Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 5

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 5

'என்னடி சொல்றான் இவன். பாத்து மூணு மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள டேட்ங்கறான். இவன் படிக்கறதுக்கு கண்டம் தாண்டி வந்தானா, இல்ல... கண்டமாயித் தான் போகப் போறான் போல.' என்று கிசுகிசுத்தாள் கோபிகா.
'சும்மா இருடி ஒரு நிமிஷம்.' என்ற சம்யுக்தா ஆங்கிலத்தில் கேப்ரியலிடம் கேட்டாள்.
'டேட்னா?'
அவன் ஷாக் ஆவது அவனது தலை அசைப்பிலயும் ஆ என்ற உதடு குவிப்பிலயும் தெரிந்தது. டென்சிலைப் பார்த்து விட்டு தொடர்ந்தான்.
'எனக்கு ஒங்க கூட ப்ரெண்டா இருக்கணும்னு தோணுது. ஒங்க கூட பழகினா தான ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க முடியுமான்னு முடிவெடுக்க முடியும்?'
சம்யுக்தா தெளிவாகக் கேட்டாள்.
'ப்ரெண்ட்ஷிப் மீன்ஸ்?'
அவனுக்கு புரிவது போல் இருந்தது.
'ஹேய். ஐ தின்க் யூ மிஸ்அண்டர்ஸ்டாண்ட். நான் சொன்னது ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப். நாங்க இந்த ஊரு பாத்ததில்ல. நீங்க இந்த ஊரு மாதிரி தெரியுது. என்ன தான் கூகுள் இருந்தாலும் லோக்கல் பீப்பில் தான் நல்லா ஏரியா தெரிஞ்சவங்க. தட்ஸ் வை...' என்றான் கேப்ரியல்.
சம்யுக்தா தொடர்ந்தாள்.
'ஆனா இது கொஞ்சம் ஓவரா தெரியுது. பாத்த மூணு மணி நேரத்துல கேர்ல்ஸ் கூட ப்ரெண்ட்ஸாகுறதுங்கறது...'
'ஏன் ப்ரெண்ட்ஸ்ல பாய்ஸ் என்ன கேர்ஸ் என்ன?' என்ற அவன் கேள்வி அவள் பொட்டில் அறைந்தது.
ஆமாம்ல. இருக்றது ட்வண்டி பர்ஸ்ட் செஞ்சுரி. கைல உலகமே இருக்கு. ஆனாலும் சில விஷயங்கள் மாற வருஷம் ஆகும் போல. இதே இத ஒரு நீக்ரோ பொண்ணு கேட் ருந்தா உட்கார வச்சு செல்ஃபி எடுத்து லஞ்ச் வாங்கிக் கொடுத்து நம்ம கலாச்சாரம் பத்தி மணிக் கணக்கா பிளேடு போட்ருக்க மாட்டோமா? சம்யுக்தா ஒரு நிமிடம் வெட்கத்தால் தலை குனிந்தாள். பின்னர் கேப்ரியலிடம் திரும்பினாள்.
'சரி. ஏன் பர்ஸ்ட் டே அன்னிக்கே...? கொஞ்ச நாள் பொறுத்து இந்த மாதிரி கேட்ருக்கலாமே?'
'வாழ்க்கை குறுகியது. வை ஷுட் வி வேஸ்ட் டைம்?'
சம்யுக்தா யோசித்தாள்.
'இந்த வீக் என்ட் எங்க வீட்டுக்கு போலாம்' என்றாள்.
'ஹுர்ரே' என்றார்கள் கேப்ரியலும், டென்சிலும் ஒரே குரலில்.
பின்னர் சிறிது நேரம் அவர்கள் நைஜீரியாவில் அவர்கள் வாழும் இடம் பற்றி இங்கு படிக்க வந்தது பற்றி என்று பேச சம்பதா வந்தாள்.
சம்பதாவை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள் சம்யுக்தா.
'வாவ் ட்வின்ஸ்!'
சிறிது நேரம் பேசிக்கொண்டே கேண்டீனில் சூடாய் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வாங்கி சாப்பிட்டார்கள் நால்வரும்.
சம்யுக்தா சம்பதாவைப் பார்த்து கேட்டாள்.
'ஒன் க்ளாஸ் எப்படி இருந்துது?'
'ம்.. புரபஸர் எல்லாம் சுத்த தமிழ்லேயே பேசுறாங்க. நமக்கு தான் இங்கிலீஷ் கலக்காம பேச முடியல.'
'அப்புறம்... தனியா வந்திருக்க? நம்ம கூட படிச்சவங்க தெரிஞ்சவங்க யாரும் ஒன் க்ளாஸ்ல இல்லயா?'
அவள் இல்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினாள்.
சாப்பிட்டு முடித்து டென்சில், கேப்ரியேலின் வாட்ஸப் நம்பர்களை வாங்கிக் கொண்டார்கள்.
சம்யுக்தா டென்சிலிடம் 'இன்னைக்கே புக்ஸ் வாங்கப் போலாமா?' என்றாள்.
அவன் , 'எங்கெ?' என்றான்.
அவள், 'இங்க பழைய புத்தக மார்க்கெட் இருக்கு. அங்க போலாம்.'
என்றாள்.
'ஏன் புது புக்காவே வாங்கலாமே?'
'இல்ல, பழைய புத்தகம்னா தான் விலை குறைவா இருக்கறதோட நல்ல எடிஷனா இருக்கும். சிலர் நோட்ஸ் கூட எடுத்து ஆங்காங்கே எழுதி இருப்பாங்க. அப்புறம் ஒங்களுக்கு ஒரு பழமொழி தெரியும் இல்லயா? புத்தகம், நண்பன், வைன் இந்த மூன்றிலும் பழசு தான் சிறந்தது.'
கை தட்டினார்கள் டென்சிலும், கேப்ரியேலும்.
'இண்டியன்ஸ் புத்திசாலிகள்.'
பேசிக்கொண்டே பிரிந்து வகுப்புகளுக்கு சென்றார்கள்.
சாயந்திரம் வகுப்பு முடிந்த பிறகு என்னென்ன புக்ஸ் வாங்க வேண்டும் என்று நோட் பண்ணிக் கொண்டு சம்யுக்தா-சம்பதா ஒரு ஸ்கூட்டரிலும், டென்சில்-கேப்ரியேல் ஒரு பைக்கிலும் பழைய மார்க்கெட்டுக்கு போனார்கள்.
பல கடைகள் ஒரு அரங்கில் இருந்தன. ஒவ்வொரு கடைக்கும் ஒரு நம்பர் வழங்கப்பட்டிருந்தது. அரங்கின் வாசலில் வண்டியை நிறுத்தியதும் சில இஸ்லாமிய கடைக்காரர்கள், 'என்ன வேணும், மேடம்?' 'வாட் டூ யூ வாண்ட் டு பை சார்?' என்று இருவரையும் மொய்த்துக் கொண்டார்கள்.
'தமிழ் இலக்கிய புக்ஸ் கொஞ்சம், ஆங்கில இலக்கிய புக்ஸ் கொஞ்சம் வாங்கணும்' என்றாள் சம்பதா.
உடனே இரு இஸ்லாமியர்கள் 'எங்க கூட வாங்க' என்று முன்னே நடக்க, அவர்கள் பின் தொடர்ந்தனர்.
ஆங்காங்கே கடைகள் பழைய புத்தகங்களால் பிதுங்கி வழிந்தன. புது புத்தகத்திற்கு ஒரு தனிப்பட்ட மணம் இருப்பது போல் பழைய புத்தகத்திற்கும் ஒரு மணம் இருக்கிறது. அதை முகர்ந்துகொண்டே அவர்களின் பின்னால் சென்றார்கள். அவர்களது கடை வந்ததும் சம்பதா இன்னொரு கடைக்கு செல்ல, இவர்கள் மூவரும் ஒரு கடையில் நின்றனர். வெள்ளை குல்லா தரித்த அந்த வாலிபன் 'வன் மினிட்' என்று சொல்லியவாறு கடையில் நுழைந்தான். வாசல் முழுவதும் ஆங்கில புத்தகங்கள் ஒவ்வொரு வரிசையாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புத்தகங்களின் நடுவே அவனது கடைக்குள் ஒத்தையடிப்பாதை போல் இருந்த தடத்தில் நடந்து அவன் சென்று ஒரு கட்டு புத்தகங்களை எடுத்து வந்தான். அதைப் பிரித்து அவர்கள் முன் வைத்தான்.
'இது எல்லாம் ஆங்கில இலக்கிய புக்ஸ் தான். பாருங்க.'
சம்யுக்தாவும், டென்சிலும், கேப்ரியேலும் ஆளுக்கொரு புக்காய் எடுத்துப் பார்த்தார்கள். ஷேக்ஸ்பியர், மில்டன், ஷா, சார்லஸ் டிக்கன்ஸ், க்ரிடிசிஸம், பொயட்ரி என பல வகைகளும் இருந்தன. அவற்றில் அவர்களுக்கு ப்ரெஸ்க்ரைப் செய்யப்பட்டிருந்த புத்தகங்களைத் தேடி எடுத்தனர். சில புத்தகங்களில் ஒன்றிரண்டு காப்பிகளே இருந்தன. சம்யுக்தா ஒரு செட்டும் டென்சில் ஒரு செட்டும் எடுத்துக் கொண்டனர். இன்னொரு செட் வந்ததும் போன் பண்ணுவதாகச் சொன்ன கடைப் பையன் கேப்ரியேலின் போன் நம்பர் வாங்கிக் கொண்டான்.
அவன் இவர்கள் எடுத்த புத்தகங்களுக்கு மூவாயிரம் ரூபா கேட்க சம்யுக்தா பேரம் பேசினாள்.
'கொறைக்கலாம் முடியாது மேடம். இங்க பாருங்க' என்று அவனது மொபைலைக் காட்டினான்.
'டேவிட் காப்பர்ஃபீல்ட் இப்ப 350 மேடம். நான் ஒங்களுக்கு 200 ரூபா தான் போட்ருக்கேன். அதுவும் ஒங்களுக்கு கிடைச்ச புக் பிரிட்டன் பப்ளிகேஷன். இப்பல்லாம் அது கெடக்காது. ரேர் பீஸ்.'
சம்யுக்தா விடாப் பிடியாய் இரண்டாயிரத்து எழுநூறு குடுத்தாள். கேப்ரியேலின் அவளின் போன் நம்பருக்கு ஆயிரத்து முன்னூற்று அம்பது ஜீபே செய்தான்.
'இப்படி ஒடனே தரணுமா?'
'இல்ல. லைஃப் இஸ் ஷார்ட். கடன் வச்சுக்க கூடாது.' என்று அவன் நைஜீரிய ஆங்கிலத்தில் புருவத்தை உயர்த்திக் கொண்டே சொல்ல
இவனைப் போயி நாம தப்பா நெனச்சுட்டோமே என்று ஒரு நிமிடம் மனதில் நினைத்தாள் சம்யுக்தா. நாளை கோபிகாவைப் பார்த்ததும் இவ்வளவு கண்ணியமாய் நடந்து கொள்ளும் இவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.
அப்போது 'சம்யு' என்று கத்திக் கொண்டே கையில் ஒரு புத்தகத்துடன் ஓடி வந்தாள் சம்பதா.

(தொடரும்)
 
  • Like
Reactions: Ums
Nice epi.
Yedi penne appadi ellam avasara pattu certificate kodukarathu,annugal ellam Nigeria va irruntha lum India va irruntha lum aanungale.wait seyu molae.
 
Top