Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 2

Advertisement

Sameera?

Well-known member
Member
ஹலோ..ஹாய்..வணக்கம் மக்களே..முதல் அத்தியாயத்தை அறிமுகம் போல் பதிவு செய்து இருந்தேன்..இனி ரெகுலர் அப்டேட்ஸ் எதிர்பார்க்கலாம் ?
அடுத்த பதிவு ஞாயிறு அன்று..? இன்றைய பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிருங்கள்..நன்றி..

அத்தியாயம் 2

சாப்பிட்டு முடித்ததும் ஜெகன் நைசாக நழுவி தன்னறையில் புகுந்துக் கொள்ள அதை கண்டும் காணாததுப்போல் இருந்தாலும் எரிச்சல் மண்டியது மதிக்கு..



"விடு ண்ணா..கொஞ்ச நாள்ல அவனே புரிஞ்சுப்பான்..நீங்க கவல படாதீங்க..."

என்று தயாளன் சொல்ல தலையசைத்தானே தவிர எதுவும் சொல்லவில்லை.



சாப்பிட்டு முடித்ததும் அவரவர் வேலைகளுக்கு கிளம்பினர்.

முகத்தில் கடுகடுப்பு மறையாமல் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்ப முற்பட்ட மதிவாணனை கைப்பிடித்து நிறுத்திய நிலா,



"இங்க வா ப்பா.." என்று தன் உயரத்திற்கு அவனை வரவைத்து,



"காலைல வெளிய போகும்போது எப்பவும் ஸ்மைலீ ஃபேஸ்ஸா தான் போகனும்..அப்போ தான் அன்னைக்கு நாளும் ஹாப்பியா இருக்கும்னு நீங்க தானே சொல்வீங்க..சிரிங்க ப்பா.."

என்று அவன் கன்னத்தை இழுத்துப் பிடிக்கவும் மதிக்கு மட்டும் அல்ல அருகில் நின்ற தயா,லாவண்யா மற்றும் உள்ளே நின்ற வெண்பா என அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.



'இந்த குட்டி தேவதை மட்டும் என் வாழ்க்கையில வரலேனா எப்பவோ நடைப்பிணமா ஆகியிருப்பேன்..'

என்ற எண்ணம் என்றும் போல் இன்றும் எழ பெரிதாய் புன்னகைத்தவன் நிலாவை தூக்கி உச்சி முகர்ந்து, "அப்பா போயிட்டு வரேண்டா..பை.."

என்று விடைப்பெற்று செல்ல அவனை தொடர்ந்து கிளம்பிய தயா லாவண்யாவிடம்,



"நமக்கும் நிலாக்குட்டி போல ஒரு பாப்பா இருந்தால் இப்படி தானே இருப்பா லாவ்ஸ்.."

என்று ஆசையாய் கூற அவனை ஆச்சரியமாய் பார்த்த லாவண்யா,



"பார்ரா..குழந்தை உடனே வேணாம்..ஒரு ரெண்டு வருஷம் கழித்து பெத்துக்கலாம்னு சொன்ன மனுஷனா பேசுறது.."

என்று கேலி செய்ய,



"சொன்னேன் தான்..ஆனால் இப்போலாம் ஆசையா இருக்குடி..அண்ணா மாதிரியே ஒரு பெஸ்ட் அப்பாவா இருக்கணும்..பேபியை கைக்குள் வைச்சு தாங்கனும்னு..நான் நல்ல அப்பாவா இருப்பேன் தானே லாவ்ஸ்.."

என்று ஆசையும் எதிர்ப்பார்ப்பு போட்டிப்போட கூறிய கணவனை அன்பாய் பார்த்தாள் லாவண்யா.



"என்னையவே ஒரு பேபி மாறி தானே கேர் பண்ணுறீங்க..நிச்சயம் உங்க பிள்ளையை இன்னும் நல்லா பார்த்துப்பீங்க ப்பா..எனக்கு நிச்சயமா தெரியும்.."



என்று கூறி அவன் விரல்களோடு விரல் கோர்த்து காதலாய் கூற அந்த இளம் தம்பதியர்களின் உள்ளம் எதிர்கால கனவில் மிதந்தது.



இங்கே வீட்டில் மதி சென்றதும் நிலாவிடம் வந்த வெண்பா அவளது லன்ச் பேக்கில் வாட்டர் பாட்டிலை வைத்தப்படி,



"ஹோம்வொர்க் நோட் எல்லாம் எடுத்து வைச்சுட்டேல நிலா.."

என்று கேட்க, "ம்ம் ம்மா..எல்லாம் எடுத்து வைச்சுட்டேன்.."

என்றுவிட்டு "சித்தப்பாஆஆ..அப்பா போய் அரைமணி நேரம் ஆச்சு..போதும்..வெளியே வாங்க..."

என்று கத்தி அழைக்க வாய்விட்டு சிரித்த வெண்பா, "வாலு.." என்று கன்னத்தில் தட்டினாள்.



நிலாவை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலம் செல்ல மதிக்கு தாமதமாகுவதால் ஜெகன் தான் காலையில் பள்ளியில் விட்டு மாலையில் அழைத்து வருவான்.



அறையில் இருந்த ஜெகன் தன் அண்ணன் மகளின் கேலியில், "அடிங்க.." என்று வேகமாய் வெளியே வந்தவன்,



"ஏய் அரைக்காப்படி..உங்க அப்பாவை பார்த்து பயந்து ஒன்னும் நான் ரூமிற்குள் ஒழிஞ்சிக்கல..பாவம் பிள்ளைக்கு ஸ்கூலிற்கு நேரமாகுதேனு கிளம்ப நினைச்சால் என்னையே கிண்டல் பண்ணுற.."

என்க அப்பொழுது கல்லூரிக்கு தயாராகி வந்த உதயா,



"ஹாஹாஹா..அதான் நெத்தியிலே எழுதி ஒட்டி இருக்கே..அப்புறம் ஏன் ஜெகா கேவலமா சமாளிக்கிற.."

என்று சிரித்தவள் நிலாவோடு ஹைஃபை கொடுக்க அவர்களை முறைத்த ஜெகன்,



"கலாய்கிறீங்கல்ல..ஒருநாள் இந்த ஜெகனோடு திறமையை கண்டு எல்லாம் வாயடைச்சு போவீங்க..அப்போ காட்டுறேன் கெத்துன்னா என்னானு.."

என்று சிங்கமாய் சிலிர்க்க, "சபதம்..எடுத்தா போதுமா ஜெகன்..அதுக்கான முயற்சியும் எடுக்கணும் தானே...உங்க அண்ணன் உன்னை பத்தி கவலை படுறதுல என்ன தப்பு..இந்த வேலைக்கு போறேன்..இதுவா ஆக போறேன்னு ஒரு இலக்கு வைச்சுக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை..சும்மா எதுவுமே பிடிக்கலேன்னு காலத்தை ஓட்டலாமா..தப்பு ஜெகன்.."

என்று வெண்பா நிதானமாய் அதே சமயம் கண்டிப்புடன் கூற பின்னந்தலையை தடவி,



"சரி தான் அண்ணி..ஆனால் எனக்கு இந்த 9-5 ஸ்கெடியூல்ட் லைஃப் ரொம்ப போரிங்கா தெரியுது..என்னோட கனவே வேற..கூடிய சீக்கிரமே அதற்கான ஏற்பாடோட உங்க முன்னாடி வந்து நிற்பேன் அண்ணி.."

என்று அவன் உறுதியோடு கூற மென்னகையோடு தலையசைத்து,



"சரி..இப்போ..ஸ்கூலிற்கு நேரமாகுது..கிளம்புங்க..."

என்று பேக்கை மகளின் தோளில் மாட்டிவிட்டு லன்ச் பேக்கை ஜெகனிடம் கொடுத்து அனுப்பி வைக்க,



"ஜெகா..ஜெகா..அப்படியே என்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் பண்ணுடா.."

என்றாள் உதயாவும்..!!



"ஏன்..எப்பவும் உன் ப்ரெண்டும் நீயும் பொடி நடையா தானே போவீங்க..இப்போ என்ன.."



"இல்லடா..அவ இன்னைக்கு வரல..தனியா போக கடுப்பா இருக்கு..ப்ளீஸ்.."



"சாரி தங்கம்..டைம் இல்ல..நடந்தே போ.."

என்று தோளை குலுக்கி நகர,



"டேய்..பொறுப்பே இல்லாம பேசுற..தங்கச்சி தனியா போறாளே ரோட்டில் யாராவது வம்பிழுப்பாங்க..துணைக்கு வருவோம்னு எண்ணம் இருக்கா.."

என்க,



"ம்க்கும் நீ நாலு பேர வம்பிழுத்து ரோட்டில் போற தேர வீட்டில் விடாமல் இருந்தால் சரி..நீ யாருனு இந்த ஊருக்கே தெரியும்..அதனால ஒரு ஜீவனும் உன்னை சீண்டாது..கிளம்பு..கிளம்பு.."



என்க அவள் "அண்ணி..பாருங்க அண்ணி இவன ரொம்ப பண்றான்.."

என்று வெண்பாவிடம் முறையிட,



"அவளை ஏன் கெஞ்ச விடுற..கூட்டிட்டு போயேன் ஜெகா..."

என்று அவள் கூறவும் "ஆமா..கெஞ்சுற மூஞ்ச பாருங்க..நீங்க சொல்லுறீங்களேனு போனால் போகுதுனு அழைச்சுட்டு போறேன்.."



என்று பிகு செய்து முன்னால் நடக்க அவன் தலைக்கு பின்னால் அவனை அடிப்பதுப்போல் பாவனை செய்த உதயா வெண்பாவிடம் டாட்டா காட்டிவிட்டு நிலாவின் கைப்பிடித்துக் கொண்டு செல்ல வழக்கமான காலை நேர அமளிதுமளிகள் அடங்கி வீடே அமைதியானது.



ஜெகனின் பைக்கில் அவனுக்கு பின்னால் நிலா உட்கார்ந்து அவளை அடுத்து உதயா உட்கார்ந்ததும் புறப்பட்டான்.



"என்ன ஜெகன்..நீ அண்ணிட்ட சொன்னதை வைச்சு பார்க்கும்போது ஏதோ முடிவுக்கு வந்துட்ட போல..என்னடா அது.."



என்று ஆர்வமாய் கேட்ட தங்கையை கண்ணாடியில் புன்னகையோடு பார்த்தவன் கண்சிமிட்டி "சொல்லுவோம்" என்றுவிட்டு,



"சரி..நீ என்னமோ நடிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்த..ஆனால் வீட்டில் இதை பத்தி மூச்சே விடக்காணும்.." என்க



பெருமூச்சோடு, "எங்க..? அண்ணிட்ட காலைல தான் சொன்னேன்..என்னால பேச முடியாது ஆள விடும்மானு சொல்லிட்டாங்க..சரி நாமே பேசலாம்னு பார்த்தால் இன்னைக்கு உன் விசயத்துல அண்ணா - அப்பா மூட் சுத்தமா ஸ்பாயில் ஆகிடுச்சு.." என்று உதயா சொல்ல



"அதான் அண்ணி காதுல போட்டுடியே..இனி அவங்க பார்த்துப்பாங்க..அது சரி எங்கேந்து உனக்கு இந்த திடீர் ஆசை..உனக்கு இதில் எல்லாம் அவ்வளவு இன்ரெஸ்ட் கிடையாதே.."

என்று யோசனையோடு கேட்க ஒரு நொடி திருதிருவென முழித்தவள் சட்டென்று தன் பாவணையை மாற்றி,



"அது..ஆஷிக் இந்த மாறி ஒரு ரோல் இருக்கு..நீ சூட் ஆகுவேன்னு நினைக்கிறேன்..பண்ணுறீயான்னு கேட்டான்..நானும் அவங்க ஃப்லீம் க்ரூவ ஒருவாட்டி பார்த்திருக்கேன்..ரொம்ப ஜாலியான கேங்..இன்ரெஸ்டிங்கா இருக்கும்னு தோணுச்சு..அதான் சும்மா ஒரு ட்ரை..."

என்று தோளை குலுக்கி சாதாரணமாய் சொல்லியவள் அப்பொழுது தான் பேருந்து நிறுத்தத்தை தாண்டி அவன் செல்வதை கவனித்து,



"லூசு ஜெகா என்ன கனவுலேயே வண்டி ஓட்டுறீயா..பஸ் ஸ்டாப் தாண்டி போயிட்டு இருக்க..திருப்புடா.."

என்று ஆர்பரிக்க,



"ஸ்ஸ்...கத்தாதடி...தெரிஞ்சு தான் போறேன்..நிலாவ ஸ்கூலில் விட்டுட்டு..உன்னை காலேஜ்லேயே ட்ராப் பண்ணுறேன்..பேசாம வா.."

என்று அவன் சொல்லவும் சட்டென்று முகம் மலர, "அண்ணன்னா அண்ணன் தான்..என் பாசமலர்.."

என்று செல்லமாய் கூற,

"அடடடா...கொஞ்சம் என்னையும் பேச விடுங்களேன்...உங்க ரெண்டு பேர் நடுவுல மாட்டிட்டு நான் படுற பாடு..முடில.."

என்று உச்சகட்ட கடுப்பில் நிலா கூறினாள்.

ஏனெனில் ஒரு விஷயத்தை இவர்களிடம் சொல்ல அவளும் முயன்று கொண்டிருக்க அதை கவனிக்காமல் வண்டி ஏறியதில் இருந்து இடைவெளியே விடாமல் பேசிக்கொண்டு வரும் இவர்களின் மீது கொலைவெறியே வந்தது.



அசடு வழிந்தப்படி, "என்ன நிலா.." என்று கோரஸ் போட,



"ம்ம்ம்..கமிங் 16 என்னானு தெரியுமா..?"

என்று கண்கள் மின்ன கேட்ட நிலாவை புரியாமல் பார்த்த உடன்பிறப்புகள்,



"என்ன..யாருக்கும் பர்த்டே கூட இல்லையே.."

என்று யோசிக்க முறைத்தவள்,



"அன்னைக்கு அப்பா- அம்மாவோட வெட்டிங் அனிவெர்சரி..இதுக்கூட தெரியல என்ன தம்பி தங்கச்சி நீங்க.."

என்று கேட்க இருவரும் அவள் முறைப்பை பொருட்படுத்தாது,



"ஆமால..." என்று ஜெகனும்,



"ஹே அதுவும் டென்த் அனிவெர்சரி.."

என்று உதயாவும் உற்சாகமாய் சொல்லி,



"உனக்கு எப்படி நிலா தெரியும்.." என்று கேட்டாள்.



"நான் ஆல்பத்துல பாத்திருக்கேனே..அம்மா - அப்பாக்கு ஸ்பெஷலா எதாவது சப்ரைஸ் பண்ணலாமா.."

என்று ஆசையாய் நிலா சொல்ல தற்போது திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.



"சப்ரைஸ் ஆ.."



"ஆமா..சப்ரைஸ் தான்..லாஸ்ட் டைம் என் பர்த்டேக்கு செஞ்சீங்களே...அந்த மாதிரி..ப்ளீஸ் சித்தப்பா..செம ஃபன்னா இருக்கும்.."

என்னும் போது உதயா சங்கடமாய் பார்க்க சூழ்நிலையை சரியாக்க,



"அதுக்கென்ன நிலாம்மா..சூப்பரா பண்ணிடலாம்..அதான் இன்னும் ஒன் மந்த் இருக்கே..நான் ப்ளான் ரெடி பண்ணிட்டு சொல்றேன்.."

என்று ஜெகன் சொல்ல மகிழ்ச்சி மிகுதியில், "ஹை..யெஸ்..சூப்பர் சித்தப்பா.." என்று அவனை அணைத்துக் கொள்ள குழந்தையின் குதூகலத்தை கண்டு இருவருக்குமே புன்னகை அரும்பியது. அவளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும்போது,



"என்ன ஜெகா..நிலா தான் புரியாம பேசுறான்னா..நீயும் பண்ணலாம் என்கிற.."



"ஏன் செஞ்சால் தான் என்ன?"



"என்ன வா?? அண்ணிக்கு இதெல்லாம்..ம்ச் அண்ணி கோவப்பட்டாங்கன்னா என்னடா பண்றது..எல்லாருக்கும் கஷ்டமா போயிரும்.."



"இப்படி நினைச்சு ஒதுங்கி ஒதுங்கி தான் இன்னைக்கு வரை இப்படியே இருக்காங்க..பத்து வருஷம்..பத்து வருஷ கல்யாண வாழ்கையில அவங்களுக்காகன்னு ரெண்டு பேரும் எப்போவாவது யோசிச்சு இருக்காங்களா..வாழுறதே நிலாகாக மட்டும் தான் என்கிற மாதிரி இருக்காங்க..உனக்கு நியாபகம் இருக்குதா தெரியல..ஆனால் கல்யாணம் ஆன புதுசுல ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு லவ் வைச்சிருந்தாங்க தெரியுமா..அரெஞ்சு மேரெஜ்ன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க..மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்லுறா மாதிரி இருப்பாங்க..ஆனால் இடையில் நடந்த அந்த மோசமான சம்பவம் !அதுக்கு பிறகான கசப்பான கொஞ்ச காலம்! இதுக்கு இடைல மாட்டி அவங்க லவ் செத்து போயிடும்மா என்ன...கண்டிப்பா இருக்காது உதயா..அவங்களை இப்படியே விட்டால் சரி வர மாட்டாங்க.."



என்று ஜெகன் பேசுவதில் உள்ள உண்மை உதயாவிற்கும் புரிய,



"அப்போ என்ன பண்ணலாம்..?"

என்று கேட்டவளை "இனிமே தான் யோசிக்கணும்..டென்த் அனிவெர்சரிய சிறப்பா செஞ்சிடலாம்..மீறி எதாவது சொன்னால் நிலா ஆசைப்பட்டா அதான்னு சொல்லிக்கலாம்.."

என்று ஜெகன் கூற ஆர்வமாய் தலையாட்டிய உதயா அதே சமயம் அந்த புன்னகை மாறாமல் கோவையில் ஒருவனின் கைப்பேசியில் புகைப்படமாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.



அவன் உதய்குமார்! திராவிடரின் அக்மார்க் நிறம் மற்றும் முகவடிவோடு நெடு நெடுவென நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரத்தில் அதற்கேற்ற உடல்கட்டும் கொண்ட துடிப்பான இளைஞன்.காண்போரை வசீகரிக்கும் தோற்றம் இல்லை எனினும் பழகினால் நிச்சயம் பிடிக்காமல் போகாது.



"டேய்...உதய்..யார்ரா இந்த பொண்ணு..தேவதை மாறி இருக்கா.."



அவனை சாப்பிடுவதற்காக அழைக்க வந்த சரண்யா மகனின் கைப்பேசியில் இருந்த பெண்ணை கண்டு ஆர்வமாய் கேட்டபடி அதனை வாங்கி பார்க்க,



"ம்மா..நீ பாட்டுக்கு கற்பனை பண்ணாத..அது நான் எடுக்கப்போற ஷார்ட் ஃப்லீம் ல நடிக்க இருக்க பொண்ணு.."

என்று சொல்லவும் முகத்தில் பிரகாசம் குறைந்தாலும்,



"நான் எந்த கற்பனையும் பண்ணலையே..சும்மா யாருனு தானே கேட்டேன்.."

என்று சமாளிக்க மின்னல் கீற்றாய் பல்வரிசை தெரியே அழகாய் சிரித்தவன் எழுந்து சரண்யாவின் தோளில் கைப்போட்டு,



"எனக்கு இந்த சரண் மூளை எப்படி வேலை செய்யும் தெரியாதா..?ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் அமைதியா இருந்திருந்தேன்.. இந்நேரம் அப்பாட்ட சொல்லி அந்த பொண்ணோட ஜாதகத்தையே வாங்கி இருப்ப..."



என்று குறும்பாய் சொல்லவும்,





"நினைச்சுட்டே இரு..உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற யோசனை எல்லாம் எனக்கு இல்ல தம்பி.."

என்று நொடித்துக்கொண்டு அவர் வெளியேற அவரை தொடர்ந்து அதீத அதிர்ச்சியை முகத்தில் காட்டி நெஞ்சை பிடித்துக்கொண்ட மகன்,



"அம்மா..ஏன் இந்த கொலவெறி.."

என்றான்.



"பின்ன சினிமான்னு சொன்னாலே பொண்ணை பெத்தவங்க எல்லாம் காது தூரம் ஓடிப்போயிடுறாங்க..எங்க மகன் நல்லவன் வல்லவன்னு எவ்வளவு சொன்னாலும் தயங்குறாங்க..ஏற்கெனவே நானும் உன்ற அப்பாவும் டயர்ட் ஆகியாச்சு..இனிமே எல்லாம் யார்ட்டையும் பொண்ணு கேட்டு போயி பல்பு வாங்க விரும்பல...நீ தானே சினிமாவை தேர்வு செஞ்ச..அப்போ பொண்ணையும் நீயே பாத்துக்கோ போ.."



ஆம்..தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் தவரூபனிடம் உதவி இயக்குநராக பணிப் புரிகிறான்.



"அப்படிலாம் சொல்லப்படாது..அம் யூவர் ஒன்லீ சன் ல..சமத்து அம்மாவா..விடாம முயற்சி பண்ணோனும்..அதை விட்டுட்டு இப்படி கம்பி நீட்டினால் வருங்கால சந்ததிகள் என் தாயை தப்பா பேசாதா..??"



என்று தாடையை பிடித்து அவன் வம்பு செய்ய அவன் முதுகில் ஒன்று போட்டு,



"வாய் மட்டும் தான்.."

என்று கூற பேசிக்கொண்டே டைனிங் டேபிளை அடைந்து இருந்தனர்.



"ஸ்..அம்மா..தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய அடிக்கிற...அப்பா ஏன் இதெல்லாம் கேட்க மாடீங்களா.."

அப்பொழுது தான் அங்கே வந்த தந்தை செந்தில்நாதனிடம் முறையிட்டான்.



"ஏன்ப்பா..எனக்கு ரெண்டு இலவச இணைப்பா கிடைக்கவா.."

என்று அவர் பாவம்போல் சொல்லவும் மகன் சிரிக்க,



"ஆமா..ஆமா..ரொம்ப பயந்தவர் தான்.."

என்று முறைத்தாலும் இருவருக்கும் உணவு பரிமாற தொடங்கினார் சரண்யா.



"இந்த படத்துக்கான கடைசி கட்டதில் இருப்பதா சொன்னியே உதய்..நெக்ஸ்ட் என்ன..?"

என்று சாப்பிட்டுக் கொண்டே தற்போது ஓர் பெரிய நட்சத்திரத்தை வைத்து அதிக பட்ஜெட்டில் தவரூபன் இயக்கி வரும் படத்தை பற்றி அவர் விசாரிக்க,



"ஆமா ப்பா..ஆல்மோஸ்ட் டன்..இன்னும் ஒன் மந்த்ல ரீலீஸ் பண்ணிடுவாங்க..நீங்க வேணாப்பாருங்க ப்ளாக்பஸ்டர் ஹிட் தான்..வழக்கமான பில்டப்ஸை தாண்டி நல்ல அழுத்தமான கான்செப்ட்.."

என்றான் உற்சாகமாய்..



"அப்புறம் ப்பா..நான் மறுபடியும் ஒரு ஷார்ட் ஃப்லீம் எடுக்க போறதா சொன்னேன்ல..அதையும் அடுத்த மந்த் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..இங்க திருப்பூர்ல.."



"நல்லது உதய்..நல்லா பண்ணு..."

என்று புன்னகையோடு செந்தில் சொன்னார் என்றால் சரண்யாவோ முகத்தை சுருக்க அதனை கவனித்த உதய்,



"என்னம்மா..?"



"என்னத்தடா சொல்ல சொல்ற...வீட்டில் ஒரு ரெண்டு நாள் தங்குறீயா..எப்போ இந்த வேலைய தேர்ந்தெடுத்தியோ அப்போ இருந்தே சென்னையில தான் இருக்க.. நேரத்துக்கு சாப்பிடாம ராவு பகலு பாக்காம உழைச்சு..இப்ப பாரு பாதியாளா நிக்கிற..எப்போவாவது இதோ இந்த மாறி தலையை காட்டிட்டு போயிடுற..அப்பாடி இந்த படம் முடிய போது..கொஞ்ச நாள் இடைவெளி இருக்கும்னு பார்த்தா அடுத்தது இப்போ ஷார்ட்ஃப்லீம்..அப்புறம் மறுபடியும் படம்னு போயிடுவ...ஏன் உதய் உன்னை நீயே வருத்திக்கிற..நீ முன்ன பார்த்த வேலைக்கு என்ன குறைச்சல்..அப்படி அது பிடிக்கலேனா நம்ம கடைல ஜம்முனு முதலாளியா இல்லாமல் இந்த வேலை அவசியம் தானா..?"

என்று தன் ஆதங்கத்தை கொட்டிய அன்னையை சற்றும் முகம் மாறாமல் அதே புன்னகையோடு நோக்கிய உதய்,



"மீ...ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க..என் வேலை கஷ்டமானது தான்..ஆனால் அதை கஷ்டமா பார்த்தால் தான் அதை கஷ்டப்பட்டு செய்யணும்..நான் இஷ்டப்பட்டு தான சேர்ந்தேன்..இதுல கஷ்டம் எங்கிருந்து வந்துச்சு..அத்தோட ஷார்ட் ஃப்லீம் என்ன மாச கணக்கிலா எடுக்கப்போறேன்..ஜெஸ்ட் ஃப்யூ டேஸ் ம்மா..அப்புறம் நெக்ஸ்ட் மூவி சார் சைன் பண்றவரை கேப் தான்..அப்போ அப்பாவோட நம்ம கடைக்கு போயிட்டு வீட்டில் இருக்க போறேன்..இதில் என்ன இருக்கு.."

என்று சொல்ல அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் அதேசமயம் ஏற்கவும் முடியாமல்,



"இந்த பேச்சுக்கு ஒரு குறைச்சலும் இல்ல.." என்றவர்,



"எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான்.."

என்று கணவனையும் முறைக்க மீண்டும் உதய் ஏதோ விளக்க முனைய அவனை தடுத்த செந்தில்,



"நீ விடு உதய்..நா பேசிக்கிறேன்.."

என்று சொல்ல சரி என்பதாய் தலையசைத்தவன் சாப்பிட்டு எழுந்து சென்றான்.



"இப்போ என்ன தான் உன் பிரச்சனை சரண்..அவன் இந்த ஃபீல்டை ச்சூஸ் பண்ணது பிடிக்கல..அதானே.."



"ஆமா..அத்தோட அவன் தான் இப்படி பண்றானா..நீங்களும் அவன் செய்றது எல்லாமே நல்லது என்கிறா மாதிரி ஊக்குவிக்கிறீங்க..."



"இங்க பாரு கண்ணு..பொறுப்பு இல்லாத பிள்ளையா இருந்திருந்தால் உன் பயம் நியாயமா இருக்கும்..எங்க பிள்ளை சீரழிந்து போயிடுவானோனு பயப்படலாம்..ஆனால் நம்ம உதய் அப்படியா..?? நாம கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் பெருசா சொத்தோ செல்வமோ இல்லாமல் இருந்த போது சின்ன வயசு பிள்ளையா இருந்தாலும் எதுக்காவது ஆசைப்பட்டு இருப்பானா..?சரண்..என் சம்பாத்தியம் நம்ம நாலு பேரோட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி பண்ண சரியா இருந்தது.. அப்புறம் நம்ம பொண்ணையும் கட்டிக்கொடுத்தாச்சு..பையனுக்கும் வேண்டியதை செஞ்சிட்டால் நம்ம கடமை முடிந்ததுனு இருந்தேன்..அதுக்கும் மேல நாம யோசிச்சதே இல்ல..ஆனால் உதய் அப்படி நினைக்கலேயே சரண்..இந்த அப்பாவை இன்னும் உசத்தனும்னு நினைச்சான்.."

என்னும்போது அவர் முகத்தில் பெருமை மிளிர சரண்யாவின் முகமும் கனிந்தது.

மேலும் பேசினார்.



"ஜவுளிகடைல சூப்ரவைசராகவே காலத்தை ஓட்டிட நினைத்த என்னை சொந்தமா ஜவுளிகடை வைக்கலாம் அப்பானு ஆரம்பிக்க வைச்சதோடு படிச்சு முடித்ததும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து ஒரு வருஷத்துலேயே நம்ம கடை தொடங்கி, வாங்கின கடனை எல்லாம் அடைச்சுட்டான்..அப்புறம் நமக்கு எல்லாமே ஏறுமுகம் தான்..இப்போ கோவைல 'சரண்யா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ்..' என்றால் பிரசித்தம்..எல்லாத்திற்கும் யார் காரணம்..உதய் தானே..!இப்போ அவனுக்காக அவன் ஆசை பட்டதை செய்ய நினைக்கிறான்..அதை நாமே மறுக்கலாமா சரண்.."



என்று அவர் சொன்னபோது சரண்யாவிற்குமே அதில் உள்ள நியாயம் புரிந்தது. முகம் தெளிய மலர்ந்து சிரித்த சரண்யா,



"ஆமாங்க..உதய் என்ன செஞ்சாலும் சரியா தான் வரும்..நீங்க வேணா பாருங்க..இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாரும் வியந்து போறா மாதிரி எம்புள்ளை பெரிய ஆளா வருவான்.."



என்று தாயாய் பெருமையோடு சொல்ல அதனை ஏற்று புன்னகைத்தார் செந்தில்நாதன்.
 
Last edited:
லவ்லி எபிசோட்....
அன்பான வெண்பா...
லேஸியா லாவண்யா...
துடிப்பா உதயா...
க்யூட்டா நிலா....
மனைவிக்காக ஏங்கும் மதி...
குழந்தை ஆசையோட தயா...
V I P ஜெகன்....
அடுத்த எபிக்காக ......:giggle:
 
லவ்லி எபிசோட்....
அன்பான வெண்பா...
லேஸியா லாவண்யா...
துடிப்பா உதயா...
க்யூட்டா நிலா....
மனைவிக்காக ஏங்கும் மதி...
குழந்தை ஆசையோட தயா...
V I P ஜெகன்....
அடுத்த எபிக்காக ......:giggle:

??? நன்றி சிஸ் ❤️ will update soon
 
Top