ஹே..உதயா..தப்பா எடுத்துகாதமா..அவனுக்கு கோபம் வந்தால் இப்படி தான் அந்நியனா மாறிடுவான்..பட் அவன் கோபம் அந்த நேரத்துல மட்டும் தான்..அப்புறம் தானே மறந்துடுவான்..அண்ட் ஒன் திங்க் கோபத்துல டயலாக் எல்லாம் பிச்சு உதறிட்ட..செம்ம போ.."

என்று சசி கூறியதற்கு பதிலாய் புன்னகையை மட்டுமே தந்தாள்.



இரு மருங்கிலும் அணிவகுத்து நின்ற மரங்கள் கிளைகளால் சாலையை சூழ்ந்து ரம்மியமாய் காட்சியளிக்க அப்பாதையில் மெல்ல நடக்க தொடங்கிய உதயாவுடன் தானும் இணைந்துக் கொண்டான் ஆஷிக்.

அமைதியாய் உடன் வந்தவனிடம் தானே பேச்சை தொடங்கினாள்.



"உனக்கே தெரியும்ல ஆஷிக்..என்னை என் அப்பா,அண்ணாங்க கூட திட்டினது இல்ல..ஸ்கூல்,காலேஜ் எங்கேயும் எல்லாருக்கும் நான் பெட் தான்..என்னவோ நான் யூஸ்லெஸ் மாறி அந்த திட்டு திட்டுறார்..அதுவும் எல்லார் முன்னாடியும்.."

என்னும்போது அவள் குரலில் அந்த வருத்தம் தெரிந்தது.பிடித்தமானவனின் பார்வையில் தான் தத்தியாக தெரிவது பிடிக்கவே இல்லை.



"சாரி உதயா..பட் நான் சொன்னேன்ல உனக்கு இதெல்லாம் செட் ஆகாதுனு.."



"ம்ச் போடா..உனக்காக தான் நான் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தேன்..இல்ல அவரை உண்டு இல்லேனு ஆக்கிருப்பேன்.."



"எனக்காகவா..??இல்லை உதய் அண்ணாட்ட சண்டைப்போட மனசு வரலையா.."

என்று அவன் கிண்டல் செய்ய முறைத்தவள்,



"சிரிச்ச கொன்றுவேன்..உண்மையா தான் சொல்றேன்..எனக்கு பிடிக்கும் என்கிறதுக்காக என்ன பேசினாலும் சிரிச்சிட்டே எல்லாம் வாங்கிக்க முடியாது..பதிலுக்கு எனக்கும் கோபம் வரும்..இந்த ஒரு வாட்டி போனால் போகிறது என்று விடுகிறேன்..இன்னோர் வாட்டி இப்படி எதாவது பேசட்டும்..."



என்னும்போதே அங்கே வந்திருந்தான் உதய்.அவனை பார்த்தது ஆஷிக் அவளின் கையை சுரண்ட, "என்ன.." என்று திரும்பியவள் உதய்யை கண்டு கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.அவன் முகத்தில் இருந்து அவன் பேசியதை கேட்டானா இல்லையா என்றும் அறிந்துக் கொள்ள முடியவில்லை.



"ஆஷிக்..சசி உன்னை கூப்பிட்டான்...ஏதோ உன்னிடம் கொடுத்தானாமே.."

என்றதும் அவன் உதயாவை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல எதுவும் சொல்லாமல் அமைதியாய் அவள் போக்கில் நடக்கவும் உடன் நடந்தபடி,



"என்ன செம்ம கோவத்துல இருக்க போல.."

என்று கேட்டான் உதய்.

'இல்லை' என்பது போல் தலையசைத்தாலும் முகம் கோபம் தான் என்பதை சொன்னது.



"கோபமாய் தான் இருக்கேன்னு தெரியுது..பட் சாரி எல்லாம் கேட்பேன்னு எதிர்பார்க்காதே.."

என்று அவன் கூறவும் நிமிர்ந்து பார்த்து முறைக்க,



"என்ன..பார்க்கிற..?நான் திட்டியதில் தப்பில்லையே..நீ புரிஞ்சிக்காம செஞ்ச தப்பையே மறுபடியும் மறுபடியும் செஞ்சா மனுஷனுக்கு கோபம் வராதா..? நான் திட்ட போய் தானே அடுத்து அடுத்து எல்லாம் ஓரே டேக்ல பண்ண.."

என்று தோளை குலுக்கி சொன்னவன்,



"உண்மையை சொல்லு உனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் இல்லை தானே.."

என்று விளையாட்டை கேட்கவும்,



"நடிப்பில் ஆர்வம் இல்லை தான்..ஆனால் உங்க மேல ரொம்ப ஆர்வம்..அது தான் இங்க கொண்டு வந்து நிறுத்திருச்சு.."

என்று அலுங்காமல் ஒரு குண்டை தூக்கிப்போட சட்டென்று நின்றுவிட்டவன் முகத்தில் அதிர்ச்சி மட்டுமே!!



"வாட்??"



அவளும் நின்றாலும் அவனை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. அங்கும் இங்கும் பார்வை அலைபாய்ந்தாலும் உதடுகள் பேச சற்றும் தயங்கவில்லை.



"ஆஷிக் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கான்...கேட்க கேட்க உங்க மேல என்னையும் அறியாமல் ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கிட்டேன்...ஆஷிக் மாறி நானும் உஙகளோட ஒரு ஃப்ரெண்ட் ஆகணும்னு ஆசைப்பட்டேன்..அதுக்கு தான் இந்த ஷார்ட் ப்லீம் நடிக்க நினைச்சது எல்லாம்..ஹானஸ்ட்லீ அதை தவிர அப்போ நான் எதுவுமே யோசிக்கல..பட் உங்களை நேரில் பார்த்து பழகும் போது ஐ காண்ட் கன்ரோல் மை ஃபீலிங்ஸ்..உங்களோட ஒவ்வொரு அசைவுக்கும் கூட என் மனசு அடிக்ட் ஆகுது..உங்களை விட்டு என் எண்ணங்களை பிரிக்க முடியல..எதை யோசிச்சாலும் கடைசியில் உங்களுட்ட வந்து நிற்பதை நினைச்சால் என்மேலே எனக்கு கோபம் வருது..நான் இங்க வந்திருக்கவே கூடாது..இந்த ஃபீலிங்க்ஸை வளர விட்டிருக்க கூடாது..ம்ச் என் மேல தான் தப்பு..இப்பகூட நீங்க என்னை திட்டினதுக்கு உங்க மேல கழுத்துவரை கோபம் முட்டுது..இருந்தாலும் இப்போ நாம நடக்கிற இந்த பாதை ஒரு முடிவே இல்லாமல் இப்படியே நீளாதானு ஒருபக்கம் தவியா தவிக்குது..உஃப்ப்.."



என்று தயக்கமின்றி மனதில் தோன்றியதை பேசிக்கொண்டே வந்தவள் அந்நேரம் மனதில் எழுந்த உணர்வுகளின் கணம் தாளாது மூச்சை இழுத்து விட்டு



"முடியல..பைத்தியம் ஆகிடுவேன் போல.."

என்றபடி தலையை இடமும் வலமும் அசைத்து, "நான் வரேன் சர்.." என்று அங்கிருந்து செல்ல உதய் குமார் உயிருள்ள சிலையாய் அங்கேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.



வீட்டிற்கு வந்தபின் நாளைய மதிவாணன் - வெண்பா திருமண நாள் வேலையில் இந்த சம்பவத்தை பற்றிய எண்ணம் சற்று பின்னுக்கு போனது.



அவர்கள் இருவருக்கும் தெரியாமல் மொத்த குடும்பமும் சப்ரைஸ் கொடுக்க எண்ணி சில திட்டங்களை வகுத்து அதற்கு தகுந்த ஏற்பாடுகளை கவனித்தனர்.ஒருபக்கம் இருவரின் கோபமும் அறிந்தவர்கள் ஆதலால் என்ன செய்வார்களோ என்ற பயமும் எல்லோர் மனதிலும் இருக்க தான் செய்தது.



அனைத்தும் முடிந்து இரவில் தன் அறைக்கு வந்ததும் மீண்டும் உதய்யை பற்றிய சிந்தனை எழும்ப,



"எந்த தைரியதுல எல்லாம் சொன்னேன் தெரியல..அவர் என்னை பத்தி என்ன நினைத்து இருப்பார்..ரொம்ப கேவலமா எதாவது நினைச்சுட்டால்..ச்சே..ச்சே அவர் அப்படி பட்ட ஆள் இல்லை..கூப்பிட்டு வைத்து அட்வெய்ஸ் வேண்டும்னா பண்ணுவார்..ஏதோ இத்தனை நாள் மனசை அழுத்திய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இப்போ தான் நிம்மதியா இருக்கு...எதை பத்தியும் யோசிக்காமல் நிம்மதியாய் தூங்கி எழுந்தால் தான் நாளை அண்ணா - அண்ணியை சமாளிக்க மைண்ட் ஃப்ரெஸ்ஸாக இருக்கும்.."



என்றெண்ணியபடி அவள் உறங்க ஆயத்தமாக 'உன்னை நிம்மதியாய் தூங்க விட்டுவிடுவேனா..' என்று விதி கங்கணம் கட்டிக்கொண்டு ஜெகன் வடிவில் கதவை தட்டியது.



"உள்ள வாங்க.." என்று அவள் எழுந்து அமர,



"நல்லவேளை தூங்கி இருப்பியோன்னு நினைச்சேன்.." என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஜெகன்.



"நீ தானா ஜெகா..என்ன விஷயம் ஜெகா இந்த நேரத்தில் என்னை தேடி வந்திருக்க.."

என்று கேட்க "சொல்றேன்.." என்றவன் நிலாவை பார்க்க அவள் உதயாவின் அருகில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.



"ஸூட்டிங் முடிஞ்சிதா..இன்னும் எத்தனை நாள் இருக்கு.."



என்று அவன் கேட்க, "ம்ம்ம் முடிஞ்சிது..நாளானைக்கு டப்பிங் இருக்கு..அவ்வளவு தான்.." என்றவள் தமையனின் முகத்தை ஆராய்ந்தாள்.



"ஹோ..ஓகே..ஓகே.."

என்றவன் ஏதோ சொல்ல தயங்குவது புரிய,



"என்ன ஜெகா..என்னிடம் சொல்ல என்ன தயக்கம்..சொல்லுண்ணா.."



என்று ஊக்குவிக்க அவன் எதுவும் பேசாமல் தன் கையிம் இருந்த கவரை அவள் கையில் திணித்தான். என்னவென்று புரியாமல் வாங்கி பிரித்து படித்து பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய அதையும் ஜெகனையும் மாறி மாறி பார்த்து,



"இது..இது..எப்படிடா..உண்மையை தான் சொல்றீயா.."

என்று வாயை பிளந்தாள்.மேற்கொண்டு அவள் எதுவும் கேட்கும்முன் அனைத்தையும் அவன் விளக்கி கூற அவள் அதிர்ச்சி விலகாமலே அவற்றை உள்வாங்கி கொண்டாள்.



"வீட்டில் எல்லாரிடமும் எப்போ சொல்ல போற.."

என்று தன்னை சற்று சமன்படுத்திக் கொண்டு கேட்டாள்.



"பெங்களூர் போயிட்டு வந்த அப்புறம்."



"லூசா நீ..வீட்டில் சொல்லாம இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி செய்ய நினைக்கிற..சொல்லிடு ஜெகா.."



"இல்லை..வேண்டாம் உதயா..இப்பவே சொன்னால் என்னை புரிஞ்சிப்பாங்களா தெரியல.. நான் நினைத்தை முடித்துட்டு அந்த நிமிர்வோட வந்து நிற்க ஆசைப்படுறேன்.."



என்ற அண்ணனின் மீது கோபம் வரபெற்றவளாய்,



"எருமைமாடு..அப்புறம் ஏண்டா என்னிடம் மட்டும் சொல்லி தொலைஞ்ச.."



என்று அவன் தோளிலே ஒன்று போட சிரித்தவன்,



"யாருட்டையாவது ஷேர் பண்ணனும் போல இருந்தது..அதான்..ஒன் வீக் தான்..போயிட்டு வெற்றியோட திரும்பி வரேன்..அதுவரை அடிச்சிக்கேட்டாலும் உண்மையை சொல்லக்கூடாது..புரியுதா தங்கச்சி.."



என்று அவள் தலையை நாலாப்பக்கமும் பிடித்து சுற்றிவிட்டு இரவு வணக்கம் சொல்லி வெளியே செல்ல பிரமை பிடித்தவள் போல் அவன் சென்றதும் கட்டிலில் விழுந்தவளுக்கு இனி எங்கே தூக்கம் வரப்போகிறது!!!!
 
Last edited:
Top