Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 24

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 24

வெறி நாய்கள் கடித்துக் குதறிய முயல்குட்டியாய் சுருண்டு கிடந்திருந்த சம்யுக்தாவைக் கண்டதும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான் காப்ரியேல். அவளை நெருங்கி மடியில் அவள் தலையை வைத்தான். வாயில் இருந்த துப்பட்டாவை உருவினான். கடவுளே! இவ்ளோ பெரிய துப்பட்டாவை இப்படி திணிச்சிருக்காங்களே! குடல் வர போயிருக்கும் போல இருக்கே!
முழுத் துப்பட்டாவயும் உருவியதும் ஒரு இருமு இருமினாள் சம்யுக்தா. ஆனால் நினைவு திரும்ப வில்லை. அப்பாடா! உயிர் இருக்கிறது. மொபைல் எடுத்து 108க்கு அழைக்க முயன்றான். அப்போது தான் நினைவு வந்தது சம்யுக்தா இருக்கும் கோலம். சட் என்று தன் சட்டையை கழட்டினான். சம்யுக்தாவிற்கு மாட்டி விட்டான். பட்டன்களை மாட்டி விட்டான். சம்யுக்தாவின் மெத் என்ற ஸ்பரிசம் அவனை மேலும் அழச் செய்தது. பூ மாதிரி இருக்கும் பெண். இந்த குரங்குகளின் கைகளில் அகப்பட்டு விட்டதே!
மேல் பாகம் மறைத்தாயிற்று. வாழைத் தண்டு தொடைகள் ரத்த சீற்றலுடன் தெரியவே தன் பாண்டை கழட்டினான். சம்யுக்தாவின் கால் வழியாக அதை மாட்டி ஜிப் போடும் போது தான் அந்த அயோக்கியர்கள் பண்ணிய காரியம் கைகள் உணர்ந்தன. ஆஆஆஅ என்று இயலாமையால் கத்தினான். ஜிப் போடாமல் விட்டு விட்டான்.
வெறும் ஜட்டியுடன் எழுந்து மரத்தின் தண்டில் பல முறை தன் தலையை முட்டினான்.
கார், டூ வீலர் வரும் ஓசை கேட்டது.
'சம்யு... கேபி...'
கோபிகா, சம்பதா மற்றும் நண்பர்களின் குரல் கேட்கவே தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்தான். இருட்டில் அந்த வெளிச்சத்தைப் பார்த்து வந்த நண்பர்கள் கையில் இருந்த டார்ச் லைட்டை உயிர்ப்பித்தனர். சம்யுக்தா இருந்த கோலத்தையும், ஜட்டியுடன் நின்றிருக்கும் காப்ரியேலயும் பார்த்தனர். சம்பதா அலறியபடி சம்யுக்தாவின் அருகில் நெருங்கி கன்னத்தில் தட்டினாள்.
'சம்யு..சம்யு.. எழுந்திருடி..'
கோபிகா வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் மேல் தெளித்தாள். லேசாக முக அசைவு தெரிந்தும் கண்களைத் திறக்க வில்லை சம்யுக்தா.
நண்பர்களில் ஒருவன் 108ஐ அழைத்து இடம் சொல்லவும் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஸ்ட்ரெச்சரில் சம்யுக்தா எடுத்துச் செல்லப்பட சம்பதாவும், கோபிகாவும் உடன் ஏறிக் கொண்டனர். இன்னொரு ஸ்ட் ரெச்சரில் காப்ரியேல் கிடத்தப் பட்டான். இடுப்பு வரை அவன் மீது வெள்ளைப் போர்வையை மூடினர் சிப்பந்திகள். ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்கு பறந்தது. கார்களில் நண்பர்கள் பின் தொடர்ந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்ட காப்ரியேலும் சம்யுக்தாவும் உடனடி சிகிச்சைக்கு ஆட்பட்டனர். இரும்பு ராடு ஆழப் பதியாமல் சதைப் பகுதியை மட்டும் கொஞ்சம் எடுத்துச் சென்றதால் காப்ரியேலுக்கு தையல் போடும் வேலை நடந்தது.
சம்யுக்தாவைப் பரிசோதனை செய்த பெண் டாக்டர் வாய் திறந்து அந்த பாவிகளை 'ஒரு பொண்ண இப்படியா பொருள் மாதிரி யூஸ் பண்றது! காமப் பிசாசுங்க. அந்த இடம் அவிஞ்சே சாவப் போறாங்க.' என்று தன் டிக்னிடியை மறந்து கத்தினார்.
அம்மா வாயில் சேலையை திணித்துக் கொண்டு ஐசியூவின் கதவையே கண்களில் நீர் ஒழுக பார்த்துக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் தினசரிகள் தமிழகத்தில் ஓடும் பஸ்ஸில் இளம்பெண் கூட்டு பாலியல் பலத்காரம் என்ற தலைப்போடு சம்யுக்தா காப்ரியெல் பெயர் போடாமல் செய்தியை விலாவாரியாக விவரித்து மக்களை உச் கொட்ட வைத்தது.
யூட்யூபர்ஸில் இருந்து வாட்ஸப் ட்விட்டர் வரை தமிழக நிர்பயா என்று சம்யுக்தா சம்பவம் அலசப்பட்டது. அறிவாளிகள் டிவி சேனலில் சாவகாசமாய் சேரில் உட்கார்ந்து சம்யுக்தா ராத்திரி நேரம் அங்கே போயிருக்கக் கூடாது என்றும் போனால் என்ன தப்பு என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் கண் விழித்த காப்ரியேலிடம் போலீஸ் நடந்ததைக் கேட்டது. அதற்கு அவன் 'சம்யுக்தா முழிச்சிட்டாளா?' என்றான். 'இல்லை' என போலீஸ் சொல்ல 'எனக்கு டயர்டா இருக்கு' என்று சொல்லியவாறு தூங்குவது போல் நடித்தான். டாக்டரும் அவனுக்கு பரிந்துரை பண்ண போலீஸ் 'மேலிடத்து ப்ரஷர்' என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
சம்பதா காப்ரியேலைப் பார்க்க வரவும் அவன் அவளிடம் 'சம்யு எப்படி இருக்கா? ஒங்கம்மாவ நான் பாக்கணும்.. ' என்றான்.
'சம்யு லைட்டா முழிச்சுப் பாத்துட்டு தூங்கிட்டா. நைட் எல்லாம் 'ஆ'நு வலியால முனகிட்டே இருந்தா. காலைல தான் முனகல் இல்லாம தூங்கறா. பாவிங்க. அவள சிதச்சி வச்சிருக்காங்க. இன்னும் மூணு மாசமாவது காயம் ஆற எடுக்குமாம்.' சம்பதா விசும்பத் துவங்கினாள்.
'நான் ஒங்கம்மாவ பாக்கணும் சம்பதா. கூட்டிட்டு வரியா?'
காப்ரியேலின் தலையைச் சுற்றிலும் வெள்ளைக் கட்டு போடப்பட்டிருந்தது.
'டென்சிலும் ஒன்ன பாக்கணும்னு சொன்னான்.'
'அவன் அப்புறம் வரட்டும். மொதல்ல உங்கம்மாவ அனுப்பு.'
'சரி'
கலங்கிய கண்களுடன் வெளியே வந்த சம்பதாவிடம் போலீஸ்காரர் கேட்டார்.
'என்ன சொல்றான் அந்த கருப்பன்?'
'ஏதாவது சாப்பிட வேணுமாம். அம்மாவ கொண்டு வர சொல்றாரு.'
'ம்.. சாப்பிட்டா தெம்பு வரும். கேள்வி கேட்கலாம். இல்லன்னா அவன் ஏதாவது உளற கேஸ் எங்கெங்கெயோ போயிரும்.'
அம்மா சம்யுக்தாவின் அருகில் உட்கார்ந்து கண்ணில் நீர் வழிய அவளயே பார்த்துக் கொண்டிருக்க சம்பதா வந்து காப்ரியேல் சொன்னதைச் சொன்னாள்.
'அவன நான் பாக்க விரும்பல. என் பொண்ணு இப்படி கெடக்க அவன் தான் காரணம்.'
'அம்மா! ஏம்மா இப்படி பேசற? தன் உயிர் பொழச்சாப் போதும்னு ரத்தம் கொட்ற நிலைமையிலும் அவன் மொபைல் யூஸ் பண்ணி ஆம்புலன்சுல போய் தன் உசுர காப்பாத்தி இருக்கலாம். அப்படி அவன் பண்ணி இருந்தா சம்யுக்தா இன்னைக்கு தான் கெடச்சிருப்பா. அந்த ரோட்டு புதர்ல அவளுக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. அவ இருந்த கோலத்த பாத்து தன் ட்ரெஸ்ஸ கழட்டி மாட்டி விட்டிருக்கான். இல்லன்னா நாங்க ப்ரண்ட்சோட வரப்ப அவள பாக்க சகிச்சிருக்காது. அவன இவ லவ் பண்ணத வேணா நீ எதுத்துக்கோ. ஆனா இப்ப அவன் என்னதான் சொல்றாங்கறத அட்லீஸ்ட் சம்யுவ காப்பாத்தினதுக்காகவாவது வந்து கேளு.'
அம்மாவிற்கு அவள் சொன்னதின் நியாயம் உரைக்க மெல்ல எழுந்தாள்.
'நானும் கூட வரேன். சம்யு கூட நர்ஸ் இருக்காங்க. வெளில போலீஸ் காப்ரியேல்ட்ட வாக்குமூலம் வாங்க காத்திருக்காங்க. நாம அவனுக்கு பிரெட் குடுக்கற மாதிரி போய் வரலாம்.'
மில்கா பிரெட் பாக்கெட்டையும் வாட்டர் பாட்டிலயும் எடுத்துக் கொண்ட சம்பதா தளர்ந்த நடையுடன் வரும் அம்மாவுடன் காப்ரியேல் ரூமுக்கு வந்தாள்.
அவர்களை எதிர்பார்த்திருந்த காப்ரியேல் மெல்ல எழ முயன்றான்.
'பரவால்ல கேபி. படு.'என்றாள் சம்பதா.
அவன் பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தாள் அம்மா.
சம்பதா பக்கத்தில் நின்று கொண்டாள்.
சட் என்று குனிந்து அம்மாவின் காலைத் தொட்டான் காப்ரியேல்.
'என்ன மன்னிச்சிருங்கம்மா. கூடவே இருந்தும் சம்யுக்தாவ அந்த விபத்துல இருந்து காப்பாத்த முடியல.'
அம்மா ஒன்றுமே பேசாமல் கண்ணீர் உகுத்தாள்.
'அம்மா! போலீஸ் வாக்குமூலத்துல கூட்டு பாலியல் பலாத்காரம்னு சொல்ல வேண்டாம்மா.'
இவன் என்ன சொல்கிறான் என்று அழுகையை நிறுத்தி அவனைப் பார்த்தாள் அம்மா.
'காப்ரியேல். பத்திரிகைல டிவிலல்லாம் நியூஸ் வந்திருச்சு.'
என்றாள் சம்பதா.
'ஆனா அதெல்லாம் கெஸ்ஸிங் தான சம்பதா. பாதிக்கப்பட்ட நாங்க ரெண்டு பேரும் சொல்றது தான எடுபடும்.'
'சரி. என்ன சொல்லப் போற?'
'நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ். படம் பாத்துட்டு பஸ் கிடைக்காததால பக்கத்துல இருக்கற ஆட்டோ ஸ்டாண்ட் வர இருட்டுல நடந்து போனோம். திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு பக்கத்துல இருந்த புதர்ல உடலுறவு வச்சுகிட்டோம். அந்த பக்கமா வந்த செந்நாய் கூட்டத்துல சிக்கி கடிபட்டோம். எப்படியோ போன் மூலமா ஆம்புலன்ச வரவழச்சு தப்பிச்சுட்டோம்னு சொல்லலாம்.'
அதிர்ச்சியாய் பார்த்தாள் அம்மா.
'நம்புவாங்களா கேபி?' -சம்பதா.
'கூகுள்ல சேர்ச் பண்ணிப் பாத்தேன். நாங்க இருந்த பகுதியில செந்நாய் கூட்டம் அடிக்கடி வருமாம். அதனால நம்பித்தான் ஆகணும். கொஞ்சம் டாக்டர்ட்ட மட்டும் பேசிட்டோம்னா இத மறச்சிரலாம்.'
வாயைத் திறந்தாள் அம்மா.
'அப்படின்னா நீ சம்யுக்தாவ...'
'ஆமாம்மா. சம்யுக்தா உடலாலும் மனதாலும் ரணம் ஆற ரொம்ப நாளாகும். அவளுக்கு நான் கூடவே இருந்தா சீக்கிரம் ஆறிரும். அவளுக்கு நினைவு தெரிஞ்ச உடனே உங்க முறைப்படி தாலி கட்டி அவள என் மனைவியா ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்.'
சம்பதா காப்ரியேலை மதிப்புடன் பார்க்க, அம்மா தன்னை மறந்து எழுந்து கை கூப்பினாள்.
'ஒலகத்துல மனிதம் செத்துடலப்பா. செத்துடல. எங்கியோ இருந்து வந்த நீ கண்ணன் மாதிரி நெறத்துல மட்டும் இல்லப்பா. என் பொண்ண துணி குடுத்து காப்பாத்துனதுலயும் அந்த கிருஷ்ண பரமாத்மா மாதிரி தான். என்னப்பா சொன்ன? அவள கல்யாணம் பண்ணிக்கறயா? தான் எப்படி இருந்தாலும் பொண்டாட்டி மட்டும் ப்ரெஷா இருக்கணும்னு நெனக்கற ஆம்பளங்க மத்தியில...'
திடீரென்று உணர்ச்சி வசப்பட்டாள் அம்மா.
'இவ அம்மாக்கு நேர்ந்ததே இவளுக்கும் நேர்ந்துட்டதேன்னு என் நெஞ்சு வெடிச்சுப் போச்சுய்யா. ஒன்ன மாதிரி அன்னைக்கு அந்த சரவணன் சொல்லி இருந்தா... எங்கக்கா வாழ்க்க நாசமாகி இருக்காது தம்பி... நாசமாகி இருக்காது.'
மூக்கை சிந்திக்கொண்டு அம்மா காப்ரியேலைப் பார்க்க அப்போது தான் தன்னை மறந்து வார்த்தைகள் வெளியே வந்தது அறிவுக்கு உரைத்தது.
சம்பதாவைப் பார்த்தாள்.
அவள் விழிகள் விரிய அதிர்ச்சியாய் அம்மாவைப் பார்த்தாள்.
'அம்மா! நீ என்ன சொல்ற? உங்கக்காவா? சரவணனா? என்னம்மா சொல்ற? நீ சொல்றது எனக்கென்னமொ கற்பன பண்ணத் தோணுதே!'
முந்தானையால் வாயைத் துடைத்துக் கொண்ட அம்மா தீர்க்கமாய் சொன்னாள்.
'ஆமாம் சம்பதா! ஒன் கிட்ட உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. நான் ஒங்க அம்மா இல்ல. சித்தி. வசந்தி. உங்க அம்மா பேரு தேவி. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்.'
சம்பதாவிற்கு தலை சுற்றுவதூ போல் இருந்தது.

(தொடரும்)
 
Top