Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - FINAL

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 25

பெரியவர்கள் அகன்றதுமே படப்படவென்று பொரிய ஆரம்பித்தாள் நளினா. பரத்தோ தன் நிலையை எண்ணி கன்னத்தில் கைவைத்து “வேதாளம் எப்போ தரையிறங்கு”மென்று நளினாவையேப் பார்த்திருந்தான். நளினா அக்காவும், அக்காவின் கணவரும், ஏதோ சினிமாவில் முக்கியமான காட்சி ஓடுவது போல் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜானுவும், சரத்தும் இவர்களை கேலி செய்தபடி ரசசிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.
சரத்துடன் பேசிக்கொண்டே அவ்யுக்த்தைப் பார்த்த ஜானு, சரத்தை இடித்து “அங்க பாருங்க” என்பது போல் கண்ணாலேயே ஜாடை பேசினாள். சரத்தும் திரும்பிப் பார்த்து மெளனமாக சிரித்துக்கொண்டான்.
அங்கே என்ன நடந்தால் நமக்கு என்ன? என்பதுபோல் அவ்யுக்தும் தியாவும் ஒருத்தரையொருத்தர் பார்வையாலேயே காதல் புரிந்துக்கொண்டிருந்தனர்.
அவ்யுக்திற்கு ஏற்கனவே இன்றே திருமண நாளாக இருக்க கூடாதா? என்றிருந்தது. இதில் தியா வந்தது முதல் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அதனால் பெரியவர்கள் எல்லோரும் கிளம்பியதுமே, யாரும் அறியா வண்ணம் தியாவின் அருகில் சென்றிருந்தான். நளினா பரத்திடம் பேச (திட்ட) ஆரம்பித்ததுமே இது இப்போதைக்கு முடியும் விஷயமில்லை என்றறிந்து, அதை கவனிக்காமல் தியாவின் கையைப் பிடித்துக்கொண்டே அவளிடம் கண்களாலேயே பேச ஆரம்பித்தான். தியாவும் அவனுக்கு அவ்வாறே பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“நான் ரெடி”
“நிஜமா?”
“ம்ம்”
“அப்போ வா, போகலாம்” என்று கண்களாலேயே ஜாடை பேசிவிட்டு பிடித்திருந்த அவளின் கையை லேசாக அழுத்திக்கொடுத்தான்.
“வாங்க போகலாம்” என்பதுபோல் ஜாடைப் பேசிக்கொண்டிருந்த தியாவிற்கு, அருகே ஜானு நமுட்டு சிரிப்புடன் நிற்பதைப் பார்த்ததும், வெட்கம் வந்தது. அதனால் உடனே தலையை குனிந்துக்கொண்டாள்.
“சார், இங்க என்ன தனியா படம் ஓடிட்டு இருக்கு?” என்றாள் ஜான்வி.
“படம் ஓடுதுன்னு தெரியுதில்லை, அப்போ அமைதியா படத்தைப் பார்க்கவேண்டியது தானே..” என்று ஜானுவிற்கு பதிலளித்தான் அவ்யுக்த்.
“உங்க படத்தை தனியா ஓட்ட வேண்டியது தானே, இது கோவில் சார்.. மறந்துடாதீங்க..”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. எங்களை கவனிக்கறதை விட்டுட்டு, போ.. போய் பரத்தை காப்பாத்தற வழியைப் பாரு.. எங்களை விட்டுடுமா..”
“சஹிக்காக இப்போ உன்னை விடறேன்.”
“ஹப்பா! எப்படியோ விட்டா சரி” என்று வாய்க்குள்ளேயே முனகிக்கொண்டான் அவ்யுக்த்.
“அங்கிள், ஆன்ட்டி கிட்ட கேட்டுட்டு உங்களை தனியா எங்கயாவது அனுப்பலாம்ன்னு நினைச்சேன்.. பட் இப்போ பேசறதுக்கு கொஞ்சம் யோசிக்கணும் போல இருக்கு.. நீ என்ன சொல்ற அவ்யுக்த்?”
“ஜானு, நீ நிக்கறியே ஜானு.. உட்கார்ந்துக்கோ கால் வலிக்கப் போகுது.. கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது வாங்கித் தரட்டுமா ஜானு.. உனக்கு தொண்டை வறண்ட மாதிரி இருக்கு.. அப்பா அம்மா கிட்ட பேசும்போது சிரமமா இருக்கக் கூடாது பார்.. இப்பவே சில்லுன்னு ஏதாவது சாப்பிட்டுக்கோ.. “
“டேய் எனக்கே சோப் போடறியா? இருடா.. உன்னை அப்புறமாய் கவனிச்சுக்கிறேன்.. அதுக சண்டையை நிறுத்திட்டு, உங்க ரெண்டு பேரையுமே தனியா அனுப்பி வைக்கறோம்.. கொஞ்சம் வெயிட் பண்ணு வரேன்.”
“தேங்க்ஸ் ஜானு” என்ற அவ்யுக்த்தைப் பார்த்து புன்னகைத்தப் படியே நளினாவை நோக்கி சென்றாள் ஜானு.
“நளின்” என்றழைத்து அவளின் கையைப் பற்றி இழுத்து சென்று தனியாக அவளின் காதில் எதையோ ஓதினாள் ஜானு. அதைக் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் “சரிங்க அண்ணி, நீங்க சொல்வது கூட நல்ல ஐடியா தான் அண்ணி” என்ற நளினா, பரத்தைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ஜானு என் செல்ல வேதாளத்தை மரம் இறக்கிட்டியே.. தேங்க்ஸ் ஜானு.” என்ற பரத்தைப் பார்த்து “பரத் ஆனாலும் உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்த்தி தான்.. நான் நளினா கிட்ட செய்ய சொன்னது சரி தான்.. இனிமே உன்னை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்ன்னு நினைக்கிறேன்.” என்றாள் ஜானு.
“அய்யோ ஜானு, இப்போ என்னத்த பத்தவச்சிருக்க என் பட்டாசுக்கிட்ட?” என்றான் பயத்துடன் நளினாவையேப் பார்த்தப்படி.
“ஹா..ஹா..ஹா.. பரத், அது உனக்கே உனக்கான சர்ப்ரைஸ்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்.. உனக்கு அது திகட்டினாலும் நளினா தந்துட்டே தான் இருப்பா.. என்ஜாய் .”
“சரத், உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்பு, என் நளினாவிற்கு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிகொடுக்கறா.. நளின் அவ பேச்சை கேட்காத.. அது நமக்கு நல்லதில்லை.” என்று அந்த நமக்கு விற்கு அழுத்தம் நன்றாகக் கொடுத்து பேசினான் பரத்.
“பரத் அண்ணியை சொல்லாதீங்க.. அவங்க எனக்கு எப்போதுமே நல்லது தான் செய்வாங்க..” என்று அந்த எனக்கு விற்கு அழுத்தம் கொடுத்தாள் நளினா.
இவ்வாறாக ஒருவரையொருவர் கிண்டல் அடித்துக்கொண்டு பேசி சிரித்து கொண்டிருக்கும் போது பெரியவர்கள் எல்லோரும் அங்கே மறுபடியும் ஆஜர் ஆனார்கள்.
“உங்க சண்டைய எல்லாம் அப்புறம் வச்சிக்கங்க பரத், இப்போ நாங்க பேசறதை கேளுங்க.” என்றார் கௌசி.
“சொல்லுங்க ஆன்ட்டி.” என்றாள் ஜானு.
“வேற ஒண்ணுமில்லாம.. இவங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு.. இந்த கோயில் அய்யர் கிட்டயும் இவங்க ஜாதகத்தை காண்பிச்சு தேதி குறிச்சாச்சு.. ஒரு நாலு முகூர்த்தம் குறிச்சு கொடுத்திருக்கார் நம்ம அய்யர். இன்னும் இரண்டு வாரத்தில ஒரு முகூர்த்த நாள் குறிச்சிருக்கார்.. பிறகு இரண்டு மாசம் கழிச்சு.. அடுத்தது ஐந்து மாசத்துக்குப் பிறகு.. கடைசியா பத்து மாதம் கழிச்சுன்னு முகூர்த்த நாட்கள் குறிச்சு கொடுத்திருக்கார்.. எந்த முகூர்த்தம் எல்லாருக்கும் ஒத்து வருமென்றுப் பார்த்து முடிவு செய்யணும்... அதைப் பத்தி வீட்டுக்கு போய் பேசலாமா? இப்போ எல்லாரும் கிளம்பலாமா?”
“ஆன்ட்டி நாம எல்லாரும் யாராவது ஒருத்தர் வீட்டுக்கு போய் கல்யாண தேதியை முடிவு பண்ணுவோம்.” என்ற ஜானு, அவ்யுக்த்-சஹி, மற்றும் பரத்-நளினாவை கையால் காண்பித்து கொண்டே “இதுங்கள அப்படியே கழட்டி விட்டுடுவோம்.. அவங்க சண்டையை தீர்த்துக்கிட்டு வரட்டும்.. என்ன சொல்றீங்க? என்றாள்.
“நீ சொல்றதும் சரிதான் ஜானு.. நாம கிளம்பலாமா..” என்ற கௌசி பரத் அம்மாவின் கையையும், சஹி அம்மாவின் கையையும் பிடித்து “அங்க நம்ம வீட்டுக்கே போலாமா?” என்று கேட்டுவிட்டு நளினா அம்மாவிடமும் அதையே திருப்பி கேட்டார். எல்லோரும் தலையசைத்ததும், நால்வரை தவிர மற்ற அனைவரும் அவ்யுக்த் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
கிளம்பும்போது அவ்யுக்த் தன் அம்மாவின் அருகே சென்று அவர் காதில், “அம்மா இன்னும் டூ வீக்ஸ்ல இருக்கிற நாளையே பிக்ஸ் பண்ணிடுங்க..” என்று ஓதிவிட்டு சஹியுடன் வெளியேறினான்.
பரத்தும் அவரிடமே வந்து, “கௌசிமா, நான் இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரமா இருக்கேனே.. பத்துமாசம் கழிச்சே நாள் பிக்ஸ் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு நளினாவிடம் “போலாமா?” என்றபடி அவளின் கையைப் பிடித்து கேட்டான். அவளும் சரி என்றதும், அவனும் தன் இணையுடன் வெளியேறினான்.
“நளின், ஜானு என்ன சொன்னா? “
“அதுவா பரத், இப்படி பொது இடத்துல நின்னுக்கிட்டு பேசிட்டிருந்தா வாயால மட்டும் தான் பேச முடியும். அவனை தனியா கூட்டிட்டு போய் பேசினா, கையாலேயும் பேசமுடியும்ன்னு அண்ணி சொன்னாங்க.” என்றாள்.
“இந்த மாதிரி ஏதாவது சொல்லியிருப்பான்னு நினைச்சு, கல்யாணத்தை டென் மந்த்ஸ் தள்ளி வச்சிக்கலாம்ன்னு நீ சொன்னது கரெக்ட் டா பரத்” என்று தன்னை தானே மனதினுள் பாராட்டிக்கொண்டான்.
“என்ன நினைப்பு மனுசுல ஓடிட்டு இருக்கு?”
“அது ஒண்ணுமில்லை நளின், இப்போ நாம எந்த இடத்துக்குப் போனா, நமக்கு ரொமான்ஸ் பண்ண வசதியாயிருக்கும்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. நீ சொல்லு பட்டாசு..”
“இப்போ நாம எங்க வீட்டுக்கு தான் போறோம்.. அது ரொமான்ஸா இல்லை பைட்டிங்கான்னு அங்க போய் சொல்றேன்.. இப்போ கிளம்புங்க..” என்று சொல்லிவிட்டு அவனுடன் காரில் ஏறி சென்றாள்.
“என்ன ஆன்ட்டி பரத், டென்மந்த்ஸ் கழிச்சு முகூர்த்த நாள் பார்க்க சொன்னானா?” என்றாள் ஜானு.
“எப்படி ஜானு? கரெக்டா கேட்கற?”
“அதான் மெதுவா உங்களுக்கு மட்டுமே சொல்லறேன்னு நினைச்சுக்கிட்டு, எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்திட்டு போறானே.. இதுல நீங்க வேற, எப்படி கண்டுப்பிடிச்சன்னு கேள்வி? ஆன்ட்டி பரத் கேட்டதுக்காகவாவது அவனோட கல்யாணத்தை அடுத்த முகூர்த்திலேயே முடிச்சுடனும்.. என்ன சொல்றீங்க?” என்று சிரித்தவள் “சரி.. சரி வாங்க நாம வேலையைப் பார்க்கலாம்.” என்றாள். அவர்கள் அனைவரும் மேலும் சிறிதுநேரம் அங்கேயே பேசிக்கொண்டிருந்தார்கள்.
வெளியே வந்த சஹி, “அவ்யுக்த் ஒரு நிமிஷம், நான் என் வண்டி சாவியை அப்பாட்ட கொடுத்துட்டு வரேன்.” என்றவள் அவ்யுக்தின் கேள்வியானப் பார்வைக்கு, “அப்பாவும் அம்மாவும் ஆட்டோல வந்தாங்க.. நான் அப்படியே ஆபீஸ் போகலாம்ன்னு வண்டில வந்துட்டேன்.. இருங்க கொடுத்துட்டு வரேன்.” என்று பதிலளித்தாள்.
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா?, சரி..சரி.. நாம உன் வண்டியிலேயே போகலாம்.. டூ வீலர் ஜெர்னி சூப்பரா இருக்கும் தியா.. வெயிட்” என்றவன் தன் கார் சாவியை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தான்.
தன்னிடம் வண்டி சாவியை நீட்டிய சஹியைப் பார்த்து, “என்னது இது என்றான்?”
“வண்டி சாவி”
“இதை எதுக்கு என்கிட்டே கொடுக்கற? நீ தான் ஓட்டபோகிறாய்.. நான் உன் பின்னாடி உட்கார்ந்துட்டே உன்னை ரசிப்பேன்.. எடு வண்டியை.” என்று அவளை கைபிடித்து இழுத்து, வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு சென்றான்.
வண்டியில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ததும் பின்னால் அவ்யுக்த் ஏறிக்கொண்டவுடன் வண்டியை கிளப்பினாள் சஹி.
“நான் கீழ விழுந்துடுவேன் போல இருக்கு.. உன்னைப் பிடிச்சுக்கட்டுமா?” என்றான் அவ்யுக்த்.
சஹி “ம்ம்..“ என்றதும், அவளின் இடையோடு தன் இரு கையையும் சேர்த்து இறுக்கினான் அவ்யுக்த்.
அவனின் அணைப்பில் தன்னிலை இழந்த சஹியின் கைகளில் இருந்த வண்டி நர்த்தனம் ஆடியது.
“நீ என்ன நடு ரோட்டுல நின்னுக்கிட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்க..”
அவன் கேட்டதும் பதிலேதும் பேசாமல் வண்டியை ஓரமாக நிறுத்தினாள்.
“இறங்குங்க”
“எதுக்கு?”
“நீங்களே ஓ...ஓட்டுங்க.. என..எனக்கு.. ஓட்ட முடியலை..”
“தியா, இப்போ என் கவனம் உன் மீது தான் இருக்கு.. சாலையின் மேல் இல்லை.. இப்படி இருக்கும்போது நான் வண்டியே ஓட்ட மாட்டேன்.. ப்ளீஸ் நீயே ஓட்டிடு.. நான் சமத்தா உட்கார்ந்துட்டு வரேன்..”
“இல்லை அவ்யுக்த்.. என்னாலேயும் முடியலை.. ப்ளீஸ்.“
“சரி சரி விடு நானே ஓட்டறேன்..” என்று கீழே இறங்கினான்.
சஹியும் இறங்கியதும், அவ்யுக்த் ஏறி அமர்ந்து “ம்ம் ஏறிக்கோ” என்றான்.
சஹி அன்று புடவை கட்டியிருந்ததால் ஒன்சைடாக ஏறி அமர்ந்து, அவளின் வலக் கையால் அவ்யுக்தின் வயிற்றை அணைத்துப் பிடித்துக்கொண்டாள்.
“தியா, இனிமே டூ வீலர்ல போனோம்ன்னா இப்படி புடவைக் கட்டிட்டு வராதே.”
அவளும் புரிந்துகொண்டு “உங்களை” என்று அவனின் தலையில் லேசாக தட்டினாள்.
“ஹா..ஹா.” என்று சிரித்தபடி வண்டியைக் கிளப்பினான் அவ்யுக்த்.

பெரியவர்கள் அனைவரிடமும் இந்த இரண்டு ஜோடிகளின் திருமணத்தை சீக்கிரம் வைக்கும்படி வேண்டிக்கொண்டு, இந்த இரண்டு ஜோடிகளுக்கு திருமண வாழ்த்தையும் தெரிவித்து விடை பெறுவோம்.
 
இது என்னுடைய முதல் கதை.. நிறைய பிழைகள் இருக்கும். அனைத்துவிதமான பிழைகளும் இருக்கும். "கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்!" என்ற வாக்கியத்தினை மனதில் கொண்டு எந்தவிதமான திருத்தங்களும் செய்யாமல் அப்படியே கதையின் அத்தியாயங்களை பதிவிட்டிருக்கிறேன். ("சோம்பேறி!!" என்று திட்டுவது என் காதுகளில் விழவில்லை:LOL:)
இந்த கதையுடன் பயணித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் நன்றி!!
கதையை படித்து உங்கள் கருத்துக்களையும், விருப்பங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
நன்றி!!நன்றி!!
 
Top