Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 19

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 19

பரத் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தலையை கோதியபடியே நளினாவிடம் பேச தொடங்கினான்.

“நளின், அப்பா என்ன சொல்லப்போறார்ன்னு புரியுதா?”

“புரியுது பரத்.... அவங்க இங்க வரட்டும், வந்ததுக்கு பிறகு முடிவு எடுக்கலாம்.. அதுவரை நீங்க அவங்க கூட பேசிட்டு இருங்க.. அவங்க போன் பண்ணும்போது கொஞ்சம் பேசுங்க.. மூட்அவுட் ஆகாம இருக்க முயற்சி பண்ணுங்க...”

பரத் ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“டேய் பரத், நளினா சொல்றதுக்கு பதில் சொல்லுடா.” என்றான் அவ்யுக்த்.

“சரி நளின் நான் அவங்களோட பேச ட்ரை பண்றேன்” என்று சொல்லிக்கொண்டே சாஹித்யாவிடம் திரும்பி, “சாரி சஹி, நீங்க இன்னிக்கு தான் மீட் பண்ணி இருக்கீங்க.. உங்களுக்கு டைம் கொடுக்காம நான் ஏதேதோ பேசிட்டு இருக்கேன்” என்று சொன்ன பரத்தின் முதுகில் ஒரு அடியை வைத்தான் அவ்யுக்த்.

“அண்ணா, நீங்க இப்படி சொல்றது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.. கவலையே படாதீங்க இனிமே தினமும் பேசி பேசியே அவ்யுக்தை ஒரு வழி பண்ணிடறேன்” என்றாள் சாஹித்யா.

பரத் அவள் சொன்னதை கேட்டதும் சிரித்தான். பரத் சிரிப்பதை பார்த்த அவ்யுக்த் திரும்பி தியாவை காதலுடன் ஏறிட்டான். அவ்யுக்தின் காதல் பார்வையை தாங்க முடியாமல் தலையை குனிந்துக்கொண்டாள் சாஹித்யா. அவளின் நாணத்தை மிகவும் ரசித்தான் அவ்யுக்த்.

அவர்களை பார்த்த பரத், “அவ்யுக்த் நான் நளினாவ கூட்டிக்கிட்டு கிளம்பறேன் ரொம்ப டைம் ஆகிடுச்சு, நீ சஹியோட பேசிட்டு கிளம்பு டா.” என்றான்.

பரத் சொன்னதை கேட்ட நளினா, “சரி சஹி, நாங்க கிளம்பறோம்.... நைட் உன் கிட்ட பேசறேன்.. பாய் அண்ணா நாளைக்கு ஆபிஸ்ல மீட் பண்ணலாம்” என்றாள்.

அவர்கள் கிளம்பியதும் இருவரும் சில நிமிடங்கள் பேசாமலேயே அமர்ந்திருந்தனர். அவர்களின் மௌனத்தை கலைப்பதுபோல் சஹியின் செல்போன் ஒலித்தது.

போனை எடுத்துப்பார்த்த சஹி அதில் அம்மா அழைக்கிறாள் என்றறிந்ததும் போனை எடுத்து காதில் வைத்து “சொல்லுமா” என்றாள்.

“சஹி எப்போ வருவ? ரொம்ப லேட் ஆச்சேன்னு தான் கால் பண்ணினேன்.”

“இதோ அம்மா கிளம்பிட்டே இருக்கேன்”

“சரி சீக்கிரம் வா.”

“சரிம்மா” என்று போனை ஆப் செய்துவிட்டு அவ்யுக்த்தை திரும்பி பார்த்தாள்.

“அவ்யுக்த் நான் கிளம்பவா? அம்மா போன் செஞ்சுட்டாங்க..”

அவ்யுக்த் ஒன்றுமே பேசாமல் தன் கையை நீட்டினான். சாஹித்யாவும் தன் கையை அவன் கை மேல் வைத்தபடி அவனை பார்த்தாள்.

தியாவின் கைகளை மென்மையாக வருடியபடி “தியா, நான் இன்னிக்கே என் அம்மா அப்பா கிட்ட நம்மள பத்தி சொல்லிடுவேன்.. அதை பத்தி பேச நைட் உனக்கு கால் பண்ணலாமா?” நீ எப்போ உன் வீட்டுல சொல்ல போற?”

“நான் என் அப்பா கிட்ட எதையும் மறைக்க மாட்டேன் அவ்யுக்த் பட்..” என்று சிறிது நிறுத்திவிட்டு “என் அம்மா கிட்ட என்னால சொல்ல முடியுமான்னு தெரியல... ஆனா அம்மாவையும் அப்பாவ வச்சு சமாளிச்சுடுவேன்... இது எல்லாம் இன்னிக்கே செய்வேனான்னு தெரியல.. “

“தியா நான் இன்னிக்கு கிளம்பும்போதே ஈவ்னிங் வந்து எல்லா விஷயமும் சொல்றேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்... அவங்க இந்த நாளுக்கு தான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.... இன்னும் பேச எனக்கு நிறைய விஷயம் இருக்கு தினமுமே நான் கால் பண்றேன் சரியா?” என்றான் அவ்யுக்த்.

“நான் பரத் கிட்ட உங்களை பேசியே ஒரு வழி பண்றேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா.. நீங்க அதை செஞ்சே தீருவேன்ன்னு இருந்தா நான் என்ன பண்ண முடியும்? அப்புறம் என் கிட்ட இருந்து உங்க காதை யாருமே காப்பாத்த முடியாது.. எதுக்கும் யோசிச்சு முடிவு பண்ணுங்க.. பிறகு என்னை குத்தம் சொல்ல கூடாது” என்றபடியே சிரித்தாள் சாஹித்யா.

அவள் சிரிப்பதை ரசித்தபடியே “ ஐயோ! எனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. பட் நமக்கு எப்படியும் சீக்கிரமே கல்யாணம் ஆயிடும்.. அப்போ நீ பேசிட்டே தான இருக்க போற.. அதுக்கு தான் இப்போவே கொஞ்சம் ப்ராக்டிஸ் எடுத்துக்கலாம்னு தான் தினமும் கால் பண்றேன்னு சொன்னேன்.” என்று சொல்லிவிட்டு அவனும் சிரித்தான்.

“சரி கால் பண்ணுங்க... நான் கிளம்பறேன் பாய் அவ்யுக்த்.” என்றபடியே அவன் கைகளில் இருந்த தன் கையை எடுக்க முனைந்தாள் சாஹித்யா. அதற்குள் தன்னுடைய மறு கையால் அவள் கையை அழுத்தி தடுத்தான் அவ்யுக்த்.

சாஹித்யா என்ன என்பது போல் புருவம் உயர்த்த, கண்களாலேயே அவளிடம் அனுமதி கேட்டு அவள் கரத்தில் தன் இதழை ஒற்றி எடுத்த அவ்யுக்த் சாஹித்யாவின் முகம் நோக்கினான். அவனின் செய்கையில் முகம் சிவந்த தியா வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.

அவள் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி அவளின் கண்ணோடு கண் நோக்கி, “ஐ லவ் யூ தியா” என்றான்.

“மீ டூ அவ்யுக்த்”

இருவரும் ஒருவித மோன நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். சில நிமிடங்களில் தன்னிலை அடைந்த சாஹித்யா “இப்போ கிளம்பலாம்” என்றாள்.

இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.

வீட்டினுள் நுழைந்த சாஹித்யா அம்மாவிடம் சென்று “அப்பா எங்கேம்மா?” என்று கேட்டாள்.

“சஹி, அப்பா ஏ.டி.எம். போயிருக்கார்டி, மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம் இப்போ தான் போன் வந்தது.. நீ வண்டி ஒட்டிக்கிட்டு இருப்பன்னு தான் கால் செய்யல.. இப்போ கார் வந்துடும்.. நீ இங்க இருக்கியா? இல்ல எங்க கூட வரியா?”

“அம்மா மாமாவுக்கு என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தார்... நீங்க ரெண்டுபேரும் போங்கம்மா என்னால லீவ் போட முடியாது.”

“இன்னிக்கு கார்த்தால பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாராம், தலை பின்னாடி அடி பட்டிருக்கு.. அத்தை தான் அட்மிட் பண்ணி இருக்காங்க.. இன்னும் கண்ணு முழிக்கலைன்னு எனக்கு பயமா இருக்கு நீங்க வாங்கன்னு ஒரே அழுகை உங்க அத்தை.. நான் தான் ஒண்ணும் ஆகாதுன்னு ஒரு அதட்டு போட்டு போனை வச்சேன்.. ஆனா எனக்கும் மனசு கிடந்து அடிச்சுக்குது.. “

“அம்மா கவலை படாதே, மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது.. நீங்க போறதுக்குள்ளே கண் முழிச்சுடுவார் பாரேன்” என்று தன் அன்னையை கட்டிக்கொண்டாள் சாஹித்யா.

வாசலில் தந்தை வரும் அரவம் கேட்டு திரும்பிய சஹி, “என்னப்பா கார் வந்துடுச்சா?” என்றாள்.

“இன்னும் அரை மணி நேரத்துல கார் வந்துடும், அதுக்குள்ள நீ ரெடி ஆகிக்கோ பங்கஜம் நாம கிளம்பலாம்” என்றார் ராகவன்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே அப்பாவிடம் தன்னுடைய காதல் விஷயத்தை சொல்ல நினைத்தவள், இருக்கும் நிலையை புரிந்து தந்தை ஊரிலிருந்து வந்ததும் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

அம்மாவிற்கு பக் செய்ய உதவி செய்தாள் சஹி. அவர்கள் கிளம்பியதும் கதவை லாக் செய்து உள்ளே வந்தாள் சஹி. மூச்சுக்கு மூன்னுறு தடவை தன் அம்மா சொன்ன “பத்திரம் சஹி, யார் வந்தாலும் உடனே கதவ திறந்துடாத, ஆபிசே கதின்னு கிடக்காம கொஞ்சமாவது சமைச்சு சாப்பிடு... “ என்ற வார்த்தைகள் அப்பொழுதும் அவள் காதில் ஒலிப்பது போன்றே இருந்தது. காதை லேசாக தேய்த்து விட்டுக்கொண்டே , முகத்தில் லேசான புன்னகையுடன் “அவ ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல சீக்கிரம் கிளம்பு” ன்னு அப்பா மட்டும் சொல்லலைன்னா இந்த அம்மா இப்போதைக்கு கிளம்பியிருக்க மாட்டாங்க” என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டாள்

அவ்யுக்த் தன் வீட்டிற்கு சென்றதும் அவனை சூழ்ந்துக்கொண்டனர் அவனது பெற்றோர்கள்.

“அவ்யுக்த், சொல்லுடா என்ன விஷயம் ?” என்றாள் கௌசி.

“கௌசி கொஞ்சம் இரு அவனே சொல்லுவான்... நீ சொல்லு டா.”

“அது வேற ஒண்ணும் இல்லை மா, நம்ம வீட்டுல ஒரு கூஜா தான இருக்கு.. இப்போ இன்னொன்னு வாங்கணும் அதை தான் உன் கிட்ட சொல்லி வாங்கலாம்னு நினைச்சேன்” என்றான் சிரித்துக்கொண்டே.

வேணுகோபாலிற்கு விஷயம் புரிந்தது. அவ்யுக்த் தன் திருமண பேச்சை எடுத்தாலே “இப்போ என்னால கூஜா தூக்க முடியாதும்மா” என்று விளையாட்டாக சொல்லுவான். இப்பொழுது அவனே கூஜா வாங்க வேண்டும் என்று சொல்வது அவன் மனதை வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த பெண் யாரென்று கேட்க நினைத்தார் வேணு, அதற்குள்ளாக தன் தர்மபத்தினி கேட்ட கேள்வியில் தலையில் அடித்துக்கொண்டே மனதில், “இவளை!!!! இந்த கேள்வி ரொம்ப முக்கியம்” என்று திட்டிக்கொண்டார்.

கௌசிக்கு அவ்யுக்த் எதுக்கு கூஜா வாங்க சொல்றான்னே புரியவில்லை. சரி பையன் சொல்லிட்டானே வாங்கிடலாம் என்று நினைத்தவள் “எதுல வாங்கட்டும்பா? நம்ம கிட்ட வெள்ளில இருக்கு அதுலேயே வாங்கிடட்டுமா?” என்று கேட்டாள்.

அவ்யுக்த் அம்மாவின் கேள்வியில் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான். அவன் எதுக்கு சிரிக்கிறான் என்றறிய தன் கணவனை ஏறிட்டாள் கௌசல்யா.வேணுகோபால் தலையில் அடித்துக்கொண்டே “உன்னை“ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்ததும் தான் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிய ஆரம்பித்தது. தன் மகனை திரும்பி பார்த்தார். எப்பொழுதும் இருக்கும் புன்னகையுடன் இன்று கூடுதல் மலர்ச்சி இருப்பது இப்பொழுது தான் கௌசல்யாவின் கண்களுக்கு புலப்பட்டது.

“டேய், புதுசா ஏதோ கூஜான்னு ஆரம்பிச்ச உடனே புரிஞ்சு இருக்கணும் எனக்கு... வேற ஏதோ யோசனைல இருந்ததுனால என்னால யூகிக்கமுடியல... சரி சிரிச்சது போதும், என் மருமக யாரு டா?”

“ம்ம், அம்மா இப்போ தான் நீ பார்ம்க்கே வந்து இருக்க.. அது என்ன பொண்ணு யாரு, என்ன?ன்னே கேட்காம... நேரா மருமக ன்னே சொல்லிட்டே?”

“அதுவாடா, அதான் நீயே கூஜா வாங்கணும் சொல்லி அவள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு மறைமுகமா சொல்லிட்டியே, அதான் அவ தான் என் மருமக ன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“கௌசி, போதும் கொஞ்ச நேரம் பேசாம இரு.. அவ்யுக்த் எல்லாம் சொல்லி முடிக்கட்டும்.” என்றார் வேணுகோபால்.

“சரிங்க, அவ்யுக்த் நீ சொல்லு.”

“அம்மா இத பாருங்க” என்று தன் ப்ளாக்பெரியை நீட்டினான் அவ்யுக்த். அதில் தியா என்ற பெயரில் அவளுடைய நம்பர் இருந்தது.
அதை வாங்கி பார்த்த கௌசி, “என் மருமக பேர் , ரொம்ப நல்லா நல்லா இருக்கு” என்றுவிட்டு “தியா” என்று சொல்லி பார்த்தார்.

“கௌசி, அவனை பேசவிடு.” என்ற வேணுகோபாலின் வார்த்தைகள் கௌசல்யா தன் பேச்சை நிறுத்துவதற்கு போதுமானதாக இருந்தந்து.

“அம்மா, தியா யாருன்னா” என்று ஆரம்பித்து சாஹித்யாவை பற்றி அனைத்தையும் சொன்னான் அவ்யுக்த். பார்க்காமலே அவள் மீது வந்த காதலையும் அதே போல் தியாவுக்கும் அவன் மேல் வந்த காதலையும் சொன்னான். இன்று தான் அவளை நேராக பார்த்ததையும் சொன்னான். கடைசியாக பரத் பிரச்சினைகளையும் சொல்லி முடித்தான்.

கௌசல்யாவுக்கு பரத்தும் நளினாவும் ஒருவரை ஒருவர் விரும்பவதை பரத் சொல்லி இருந்தான்.

“ராகவன் சார் நம்ம சம்பந்தி ஆக போறாரா?” என்றார் வேணுகோபால்.

“இன்னும் என்ன சார்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இனிமே சம்பந்தின்னு சொல்லுங்க” என்று அவரைப்பார்த்து சொன்ன கௌசல்யா திரும்பி அவ்யுக்தை பார்த்து, “பரத் மனசுக்கு அவனுக்கு எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்டா அவ்யுக்த், நானும் அப்பாவும் எப்போ டா சஹி வீட்டுல பேசட்டும்? நான் அவளையும், அவளோட பெய்ண்டிங்ஸ் பத்தியும் சொல்லும் போதெல்லாம் என்னை திட்டிவிட்டு... கடைசில நீயே அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட எனக்கு ரொம்ப சந்தோஷம்மா இருக்கு டா அவ்யுக்த்.” என்று சொன்னார்.

“அம்மா அவசரபடாதீங்க, தியா முதல்ல அவங்க வீட்டுல பேசட்டும், இப்போ முதல்ல பரத் கல்யாணம் தான்... அதனால நாம அந்த வேலைய பார்க்கலாம் ஓகே வா “

“சரி டா, இப்போ நீ பரத்க்கு கால் பண்ணி கொடு, வர வர அவன் என் கிட்ட ஒண்ணுமே சொல்றதில்லை அதை என்னன்னு கேட்கறேன்?”
அம்மா கேட்டதும் உடனே வீட்டு லேன்ட் லைன் போனை எடுத்து பரத்திற்கு கால் செய்தான் அவ்யுக்த்.

சில ரிங்கிலேயே போனை எடுத்த பரத் அந்தபக்கம் அவ்யுக்தின் “ஹலோ” வை கேட்டு, “அது எப்படி டா நான் போன் பண்ணனும்னு நினைக்கும் போதெல்லாம் நீயே கரெக்டா கால் செய்யற?” என்றான்.

“இல்ல டா அம்மா உன் கிட்ட பேசணும்…. இல்ல இல்ல உன்னை திட்டனும் கால் பண்ணுன்னு சொன்னாங்க டா அதான் கால் செஞ்சேன் டா.... இரு அம்மா கிட்ட தரேன் அவங்க கிட்ட பேசிட்டு நீ எதுக்கு கால் செஞ்சன்னு சொல்லு” என்றான் அவ்யுக்த்.


“டேய் அவ்யுக்த் ஏதோ என்னை செமத்தியா மாட்டிவிட்டு இருக்க, கௌசிமா என்னத்துக்கு திட்ட போறாங்கன்னு கொஞ்சம் க்லூவாது கொடு டா”.

பரத் க்லூ கேட்டதும் “ஹா...ஹா..ஹா.!” என்று பெரிதாக சிரித்தபடியே “அதை அம்மாவே சொல்லுவாங்க கேட்டுக்கோ” என்றபடியே கார்ட்லெஸ் போனை அம்மாவிடம் நீட்டிவிட்டு தன்னறையை நோக்கி சென்றான் அவ்யுக்த்.

மாடிப்படி ஏறும்போது அம்மாவின் “பரத் கௌசிமா உன்மேல ரொம்ப கோபமா இருக்கேன்” என்ற வார்த்தைகளை கேட்டு லேசாக புன்னகைத்தபடியே அறைக்குள் சென்று கதவை தாளிட்டான்.

முகம் அலம்பி, வேறு உடை உடுத்தி கீழே செல்வதற்காக கதவை திறக்க கைவைத்தபோது அவனுடைய செல்போன் ஒலித்தது.
போனில் தியாவின் நம்பரை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் போனை ஆன் செய்தான்.”

“என்ன மேடம் இங்க விட்டுல என்ன சொன்னாங்கனு தெரிஞ்சிக்க இவ்ளோ ஆசையா?”

“ம்ம் அப்படியும் வச்சுக்கலாம் சார்”.

“என்னது சாரா?”

“நான் மேடம்ன்னா, நீங்க சார் தான்.”

“அப்போ நீ தியான்னா நான் யாரு?” என்றான் வேண்டுமென்றே. அவள் இதுவரை தன்னை முழுப்பெயர் வைத்தது தான் அழைப்பது அவனுக்கு தெரியுமே.

“ம்ம் அவ்யுக்த் தான், இந்த பேர் ரொம்ப அழகா இருக்கு... அப்படியே இருக்கட்டும், இந்த பேருக்கு கிளியர் மைன்ட்ன்னு அர்த்தம்... அதனால அதை கொலை செய்யல.... அப்புறம் இது கிருஷ்ணர் பேர் தான அதை எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கலாம். இப்போ பேர் கிளியர் ஆச்சா அவ்யுக்த்?”

“ரொம்ப கிளியர் தியா, எதுக்கு கால் செஞ்ச தியா? வீட்டுல நம்மள பத்தி சொல்லிட்டியா?”

“இல்லை அவ்யுக்த், அப்பா அம்மா இப்போ தான் கிளம்பி ஊருக்கு போயிருக்காங்க..” என்று ஆரம்பித்து தன் மாமாவிற்கு நடந்ததை கூறினாள். “ இப்போ தான் அம்மா கால் செஞ்சாங்க மாமா கண் முழிச்சுட்டார் இனிமே ஒண்ணும் ப்ராப்ளம் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் ன்னு அம்மா சொன்னங்க... அம்மாட்ட பேசிட்டு அப்புறம் அத்தை கிட்டயும் பேசிட்டு இப்போ உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் அவ்யுக்த்.”

“மாமா க்கு ஒண்ணும் ஆகாது தியா கவலைபடாதே, நீ தனியா இருக்கியே நான் வரட்டுமா?” எனும்போது தியா ஏதோ சொல்லவருவதை அறிந்த அவ்யுக்த், “பயப்படாத என் கூட அம்மாவையும் கூட்டிக்கிட்டு வரேன் போதுமா?”

அவன் சொன்னதை கேட்ட தியா, “ஐயோ! நான் அதை சொல்லலை.”

“அப்போ நான் மட்டும் தனியே வரட்டுமா?”

“என்னை பேசவே விடமாட்டீங்களா?”

“ஹா..ஹா...ஹா..ஹா..! நீ சொல்லு தியா.”

“நீங்க கௌசிஅன்டி.. இல்ல இல்ல அத்தை கிட்ட பேசிட்டீங்களா? அவங்க என்ன சொன்னாங்க அதை கேட்கத்தான் கால் செஞ்சேன்.”

“ம்ம் பேசிட்டேன் தியா, அவங்க ரெண்டுபேருக்கும் முழுசம்மதம், இன்பாக்ட் இப்போவே ராகவன் அங்கிள் கிட்ட பேசி உடனே கல்யாணத்தை முடிக்க ஆசை... நான் தான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, தியா அவங்க வீட்டுல முதல்ல பேசட்டும் அப்புறம் நீங்க பேசலாம் ன்னு சொல்லியிருக்கேன் தியா” என்றான் அவ்யுக்த்.

“தேங்க்ஸ் அவ்யுக்த், எனக்கு என் பேரன்ட்ஸ் கிட்ட நானே சொல்லத்தான் ஆசை, அது தான் கரெக்டும் கூட..... நீங்க என்னை புரிஞ்சு அத்தைக்கிட்ட சொன்னதுக்கு தான் இந்த தேங்க்ஸ் அவ்யுக்த்.”

“ஹெலோ மேம், நீங்க சொன்ன தேங்க்ஸ் இப்போ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மேடம்.... அதை நேர்ல கொடுத்தாதான் அதுவும் கொடுக்கவேண்டிய விதத்துல கொடுத்தாதான் ஏற்றுக்கொள்ளப்படும் மேடம்.”

“கொடுக்கவேண்டிய விதத்துலதான கொடுத்துட்டா போச்சு” என்று சிறிது நிறுத்தி சிரித்துக்கொண்டே “ என் கைக்கும் வேலை கொடுத்து ரொம்ப நாளாச்சு” என்றாள்.

“அடிப்பாவி, ஒரு பேச்சுக்கு கூட உன் கிட்ட ஒண்ணும் சொல்லமுடியாது போலிருக்கே”

“கரெக்ட் அவ்யுக்த், இதையெல்லாம் இப்போதிலிருந்தே புரிஞ்சு நடந்துக்கிட்டா நமக்குள்ள பிரச்சினையே வராது மா.”

“தங்கள் சித்தம் என் பாக்கியம் இளவரசி, இப்போ உங்க அத்தைமாரிடம் உரையாடுகிறீர்களா?”

“சேவகா, இந்த இளவரசி அந்தப்புரத்திற்கு செல்ல இருக்கிறார்... மகாராஜா மற்றும் மகாராணியிடம் உரையாடியபிறகு, இளவரசி தன் அத்தைமாரிடம் உரையாடுவார். தற்சமயம் இளவரசியிடம் புறா எதுவும் கைவசம் இல்லையாதலால் தன்னுடைய அத்தைமாருக்கு மிகவும் வேண்டிய ஒற்றன் மூலம் அனுப்பியதாக அத்தைமாருக்கு தகவல் தெரிவிக்கவும் சேவகா.”

“தங்களுக்கு சேவகம் செய்யத்தான் காத்திருக்கிறேன் இளவரசி.”

“உன் வாழ்நாள் முழுமைக்கும் எனக்கு சேவகம் செய்யத்தான் நீ அவதரித்திருக்கிராய் சேவகா,” என்று நிறுத்தி “ஐயோ! போதும் அவ்யுக்த் என்னால முடியலை.... நான் எங்க வீட்டுல பேசினதுக்கு பிறகு அத்தை கிட்ட பேசறேன்.. bye அவ்யுக்த்.. நாளைக்கு பேசறேன்..”

“ஓகே பிரின்சஸ், bye தியா.” என்று போனை ஆப் செய்துக்கொண்டே கீழே வந்தான்.

இன்னமும் கௌசி பரத்திடம் பேசிக்கொண்டிருந்தாள் .

“பரத், ரொம்ப சந்தோஷம் டா, எப்போ நீ ஏர்போர்ட்க்கு போகணும்?”

எதுக்கு பரத் ஏர்போர்ட்க்கு போகிறான்.. என்ன விஷயம் என்று ஒண்ணும் புரியாமல் போனை தன்னிடம் கொடுக்குமாறு கௌசல்யாவிடம் ஜாடை செய்தான் அவ்யுக்த்.

“பரத் இருடா, அவ்யுக்த் கேட்கறான் அவன்கிட்ட கொடுக்கிறேன்.” என்றபடியே அவனிடம் போனைக்கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார் கௌசி.

“டேய் என்னடா, எதுக்கு ஏர்போர்ட் போற? ஈவ்னிங் பேசும்போது கூட ஒண்ணும் சொல்லலியே?” என்றான் அவ்யுக்த்.

“நானும் நளினாவும் பேசிட்டே அவ வீட்டுக்கு போகும்போது சரத் கால் செஞ்சான் டா.(சரத் பரத்தின் கூடப்பிறந்த அண்ணன்) அதைப்பத்தி உன்கிட்ட பேசனும்ன்னு நினைக்கும்போது தான் நீயே கால் செஞ்சடா.... கௌசிமாவும் என் கிட்ட ஒரு விஷயமும் சொல்றதில்லைன்னு ஒரே திட்டு.. அதான் இந்த விஷயத்தை பர்ஸ்ட் கௌசிம்மா கிட்ட சொல்லிட்டு நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கிட்டேன் டா.”

“யார் நல்ல பிள்ளை? நீயா? பாவம் டா விட்டுடு..” என்று சிரித்துக்கொண்டே “இன்னமும் என்ன விஷயம்ன்னே சொல்லலடா பரத்” என்றான் அவ்யுக்த்.

“ஆமா நீ சொல்ல விட்ட பாரு.. என்னை ஏதாவது சொன்னேன்னு வச்சிக்கோ நம்ம வியுவர்ஸ் எல்லாம் பொங்கி எழுந்துடுவாங்க.. அதனால கொஞ்சம் அடக்கிவாசி.”

“டேய் பரத், இப்போ விஷயம் என்னன்னு சொல்ல போறியா, இல்லையா?” என்று பல்லைக்கடித்தான் அவ்யுக்த்.

“பொறுமை அவ்யுக்த், சொல்றேன். நானும் நளினாவும் பேசிக்கிட்டே போயிட்டு இருந்தோம்.” என்று ஆரம்பிக்கும்போது பரத்திற்கு அந்த நிகழ்வு கண் முன்னால் விரிந்தது.

சஹியிடம் அவ்யுக்த்திடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்ட பரத்தும் நளினாவும் காரில் ஏறியதும் சில நிமிடங்கள் மௌனத்திலேயே கரைந்தது.

மௌனத்தை கலைத்த நளினா, “பரத், ஆர் யு ஆல்ரைட்? ஏதோ யோசிச்சிக்கிட்டே கார் ஓட்டறீங்களே? கேர்புல் பரத்.” என்றாள்.

“நளின், நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டுல சம்மதம் சொன்னது சந்தோஷம் தான்.. பட் இப்போ அவங்க கஷ்ட்டத்துல இருக்காங்க அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யணும்னு யோசிக்கும்போது மைன்ட் கொஞ்சம் டல் ஆகுது.”

“அவங்களை கூட்டி வந்து என் கூட ஏன் வச்சிக்கணும்னு சில சமயம் தோணுது “ என்று நிறுத்தி நளினாவை திரும்பி பார்த்தான்.

நளினா “நீயா இப்படி?” என்ற பார்வையை திருப்பி தந்தாள். இருவரும் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தனர். சிறிது நேரம் கழித்து பரத்தே தொடர்ந்தான்.

“இப்படியெல்லாம் யோசிக்கும்போதே அவங்க பீகேவ் பண்ணின மாதிரியே நானும் பண்ணனுமான்னும் தோணுது. ஒருவேளை நான் அவங்களை கூட்டிகிட்டு வந்தாலும் என்னால சுமுகமா பேசி நடந்துக்க முடியுமா? அப்படி நான் பேசாம இருந்தா அது அவங்களை அவமானப்படுத்தற மாதிரி இருக்கும்ன்னும் தோணுது. இதெல்லாம் யோசிச்சா மைன்ட் ரொம்ப டிஸ்ட்ரப் ஆகுது நளின்.”

“பர்ஸ்ட் டைம் என் மைன்ட்ல ஓடறதை உன் கிட்ட சொல்லியிருக்கேன்.. இதுவரைக்கும் நான் அவ்யுக்த் கிட்ட தான் ஷேர் பண்ணியிருக்கேன்..” என்று சொல்லும்போதே பரத்தின் செல்போன் ஒலித்தது.

நளினாவின் பக்கம் செல்போன் இருந்ததால் பரத் அவளை எடுக்க சொல்லி ஸ்பிக்கரை ஆன் செய்ய சொன்னான்.

பரத்தின் “ஹலோ” வை கேட்டவுடன், “ பரத், நான் சரத் பேசறேன் டா” என்று தன் அண்ணனின் குரலை கேட்டதும் அதிர்ந்தான் பரத்.
 
பரத் மனதில் உள்ள பிரச்சனைய நளினியிடம்
சொல்வது அருமை
 
Top