Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 12

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 12

அன்று அவளை தவறவிட்டாலும் அந்த வார இறுதியிலே மீண்டும் பார்க்க நேர்ந்தது.



லொகேஷன் தேர்ந்தெடுப்பதற்காக காருண்யாவோடு வந்திருந்தவன் வேலை முடிந்து திரும்புகையில் சிக்னலில் நின்றபோது அவளை பார்த்தான்.



அங்கே வலதுபுற சாலையில் இருந்த ஆசிரமத்தின் வாயிலில் ஆறுபேர் ஒரு குழுவாய் ஒரே போல் டீ சர்ட் அணிந்திருந்தனர்.அதில் ‘ஸ்பெரட் லவ்’ என்ற வாசகம் இடம்பெற்று இருக்க அதில் ஒருவளாய் நின்றாள் உதயா.



அவன் ஆச்சரியமாய் அதே சமயம் கேள்வியோடு அவர்களை பார்த்தவன் சட்டென்று வண்டியை ஒடித்து அங்கே திருப்பினான்.



“ஹே..எங்க போற..”



“வா..சொல்றேன்..”

என்று அவர்களுக்கு சில அடி தொலைவில் பைக்கை நிறுத்தி விட்டு இறங்கினாலும் அவளை நோக்கி செல்ல மிகவும் தயக்கமாய் இருந்தது.



‘அப்படி ஒரு காரியத்தை செய்தபின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் சென்று பேசுவது..??’



அவன் மறுகி நிற்கும் போதே அவள் உள்ளே செல்ல திரும்பவும் உடனே,



“காரு..அந்த பொண்ணுட்ட பேச்சு கொடுத்து..அவங்க இங்க என்ன பண்றாங்கனு விசாரியேன்..”

என்க அந்த பெண் யாரென்று விளங்கி கொண்ட காருண்யா,



“ஏது நானா..அந்த பொண்ணை உனக்கு தானே தெரியும்..நான் போய் கேட்டால் என்ன நினைப்பாங்க..”



“நீ எதுவும் நினைக்காத மாதிரி பேசு..”



அவள் இன்னும் யோசனையாய் நிற்கவும், “போ..” என்று பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்துவிட்டு சற்று நகர்ந்து நின்றான்.



“ஹே..ஹாய்..”



சங்கடமாய் அருகில் சென்று அழைக்க உள்ளே செல்ல திரும்பியவள் நின்று பார்த்தாள்.



“இங்க எதாவது ப்ரோக்ரம் நடக்கிறதா..தப்பா எடுத்துக்காதீங்க..எனக்கு இந்த மாதிரி விசயங்களில் ரொம்ப ஆர்வம்..ஸோ ஜெஸ்ட் அவுட் ஆஃப் க்யூரியாஸிடி..”



என்றவளை பார்த்து அழகாய் புன்னகைத்த உதயா,



“ஷுயர்..இதில் என்ன இருக்கு..” என்று இலகுவாய் கூறி,



“ஸ்பெரட் லவ் என்கிறது ஒரு நான் ஃப்ரோஃபைல் ஆர்கனிஷேசன்..பொதுவா ஹெல்ப்னா மணி,ஃபுட்,அண்ட் திங்ஸ் தான் செய்வோம்..பட் இதையும் தாண்டி சோஸைட்டில செய்ய நிறைய இருக்கு..அப்படி நிறைய ப்ரோக்ரம்ஸை இவங்க ஆர்கனைஸ் பண்ணுவாங்க..அதுல வாலெண்டியர்ஸ் ஜாய்ன் பண்ணிக்கலாம்..அப்படி தான் இன்னைக்கு இந்த ஆர்ஃபனேஜ் பசங்களுக்கு க்ளாஸ் எடுக்க நாங்க வந்திருக்கோம்..”

என்றாள்.



“ஹோ..நீங்க தான் ஆர்கனைஸ் பண்றீங்களா..”





“இல்ல ஜி..நாங்களும் வாலெண்டியர்ஸ் தான்..நாங்க ஒரு எம்.என்.சி ல வொர்க் பண்ற டீம்..எங்க வொர்க் டென்ஷன் குறைய வீக்லீ ஒன்ஸ் எதாவது ரிலாக்ஸிஙா செய்யணும்னு நினைச்சோம்..தென் வீ கேம் டு நோ அபவுட் ஸ்பெரட் லவ்..நாங்களும் மெம்பராக ரெஜிஸ்டர் செய்து ஜாய்ன் பண்ணிக்கிட்டோம்..இந்த வீக் எங்க டாஸ்க் இங்க இருக்கிற கிட்ஸோட தனிதிறமையை கண்டறிந்து அதை பற்றிய நாலேஜை அவங்களுக்கு இம்ப்ரூ செய்வது..”

என்று உதயா விவரிக்க,



“ரியலீ...இன்ரெஸ்டிங் யா..”

என்றாள் உண்மையாகவே அந்த தகவலில் கவரப்பட்டவளாய்..



அவள் பதிலாய் புன்னகை சிந்தினாள்.அதற்குள் கல்பனா நேரம் ஆவதை உணர்த்த காருண்யாவிடம் விடைபெறும் விதமாய் தலையசைத்து நகர போனவள் சற்று தள்ளி நின்ற உதய்யை கண்டு விட்டாள்.



அவள் பார்த்ததும் மறைந்து நிற்க முடியாமல் தடுமாற்றத்தை மறைத்து புன்னகைக்க முயல உதயாவின் முகமோ உணர்ச்சிகள் தொலைத்து இறுகி போனது.



அவன் அருகில்வர ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் விடுவிடுவென அவள் உள்ளே செல்ல ஓடி அவள் முன் வந்து,



“உதயா..உதயா..ஒரு நிமிஷம் இரு..உன் கோபம் புரியுது..உன் நல்ல-”

அவன் பேச்சை கேட்கும் பொறுமையற்றவளாய்,



“உங்களுட்ட பேச எனக்கு விருப்பம் இல்லைங்க..எனக்கு பொறுமை ரொம்ப கம்மி..எதாவது சொல்லிட போறேன்..நகருங்க..”

என்றாள் பல்லை கடித்துக் கொண்டு..



“நீ என்னை மறக்கணும்னு தான் அன்னைக்கு அப்படி பண்ணேன்..பட் நீ..நீ அவாய்ட் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு உதயா..அதுக்கு அப்புறம் உன்னிடம் ஸாரி கேட்க உன்னை தொடர்புக் கொள்ள எவ்வளவோ ட்ரை பண்ணேன்..ஆனால் நீ பேசவேவிடலை..ஆஷிக்கும் ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்..என் இடத்துல இருந்து யோசித்து பாரு..”



“என்ன யோசிக்கணும்..இல்ல என்ன யோசிக்கணும்..நீங்க யோசிச்சீங்களா..அன்னைக்கு நீங்க பண்ணின காரியம் என்ன மாதிரி ஒரு பாதிப்பு கொடுத்துச்சுனு உங்களுக்கு தெரியுமா..? அப்பவும் சரி இப்பவும் சரி நீங்க புரிஞ்சிக்காம பண்ற விசயத்தோட விளைவு என்னானு யோசிக்கிறதே இல்ல..எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்களை அடிச்சு கிடிச்சிட போறேன்..தயவு செஞ்சு என் முன்னால வந்திடாதீங்க..”



என்று கத்தியவள் அவன் பதிலை எதிர்பாராது உள்ளே சென்றுவிட உதய் சிலையாய் சமைந்தான்.



‘ஏன்..என்னாகிவிட்டது..’ என்று உள்ளம் பதைக்க மேலும் அவளை நிறுத்தி கேள்வியும் கேட்க முடியாமல் தவித்தவனை காருண்யா தான் அங்கிருந்து இழுத்து சென்றாள்.



அவன் கூறிய அனைத்தையும் கேட்டபின் அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த காருண்யா,



“அதாவது..அந்த பொண்ணு உன்னை ப்ரபோஸ் செஞ்சு..நீ ரிஜெக்ட் பண்ணிருக்க..அதுவும் அவ வீட்ல போய் போட்டு கொடுத்திருக்க..”

என்று கேட்க ஆம் என்பதாய் தலையசைத்தவனை எதில் அடிக்கலாம் என்று தோன்றியது.



“உனக்கென பைத்தியமா உதய்..பார்த்து அஞ்சு நிமிசத்திலே அந்த பொண்ணு செம்ம கேரக்டர்னு எனக்கு புரிஞ்சு போச்சு..இப்படி ஒரு பொண்ணு தானா வந்து லவ் சொன்னால் கப்புனு புடிச்சு இந்நேரம் கல்யாணத்தை முடித்திருக்கணும்..அதைவிட்டுட்டு பெரிய பருப்பு மாதிரி அட்வெய்ஸ் பண்ணிட்டு வந்திருக்க..இல்ல தெரியாமல் தான் கேட்கறேன்..நீ இப்படி செஞ்சா நல்லவன்னு யாராவது அவார்ட் தரேன்னு சொன்னாங்களா..”



“ம்ச்..இதெல்லாம் சரி வராது காரு..”



“ஏன் சரி வராது...குடும்பம்னா நாலு பிரச்சனை வரதான் செய்யும்...அட்லீஸ்ட் நீங்க சேர்றது மூலமா உங்க பேமிலியும் சேரலாம் இல்லையா..??”



“அவங்க என்னலாம் பேசினாங்கன்னு உனக்கு தெரியாது..”



“சண்டையில வார்த்தை எல்லாம் தடிச்சு தான் போகும் உதய்..கோபத்தில் சொல்ற வார்த்தைகள் எல்லாத்தையும் பிடிச்சுக்கிட்டு தொங்குனா வாழ்க்கை முழுசும் நிம்மதியே இருக்காது..ஏன் அவங்க பேசினதுக்கு நீங்களும் தானே பதில் பேசியிருப்பீங்க..அது மட்டும் தப்பாகாதா.!!முதலில் அப்பா அம்மாவை சொல்லணும்..உன் பேச்சு எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்காங்க பாரு..”

என்றவள், “உதயாவை விடு..உன் அக்காவை பத்தி யோச்சு பார்த்தியா உதய்..உனக்கு அவங்க மேல பாசம் இருந்தா அவங்களை இப்படி விட்டு இருக்க மாட்ட..”

என்க,



“அவ தான் நாங்க வேணாம்னு விட்டுட்டா..”

என அவன் முகம் திருப்ப,



“என்ன விட்டாங்க..?அவங்க சூழ்நிலையை நீ பார்க்க வேண்டாமா..?? உனக்கு உன் ஃபேமிலி மட்டும் தான் முக்கியம்..உன் மாமாக்கு அவர் ஃபேமிலி தான் முக்கியம்.ஆனா உங்க அக்காவுக்கு..??இரண்டு பேருமே எவ்வளவு முக்கியம் தெரியுமா..!! ஏற்கெனவே நடந்த பிரச்சனையில் அவங்க மனசு நொந்து போயிருப்பாங்க..நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்க வேண்டாமா..?இதில் அவங்களை நடுவில் நிற்தி நீயா..?நானா..? நடத்தினா அவங்களும் தான் என்ன செய்வாங்க..அப்போ தான் கோபத்தில் பண்ணின..இப்போ இத்தனை வருஷம் செண்டு அவங்க வீட்டுக்கு போனியே..ஒரு வார்த்தை அவங்களை நல்லா இருக்காங்களா இல்லையானு விசாரிக்க உனக்கு தோணலல..மனசுல அன்பு இருந்தால் கோபத்திற்கு முன்னாடி பாசம் தான் வெளிப்பட்டு இருக்கும்..ஆனா நீ அவங்களுட்ட நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்னு ஃப்லீம் காட்டிட்டு வந்திருக்க..உன் கூடபொறந்தவங்க தான அவங்க..அவங்களிடம் என்ன ஈகோ..? நீ பண்ணி வைச்சிருக்கும் காரியத்துக்கு ரொம்ப ஹர்ட் ஆகியிருப்பாங்க உதய்..”



என்று நிதானமாய் அவள் கேட்ட கேள்விகள் அவனை பேச்சுயிழக்க செய்தது.பொதுவாக ஒரு பிரச்சனை சம்பந்தப்பட்டவரின் பார்வையில் இருந்து ஒரு மூன்றாம் நபரின் பார்வையில் முற்றிலும் வேறுபடும்.அதுப்போல் காருண்யா சொல்லும் கோணத்தில் அவன் யோசித்ததே இல்லை.தற்போது உதயா கூட பின்னுக்கு போய்விட தமக்கை பற்றிய கவலை அதிகரித்தது.



‘ஈகோவா..இவள் சொல்வது போல் கோபம் என்ற பெயரில் என் ஈகோவிற்கு தான் நான் தீணி போட்டு இருக்கேனோ..அப்பா-அம்மாவும் இதை தான் புரிய வைக்க முயற்சி பண்ணாங்களோ..’

என்று தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு,



‘ஆமா..ஈகோ தான்..இனி உனக்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லனு வீராப்பா பேசிட்டு வந்தேல்லா..அந்த சபதத்தில் உறுதியாக தான் இருக்கேன்னு நீ வீம்பு காட்ட தான் நினைச்சிருக்க..அதுக்கு முன்னாடி உன் பாசம் கூட கண்ணுக்கு தெரியல..’

என்று அவன் மனசாட்சியே அவனுக்கு எதிராய் சாட்சி கூற தலை சுற்றுவது போல் இருந்தது.

.

.

.

திருப்பூரில்..



எப்பொழுதும் காலை நேரத்தில் ஜேஜேவென அங்கும் இங்கும் ஆட்கள் நடமாடிக் கொண்டு பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும் அவர்கள் வீட்டில் இன்று யாரையும் காண முடியவில்லை.



“பிந்தும்மா..நிலாவிற்கு சாப்பாடு ரெடியா..”



“ம்ம்ம் சாப்பாடு கட்டி வைச்சுட்டேன் தம்பி..”



வீட்டில் சமையல் செய்யும் பெண்மணியிடம் கேட்ட மதி ஒரு தட்டில் இட்லியும் சட்னியும் மறுக்கையில் டிஃபன் பாக்ஸூம் எடுத்துக் கொண்டு வந்தவன் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்த மகளின் அருகில் டிஃபன் பாக்ஸை வைத்துவிட்டு,



“இன்னோனு வைச்சுக்கோ நிலா.”

என்று தட்டில் இட்லி வைக்க,



“அப்பா..போதும்..ஸ்கூலிற்கு நேரம் ஆகுது..”

என்று சிணுங்கினாள்.



“ஒன்னு சாப்பிட எவ்வளவு நேரம் ஆக போது..? அதெல்லாம் சாப்பிடலாம்..”

என்று அவளை சாப்பிட வைத்துவிட்டு கூடத்திற்கு செல்ல அங்கே ஸோஃபாவில் அமர்ந்திருந்தாள் வெண்பா.



இரண்டு கால்களையும் ஸோஃபாவில் மடக்கி வைத்து அதன் பிடியில் தலை சாய்த்து பார்வை எங்கோ வெறிக்க சோக சித்திரமாய் இருந்தவளை காணவே அவன் மனம் வெதும்பியது.இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு முறையும் அவளை இவ்வாறு காணும்போதெல்லாம் நெஞ்சை இறுக்கி பிழியும் வலியை வார்த்தையால் விவரிக்க முடியாது.



தொண்டைவரை அடைத்த உணர்வுகளை விழுங்கி அவள் அருகில் அமர்ந்த மதி,



“வெண்பா..சாப்பிடு..”

என்று சொல்ல விழி மலர்த்தி அவனை பார்த்தவள், “பசிக்கல..வேணாம்..”

என்றாள் நலிந்த குரலில்..



“பசிக்கலேனாலும் கொஞ்சமா சாப்பிடும்மா..”



அவள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருக்க இட்லியை ஒரு துண்டு பிய்த்து வாயருகே கொண்டு செல்ல அவளும் அமைதியாய் வாங்கி கொள்ளவும் நிம்மதியடைந்தான்.



உணவு வேண்டாம் என்றுவிட்டால் பிடிவாதமாய் தொடவே மாட்டாள்.சில நேரங்களில் தான் அவன் ஊட்டிவிடும் போது வாங்கிக் கொள்வாள்.அப்பொழுது எல்லாம் அவனை ஆழ்ந்து அவள் பார்க்கும் பார்வை அவன் உயிரையே ஊடுருவது போல் இருக்கும்.அந்த பார்வையின் அர்த்தம் என்ன என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போவான்.இன்றும் அதேபோல்பா ர்க்க,

“என்ன வெண்பா..எதாவது சொல்லணுமா..”

என்றான் தணிவாய்..



மறுத்து தலையசைத்தாலும் அவள் பார்வையில் மாற்றம் இல்லை.அந்நேரம் வெளியே இருந்து வீடு திருப்பிய ஆழிக்கண்ணன் இவர்களை நெருங்கி,



“மதி..வெண்பா பேரில் இன்னைக்கு அர்ச்சனை பண்ணேன்..சாப்பிட்டதும் இதை வைச்சு விடுப்பா..”

என்றவர் பேத்தி அருகில் சென்று தானே வைத்துவிட்டார்.திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது போல் இப்பொழுதெல்லாம் இறைவனையே சரணடைந்தேன் என்று மாறிவிட்டார் ஆழிக்கண்னன்.இனி எல்லாம் அவன் கையில் மட்டுமே என்பது அவர் நம்பிக்கையாகிவிட்டது.



சாப்பிட்டு எழுந்த நிலா தன் ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு,



“பை ப்பா..பை தாத்தா..” என்றவள் வெண்பாவை நெருங்கி அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “பை ம்மா...” என்க அனிச்சையாய் வெண்பா முகத்தில் ஒர் புன்னகை..!!அது இப்பொழுது எல்லாம் அரிதாக காணப்படும் ஒன்று..!!



ஜெகன் சென்றதில் இருந்து நிலா பள்ளி வாகனத்திலே செல்ல தொடங்கி இருந்தாள்.

ஜெகன் ஒரு வருடம் கடுமையான பயிற்சிக்கு பின் ஜெய்பூரில் தொழில்நுட்ப பிரிவில் பணியில் அமர்த்த பெற்றான்.உதயா சென்னையில் வேலை கிடைத்து சென்றுவிட தற்போது பிரசவத்திற்காக லாவண்யா தாய் வீட்டிற்கு சென்றிருந்தாள்.பாதி நாள் இங்கே பாதி நாள் அங்கே என்று தயாவிற்கு நாட்கள் சென்றது.



அவள் சாப்பிட்டு முடித்ததும் தானும் உண்டுவிட்டு அலுவலகம் தயாராகி வந்தவன் அவளிடம் விடைப்பெற அதற்கும் அவளின் பதில் தலையசைப்பு மட்டும் தான்.உயிருள்ள ஜடம் போல் அமர்ந்திருப்பவளை விட்டு செல்லவே அவனுக்கு மனம் இல்லை.தன் கைக்குள்ளே வைத்து பாதுகாக்க தான் உள்ளம் அடித்துக் கொண்டது.ஆனால் அது சாத்தியம் இல்லையே..!!



மகனின் முகத்தை கண்டே அவன் உள்ளத்தை கண்டு கொண்ட ஆழிக்கண்ணன்,



“வெண்பா எவ்வளவோ கஷ்டங்களை அமைதியாவே கடந்து வந்துடுச்சு மதி..அவளோடு மன தைரியம் பத்தி நான் சொல்லி உனக்கு தெரியணுமா என்ன..??எல்லா சூழ்நிலையிலும் நிதானத்தோடும் அமைதியோடும் கையாண்ட பிள்ள..இதையும் அதே போல் கடந்து வந்திடுவா..அந்த ஆண்டவன் இதுக்குமேல இந்த பொண்ணை சோதிக்க மாட்டான்..”

என்றவர் குரலும் நெகிழ்ந்து போயிருந்தது.அவர் வார்த்தைகள் மனதிற்கு சற்று ஆறுதலாய் இருக்க தலையசைத்து அவரிடம் விடைபெற்றவன் மனம் அன்று நடந்தவையை நினைத்து பார்த்தது.



உதய் பேசிவிட்டு வெளியேறியதும் ஆழிக்கண்ணன் அதிர்ந்து நிற்க அவரிடம் சமாதானம் சொல்ல உதயா நெருங்கும் போது பொத்தென்ற சத்ததோடு மயங்கி விழுந்தாள் வெண்பா.



மற்றவை மறந்து பதறி ஓடிவந்து உதயா தன் மடியில் வெண்பாவை தாங்கி எழுப்ப முயல ஆழிக்கண்ணன் வேகமாய் தண்ணீர் எடுத்து வந்தார்.அவளிடம் அசைவு இல்லை என்கவும் வேகமாய் மதிக்கு ஃபோன் செய்து விவரம் கூறி வரசொன்னார்.அதே சமயம் நிலாவை அழைக்க போன ஜெகனும் வீடு வந்துவிட வெண்பாவிற்கு என்ன என்று புரியாமல் நிலா அழுகவும் அவளை தேற்றுவதே பெரும் பாடானது.



ஜெகன் துரிதமாய் அழைத்து வந்த காரில் வெண்பாவை ஏற்றிக் கொண்டு இவர்கள் முதலில் மருத்துவமனை சென்றுவிட தகவல் சொல்லபட்டு நேரடியாய் அங்கே வந்துவிட்டான் மதி.



“ஏன் ப்பா..திடீர்னு என்னாச்சு..எப்படி மயங்கினா..”



மதி பதற்றமாய் தந்தையை வினவ அவரோ மகளை அழுத்தமாய் பார்த்தார்.அழுகையில் சிவந்திருந்த முகத்தோடு அவள் நடந்ததை சொல்ல அது அவனுக்கு இன்னும் அதிர்ச்சி தான்.



“ஸாரி ண்ணா..”

தவறு செய்த குற்றவுணர்வில் தேம்பலோடு சொல்லும் தங்கையை கடிய முடியாமல் அவளை ஆற்றாமையோடு பார்த்த மதி,



“உதய்..அவளை எதாவது சொன்னானா..?

என்க,



“இல்லைண்ணா..பேசவே இல்ல..”

என்றாள்.



முன்பு ஒருமுறை மதி, ‘உங்க அப்பா- அம்மாவிடம் பேசேன் உதயா..’ என்று சொன்னதற்கு எங்கோ பார்த்தபடி ‘அதான்..எனக்கு பிறந்த வீடே இல்லாமல் செய்துடீங்களே..இப்ப நல்ல வராட்டும் பேச வேண்டாம்..’ என்று கடுமையாக அவள் சொன்னபின் அந்த பேச்சே அவன் எடுப்பதில்லை.அவனை பொறுத்தவரை உறவு வேண்டாம் என்று முறித்துக் கொண்டது அவர்கள் தான்.எனவே அவர்களாகவே வரட்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.அதன்பின் அப்படியே அதனை விட்டும்விட இன்று இப்படி ஒரு ரூபத்தில் வந்து நிற்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.அத்தோடு வெண்பாவின் உடல்நிலை என்னவாகிற்றோ என்று நெஞ்சம் தடதடத்தது.ஜெகன் அழைப்பேசியில் சொன்னதும் தயாளனும் லாவண்யாவும் வந்துவிட மொத்த குடும்பமும் அங்கே காத்திருந்தனர்.



மருத்துவர் வரவும்,



“என்னாச்சு டாக்டர்..”

இவன் பதட்டமாய் கேட்க, “சொல்றேன்..பட் அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு க்ளாரிஃபை செய்யணும்..அவங்க எதாவது ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தாங்களா..?? ஃபார் சம் கைண்ட் ஆஃப் டிப்ரெஷன்..”

என்று கேட்கவும் அவன் வேகமாய், “ஆமா டாக்டர்..அவங்களோட 15 வயசுல..”

என்று விவரமாய் அவரிடம் அனைத்தையும் கூற மற்றவர்களுக்கும் இது புதிய தகவல் தான் என்பதால் அதிர்ந்து நோக்கினர்.அவன் இன்றுவரை இதனை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை.அன்று அவளை மிரட்டியதும் அவளுக்கு மட்டும் கேட்குமாறு தான்.அதுவும் ஒரு கோபத்தில் சொன்னது தானே தவிர எந்த சூழ்நிலையிலும் அவ்வாறு அவன் செய்திருக்கவே மாட்டான்.



அவன் கூறியது கேட்டு மருத்துவரின் முகம் சற்று கடுமையாக,



“அப்போ நீங்க அவங்களை கேர் எடுத்து பார்த்துக்க வேண்டாமா சர்...மறுபடியும் அவங்களுக்கு அதே மாதிரியான மன அழுத்தம் தான்..அதுவும் எனக்கு தெரிந்து இது ரொம்ப நாளாவே ஏதோ மன உளைச்சலில் அவங்க உழன்று இருக்காங்க..அதை வெளியவும் சொல்லாமல் தனக்குள்ளே வைத்து வைத்து அவங்களுக்கு ரொம்ப டிப்ரெஷன் ஆகியிருக்கு..இன்னைக்கு ரொம்ப மனஅழுத்தம் தாங்காமல் ப்ளட் ப்ரஷர் ஏறி மயங்கி விழுந்திருகாங்க...இன்னும் கொஞ்ச நாள் கவனிக்காமலே விட்டிருந்தால் இட் மே ஈவன் காஸ் ஹார்ட் அட்டாக்..”

என்று அவர் கூறியதை கேட்டு அவன் சப்த நாடியும் ஒடுங்கியது.அரண்டு போனவனாய் அவரை பார்க்க,



“காம் டவுன் மிஸ்டர்..இப்போ கண்டுக்கிட்ட வரை நல்லது தான்..பட் அவங்க கான்ஸியஸ் வந்ததும் தான் அவங்க இப்போ என்ன ஸ்டேட்ல இருக்காங்கன்னு சொல்ல முடியும்.. தகுந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்...ஆனால் அதைவிட முக்கியம் அவங்களை ஹாப்பியாவும் ஸ்ரெஸ் ஃப்ரீயாகவும் வைத்து கொள்வது தான்..”

என்றவர் வெண்பாவின் முந்தைய மருத்துவ அறிக்கையை எடுத்துவர சொன்னார்.



அதே இடத்தில் திக்பிரம்மை பிடித்தவன் போல் நின்றுவிட்டான்.



‘இத்தனை வருட மண வாழ்க்கையில் அவளை நான் மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளவில்லையே..??இதற்கு தான் அவளை கட்டாயப்படுத்தி இருக்க வைத்தேனா..ஒருவேளை அவள் பெற்றோருடன் சென்றிருந்தால் நன்றாக இருந்திருப்பாளோ..இங்கே அவளுக்கு நிம்மதியே இல்லாமல் மீண்டும் அவளுக்கு மன அழுத்தம் வர தானே காரணமாகி விட்டேனே..!! கட்டிய மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள தெரியாத நானெல்லாம் என்ன மனிதன்..’



மனம் புயலில் சிக்கிய சிறு பூவாய் அவளுக்கு நினைவு திரும்பும் வரை சுழன்று தான் போனான்.அரைமணி நேரம் செண்டு கண்விழித்தபோது அருகில் அந்த மருத்துவர் ரிப்போட்டை பார்வையிட்டு கொண்டிருந்தார்.



இவள் எழுந்து அமர முயல இவளிடம் அசைவை உணர்ந்த மருத்துவர்,



“படுத்துக்கோங்க..டிரிப்ஸ் ஏறுது...”

என்றவர்,



“ஹவ் டூ யூ ஃபீல் நவ்...”

என்றார் கனிவாக..கண்கள் அலைப்பாய பரவாயில்லை என்பதாய் தலையசைத்தாள்.அதன்பின் அவர் அவள் உடல்நிலை சம்பந்தமாக பேச்சு குடுத்த போது அவள் பதில் ஆம்..!இல்லை..! என்ற தலையசைப்புகள் தான்..வாய் திறந்து அவள் பேச ஆர்வம் காட்டவில்லை.அவள் விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் அலைபுறுத்தலில் இருப்பதை கண்டு ஒரளவு கனித்து விட்டார்.



அவளை ஓய்வெடுக்க சொன்னவர் வெளியே வந்து அவள் கண்விழித்ததை கூறி அவர்களை பார்க்க அனுமதித்தார்.



உள்ளே வந்ததும் கதவின் அருகிலே சாய்ந்து நின்றுவிட்டான் மதி.அவன் கண்கள் மட்டும் மனைவியை விட்டு எங்கும் நகரவில்லை.



“அம்மா..” என்று அழுகையோடு ஓடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட நிலா,



“உனக்கு ஒன்னும் இல்லைல ம்மா..எனக்கு பயமா இருக்கு..”

என்று சொல்ல அவள் முகத்தில் வெறுமை மட்டுமே தான்.தன் மகளுக்கும் பதில் சொல்ல தோன்றவில்லை.அவள் கையை மட்டும் பிடித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.



“பேசு ம்மா..அம்மா..”

என்று மகளவள் தவிக்க, “நிலா..அம்மா டயர்ட் ஆ இருகாங்கடா..கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவாங்க..”

என்று லாவண்யா தன் அருகில் இருந்திக்கொண்டாள். அதன்பின்னும் எல்லோரும் பேசினாலும் யாருக்கும் அவள் பதில் சொல்லவில்லை.அவளுக்கு புரிகிறதா இல்லையா என்றே குழம்பிவிட்டனர்.



மதியை தனியே அழைத்த மருத்துவர் வெண்பாவின் உடல்நிலை குறிந்து கூறினார்.



“Major depressive disorder...அதாவது அவங்க தன் சுயநினைவோ இல்லை தன்னிலையோ இழக்க மாட்டாங்க..நார்மலா தான் இருப்பாங்க..பட் அவங்க டே டூ டே லைஃப் அக்டிவிட்டிஸில நிறைய மாற்றம் இருக்கும்..ஏன்னா அவங்க ஓவர் ஸ்ரெஸில் இப்போ எல்லாத்தையுமே வெறுத்து ஒரு மாதிரி விரக்தியான மனநிலையில் இருக்காங்க..எதிலுமே பிடித்தம் இல்லை..அதனால் அவங்க டெய்லி செய்யும் விசயங்கள் கூட செய்ய பிடிக்காது..கோபமும் எரிச்சலும் ரொம்ப இருக்கும்..எதிலுமே கவனம் இருக்காது..தூக்கம்,சாப்பாடுனு எல்லாமே பாதிக்கபடும்..மொத்ததில் அவங்க அவங்களா இருக்க மாட்டாங்க..பட் இது குணப்படுத்த கூடியவை தான்..கொஞ்சம் காலம் எடுத்தாலும் நீங்க அவங்களை பார்த்துக் கொள்வதை பொறுத்து தான் எல்லாம்..தேவையான கவுன்ஸிலிங்கும் எடுத்துக்கணும்..”



மதியிடம் இன்னும் சில அறிவுரைகளை கூறி அன்று இரவே டிஸ்சார்ஜாக சொல்லியிருந்தார்.



வீடு திரும்பிய பின்பும் அவள் நடவடிக்கையில் மாற்றம் இல்லை.தன் அறையில் வந்து முடங்கி கொண்டவள் அதன்பின் வெளியே வர மறுத்துவிட்டாள்.யாரையும் அருகிலே நெருங்கவும் விடவில்லை.நிலாவை மட்டுமே தன்னோடு வைத்துக் கொண்டாள்.வேறு யாரும் பேச முனைந்தால் எரிந்து விழுந்தாள்.உணவையும் மறுக்க முதலில் தடுமாறினாலும் அதன்பின் மதி சுதாரித்துக் கொண்டான்.



அவள் பேசவில்லை என்றாலும் இவன் அவளுக்கும் சேர்ந்து பேசுவான்.அவள் கத்தினாலும் திட்டினாலும் ஏன் எதையாவது கொண்டு வீசினாலுமே தூசியாய் துடைத்துவிட்டு எதுவுமே நடவாதது போல் இருந்தான்.



இரண்டு நாள் அவள் அரைகுறையாக சாப்பிட்டதால் மூன்றாம் நாள் உணவை எடுத்து வந்த போது அவள் மறுக்கவும்,



“சாப்பிடுறீயா இல்ல..நான் ஊட்டவா..”

என்று அவன் மிரட்டலாய் கேட்க இருவருக்கும் நடுவே அமர்ந்திருந்த நிலா,



“மீ சாப்பிடு..” என்று தாடையை பிடித்து செல்லமாய் சொல்ல,



“என்னை தனியா விடுங்களேன்..எனக்கு சாப்பிட பிடிக்கலை..போங்க இங்கிருந்து உங்களை பார்த்தாலே எனக்கு கோபமாய் இருக்கு..”

என்றாள் கோபமாய்...



“சாப்பாட்டில் என்ன கோபம் வேண்டி கிடக்கு..நல்லா சாப்பிட்டு அப்புறமா என்மேல கோப படலாம்..”



அவள் பதில் சொல்லாமல் முறைக்கவும், “நீ சரிப்பட மாட்ட..” என்று அவள் அருகில் அமர்ந்தவன் உணவை பிசைந்து வாயருகே கொண்டு செல்ல முகத்தை திருப்பிக் கொண்டாள்.



“வேணாட்டி போ..” என்று தோளை குலுக்கி,

“நிலாம்மா..நீ வாங்கிகோடா..” என்று அதனை மகளுக்கு ஊட்ட அவள் சமத்தாய் வாங்கி கொண்டாள்.

அடுதடுத்த வாயும் அவளை கண்டுக் கொள்ளாமல் அவள் கண்முன்னே நிலாவிற்கே மதி ஊட்டிவிட அவனையே குறுகுறுவென பார்த்தாள்.



அவள் பார்வையை கவனித்து அடுத்த கவளம் அவளுக்கு நீட்ட மௌனமாய் வாய் திறக்கவும் அவனுக்கு ஏக சந்தோஷம்..அதன்பின் முழுவதையும் ஊட்டி முடிந்தான்.அதன்பிறகு அவன் ஊட்டினால் அவள் மறுப்பதில்லை.



அதேபோல் தான் உறக்கம்..அவள் உணவை மறுப்பது போலவே விடியும்வரை கூட உறங்காமல் கொட்ட கொட்ட முழித்து அமர்ந்திருப்பாள்.தூக்க கலக்கத்தில் ஒரு நாள் நடுஇரவில் விழித்தப்போது அவள் சீலிங்கை வெறித்தபடி அமர்ந்திருக்கவும்,



“தூங்கலையா நீ..”

என்றான் அவன் எழுந்து..

பதிலின்றி அவள் அப்படியே அமர்ந்திருக்க,



“வெண்பா..கண்ணை மூடி படு..தூக்கம் வரும்..”

என்றதற்கும் அதே மௌனம் தான்.

அவளை தூங்க வைக்க மனம் விழைந்தாலும் பெரும் தயக்கம் அவனை ஆட்கொண்டது.

பேச்சுக்கே பஞ்சமாய் இருந்த காலத்தில் ஒரே அறையில் இருந்தாலும் அவளை தொட்டு பேசவெல்லாம் வாய்ப்பே இருந்தது இல்லை.கணவனாய் அவளுக்கான தேடல்களும் ஏக்கங்களும் அவனை படுத்திய பொழுதுகளில் கூட அவளை அவன் நெருங்க முயன்றது இல்லை.அவன் நெருங்கியிருந்தால் நிச்சயம் அவள் மறுக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.ஏனெனில் மனைவியாய் அவள் கடமைகளை எதையும் மறுத்ததில்லை.ஆனால் சொன்னது போல் அதில் கடமை மட்டும் தான் இருக்கும்..மற்றைய விசயங்களில் ஏற்றுக் கொள்ள முடிந்தவனால் இதில் ஏற்க முடியாதே..!!ஏனெனில் அவனது தேவை உடல் மட்டுமல்ல மங்கையவளின் உள்ளமும் தான் அல்லவா..!! தூரத்தில் இருந்தே இரசிக்க பழகியிருந்தான்.



நேரம் சென்றதே தவிர அவள் தூங்குவதாய் தெரியவில்லை.ஆகையால் அவளை நெருங்கியமர்ந்த மதி அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள முயல, “விடுங்க என்னை..” திமிறினாள் வெண்பா.



“ஷ்..ஷ்..பேசாமல் தூங்கு..”



கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் தாய் பறவை தன் பிள்ளையை சிறகில் காத்துக் கொள்வது போல் தன்னில் அவளை முழுவதும் அரவணைத்துக் கொண்டவன் காதில் மென்மையாய் சொல்ல அவள் திமிறல் நின்றது.



அவள் உடலில் சிலிர்ப்பை அவன் தேகம் உணர்ந்துக் கொள்ள அந்த பனிவிழும் இரவின் ஏகாந்ததில் மௌனமாய் ஒரு மொழி அந்த கணவன் மனைவி இடையில்..!!அவன் தட்டி கொடுக்க கொடுக்க இருவரும் தங்களை மறந்து நித்திரையில் ஆழ்ந்தனர்.நீண்ட நாட்களுக்கு பின் ஒர் நிம்மதியான தூக்கம் இருவருக்கும்..!!



இவ்வாறு தாயுமானவனாய் மதி அவளையே சுற்றி சுற்றி வர அவன் அருகாமையில் இதம் காண தொடங்கினாள் வெண்பா.
 
Last edited:
மாண்புடைய மதியா...மாறி வருகிறான்....
அவள் பெற்றோர்களுடனா சந்திப்பு
அவள் மன அழுத்தத்தை குறைக்குமோ...
மதி ஏன் அதை முயற்சி செய்யவில்லை...?

கரூண்யா....
உதயின் தவறுகளை அவனுக்கு புரியவைக்கிறாள்...
புரிந்தவன் இனி செய்யப் போவது என்ன...?
 
Top