Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 19.2

Advertisement

Admin

Admin
Member
அவன் பைக்கை எடுக்கவும், ஜெனி பைக்கா... என்று அதிர்ந்தாள். என்னென்றால் அவனுடையது ஸ்போர்ட்ஸ் பைக்... கொஞ்சம் தூரம் என்றால் பரவாயில்லை... அவ்வளவு தூரம் இதில் எப்படி உட்கார்ந்து செல்வது என்று அவள் தயங்க...

“நீ டைம்க்கு வீட்டுக்கு போகனுமா இல்லையா... இல்ல ஸ்டீபன் சார் கிட்ட பரேட் வாங்கிற ஐடியால இருக்கியா... கார்ல போனா ட்ராபிக்ல லேட் ஆகும் பைக்ன்னா சீக்கிரம் போகலாம்.” விஜய் சொன்னதும், ஜெனி அவள் முகத்தைத் துப்பட்டாவால் முழுவதும் மறைக்க... அவள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தது.

பைக்கை எடுத்துக்கொண்டே திரும்பி பார்த்த விஜய், ஜெனியை பார்த்ததும் அதிர்ந்துவிட்டான்.

“ஹே முதல்ல அதைக் கழட்டு.... எவனாவது பார்த்தா நான் உன்னைத் தள்ளிட்டு வரேன்னு நினைப்பான்.” விஜய் கத்தியதில்... தன் முகத்திரையைக் கழட்டிய ஜெனி “ரொம்ப வெயிலு.... நான் வீட்டுக்குப் போய்ச் சேரும் போது கருப்பாகிருப்பேன்.” அவள் கவலையாகச் சொல்ல...

“கலரை பத்தி இவ்வளவு யோசிக்கிற... அப்புறம் எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட....” விஜய் சிரிக்க...

“ம்ம்... நீங்க கருப்பா இருந்தாலும் அழகா இருக்கீங்க. நான் கருப்பா இருந்தா நல்லா இருக்காதே அதனாலதான்.” ஜெனி சொன்னதும், அவளை மெச்சுதலாகப் பார்த்த விஜய் “கலக்கிற ஜெனி... இவ்வளவு பேசுவியா...” என்றதும், ஜெனியும் சிரித்து விட்டாள்.

“உங்களோட சேர்ந்துட்டேன் இல்ல... அதனால இருக்கும்.” என்றபடி ஜெனி பைக்கில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்துகொண்டாள். இல்லையென்றால்... அவன் போகும் வேகத்திற்குத் தெருவில் விழுந்து யார் புதையல் எடுப்பது?

விஜய் பேசிக்கொண்டே வர... ஜெனி உம்... கொட்டியபடி வந்தவள், உண்ட மயக்கத்தில்... பைக்கின் வேகத்திற்குக் காற்று வேறு சுகமாக வீச.... அவளுக்குத் தூக்கம் வந்தது. அதனால் விஜயை அனைத்துக்கொண்டு அவன் முதுகில் தலைசாய்த்து உறங்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் சென்று முதுகில் கணம் அதிகமாகவும், அதோடு ஜெனி அவன் பேசியதிற்குப் பதில் சொல்லாததில் இருந்தே... விஜய்க்கு ஜெனி உறங்கிவிட்டாள் என்று புரிந்தது.

“அடிப்பாவி... ரோட்ல விழப் போறா...” என்று நினைத்தவன், வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

ரோஸியின் திருமணம் அடுத்த ஒரு மாதத்தில் இருந்ததால்... அவளோடு ஒரு வேலையாக அந்தப் பக்கம் வந்த ராஜேஷ், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு “ரோசி ரோட்டுக்கு அந்தப் பக்கம் பாரேன்.” என்றான்.

ரோசி பார்த்த போது... ஜெனி விஜய் மீது சாய்ந்து உறங்க... விஜய் அவள் எழுவதற்காகக் காத்திருந்தான்.


பார்த்த ரோசிக்குச் சிரிப்பு வந்து விட்டது. “டேய்... இவன் உனக்கு மேல இருப்பான் போலிருக்கு... நிஜமாவே ஜெனி ரொம்ப அதிர்ஷ்டகாரிதான்.” என்றாள்.

ரோசி பேசிகொண்டிருக்கும் போதே... வெயில் முகத்தில் அடித்ததால்... அதோடு காற்றும் வராததால் கண்திறந்த ஜெனி, இருக்கும் இடத்தை உணர்ந்து நிமிர்ந்து உட்கார....

“மேடம் எழுந்துடீங்களா.... இல்லை இங்க எதாவது ரூம் போடவா... நல்லா தூங்கி எந்திருச்சு போவோம்.” விஜய் சொல்ல... ஜெனி அவன் முதுகில் நன்றாக அடிக்க... திரும்பி ஜெனியை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே விஜய் வண்டியை எடுத்தான்.

“ஹப்பா... ரூபிணி போட்ட லெட்டரால எதுவும் பிரச்சனை ஆகலை....” ரோசி சொல்ல... அதை அமோதிப்பது போல் தலையசைத்த ராஜேஷின் மனதில், ஜெனி எப்போதுமே இப்படிச் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற பிராத்தனை இருந்தது.

நான்கு மாதங்கள் கழித்து...

கிழக்கு கடற்கரை சாலையில் பெயர்பெற்ற தேவாலயத்தில் இருந்து தம்பதிகளாக வெளியே வந்த விஜய் ஜெனியை சுற்றி உறவினர்கள் கூட்டம்.

விதவிதமாகப் புகைப்படம் எடுத்ததும், திருமண வரவேற்பிற்கு மண்டபம் செல்ல கிளம்பும் முன்.... மீண்டும் ஆலயத்திற்குள் சென்ற ஜெனி ‘ராஜேஷ்க்கு என்னை விட நல்லப் பெண்ணா கொடுங்க கர்தரே.... எனக்கு விஜயை தந்தது போல... அவனுக்கும் நல்ல துணை கிடைக்கணும்.’ என்று மனதார வேண்டிக்கொண்டாள்.

ராஜேஷ் இப்போது இந்த நாட்டிலேயே இல்லை... அவன் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்ததும், ரோசியின் கணவர் அவனுக்குக் கனடாவில் வேலை வாங்கிக்கொடுக்க.... ராஜேஷ் இப்போது தன் சகோதிரியுடன் கனடாவில் வசிக்கிறான்.



ரூபிணியும் இப்போது கனடாவில் இருப்பதால்... காதல், சண்டை சமாதானம் என்று அவன் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. இதுவரை அவன் வயதுக்கு மீறி நிறையச் சுமந்து விட்டான். இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறான்.
திருமணம் செய்துகொள்ளுங்கள் என்ற இரு வீட்டாரிடமும் “இன்னும் எங்களுக்குத் திருமணம் செய்யும் வயது வரவில்லை...” என்று சொல்லி இருவரும் காதல் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

திருமண நாளன்று இரவு, ஜெனி விஜய் சொன்னான் என்று அவன் எடுத்துக்கொடுத்த புடவையை உடுத்த ஆரம்பிக்கும் போது.... கதவு திறக்க... புனிதா வருகிறாள் என்று நினைத்து ஜெனி பார்க்க... வந்தது விஜய்.

ஐயோ ! நான் இன்னும் புடவையே கட்டல... அதுக்குள்ளே எதுக்கு வந்தீங்க?.... ஜெனி கைகளால் தன்னை மறைத்துக்கொண்டு பேச.... அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே.... கதவை தாளிட்டு வந்த விஜய் அங்கிருந்த புடவையையும் கைப்பற்றி இருந்தான்.

“நான் ஸ்கர்ட் டாப் கூட ஓகேன்னு சொன்னேன்.” என்று கண்சிமிட்டிய விஜய் ஜெனியை தழுவிக்கொள்ள.... இவன் சொன்னா கேட்கவா போகிறான் என்று நினைத்த ஜெனி அவனுக்குள் அடங்க... அங்கே அவர்களின் இல்லறம் தொடங்கியது.

திருமணம் முடிந்த மறுமாதம் ஒரே தினத்தில் ப்ரித்வியும் ஜெப்ரியும் அவர்கள் ஊருக்கு கிளம்ப.... ஜெப்ரியோடு ஆரோக்கியராஜ் தம்பதியரும் செல்வதால்... “ஹய் அம்மா எங்க வீட்டுக்கு வராங்களே...” ஜெப்ரி விஜயை வெறுப்பேற்ற...விஜய் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தான். இவர்கள் சண்டையை ப்ரித்வியும் மற்றவர்களும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அம்மா சீக்கிரம் வந்திடுங்க...” விஜய் நூறாவது முறையாகச் சொல்ல...

“சீக்கிரம் எல்லாம் வரமுடியாது டா... நான் பொறுமையாதான் வருவேன். இப்போ நான் இங்க இருந்து என்னடா செய்யப்போறேன். நீங்க நல்ல செய்தி சொல்லுங்க அப்ப வரேன்.” செல்வராணி கறாராகச் சொல்ல...

ஜெனியை பார்த்த விஜய் “ஜெனி நம்ம ப்ளான்னிங் அடுத்தக் குழந்தைக்கு மாத்திக்கலாமா..” என்று அவளிடம் கிசுகிசுப்பாகக் கேட்க....

ஒருவருடம் சென்று குழந்தை பெற்றுக்கொள்வோம் என்று அவன்தான் சொன்னான். இப்போது மாற்றிப் பேச.... “உங்க இஷ்ட்டம்...” என்றாள் ஜெனி. ஆனால் மனதிற்குள் சரியான அம்மா கோண்டு என்று திட்டிக்கொண்டு இருந்தாள்.

“அம்மா அடுத்த மாசம் வர ரெடியா இருங்க...” விஜய் சத்தமாகச் சொல்ல... அதைகேட்டு அங்கிருந்த மொத்த குடும்பமும் கொல்லென்று சிரிக்க... ஜெனி முகம் சிவந்து போனாள்.

விஜயை பார்த்து முறைத்த செல்வராணி “முதல்ல ஜெப்ரி ப்ரின்சிக்கு குழந்தை பிறக்கட்டும். அப்புறம்தான் நீங்க.... நான் ஜெப்ரி கூட ஆறுமாசம், ப்ரித்வி கூட ஆறுமாசம் இருந்திட்டுதான் வருவேன். நீ உன் பொண்டாட்டியோட லைப் என்ஜாய் பண்ணு.” என்றவர், விஜயிடம் நெருங்கி வந்து “இந்த ஒருமுறை மட்டும் போயிட்டு வந்திடுறேன். அப்புறம் உன்னோடவே இருக்கேன்.” என்றார் சமாதானமாக.



விஜய் ஜெனியின் தோளில் கைபோட்டு அணைத்தவன் “சரிம்மா பார்த்து போயிட்டு வாங்க....எல்லா இடத்தையும் சுத்தி பார்த்து நல்லா என்ஜாய் பண்ணுங்க. என்னைப் பத்தி கவலைப்படதீங்க... என்னை ஜெனி பார்த்துப்பா...” என்றான் சந்தோஷமாக...

“ஹப்பா... என்னை விட்டான். ஜெனி நீ தொலைஞ்ச போ... உன்னைப் படுத்த போறான்.” செல்வராணி சிரிக்க... விஜய் ஜெனியை அப்படியா என்பதுபோல் பார்க்க.... செல்வராணி அங்கிருந்து சென்றதும்,

“நீங்க என்ன தொல்லை பண்ணாலும் பொறுத்துப்பேன். ஏன்னா அது அன்பு தொல்லைன்னு எனக்குத் தெரியும். பதிலுக்கு நானும் உங்களைப் படுத்துவேன்... பரவாயில்லையா...” ஜெனி பார்வையில் சவால் விட....

“with pleasure madam, I’m waiting…” விஜயின் குரலில் அவ்வளவு காதல் இருந்தது. விஜயும் ஜெனியும் இருக்கும் இடம் மறந்து பார்வையால் ஒருவரையொருவர் விழுங்கிக்கொண்டு இருந்தனர்.

சரி இனி நமக்கு இங்க என்ன வேலை? வாங்க கிளம்புவோம். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள்.




படம் முடிஞ்சதும் டைட்டில் போடும் போது சில காட்சிகள் வரும் இல்ல... அது போல் சில காட்சிகள் உங்களுக்காக....(நாங்க இதெல்லாம் கேட்டோமா.... நீங்க சொல்றது கேட்குது... இருந்தாலும் நான் போடுவேன்.)


ராஜேஷை கத்தி காட்டி மிரட்டி சேரில் உட்கார வைத்த ரூபிணி, அவன் மடியில் அமர்ந்து.... அவன் தாடியை எலெக்ட்ரிக் ஷேவ்வரால் மழிக்க.... முதலில் எதிர்தவன் பின் கண்ணாடியில் பார்த்து விட்டு.... சூப்பர் என்று ரூபிணியைப் பார்த்து சொல்ல.... அவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

தினமும் மாலையில் ஜெனியை அவர்கள் கிளப்பிற்கு அழைத்துச் செல்லும் விஜய், அவளுக்கு ஷட்டில் விளையாட சொல்லித்தர... அவன் என்ன முயன்றும் ஜெனிக்கு அடிக்கவே வரவில்லை...

“ஐயோ கடவுளே ! இவளுக்குச் சொல்லி கொடுத்து... எனக்கு மறந்திடும் போலையே.... இதைச் சொன்னா தொலஞ்சோம் என்று நினைத்தவன் “ஜெனி டார்லிங் இது நமக்கு வேண்டாம்டா... நாம நீச்சல் பழகுவோமா...” ஒரு கில்மாவா இருக்கட்டுமே என்று விஜய் அவளுக்கு சோப் போட ...



“முதல்ல இது... அப்புறம் அது....” ஜெனி விளையாடுவதில் தீவிரமாக இருக்க.... இன்னும் எதாவது சொன்னால் அழ ஆரம்பித்துவிடுவாள் என்பதால்.... விஜய் தன்னையே நொந்து கொண்டு சொல்லி கொடுக்க ஆரம்பித்தான்.

விஜய், ராஜேஷ் வாழ்க்கையில் இருந்து என்ன தெரிகிறது?.... Always women rocks.




 
Top