Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 18.2

Advertisement

Admin

Admin
Member
மாலை காபி பலகாரம் முடிந்து ஜெனி அவள் குடும்பத்துடன் கிளம்பியதும்தான் விஜய் தன் ஹோட்டலுக்குக் கிளம்பி சென்றான். ஏற்கனவே காலையில் ஒரு முறை வந்திருந்தாலும், மதியம் பாராமல் விட்ட வேலை அதிகம் இருந்ததால்... அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் அறைக்குள் வந்த மேனேஜர் “விஜய் சார் உங்களுக்குப் போன வாரமே இந்த லெட்டர் வந்தது. நீங்க பார்க்கலையா...” என்று டேபிள் மேல் இருந்த கடிதத்தை விபின் எடுத்துக்கொடுக்க....

“படிக்கிறேன் வச்சிட்டு போங்க...” என்றவன், அவன் வேலையில் ஆழ்ந்துவிட்டான். நீண்ட நேரம் கழித்தே அந்தக் கடிதம் அவன் கண்ணில் பட்டது.

அதை எடுத்து பார்க்க... சாதாரணத் தபாலில் அனுப்புனர் முகவரி இல்லாமல் வந்த கடித்ததைப் பார்த்து, எல்லோரும் இப்ப கொரியர்ல தானே அனுப்புறாங்க. யாரு இந்தக் காலத்தில பொறுமையா தபாலில் அனுப்பியது? என்ற யோசனையுடன் கடித்ததைப் பிரித்தவன், அதிலிருந்த வரிகளில் அலட்சியமாக பார்வையை ஓடவிட....

சில நொடிகளில் முகம் ரௌத்திரமாக மாற.... அந்தக் கடித்ததைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பைதொட்டியில் எறிய போனவன், விபின் பார்த்துவிடுவான் என்று எண்ணி... வெளியே சென்று கையில் வைத்திருந்ததைக் குப்பையில் வீசினான்.

அவனுக்கு அந்தக் கடித்ததில் இருந்த செய்தியில் துளியும் நம்பிக்கை இல்லை. ச்ச.... இது யாரோட வேலை? கையில கிடைச்சா கொன்னுடுவேன் என்று மனதிற்குள் கோபம் பொங்க... அதற்கு மேல் ஹோட்டலில் இருக்கமுடியாமல் வீட்டிற்குக் கிளம்பி சென்றான்.



“என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்ற செல்வராணிக்கு எதோ பதில் சொல்லி சமாளித்தவன், அவன் அறைக்கு வந்ததும் உடை கூட மாற்றாமல் நேராகச் சென்று கட்டிலில் விழுந்தான்.

கடிதத்தைக் கிழித்து விட்டானே தவிர... அதிலிருந்த வாரத்தைகள் மனதில் பதிந்துவிட்டது. ஆரம்பத்தில் ஜெனி அவனிடம் நன்றாகப் பேசினாலும் பிறகு எனக்கு அவள் மீது ஈடுபாடு இருப்பது தெரிந்து சில நாட்கள் பாராமுகமாகத் தானே நடந்து கொண்டாள்.

தன்னைப் பிடிக்கவில்லையோ... வீட்டில் சொன்னார்கள் என்று ஒத்துக்கொண்டாளோ.... இதைப் பற்றி அவள் தன் தோழிகள் யாரிடமும் சொல்லி அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்களோ....

விஜய் அப்போதும் ஜெனிக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்று யோசித்தானே தவிர... அவள் வேறு யாரையும் விரும்பியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் அவன் சிந்தனை போகவேயில்லை...

வீட்டினர் விருப்பத்திற்காகத் தன்னை ஏற்றுக்கொண்டாளோ.... மனதிற்குள் பிடிக்காமல் தன்னுடன் குடும்பம் நடத்துவாளா... வாழ்க்கை தனக்கும் அவளுக்கும் எவ்வளவு நரகமாக இருக்கும் என்று யோசித்தவனால்... அன்று இரவு தூங்கவே முடியவில்லை....

விடியும் வேளையில் தன்னையுமறியாமல் உறங்கியவன், காலை எழுந்தபோது... இது யாரோ பொறாமை பிடித்தவர்களின் வேலை... ஜெனி நேற்றுக் கூட நன்றாகத் தானே சிரித்துப் பேசினாள். அவள் முகத்தில் அப்படியொன்றும் வருத்தமோ பிடித்தமின்மையோ இருந்த மாதிரி இல்லையே... தான் ஏன் ஒரு மொட்டை கடிதாசிக்கு போய் இவ்வளவு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவன், மேலும் தன்னையே வருத்திக்கொள்ளாமல் இருக்க... தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்.

மறுநாள் தன் பிறந்த வீட்டிற்கு அழைத்த புனிதா. தான் மட்டும் விஜய் ஜெனியின் திருமணத்திற்கு அடுத்த வாரத்திலேயே குழந்தையுடன் வர இருப்பதாகச் சொல்ல... அதைக் கேட்ட வீட்டினர் ஆனந்தம் அடைந்தனர்.



கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகள் கழித்து வரும் மகளையும், அவள் ஆறு மாத குழந்தையையும் நேரில் பார்க்க போகிறோம் என்ற பரவசத்தில் இருந்த லீனா வீட்டிற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே தயார் செய்தார்.



கல்லூரி முடிந்து வந்ததும், இருவரும் ஷாப்பிங் செய்வது. வீட்டை குழந்தைக்கு ஏற்ற வகையில் தயார் செய்வது என்று ஜெனி மிகவும் பிஸியாக இருந்தாள். அதனால் அவள் விஜய் அழைக்காதது பற்றிப் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை... அதோடு செல்வராணி பேசியபோது விஜய் கேளம்பாக்கத்தில் புதிய கிளை ஒன்றை தொடங்க இருப்பதால்... அதில் பிஸியாக இருப்பதாகச் சொல்லவும், ஜெனியும் அவனுக்கு அதிக வேலை என்று நினைத்துக் கொண்டாள்.

ரூபிணி ரோசியிடம் தினமும் பேசுவாள். இரவுதான் இருவரும் பேசுவார்கள்.ரோசி ஸ்பீக்கரில் போட்டு தான் பேசுவாள். ஏனென்றால் ராஜேஷ் அங்கேதான் இருப்பான். அவனிடம் ரூபிணி பேசுவது இல்லை என்பதால்... அவள் குரலை கேட்க வேண்டும் என்று அவன்தான் கேட்டுக்கொண்டான்.

“ஹாய் ரோசிக்கா எப்படி இருக்கீங்க?”

“நேத்துதான் பேசினோம் அதுக்குள்ளே என்னவோ ரொம்ப நாள் பேசாதது போல் விசாரிக்கிற...”

“தெரியாம கேட்டுட்டேன் மன்னிச்சிடுங்க. அப்புறம் வேற என்ன விசேஷம்?”

“நான் கனடா போறேன் தெரியுமா...”

“ஹய் சூப்பர்.... உங்க கம்பெனியில ஆன்சைட் அனுப்புறாங்களா....”

“இல்லை... அங்க ஒருத்தர் தனியா இருக்காராம் அதனால அவருக்குத் துணையா போகச் சொல்லியிருக்காங்க.” ரோசி சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல... ரூபிணிக்குச் சுத்தமாகப் புரியவில்லை...

“என்னக்கா சொல்றீங்க? உங்களைச் செக்யூரிட்டியாவா போட்டிருக்காங்க...” அவள் கேட்ட தினுசில் ரோசியோடு ராஜேஷும் சிரித்து விட்டான்.

“லூசு... எனக்குக் கனடாவில் வேலை பார்க்கிற மாப்பிள்ளையைப் பார்த்திருக்காங்க. அதைச் சொல்ல வந்தா.... என்னை watchwomen ஆக்கிடுவ போலிருக்கு....” ரோசி சலிப்பாகச் சொல்வது போல் சொன்னாலும், அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அதைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷுக்கும் மகிழ்ச்சியே...

“congrats க்கா... அப்ப நீங்க கனடா போய்டுவீங்களா.. நான் கூட இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சதும் கனடா போய்த்தான் மேல்படிப்புப் படிக்கப் போறேன். ஹய் ஜாலி நாம அங்க பார்த்துக்கலாம்.” ரூபிணி சந்தோஷத்தில் துள்ளினாள்.

ரோசியும் ரூபிணியும் வெகு நேரம் அரட்டை அடித்த பிறகு போன்னை வைக்கும் முன் “அப்புறம் உங்க வீட்ல ஒன்னு முகத்தில முள்லை கட்டிட்டே அலையுமே... அவங்க எப்படி இருக்காங்க? உங்களுக்குக் கல்யாணம் ஆகப்போதுன்னு சந்தோஷமா இருக்காங்களா...” ரூபிணி ராஜேஷைத்தான் அந்த லட்ச்சனத்தில் விசாரித்தாள். தினமும் எதாவது ஒரு சாக்கை வைத்து ராஜேஷை பற்றிப் பேசிவிடுவாள். ஆனால் அவனோடு பேசமாட்டாள்.

“அவனா.... காலையில வேலைக்குப் போய்ட்றான். சாயந்திரம் எதோ கம்ப்யூட்டர் கோர்ஸ் போறான். ரொம்பப் பிஸியா இருக்கான். இப்ப வீட்ல தான் இருக்கான். வேணா அவனோட பேசுறியா...” ரோசி ராஜேஷை பார்த்துக்கொண்டே சொல்ல...

“ஐயோ ! வேண்டாம். bye ரோசிக்கா...” ரூபிணி போன்னை வைத்துவிட... ராஜேஷ் புன்னகைத்துக்கொண்டான்.



விஜய் கேளம்பாக்கத்தில் இடம் வாங்க அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடமும் முடிவாகிவிட்டது. ஆனால் வெயிலில் அலைந்ததில் காய்ச்சல் வந்துவிட... அவன் மனம் ஜெனியை வெகுவாகத் தேட... அவள் அவனை அழைக்கவேயில்லை...

ஏற்கனவே மனதில் இருந்த குழப்பம், காய்ச்சல் எல்லாம் சேர்ந்துகொள்ள... அன்று இரவு ஜெனியை செல்லில் அழைத்தவன் “நீ உன் மனசில என்னடி நினைச்சிட்டு இருக்க? ஒரு மனுஷன் இருக்கான்னா செத்தானான்னு கூடப் பார்க்க மாட்டியா.... நான்னா கூப்பிட்டா பேசுவ இல்லைன்னா கண்டுக்கவே மாட்ட...”

“உண்மையிலேயே உனக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்ட்டமா இல்லையா... எனக்கு ரெண்டுல ஒன்னு தெரியனும். இல்ல வீட்ல சொன்னாங்கன்னு ஒத்துகிட்டியா...”

“எனக்கு நீ வாழ்க்கையெல்லாம் தர வேண்டாம். எங்க அம்மா இருக்காங்க எனக்குச் சூப்பர் பொண்ணு பார்க்க.... பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிடு....” விஜய் படபடவென்று மனதிலிருப்பதைப் பொரிந்து விட.... அவன் பேசியதை கேட்ட ஜெனி அழுதேவிட்டாள்.

“ஹே.... இப்ப எதுக்கு அழற? உன்னை மனசுல நினைச்சதுக்கு நான்தான் அழனும். கண்ணுகிட்டயே டேம் வச்சிருக்கியா நீ.... உடனே எப்படிக் கண்ணீர் வருமோ?....” விஜய் மேலும் திட்ட... ஜெனி தேம்பித்... தேம்பி அழ...

“இப்ப அழுகைய நிறுத்து... கொன்னுடுவேன். எனக்கே ஜுரம் அடிச்சிட்டு தலை வின்னுவின்னுன்னு தெறிக்குது.... இதுல நீ வேற அழுது துலையாத... எவன் எப்படிபோனா உனக்கு என்ன? போன்னை வச்சிட்டு நிம்மதியா தூங்கு.” என்றவன், போன்னை அழுத்தியதில் செல் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட... மனதிலிருந்ததை ஜெனியிடம் கொட்டிவிட்ட நிம்மதியில் அதோடு காய்ச்சலுக்கு மாத்திரையும் போட்டிருந்ததால்... விஜய் உறங்கிவிட்டான். ஜெனி உறங்கவேயில்லை...

ஜெனிக்கு விஜய் சொன்னது நியாயம் என்றே தோன்றியது. பிஸியாக இருக்கிறேன் பேச முடியாது என்று அவனா சொன்னான். தான் ஒருமுறை அவனை அழைத்திருக்கலாம் என்று இப்போது தோன்ற... இரவெல்லாம் அவனுக்குச் செல்லில் முயன்று கொண்டே இருந்தாள்.

இவன் வந்தால் அவள் விலகுவதும், அவள் வரும் போது இவன் விலகுவதும்.... டேய் என்னடா நடக்குது இங்க?


 
:love: :love: :love:

டேய் என்னடா நடக்குது இங்க........ அதான் நானும் கேட்கிறேன்......
மொட்டை கடுதாசிக்கு importance குடுக்க மாட்டானாம்.......
ஆனால் கன்னா பின்னான்னு திட்டவிடுறான்........
எப்போவாவது அவள் உன் மேல விருப்பமில்லாமல் இருந்திருக்கிறாளா கல்யாணம் பேசிய பின்......
சும்மா ஏண்டா திட்டுற.......
காதல் முத்திடுச்சி இவனுக்கு......
 
Last edited:
Top