Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 10.2

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 10.2

அச்செய்தி வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த ஆழிக்கண்ணன் கூட தன் கோபம் தளர்ந்து தங்கள் வீட்டின் முதல் வாரிசின் வரவை கொண்டாடினார். வெண்பா வீட்டிலும் விசயம் தெரிந்ததும் மகளை காண ஓடோடி வந்து விட்டனர்.



வெண்பாவை கையிலே பிடிக்க முடியவில்லை.ரொம்ப நாள் சென்று தன் வீட்டாரை கண்ட குஷியில் சந்தோஷமாய் வளைய வந்தாள்.பெற்றோர்காக பார்த்து பார்த்து செய்தாள்.ஆனால் வீட்டு பெரிய மனிஷான ஆழிக்கண்ணன் அவர்களை பெரிதாக மதிக்கவில்லை.வந்தவர்களை வாங்க என்று கேட்டதோடு சரி அதன்பின் அவர்களை ஒதுக்கி தன் வேலையை பார்த்தபடி இருக்க அவர்களுக்கு தான் சங்கடமாய் போயிற்று.வழியே சென்று பேச்சு கொடுத்தாலும் பதில் சொல்ல அவர் பெரிதாக ஆர்வம் காட்டாதது கண்டு உள்ளுக்குள் லேசாய் துணுக்குற்றனர்.இருப்பினும் மகள் தோற்றதிலும் முகத்திலும் தெரிந்த செழிப்பும் மகிழ்ச்சியும் அவளை நன்றாக வைத்திருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்ட அது போதும் என்று தங்களையே சமாதானம் படுத்திக்கொண்டனர்.



பெரியவர்கள் பொறுத்துப் போனாலும் சிறியவன் உதய் குமாரிற்கு அவரது அலட்சிய பாவனை கோபத்தை தான் கொடுத்தது.அதனைவிட மதி இவற்றை கண்டும் காணாமல் இருப்பதும் இன்னும் எரிச்சலாய் இருக்க கடுப்பான மனநிலையிலே இருந்தான்.



உதய் மிகவும் சுயமரியாதை கொண்டவன்.ஒரு வார்த்தை தவறி பேசிவிட்டால் கூட ரோஷம் பொத்துக் கொண்டு வரும்.அப்படி பட்டவனுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்ல்லை.வெண்பாவிற்காக பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.



அவள் இவர்களுக்காக ஆசை ஆசையாய் சமைத்து வைத்ததை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு சற்று நேரத்திலே கிளம்பிவிட்டனர்.பின்பு அவளை பார்க்கவர மிகவும் தயக்கமாக தான் இருந்தது.வெண்பா தான் மசக்கையில் தன் அன்னையின் நினைவில் வாடி இருந்தாள்.அவரை மிகவும் தேடி வந்தது.ஆனால் வளைக்காப்பு போட்ட பின்பு தான் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.



அவள் அங்கே சென்றதும் மதிவாணன் அடிக்கடி வந்து பார்த்து செல்வான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க அவனோ செல்போனில் விசாரிப்பதோடு சரி..அங்கே வருவதே இல்லை.அவளாக வழிய அவனை அழைத்தாலும் இப்போ அப்போ என்று போக்கு காட்ட ஒவ்வொரு விசயத்திலும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதில் அவள் மனம் சோர்ந்து தான் போயிருந்தது.

அவன் தன் குடும்பத்தாரிடம் காட்டும் ஒதுக்கத்தை தெள்ள தெளிவாய் உணர்ந்துக் கொண்டாள்.



“அவங்க வேணாம்..அவங்க பொண்ணு மட்டும் வேணுமா..”

என்று சண்டையிட மனம் துடித்தாலும் அதை செய்ய தான் அவளுக்கு தெரியவில்லை.வெண்பாவின் கோபம் மௌனத்தில் தான் வெளிப்படும்..அனைத்தையும் புரிந்துக் கொள்ளும் மதியோ அதனை உணரவில்லை.



வெண்பா நிலாவை பெற்றெடுத்து ஆறு மாதம் தாய் வீட்டில் சீராடிவிட்டே வீடு திரும்பினாள்.கணவன் மீது மலையளவு வருத்தம் இருந்தாலும் தனக்கு விதித்தது இது தான் என்ற பல இல்லதரிசிகளில் ஒருவளாய் அவற்றோடு வாழ கற்றுக் கொண்டாள்.



இவ்வாறு தெரிந்தும் தெரியாமலும் சிறு சிறு புகைச்சலாய் இருந்த இருக்குடும்பத்தின் ஒதுக்கமும் தீப்பொறியாய் வெடித்து சிதறியது நிலாவின் காதணி விழாவின் போது தான்.



இரண்டு வயதில் நிலாவிற்கு மதியின் குலதெய்வ கோவிலில் காதணி விழா ஏற்பாடு செய்தனர்.



தாய்மாமன் சீரில் எந்த குறையும் இன்றி ஆசையாய் செய்தான் உதய்.அப்பொழுது கல்லூரி தான் படித்துக் கொண்டிருந்தாலும் தன் சேமிப்பில் இருந்து தான் எல்லாம் செய்தான். மொட்டை அடித்து மருமகளை உதய் மடியில் அமர்ந்தி காது குத்திய வைப்போகம் வரை எல்லாம் மகிழ்ச்சியாக தான் சென்றுக் கொண்டிருந்தது.ஆனால் விழாக்கள் என்றாலே பிரச்சனைகளையும் இழுத்துவிடும் சில நல் உறவுகள் இருப்பார்களே..!!அவர்களில் ஒருவர் தான் ஆரம்பித்தார் ஆழிக்கண்ணனிடம்..



சாப்பிட்டு முடித்ததும் சவகாசமாய் அமர்ந்து ஊர் உலக நடப்பை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தபோது ஆழிக்கண்ணனின் பங்காளி முறையில் ஒருவர்,



“ஆயிரம் சொல்லு கண்ணா..நம்ம மதியோட தகுதிக்கும் குணத்துக்கும் இன்னும் நல்ல இடத்துல பொண்ணு எடுத்து இருக்கலாம்..உனக்கு இந்த விசயத்துல விபரம் பத்தலடா..”

என்று வம்பிழுக்கவென்றே ஆரம்பிக்க அவ்விடத்தில், “எங்க மருமகளுக்கு என்னய்யா குறை..கடைஞ்சு எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு புள்ள யாருக்கும் அமையாதுய்யா..பையனோட மக காதுகுத்து விழால வந்து அவன் கல்யாணத்தை விமர்ச்சிக்கிறீயே சுத்த கூறுக்கெட்டதனமா..”



என்று அவர் ஒரு அதட்டல் போட்டு இருந்தால் அந்த பேச்சு அத்தோடு அமுங்கி போயிருக்கும்..ஆனால் ஆழிக்கண்ணன் அமைதிகாக்க அதே மற்றவர் வாயிக்கு போதுமான அவலை கொடுத்தது.



அவர் விட்ட இடத்தில் இருந்த மற்றவர் தொடங்க அந்நேரம் அங்கே அவ்விடத்தில் செந்தில்நாதனையும் உதய்குமாரையும் கொண்டு வந்தது விதியின் சதியோ..!!நிலாவை தூக்கி வைத்து கொஞ்சியபடி வேடிக்கை காட்ட தூக்கி வந்த உதய் ஒருப்பக்கமும் விழாவிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரை கவனிக்க வந்த செந்தில் ஒருப்பக்கமும் எதேர்ச்சையாய் வந்து அவர்கள் பேசுவதை கேட்க நேரிட்டது.



“என்ன செய்றது பங்காளி..மகனுக்கு தராதாரம் பார்த்து ஆசைப்பட தெரியல..கட்டுனா இந்த பொண்ண தான் கட்டுவேன்னு ஒரே புடியா நின்னுட்டான்..அவன் விருப்பதுக்கு போக வேண்டியதா போச்சு..”



என்றவர் குரலில் ஏகத்திற்கு அதற்கான சலிப்பு இருந்தது.எங்கே உட்கார்ந்து என்ன பேச்சு இது என்று அப்பா மகன் இருவருமே முகம் சுளித்தனர்.



“என்ன கண்ணா..உன் வீம்பு..வீராப்பு எல்லாம் வீட்டுக்கு வெளியே தானா..வீட்டில இல்ல போலையே..மகன் ஆசைப்பட்டா உடனே தலையாட்டிடுவியா..நாம தான் நம்ம வழிக்கு கொண்டு வந்திருக்கணும்..”



என்றவர் சற்று குரலை தாழ்த்தி, “உங்க சமந்தியம்மா கூட இந்த *** ஜாதிய சேர்ந்தவங்கலாம்...காதல் பண்ணி புரட்சி திருமணம் நடத்துறேன்னு ஊர விட்டு வந்தவங்கலாமே..இப்போ அந்த பொண்ணு எந்த ஜாதில வரும்..இதெல்லாம் கேட்கவே நாராசமா இல்ல..நம்ம சொந்ததுல இப்படி யாராவது இருந்தாலே ஒதுக்கி வைச்சிடுவோம்..நீ வழிய போய் பொண்ணெடுத்து இருக்க..நாள பின்ன நம்ம ஜாதி ஜனம் எல்லாம் உன் மகனை மதிப்பாங்களா..”



வார்த்தையில் விஷத்தை தடவி அவர் எய்த அம்பில் ஆழிக்கண்ணனே ஒரு நிமிடம் திகைத்து தான் போனார் ‘என்ன இதெல்லாம் பேசுறானுங்க’ என்று..அவர்களை அவருக்கு பிடிக்காது தான் ஆனால் வெண்பாவின் அன்னையையோ அவர்கள் திருமணத்தையோ விமர்சிக்க எல்லாம் அவர் எண்ணியதே இல்லை.வார்த்தைகள் எல்லை மீறுவதை உணரும் போதே,



“யோவ்..என்ர குடும்பத்தை பத்தி விமர்சிக்க உனக்கு என்னையா உரிமை இருக்கு..”



என்று செந்தில் உறுமினார் என்றால் நிலாவை இறக்கிவிட்டு அவர் மீது பாய்ந்து விட்டான் உதய்.



நிமிடத்தில் அந்த இடமே களேபரம் ஆக அரக்கபறக்க ஓடிவந்தனர் மதியும் வெண்பாவும்..



“டேய் விடுடா..காட்டுபயலே..வயசுல பெரியவங்கன்னு கூட பார்க்காமல் மேல கை வைக்கிற..இதான் உன் அப்பா அம்மா சொல்லிக் கொடுத்த மரியாதையா..”



என்று ஆழிக்கண்ணன் உதய்யை சத்தமிட ஆத்திரமாய் அவர் புறம் திரும்பியவன்,



“யோவ் நீதான்ய்யா காட்டுபய..மனுஷன மதிக்க தெரியாத நீயெல்லாம் மரியாதையை பத்தி பேசக்கூடாது..”

என்றான் ஒருமையில்..அவனுக்கு கோபம் எல்லையை கடந்திருக்க இதுவரை ஆழிக்கண்ணன் மீதிருந்த கோபம் எல்லாம் சேர்ந்து அவனை தாண்டவம் ஆட செய்தது.



“உதய்..யாருட்ட பேசுறேன்னு பார்த்து பேசு..”

மதி அவனை அதட்ட ஏளனமாய் பார்த்து,



“வாங்க மாமா..உங்க அப்பாவை சொன்ன மட்டும் வருதுல..என் அப்பாவையும் அம்மாவையும் பேசினா எனக்கும் அப்படி தான் வரும்..நான் அப்படி தான் பேசுவேன்..”

என்றவன் மீண்டும் ஆழிக்கண்ணனிடம் திரும்பி,



“நாங்களா வழிய வந்து எங்க அக்காவை கல்யாணம் பண்ணுங்கனு உன் மகன் காலில விழுந்தோம்?..இல்ல நீ வானத்துலேந்து குதிச்சு வந்த தேவதூதனா..? போனா போகிறதுனு வாழ்க்கை கொடுத்தா மாதிரி பேசுற..என் குடும்பத்த விமர்சிக்க உங்களுக்கு எல்லாம் என்னய்யா தகுதி இருக்கு..உங்கவுங்க வூட்டு சமாச்சரம் எல்லாம் வெளியே வந்தால் நீயெல்லாம் தலைகாட்ட முடியுமா..வயசுக்கெல்லாம் மரியதை தர முடியாது..மரியாதை தெரிஞ்சவனுக்கு தான் மரியாதை தர முடியும்..”

என்று அவன் எகிற அனைவரின் முன்பும் ஒரு பொடியன் தன்னை பேசியது அவருக்கு அவமானமாய் போய்விட்டது.



மேலும் வார்த்தைகள் தடிக்க “டேய்..” அகங்காரமாய் கத்தியபடி தயாவும் மதியும் உதய்யின் சட்டையை பிடிக்க பதிலுக்கு அவன் மதியை அடிக்க என்று அந்த இடமே பெரும் கலவரமானது.



நடப்பவற்றை நம்பமுடியாமல் மூச்சு முட்ட உடல் தடதடக்க வெண்பா நின்றாள்.

தன் அப்பா - அம்மாவை பேசிய விசயம் அவள் காதையும் வந்தடைய ச்சை என்ன மனுஷங்க இவங்க என்று அருவெறுத்து போனாள்.அத்தோடு தன் தந்தை, உறவினர்கள் பேசியது தப்பே இல்லை என்பது போல் வாதிடும் கணவன் மீது வெறுப்பு மண்ட தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு தான் கொடுத்த மரியாதை இது தானா என்று அவள் மனம் வேதனையில் வெதும்பியது.



மற்றவர்கள் அவர்களை பிரித்துவிட போராடினர்.உறவினர் என்பதெல்லாம் மறந்து கண்டமேனிக்கு ஆழிக்கண்ணன் பேச பதிலுக்கு செந்தில் பேச என்று வார்த்தைகள் நீண்டுக்கொண்டே போக அடித்துக் கொள்பவர்களை நிறுத்தி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.



“உங்களை நம்பி பொண்ணை கொடுத்து என் பிள்ளை வாழ்க்கையை பாழாக்கி விட்டேனே..”

என்று துடித்த செந்தில் ஒரு முடிவிற்கு வந்தவராய்,



“வெண்பா..இவன் உனக்கு வேண்டாம் ம்மா..இவனுங்க எல்லாம் மனுஷங்களே இல்ல..இவனுங்களை நம்பி உன்னை விட்டுவிட்டு போக முடியாது..அப்பாவோட வந்திடு ராஜாத்தி..என் மகள் என் வீட்டுல ராணியாகவே இருந்துட்டு போகட்டும்..”

என்று அவர் பேச மதிவாணன்,



“உங்க மகன்றது எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்ததோடு முடிஞ்சு போச்சு..இவ என் பொண்டாட்டி மட்டும் தான்..அவள் எங்கேயும் வரமாட்டாள்..நீங்க இடத்தை காலி பண்ணுங்க..”

என்றான் அவன் கர்வமாய்..



“நீ என்ன சொல்றது..அதை என் மக சொல்லட்டும்..வெண்பா...அப்பா சொல்றேன்..இவன் உனக்கு வேண்டாம்..கண்ணு நம்ம வீட்டுக்கு வந்திடுடா..”



என்று அவர் கெஞ்ச வெண்பா கண்களில் கண்ணீர் வற்றாத அருவியாய் பொழிய எந்த பக்கம் நிற்பது என்று தெரியாமல் திண்டாடினாள்.அவளுக்கு இரண்டு குடும்பமும் முக்கியம் அல்லவா..!!

அவள் அழுகையோடு நின்றது எதுவும் மதியின் மதியில் ஏறவில்லை.தன் மனைவி தனக்கு மட்டும் தான் வேண்டும் என்ற அகங்காரம் பிறக்க எங்கே பெற்றோரின் கண்ணீரை பார்த்து அவர்களோடு சென்று விடுவாளோ என்ற பயமும் அடிமனதில் தோன்ற அவளருகில் சென்று,



“இங்க பாரு வெண்பா..உன் அப்பா வீடு வேணும் போகணும்னு நினைச்சா நீ மட்டும் தான் போக முடியும்..நிலாவை இத்தோட மறந்திடு..அவ எனக்கு மட்டும் தான் பொண்ணா இருப்பா..”

என்று மிரட்டலாய் கூற அது வெண்பாவை உசுப்பிவிட்டது.



“அதை நீங்க என்ன சொல்றது..என் மகளை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்..கோர்டில் அதை பார்த்துபோம்..உங்களுக்கு உங்க அப்பா முக்கியம்னா எனக்கு என் அப்பா முக்கியம்..”



என்றாள் அவளும் ஆத்திரம் நிறைந்த குரலில்..தன்னை விட்டு போகமாட்டாள் என்ற கர்வம் சுக்கு நூறாய் உடைந்தது.அவளை விடகூடாது என்ற பிடிவாதம் அவனுள் அசுரனாய் ஊந்த,



“கோர்ட்டுக்கு போ நானும் சொல்லுவேன்..என் பொண்டாட்டி ஒரு பைத்தியக்காரினு...ஆதாரம் கூட என்னுட்ட இருக்குன்னு..அப்புறம் எந்த கோர்ட்டு நிலாவை உன்னிடம் இருக்க சொல்லும்னு நானும் பார்க்கிறேன்..”
என்று யோசிக்காமல் அவன் கூறியது அவளை கொன்றுபோட்டது.மதியிடம் இதனை அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.தன்னுடைய பலகீனத்தை கொண்டு தன்னை அவன் வீழ்த்த நினைத்தது அவளை மொத்தமாய் சாய்த்துவிட்டது.பெண்களின் சில நுண்ணிய உணர்வுகளை எத்தனை காலம் ஆனாலும் ஆண்களால் புரிந்துக் கொள்ளவே முடிவதில்லை.அந்த விஷயத்தில் வெண்பா மிகவும் சென்சிட்டிவ்.அதனை பற்றி அவளுக்கு பேசக்கூட பிடிக்காது.ஆனால் தன் கணவனிடம் எதையும் மறைக்க கூடாது என்ற நேர்மையான மனதோடு அவள் அவனோடு மட்டும் பகீர்ந்துக் கொண்ட தன் உண்மையை சூழ்நிலையில் பயன்படுத்திக் கொண்டதில் அவள் மனதில் பலபடிகள் கீழே போய்விட்டான் மதிவாணன்.

அவன் மீது எத்தனை தூரம் வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் ஒரு நொடியில் மறைந்துவிட்டதை போல் திகைத்து நின்றாள்.கண்களில் கண்ணீர் நின்றுபோனது.முகம் உணர்ச்சிகள் தொலைத்து உயிர் பிரிந்த ஜடம் தான் ஆனாள்.



வற்புறுத்தி அழைத்த பெற்றவர்களை அவள் மறுத்திவிட்டு தன் குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லிவிட உதய் அவளை அற்பபுழுவாய் பார்த்தான்.அவளுக்காக செந்தில்நாதன் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை.அவளை குணப்படுத்தி படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுக்கும் வரை அவர் உள்ளங்கையில் வைத்து தாங்கியிருக்க அவரை இப்படி அவமானப்படுத்தி விட்டாளே என்று வெறுத்துபோனவன்,



“இன்னையோட உனக்கும் எங்களுக்கும் உள்ள பந்தம் முடிஞ்சு போச்சு..பொறந்த வீடுனு எங்களை தேடி வந்துடாத..நாங்களும் ஜென்மத்துக்கு உன் வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்..”

என்று அவளை வார்த்தையாலே கிழித்து விட்டு தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.



அதன்பின் வெண்பாவிடம் மௌனம்!மௌனம்!மௌனம மட்டுமே தான்..!!நிலாவை தவிர அங்கே யாரையும் அவள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.சில நாளில் அவள் கோபம் தணிந்துவிடும் என்று அவன் எதிர்பார்க்க அந்தோ பரிதாபம்..மாதங்கள் கடந்தது தான் மிச்சம்..அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.



அவள் திருமணமாகி வந்த மூன்று வருடங்களில் அந்த வீட்டின் இன்றியமையாத ஒருவளாய் மாறியிருக்க அவளின் ஒதுக்கம் அனைவரையும் பாதித்தது ஆழிக்கண்ணன் உட்பட..!!



மதியால் தாங்கவே முடியவில்லை.சண்டையிட்டு,மிரட்டி,கெஞ்சி என்று என்னென்னவோ செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவளிடம் எந்த பிரதிபலனும் இல்லை.



அவளை சமாதானம் செய்ய முனைந்து நாகஜோதியும் ஆழிக்கண்ணனும் ஓய்ந்து போனர்.அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.



நாட்கள் செல்ல செல்ல எங்கே தவறினோம் என்று சுய அலசலில் இருந்து தன் தவற்றை உணர்ந்துக் கொண்டவன் குற்றவுணர்வில் வெதும்பினான்.



யோசித்து பார்த்தால் அன்று என்ன நடந்து இருந்தாலும் நிச்சயம் தன்னை நீங்க வெண்பா விரும்பமாட்டாள்.அவள் மீது தான் நம்பிக்கையோடு இல்லாமல் அவளை மிரட்டி இருக்க வைத்தது எவ்வளவு கேவலம் என்று தன்னையே வெறுத்தான்.

அவள் பேசி சண்டையிட்டு இருந்தால் கூட குறைந்திருக்குமோ..அவளின் மௌனம் அவனை கொல்லாமல் கொல்ல அரைமனிதன் ஆனான்.அந்த வீட்டில் நிலாவை தவிர யாரிடமும் சிரிப்பு என்பதே இல்லை.அனைவரும் ஏதோ இயந்திரங்களாய் இயங்கிவர நாகஜோதி மிகவும் ஒடிந்து போனார்.மன வேதனை உடலையும் பாதிக்க சில நாட்களில் படுக்கையில் விழுந்தார்.அது தான் வெண்பாவை சற்று அசைத்தது.அவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை யாரும் கூறாமலே தானே எடுத்து செய்ய வெண்பாவின் குணத்தின் முன்னால் குறுகி போனார் ஆழிக்கண்ணன்.



நாளுக்கு நாள் மோசமாக மரணப்படுக்கையில் நாகஜோதி வெண்பாவின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க கெஞ்சியதும் முற்றிலும் மனம் தளர்ந்தாள்.



“இந்த குடும்பத்தை சிதைஞ்சி போக விட்டுடாத தாயி..எல்லாருக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்கறேன் ம்மா..எதுவும் குடும்பம் ஆகும் முன்னமே விட்டு போறேன்..என் புள்ளைங்கள பார்த்துக்க தாயி..”

என்று பேசியது தான் அவர் கடைசி வார்த்தை..அத்தோடு தன் உயிரை அவர் விட்டிருந்தார்.அவரது வார்த்தை அவள் மனதில் ஆழமாய் இறங்க அவர் ஒருவருக்காகவே அனைவரின் மீது இழுத்து பிடித்து இருந்த கோபங்களை விட்டிருந்தாள்.அவர் கண்ணீரும் மரணமும் அவளை புரட்டிப்போட்டது.நாகஜோதி மறைவிற்கு பின்னால் ஆழிக்கண்ணன் மொத்தமாய் ஒடுங்கி போனார்.அவருக்கு இருந்த ஆணவம், கர்வம் எல்லாம் காணாமல் போனது.அனைவரும் இடிந்து போய்விட அனைவரையும் தேற்றும் பொறுப்பை தனதாக்கி கொண்டாள் வெண்பா.அவரின் இடத்தில் இருந்து அவர்கள் குடும்ப பொறுப்பை ஏற்று தயா,ஜெகன்,உதயாவையும் அன்னையின் இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டாள்.இவ்வாறு குடும்பத்தோடு சகஜமாகி விட்டாலும் கணவன் மீதிருந்த கோபம் மட்டும் குறையவில்லை.அவளே நினைத்தாலும் அவனோடு ஒன்றமுடியவில்லை.அவனை கண்டாலே விலகி போகதான் தோன்றியது.மனைவியாய் கடமைகளை அவனுக்கு செய்தாலும் மனதால் அவனை விட்டு வெகுதூரம் பிரிந்து இருந்தாள்.



மதியோ கடலில் சிக்கிய சிறு படகாய் தன் கரையை சேரும் வழி தெரியாது அந்த ஆழ்கடலின் தனிமையில் தவித்து நின்றான்.
 
Last edited:
இந்த மதிக்கு ஏன் இப்படி
புத்தி போச்சு
இதை எல்லாம் எப்படி
சரி செய்ய
 
இந்த மதிக்கு ஏன் இப்படி
புத்தி போச்சு
இதை எல்லாம் எப்படி
சரி செய்ய
ஹம்ம்..?? நானும் அதே யோசனையில்..
 
Top