Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

இந்த அகல்யாவுக்கெல்லாம்
சசிகுமார் மாதிரி ஒரு புருஷன்
வந்திருக்கணும்
தாயுமானவன் ரொம்பவே பாவம்
 
Last edited:
உங்களுடைய நாவலில்
வசனங்கள் எல்லாம் வெகு
அருமை, கண்ணம்மாள் டியர்
 
இந்த அகல்யாவுக்கெல்லாம்
சசிகுமார் மாதிரி ஒரு புருஷன் வந்திருக்கணும்
தாயுமானவன் ரொம்பவே பாவம்
ippadyellam heroin ku sabam kodukka koodathu ? ?
 
வந்துடுச்சா அகல்யாவுக்கு
காய்ச்சல் வந்துடுச்சா?
இனிமேலாவது இவளுக்கு
நல்ல புத்தி வருமா?
 
Super sis
அத்தியாயம் - 8

இரண்டு மனம் வேண்டும், நினைக்க ஒன்று... மறக்க ஒன்று... என்று கவிஞர் பாடியது சரிதான் போல... தீபாவளியன்று வீட்டில் நடந்த ரசாபாச மான சம்பவத்தையே மனம் நினைத்துக் கொண்டிருக்கிறது.

அதன் அழுத்தத்தைத் தாளமாட்டாமல், ஓரு மதிய உணவு இடைவேளையில், மனதில் உள்ளதை சமுத்ராவிடம் கொட்டினாள் அகல்யா.

“எதனால இப்படி நடந்திச்சுன்னு நினைக்கிரே?” சமுத்ரா.

“அது தெரியாமத்தானே புலம்பிக்கிட்டிருக்கேன்... நீ என்னையே திருப்பரே ”

“ஒப்பனா சொல்லலாமா? கோவிச்சுக்க மாட்டியே”

“பில்ட்-அப் குடுக்காம சொல்லு”

“அகல்யா... நீ ரெட்டை வேஷம் போடறே”

“புரியல”

“தாம்பத்யம், கர்ப்பம், குழந்தை, இது மேலெல்லாம் எல்லாப் பெண்களையும் போல, உனக்கு ஆசை இருக்கத்தான் செய்யுது... ஆனா, அதெல்லாம் உனக்குப் பிடிக்காதுங்கறாப்புல நீயே உன்னோட மனசுக்கு ஒரு மூடி போட்டு வச்சிக்கிட்டே”

“ம்ஹும்... பெரிய கண்டுப்பிடிப்பு” உதடு பிதுக்கினாள் அகல்யா.

“இது என்ன பதில்”

“என்ன பேசறே நீ... நீ சொன்னாப்புல கர்ப்பம், குழந்தையெல்லாம் எனக்கும் பிடிக்கும்... அதுக்கு இவரு ஆளில்லன்னு தான் சொல்றேன்”

“ஓ... அப்படி வர்றியோ... எனக்கு ஒரு டவுட்டு அகல்யா... நாட்டுல இத்தனை கோடி பேரு குடும்பம் நடத்தறாங்க... குழந்தை பெத்துக்கறாங்க... எல்லாமே புடிச்சுத்தான் நடக்குதுன்னா சொல்ற!”

“அது எனக்குத் தெரியாது... அதப்பத்தி எனக்குக் கவலையில்லை... மேட்டர் இஸ் சிம்பிள்... எனக்குப் பிடிக்கல... அவ்ளோ தான்”

“நீ பத்து வயசுப் பிள்ளையா இருக்கறப்ப, பாகற்காய் பொரியல் சாப்பிடுவியா?” என்று கேட்டாள் சமுத்ரா.

“ஏன் சம்மந்தமில்லாம கேள்வி கேக்கறே?”

“எல்லா சம்பந்தமும் இருக்கு... பதிலை சொல்லு”

“இல்லை ஆனா இப்போ பாகற்காய் சாப்பிடறேன்”

“அதுக்கென்ன இப்போ?”

“அப்ப பிடிக்காத பாகற்காய், ஏன் இப்ப பிடிச்சுது?”

“உடம்புக்கு நல்லதுன்னு மனசுக்குத் தெரியறப்ப, டேஸ்ட்டாத் தெரியுது, சாப்பிடறேன்”

“வந்தியா வழிக்கு! அப்ப மனசு ஒத்துக்கற விஷயங்களை உடம்பு ஏத்துக்குது இல்லையா? உடம்புக்குத் தேவையானது, மனசுக்குப் பிடிக்குது... அதனால தான் கல்யாணத்தன்னிக்கே கணவன்-மனைவிக்குள் பர்ஸ்ட் நைட்டுங்கற பேர்ல தாம்பத்யத்தை வைச்சாங்க. உடல் நெருக்கம் ஏற்பட்டப்புறம், மன விரிசல்கள் பெரிசாத் தெரியாது, காலப்போக்குல உடல்களோடு மனசும் இணையும்னு ஒரு தொலை நோக்கு பார்வையால அப்படி ஒரு ஏற்பாடு”

“சரிங்க பாட்டி... அதனால”

“சரியில்லேல்ல. நீ உன் புருஷனை கிட்டே அண்ட விடாம துரத்தியடிக்கிறது சரியில்லேல்ல... இன்னொரு விஷயம் கேட்டுக்க அகல்யா... மனுஷங்களோட விருப்பு வெறுப்புகள் நிரந்தரமில்லை... மாறிகிட்டேயிருக்கும்... பிடிச்சது பிடிக்காமப் போகலாம். பிடிக்காதது ஒரு காலத்துல பிடிக்கவும் செய்யலாம்... உனக்கு இப்ப தாயுமானவனைப் பிடிக்கல... ஒன்னு ரெண்டு வருஷம் கழிச்சிப் பிடிக்கலாம்...”

“தெரியல சமுத்ரா... மேபீ... நீ சொன்னாப்புல நடக்கலாம்”

“அகல்யா... மை டியர் பிரண்ட், நடக்கலாம் இல்லை... நடக்கும்... ஆனானப்பட்ட ஜாம்பவான்களையே சரிச்சிப் போட்டிருக்கு... இந்தப் படுக்கை அறையும், உடல் சுகமும், நீயெல்லாம் அதுக்கு எம்மாத்திரம்? ப்பூன்னு ஊதித்தள்ளிட்டுப் போயிட்டேயிருக்கும்”

சொன்ன தோழியை முறைத்தாள் அகல்யா... பதிலாகச் சிரித்தாள் சமுத்ரா...

“தெய்வீகச் சிரிப்படி உனக்கு! நான் சொன்ன இன்சிடென்ட் என்ன? நீ பேசறது என்ன?”

“ரெண்டும் வேறவேற மாதிரியும், ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாதது மாதிரியும் தெரியும்... ஆனா, இது வெறும் பல்ப்புதான்... ஸ்விட்ச் நான் சொன்னதுதான்” என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாள். சமுத்ரா சொன்னவையே நினைவலைகளில் மாறி மாறி அறைந்தது. ஒரு வேளை சமுத்ரா சரியாகத்தான் சொல்கிறாளோ?” நான் தான் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறேனோ?

தூறலாக இருந்த மழை வலுத்தது கூடத் தெரியாமல், சிந்தனையிலேயே வண்டியை ஓட்டி வந்தவள், வேகத்தைக் குறைக்காமல் வந்ததினால் ஒரு நீர் நிறைந்த பள்ளத்தில் வண்டியோடு விழுந்தாள்.

ஒரு பெரியவர் வந்து வண்டியைத் தூக்கி நிறுத்தினார்... “எழுந்திரிம்மா... மழை பலமாயிடுத்துன்னா, வண்டியை ஓரங்கட்டணும்... பிளைட் ஓட்டுறாப்புல ஓட்டக் கூடாது”

உரிமையுடன்கண்டிக்க, பள்ளிச் சிறுவன் ஒருவன் அவளது உடைமைகளை பொறுக்கித் தந்தான்.

இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தாள். நாம் நமது சாமர்த்தியத்தில் தனித்து வாழ்க்கை நடத்துவதாக நினைத்துக் கொள்கிறோம்... ஆனால் சமுதாயம் நம்மை நிழல் போலப் பின் தொடர்கிறது...

தேவையானநேரங்களில் ஒட்டிக் கொள்வதும் பிற நேரங்களில் வெட்டிக் கொள்வதுமாக இருக்கிறது... நம்மைவிட்டு விலகுவதுமில்லை... நீங்குவதுமில்லை...

வீட்டிற்குள் நுழைந்த அகல்யாவை, நனைந்த நிலையில் பார்த்து வீடு மொத்தமும் பதறியது.

“நீ உள்ள போ... நான் வண்டியை பார்த்துக்கிறேன்” எண்று கை மாற்றி வாங்கிக் கொண்டான் தயா.

“அக்கா துண்டு” லதா

“டிரஸ் மாத்தும்மா... சூடா டீ போடறேன்” மணிமாலா.

“அண்ணி போன் பண்ணியிருந்தா கார் எடுத்துட்டு வந்திருப்பேன்ல...” மதி
எல்லோரையும் வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு மாடியேறிப் போனாள் அகல்யா.

மறுநாள் காலை காய்ச்சலுடன் விடிந்தது அகல்யாவிற்கு. லதா தந்த தகவலின் பேரில் ஒவ்வொருவராக மாடியேறி வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

சிரமப்பட்டு எழுந்து பல் தேய்த்துவிட்டு, அதை விட சிரமப்பட்டு இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளி, காய்ச்சல் மாத்திரையைப் போட்டாள். மீண்டும் படுத்துக் கொண்டாள்.

மதியத்திற்கு தயா ரொட்டி வாங்கி வந்திருந்தான். காய்ச்சல் குறைந்திருந்தது. ஆகவே ரொட்டி சாப்பிட்டு ஹார்லிக்ஸ் குடித்தாள். மீண்டும் படுக்கை.

மாலையில் லதா கொண்டு வந்த காபியைக் குடித்தபோது குமட்டி வாந்தி எடுத்தாள். இரவு மீண்டும் காய்ச்சல் மறுநாள் மீண்டும் மாத்திரை,இரவு மீண்டும் காய்ச்சல், இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது.

மூன்றாம் நாள் வேறு வழியின்றி லதாவின் துணையுடன் மருத்துவமனைக்குச் சென்றாள் அகல்யா. பரிசோதனைக்கு பிறகு அகல்யாவிற்கு வந்திருப்பது வைரல் பீவர் என்பது முடிவாயிற்று...

மருத்துவர் மருந்து மாத்திரைகளை எழுதித் தந்து விடுப்பு எடுத்து, இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தார்.

வீட்டில் அனைவருக்கும் மூட் அவுட். தாயுமனவனுக்கு சற்று கூடுதலாகவே. தன்னுடன் பேசாவிட்டாலும், கொள்ளாவிட்டாலும், மனைவி அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருப்பதையாவது, கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்பொழுது அந்த அல்ப சந்தோசத்திற்கும் வேட்டு வைத்தாற்போல் ஆகிவிட்டது. அறுத்துப் போட்ட வெற்றிலை கொடியைப் போல் மனைவி துவண்டு கிடப்பதை பார்க்க சகிக்கவில்லை அவனுக்கு... அகல்யா இதுவரை பாராமுகம் கொண்டிருந்ததை பெரிது பண்ணாமல், வீடு மொத்தமும், அவளை நின்று கவனித்தது.

லதாவை, மணிமாலா வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்து மாடியில் மருமகளின் அருகிலேயே இருத்தி வைத்தாள். அகல்யாவை மட்டும் பொறுப்பாகப் கவனித்துக் கொண்டாள் போதுமெனச் சொல்லிவிட்டாள்.

தயாவும் தனது ஸ்வீட் ஸ்டாலை, இரண்டாமிடத்தில் தள்ளி வைத்துவிட்டு, முக்கிய வேலையாக அகல்யாவுடன் இருந்து வேண்டியன செய்தான் .

கணவனது அன்பையும், அக்கறையையும், பணிவிடையையும் வழக்கம்போல் ஏற்றுக் கொண்டாள் அகல்யா. இரத்தத்தில் சக்தி குறையக் குறைய மனிதனின் ஆட்டமும் அடங்கி விடுகிறது. எரிகிறதைப்பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

லதாவின் உதவியுடன் படுக்கையிலேயே எழுந்து அமர்வாள் அகல்யா. அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு லதா அமர, தயா மனைவிக்கு பரபரப்புடன் உணவு பரிமாறுவான்.பாதி இட்லி சாப்பிட்ட நிலையிலேயே ஆயாசத்துடன் கண்களை மூடி லதாவின் மீது சாய்வாள்.

“அகல்யா ரெண்டு இட்லியாவது சாப்பிடு... மாத்திரை போடணும்ல... அப்புறம் வயிறு புண்ணாயிடும்...” என்று ஆதங்கப்படுவான் தயா. அவள் ஒரு இட்லியை முடித்ததும், கீழே ஓடிப்போய் சூடாக வேறு இட்லி கொண்டு வருவான்.

“அந்த இட்லி ஆறிப் போயிருக்கும் வைச்சிடு சூடா இதைச் சாப்பிடு...”

ஒரு வழியாய் சாப்பாடு முடிந்ததும் லதா சொன்னாலும் கேட்காமல், அவனே எல்லாவற்றையும் அப்புறப்படுத்துவான். உடனே டீபாயில் வெந்நீர், மாத்திரைகள் வந்து விடும் மருந்து சீட்டைப் பார்த்து, மாத்திரைகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் தருவான்.

ஏற்கனவே காய்ச்சலால் ஏற்பட்ட வாய்க்கசப்புடன் மாத்திரை கசப்பும் சேர்ந்துக் கொள்ள, சமயங்களில் மாத்திரையோடு தண்ணீரும் சேர்ந்து குதித்துக் கொண்டு வெளியேறும். தயாவின் மீது அபிஷேகமாய் விழும்... அவன் அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்த மாட்டான்.

மாத்திரை மருந்துகள் அகல்யாவின் உடம்பில் சேராமல் போகிறதே என்று தான் கவலை கொண்டு பதறுவான். லதாவிற்கு சங்கடமாயிருக்கும். அகல்யா சலனமேயில்லாமல் இதிலெல்லாம் என்ன இருக்கிறது என்பது போல் அமர்ந்திருப்பாள்.

இதெல்லாம்இந்த பத்து நாட்களில் மூவருக்குமே பழகிய கதையாய் போயிற்று. ஆனால், காய்ச்சல் கண்ட மகளைப் பார்க்க வந்த நடேசனுக்கு இதையெல்லாம் அத்தனை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றதற்காக நொந்து போகவா” இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்தற்காக பூரித்து போவதா... புரியவில்லை அவருக்கு குழம்பிப் போனார்.

தனது கேள்விகளை தனக்குள்ளாகப் புதைத்துக் கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தார். “என்னம்மா, உடம்பு பரவாயில்லையா?” என்றார் மகளிடம்.

“ம்...” என்றாள் அகல்யா. எதிர்பார்த்த பதில்தான். மருமகனிடம் திரும்பினார்.

“என்ன மாப்ளே... டாக்டர் என்ன சொல்றாங்க?”

“காய்ச்சல் சரியாயிடுச்சு மாமா. இப்ப அகல்யாவுக்கு முதுகுவலியும், அசதியும் இருக்கு.. சாப்பிட முடியலை, ஆனா போஸ்ட் பீவர் சிம்ட்டம்ஸ் ரெண்டு வாரம் இருக்கத்தான் இருக்கும்னு டாக்டர் சொல்லிட்டரு... சூப் நிறைய குடிக்கச் சொல்லியிருக்காங்க ...” என்று தயா ஆர்வமாய் தகவல்களை விவரிக்க நடேசனுக்கு மகளைப் பற்றிய கவலை மறந்து மருமகனைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது.

இவருடைய கள்ளங்கபடமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்புக்கு என் மகள் நியாயம் செய்வாளா? தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதற்காக காத்திருக்கத் தான் வேண்டும்.



கறை மட்டுமா நல்லது...
காய்ச்சலும் நல்லது தான்...

அகல்யா காய்ச்சல் வந்து படுக்கையில் விழுந்து இரண்டு வாரங்களாகிவிட்ட நிலையில், சமுத்ரா பழம், பிஸ்கட் சகிதம் தோழியைப் பார்க்க வந்தாள்.

“என்னடி... இப்படி இளைச்சுப் போயிட்டே”

“ப்ச்... இருக்கேனே... அதுக்கு சந்தோசப்படு...”

“ஏண்டி இப்படிப் பேசறே?”

“அவ்வளோ கஷ்டம் சமுத்ரா... முதுகுவலி என்னை உக்கார விட மாட்டேங்குது... இப்படி சுவத்துல சாய்ஞ்சி உக்கார்த்தாதான் பத்து நிமிஷமாவது இருக்க முடியுது...” என்று முனகினாள். தயா தோழிகள் இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து தந்தான். அவன் கீழே சென்றதும் சமுத்ரா வாய் திறந்தாள்.

“அகல்யா... தயா உன்னை செமையா கவனிக்கறாரு...”

“ஆ...மா... போ...”

“சலிப்பு வேறயா உனக்கு!ஜூஸைக் குடி... அகல்யா எதுக்கு சொல்றேன்னா ,நார்மலா இருக்கற குடும்பங்கள்லயே வொய்ப்புக்கு உடம்பு சரியில்லேன்னா சத்தமில்லாம அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க... ஆனா நீ\ ம்ம்ம்... இருந்தாலும் தாயுமானவன் உன்னைப் பார்த்துக்கறாரு... அதுவும் நல்லாப் பார்த்துக்கறாரு. அதச் சொன்னேன்” என்று இழுத்தாள் சமுத்ரா.

“வேற டாபிக் பேசுவோமா”

“அதெல்லாம் ஆபிஸ் வந்து பேசிக்கலாம்... ரொம்பப் பேசி எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத... நான் கெளம்பறேன்...” என்று சமுத்ரா நடையைக் கட்ட

சமுத்ரா போட்டுவிட்டுப் போன எண்ண விதைகள் அகல்யாவின் மனதில் எழுந்து நின்று நடனம் ஆடின. உண்மைதான் அவர் கையால் தாலி கட்டிக் கொண்டேனே தவிர அவருக்கு நான் என்ன செய்திருப்பேன்? ஒரு சுடுதண்ணீர் வைத்துக் குடுத்த நாள் கிடையாது. ஆனால் தயா இந்த பதினைந்து நாட்களில், மாடிக்கும் கீழுமாக அலைகிறார். இதைப் பழனிக்குப் படியாக ஏறியிருந்தால் பழனி முருகனை தரிசித்த புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

“ஹலோ... அகல்யா எப்படியிருக்க?”

அதிரடிக்குரல் கேட்டு யாரெனத் தலையைத் தூக்கிப் பார்த்தாள் அகல்யா... ஓ! சசிகுமார்...

ஏற்கனவே தலைவலி... இன்னுமொரு தலைவலி படியேறி வருகிறது. எழுந்து அமர்ந்து ஆடையை சரி செய்தவள் துப்பட்டாவைத் தேடினாள். அருகில் நின்றிருந்த தயா குறிப்பறிந்து நாற்காலியின் மீது கிடந்த துப்பட்டாவை எடுத்து அகல்யாவிடம் நீட்டினான்.

“ரொம்ப கஷ்டப்பட்டுட்ட போ...” சசிகுமார்

அகல்யா பதிலேதும் சொல்லவில்லை. ஜன்னல் வழியே எதிர்வீட்டு மாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ பாட்டுக்கு படுத்துகிட்ட மாப்ள பாடுதான் பெரும்பாடா ஆயிப்போச்சு... கீழயும், மேலயும் அலைஞ்சி ஆளு அரை ஆளாப் போயிட்டான்...” என்று சொல்லி தானே பெரிதாகத் தொடையில் தட்டிச் சிரித்தான். அவனது பேச்சை அகல்யா என்ன, தயாவே ரசிக்கவில்லை.

“நல்ல ஊட்டி உருளைக்கிழங்காட்டம் இருந்த... இப்ப என்னவோ போலாயிட்ட, உடம்பை பார்த்துக்க” என்று சசிகுமார் படியிறங்க, சசிகுமாரின்பேச்சும் பார்வையும் குமட்டிக் கொண்டு வந்தது அகல்யாவிற்கு. தயாவிற்கும் புரிந்தது போல...

“சாரி... அவரு அப்படித்தான்... பீல் பண்ணாத...” என்றான். அகல்யா பதிலேதும் சொல்லாமல் படுத்துக் கொண்டாள். சசிகுமார் பற்றிய எண்ணமே மனதில் ஓடியது. மச்சினன் மனைவியிடம் ஒரு மரியாதை இருக்க வேண்டாம்? ராஸ்கல்... ஏதோ மாமன் மகளிடம் பேசுவது போல் வழிந்துக் கொண்டு, இளித்துக் கொண்டு... என்ன பிறவியோ...

முழுப் பூசணியாட்டம் மனைவி அருகில் இருக்கையிலேயே இவர்கள் இப்படி அலைகிறார்கள். கட்டிய மனைவியாய் இருந்தாலும் பார்வையால் கூட ஒரு நாளும் எல்லை தாண்டியதில்லையே தாயுமானவன்... இவர் எங்கே? சசிகுமார்எங்கே?

முதல் முதலாய் தயா மனக்கதவைத் தட்டி, அகல்யாவின் மனதிற்குள் கழுத்தை நீட்டினான்.
super sis
 
Top