Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

naan sirithaal deepawali epi 2

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
நீ மின்னலா இடியா
என முடிவு செய்வதற்குள்
முந்தனைக்குள் வந்து
ஒளீந்து கொண்டாய்..............

அறை க்குள் நுழைந்த தாயுமானவன்,நிதானமாய் கதவைச் சாத்தி தாழ் போட்டுத் திரும்பி அங்கேயே நின்றவாறு ஒரு நிமிடம் அகல்யாவைப் பார்த்தான்......

‘’ம்ஹ்ம்...இதுல போஸ வேற’’ என்ற்று மனதுக்க்குள் சலித்துக்கொண்டாள்....முகத்தை வெட்டித் திருப்பினாள்....தாயுமானவன் மெதுவாக தரைக்கு வலிக்காமல் நடந்து வந்து அகல்யா

வீசீயிருந்த பூச்சரம் வாழைப்பழத்தோல் ஆகியவற்றை எடுத்து குப்பைக்கூடையில் போட்டான்.....எதுவும் பேசாமல் அகல்யாவின் அருகில் வந்தமர்ந்தான்.....

‘’மாப்பிள்ளை வந்த்தும் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணீக்கோ.....பாலைத் தம்ளரில் ஊத்திக்கொடு’’ வெளியே அவளுக்கு ஒதப்பட்டவை நினைவலைகளில் வந்து மோதியது.....

அவை எதையும் தான் செய்யாமல் அழுத்தமாய் அமர்ந்திருப்பதில் ஒரு குருர திருப்தி நிலவியது.....தாயுமானவன் எழுந்து பாலைத் தம்ளரில் விட்டு அகல்யாவிடம் நீட்டினான்....
வேண்டாம் என்றாள்...

‘’சாப்பிடு டயர்டா இருக்கேல்ல’’
பாலைக்குடித்தவளூக்கு கூடவே ஒரு பயமும் தோன்ற்றியது...இப்படியே அமைதியாக வற்புறூத்தி எல்லா காரியங்க்ளையும் சாதித்துக்கொள்வானோ?

‘’உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்’?
‘’ப்ளீஸ இண்டர்விஉ எல்லாம் பண்ணாதீங்க...........எனக்கு இப்ப தூங்கணூம்’’ என்றாள் பொய்யான கொட்டாவியொடு.........சிரித்தான்...

‘’’சரி தூங்கு’’
‘’அதுக்க்கு முன்னால ட்ர்ஸ மாத்தனும்’’
‘’சரி மாத்து’’

நை ட்டியை கையில் எடுத்தவள் அவனையே உற்று ப்பார்க்க புரிந்துகொண்டான் தாயுமானவன்....
‘’நான் பாத்ரூம் போறேன் .....டிரஸ் மாத்திட்டு சொல்லு’’
என்று அவன் உள்ளே போக புடவையை அவ்ழ்த்து விட்டு நை ய்ட்டியை மாட்டியவள்.அவசரமாய் கட்டிலில் படுத்து இழுத்துப் போர்த்துக்கொண்டாள்.முகத்தைத் திருப்பி பூட்டியிருந்த பாத்ரூம் கதவைப்பார்த்தாள்.....

‘’மெதுவா வெளீயே வா.....அவசரமேயில்ல..’’’என்றூ மனதுக்குள் கறூவிக்கொண்டாள்.....
அகல்யா மூடிய கண்களையும் மனத்தையும் விடியும்வரை திறக்கவேயில்லை.....நினைவுகளூம் தூக்கமும் மாறீ மாறீ இரவு முழுவதும் ஆட்கொண்ட்து....தாயுமானவனின் நிதானமான நடத்தையும் பெருந்தண்மையும் அகல்யாவின்பிடிவாத்ததையும் பழிவாங்கலையும் தடைகளி ன்றீ உச்சத்துக்குக் கொண்டு போனது....

காலையில் தூக்கம் கலைந்து அகல்யா கண் விழ்த்துப் பார்த்தபோழுது குப்புற ப்படுதுத் தூங்கிகொண்டிருந்தான் தாயுமானவன்....அவ்ளது புடவை மடிக்கப்பட்டு பால் பாத்திரங்கள் கழுவப்பட்டிருந்தன...ஒரு சின்ன குற்ற உணர்வு அவளூக்குள் தலைதூக்கியது...ஆனால் உடனே இதற் காகவெல்லாம் நம் நிலைப் ப்பாட்டிலிருந்து இற்ங்க முடியாது என மனதை மேலும் வறட்சியாக்கிகொண்டாள் அகல்யா....

முகம் திருப்பி
அகம் சுருங்கி
திருமண பந்த்த்திற்க்குள்
திண்டாடும் அவ்ள்.....

அகல்யாவின் அலட்சியம் பொருட்படுத்தப்படாமல் வேலைகள் தன் போக்கில் நடந்துகொண்டிருந்த்து.....பெண் வீட்டார் சீர் வரிசைகளூடன் நாகர்கொவிலில் பெண்ணை விட்டு வருவதாக ஏ ற்பாடு....பொம்மை போல சொன்னதைச் செய்தாள்

அகல்யா..புதுமணதம்பதிகள் காரில் முன் செல்ல சீர்வரிசைகளூம் உறவின்ர்களூம் வேறோரு வாகனதித் தில் பின் தொடர’......மனமகண் வீட்டு வாசலில் கார் நின்றது.....அகல்யா நிமிர்ந்து பார்தாள்..பெரிய வீடு..ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள .

சினிமாவில் வருவது போல வலது காலை எடுத்து வீட்டுக்குள் வைத்தபோது சௌண்டெஃப்ஃபெக்ட் எதுவும் இல்லைஎன்றாலும் அகல்யாவிற்க்கு உள்ளூக்குள் குறுகுறுக்கவே செய்த்து....அதனைப் பொருட்படுத்தாமல் வீட்டுக்க்குள் நுழை ந்தாள்.....ஏ ற்றீய விளக்கின் முன்பாக இருவரும் அமரவைக்கப்பட்டனர்...மாப்பிள்ளை சீராக பணம் வெற்றில பாக்குத்தட்டில் வைத்துத் தரப்பட்ட்து..நடந்தது எல்லாவற்றையும் அகல்யா கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர அவளது கருத்தில் எதுவும்ஏறவில்லை..சம்ப்ரதாயங்கள் முடிந்து அகல்யா குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பவேண்டியநேரம்....அங்கு ஒரு கனத்த அமைதி வந்து உட்கார்ந்துகொண்ட்து....

‘’தாயில்லாப்பொண்ணூ தாயாட்டம் பார்த்துக்கோங்க’’-அகல்யாவின் அத்தை கனி...
‘’வெனயமில்லாத பிள்ளை.தெரியாததை சொல்லிகுடுங்க’’ என்ட்றூ சித்தி மூக்கைச் சிந்த’’....
விசும்பல் சத்தம் கேட்டு எல்லொரும் திரும்ப......
அகல்யாவின் அப்பா பருத்த உடல் குலுங்க அழுதுகொண்டிருந்தார்...
வயதிலும் உருவத்திலும் பெரியவர் பிள்ளை போல அழுவதைக் காண சகியாமல் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஆளாளூக்காய் ஆறூதல் சொல்ல

‘’எதயும் நினைக்காதீங்க...இனி அவ எங்க பொண்ணூ.’’
‘’கடமை முடிஞ்சுது...மணமாகி ஒருத்தன் கையில பிடிச்ச்சுக்குடுத்தச்சுன்னு சந்தோசப்படுங்கோ’’
‘’தோ கூப்பிடற தூரத்துல திருனெல்வேலி....பொண்னைத் தேடினா உடனே பஸ ஏ ரிடவேண்டியதுதான்’’..

எந்த ஆறூதலுக்கும் அடங்காமல் நடேசனின் அழுகை கூடிக்கொண்டேபோக அகல்யா கலக்கம் ஏ துமின்ட்றீ கல்லாய் நின்றாள்...உள்ளுக்குள் குருரமாய் ஒரு திருப்தி பரவியது.அருமை அருமை. சிலையாய் நிந்த்ரிறுந்த அகல்யாவை வேறு மாதிரியாகப்புரிந்துகொண்டது உறவினர் கூட்டம்..வங்கி யில் வேலை பார்க்கும் பெண்ணல்லவா .வாய் விட்டு அழுவதை கௌரவக் குறை ச்ச லா க நினைக்கிராள் போலும் என்ற் எண்ணம் அவர்களூக்கு....

அழுதுகொண்டிருந்த நடேசனுக்கு மட்டும் மகளீன் மௌனமும் இறுக்கமும் முள்ளாய் உறுத்தியது....அகல்யாவின் இறுகியமனமும் ஒரு கட்ட்த்தில் இளகியது...கண் கலங்க்கும் தம்பியைப் பார்த்து..அவனது தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு அழுதாள்..

இந்த மூன்று வருட்த்தில் அகல்யாதான் அவனுக்குத் தாயாக இருந்திருக்கிறாள்..இனி அவன்?ஒரு வழியாய் எல்லொரும் அழுது முடித்து ஆசுவாசமடைய..நடேசன் தனது மகனையும் உறவினர்கள்யும் அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார்..தனது விருப்பத்திற்கு மதிப்பளிக்காத பிற்ந்த வீட்டிற்கும் தனது விருப்பத்தை பொருட்பட்த்தவே செய்யாத புகுந்தவீட்டிற்க்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் உனராத அகல்யா தனது எண்ண் சுழல்களுக்குள் தன்னை தொலைத்துக்கொண்டிரு ந்தாள்.............
 
Last edited:
Top