Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் -10.1

Advertisement

Sameera?

Well-known member
Member
ஃப்ளாஸ்பேக் மொத்தமும் ஒரே அத்தியாயதில் கொடுக்க நினைச்சது ரொம்ப பெரிசா போயிடுச்சு மக்களே..செகெண்ட் பார்ட் கொஞ்ச நேரத்தில் அப்லோட் பண்றேன்..??? மறக்காமல் உங்கள் கருத்துகளை ஷேர் பண்ணுங்க..நன்றி..❤

அத்தியாயம் 10.1

பெண் பார்த்துவிட்டு வந்தபின் ஒரு பிரளயமே வெடித்தது வீட்டில்..ஏனெனில் அங்கே வெண்பாவின் தந்தை செந்தில்நாதனிடம் நேரடியாகவே தன் சம்மதத்தை தெரிவித்து இருந்தான் மதிவாணன்.அப்பொழுது விட்டால் தந்தை இந்த சம்மந்ததை கலைத்து விடுவார் என்று தெரியும்..



அதனால் வீடு வந்ததும் ஆழிக்கண்ணன் வானுக்கும் பூமிக்கும் குதிக்க மதியும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.தனக்கு திருமணம் என்றால் அது வெண்பாவுடன் மட்டும் தான் என்று ஸ்திரமாய் சொல்லி நிற்க வீடு களேபரம் ஆனதில் ஆச்சரியம் இல்லை.



இதற்கே வீட்டில் இவ்வளவு போராட்டமாக இருக்க அன்று வெண்பா சொன்ன விசயம் கடுகளவு கூட வீட்டிற்கு தெரியக்கூடாது என்றும் எண்ணிக்கொண்டான்.



அது என்னவெனில் வெண்பா டிப்ரெஸன் காரணமாக ஒருவருடம் டீர்ட்மெண்ட் எடுத்துள்ளாள்.



பள்ளி பருவத்தில் நன்றாக படிக்கும் மாணவி வெண்பா.மதிப்பெண் மேல் பித்துக் கொண்டு சுற்றும் பிள்ளைகளில் ஒருவளாய் இயந்திரமாய் படிப்பு படிப்பு என்று பத்தாம் வகுப்பில் திரிய வீட்டிலும் அவள் படிப்பில் உள்ள ஆர்வம் என்று வியந்தனரே தவிர அது வித்தியாசமாய் தெரியவில்லை.ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் தான் பிரச்சனை வெடித்தது.ஆம்..!! அவள் எதிர்பார்த்தைவிட மிக மிக குறைவாக தான் அவள் மதிப்பெண் பெற்றிருந்தாள்.பெற்றோரில் தொடங்கி ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் அது அதிர்ச்சி தான் இருந்தாலும் யாரும் அவளை ஒரு வார்த்தை அதை குறித்து கேட்கவில்லை.ஆனாலும் வெண்பாவால் அதனை ஏற்கவே முடியவில்லை.மனதளவில் மிகவும் உடைந்துபோனாள்.அனைவரும் இலக்காய் கொண்டு ஓடும் அந்த மதிப்பெண்ணிற்கு வருங்காலத்தில் கால்காசு கூட மதிப்பில்லை என்ற உண்மை அந்த பாவையின் மனதிற்கு புரியவில்லை.



அதிலேயே மனம் உழன்று ஒருக்கட்டத்தில் தன் சுயநினைவு மறந்தவளாய் இன்னமும் முடிந்து போன பரீட்சையிக்கே விழுந்து விழுந்து தயாராக பயந்துபோனர் அவள் குடும்பத்தினர்.



அதன்பின் அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று தொடர் கவுன்ஸிலிங் மூலம் அவளை முழுதாக குணப்படுத்த ஒரு வருடம் ஆனது.



எதையும் மறைக்காமல் அனைத்தையும் மதியிடம் கூறியவள்,



“நீங்க என்னை மேரெஜ் பண்ணிக்கிறதா இருந்தால் என்னை பற்றி எல்லாமும் உங்களுக்கு முன்னமே தெரியணும்னு நினைக்கிறேன்..இதோட தாக்கம் இப்பவரை எனக்கு இல்லை.வருங்காலம் என்ன வைச்சிருக்குனு தெரியலை..நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி..”



என்று அவள் சொல்லியிருக்க அவளுக்காக வருந்தினாலும் அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.கடந்து வந்தபின் அதை கொண்டு கவலை பட அவசியம் இல்லை என்று கருதியவன் மீண்டும் இதனை யாரிடமும் சொல்லவும் விரும்பவில்லை.தற்போது ஆழிக்கண்ணனின் கோபத்தில் சிறு காரணம் கிடைத்தாலும் அவர் ஊதி பெரியதாக்கி விடுவார் என்பதால் அவருக்கு தெரியவே கூடாது என்பதை பார்த்துக் கொண்டான்.வெண்பாவை பார்த்ததுமே அவள் மீது கொண்ட ஈர்ப்பு பேசிய சில நிமிடங்களில் நேசமாய் மாற அவள் மட்டுமே தனக்கு மணையாளி என்பதில் உறுதியாய் இருந்தான்.



மதி பெற்றோர் சொல் தட்டாத பிள்ளை..எனவே முதல் முறை அவன் பிடிவாதம் பிடிக்கும்போது அவனை அசைக்கமுடியவில்லை.இறுதியில் இவர்கள் தான் இறங்கி வரவேண்டியது ஆகிற்று.அதிலே வெண்பாவின் குடும்பத்தின் மீது ஒரு பிடித்தமின்மை ஆழிக்கண்ணன் மனதில் ஆழமாய் பதிந்தது.முதல் கோணல் முற்றிலும் கோணல் அல்லவா..!?



பிடிக்கவில்லை என்றாலும் மகனுக்காய் மேற்கொண்டு ஆகவேண்டியதை அவர் கவனிக்க தொடங்கினார்.அவர் ஒத்துக் கொண்டாலும் எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பயம் மதிவாணனின் மனதிம் இருந்துக்கொண்டே தான் இருக்க திருமணம் முடியும் வரையிலும் அவன் ஒரு பதட்டமான மனநிலையில் தான் இருந்தான்.



எல்லாம் நல்லபடியாக நடந்து மணமேடையில் வந்து நிற்கும் போது தான் அவனால் ஆசுவாசமே அடைய முடிந்தது.



கல்யாணம் அன்று கூட ஆழிக்கண்ணன் ஒரு இறுக்கமான முகத்தோடும் வெண்பா வீட்டாரிடம் சற்று அலட்சியத்தோடும் வீம்போடுமே வளையவர செந்திலும் சரண்யாவும் அன்றைய வேலைகளில் அதனை கவனிக்கவில்லை.ஆனால் பனிரெண்டாவது படிக்கும் பாலகன் உதய்யிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.



வெண்பாவிடமே சென்று,

“என்ன க்கா..இந்த மாமாவோட அப்பா தலைல ரெண்டு கொம்பு வைச்சா மாதிரி ரொம்ப பண்றாரு..எனக்கு பிடிக்கவேயில்ல..”

என்று சொல்லவும் அவள் தான்,

“ஷ்..பெரியவங்கள அப்படியெல்லாம் பேசாத உதய்..”

என்று அவனை கண்டித்தாள்.கல்யாண வைபோகம் சுபிக்‌ஷமாய் நிறைவு பெற தான் நினைத்தது நிறைவேறிய களிப்பு இருந்தாலும் பெற்றோர்களின் வாட்டம் அவனை நெருடியது.அவர்கள் சொல்லி அவன் மறுத்து பேசியதே இல்லை.இன்று இவ்வளவு பெரிய விசயத்தை அவர்கள் விருப்பம் இல்லாமல் செய்ய வைத்தது அவனுள் குற்றவுணர்வை விதைக்க அவர்கள் விருப்பத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க நினைத்தான்.



மருமகளாய் மதியின் வீட்டில் அடியெடுத்து வைத்த இரண்டு மூன்று நாட்களிலே அவளுக்கு சற்று தலை சுத்திதான் போனது.



அவள் வீட்டில் செந்தில், சரண்யாவிற்கு மட்டும் அல்ல உதய்யிக்குகூட அவள் ரொம்ப செல்லம் தான்.அவள் கஷ்டப்பட்டு மீண்டு விட்டதாலோ என்னவோ அவளை இனி எந்த துயரமும் அண்டகூடாது என்று தாங்க இங்கே எல்லாம் தலைகீழ்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்..!



பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டில் இருக்கும் வரை தான் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ்வது..திருமணம் என்ற ஒன்று ஆகிவிட்டால் அவள் வாழ்க்கையே அடுத்தவரை சுற்றி தான்...அன்றும் சரி இன்றும் சரி ஒரு பெண்ணின் மனைத்தக்க மாண்பாக இதனை தான் பாவிக்கின்றனர்.இதற்கு வெண்பாவும் விதிவிலக்கு அல்ல..



ஆழிக்கண்ணன் வாயே திறக்க மாட்டார்.எந்நேரமும் விறைப்பாகவே திரிவார்.இவளாக சென்று எதாவது கேட்டாலும் ‘ம்ம்’ ‘ம்ஹூம்..’ மட்டுமே பதில்..!!



அடுத்து நாகஜோதி..வீட்டை பத்தியும் அவர்கள் வழக்கத்தை பத்தியும் பக்கம் பக்கமாய் லெக்சர் எடுத்தாலும் மற்றைய நேரங்களில் அதிகம் பேசமாட்டார்.அவருக்கு மகன் மீது தான் கோபம்..வெண்பாமீது அல்ல..ஆனாலும் கணவனுக்கு பயந்து அவளிடம் அதிகம் வைத்துக் கொள்ளவில்லை.



இவர்களுக்கும் மேல் மதிவாணன்..அவள்மேல் அவன் வைத்துள்ள காதலையும் பாசத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தாள்.அவள் முகம் பார்த்தே மனதை படிக்கும் அன்பானவன் தான்.ஆனால் எல்லாம் அவர்கள் தனிமையில் இருக்கும்போது மட்டுமே..பெற்றவர்கள் முன் பேசக்கூட மிகவும் தயங்குவான்.அவனுக்கு பயம்..எங்கே நாம் வெண்பாவோடு ரொம்ப இழைந்தால் அவளால் தான் எல்லாம் என்று அவள்மீது பெற்றோர் வெறுப்பை வளர்த்துக் கொள்வார்களோ என்று..



எனவே அவளுக்கு அங்கே ஆறுதல் என்பது மதியின் தம்பிகளும் தங்கையும் தான்..கள்ளமில்லாத அன்போடு அவள் மீது பாசத்தை பொழியும் மூவரை காணும்போது அவளுக்கு உதய் நியாபகம் அதிகம் வரும்..அவனை பிரிந்து இருந்ததே இல்லை.அதிலும் உதயா வெண்பாவுடன் குறுகிய காலத்திலே மிகவும் பழக்கமாகி விட்டாள்.தனது பனிரெண்டு வருட அனுபவங்களையும் கொட்டி தீர்ப்பவள் போல் அனுதினமும் பேசிக்கொண்டு தன்னோடே திரியும் உதயாவை மிகவும் பிடித்துவிட்டது.



அப்படி ஒருநாள் மாலைவேளையில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்த மதியை பார்த்துக் கொண்டே வெண்பா அமைதியாய் அமர்ந்திருக்க,



“என்ன வெண்பா..என் முகத்தையே பார்க்கிற..எதாவது சொல்லணுமா..”



என்றான் அவள் மீது ஒருக்கண்ணும் கையில் வைத்திருந்த கோப்பில் ஒரு கண்ணுமாய்..



“ஆமா..சொல்லணும்..ஆனா சொல்லணுமானும் இருக்கு..”

என்று அவள் ராகம்போட,



“அதான் தொண்டை வரை வந்திடுச்சே..சொல்லிடு..”

என்றான் மென்னகையோடு..



“அது..அப்பா இன்னைக்கு பேசும்போது சொன்னாங்க..நாம கல்யாணம் முடிந்து எங்கேயும் போகவே இல்லல..அதான் அப்பா கேரளா போக டிக்கேட் போட்டு இருக்காங்களாம்..ஒன் வீக்கிற்கு...போயிட்டு வரலாமா..”

என்று ஆர்வம் மின்னும் குரலில் சொல்ல,



“யாரை கேட்டு டிக்கேட் போட்டாங்க..”

என்றான் பட்டென.. அவள் திகைத்து நோக்கவும் தன்னை மீட்டு கொண்டவனாய் அவள் புறம் திரும்பி,



“இங்க பாரு வெண்பா..இப்போ லீவ் எடுக்க முடியாதுடா..என் வொர்க் ஸிச்வேஷன் அப்படி..அத்தோட வீட்டில் எல்லாரும் சின்ன பசங்களா இருகாங்க..நாம மட்டும் போறது ஒரு மாதிரி சங்கடமாய் இருக்கு..உனக்கு புரியுதுல..”

என்றான் தவிப்பாய்..மனதில் விரவிய ஏமாற்றத்தை சமாளித்துக் கொண்டு அவன் தவிப்பை போக்க முனைப்பவளாய் அவன் விரல்களோடு விரல் கோர்த்தவள்,



“வேணாம் என்றால் பரவாயில்லை விடுங்க..நான் அப்பாவிடம் பேசிக்கிறேன்..”

என்று புன்னகைக்க முயல குனிந்து சட்டென்று அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்,



“காலம் விரவி கிடக்கு..இப்போ இல்லேனா என்ன..இன்னோர் தரம் நானே ஏற்பாடு பண்றேன்..அத்தோட ஹனிமூன் கொண்டாட வெளியூர் தான் போகணும்னு எதாவது இருக்கா என்ன..”



நெற்றியோடு நெற்றி முட்டி மெல்லிய குரலில் முணுமுணுக்க தேகம் சிலிர்த்தாள் பெண்ணவள்.அதன் பின் என்ன பேசினோம்..எங்கே இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து போயினர் அந்த புதுமணத்தம்பதியர்..



நாட்கள் தெளிந்த நீரோடையாய் செல்ல மணவாழ்க்கையிக்கு சில நாளிலே பழகி கொண்டாள் வெண்பா.மாமனாரோ மாமியாரோ இல்லை கணவனோ ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் அவள் ஆராய்ச்சியும் செய்யவில்லை.குறையாகவும் எண்ணவில்லை.இவர்கள் இப்படி தான் என்று இலகுவாய் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப தன்னை பொருத்திக் கொண்டாள்.ஆனால் திருமணம் முடிந்து மறுவீட்டிற்காக அம்மா வீடு சென்றது தான் அதன் பின் அங்கே செல்லவே இல்லை.மதி காரணம் சொல்லி தள்ளிபோட அதன்பின் கேட்பதையே விட்டுவிட்டாள்.அஃது மனதில் வருத்தமாய் இருந்தாலும் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.



இந்நிலையில் தான் வெண்பா கருவுற்றாள்.
 
Last edited:
Top