Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 15 1

Advertisement

Admin

Admin
Member





பகுதி – 15

ரூபிணி சொன்ன இடத்தில் வடிவேலு காரை நிறுத்த... கீழே இறங்கிய ரூபிணி, தான் வர நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். ராஜேஷ் பின் சீட்டில் காலை நீட்டி படுத்து விட... வடிவேலு மட்டும் அங்கு வருவோர் போவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

விஜயும் தன் நண்பர்களுடன் அதே டிஸ்கோதேவுக்கு வந்திருந்தான். அங்கே போய் உட்கார்ந்தவனின் நினைவு எல்லாம் ஜெனியிடமே... மாலை அவள் அழைத்தபோது ஒரு கோபத்தில் போன்னை எடுக்கவில்லை... பேசி இருக்கலாமோ... என்று இப்போது தோன்றியது.

இன்னைக்குப் பிறந்தநாளை சாக்காக வச்சு அவளைப் போய்ப் பார்த்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டேனே என்று தன்னையே நொந்தபடி இருந்தான். நண்பர்களுக்காகச் சிறிது நேரம் நடனம் ஆடியவன், ஒரு குளிர்பானத்தோடு தனியாகச் சென்று உட்கார....... அவன் நண்பர்கள் இன்னும் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஆண் பெண் பாகுபாடில்லாமல் அங்கிருந்த பலர் மது அருந்துவதைப் பார்த்து அவனுக்கு வேதனையாக இருந்தது. இப்போது எல்லாம் பார்ட்டி என்றாலே மதுதான். இப்போது மது அருந்தாதவர்களைத்தான் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.

மது அருந்தும் பெண்களைப் பார்த்து, இப்படிக் குடிகிறீர்களே என்றால் அவ்வளவுதான் தொலைந்தோம். ஆண்கள் மட்டும் குடிக்கலாம். பெண்கள் குடிக்கக் கூடாதா... நாங்கள் மட்டும் என்ன தாழ்ந்தவர்களா, எங்களுக்கு ஆண்களைப் போல் குடிக்க உரிமை இல்லையா என்று கொடிபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆண்கள்தான் குடித்துக் கெட்டழிகிறார்கள் நீங்களும் ஏன்? என்ற நல்ல எண்ணத்தில் சொல்வது கூடப் பெண்களை அடக்குவதாகத் தவறான எண்ணத்தில்தான் பார்க்கப்படுகிறது.

நாட்டின் அரசாங்கமே மக்களைக் குடிக்கச் சொல்லி வருமானம் பார்க்கிறது. இதை எங்கே போய்ச் சொல்வது என்று மனதிற்குள் பல விஷயங்களை யோசித்தபடி விஜய் பார்வையைச் சுழலவிட... ரூபிணி தன் நண்பர்களோடு மது அருந்துவதைப் பார்த்தான்.

அவனுக்கு ரூபிணியைத் யார் என்று தெரியாது? ஆனால் இவ்வளவு சின்னப் பெண் குடிக்கிறாளே என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான். உண்மையிலேயே அவளுக்குப் பதினெட்டு வயதுதான் முடிந்திருந்தது. ரூபிணியோடு நான்கு பேர் இருந்தனர். மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்.

ரூபிணி நண்பர்கள் விருப்பதிற்காகக் கொஞ்சமாகக் குடிப்பாள்தான். ஆனால் இன்று ராஜேஷ் மீது இருந்த கோபத்தில் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே நிறையக் குடித்தாள். இவன் யார் என்னை அடக்க? என்ற ஆத்திரம் வேறு....

அவன் இன்னைக்கு நைட் புல்லா எனக்காக வெளியவே நிற்கட்டும்... என்று முடிவு செய்தவள், தன் நண்பர்களிடம் தன்னை வீட்டில் விட முடியுமா... என்று கேட்க....

நண்பர்களின் முகம் பளிச்சிட்டது. sure ரூபிணி, வா போகலாம் என்று அவர்கள் எழுந்துக்கொள்ள ரூபிணியும் அவர்களோடு சென்றாள். அவள் நடை தடுமாற நடந்து செல்வதை விஜய் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரூபிணியின் தோழி ரியா தன்னுடைய காரில் வந்திருப்பதால்... அவர்களோடு வரவில்லை என்று சொல்ல... ரூபிணி மட்டும் தன் ஆண் நண்பர்களோடு சென்றாள்.


சிறிது நேரம் சென்று வந்த தன் நண்பர்களிடம் விஜய் “எனக்கு இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன்.” என்றான். விஜய் இருந்தால் மது அருந்த விடமாட்டன் என்பதால்... அவர்கள் அவன் சொன்னதிற்கு மறுக்கவில்லை... விஜய்க்கும் அது தெரிந்ததால்... அவன் அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

விதவிதமான உடைகள் அணிந்து வந்த பெண்களையும் ஆண்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, ரூபிணி வேறு ஒரு காரில் செல்வதைப் பார்த்துவிட்டார்.

ராஜேஷை எழுப்பியவர் ரூபிணி வேறு ஒரு காரில் செல்வதாகச் சொல்ல... ராஜேஷுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை... “நீங்க நல்லா பார்த்தீங்களா... அது வேற யாரவது இருக்கப் போகுது.” என்றான்.

“இல்லப்பா எனக்கு நல்லா தெரியும், என்னைப் பார்த்ததும் ரூபிணி முகத்தைத் திருப்பிகிட்டு போச்சு...” என்றார்.

அப்போ அவளேதான் என்று நினைத்தவன், எழுந்து அமர்ந்து “சரி காரை எடுங்க...” என்றான். வடிவேலு காரை எடுக்க... அப்போது அவர்கள் காரை கடந்து விஜய்யின் கார் சென்றது.

ஜெனியை பார்க்காமல் பேசாமல் விஜய்க்கு அன்றைய நாளே வீணானது போல் இருந்தது. முன்னாடியே அவகிட்ட பிறந்தநாள்ன்னு சொல்லி இருக்கணும். பாவம் அவளுக்கு எப்படித் தெரியும்?... நானும் கஷ்ட்டப்பட்டு அவளையும் கஷ்ட்டபடுத்திட்டேன். ஜெனியை நினைத்தபடி காரை ஓடிக்கொண்டிருந்தான்.

விஜய்யின் இயல்பே அது தான். முதலில் எதையும் யோசிக்காமல் கோபப்படுவதும், பிறகு அதை நினைத்து வருந்துவதும். அவனின் இந்தக் குணமே ஜெனியை கஷ்ட்டபடுத்தப்போகிறது.

நகரை தாண்டியதும் சுற்றிலும் சவுக்குத் தோப்பாகத்தான் இருக்கும். விஜய் கடல் காற்றை ரசித்தபடி மெதுவாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவன் காதில் ஒரு பெண்ணின் “ஹெல்ப்... ஹெல்ப்...” என்ற குரல் கேட்டது.
ஜன்னலை திறந்து வைத்திருந்ததால் அவனுக்கு நன்றாகக் கேட்டது. அந்த இடத்தை அப்போதுதான் கடந்திருந்தான். அந்தக் குரலை அலட்சியபடுத்தி விட்டு செல்ல மனமில்லாமல் அப்படியே ரிவார்ஸ் வந்தான்.

ஒரு கார் சற்று உள்ளே மறைவாக நின்று கொண்டிருந்தது. விஜய் அவனின் காரை நிறுத்தி விட்டு இறங்கி சென்றவன், அங்கே இருவர் காரின் பின் பக்க கதவை திறந்து வைத்துக்கொண்டு நிறைப்பதை கண்டான். காரின் உள்ளே ஒரு பெண்ணின் குரலும் கேட்டது.

நொடியில் அவனுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று புரிந்துவிட்டது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தவன், அங்கே கீழே கிடந்த பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இருவர் வெளியே நின்றபடி அந்தப் பெண்ணின் கையையும் காலையும் பிடித்துக்கொள்ள, உள்ளே இருந்த மற்றொருவன் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழட்ட முயன்று கொண்டிருந்தான்.

ரூபிணி போதையில் இருந்தாலும் அவளுக்கு நடப்பது புரிந்துதான் இருந்தது. ஆனால் தடுக்கத்தான் அவள் உடலும், மூளையும் ஒத்துழைக்கவில்லை.... மது அவளைப் பலவீனமாக்கி இருந்தது.

திமிரிக்கொண்டிருந்தவளின் ஆடையை அந்தப் பொறுக்கி பாதி விலக்கி இருந்தான். இப்போது ரூபிணி அரை நிர்வாணமாக இருந்தாள். தன்னிடம் இருந்த கட்டையால் வெளியே நின்றவனைத் தாக்கிய விஜய், அவன் சுதாரிக்கும் முன் உள்ளே இருந்தவனின் தலை முடியை பற்றி இழுத்து வெளியே போட்டான்.

விஜய் வந்ததைக் கவனிக்காததால்... அவர்கள் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை... ஒரு நொடி விஜய்யின் பார்வை ரூபினியின் மேல் விழுந்தது. அவள் இருந்த கோலத்தைப் பார்த்தவன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவனுக்குப் பயங்கர அதிர்ச்சி.... அதற்குள் மறுபக்கம் இருந்தவன் விஜய்யை தாக்க வர... விஜய் கார் கதவை மூடி விட்டு அவனுடன் சண்டையிட்டான்.

அவர்கள் விஜய்யை தாக்கிவிட்டு ரூபிணியோடு அங்கிருந்த செல்லவே முயன்றனர். ஒருவன் ஓடிச்சென்று ஓட்டுனர் இருக்கையில் தயாராக இருக்க... மற்ற இருவரும் விஜய்யிடம் சண்டையிட்டனர். அவர்கள் விஜய்யை எளிதாகத்தான் நினைத்தனர். ஆனால் விஜய் தற்காப்புக் கலைகள் அறிந்தவன் என்று அவர்களுக்குத் தெரியவில்லை... அதுவும் அவர்கள் போதையில் இருந்ததால்.... அவர்களால் அவன் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அவனிடம் நன்றாக அடிவாங்கினார்கள்.

வடிவேலு ரூபிணி சென்ற காரை பிடித்து விட வேண்டும் என்று வேகமாகத்தான் சென்றார். ஆனால் சிறிது தூரம் வந்ததும், அவரால் அவள் சென்ற காரை கண்டுபிடிக்க முடியவில்லை...

“அண்ணே நீங்க நல்லா பார்த்தீங்களா... அந்தக் கார்ல போனது ரூபிணி தானா...” ராஜேஷ் சந்தேகமாகக் கேட்க... இப்போது வடிவேலுவால் ஆமாம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை... முன்னால் சென்ற காரைதான் காணவில்லையே....

“நீங்க காரை திருப்புங்க... இன்னொரு தடவை அந்த டிஸ்கோதேவுக்குப் போய்ப் பார்த்திட்டு வந்திடலாம்...” ராஜேஷ் சொல்ல வடிவேலு காரை திருப்பினார்.

வடிவேலு காரை ஓட்ட... ராஜேஷ் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான். விஜய்யின் கார் நிற்கும் இடத்திற்கு வந்ததும், வடிவேலு வண்டியின் வேகத்தைக் குறைக்க... அந்தக் காரில் யாரவது இருக்கிறார்களா என்று உற்று நோக்கிய ராஜேஷ்க்கு, எதோ சத்தம் கேட்க... சத்தம் வந்த திசையில் பார்த்தபோது அங்கே ஒரு கார் நின்று கொண்டிருந்தது.

அந்தக் காரை பார்த்த வடிவேலு “அந்தக் கார் தான் தம்பி ரூபிணி போனது...” என்றதும், ராஜேஷ் காரில் இருந்து குதித்து இறங்கி ஓடினான்.

இன்னொரு கார் வருவதைப் பார்த்த காரில் இருந்தவனுக்கு, இனி இங்கே இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று புரிந்துவிட... அவன் காரின் பின் இருக்கையில் மயங்கி இருந்த ரூபிணியை இழுத்து வெளியே போட்டு விட்டு, ஒரு கட்டையால் விஜய்யை பின்னால் இருந்து தாக்க... மண்டையில் விழ வேண்டிய அடி விஜய் நகர்ந்ததால்.... அவன் தோளில் விழுந்தது.
 
Yaar Mela erukura kovathai kudukardu la katalama ippo par ennachi nu Vijay mattum varalana Enna agi erukum, nice update ramya dear thanks.
 
Top