Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 17

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 17

ஹோட்டலில் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்தான் அவ்யுக்த்.ஆர்டர் செய்தது வர சிறிது நேரம் ஆகும் என்றதால் அவள் சொன்னதை பற்றி தெரிந்துக்கொள்ள பேச ஆரம்பித்தான்.


சஹி “ஆமாம்” என்று சொன்னதும் உற்சாகமடைந்த அவ்யுக்த், “அது எப்படி இப்போ தான என்னை பார்க்கிற? பார்த்தவுடனே லவ்வா?” என்றான் அவளின் மனதை அறிந்துக்கொள்ளும் எண்ணத்துடன்.


அவ்யுக்த் கேட்ட கேள்வியில் அதிர்ந்த சஹி, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.கேட்ட கேள்விக்கும் அவனுடைய முகபாவத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்ததை கவனித்து , கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு , “இப்போ தான் லவ் ஸ்டார்ட் ஆச்சுன்னு நான் சொன்னேனா?” என்றாள்.


அவளையே காதலுடன் பார்த்துக்கொண்டிருந்த அவ்யுக்த் “அப்படின்னா எப்போதிலிருந்து இந்த லவ்?” என்றான்.


“எல்லாம் சொல்றேன் .. இதுக்கு உங்க பதில தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறமா சொல்றேன்.”


“ஓ! நான் என்ன சொல்லணும்னு நீ எதிர் பார்க்கிற?” என்றான் அவ்யுக்த்.


“உண்மைய சொல்லணும்னு எதிர்ப்பார்க்கிறேன்”.


“உனக்கு என்ன தோணுது?”


“எனக்கு தோணுறது எல்லாம் உண்மையா ஆகிடமுடியாது”.


“ஹா.ஹா.ஹா..! நல்லா பேசற”


“...............”


“என்ன அமைதியா இருக்க?”


“நீங்க பதில் சொல்லணும்னு தான் அமைதியா இருக்கேன்”.


“சரி சொல்றேன் ,எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு... இன்னிக்கு எப்படியும் உன் கூட பேசி முடிவு எடுக்கும் எண்ணத்துடன் தான் இங்க வந்ததே”. என்று சிறிது நிறுத்தி “இப்போவாவது உன் லவ் எப்போ ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்லாலமே தியா” என்றான்.


“அது என்ன தியா?”


“ம்ஹும் இப்போ நான் எதுவுமே சொல்ல மாட்டேன், பர்ஸ்ட் நீ சொல்லி முடி”.


“நளினா பரத்தை பற்றி சொல்லும்போது தான் உங்களை பற்றியும் சொன்னாள்.அதையே எண்ணிக்கொண்டு தூங்கியதாலோ என்னமோ அன்று இரவு எனக்கு கனவு“ என்று ஆரம்பித்து கனவை பற்றி சொன்னாள். நளினா மூலமாக அவ்யுக்த்தை பற்றி தெரிந்துக்கொண்டதையும் பகிர்ந்துக்கொண்டாள்.தன் வீட்டை வாங்கும் போது தன் தந்தை மூலம் அவனது குடும்பத்தை பற்றி அறிந்துக்கொண்டதை சொன்னாள்.பிறகு அவனுடைய புகைப்படத்தை கணினியில் பார்த்ததையும் சொன்னாள்.


“இப்போ என் லவ் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு சுருக்கமா தான் சொல்லி இருக்கேன்.. இப்போ உங்க டர்ன்.” என்றாள்.


“நானும் சுருக்கமாகவே சொல்லிடறேன் “ என்று ஆரம்பித்து தன்னுடைய காதலை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது ஆர்டர் செய்த உணவு வந்ததால் சிறிது நேரம் பேச்சு தடைப்பட்டது. சர்வர் உணவை அடுக்கிவிட்டு சென்றவுடன் மறுபடியும் பேச ஆரம்பித்தான் அவ்யுக்த்.


“தியா, என்னோட அம்மா எனக்கு தெரியாமலே பொண்ணு பார்க்கிற ஏற்பாடு வரைக்கும் பண்ணிட்டாங்க ...அந்த பொண்ணுக்கு லவ் அப்பைர் இருந்ததுனால நான் தப்பிச்சேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் சஹி.


“என்ன தியா? எதுக்கு இவ்ளோ ஆச்சர்யம்?”


“இல்லை எங்க வீட்டுலயும் இந்த கூத்து நடந்தது” என்று ஆரம்பித்து அன்று தன் வீட்டில் நடந்ததை பற்றி கூறினாள்.


“ம்ம் பரவாயில்லையே உனக்கும் எனக்கும் நிறைய விதத்துலே ஒற்றுமை இருக்கும் போல இருக்கே”.


அவனை காதலுடன் பார்த்துக்கொண்டே “ ம்ம் இருக்கும்” என்றாள்.


“என் மனதுக்கு பிடித்தவளை தேட அம்மா எனக்கு த்ரீ மந்த்ஸ் டைம் கொடுத்தாங்க” என்ற ஆரம்பித்து அவளுடைய பெய்ண்டிங்ஸ் மூலம் அவளை காதலிக்க ஆரம்பித்ததை கூறினான்.


“தியா நீயாவது என்னை பற்றி ஏதோ கொஞ்சமாவது தெரிஞ்சுகிட்ட.. அப்புறம் போட்டோஸ் பார்த்து இருக்க.. பட் எனக்கு உன்னை பற்றி ஒண்ணுமே தெரியல... யாருக்கிட்டயும் கேட்கவும் என்னுடைய ஈகோ ஒத்துக்கலை”.

“இதெல்லாம் வெளிய சொன்னா எல்லோரும் என்னை பார்த்துக் கண்டிப்பா சிரிப்பாங்க... ஒரு லீடிங் கம்பெனி ஓனர் இப்படி பார்க்காமலே லவ் பண்ண முடியுமா? படிச்சவனா இருந்துக்கிட்டு ஒருத்தரை பற்றி ஒண்ணுமே தெரியாம லைப்பார்ட்னரா சூஸ் பண்ணுவானா? அப்படி இப்படின்னு கேள்வி கேட்க அவங்களுக்கு தோணலாம்.. “

”பட் என்னை பொறுத்தவரை, அம்மா கல்யாணம் பற்றி பேசும்போதெல்லாம் அந்த பெய்ண்டிங்ஸ் தான் கண்ணு முன்னாடி வந்தது..அது என்ன மாதிரியான உணர்வுன்னு எனக்கு புரியவே ரொம்ப நாள் ஆச்சு.. என்னை அறியாமலேயே உன் பேரை போனில் “தியா” ன்னு ஸ்டோர் பண்ண வச்சது எதுன்னு எனக்கு புரியலை.. எனக்கு அதெல்லாம் புரிஞ்சப்போ, நான் படிச்சவன், கம்பெனி முதலாளிங்கறது எல்லாம் எனக்கு நினைவுக்கே வரல.. ஆனா நான் நானாகவே இல்லை என்று மட்டும் புரிந்தது தியா” என்றான்.


அவன் சொல்லுவதை கேட்டுகொண்டிருந்த சஹி, “அவ்யுக்த், நீங்க “ என்றுஆரம்பிக்கும்போதே “வெயிட் தியா” என்று சொன்னான் அவ்யுக்த்.


“தியா, நீ என்னை இப்படி தான் கூப்பிடுவியா?”


“........................”


“இன்னும் யோசிக்கலையா?”


“ஆமாம் அவ்யுக்த்”.


“சரி விடு உனக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடு.”


“........................”


“சரி இப்போ நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான்


“நீங்க சொல்லிட்டு இருந்ததை பற்றி தான் சொல்லவந்தேன் அவ்யுக்த், காதல் பல்ப், யாருக்கு வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எரியலாம்.. நிறைய பேருக்கு பார்த்து பேசி பழகினதுக்கு அப்பறம் எரிஞ்ச பல்ப்.. நமக்கு பார்க்காமலே எரிஞ்சிருக்கு அவ்ளோதான்”. என்று நிறுத்தி அவனை காதலுடன் பார்த்தாள்.


அதே மாதிரி பார்வையை அவளுக்கு பதிலாக கொடுத்து தன் கையை நீட்டினான் அவ்யுக்த். சஹியும் தன்னுடைய கையை அவன் கை மேல் வைத்ததும், “தேங்க்ஸ் தியா” என்றான்.


“எதுக்கு?”


“இல்ல என்னை பற்றி புரிஞ்சு” என்று ஆரம்பிக்கும் போதே பரத்தும் நளினாவும் தங்கள் உணவை முடித்துக்கொண்டு அங்கே வந்தனர்.


“டேய் உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சுடுச்சு அதான் நாங்க வந்துட்டோம்.. ஒண்ணும் ப்ராப்லம் இல்லையே “ என்று அந்த “ப்ராப்ல” த்துக்கு அழுத்தம் கொடுத்துக்கேட்டான் பரத்.


“எஸ் ப்ராப்லம் ன்னு சொன்னா மட்டும் நீ இங்க இருந்து போகவா போற?” என்று பரத்தின் காலை வாரினான் அவ்யுக்த்.


“சஹி பார்த்தியா நீ ஒண்ணுமே சொல்லவே இல்லையே.. எனக்கு உன்னை பற்றி தெரியும்... நீ யோசிக்காம அண்ணாக்கு பதில் சொல்லி இருக்க மாட்டன்னு... சொல்லுடி எப்போ உனக்கு பல்ப் எரிஞ்சது?” என்றாள் நளினா.


நளினா “பல்ப்” என்றவுடன் அவ்யுக்தும் சஹியும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டனர்.


“என்னை ஒருத்தன் கேலி பண்ணிட்டு இருக்கான் அதுக்கு என்னன்னு கேட்கிறத விட்டுட்டு இவளுக்கு எப்படி பல்ப் எரிஞ்சது தான் முக்கியமா போச்சு” என்று நளினாவை கேலி செய்தான் பரத்.


“நீங்க வாய கொடுத்து மாட்டிக்கிட்டிங்க அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? “ என்றாள் நளினா.


“சரி சொல்லு டா யாரு பர்ஸ்ட் ப்ரொபோஸ் பண்ணினீங்க?, இல்லை ப்ரொபோஸ் பண்ணும்போது என்னை மாதிரி நீயும் வாங்கி கட்டிக்கிட்டியா?” என்றான் பரத்.


அவனை தலையில் லேசாக தட்டியவாறே “அய்யோ! உங்களை “ என்றாள் நளினா.


“நீங்க ப்ரொபோஸ் பண்ணின அழகுக்கு உங்களை அடிக்காம விட்டேனேன்னு சந்தோஷப்படுங்க பரத்” என்ற நளினா பரத் ப்ரொபோஸ் செய்தது நினைவு வர உடனே பரத்தை காதலுடன் பார்த்தாள்.


அவள் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தபடி, “நான் உன் கிட்ட மெதுவா தான் என் காதலை சொல்லணும்னு நினைச்சிருந்தேன்.. பட் அன்னிக்கு நீ ரொம்ப கோபமா பேசிட்டு இருந்த.. அதான் பட்டுன்னு உன் கையில முத்தம் கொடுத்து மாதவன் ஸ்டைல்ல ப்ரொபோஸ் பண்ணினேன்”. என்றான் பரத்.


நளினா வெட்கத்துடன் தலை குனிந்தாள்.


அவ்யுக்த் இவர்கள் இருவரையும் பார்த்து மனதில், “பாரு இங்க வந்து ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குதுங்க, கொஞ்சம் தள்ளி போய் பண்ணினா நானும் தியாவுடன் ரொமான்ஸ் பண்ணலாம்”. என்று நினைத்துவிட்டு வெளியே, “பரத் என்னையும் உன்னை மாதிரி நினைச்சியா? ப்ரொபோஸ் பண்ணவைக்க ஒரு திறமை வேண்டும் டா, அது என் கிட்ட நிறையவே இருக்கு” என்று தன்னுடைய டி-ஷர்டின் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் அவ்யுக்த்.


பரத் அவனருகே நெருங்கி சென்று, “டேய், நீ உள்ள ஏதோ நினைச்சிட்டு வெளிய ஏதோ சொல்ற போலிருக்கே” என்று ரகசியம் பேசினான்.


அவ்யுக்த், பரத்தின் கேள்விக்கு “ஆமாம்” என்பது போல் கண்களை மூடி தலையை ஒரு பக்கமாக அசைத்து தன் செய்கையாலேயே பதிலளித்தான்.


அவனின் தோளில் ஒரு அடியை பரிசளித்து விட்டு அவனைப்பார்த்து சிரித்தான் பரத்.


இவர்கள் இருவரது செய்கையையும் பார்த்த சஹி ஒன்றும் சொல்லாமல் மெளனமாக அவ்யுக்த்தை மட்டும் லேசாக முறைப்பது போல் பார்த்து விட்டு பிறகு நளினாவை பார்த்தாள்.


“அண்ணா, இன்னிக்கு உங்களுக்கு நேரம் நல்லா இருக்கு அதான் சஹி அமைதியா இருக்கா இல்லன்னா இப்போ இங்க நடந்திருக்கிறதே வேற” என்றாள் நளினா.


“நளின், சஹி உன்னோட பிரண்டு தான்டா அதுக்காக நீ பண்றது எல்லாம் அவளுக்கு கத்து தராத, அவ்யுக்தாவது என்னை மாதிரி அடி வாங்காம இருக்கட்டும்..” என்றான் பரத்.


“உங்களுக்கு இந்த அடி எல்லாம் பத்தாது, இன்னும் நல்லா போடணும்” என்றபடியே “சஹி, நீ இப்போ சொல்ல போறியா? இல்லையா?” என்றாள் நளினா.


“நளின், வீட்டுக்கு போனதுக்கு பிறகு சொல்றேன்”. என்றாள் சஹி.


“ம்ம் சரிடி அப்போ “ என்று நளினா பேசிக்கொண்டிருக்கும்போதே பரத்தின் செல்போன் ஒலித்தது.


போனை எடுத்து நம்பரை பார்த்தவன் முகம் சில நொடிகள் ஒளியிழந்து பின் தானே வரவழைத்துக்கொண்ட புன்முறுவலுடன் போனை ஆன் செய்தான்.


இவற்றை கவனித்த மற்ற மூவருக்கும் யார் அழைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலே தெரிந்தது.


“ஹலோ! சொல்லுங்க” என்றான் பரத்.

“இல்லை” ...“ஆமாம் “.... ம்ம்” .... “சொல்லுங்க” என்ற வார்த்தைகளை தவிர அவன் வேறு வார்த்தைகளை அவன் உபயோகிக்கவில்லை.


அந்தப்பக்கம் என்ன சொன்னார்களோ? திடீரென்று “இதோ அவளிடம் கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகளை அழுத்தமாக கூறிக்கொண்டே போனை நளினாவிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் பரத்.


போனை வாங்கிய நளினா, “ஹலோ! நளினா ஹியர்” என்றாள்.


“ஹலோ! நளினா, நான் அருணாச்சலம், பரத்தோட அப்பா பேசறேன் மா”. என்று அந்த பக்கம் கேட்ட குரலில் சற்று தள்ளி போய் நின்றிருந்த பரத்தை பார்த்தாள் நளினா.
 
Top