Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Sirithaal Deepawali - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 6

என்னுடைய போராட்டங்களில்
இலவச இணைப்பாய்
நீயும் ஏன்
சேர்ந்து கொள்கிறாய்..

அகல்யாவிற்கு மறு நாள் விடியல் மிரட்சியிலிருந்து மீளாத ஒன்றாகவே இருந்த்து.பாவி சுதெர்சன் தன்னிடத்தில் தவறை வைத்துக்கொண்டு என்னை என்ன பாடு படுத்திவிட்டான்.நானே மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையவில்லயே என்றஆதஙகத்தில் இருக்கையில் இந்த வீண் வம்புகளெல்லாம் என் வழியில் குறுக்கிடத்தான் வேண்டுமா என்ற ஆதங்கம் ஏற்பட்டது.அதோடு கூட வங்கிப் ப்ர்ச்சினையில் தயா உடனிருந்து தோள் கொடுத்தாலும் அதைச் சாக்கிட்டு உரிமை எடுத்துக்கொண்டு தன்னை நெருங்கி விடுவானோ என்றெல்லாம் அற்பத்தனமாய் பயந்தாள் அகல்யா..

ஆனால் அப்படியெல்லாம் எதுவுமின்றி எப்போழுதும் போல் தள்ளியே இருந்தான் தயா...யோசனையிலேயே பல் தேய்த்துவிட்டு

‘’லதா’’ என்ரு குரல் கொடுக்க காபி வந்தது. காபியை குடித்து முடித்து விட்டு மானேஜருக்கு ஒரு போனை போட்டாள்..

‘’சார் இன்னைக்கு லீவு எடுத்துக்கட்டுமா?’’

‘’தாராளமா...வீட்டுல ரெஸ்ட் எடுத்து ரிலாக்ஸ் பண்ணிட்டு நாளைக்கு வாம்மா’’என்றார்..

நன்றி சொல்லி போனை வைத்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்..தயா வழக்கம்போல் கடைக்கு கிளம்பி விட்டான்..குட்டித் தூக்கம் போட்டு எழுந்து டிபன் முடித்து விட்டு சமுத்ராவிற்கு போன் போட்டு முதல் நாளைய நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டாள்.குளித்து நைட்டி அணிந்து கையில் ரிமோட்டுடன் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்த போது....

’’அகல்யா’’ அப்பாவின் குரல்..கூப்பிட்டுக்கொண்டே மாடியேறி வந்து விட்டார்..

’’என்னடா..எப்பிடியிருக்கே?..லீவு போட்டிருக்கியா?’’என்றவர் உபசரிப்புகளை எதிர்பார்க்காமல் அவரே அமர்ந்தார்..அகல்யா ‘’ம்’’ என்றாள் சுரத்தின்றி..நீ வேற விசாரிக்கவந்துட்டியா என்ற அலட்சியம் இருந்தது குரலில்..’’காலையில எதெச்சையா உங்க மாமாவுக்கு போன் போட்டு பேசினப்பதான் பேங்க்குல இது மாதிரி ப்ரச்சினை ஆகிப்போச்சுன்னு சொன்னாங்க.மனசு கேட்கல ,,பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..’’

மௌனம் காத்தாள் அகல்யா...

‘’ஏம்மா உனக்கு மட்டும் இப்படி நடக்குது?’’

‘’எதைச் சொல்றிங்க’’

‘’வேறென்ன....பேங்க்குல நடந்த ப்ர்ச்சினையைய்த்தான் சொல்றேன் ’’

‘’என் கல்யாணத்தைத் தான் சொல்றிங்களோனு நினைச்சேன்’’என்றாள் அலட்சியமாய்..

‘’ஏன் உன் கல்யாணத்துக்கென்ன?’’

‘’என்ன புதுசாக்கேக்கறிங்க...கல்யாணத்துக்கு முன்னயெ சொன்னேன்ல... மாப்பிள்ளையை பிடிக்கலேன்னு’’

‘’அப்ப நீ இன்னும் அதெ ஸ்டாண்ட்ல தான் இருக்கியா?’’

‘’நான் மனசு மாறிடற அளவுக்கு இப்ப என்ன நடந்துருச்சு/’’

‘’என்னம்மா இப்பிடி கேக்குறே\ நேத்து ப்ரச்சினையில கூட மாப்பிள்ளை உன் கூட ஆதரவா நின்னுருக்காரு’’

‘’நேத்து ப்ரச்சினையில எங்க பேங்க் மானேஜர் கூட்த்தான் எனக்கு சப்போர்ட்டா இருந்தாரு,,,அதுக்காக’ ? மகளின் பதிலில் தொக்கி நின்ற கேள்வி அப்பாவை எரிச்சலுட்டியது,,இப்படி பேசுபவளிடம் என்ன பேசுவது? வாயடைத்துப்போனார் நடேசன்...

‘’உங்க திருப்திக்கு கடமைக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க்ள்ல...அதோட விடுங்க.எதுக்கு வந்து வந்து என்னைய நோண்டிகிட்டே இருக்கீங்க?’’

‘’எனக்குப் புரியலடா நல்ல மனுஷங்க..மரியாதையான வசதி வாய்ப்புள்ள குடும்பம்..ஒழுக்கமான குண்முள்ள பையன்,,இதை விட என்ன தான் வேணும் உனக்கு?’’

‘’எனக்கு என்ன வேணும்ங்க்கிறதை நீங்க முடிவு பண்ணக்கூடாதுப்பா’’என்றாள் ஆவேசமாய் கை நீட்டி...தனது பேச்சு மகளிடம் எடுபடாது என்பதை புரிந்து கொண்டார் நடேசன்..

‘’தூங்கறவங்களை எழுப்பலாம்,, தூங்கற் மாதிரி நடிக்கறவங்களை என்னதான் செய்ய முடியும்? நான் பேச்சை நிறுத்திட்டேன்,நீ கத்தாதம்மா,,கீழே யாரு காதுலயாவது விழுந்துடப்போகுது..ஆனா நீ சொன்னாப்புல நான் தப்புதாம்மா பண்ணிட்டேன்..’’

‘’வாங்க வழிக்கு,, இப்ப உணறிங்களா’’

‘’ஆமா. ஒரு நல்ல குடும்பத்துல உன்னய கொண்டுவந்து விட்டு தீராப்பாவத்துக்கு ஆளாயிட்டேன்.குரங்கு கையில பூமாலை குடுத்தாப்புல ஆயிருச்சி..உன் மனசு போல செய்யீ நான் கெளம்புறேன்,,’’என்று நடேசன் படியிறங்க.. முகத்தில் சாணியடித்தாற்போல அவமானமாய் உண்ர்ந்தாள் அகல்யா...

எல்லவற்றிலும் மூக்கை நுழைக்கும் மனமே
நீ எங்கு தான் இருக்கிறாய்.....

அன்றுமாலை அகல்யா வங்கியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அனவரும் ஒரு கல்யாண வரவேற்புக்கு கிளம்பிகொண்டிருந்தார்கள்..வழக்கம்போல் அகல்யா நான் வரவில்லையென்று சொல்லிவிட்டாள்..

‘’தனியா இருப்பியாம்மா;;மாமியார் கரிசனத்துடன் கேட்டாள்.

‘’ம்..ஒன்ணும் ப்ராபளமில்ல,,’’

‘’நைட்டுக்கு சப்பாத்தி போட்டு ஹாட்பேக்கில் வச்சிருக்கேன்..சப்பிட்டுக்கம்மா’’

எல்லோரும் கிளம்பிபோனதும் சுதந்திரமாய் உண்ர்ந்தாள்...தொலைக்காட்சியை சத்தமாய் வைத்து விட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.. பாட்டு ஒடியது,,

‘’கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
’கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்’’

பாடல் மனதுக்கு இதமாக இருந்த்து..கூடவே அப்பாவின் நினைவும் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை..போன மாதம் பேங்க் ப்ரச்சினை பற்றி கேள்விப்பட்டு தன்னைப் பார்க்க வந்தவரை வெட்டி பந்தா காட்டி வீண் வார்த்தைகள் பேசி விரட்டியடித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது..கண்களில் நீர் கோர்த்து உதடு துடித்தது.கல்யாணவிஷயத்தில் ஏதோ பிடித்த பிடியில் நின்று விட்டாரே தவிர அவரையெல்லாம் கை நீட்டி ஒரு குறை சொல்லிவிடமுடியுமா என்ன?..

மேலும் ஒரு கல்யாணத்தை நிறுத்துவதற்கும் நடத்துவதற்க்கும் அப்பா கடவுளா என்ன..எனக்கும் தயாவிற்கும் ப்ராப்தம் இருந்திருக்கிறது..நடந்திருக்கிறது..இதெல்லாம் என் மரமண்டைக்கு ஏன் புரிய மாட்டேனென்ங்கிறது..அறிவுக்கு ஒரளவு தெரிந்தாலும் மனம் அதை ஏற்பதில்லை,,வழிந்த கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்..

எக்கு மனிதர்களாய் இரும்பு இதயமாய் தங்களை காட்டிகொள்பவர்கள் கூட உள்ளூக்குள் இளகிய தண்மையை அடை காப்பவர்களாய்த்தான் இருக்கிறார்கள்..ஏதோ ஒரு பலவீனமான கண த்தில் அதுவும் வெம்பி வெடித்து தன்னை வெளிப்படுத்திகொள்ளத்தான் செய்கிறது..கதவு தட்டப்படும் ஒசை கேட்டு திடுக்கிட்டு ஜன்னல் வழியே அகல்யா எட்டி பார்த்தாள்..

மித்ராவின் கணவன் சசிகுமார் தலையை கோதியபடி நின்றிருந்தான்..இவர் எப்படி இங்கே?கதவைத்திறந்தாள்.அகல்யாவை கண்டதும் அழைப்புக்கெல்லாம் காத்திராமல் சிரித்தபடி உள் நுழைந்தான்,’’எப்பிடியிருக்கே அகல்யா,,எங்க வீட்டுல ஒருத்தரையும்கானோம்..?’’

‘’எல்லாரும் ஒரு ரிஷப்ஷனுக்குப் போயிருக்காங்க’’.பதிலைக்கேட்டதும் சசிகுமாரின் சிரிப்பு அகலமானது,,’’காலையிலேயே நாகர்கோயில் வந்துட்டேன்,,வந்தவேல சீக்கிரம் முடிஞ்சுது,,அதான் வந்தேன்,, மித்ராவும் வீட்டுக்குப் போயிட்டுவாங்கனு சொல்லியனுப்பினா’’,பதிலேதும் பேசாமல் ஒரு நாற்காலியில் தள்ளி அமர்ந்தாள் அகல்யா,

‘’அப்புறம்...சொல்லு’’

‘’என்ன சொல்லனும்’’

‘’மேரேஜ் லைஃப் எப்பிடி போகுது?’’ கேள்வியே சகிக்கவில்லை..

‘’ம்..போகுது’’ என்றாள் முறைப்பாக...

‘’என்ன பதில்ல சுரத்தே இல்ல’’

‘’ப்ச்... என்னதான் ப்ரச்சினை உங்களுக்கு?’’என்று எரிச்சலானாள் அகல்யா..

‘’எனக்கு ஒரு ப்ரச்சினையுமில்ல...உங்க ரெண்டு பேருக்குள்ளதான் ஏதோ ப்ரச்சினைன்னு...’’

‘’என்ன’’ ..அகல்யா குரலை உயர்த்த..

‘’எனக்கு ஒண்ணுந்தெரியாதும்மா...மித்ரா தான் ஏதோ சொல்லிட்டிருந்தா..’’

‘’தெரியாமலே இருக்கட்டும்,,நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க’’

‘’என் வேலை முடிஞ்சதும்மா’’

‘’அப்ப ஊரைப்பார்த்து கிளம்புங்க’’ காட்டமாகவே பதில் சொன்னாள் அகல்யா..

‘’ஒகே..கிளம்பத்தான் போறேன் ..ஏதாவது ஹெல்ப் வேனுமானா கேளு’’

‘’கட்டாயம் கேக்குறேன்’’ பல்லைக் கடித்தபடி பதில் சொன்னாள் அகல்யா,,மனசில்லாமல் சசிகுமார் கிளம்ப..’’ஜொள்ளூ பார்ட்டி’’ என்று முனுமுனுத்தாள் அகல்யா..இது போன்ற் ஜென்மங்களைப் பார்க்கையில்தான் தயாவும் அவனது குடும்பத்தினரும் தனக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தோன்றியது...ஆனாலும் அந்த எண்ணத்தை,அலட்சியத்துடன் ஒதுக்கிவிட்டாள் அகல்யா..

அவள் தனது கோபத்தை குறைக்கும் எந்த சக்தியையும் மனதுக்குள் அனுப்பாமல் கவனமாய் தவிர்த்து வந்தாள்,,அடுத்த வாரத்தில் வங்கியின் பரபரப்பான ஒரு காலை வேளையில் அகல்யாவிற்கு தம்பி மதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு..

’’சொல்லு மதி’’

‘’நல்லாயிரூக்கியாக்கா’’

‘’ம் இருக்கேன். என்னடா..புதுசா அக்கா ஆத்தாங்கிறே’’

‘’அப்பாதான் அப்பிடி கூப்பிடச்சொன்னாரு’’

‘’ஏனாம்’’

‘’உன்னைபேர் சொல்லி கூப்பிட்டா அத்தான் ஏதாவது நினைப்பாராம்’’

‘’ம்..கனைப்பாரு...அப்பாவுக்கு கற்பனை வளம் அநி யாயத்துக்கு ஜாஸ்தி..சரி அதை விடு..வேலை விஷயம் என்னாச்சு?’’

‘’ஃபஸ்ட் ரவுண்டுல செலெக்ட் ஆகியிருக்கேன்..’’

‘’வெரிகுட்..எப்பிடியாவது உள்ளே நுழைஞ்சிடு..சம்பளத்தை பத்தி யோசிக்காத,,ஐடி கம்பெனியில போகப் போக நல்ல சம்பளம் கிடைக்கும்.’’

‘’ஒகே,,அக்கா அப்புறம் போன வாரம் அப்பா உங்க வீட்டுக்கு வந்திருந்தார்ல,,அப்ப சண்டை ஏதாவது நடந்திச்சா..’’

‘’இல்லியே .....ஏன் கேக்குறே’’

‘’அப்பா ரொம்ப டல்லா இருக்காரு..சரியா சாப்பிடறதில்ல,,சரியான பேச்சும் இல்ல’’

‘’ம்ம்..அதுவா ,,அவரு செஞ்ச தப்பு அவருக்கே குத்துது..அதுக்கு யாரு என்ன செய்ய முடியும்?நீ போனை வை..கஸ்டமர் வேயிட் பண்றாங்க’’என்று கட் செய்து விட்டாள்.ஆனால் மனதிலிருந்து கட் பண்ண முடியுமா என்ன? மதிய உணவு இடைவேளையின் போது தம்பிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தோழி சமுத்ராவுடன் பகிர்ந்து கொண்டாள்..

‘’சரியான ஆளு நீ..உங்கப்பா பாழுங்கிணத்துலயா தள்ளீட்டாரு உன்னைய’’

‘’எனக்குப் பிடிக்காத இடம் கிணறா இருந்தா என்ன குளமாயிருந்தா என்ன ?...இது சேனைகிழங்கு எரிசேரியா சமுத்ரா’’

‘’ஆமா.எடுத்து டேஸ்ட் பாரு’’

‘’அப்ப்பா நல்ல காரம்’’

‘’எனக்கு இவ்ளோ காரம் வேணும்’’

‘’வாழ்க்கைதான் இப்பிடி சப்புன்னு இருக்கு..சா ப்பாடாவது உப்பு உரைப்பா இருக்கட்டுமேன்னு பெண்கள் நினைக்கிறாங்க போல’’என்று சிரித்தாள் அகல்யா....

‘’சொன்னாப்புல சாப்பாட்டுல சந்தோஷத்தை தேட ஆரம்பிச்சு.ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டுதான் குண்டாயிடறாங்களோ’’

‘’இருக்கலாம்..ஒரு இடத்துல கிடைக்காததை இன்னோரு இடத்துல தேடித்தானே ஆகனும்’’

‘’அகல்யா எனக்கு ஒரு டவுட்டு. உனக்கு ‘ உன் ஹஸ்பண்டை பிடிக்கலையா... இல்ல, அவங்க குடும்பத்தையே பிடிக்கலையா...

“எதுக்கு கேக்குறே??’

“இல்ல... கூட்டுக்குடும்பத்துல இருக்க இஷ்டம் இல்லேன்னா, பேசாம நீயும் உன் ஹஸ்பெண்டும் தனிக்குடித்தனம் போயிடலாம்ல, அதான் கேட்டேன்...”

“நீ ரொம்ப நார்மலா யோசிக்கறே... அவரு குடும்பத்து மேல எல்லாம் எனக்குப் பெரிசா விருப்பம் இல்ல... வெறுப்பும் இல்ல...”

“ம்...”

“என்ன??”

“ம்... மூலஸ்தானமே எனக்கு ரசிக்கலையே... துணை தெய்வங்களை பத்தி சொல்ல என்ன இருக்கு??”

“அகல்யா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்... நாங்க எல்லாம் மாப்பிள்ளைய பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இப்போ என்ன வாழுது...”

“ஏன் அப்படி சொல்றே??

“எங்கேஜ்மெண்ட் முடிஞ்ச அன்னைக்கு போனை கையில எடுத்தவ தான்.... மூணு மாசமும் பேச்சு பேச்சு ஒரே பேச்சு தான்... கழுத்துல தாலி ஏறினதும் தான் போனை கீழ வைச்சோம்...”

“சரி...”

“சரியில்லை... அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள பேச்சே நின்னுப்போச்சு, வேலை வேலைன்னு ரெண்டு பேரும் ரெண்டு திசையில ஓடிக்கிட்டு இருக்கோம்... திரும்பிப் பார்க்கறதுக்குள்ள மடியில பிள்ளை வேற, இப்போ அதுக்காகவும் ஒடுறோம்...”
 
நைஸ் சிஸ்..... அகல்யா பிடிக்கல பிடிக்கலனு சொல்லுற நீ என்ன பிடிகலனு சொல்ல மாட்டுரை ...
 
Nalla puriyura maathiri solluma samuthra. Ena dhan akalyaku problem? Valid reason illama thannaiyum kasta padithikitu elloraiyum thuyarapaduthitu iruka...
 
சிஸ் அப்பா வந்துட்டு போனது ஒரு மாசம்னு ஒரு இடத்தில் இருக்கு.... தம்பி கூட பேசும் போது போனவாரமனு இருக்கு
 
Top