Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 19

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 19

காப்ரியேலின் கருத்த நெஞ்சில் தன் பெயரைப் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் வெள்ளை உடையில் ஸ்லோ மோஷனில் குதிப்பது போன்று சிலிர்த்தது. மனம் வெட்கத்தில் உறைந்தது. இது தான் காதலா?
இது சாத்தியமா?
எத்தனை ஏமாற்றுக் கதைகள் பார்க்கிறோம்? படிக்கிறோம்? யூஸ் அண்ட் த்ரோவாக பயன்படுத்தி வீசி எறியும் ஆண்கள்...மொபைல் விட்டு மொபைல் தாவும் ஆண்கள் (மலர் விட்டு மலர்.. எத்தனை நாள் தான் யூஸ் பண்ணுவது)... பிடிக்க வில்லை என்று சொல்லும் பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஆண்கள்... ஆசிட் ஊற்ற தைரியமில்லாமல் பெண்ணின் போட்டோவை அசிங்கப்படுத்தி மீடியாவில் பகரும் கோழை ஆண்கள்... இவன் எந்த ரகம்?
பச்சை குத்துவதால் மயங்கி விடுவதா? 80ஸ் கிட்ஸ் காதல் கதை அல்லவா அது! அவன் மனம் மீது தான் காதலா? இல்லை அவன் உடல் மீதா?
இந்த நினைப்பு வரவும் வாய் 'சீ' என்றது.
'என்னடி?' என்றாள் கூட பிரகாரத்தில் நடந்து வரும் கோபிகா.
'ஒண்ணும் இல்ல. இப்படி ஆம்பளைங்க மார்ப பாக்றது...'
மேற்கொண்டு பேச முடியாமல் தத்தளித்தாள் சம்யுக்தா.
'ஏன் அவங்க மட்டும் நம்ம மார்ப மொறச்சி பாக்கறதில்லயா? என்னமோ ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி... சே! சில சமயம் எரிச்சல் வருது.'
'ஏன் கோபிகா! இதுக்கு எரிச்சல் படுற? அது அவங்க குணம்.'
'நல்ல குணம்' எரிச்சலுற்றாள் கோபிகா.
'கோபிகா! மென் ஆர் ப்ரம் மார்ஸ் விமின் ஆர் ப்ரம் வீனஸ் படிச்சதில்லயா? ஆண்கள் குணம் தனி. பெண்கள் குணம் தனி.'
'அதுக்கு இப்படியா பாக்குறது?'
'அது கோபிகா. அவனுங்களுக்கு மூட் வரதுக்கு கடவுள் குடுத்திருக்கற விஷயம்'
'அப்போ பொண்டாட்டிய மட்டும் பாக்க வேண்டியது தான.'
'கோபிகா. இது கடவுளோட உத்தி. இந்தியர்கள் அம்மாட்ட பாசமா இருக்கறதுக்கு காரணமும் இது தான். நல்ல வீரியமான இந்திய குழந்தைங்க பொறக்கற ரகசியமும் இது தான்.'
'என்னென்னமோ சொல்ற? ஒனக்கு கல்யாணம் பண்ண சமயம் வந்துட்டுதுன்னு நெனக்கறேன். அது தான் ஏதேதோ பினாத்துற? ஒன் அழகுக்கு எத்தனயோ பேர் ப்ரொபோஸ் பண்ணி இருப்பான்! இந்த காப்ரியேல் எத்தனயாவது?'
'ப்ச். நான் எண்றதுலாம் இல்ல.'
'ஓ! அம்மணிக்கு அவ்ளோ மவுசா?'
சம்யுக்தா சிரித்தாள்.
பேசிக்கொண்டே வந்து இரு தூண்கள் இடையெ அமர்ந்தார்கள்.
'ஆனாலும் சம்யுக்தா. அவன் மொத நாளே டேட்டிங் போலாமான்னு கேட்டப்பவே எனக்கு டவுட் தான். இந்த பச்ச குத்றதுல்லாம் ஓல்ட் ஸ்டைல் இல்ல?'
சம்யுக்தா ஒன்றும் பேச வில்லை.
காப்ரியேலும், டென்சிலும் கையில் கழட்டி வைக்கப்பட்ட சட்டையுடன் அவர்கள் அருகில் அமர்ந்தார்கள்.
சம்யுக்தாவிற்கு காப்ரியேலைப் பார்க்க கண் கூசியது.
கோபிகா எதேச்சயாய் பார்ப்பது போல் பார்த்து கேட்டாள்.
'ஹே! காப்ரியேல்! இது என்ன சம்யுக்தா மை ஏஞ்சல்?'
காப்ரியேல் தலை குனிந்து அமர்ந்திருந்த சம்யுக்தாவை பார்த்தபடியே சொன்னான்.
'வார்த்தைகள் சொல்ல முடியாதத சில சமயம் இப்படி தான் சொல்ல வேண்டி இருக்கு.'
சம்யுக்தா விழி நிறையும் நீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
'நீ என்ன சொல்ற காப்ரியேல்?'
'யெஸ் சம்யுக்தா. ஐ ரியல்லி லவ் யூ. என் லவ்வ ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் ஒன் விருப்பம். இல்லன்னா இல்லன்னு சொல்லிடு. ரெண்டு பேரும் ஹை பையோட நிறுத்திப்போம். இருக்குன்னா இந்த இறைவன் சன்னிதானத்துலேயே சொல்லிரு. எனக்கு சந்தோஷமா இருக்கும்.'
'இது சாத்தியமா காப்ரியேல்?'
சம்யுக்தா தலை குனிய கண்ணீர் முத்துக்கள் தரையில் உருண்டு ஓடின.
'ஏன் சாத்தியமில்ல. காதலுக்கு நாடு, மொழி எதுவும் பிரச்ன இல்லயே?'
கோபிகா இழுத்தாள். 'அதுக்கில்ல....'
'ஓ! வெள்ளைக்காரங்க மாதிரி நீங்களும் கலர் பாக்கறீங்களா?'
உடன் அவனது தடித்த உதடுகளைத் தன் கை கொண்டு பொத்தினாள் சம்யுக்தா.
'என்ன சொல்றீங்க காப்ரியேல்!'
அவனது உதட்டில் இருந்த அவளது கை மெல்ல இறங்கி அந்த பச்சை குத்திய இடத்திற்கு வந்தது. மிருதுவாகத் தடவியது.
கோபிகா 'சம்யுக்தா! இது பொதுஇடம்' என்று எச்சரித்தவுடன் தன் கையை எடுத்துக் கொண்டாள்.
'ஸொ வாட்' என்றகாப்ரியேலிடம் 'இது உங்க நாடு இல்ல காப்ரியேல். கோயில்ல குழந்தைங்க நெறய பேர் வருவாங்க. அவங்க முன்னால இப்படி ஒரு ஆணும் பெண்ணும் இருந்தாங்கன்னா அவங்க மனசு கெட்டுப் போகாது?'
'ஹே திஸ் இஸ் நேச்சுரல்.'
'நேச்சுரல் தான். இல்லங்கல. ஆனா மத்தவங்க கெடறதுக்கு நாம வழிகாட்டிரக் கூடாது.'
'நெட், சினிமா காமிக்காதத நாம காமிக்கிறோமா?'
'நேர்ல வேண்டாம்னு சொல்றேன்.'
'சில்லி.'
'தனிப்பட்ட இடத்துல எப்படியும் இருந்துக்கோங்க. பொது இடத்துல வேணாமேன்னு தான் சொல்றேன்.'
காப்ரியேல் தூரமாய் இருந்த ஒரு ஜோடியை கண்ணால் காமித்தான்.
'அவங்க..'
கோபிகா பார்த்தாள்.
அந்தப் பெண் அவனுடைய நெஞ்சில் சாய்ந்து இருந்தாள்.
அவன் அவள் தோளைப் பற்றி இருந்தான்.
'கொஞ்சம் அங்க பாரு காப்ரியேல்.'
கோபிகா சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான்.
அவள் காட்டிய திசையில் நாலஞ்சு காதல் ஜோடிகள் கண்ணியமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
'நாம் அவங்கள எக்ஷாம்பிளா எடுத்துப்போமே.'
காப்ரியேல் ஒன்றும் பேச வில்லை.
சம்யுக்தா வாய் திறந்தாள்.
'காப்ரியேல்! கொஞ்சம் என்னப் பத்தி ஒன் கிட்ட சொல்லிர்ரேன். எங்க அப்பா எங்க அம்மாவ காதல் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு எங்கள எங்க அம்மாவுக்கு குடுத்துட்டு வீட்ல பாத்த பொண்ண கட்டிகிட்டாரு. அதனால எங்க அம்மாவுக்கு காதல்னாலே எரிச்சல். நாங்க காலேஜ் ஜாயின் பண்றப்ப எங்க அம்மா எங்கள அட்வைசிலெயெ குளிப்பாட்டிட்டா. தன்னோட இளமைய எரிச்சி எங்களப் பாத்துகிட்ட அம்மா மனசு கோணற மாதிரி நடந்துக்கறது எனக்கு பிடிக்கல.'
'நான் ஒன் கிட்ட கேக்கறது என்ன பிடிச்சிருக்கா என் காதல ஏத்துக்கறியான்னு தான்.'
'அதான் சொல்றேன்ல. எங்கம்மாவுக்கு காதல்னாலே பிடிக்காதுன்னு.'
'சரி. அப்போ ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ணிப்போம். இன்னைக்கே வீட்டுக்கு வர்றென். உங்க அம்மாட்ட ஒன்ன கேக்கறேன்.'
கோபிகா அதிர்ந்தாள்.
'காப்ரியேல். என்ன நீ? நீயும் பர்ஸ்ட் இயர். நாங்களும் தான். நாம என்ன சின்னப் பசங்களா? மேஜரானா மட்டும் போதுமா கல்யாணம் பண்ண? வேல பாக்க வேண்டாமா? குடும்பத்த ரன் பண்ண காசு வேண்டாமா? என்ன நீ இப்படி பேசற?'
'மொதல்ல பொண்ணு கேக்கலாம். அப்புறம் அம்மா ஓகே சொன்னதும் படிப்ப முடிச்சிட்டு வேல கெடச்சப்புறம் கல்யாணம் பண்ணலாம்.'
'அவங்கம்மா நீ இவள காதல் பண்றேன்னு தெரிஞ்சதுமே இவளயும் சம்பதாவயும் காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க. அப்புறம் எப்படி படிக்கிறது? வேலைக்குப் போறது? எங்க நாட்டுப் பொண்ணுங்க இப்ப தான் அர நூற்றாண்டா தைரியமா வெளில வந்து வேல வெட்டின்னு தன் கால்ல நிக்குறாங்க. காதல்னு சொல்லி மறுபடியும் அவங்கள உள்ள தள்ளிராதீங்க.'
'வாட்! இந்த காலத்துல இப்படி பேசற கோபிகா? மாரேஜ், டிவோர்ஸ், லிவிங் டுகதர்னு இந்தியாலயும் காலம் மாறிட்டு தான இருக்கு.'
கோபிகா பதில் சொல்ல வில்லை.
'என்ன பண்ணலாம். நீயே சொல்லு சம்யுக்தா.'
சம்யுக்தா யோசித்தாள்.
'எனக்கு ஒன்னப் பத்தின டீடெயில்ஸ் வேணும் காப்ரியேல். ஐ மீன்.. உன் பாமிலி, பாக் ரவுண்ட்...'
முகம் மாறிப் போன காப்ரியேல் சட் என்று எழுந்தான்.
'இந்தியன் கேர்ள்ஸ் வேணும்னு இந்த காலத்துல ஈஸியா கெடச்சிறாங்க. ஒரு பப்புக்கு போனா பணக்கார இந்தியன் கேர்ள்ஸ் காண்டமோட வராங்க. எனக்கு என்னவோ ஒன்னப் பாத்தா ஒரு ஈர்ப்பு. ஒனக்கும் அது இருக்கும்னு நெனச்சேன். நான் ஒன் கிட்ட டேட் கேட்டப்போ நீ பணக்காரியா பாமிலி பாக்ரவுண்ட் எதுவும் கேக்காம தான் கேட்டேன்? ஆனா நீ... அதெல்லாம் கேட்டு இண்டெர்வ்யூ வச்சு செலக்ட் பண்ற...நவ் அ டேஸ் நோ ட்ரூ லவ் லைக் லைலா, மும்தாஜ். சாரி பார் ஹர்ட்டிங் யூ. ஐ ஹாவ் சோசன் அ ராங் பேர்ஸன்.'சொல்லி விட்டு அவன் வேகமாய் நகர டென்சில் அவனைத் தொடர்ந்தான்.
அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார்கள் கோபிகாவும், சம்யுக்தாவும்.

(தொடரும்)
 
Top