Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 17

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 17

கோபிகா அனுப்பிய வாட்ஸ் அப் இமேஜ் மெல்ல லோட் ஆகியது.
பார்த்த உடனே அது காப்ரியேலின் வெற்று மார்பு என்று தெரிந்தது.
அதில் சம்யுக்தா மை ஏஞ்செல் என்று பச்சை குத்தி இருந்தது. சம்யுக்தாவின் கண்களில் நீர் துளிர்த்தது. அப்பவே ஓடிச்சென்று அந்த மார்பில் சாய்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.
கோபிகாவை கூப்பிட்டாள்.
'சொல்லு சம்யு.'
'நீ.. நீ அனுப்புன மெசேஜ பாத்தேன். டென்சில் ஏன் இப்படி பண்ணான்?'
'ஏய்.. அது டென்சில் இல்ல. காப்ரியேல்.!'
'ஓ! அவனுக்கு விளையாடறதுக்கு அளவே இல்லயா? எந்த ஆப் இது? இவ்ளோ தத்ரூபமா பச்சை குத்தின மாதிரி இருக்கு?'
'அது ஆப் இல்லடி. நிஜமாவே பச்ச குத்திருக்கிறான் போல இருக்கு.'
சம்யுக்தா உஷ்ணமானாள்.
'ஒனக்கு எப்படி தெரியும்?'
'நான் ஜூம் பண்ணிப் பாத்தேன். ஒரு கெஸ்ஸிங் தான்.'
'சீ. இதெல்லாம் ஜூம் பண்ணிப் பாக்கறதா?'
'சரி. நாளைக்கு காலேஜ் போனா காப்ரியெல் கிட்ட நேரயே பாத்துரலாம்.'
'ப்ச். எப்படி கேக்கறது? பச்ச குத்துன இடத்த காட்டுன்னா. அப்படியே அவன் ரெடின்னாலும் எங்க வச்சு பாக்கறது? எனக்கு ஒரு ஐடியா தோணுது.'
'என்ன?'
'அவன கூட்டிட்டு ஐயப்பன் கோவிலுக்குப் போவோம். அங்க ஆம்பளைங்க சட்ட கழட்டிட்டு தான போவாங்க. அப்ப பாத்துரலாம்.'
'அது சரி. ஒனக்கு மூளயோ மூள. ஆமா. நீ கோபப்படுவன்னு பாத்தா கேஷுவலா இருக்க.'
'மொதல்ல உண்மைய தெரிஞ்சுக்கலாம். அப்புறம் கோபப்படலாம்.'
'ஓ.கே.'
'சரி. வச்சிர்றென். நாளைக்கு பாக்கலாம்.'
'சரி'
போனை கட் செய்து விட்டு தூங்கிப் போனாள்.
மறுநாள்.
காலேஜ் போனதும் கோபிகாவும் அவளும் காப்ரியேல் மற்றும் டென்சிலைப் பார்த்தார்கள்.
சம்யுக்தா தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் காப்ரியேலின் முகம் மலர்ந்தது.
'ஹாய்'
'ஹாய்'
'இண்டேர்னல் எக்சாமுக்கு படிச்சாச்சா?'
'படிச்சிட்டே இருக்கோம்.'
'நாங்க பர்ஸ்ட் பீரியட் வர மாட்டோம். முடிஞ்சா அட்டண்டன்ஸ் சொல்லுங்க.'
காப்ரியேல் முகம் தொங்கியது.
'ஏன்?'
'கோயிலுக்குப் போறோம்.'
'நாங்க வரலாமா?'
கோபிகா சம்யுக்தாவைப் பார்த்தாள். அவள் தலையாட்ட 'சரி வாங்க' என்றாள்.
இருவரும் தனித்தனி வண்டிகளில் காலேஜை விட்டு வெளியே வந்தார்கள்.
காலேஜை விட்டு ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது ஐயப்பன் கோவில்.
காப்ரியேலும் டென்சிலும் சம்யுக்தாவின் வண்டியைப் பின் தொடர்ந்தனர்.
கோவில் வந்தது.
வாசலில் கார்களும், டூ வீலர்களும் ஆங்காங்கே பார்க் செய்யப்பட்டிருக்க, அவர்களும் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு வந்தார்கள்.
'இது என்ன சாமி?' என்று கேட்டான் காப்ரியேல்.
'ஐயப்பன்.'
'ஒனக்கு ஒண்ணு தெரியுமா காப்ரியேல்? இந்த சாமியோட கோவில் சபரிமலைங்கற இடத்துல கேரளால இருக்கு. இந்த கோவிலுக்கு நாங்க போலாம். ஆனா அங்க போகக் கூடாது.'
'ஏன்?'
'அது ரூல்ஸ். ஆம்பளைங்க இருமுடினு சொல்லி.. இங்க பாரு.' கூகுள் இமேஜை காட்டினாள் சம்யுக்தா.' இப்படி தலைல வச்சுகிட்டு அந்த மல மேல ஏறி சாமி பாத்துட்டு வருவாங்க. கழுத்துல இந்த மால போட்டுருப்பாங்க. கோவிலுக்கு போய் விட்டு வந்துதான் அத கழட்டுவாங்க. இந்த சாமிக்கு ஒரு கத இருக்கு.'
டென்சில் கோவிலின் மேல் இருக்கும் சிற்பத்தை பார்த்து விட்டு கேட்டான்.
'சாமி புலி மேல உட்கார்ந்திருக்கு.'
'ஆமாம். தன் அம்மாவோட தல வலிக்கு புலிப்பால் குடிச்சா சரி ஆயிரும்னு சொன்னதுனால காட்ல போயி புலிய புடிச்சிட்டு வருவாரு ஐயப்பன்.'
'ஓ'
'அவரு கல்யாணம் பண்ணாததுனால அந்த சபரி மலைல அவர தரிசிக்க சின்ன பெண் குழந்தைங்க அல்லது வயசானவங்க தான் போலாம். மத்தவங்க போகக் கூடாது.'
'ஓ. ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம். ஏன் ஒங்க கடவுள்கள் எல்லாரும் ஒவ்வொரு வாகனத்துல இருக்காங்க. அன்னைக்கு முருகன் கோவிலுக்குப் போனோம். அவர் மயில் மேல இருக்காரு. இன்னொரு சாமி தல யானத் தல. ஆள் நல்ல குண்டு. ஆனா எலி மேல உட்காந்திருக்காரு.'
காப்ரியேல் சொன்னதைக் கேட்டு சம்யுக்தாவுக்கும், கோபிகாவுக்கும் சிரிப்பு வந்தது.
வண்டியை விட்டு நகர்ந்து கோவிலின் உள் நுழைந்து நீண்ட பிரகாரம் வழியாக நடந்து கொண்டே பேசினார்கள்.
'அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த மிருகங்கள பாத்தா சாமி நியாபகம் வந்து அந்த மிருகங்கள கொல்ல மாட்டாங்க. அந்த இனம் தழைக்கும். ம்ம். இந்த காலத்துல சாமி பக்தி கொறஞ்சுட்டு வரதுனால கொன்னா என்ன தப்புன்னு கேக்கறாங்க. ஒவ்வொரு சாமியும் பாத்தீங்கன்னா ஒரு மிருகம் வாகனமா இருக்கும். பைரவருக்கு நாய், அம்மனுக்கு சிங்கம், க்ரிஷ்ணருக்கு கருடன், குரங்கு வடிவ ஆஞ்சனேயர், சரசுவதிக்கு அன்னம், சனீஸ்வரனுக்கு காகம், லச்சுமிக்கு ஆந்தை.'
'ஆந்தையா?'
'ஆமாம். பழைய கால வாழ்க்கைய நெனச்சா அதிசயமா இருக்கும். இங்க நவக்கிரகங்கள் பகுதி இருக்கு. நம்ம கோள்கள் இருக்குல. அதான். அந்த நவகிரகங்கள் ஒவ்வொண்ணுக்கும் ஒரு கலர்ல ட்ரெஸ் மாட்டி இருப்பாங்க. அறிவியல் வளர்ந்து கோள்களுக்கு மனிதன் போவும்போது அந்த கோள்கள் அந்த குறிப்பிட்ட கலர்ல தான் இருக்கிறது தெரிஞ்சுது. அந்த காலத்து தமிழர்களோட வானவியல் அறிவு எப்படி இருக்குது பாத்தீங்களா?'
பேசிக்கொண்டே சன்னதியின் நுழைவு வாயிலுக்கு வந்தார்கள். அங்கு நின்றிருந்த இரண்டு சிறு வயது ஐயர்கள் 'ஆம்பளைங்க சட்டைய கழட்டி கைல வச்சுக்கோங்கோ' என்றார்கள்.
'சட்டைய கழட்டுனுமா?' என்றார்கள் கேப்ரியேலும் டென்சிலும் இவர்களைப் பார்த்தபடி.
முன்னுக்கு நின்ற அவர்கள் 'ஆமாம். பனியன் கூட போடக் கூடாது. அதுக்கும் அர்த்தம் இருக்கு. நான் சொல்றேன். முதல்ல சட்டைய கழட்டிட்டு வாங்க' என்று சொன்னார்கள்.
அவர்கள் சட்டையை கழட்டுவதைப் பார்க்க ஆர்வமாய் இருந்தாலும் பின்னால் நிற்கும் ஆண்களும் பெண்களும் என்ன நினைப்பார்கள் என்று தோணவும் முன்புறம் திரும்பி நின்றார்கள்.
'சரி போலாமா?' என்று டென்சிலின் சப்தம் கேட்டதும் க்யூவில் நின்ற சம்யுக்தா ஆர்வமாய் டென்சிலின் பின்னால் நின்ற கேப்ரியேலைப் பார்த்தாள்.
அவன் சட்டையை கழட்டி இடது தோளில் போட்டிருந்ததால் பச்சை குத்திய இடம் சரியாய் தெரிய வில்லை. அவள் பார்ப்பதை அவன் பார்த்து விட்டு குறும்பாய் 'வாட்' என்றான்.
அவள் ஒன்றுமில்லை என்று தலை ஆட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.
க்யூ கொஞ்சமாய் தான் இருந்தது.
லைனில் நகர்ந்து ஐயப்பன் கர்ப்பகிருகம் அருகில் வந்தார்கள். ஐயப்பனை சேவித்து விட்டு வேண்டிக் கொண்டாள் சம்யுக்தா.
'ஐயப்பா! நான் செய்றது சரியா தப்பானு தெரியல. இவன நோக்கி என் மனசு போவுது. நீ தான் என்ன சரியா வழி நடத்தணும்'
நம்பூதிரி கையில் சந்தனம் வைத்த வாழை இலையைப் போட அதைத் திறந்து நெற்றியில் சந்தனக் குறி இட்டு நகர்ந்து வந்தாள்.
அடுத்து டென்சில் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி இவர்களைப் போலவெ கும்பிட்டான்.
அவனது கருத்த நெஞ்சும் புசுபுசு முடிகளும் தெரிந்தன. சம்யுக்தா ஆவலாய் காப்ரியெலுக்குக் காத்திருந்தாள்.
டென்சில் நகர்ந்து இவர்கள் பக்கம் வந்து நின்று கோபிகாவிடம் எப்படி சந்தனம் வைப்பது என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
காப்ரியேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அவள் பார்க்கும் சமயம் ஐயர் காப்ரியேலின் அருகில் சூடன் தட்டுடன் வரவே அவன் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கண்களை மூடி சாமி கும்பிட தோளில் வைத்திருந்த சட்டை கீழே விழுந்தது. நெஞ்சில் சம்யுக்தா மை ஏஞ்செல் என்று குத்தியிருந்த பச்சை ஐயரின் கற்பூரத் தட்டு வெளிச்சத்தில் சம்யுக்தாவிற்கும் கோபிகாவிற்கும் பளிச் என்று தெரிந்தது.

(தொடரும்)

 
Nice epi.
Yedo college ponna note than ezhuthanum,athu vittu nenjila ezhuthurathu,mandayila maths workout pannurathu nu..... Enna ithellam hmmm.
Epi size yen thenjutte poguthey?? Not good author ji.
 
Sorry author. Just now i got clear idea about the story. Alternative epi, twins story n devi-saravanan story. Interesting but short epi mostly.:p:)(y)
 
Top