Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 14

Advertisement

Krithika Pradeep

Member
Member
மது தூங்க ஆரம்பித்தது தான் , யது அவன் சாப்பிட்டு விட்டு அவளுக்காக பால் எடுத்து வந்தான் அதை ஆவது சாப்பிட்டு கொண்டு தூங்கட்டும் என்று , எங்கே நம்ம கும்பகர்ணி எப்படி கூப்பிட்டும் முழிக்கவே இல்லை , சரி நம்மளே குடிக்க வைக்கலாம் என்று அவளை பூ போல் மேல சாய்த்து பாலை பருக வைத்தான் , அப்போதும் வாயை திறக்கவே அலுச்சாட்டியம் செய்து விட்டாள் . ஒரு வழியாக அவளுக்கு பாலை குடுத்து விட்டு படுக்க வந்தான் .

சரி தூங்கலாம் என்று கண்ணை மூடினாலும் தூக்கம் வரவே இல்லை , மதுவோ கட்டில் ஓரத்தில் படுத்து கொண்டு இருந்தாள் , நமக்கு மது தான் சரியான மருந்து என்று அவளை நெருங்கி நன்றாக அணைத்து படுத்து கொண்டான் .

இப்பொது யதுவிற்கு ஒன்று நன்றாக புரிந்தது , மது அவன் அருகில் இருக்கும் போது அவன் மனது அமைதியாக இருக்கிறது , அதுவே அவள் கொஞ்சம் அவனிடம் இருந்து விலகினால் கூட அவனால் அதை ஏற்று கொள்ள முடியும் போல் தோன்ற வில்லை .

வாட் ஹவ் யு டன் டு மீ பேபி , ஐ பீல் லைக் எ டீனேஜ் பாய் நொவ் , யு ஆர் ட்ரிவிங் மீ crazy என்று சொல்லிக்கொண்டே மதுவின் நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்தான் . முத்தம் குடுத்துவிட்டு அவளை இறுக்கி அணைத்தவாறே தூங்கி விட்டான் .


அடுத்தநாள் யாருக்கும் நிற்காமல் அழகாக விடிந்தது , எப்பொழுதும் போல் காலையில் எழுந்து யது ஜிம் சென்று விட்டான் .

மது எழவும் யது அங்கே இல்லை . அத்தை சொன்னது போல இவர் சிக்கிரமாவே எழுந்துடுவார் போல என்று நினைத்தாள் .
ஆனால் அதற்கு பின் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது , நாம எப்போ கட்டிலுக்கு வந்தோம் .

கோவில்-ல இருந்து கார் ஏறுனது ஞாபகம் இருக்கு ஆனா வீட்டுக்கு வந்ததோ , பெட்ல வந்து தூங்குனதோ ஞாபகம் இல்லையே என்று யோசித்தாள் , என்ன யோசித்தாலும் விடை தெரியவில்லை .

சரி ரிஷி கிட்ட கேட்டுக்கலாம் என்று , ரெபிரஷ் செய்து விட்டு கீழே சென்றாள் .

அத்தை என்று யதுவின் அம்மாவை கொஞ்சி முடித்து விட்டு , யதுவிற்கு சத்துமாவு வாங்கி கொண்டு மேலே சென்றாள் .

மது வருவதை பார்த்ததும் , பரவலையே ஒரு வழியாக மேடம் எழுந்துட்டீங்க போல என்று கிண்டல் செய்யவும் , நான் எப்பவும் சீக்கிரம் எழுந்துப்பேன் என்று வசனம் பேசினாள் , சொல்ல போனா நேத்து உங்களுக்கு முன்னாடி நான் தான் எழுந்தேன் என்றாள் .

அவள் அதை சொல்லவும் ஆமா ஆமா நேத்து நீ தான் சீக்கிரம் எழுந்த , அப்புறம் ஐ காட் எ பிக் ட்ரீட் for மை ஐஸ் என்றான் , அவன் எதை சொல்கிறான் என்று மதுவிற்கு புரியவில்லை , சரி நான் கீழே போறேன் அத்தை தேடுவாங்க என்று சொல்லி கொண்டு போய் விட்டாள் .

ஆனால் ரிஷி எழுந்து வந்த உடனே பாட ஆரம்பித்து விட்டான் .

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........

என்னடா ஆச்சு காலைலயே ரொமான்டிக் பாட்டு , ஒரே லவ் மூட் போல என்றாள் மது .

ஹலோ , யாரு ரொமான்டிக் , இந்த வீட்ல கல்யாணம் ஆகாத பையன் இருக்கேன் , அத பத்தி கொஞ்சம் கூட கவலை படாம நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பன்னிட்டு என்கிட்ட கேக்கறீங்களா என்றான் .

மதுவிற்கு நேத்து எதோ நடந்திருக்கிறது என்று தெரிந்து விட்டது , என்னாச்சு டா என்று கேட்டு தெரிந்து கொண்டாள் .

எதற்காக யது காலையில் தன்னை கிண்டல் செய்தான் என்று தெரிந்து விட்டது , யது அவளை குழந்தை போல் தூக்கி சென்றான் என்று கேட்ட உடனே மதுவிற்கு வெக்கம் வந்து விட்டது .

யது கிழே இறங்கி வரவும் , எல்லாரும் அப்போது தான் சாப்பிட அமர்ந்தார்கள் , மது யதுவிற்கு எடுத்து வைக்க எழவும் , உட்கார் மது எல்லோரும் செல்வ் சேர்வ் பண்ணிக்கலாம் என்று அவள் அத்தை தடுத்து விட்டார் .

சரி என்று அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் , மது இந்தா உனக்கு பிடிச்ச ஸ்வீட் பாதாம் ஹல்வா என்று மதுவிற்கு வைத்தார் .

மதுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை , ரிஷி தான் , என்னமா நீங்க மதுவிற்கு பாதாம் ஹல்வா சுத்தமா பிடிக்காது நீங்க அதை வைக்கறீங்க என்றான்.

என்னடா சொல்ற முன்னாடி எல்லாம் மது வீட்டிற்கு வந்தாலே பாதாம் ஹல்வா தான் கேட்பாள் .

அம்மா அது அப்போ , ஒரு தடவை இங்கே வந்துட்டு என்கிட்ட சொல்லாமலே போனால அப்போ இருந்து மது பாதாம் ஹல்வா சாப்பிடறத விட்டுட்டா என்றான் .

யதுவிற்கு ரிஷி எதை பற்றி பேசுகிறான் என்று புரிந்து விட்டது , அவன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக போய் விட்டது , அப்போ நான் கோவத்தில் விட்ட வார்த்தைக்காக மது அவளுக்கு பிடித்த விஷயத்தை இவ்வளவு வெறுக்கிறாள் என்றால் அதை சொல்லிய என்னை எவ்ளோ வெறுப்பாள் என்று நினைக்கவும் அவனுக்கு கஷ்டமாக போய் விட்டது..

எதுவும் சாப்பிடாமலே எழுந்து விட்டான் , எல்லாரும் கேட்கவும் ஒரு அவசர வேலை மறந்து விட்டேன் என்று சென்று விட்டான் .

மதுவிற்கு அதை பார்த்து வேலை வந்து போறது போல தெரிலயே என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
 
Ithu ellam ponngu oru epi ya thundu thunda norruki randu epi sollurathu.author ji ithu fowl play.
But epi was interesting.
 
Top