Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 13

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 13

தன்னை சுற்றி கூடம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடக்க அதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் மும்முரமாய் ஒரு சிறு ப்ரெஸால் எதற்கோ வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தான் மதிவாணன்.

தொலைகாட்சியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஆழிக்கண்ணன் அவன் முகபாவனையில் இருந்த தீவிரத்தை கண்டு என்னவென்று எட்டி பார்த்தவர் அவன் செய்து வைத்திருக்கும் வேலையை ஒரு நிமிடம் புரியாமல் பார்த்து புரிந்தபின்,

'ஆஹா..மகனே..இன்னைக்கு நீ ஒரு வழியான போ..' என்று மானசீகமாய் அவனுக்காக உச்சுக் கொட்டியவர் மீண்டும் சத்தமில்லாமல் டீவியிடமே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த நிலா,

"அப்பாஆஆஆ....!!!" என்று போட்ட சத்ததில் கையில் இருந்த ப்ரெஸ் தவறி கீழே விழுந்து விட்டது.

"ஏண்டா..இப்படி கத்துற.."

"என்னப்பா பண்ணி வைச்சிருக்கீங்க..நான் என்ன கேட்டால் நீங்க என்ன செஞ்சு வைச்சு இருக்கீங்க.."

"தெர்மாக்கோலில் ஹார்ட் செஞ்சு தரசொன்ன..அதை தான் நானும் ரொம்ப நேரமாய் கஷ்டப்பட்டு செஞ்சிட்டு இருக்கேன்..அப்பாக்கு அவ்வளவு தாண்டா வருது..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நிலா.."

என்றான் பாவமாய்..நிலாவின் படிப்பு சமந்தப்பட்ட அனைத்தும் வெண்பா தான் பார்த்துக் கொள்வாள்.சமயத்தில் உதயா உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பாள் எனவே அவனுக்கு அந்த கவலை எல்லாம் இருந்ததே இல்லை. தற்போதைய வெண்பாவின் நிலை எந்த அளவிற்கு நிலாவுக்கு புரிந்ததோ தன் வேலைகளை தானே பார்க்க கத்துக் கொண்டாள்.பாடத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால் எப்பொழுதாவது தந்தையிடம் வந்து கேட்பாள்.அதேபோல் இன்று அவளுக்கு ப்ராஜெக்ட்,டெஸ்ட்,ஹோம்வொர்க் என்று செய்ய வேண்டியவை அணிவகுத்து நின்றதால் தந்தையின் உதவியை நாட,

"இதெல்லாம் ஒரு மேட்டரா..நான் செஞ்சு வைக்கிறேன்..நீ போய் படி.."

என்று அசால்ட்டாக கூறி அனுப்பி வைத்தவன் தன் வேலைகளை முடித்துவிட்டு அதனை எடுக்க, நினைத்ததை விட அது சற்று சிரமமாக தான் இருந்தது.

தெர்மாக்கோலில் இதயம் செய்து அதற்கு பஞ்சால் லேயர் கொடுத்து பின்பக்கம் சிறு குழாயை பொறுத்த வேண்டும்.அதாவது அந்த குழாயை ஊதும் போது இதயம் துடிப்பதுபோல் இருக்கும்.கேட்டபோது அவனுக்கு எளிமையாய் தோன்றியது செய்ய உட்காரவும் அதனை வரையவே சிரமமாய் இருக்க வெண்பாவை கேட்கலாம் என்றால் அப்பொழுது தான் உறங்கி இருந்தாள்.தற்போது அவள் நிறையவே தேறிவந்துள்ள நிலையில் தூக்கம் ஒரு முக்கிய காரணி என்று மருத்துவர் கூறியிருக்க அவள் தூங்கும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அவன் தொந்தரவு செய்ய மாட்டான்.ஆகையால் தனக்கு தெரிந்த வரையில் வரைந்து ஒட்டி இறுதியில் சிகப்பு நிறம் கொடுத்துக் கொண்டிருந்த போது தான் நிலா ஆங்கிரி பேட் அவதாரத்தில் வந்து நின்றது.

"கொஞ்சம் அப்படி..இப்படியா..???நான் உங்களுட்ட என்ன செஞ்சு கேட்டேன்.."

"ஹார்ட்.."

"இல்ல..ஹியுமன் ஹார்ட்..நீங்க என்ன பண்ணி வைச்சிருக்கீங்க.."

ஆம்..!!அவன் செய்து வைத்தது சிம்பிள் அஃப் லவ்..அவள் கொடுத்த படத்தில் இருந்த இதயத்தின் வடிவம் கடினமாய் இருந்ததால் இதனை வரைந்து வைத்திருந்தான்.என்ன அதில் அந்த அம்பு மட்டும் தான் மிஸ்ஸிங்..மற்றபடி பக்காவாக செய்து வைத்திருந்தான்.

"இந்த ஹார்டிற்கு என்ன குறை நிலா..கொஞ்சம் சேப் மாறி இருக்கு.."

என்ற தந்தையை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்த நிலா, "பாருங்க தாத்தா..நான் இன்னும் படிச்சே முடிக்கல..இன்னும் ஹோம் வொர்க் வேற இருக்கு..அப்பா முடிச்சு இருப்பாருன்னு நினைச்சேன்..இப்ப இதையும் முதல்லேந்து செய்யணும்.."

என்று அவரிடம் சிணுங்களாய் புகார் படிக்க,

"உனக்கு தானே ப்ராஜெக்ட் கொடுத்தாங்க..உங்க அப்பாவுக்கா கொடுத்தாங்க..நீ தானே செய்யணும்.."

என்று வாத்தியாராய் அவர் பேச,

"போங்க..போங்க..ஊரே இப்படி தான் செய்து.."

தலையை சிலுப்பிக் கொண்டவள் மீண்டும் பளபளவென மின்னிய அந்த இதயத்தை பார்த்து கடுப்பாக சிணுங்கி கொண்டே அங்கே அமர்ந்துவிட்ட மகளை சமாதானம் செய்யும் வழி தெரியாது விழித்தான்.

"நிலா..இதையே மாத்தி தரேன்..மேல ரெண்டு வொயர்..கீழே ரெண்டு வொயர் மிஸ்ஸிங்..(அதாங்க மேல்பெருஞ்சிரை மற்றும் கீழ்பெருஞ்சிரை) அதையும் ஒட்ட வைத்திடலாம்..இங்க பாரு பீட் கூட சரியா வொர்க் பண்ணுது.."

"அப்பா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.."

"என்னம்மா.."

"நீங்க டிக்ரி படிச்சு வாங்குனீங்களா..இல்ல காசு கொடுத்து வாங்குனீங்களா..?"

"ஏதே.."

அவன் 'ஙே' என்று விழிக்க அவர்களுக்கு பின்னால் கலகலவென கேட்ட சிரிப்பு சத்தத்தில் மூவரும் திரும்பி பார்த்தனர்.

"உங்க அப்பா லேமினெட் செஞ்சு பத்திரம் காக்கிற டிக்ரியை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டே நிலா.."

என்று அவள் மீண்டும் சிரிக்க ஆழிக்கண்ணன் முகத்திலும் புன்னகை..

மதியோ மனைவியை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

'எங்க ஒழிச்சு வைச்சிருந்தா..இந்த சிரிப்பை எல்லாம்..'

அருகில் வந்த வெண்பா இருவருக்கும் நடுவில் அமர்ந்து அவன் செய்ததை எடுத்து பார்க்க மீண்டும் சிரிப்பு தான் வந்தது.அதனை ஓரமாய் வைத்தவள் மற்றொரு சதுர வடிவிலான தெர்மாக்கோலை எடுத்துக் கொண்டு புத்தகத்தில் இருந்து படத்தை பார்த்து பென்சிலால் அதில் வரைய தொடங்கினாள்.

நிதானமாய் சிறு சிறு நுணுக்கங்களை கூட கவனித்து இரசித்து வரையும் போது அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை இரசித்தபடி அவனும் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.வெண்பா வேலை செய்யும் பாங்கே அது தான்.அவள் அழகாய் கையாளும் விதத்தில் நமக்கும் அதனை செய்ய ஆர்வம் தோன்றும்.

'மகள் முன்னாடி என்னடா பார்வை..அங்கங்க முடி நரைக்க ஆரம்பிச்சிடுச்சு..இப்ப தான் பொண்டாட்டியை சைட் அடிக்கிறான்..'

என்று மனசாட்சி குமட்டியிலே குத்த கஷ்டப்பட்டு பார்வையை இறக்கி அவள் கைவண்ணத்தை கவனிக்க தொடங்கினான்.

ஒரு மணி நேரத்தில் அவள் முடித்து நிமிர்ந்தபோது நிலாவிற்கு பரம திருப்தி.அவள் கழுத்தை கட்டிக்கொண்டு,

"தேங்க்ஸ் ம்மா.." என்று செல்லம் கொஞ்சியவள் மதியை நோக்கி,

"அப்பா..அம்மாட்ட கத்துக்கோங்க.."

என்று வம்பிழுக்க, "நானும் இதே தான் செஞ்சேன்.."

என்று கூச்சமே படாமல் சமாளித்தவன் ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு,

"யாருப்பா.." என்றபடி நழுவி தந்தையிடம் செல்ல போகும் அவனை பார்த்து வெண்பாவின் முகத்திலும் புன்னகை..

"தயா தான் போடுறான்.."

என்றவர் அவசரமாய் அட்டெண்ட் செய்ய அவர் நினைத்தது போல் தான் லாவண்யாவிற்கு வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாய் கூற சற்று நேரத்தில் எல்லோரும் பரபரப்பாகினர்.

"லாவண்யா ரொம்ப வலியில இருக்கு போல மதி..தயா பயந்துபோய் பேசுறான்..நாம சிக்கிரம் போகலாம்..கிளம்பு.."

என்று அவர் துரிதப்படுத்த, "சரிங்க அப்பா.."

என்றவன் வெண்பாவை,

"நீயும் நிலாவும் வீட்டை பூட்டிட்டு பத்திரமாய் இருங்க..நாங்க போயிட்டு வரோம்.."

என்க,

"ஏன்..நாங்களும் வரோம்..எனக்கு லாவண்யாவை பார்க்கணும்.."

என்றாள் அவள்.

"இல்ல வெண்பா..இப்போவே மணியை பார்...நைட் நேரத்தில் எல்லோரும் ஹாஸ்பிட்டலில் இருக்கவேண்டாம்..காலைல உங்களை அழைச்சுட்டு போறேன்..பத்திரமாய் இருங்க.."

என அவசரமாய் கிளம்பினர்.

இவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது லாவண்யாவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்றிருக்க வெளியே அவள் பெற்றோரும் தயாளனும் நின்றனர்.

மகனுக்கு தைரியம் சொன்ன ஆழிக்கண்ணன் லாவண்யா தந்தையிடம் சென்று பேச தம்பியின் தோளை ஆதரவாய் பற்றினான் மதி.

"அண்ணா..அவளுக்கு ரொம்ப நேரமாவே வலி ண்ணா..டாக்டரிடம் சொன்ன அது பொய் வலி..இன்னும் நேரம் இருக்குனு..அவளை நடக்க சொன்னாங்க..பாவம்..அவ வலியில முனங்கிறதை என்னால தாங்கவே முடியல..இப்போ தான் உள்ள அழைச்சுட்டு போயிருக்காங்க..அவளே சின்ன விசயத்துக்கும் ரொம்ப பயப்படுவா..இதை எப்படி தாங்க போறாளோ தெரியல ண்ணா.."

பதட்டத்தின் முழுவுருவாய் புலம்பிய தயாவை,

"பெண்களுக்கு பிரசவ சமயத்தில் மட்டும் ஒரு அபார தைரியமும் சக்தியும் வந்திடுமாம்..அந்த வலியை அவங்களால மட்டும் தான் தாங்க முடியும்..அப்படி ஒரு புனிதமான சக்தியை கடவுள் இயற்கையிலே அவங்களுக்கு கொடுத்திருக்கான்..லாவண்யாவும் அதை கடந்து வந்திடுவா..கொஞ்சம் பொறுமையோடு இரு தயா.."

தேற்றியவன் ஜெகன்,உதயாவிற்கும் தகவல் சொல்ல மறக்கவில்லை.

கிட்டதட்ட நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் தயாளன் - லாவண்யாவின் மகன் இவ்வுலகில் ஜனித்தான்.

அந்த பிஞ்சு மகவை அனைவரும் ஆசையாய் பார்த்து பார்த்து பூரிக்க மதிக்கு குழந்தையை கையில் வாங்கியபோது நிலா பிறந்த தருணம் நெஞ்சில் நிழலாடியது.லாவண்யா போல் அல்ல.கொடி சுற்றியிருந்ததால் சிஸ்சேரியன் தான் என்று மருத்துவர் சொல்லிவிட மிகவும் தவித்து போய்விட்டான்.ஆப்ரெஷன் தியட்டர் உள் செல்லும்வரை தன் வலியையும் மீறி அவன் கையை பிடித்து தைரியம் கூறினாள் வெண்பா.

சிகிச்சை ஆரம்பித்து சில நிமிடங்களிலே குழந்தையை செவிலியர் கொண்டு வந்து கொடுக்க அந்த பிஞ்சு மலரை ஆசையாய் கையில் ஏந்திக் கொண்டாலும் மனைவியிக்கு இன்னும் ஆப்ரேஷன் முடியாமல் அவன் தவித்து அதன்பின் அவளை காணும்வரை அவன் உயிர் அவனிடமே இல்லை.அன்றைய தவிப்பு எல்லாம் இன்று அழகிய நினைவாய் அவன் நெஞ்சை நிறைக்க வெண்பாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது.

அப்பொழுது நேரம் பன்னிரெண்டை தாண்டி சென்றுக் கொண்டிருந்தால் அலைப்பேசியில் வெண்பாவின் எண்ணை எடுத்து வைத்து அவள் தூங்கி இருப்பாளோ என்ற யோசனையோடு நிற்கும் போதே கைதவறி அழைப்பு சென்றுவிட ஒரு ரிங்கிலே அழைப்பு ஏற்க பெற்றது.

'கையிலே ஃபோனை வைச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்காளா..' என்ற வியப்போடு அலைபேசியை காதுக்கு கொடுக்க,

"ஹலோ..என்னாச்சு.."

என்று பதட்டமாய் ஒலித்தது அவள் குரல்..

"ஹே..ரிலாக்ஸ்..எல்லாம் நல்ல விசயம் தான்..பையன் பொறந்திருக்கான்.."

"ஆஹா..குட்டி கண்ணனா.." என்று ஆர்வமாய் கேட்டவள், "லாவண்யா எப்படி இருக்கா.." என்க,

"ம்ம்...அம்மா-மகன் இரண்டு பேருமே நலம்..இன்னும் மயக்கம் தெளியல..கண்ணு முழிச்சதும் பார்த்துட்டு நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்திடுவோம்..." என்றவன்,

"தயாவை அப்படியே உரிச்சு வைச்சா மாதிரி இருக்கான்..அவனை கையிலே பிடிக்க முடியல.."

என்ற மதியின் குரலில் இருந்த துள்ளல் அவளை தொற்றிக் கொண்டது.

"சரி..நான் வந்து பேசுறேன்..நீ எங்களுக்காக காத்துட்டு இருக்காதே தூங்கு..என்னிடம் இன்னோர் சாவி இருக்கு.."

"இல்ல..இல்ல..நான் வெய்ட் பண்றேன்..நீங்க வாங்க.."

"ஹே..நாங்க வரதுகுள்ள ஒரு மணிக்கு மேல ஆகிடும்..அதுவரையும் நீ முழிச்சு இருப்பியா.."

"எனக்கு தூக்கம் வராது...அதான் சொல்றேன்.."

"ஏன் வராது..?? நான் வந்து தூங்க வைச்சா தான் அம்மணி தூங்குவீங்களோ.."

என்று அவன் விளையாட்டை கேட்க,

"ஆமாம்..நீங்க தான் என்னை அப்படி பழக்கி வைச்சு இருக்கீங்க..நீங்க தான் தூங்க வைக்கோனும்.."

என்று பட்டென்று சொல்ல மதி மயங்கி விழாத குறை தான்.

"ஹே..என்ன சொன்ன இப்போ.."

என்று அவன் ஆர்பரிக்கவும் தான் தன் வார்த்தையை உணர்ந்து டொக் என்று வைத்துவிட்டாள்.

அலைபேசியின் திரையை பார்த்து நின்றவனுக்கு எவ்வளவு முயன்றும் புன்னகையை தவிர்க்க முடியவில்லை.

எப்படி..எந்த நிமிடம் இந்த மாற்றங்கள் நடந்தது என்று அவனுக்கு இன்னமும் புரியவில்லை.தன் முகத்தை கூட காண விரும்பாமல் இருந்தவளோடு அவன் எந்த சமாதானமும் ஆகவில்லை.அவர்கள் பிரச்சனைகள் கோபங்கள் தாபங்கள் எல்லாம் அப்படியே தான் இருந்தது.ஆனால் எல்லாம் இயல்பு போல் தன்னால் சரியாகி விட்டதை அவனால் நம்பமுடியவில்லை.ஏன்..அவளுடைய கோபங்கள் தீர்ந்து விட்டதா இல்லை தற்காலிகமாய் மறைந்துவிட்டதா என்றுகூட தெரியவில்லை.ஆனால் இந்த நிமிடம் மதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

லாவண்யா விழித்ததும் அவளிடம் நலம் விசாரித்து தயாவிடம் காலையில் வருவதாய் கூறி ஆழிக்கண்ணனும் மதியும் வீடு திரும்பினர்.

காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க மறுபக்கம் எந்த எதிரொலியும் இல்லை.

"மருமக தூங்கியிருக்கும் மதி..அதான் சாவி வைச்சு இருக்கேல்ல..திற.."

என்ற தந்தையிடம் என்ன சொல்வான்.அமைதியாய் கதவை திறந்து உள்ளே வந்தனர்.

ஆழிக்கண்ணன் தூங்க சென்றதும் அவன் தன் அறைக்குவர அங்கே மஞ்சத்தில் நித்திரையின் பிடியில் இருந்தனர் வெண்பாவும் நிலாவும்..

"தூங்கிட்டாளா..?"

சந்தேகமாய் அருகில் வந்து பார்க்க கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள்.தான் விட்ட வார்த்தையால் அவனை பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு அவள் செய்யும் சிறுபிள்ளை போன்ற சமாளிப்பில் சிரிப்பு தான் வந்தது.அதனை அடக்கி அமைதியாய் பாத்ரூம் சென்று கை கால் கழுவி இரவு உடைக்கு மாற்றிக் கொண்டு வந்தவன் வெண்பா அருகில் வர மதியின் வருகையை உணர்ந்தார் போல் மூடிய விழிகளுக்குள் கருமணிகள் அலைப்பாய்ந்தது.

ஆனால் அருகில் மகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.உதயாவிற்கு இனி ப்ரைவெஸி தேவை என்பதால் இவர்கள் அறையை ஒட்டியே நிலாவிற்கு புதியதாய் ஒரு அறையை கட்டிவிட்டான் மதி.இன்று யாரும் இல்லாததால் அன்னையோடு வந்து படுத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

சத்தமில்லாமல் வெண்பாவின் பக்கத்தில் அமர்ந்தவன் அவள் காதருகே குனிந்து,

"என்ன ஆகி போச்சுனு உனக்கு இவ்வளவு தயக்கம்..எனக்கு பாரு அங்கங்க நரைக்க ஆரம்பிச்சுடுச்சு..வி ஆர் ஒல்ட் கப்பிள்ஸ் ம்மா..இப்படி புது பொண்ணு மாதிரி நீ வெட்கப்பட்டால் நான் என்னதுக்கு ஆகிறது.."

என்று கிசுகிசுப்பாய் சொல்ல படக்கென்று திரும்பி அவன் வாயை பொத்தியவள் பார்வையை மகள் புறம் திருப்பி அவள் உறக்கத்தை உறுதி செய்துக் கொண்டு,

"பிள்ள முன்னாடி என்ன பேசுறோம்னு விவஸ்த்தை வேண்டாம்.."

அவள் உறுத்து விழித்தாள்.வாயை மூடி இருந்தாலும் அவன் கண்களில் சிரிப்பு அப்பட்டமாய் தெரிய,

"சரி..இனிமே பேச மாட்டேன்..." அவள் கைகளிலே அவன் முணுமுணுக்க கணவனின் இதழ் தீண்டலில் திகைத்து கையை அகற்றிக் கொண்டவள் அந்த சூழலை சமாளிக்க முடியாமல் திணற அதற்குமேல் அவளை மதியும் சோதிக்க விரும்பில்லை.

"ஒன்னும் இல்ல..நீ தூங்கு.."

என்று அவளை படுக்க செய்து தோளில் தட்டிக் கொடுக்க அமைதியாய் படுத்து விட்டவள் சில நிமிடங்களிலே உறங்கியும் போனாள்.

மகளுக்கும் மனைவிக்கும் போர்வையை போற்றி விளக்கை அணைத்துவிட்டு கீழே ஒரு பெட்ஸீட்டை போட்டு அதில் படுத்துக் கொண்டவனுக்கு மனதில் குடிக் கொண்ட நிம்மதிக்கு அளவே இல்லை. படுத்த உடனே நித்திரை அவனை ஆட்கொண்டது.

காலையில் ஆழிக்கண்ணன்,வெண்பா,நிலா அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனையிக்கு சென்றான்.குழந்தையை ஆசையாய் தூக்கி வைத்துக் கொண்ட வெண்பா,

"அடடா....என் செல்ல கண்ணா..எங்க வீட்டு குட்டி ராஜாவா நீங்க..அழகு தங்கமா நீங்க..செல்லகுட்டியா நீங்க..என்ன ராஜா பார்க்கிற..ம்ம்ம்..பெரியம்மாவ உங்களுக்கு தெரியுதா..ம்ம்.."

என்று அவள் பிள்ளையோடு ஒன்றிவிட எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

"ம்மா..ம்மா..என் கையில் கொடும்மா.."

என்று குதித்த நிலாவை,

"உனக்கு தூக்க வராது நிலா..தம்பியை கொஞ்ச நாள் கழிச்சு தூக்கலாம்.."

என்று வெண்பா மறுக்க உதட்டை பிதுக்கி பாவமாய் பார்த்தாலும் அன்னையின் மடியில் இருந்த குழந்தையின் கன்னத்தை ஒரு விரலால் தொட்டு பார்த்து சந்தோஷமடைந்தாள்.

"சீக்கிரம் வீட்டுக்கு வா லாவண்யா..இந்த கண்ணனை கூடவே வைச்சுக்கணும் போல இருக்கு.."

"சரிங்க அக்கா..எனக்கு பிள்ளை வளர்க்க எல்லாம் தெரியாது க்கா..நீங்க தான் சொல்லி தரணும்.."

"இதுக்கு தனியா க்ளாஸாடி போவாங்க..அதெல்லாம் தானே வரும்.."

சிரித்த லாவண்யா, "எங்க அக்கா..அத்தையம்மாவ காணும்..என் மருமகனை நான் தான் ஃபர்ஸ்ட் தூக்குவேன்னு சவால் எல்லாம் விட்டாங்க மேடம்.."

சோர்வையும் மீறி அவள் உதயாவை வம்பிழுக்க,

"அவ காலைலே பஸ் ஏறிட்டாளாம்..இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவா.."

என்று ஃபோனை பார்த்துக் கொண்டே பதில் சொன்ன தயா சட்டென்று,

"ஹே..ஜெகன் லைன் ல வந்துட்டான்.."

என்று அலைப்பேசியை காட்டினான்.

அவனும் காணொளி மூலம் தன் அண்ணன் மகனை பார்த்து பூரிக்க என்று எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது எதர்ச்சையாய் அங்கே வெண்பாவின் பெற்றோரை காணும்வரை..!!
 
Last edited:
வெண்பாவின் மனமாற்றம்....நிலையானதா...
இல்லை....பழைய நிகழ்வுகளை மறந்து விட்டாளா...?
அம்மா, அப்பாவை பார்க்கக் கூடாது என்று
வைராக்கியம் மட்டும்....இப்ப வரை உள்ளது ..?

கல்யாணம் ஆன பத்து வருஷத்தில்....
சொல்லக் கூடாத்தை சொல்லி....
எட்டு வருடங்களை வீணாக்கியவன்....
இப்ப நடை, திரை....வயதாக விட்டதாம்...?
ஆகாமல் அப்படியேவா இருக்கும்,...?;):p
 
அத்தியாயம் 13

தன்னை சுற்றி கூடம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடக்க அதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் மும்முரமாய் ஒரு சிறு ப்ரெஸால் எதற்கோ வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தான் மதிவாணன்.

தொலைகாட்சியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஆழிக்கண்ணன் அவன் முகபாவனையில் இருந்த தீவிரத்தை கண்டு என்னவென்று எட்டி பார்த்தவர் அவன் செய்து வைத்திருக்கும் வேலையை ஒரு நிமிடம் புரியாமல் பார்த்து புரிந்தபின்,

'ஆஹா..மகனே..இன்னைக்கு நீ ஒரு வழியான போ..' என்று மானசீகமாய் அவனுக்காக உச்சுக் கொட்டியவர் மீண்டும் சத்தமில்லாமல் டீவியிடமே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த நிலா,

"அப்பாஆஆஆ....!!!" என்று போட்ட சத்ததில் கையில் இருந்த ப்ரெஸ் தவறி கீழே விழுந்து விட்டது.

"ஏண்டா..இப்படி கத்துற.."

"என்னப்பா பண்ணி வைச்சிருக்கீங்க..நான் என்ன கேட்டால் நீங்க என்ன செஞ்சு வைச்சு இருக்கீங்க.."

"தெர்மாக்கோலில் ஹார்ட் செஞ்சு தரசொன்ன..அதை தான் நானும் ரொம்ப நேரமாய் கஷ்டப்பட்டு செஞ்சிட்டு இருக்கேன்..அப்பாக்கு அவ்வளவு தாண்டா வருது..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நிலா.."

என்றான் பாவமாய்..நிலாவின் படிப்பு சமந்தப்பட்ட அனைத்தும் வெண்பா தான் பார்த்துக் கொள்வாள்.சமயத்தில் உதயா உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பாள் எனவே அவனுக்கு அந்த கவலை எல்லாம் இருந்ததே இல்லை. தற்போதைய வெண்பாவின் நிலை எந்த அளவிற்கு நிலாவுக்கு புரிந்ததோ தன் வேலைகளை தானே பார்க்க கத்துக் கொண்டாள்.பாடத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால் எப்பொழுதாவது தந்தையிடம் வந்து கேட்பாள்.அதேபோல் இன்று அவளுக்கு ப்ராஜெக்ட்,டெஸ்ட்,ஹோம்வொர்க் என்று செய்ய வேண்டியவை அணிவகுத்து நின்றதால் தந்தையின் உதவியை நாட,

"இதெல்லாம் ஒரு மேட்டரா..நான் செஞ்சு வைக்கிறேன்..நீ போய் படி.."

என்று அசால்ட்டாக கூறி அனுப்பி வைத்தவன் தன் வேலைகளை முடித்துவிட்டு அதனை எடுக்க, நினைத்ததை விட அது சற்று சிரமமாக தான் இருந்தது.

தெர்மாக்கோலில் இதயம் செய்து அதற்கு பஞ்சால் லேயர் கொடுத்து பின்பக்கம் சிறு குழாயை பொறுத்த வேண்டும்.அதாவது அந்த குழாயை ஊதும் போது இதயம் துடிப்பதுபோல் இருக்கும்.கேட்டபோது அவனுக்கு எளிமையாய் தோன்றியது செய்ய உட்காரவும் அதனை வரையவே சிரமமாய் இருக்க வெண்பாவை கேட்கலாம் என்றால் அப்பொழுது தான் உறங்கி இருந்தாள்.தற்போது அவள் நிறையவே தேறிவந்துள்ள நிலையில் தூக்கம் ஒரு முக்கிய காரணி என்று மருத்துவர் கூறியிருக்க அவள் தூங்கும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அவன் தொந்தரவு செய்ய மாட்டான்.ஆகையால் தனக்கு தெரிந்த வரையில் வரைந்து ஒட்டி இறுதியில் சிகப்பு நிறம் கொடுத்துக் கொண்டிருந்த போது தான் நிலா ஆங்கிரி பேட் அவதாரத்தில் வந்து நின்றது.

"கொஞ்சம் அப்படி..இப்படியா..நான் உங்களுட்ட என்ன செஞ்சு கேட்டேன்.."

"ஹார்ட்.."

"இல்ல..ஹியுமன் ஹார்ட்..நீங்க என்ன பண்ணி வைச்சிருக்கீங்க.."

ஆம்..!!அவன் செய்து வைத்தது சிம்பிள் அஃப் லவ்..அவள் கொடுத்த படத்தில் இருந்த இதயத்தின் வடிவம் கடினமாய் இருந்ததால் இதனை வரைந்து வைத்திருந்தான்.என்ன அதில் அந்த அம்பு மட்டும் தான் மிஸ்ஸிங்..மற்றபடி பக்காவாக செய்து வைத்திருந்தான்.

"இந்த ஹார்டிற்கு என்ன குறை நிலா..கொஞ்சம் சேப் மாறி இருக்கு.."

என்ற தந்தையை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்த நிலா, "பாருங்க தாத்தா..நான் இன்னும் படிச்சே முடிக்கல..இன்னும் ஹோம் வொர்க் வேற இருக்கு..அப்பா முடிச்சு இருப்பாருன்னு நினைச்சேன்..இப்ப இதையும் முதல்லேந்து செய்யணும்.."

என்று அவரிடம் சிணுங்களாய் புகார் படிக்க,

"உனக்கு தானே ப்ராஜெக்ட் கொடுத்தாங்க..உங்க அப்பாவுக்கா கொடுத்தாங்க..நீ தானே செய்யணும்.."

என்று வாத்தியாராய் அவர் பேச,

"போங்க..போங்க..ஊரே இப்படி தான் செய்து.."

தலையை சிலுப்பிக் கொண்டவள் மீண்டும் பளபளவென மின்னிய அந்த இதயத்தை பார்த்து கடுப்பாக சிணுங்கி கொண்டே அங்கே அமர்ந்துவிட்ட மகளை சமாதானம் செய்யும் வழி தெரியாது விழித்தான்.

"நிலா..இதையே மாத்தி தரேன்..மேல ரெண்டு வொயர்..கீழே ரெண்டு வொயர் மிஸ்ஸிங்..(அதாங்க மேல்பெருஞ்சிரை மற்றும் கீழ்பெருஞ்சிரை) அதையும் ஒட்ட வைத்திடலாம்..இங்க பாரு பீட் கூட சரியா வொர்க் பண்ணுது.."

"அப்பா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.."

"என்னம்மா.."

"நீங்க டிக்ரி படிச்சு வாங்குனீங்களா..இல்ல காசு கொடுத்து வாங்குனீங்களா..?"

"ஏதே.."

அவன் 'ஙே' என்று விழிக்க அவர்களுக்கு பின்னால் கலகலவென கேட்ட சிரிப்பு சத்தத்தில் மூவரும் திரும்பி பார்த்தனர்.

"உங்க அப்பா லேமினெட் செஞ்சு பத்திரம் காக்கிற டிக்ரியை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டே நிலா.."

என்று அவள் மீண்டும் சிரிக்க ஆழிக்கண்ணன் முகத்திலும் புன்னகை..

மதியோ மனைவியை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

'எங்க ஒழிச்சு வைச்சிருந்தா..இந்த சிரிப்பை எல்லாம்..'

அருகில் வந்த வெண்பா இருவருக்கும் நடுவில் அமர்ந்து அவன் செய்ததை எடுத்து பார்க்க மீண்டும் சிரிப்பு தான் வந்தது.அதனை ஓரமாய் வைத்தவள் மற்றொரு சதுர வடிவிலான தெர்மாக்கோலை எடுத்துக் கொண்டு புத்தகத்தில் இருந்து படத்தை பார்த்து பென்சிலால் அதில் வரைய தொடங்கினாள்.

நிதானமாய் சிறு சிறு நுணுக்கங்களை கூட கவனித்து இரசித்து வரையும் போது அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை இரசித்தபடி அவனும் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.வெண்பா வேலை செய்யும் பாங்கே அது தான்.அவள் அழகாய் கையாளும் விதத்தில் நமக்கும் அதனை செய்ய ஆர்வம் தோன்றும்.

'மகள் முன்னாடி என்னடா பார்வை..அங்கங்க முடி நரைக்க ஆரம்பிச்சிடுச்சு..இப்ப தான் பொண்டாட்டியை சைட் அடிக்கிறான்..'

என்று மனசாட்சி குமட்டியிலே குத்த கஷ்டப்பட்டு பார்வையை இறக்கி அவள் கைவண்ணத்தை கவனிக்க தொடங்கினான்.

ஒரு மணி நேரத்தில் அவள் முடித்து நிமிர்ந்தபோது நிலாவிற்கு பரம திருப்தி.அவள் கழுத்தை கட்டிக்கொண்டு,

"தேங்க்ஸ் ம்மா.." என்று செல்லம் கொஞ்சியவள் மதியை நோக்கி,

"அப்பா..அம்மாட்ட கத்துக்கோங்க.."

என்று வம்பிழுக்க, "நானும் இதே தான் செஞ்சேன்.."

என்று கூச்சமே படாமல் சமாளித்தவன் ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு,

"யாருப்பா.." என்றபடி நழுவி தந்தையிடம் செல்ல போகும் அவனை பார்த்து வெண்பாவின் முகத்திலும் புன்னகை..

"தயா தான் போடுறான்.."

என்றவர் அவசரமாய் அட்டெண்ட் செய்ய அவர் நினைத்தது போல் தான் லாவண்யாவிற்கு வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாய் கூற சற்று நேரத்தில் எல்லோரும் பரபரப்பாகினர்.

"லாவண்யா ரொம்ப வலியில இருக்கு போல மதி..தயா பயந்துபோய் பேசுறான்..நாம சிக்கிரம் போகலாம்..கிளம்பு.."

என்று அவர் துரிதப்படுத்த, "சரிங்க அப்பா.."

என்றவன் வெண்பாவை,

"நீயும் நிலாவும் வீட்டை பூட்டிட்டு பத்திரமாய் இருங்க..நாங்க போயிட்டு வரோம்.."

என்க,

"ஏன்..நாங்களும் வரோம்..எனக்கு லாவண்யாவை பார்க்கணும்.."

என்றாள் அவள்.

"இல்ல வெண்பா..இப்போவே மணியை பார்...நைட் நேரத்தில் எல்லோரும் ஹாஸ்பிட்டலில் இருக்கவேண்டாம்..காலைல உங்களை அழைச்சுட்டு போறேன்..பத்திரமாய் இருங்க.."

என அவசரமாய் கிளம்பினர்.

இவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது லாவண்யாவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்றிருக்க வெளியே அவள் பெற்றோரும் தயாளனும் நின்றனர்.

மகனுக்கு தைரியம் சொன்ன ஆழிக்கண்ணன் லாவண்யா தந்தையிடம் சென்று பேச தம்பியின் தோளை ஆதரவாய் பற்றினான் மதி.

"அண்ணா..அவளுக்கு ரொம்ப நேரமாவே வலி ண்ணா..டாக்டரிடம் சொன்ன அது பொய் வலி..இன்னும் நேரம் இருக்குனு..அவளை நடக்க சொன்னாங்க..பாவம்..அவ வலியில முனங்கிறதை என்னால தாங்கவே முடியல..இப்போ தான் உள்ள அழைச்சுட்டு போயிருக்காங்க..அவளே சின்ன விசயத்துக்கும் ரொம்ப பயப்படுவா..இதை எப்படி தாங்க போறாளோ தெரியல ண்ணா.."

பதட்டத்தின் முழுவுருவாய் புலம்பிய தயாவை,

"பெண்களுக்கு பிரசவ சமயத்தில் மட்டும் ஒரு அபார தைரியமும் சக்தியும் வந்திடுமாம்..அந்த வலியை அவங்களால மட்டும் தான் தாங்க முடியும்..அப்படி ஒரு புனிதமான சக்தியை கடவுள் இயற்கையிலே அவங்களுக்கு கொடுத்திருக்கான்..லாவண்யாவும் அதை கடந்து வந்திடுவா..கொஞ்சம் பொறுமையோடு இரு தயா.."

தேற்றியவன் ஜெகன்,உதயாவிற்கும் தகவல் சொல்ல மறக்கவில்லை.

கிட்டதட்ட நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் தயாளன் - லாவண்யாவின் மகன் இவ்வுலகில் ஜனித்தான்.

அந்த பிஞ்சு மகவை அனைவரும் ஆசையாய் பார்த்து பார்த்து பூரிக்க மதிக்கு குழந்தையை கையில் வாங்கியபோது நிலா பிறந்த தருணம் நெஞ்சில் நிழலாடியது.லாவண்யா போல் அல்ல.கொடி சுற்றியிருந்ததால் சிஸ்சேரியன் தான் என்று மருத்துவர் சொல்லிவிட மிகவும் தவித்து போய்விட்டான்.ஆப்ரெஷன் தியட்டர் உள் செல்லும்வரை தன் வலியையும் மீறி அவன் கையை பிடித்து தைரியம் கூறினாள் வெண்பா.

சிகிச்சை ஆரம்பித்து சில நிமிடங்களிலே குழந்தையை செவிலியர் கொண்டு வந்து கொடுக்க அந்த பிஞ்சு மலரை ஆசையாய் கையில் ஏந்திக் கொண்டாலும் மனைவியிக்கு இன்னும் ஆப்ரேஷன் முடியாமல் அவன் தவித்து அதன்பின் அவளை காணும்வரை அவன் உயிர் அவனிடமே இல்லை.அன்றைய தவிப்பு எல்லாம் இன்று அழகிய நினைவாய் அவன் நெஞ்சை நிறைக்க வெண்பாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது.

அப்பொழுது நேரம் பன்னிரெண்டை தாண்டி சென்றுக் கொண்டிருந்தால் அலைப்பேசியில் வெண்பாவின் எண்ணை எடுத்து வைத்து

அவள் தூங்கி இருப்பாளோ என்ற யோசனையோடு நிற்கும் போதே கைதவறி அழைப்பு சென்றுவிட ஒரு ரிங்கிலே அழைப்பு ஏற்க பெற்றது.

'கையிலே ஃபோனை வைச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்காளா..' என்ற வியப்போடு அலைபேசியை காதுக்கு கொடுக்க,

"ஹலோ..என்னாச்சு.."

என்று பதட்டமாய் ஒலித்தது அவள் குரல்..

"ஹே..ரிலாக்ஸ்..எல்லாம் நல்ல விசயம் தான்..பையன் பொறந்திருக்கான்.."

"ஆஹா..குட்டி கண்ணனா.." என்று ஆர்வமாய் கேட்டவள், "லாவண்யா எப்படி இருக்கா.." என்க,

"ம்ம்...அம்மா-மகன் இரண்டு பேருமே நலம்..இன்னும் மயக்கம் தெளியல..கண்ணு முழிச்சதும் பார்த்துட்டு நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்திடுவோம்..." என்றவன்,

"தயாவை அப்படியே உரிச்சு வைச்சா மாதிரி இருக்கான்..அவனை கையிலே பிடிக்க முடியல.."

என்ற மதியின் குரலில் இருந்த துள்ளல் அவளை தொற்றிக் கொண்டது.

"சரி..நான் வந்து பேசுறேன்..நீ எங்களுக்காக காத்துட்டு இருக்காதே தூங்கு..என்னிடம் இன்னோர் சாவி இருக்கு.."

"இல்ல..இல்ல..நான் வெய்ட் பண்றேன்..நீங்க வாங்க.."

"ஹே..நாங்க வரதுகுள்ள ஒரு மணிக்கு மேல ஆகிடும்..அதுவரையும் நீ முழிச்சு இருப்பியா.."

"எனக்கு தூக்கம் வராது...அதான் சொல்றேன்.."

"ஏன் வராது..?? நான் வந்து தூங்க வைச்சா தான் அம்மணி தூங்குவீங்களோ.."

என்று அவன் விளையாட்டை கேட்க,

"ஆமாம்..நீங்க தான் என்னை அப்படி பழக்கி வைச்சு இருக்கீங்க..நீங்க தான் தூங்க வைக்கோனும்.."

என்று பட்டென்று சொல்ல மதி மயங்கி விழாத குறை தான்.

"ஹே..என்ன சொன்ன இப்போ.."

என்று அவன் ஆர்பரிக்கவும் தான் தன் வார்த்தையை உணர்ந்து டொக் என்று வைத்துவிட்டாள்.

அலைபேசியின் திரையை பார்த்து நின்றவனுக்கு எவ்வளவு முயன்றும் புன்னகையை தவிர்க்க முடியவில்லை.

எப்படி..எந்த நிமிடம் இந்த மாற்றங்கள் நடந்தது என்று அவனுக்கு இன்னமும் புரியவில்லை.தன் முகத்தை கூட காண விரும்பாமல் இருந்தவளோடு அவன் எந்த சமாதானமும் ஆகவில்லை.அவர்கள் பிரச்சனைகள் கோபங்கள் தாபங்கள் எல்லாம் அப்படியே தான் இருந்தது.ஆனால் எல்லாம் இயல்பு போல் தன்னால் சரியாகி விட்டதை அவனால் நம்பமுடியவில்லை.ஏன்..அவளுடைய கோபங்கள் தீர்ந்து விட்டதா இல்லை தற்காலிகமாய் மறைந்துவிட்டதா என்றுகூட தெரியவில்லை.ஆனால் இந்த நிமிடம் மதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

லாவண்யா விழித்ததும் அவளிடம் நலம் விசாரித்து தயாவிடம் காலையில் வருவதாய் கூறி ஆழிக்கண்ணனும் மதியும் வீடு திரும்பினர்.

காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க மறுபக்கம் எந்த எதிரொலியும் இல்லை.

"மருமக தூங்கியிருக்கும் மதி..அதான் சாவி வைச்சு இருக்கேல்ல..திற.."

என்ற தந்தையிடம் என்ன சொல்வான்.அமைதியாய் கதவை திறந்து உள்ளே வந்தனர்.

ஆழிக்கண்ணன் தூங்க சென்றதும் அவன் தன் அறைக்குவர அங்கே மஞ்சத்தில் நித்திரையின் பிடியில் இருந்தனர் வெண்பாவும் நிலாவும்..

"தூங்கிட்டாளா..?"

சந்தேகமாய் அருகில் வந்து பார்க்க கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள்.தான் விட்ட வார்த்தையால் அவனை பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு அவள் செய்யும் சிறுபிள்ளை போன்ற சமாளிப்பில் சிரிப்பு தான் வந்தது.அதனை அடக்கி அமைதியாய் பாத்ரூம் சென்று கை கால் கழுவி இரவு உடைக்கு மாற்றிக் கொண்டு வந்தவன் வெண்பா அருகில் வர மதியின் வருகையை உணர்ந்தார் போல் மூடிய விழிகளுக்குள் கருமணிகள் அலைப்பாய்ந்தது.

ஆனால் அருகில் மகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.உதயாவிற்கு இனி ப்ரைவெஸி தேவை என்பதால் இவர்கள் அறையை ஒட்டியே நிலாவிற்கு புதியதாய் ஒரு அறையை கட்டிவிட்டான் மதி.இன்று யாரும் இல்லாததால் அன்னையோடு வந்து படுத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

சத்தமில்லாமல் வெண்பாவின் பக்கத்தில் அமர்ந்தவன் அவள் காதருகே குனிந்து,

"என்ன ஆகி போச்சுனு உனக்கு இவ்வளவு தயக்கம்..எனக்கு பாரு ஆங்காங்கே நரைக்க ஆரம்பிச்சுடுச்சு..வி ஆர் ஒல்ட் கப்பிள்ஸ் ம்மா..இப்படி புது பொண்ணு மாதிரி நீ வெட்கப்பட்டால் நான் என்னதுக்கு ஆகிறது.."

என்று கிசுகிசுப்பாய் சொல்ல படக்கென்று திரும்பி அவன் வாயை பொத்தியவள் பார்வையை மகள் புறம் திருப்பி அவள் உறக்கத்தை உறுதி செய்துக் கொண்டு,

"பிள்ள முன்னாடி என்ன பேசுறோம்னு விவஸ்த்தை வேண்டாம்.."

அவள் உறுத்து விழித்தாள்.வாயை மூடி இருந்தாலும் அவன் கண்களில் சிரிப்பு அப்பட்டமாய் தெரிய,

"சரி..இனிமே பேச மாட்டேன்..." அவள் கைகளிலே அவன் முணுமுணுக்க கணவனின் இதழ் தீண்டலில் திகைத்து கையை அகற்றிக் கொண்டவள் அந்த சூழலை சமாளிக்க முடியாமல் திணற அதற்குமேல் அவளை மதியும் சோதிக்க விரும்பில்லை.

"ஒன்னும் இல்ல..நீ தூங்கு.."

என்று அவளை படுக்க செய்து தோளில் தட்டிக் கொடுக்க அமைதியாய் படுத்து விட்டவள் சில நிமிடங்களிலே உறங்கியும் போனாள்.

மகளுக்கும் மனைவிக்கும் போர்வையை போற்றி விளக்கை அணைத்துவிட்டு

கீழே ஒரு பெட்ஸீட்டை போட்டு அதில் படுத்துக் கொண்டவனுக்கு மனதில் குடிக் கொண்ட நிம்மதிக்கு அளவே இல்லை. படுத்த உடனே நித்திரை அவனை ஆட்கொண்டது.

காலையில் ஆழிக்கண்ணன்,வெண்பா,நிலா அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனையிக்கு சென்றான்.குழந்தையை ஆசையாய் தூக்கி வைத்துக் கொண்ட வெண்பா,

"அடடா....என் செல்ல கண்ணா..எங்க வீட்டு குட்டி ராஜாவா நீங்க..அழகு தங்கமா நீங்க..செல்லகுட்டியா நீங்க..என்ன ராஜா பார்க்கிற..ம்ம்ம்..பெரியம்மாவ உங்களுக்கு தெரியுதா..ம்ம்.."

என்று அவள் பிள்ளையோடு ஒன்றிவிட எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

"ம்மா..ம்மா..என் கையில் கொடும்மா.."

என்று குதித்த நிலாவை,

"உனக்கு தூக்க வராது நிலா..தம்பியை கொஞ்ச நாள் கழிச்சு தூக்கலாம்.."

என்று வெண்பா மறுக்க உதட்டை பிதுக்கி பாவமாய் பார்த்தாலும் அன்னையின் மடியில் இருந்த குழந்தையின் கன்னத்தை ஒரு விரலால் தொட்டு பார்த்து சந்தோஷமடைந்தாள்.

"சீக்கிரம் வீட்டுக்கு வா லாவண்யா..இந்த கண்ணனை கூடவே வைச்சுக்கணும் போல இருக்கு.."

"சரிங்க அக்கா..எனக்கு பிள்ளை வளர்க்க எல்லாம் தெரியாது க்கா..நீங்க தான் சொல்லி தரணும்.."

"இதுக்கு தனியா க்ளாஸாடி போவாங்க..அதெல்லாம் தானே வரும்.."

சிரித்த லாவண்யா, "எங்க அக்கா..அத்தையம்மாவ காணும்..என் மருமகனை நான் தான் ஃபர்ஸ்ட் தூக்குவேன்னு சவால் எல்லாம் விட்டாங்க மேடம்.."

சோர்வையும் மீறி அவள் உதயாவை வம்பிழுக்க,

"அவ காலைலே பஸ் ஏறிட்டாளாம்..இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவா.."

என்று ஃபோனை பார்த்துக் கொண்டே பதில் சொன்ன தயா சட்டென்று,

"ஹே..ஜெகன் லைன் ல வந்துட்டான்.."

என்று அழைப்பேசியை காட்டினான்.

அவனும் காணொளி மூலம் தன் அண்ணன் மகனை பார்த்து பூரிக்க என்று எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது எதர்ச்சையாய் அங்கே வெண்பாவின் பெற்றோரை காணும்வரை..!!
Nice sis
 
ரொம்ப நல்லா இருக்கு
வெண்பா மாற்றம் நல்லவிதமாக
இருக்கட்டும்
 
வெண்பாவின் மனமாற்றம்....நிலையானதா...
இல்லை....பழைய நிகழ்வுகளை மறந்து விட்டாளா...?
அம்மா, அப்பாவை பார்க்கக் கூடாது என்று
வைராக்கியம் மட்டும்....இப்ப வரை உள்ளது ..?

கல்யாணம் ஆன பத்து வருஷத்தில்....
சொல்லக் கூடாத்தை சொல்லி....
எட்டு வருடங்களை வீணாக்கியவன்....
இப்ப நடை, திரை....வயதாக விட்டதாம்...?
ஆகாமல் அப்படியேவா இருக்கும்,...?;):p
ஹாஹா..பாவம் தான் மதி??
 
ரொம்ப நல்லா இருக்கு
வெண்பா மாற்றம் நல்லவிதமாக
இருக்கட்டும்
கண்டிப்பா☺️ நன்றி சிஸ் ?
 
Top