Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 20

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 20

விடு விடு என்று எழுந்து சென்ற காப்ரியேலைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்ற சம்யுக்தா சட் என்று எழுந்து அவனைத் தொடர்ந்து சென்றாள். கோபிகாவும் அவளைத் தொடர்ந்தாள்.
சட்டை போடும் இடம் சென்று சட்டையை அணிந்து கொண்டிருந்த காப்ரியேலின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா.
'இப்படி விட்டுட்டு ஓடறதுக்காடா பச்ச குத்தின?'
காப்ரியேல் அவளையே பார்த்தான்.
'எங்க அம்மா காதலிக்கக் கூடாதுன்னு சொல்லியே வளர்த்ததுனால என்னால ஒன் கிட்ட என் காதல சொல்ல முடியல. 'டேட்டிங் போலாமான்னு நீ கேட்ட அந்த நிமிஷமே மனசுல ஒரு சின்ன சலனம். அதான் காதலோட விதைன்னு நெனக்கறேன். அதுக்கப்புறம் அம்மா உபதேசத்தால மனசுல விதச்ச வெத மூடியே இருந்தாலும் உயிரோட இருந்திருக்கு. ஒன் நெஞ்சுல என் பேர பாத்ததும் அந்த காதல் முளச்சு மேல வர ஆரம்பிச்சிருச்சு. இப்போ நீ போறத பாத்ததும் என்னால தாங்க முடியல. ஐ ரியல்லி லவ் யூ காப்ரியேல்.' கண்கள் குளமாய் கட்ட தலை உயர்த்தி அவனைப் பார்த்து சொன்னாள்.
உண்மையான காதலை உணர்ந்த காப்ரியேல் சட் என்று அவள் முன் மண்டியிட்டு ப்ரோபோஸ் செய்தான்.
'தென், வில் யூ மேரி மீ, சம்யுக்தா மை ஏஞ்சல்?'
நெகிழ்ந்து போன சம்யுக்தா நீட்டிய அவன் கையைப் பிடிக்க கோவிலில் ஆங்காங்கே நகர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் கூட்டம் வியப்பால் ஒரு நிமிடம் இவர்களைப் பார்த்து 'இதப்பார்றா' என நகர, ஒரு வாலிபன் செல்லை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பிக்க, கோபிகா டக் என்று அவனுக்குத் தெரியாமல் முதுகால் இவர்களை மறைத்து சம்யுக்தாவிடம் இரைந்தாள்.
'இங்க பாரு சம்யு, வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னைக்கு வைரலாயிரும். ஒங்க அம்மாக்கும் பார்வேர்ட் ஆனா என்ன ஆகும்னு நெனச்சு பாரு. மொதல்ல காப்ரியேல் எந்திரு. இதெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கலாம்.'
உண்மை உரைக்க காப்ரியேல் எழுந்தான். சம்யுக்தாவின் கைகளை இறுகப் பற்றினான். முன்னெ நடந்தான். கோபிகாவும், டென்சிலும் தொடர்ந்தார்கள்.
கோயிலை விட்டு வெளியே வந்ததும் காப்ரியேல் கேட்டான்.
'இன்னைக்கு என் வாழ்க்கைல முக்கியமான நாள். ஒனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கித் தாரென்.'
'ம்ம்ம். எனக்கு நீங்க போதும்.'
'ஐ. இந்த இந்தியன்னெஸ் தான் எனக்கு வேணும். கணவன் கிட்ட இந்தியப்பெண்கள் காட்டுற அபரிதமான அன்பு வேற எங்கயும் இல்லாதது. பிக் அப், மேரேஜ், டைவர்ஸ், பிக் அப்னு இருக்குற எங்க கலாச்சாரம் வியந்து பாக்கறது எப்படி ஒரே ஆள் கூட இந்தியப் பெண்கள் அம்பது அறுபது வருசம் ஒண்ணா இருக்கறாங்கன்னு தான்.'
'இங்கயும் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருது. ஒங்க அளவுக்கு இல்ல. ஆனா எங்க மதர்ஸ் நல்ல கேரிங். அது மட்டும் மாறல. வேலை பாக்கப் போற பெண்கள் இதுல ஈஸியா சிக்கிக்கிறாங்க. விளைவு. சிங்கிள் பேரண்ட்ஸ். கூட்டுக் குடும்பமும் இப்ப கொலஞ்சிட்டதனால குழந்தைங்கள வளக்க சிரமப்படுறாங்க. அந்த குழந்தயோட நெலமயோ பரிதாபம்! அம்மா இழுத்த இழுப்புக்கு போறது, அப்பா இல்லாத ஏக்கம், அப்படி இப்படின்னு மன ரீதியா பாதிக்கப்படுது. ஆனா இன்னும் நெறய பெண்கள் கணவன் எப்படி இருந்தாலும் குழந்தைகங்களுக்காக அவங்க கூட அட்ஜஸ்ட் பண்றாங்க. அதனால தான் குடும்ப அமைப்பு இன்னும் இங்க கொலயல. ஆனா ஒரு இருபது வருஷம் கழிச்சு அதுவும் நடந்துரும்னு எனக்குத் தோணுது.'
கோபிகா இடை மறித்தாள்.
'லவ்வர்ஸ் பேசற மாதிரியா பேசறிங்க? ஏய் காப்ரியேல் இவ எதுவும் கேட்க மாட்டா. எங்கள ஐஸ் கிரீம் பார்லருக்கு கூட்டிட்டுப் போ.'
'ஓ.கேயா?' என்று காப்ரியேல் சம்யுவைப் பார்க்க, கோபிகா டென்சிலிடம் சொன்னாள்.
'பாத்தியா டென்சில்? வுட்பி கிட்ட பெர்மிசன் கேக்கறான்?'
டென்சில் வெள்ளைப் பற்களைக் காட்டி சிரிக்க காப்ரியேல் அசடு வழிந்தான்.
ஐஸ் கிரீம் பார்லரில் கூட்டம் இல்லை. மாடிக்குச் சென்று கார்னரில் இருந்த நாலு சீட்டில் அமர்ந்தார்கள். இரண்டடி தாண்டி இரண்டு குமரிகள் முதுகைக் காட்டி அமர்ந்திருக்க வெயிட்டர் வந்தார்.
மெனு கார்டைப் பார்த்து சாக்கலேட் ஸ்கூப் நால்வரும் ஆர்டர் செய்ய வெயிட்டர் நகர்ந்தார்.
'சம்யுக்தா! உண்மையிலேயே ஒனக்கு என் மேல லவ்வா? இல்ல நான் பச்ச குத்துனதால வந்த இரக்கமா?'
'சே! நான் சொன்னா சினிமா டயலாக்காத் தான் இருக்கும். ஒன் நல்ல மனச தான் நான் காதலிக்கிறென். பஸ்ல இருந்த ஆம்பளங்க எல்லாரும் சும்மா கண்டுக்காம இருக்க நீ போய் அந்தப் பொண்ணொட நகய மீட்டுக் குடுத்தில்ல. அப்பவே என் மனசு ஒன் கிட்ட போயிடிச்சு. ஒரு பொண்ணுக்குத் தேவ பாதுகாப்பு. அந்த நிமிஷமே நீ எனக்கு நல்ல பாதுகாப்பு குடுப்பேன்னு தோணுச்சி.'
'ஒனக்கு பாதுகாப்பு வேணும்னா ஒரு போலீச கட்ட வேண்டியது தான இல்ல அரசியல்வாதி. இதெல்லாம் ஒரு காரணமா?' கோபிகா கிண்டலடித்தாள்.
'இல்ல கோபிகா! சைக்காலஜிஸ்ட் அப்படித் தான் சொல்றாங்க.
வெயிட்டர் ஐஸ் கிரீமோடு வந்தார். ஐஸ்கிரீமை ஸ்பூன்களோடு டேபிளில் பரப்பி விட்டு சென்றார்.
சம்யுக்தா கேட்டாள்.
'நீங்க சாப்புடுற ஐஸ்கிரீம் வச்சு ஒங்களப் பத்தி தெரிஞ்சுக்கலாம் தெரியுமா?'
காப்ரியேல் சிரித்தான். 'ஹம்பக்'
'அப்படி சொல்லாத கேபி. நீ வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பாரென். கோபிகா! ஒனக்கு என்ன ப்ளேவர் பிடிக்கும்?'
'ம்ம்.. வென்னிலா.'
'கேபி?'
காப்ரியேல் அந்த கேபிங்கற பிரயோகத்தை ரசித்தான்.
'சாக்கலேட்.'
சம்யுக்தா 'எனக்கும் சாக்கலேட் தான். டென்சில் ஒனக்கு?'
'ம்ம். ஸ்ட்ராபெர்ரி'
'ஓ.கே. இப்ப நான் சொல்றது சரியான்னு செக் பண்ணிக்கங்க. வென்னிலா பிடிக்கறவங்க பழய நம்பிக்கைகள்ல நம்பிக்கையும் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள்ல தீவிரமும் கொண்டவங்களா இருப்பாங்க. இங்கிலீஸ்ல சொல்லலாம்னா ஐடியலிஸ்ட்.'
கோபிகா ஐஸ்கிரீம் வழியும் வாயோடு 'ஆமாம். எனக்கு சில விசயங்கள் பிடிச்சுப் போச்சுன்னா தீவிரமா இருப்பேன். என் பிரண்ட்ஸும் சொல்லி இருக்காங்க.' என்றாள்.
'ஸ்ட்ராபெர்ரி பிடிக்கிறவங்களுக்கு ரொம்ப பிரண்ட்ஸ் இருக்காது. ஆனா பிரண்ட் பிடிச்சிட்டா அவங்க கிட்ட ரொம்ப உண்மயா இருப்பாங்க. டிவோட்டடா. சம்டைம்ஸ் இன்ட்ராவெர்டா.'
டென்சில் தலை அசைத்தான்.
'மிகச் சரி. எனக்கு காப்ரியேல் அப்புறம் என் பால்ய சினேகிதன் ஒருத்தன். வேற பிரண்டே கிடையாது. எல்லாரும் ஹாய் பை தான்.'
'சாக்கலேட் விரும்பிச் சாப்பிடுறவங்க ரொம்ப லவ்வபுலாவும் ரொமாண்டிக்காவும் இருப்பாங்க.'
கோபிகா சிரித்தாள்.
'ஏய். இது போங்கு. நீங்க ரொமாண்டிக்கா இருக்கறதுக்கு இப்படி சொல்ற'
டென்சில் சொன்னான்.
'இல்ல கோபிகா. காப்ரியேல் ரியலா ரொமாண்டிக் தான். கொஞ்சம் சம்யுக்தா வச்சிருக்கற சாக்கலேட் ஸ்கூப்ப பாரு.'
கோபிகா சம்யுக்தா தொடாமல் வைத்திருந்த சாக்கலேட் ஸ்கூப்பைப் பார்த்தாள். அதில் இரு ஹார்ட் இணைந்திருப்பது போன்ற டிசைன் இருந்தது. மற்ற ஸ்கூப்பில் இல்லை. நம் கூட தான் இருக்கிறான். எப்படி இதேப் போல் ஆர்டர் செய்தான்?
காப்ரியேல் அவளது சந்தேகத்தை தீர்க்கும் விதமாக மெனு கார்டில் இருந்த க்யூ ஆர் கோடினையும் அவன் மொபைலையும் காட்டினான்.
'ஆஹா! உண்மையிலயே நீ ரொமாண்டிக் தான் காப்ரியேல். பேசிக்கிட்டு இருக்கும்போதே சம்யுவுக்கு மட்டும் ஹார்ட்ஸ் குடுத்திருக்கிறியே!'
அவன் சிரிக்க, சம்யுக்தா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
'சரி. அப்புறம் வெட்கப்பட்டுக்கலாம். உங்க ப்யூச்சர் ப்ளான் என்ன?'
சம்யுக்தாவின் முகம் வாடியது.
காப்ரியேல் அதைப் பார்க்காமல் சொன்னான்.
'ம்ம்ம். நாங்க ரெண்டு பேரும் படிச்சுட்டு காலேஜ்ல வேல பாப்போம். அப்புறம் கல்யாணம். நான் இந்தியாவுலேயெ இருந்துருவேன்.'
சம்யுக்தாவின் கண்களில் நீர் திரண்டது.
'அம்மாட்ட தான் இத எப்படி சொல்லி பெர்மிஷன் வாங்கறதுன்னு தெரியல கோபிகா. அம்மா காதல்னாலே காத தூரம் ஓடுறவங்க. இப்ப இப்படின்னு தெரிஞ்சா... ஏற்கனவே அம்மாக்கு மைல்டா அட்டாக் வந்திருக்கு. எங்களுக்கு தன் இளமையை எரிச்ச அவங்க கிட்ட என் இளமைத் திமிர சொல்றதுக்கு தயக்கமா இருக்கு.'
'என்ன நீ! இளமைத் திமிரு அப்படி இப்படின்னு சொல்ற? இது நேச்சுரல் தான. ஒங்க அம்மா சம்மதத்தோட தான கட்டிக்கப் போற?'
'அதில்லடி! தமிழனா இருந்தாக் கூட ஜாதி, மதம் வேறுபாடுன்னா கூட பரவால்ல. இது கண்டம் விட்டு கண்டமால்ல இருக்கு. அம்மாக்கு தெரிஞ்சா நான் கண்ட துண்டம் தான்.'
அப்போது பின்னால் இருந்து சப்தம் கேட்டது.
'நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா?'
திரும்பிப் பார்த்து அதிர்ந்தாள் சம்யுக்தா.


(தொடரும்)

 
Top