Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 5

நல்லதோ
கெட்டதோ அது
நான் முடிவு செய்ததாய் இருக்க வேண்டும்.....

வாழ்க்கை வண்டி எவ்விடத்திலும் எதெற்காகவும் நிற்பதில்லை..கர்மவீர்ராய் தவறாது தனது கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறது.அகல்யாவைப் பற்றி வீட்டினரும் வீட்டில் உள்ளோரைப் பற்றி அகல்யாவும் தேவையான அள்வில் புரிந்து கொண்டு விட்டதால் கதை நடக்கிறது..வீட்டில் அகல்யா வுடன் தொடர்பில் உள்ள ஒரெ ஆள் வேலைக்காரப்பெண் லதா தான்..மாடியில் இருந்தவாறே குரல் கொடுப்பாள் அகல்யா..

‘’லதா சூடா சுகர் குறைச்சலா ஒரு காபி’’’

‘’லதா ஃப்ரிட்ஜ் வாட்டர் வேனும்’’

‘’லதா டிபன் ரெடியா/’’

‘’லதா இன்னிக்கு எனக்கு லஞ்ச்சு வேணாம் சொல்லிடு,’’

லதாவும் சளைக்காமல் மாடியேறி இறங்குவாள்..அகல்யாவின் பீயே லெவலுக்கு வந்துவிட்டாள் லதா.. அவளுக்கு இப்பொழுது வீட்டு வேலைகள் கூட இரண்டாம் பட்சமாகி விட்டது..மணிமாலாவும் வீட்டு வேலைகளுக்கு இவளைச் சார்ந்திருப்பதில்லை.’

’நீ அகல்யாவுக்கு வேண்டியதை செய்து விட்டு மிச்சசொச்ச நேரத்துல எனக்கு ஹெல்ப் பண்ணு போதும்’’என்று சொல்லிவிட்டாள்..

ஆகையினால் பெண்களுக்குள் உரசல்கள் இல்லை...காற்று போல அகல்யா தன் மனம் போனபடி வலம் வருகிறாள்..வீட்டில் அவளுக்கு எங்கும் தடையொ தடங்கலோ இல்லை. தயாவை பொறுத்த அள்வில் அவனுக்கு மணைவி வீட்டில் இருப்பதே போதுமானதாக இருந்த்து...அவளது நடமாட்டத்தையும் நடை உடை பாவனைகளையும் மனதிற்குள் ரசித்துக்கொள்வான்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைதான்..

ஆனால் கைக்கும் வாய்க்கும் தூரம் அதிகமில்லையே..அந்த நம்பிக்கைதான் அவனை நகர்த்திச்செல்கிறது,,பெற்றவளிடம் கட்டியவள் சாப்பிட்டாளா என்று அன்பொடு விசாரித்துக்கொள்வான்..அவனது பாசம் மனிமாலாவை உருகச்செயும்..வெளீத்தெரியாமல் மனதிற்குள் குமைந்து கொள்வாள்..

’’ம்ஹம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வாழ்க்கை அமைய வேண்டும்போல’’என்று முனகுவாள்....இப்படியாக வீட்டில் உள்ள நபர்கள் ஒரு மாதிரியாகத் தங்களைப் பொருத்திக்கொண்ட நிலையில் ஒரு நாள் அகல்யாவின் அப்பாவும் தம்பி நந்தாவும் அவளைப்பார்க்க திருனெல்வேலி அல்வா சகிதம் வருகை தந்தனர்..வீடு மொத்தமும் குப்புற விழுந்து அவர்களை உபசரிக்க அகல்யா பெரிதாக கண்டுகொள்ளவில்லை..

‘’நாம செஞ்ச சாதனைக்கு ரிசல்ட் எப்பிடியிருக்குன்னு பார்க்க வந்துட்டாரு போல’’என்று மனசுக்குள் கருவினாள்...அப்பா கேட்ட கேள்விக்கு சுவற்றைப் பார்த்துக்கொண்டு பதில் சொல்லி வைத்தாள்..பேசக்கற்றுக் கொடுத்த
டம் பேசப்பிடிக்க வில்லை மகளூக்கு.. என்ன செய்வது?

தந்தை மகள தகறாறு வீட்டாருக்குத்தெரியும் என்பதால் அகல்யாவிற்கு நடிக்கவேண்டிய அவசியமும் இல்லாது போயிற்று..

தம்பியிடம் மட்டும் முகம் கொடுத்துப்பேசினாள்...சூழ்னிலை சரியில்லை என்று புரிந்துகொண்ட அகல்யாவின் அப்பா வந்த கையொடு ஊருக்கு கிளம்ப அவரை இரண்டு நாட்கள் தங்கிபோகுமாறு அனைவரும் வற்புறுத்தினார்கள்-அகல்யாவை தவிர...சொல்ல வேண்டியவள் சொல்லாமல் அவர் எப்படி இருப்பார்?கனத்த உடம்பொடு கனத்த மனதையும் தூக்கிக்கொண்டு இருப்பு கொள்ளாமல் கிளம்பிவிட்டார்..

வெளியில் கல்லாய் காட்டிக்கொண்டாளே தவிர அந்த முன்னிரவில் தள்ளாடியபடி மகனின் கையைப்பிடித்துக்கொண்டு அப்பா படியிறங்கிப்போவதை காண சகிக்கவில்லை அகல்யாவுக்கு..

கலங்கிய கண்களுடன் மாடி பா ல்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா..தகப்பனையும் பிள்ளையையும் பிரித்து வைத்து ஊடாடிய பாசம் ஒரு சகஜ்ஜால கில்லாடி...ஒளித்து ஒளித்து மறைத்து மறைத்து பிணைத்து விலக்கி பல விதமாய் போக்கு காட்டக்கூடியதாயிற்றே..

மனிதர்களும் அவர் தம் உள்ளஙகளும் பாசம் என்ற குறும்புப்பிளளையின் விளையாட்டு மைதானம் தானே...விட்டு வைத்து விடுமா அகல்யாவையோ அவளது அப்பாவையோ....


நாம் இருவரும்
தவற விட்ட நம் வாழ்க்கை
தவழ்ந்து தவழ்ந்து
வெளீச்செல்கிறது...

அன்று காலை அகல்யா வங்கிக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கீழே’’வாங்க வாங்க’’ என்று சத்தம் கேட்டது...தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கீழே இறங்கினாள். த யாவின் அக்கா மித்ரா தனது குடும்பத்துடன் வந்திருந்தாள்..கன்னியாகுமரியில் குடியிருப்பவள்.

‘’எப்படிம்மா இருக்க’’ மித்ரா ஆவலுடன் கேட்க’’ம்’’ என்று சுரத்தில்லாமல் பதில் சொன்னாள் அகல்யா.

‘’எங்க ஊருக்கு வந்தா சன் செட் சன்ரைஸ எல்லாம் பார்க்கலாமில்ல..ரெண்டு பேரும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்’’.

‘’இங்க மொட்டை மாடியிலெ இருந்து பார்த்தாலே சன்செட் நல்லாத்தெரியுதே’’என்று அகல்யா கவுண்டர் குடுக்க..மித்ராவின் மகன் கை கொட்டிசிரித்தான்.

’’ஹா ஹா. அம்மவுக்கு பெரிய பல்பு’’ என்றான்..அனைவருக்குமே முகம் சுண்டிவிட்டது.அகல்யாவற்கு மட்டும் குளுகுளுவென்றிருந்தது.மித்ராவின் கணவன் சசிகுமார் விழித்தவாறு அமர்ந்திருந்தான்..அவனது ஏற்ற இறக்கப்பார்வையே பிடிக்கவில்லை அகல்யாவிற்கு....

மெல்ல வாய் திறந்தான் சசி குமார்.’’அகல்யாவை கல்யாணத்துல பார்த்தது..இப்ப கொஞ்சம் கலர் கூடுனாப்புல தெரியுது...நாகர்கொவில் ஊரு அப்பிடி..மண்ணையும் பொண்ணா ஆக்கிரும்ல..’’

அவனுக்கு சூடாக ஏதாவது சொல்லிவிடலாமா என்று அகல்யா வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்த வேளை தயா சூழ்னிலையின் வெப்பத்தைப் புரிந்து கொண்டு கூட்டத்தை கலைத்தான்..

‘’அத்தான் பசியொட வந்திருப்பீங்க.வாங்க சாப்பிட உட்காருங்க.. அம்மா டிபன் வைங்க லதா தண்ணிர் வை’’

அகல்யாவும் அமர்ந்து இரண்டு இட்லிகளை வாயில் போட்டு விட்டு வங்கிக்கு கிளம்பினாள்.

தயா மனைவிக்கு முன்னால் சென்று பைக்கை கிளப்பியதையும் அகல்யா அதில ஒய்யாரமாய் யேறி அமர்ந்ததையும் இருந்தும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை என்பதயும் கவனிக்கத் தவறவில்லை சசிகுமார் ...செயல்கள் ஒன்றுதான்..ஆனால் பார்வைகள்தான் வேறு வேறு ஆயிற்றே ....

ஒவ்வொருனாள் காலையும் ஒன்ற்போல் தான் விடிகிறது. ஆனால் சம்பவங்கல் ஒன்று போல் இருப்பதில்லை..அகல்யா வீட்டில் மனம் போன போக்கில் களேபரங்களை நட்த்திக்கொண்டிருக்க.வங்கியில் அகல்யாவுக்கு எதிராக கஸ்டமர் ஒருவன் கலாட்டா செய்து விட்டான்.

அவன் பெயர் சுதர்சன்.அவனது சேமிப்புக்கணக்கில் இருந்து ஒரு லட்சரூபாயை அவனுக்குத்தெரியாமல் அவனது ஊழியருக்கு அகல்யா மாற்றிவிட்டாளாம்.இதுதான் புகார்.அகல்யா தன் தரப்பு நியாயத்தை எவ்வளவோ எடுத்துசொல்லியும் எதுவும் எடுபடவில்லை.....முதலில் வங்கிக்கு வந்த புகார் அப்படியே கால் முளைத்து காவல் துறை வரை போய்விட்டது ..மானஜெர் சதாசிவம் நல்ல மனிதர்.

‘’அகல்யா. என் சர்வீஸ்ல இது மாதிரி எத்தனையோ பார்த்துருக்கேன்.ப்ராடு பசங்க.யு டோன்ட் வொரி..எங்கிட்ட விட்டுடு நான் பார்த்துக்கிறேன்.’’ என்றுதான் சொல்கிறார்.வங்கியில் சக ஊழியர்களும் வந்து தேற்றுகிறார்கள்.அவளது கலக்கத்தை கூட்டும் விதமாய் மதியம் சுதர்சன் வங்கிக்கு வந்து குதி குதியென குதித்தான்..

‘’இந்தப் பொண்ணை நான் சும்மா விட மாட்டேன்.இதுதான் செக்கை பாஸ் பண்னியிருக்கு.ஒரு லட்சம்னா சும்மாவா?நான் பாடுபட்டு சம்பாதிச்ச காசு..யாரு பணத்தை யாரு தூக்கிக்கொடுக்கறது?’’என அவன் சவுண்டு விட மானெஜெர் வந்து அவனை அடக்கினார்

‘’சார் தேவையில்லம பேசிகிட்டு இருக்காதீங்க..இடத்தை காலி பன்ணுங்க’’

‘’நீங்க என் அக்கவுன்ட்டையே காலி பண்ணிட்டீங்களே சார்’’

‘’சார் ரைமிங்கா பேசி கைதட்டல் வாங்க இது பட்டிமன்றமேடைஇல்ல.ஆபீஸ் ... நாலுபேர் வந்து போற இடம்..’’

‘’அதைப்பதி எனக்கென்ன ,என் ப்ரச்சினைககு ஒரு பதிலைச் சொல்லுங்க’’

‘’நீங்க தான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கீங்கள்ல..அவங்க வந்து பதில சொல்லுவாங்க.. நீங்க கிளம்புங்க..’
சாயங்காலம் பார்த்துகிடறேன் உங்களை எல்லாம்.. பேங்கா நடத்துறிங்க பேங்க்கு’’ என்று அகல்யா வைப் பார்த்து முறைத்துவிட்டு அவன் வேளியேற....கதி கலங்கிப் போனாள் அகல்யா..போலீஸ கேஸ் . விசாரனை லாக்-அப் நினைக்கவே பயமாக இருந்தது.

‘’மேடம் பதட்டப்படாதீங்க பார்ப்போம்.’’

‘’எது நான் ஜெயிலுக்குப் போறதையா..?’’

‘’மனசு உடஞ்சு பேசாதீங்க அகல்யா’’

‘’அகல்யா எதுக்கும் உன் ஹஸ்பண்டுக்கு போன் பண்னிச் சொல்லிடு’’

என் ஹ்ஸ்ப்ண்ட் போன் நம்பரே எனக்குத் தெரியாதுன்னு எப்படி இவர்களிடம் எப்படி சொல்வது?வீட்டில் உள்ளவர்களை எப்படி எதிகொள்வது?அங்கு விரல் நுனியில் நான் அவர்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறேன்.. இங்கு என்னை ஆட்டுவிக்க ஒருவன் எங்கிருந்தோ முளைத்து வந்திருக்கிறான்.. இப்போழுது நானே தலை குனிந்து நிற்கவேண்டிய நிலை...

மனதிற்குள் நொந்தாள் அகல்யா..மதிய சாப்பாடு தொண்டையில் இறங்கவேயில்லை..வயிற்றுக்குள் பந்து ஒன்று அவ்வப்போது எழும்பி எழும்பி அடங்கியது. .தோல்வி பயத்தில் விழி பிதுங்கும் மாணவியின் மனனிலையில் இருந்தாள்அகல்யா..நான்கு மணி போல வாசலில் பைக சத்தம் கேட்க ..சொன்னபடி சுதெர்சன் தான் வந்துவிட்டானோ என்று பதறியபடி எட்டிபார்க்க,,,புயலாய் நுழைந்தான் தயா.

’’இவன் எப்படி இங்கே? இந்த நேரத்தில்? நான் தகவலே சொல்லவில்லையே...முதன் முதலாய் கண்வனைப்பார்த்து அகமகிழ்ந்தாள் அகல்யா..அப்படியிருந்தும் தனது வறட்டு கௌரவ வளையத்தை விட்டு அவனைப் பார்த்து சிரிக்கவோ தானாக பேச்சை தொடங்கவோ மனம் வரவில்லை அவளுக்கு. ..தயாதான் பதறியபடி அருகில் வந்தான்.

‘’என்னம்மா ஆச்சு?’’

‘’ஒரு கஸ்ட்மர் என் மேல பால்ஸ் கம்ப்ளேயின்ட் கொடுத்துருக்காரு.’’

‘’சரி டென்ஷன் ஆகாத ..என்னன்னு பார்க்கலாம்’’

‘’உங்களுக்கு எப்படி இது’’ என்று இழுத்தாள்.’’

‘’மதியம் உங்க மானேஜெர் நம்ம கடைக்கு வந்திருந்தப்போ விஷயத்தை சொன்னாரு..அதான் கடையை அடைச்சிட்டு ஒடி வர்றேன்..சாப்பிட்டியா’’

‘’இல்ல’’

அகல்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் விஷயத்தை சொல்லவில்லை என்பதைஎல்லாம் தயா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அது அவனது பெருந்தண்மை.. அதற்குள் சமுத்ரா காபி மேக்கரில் காபி போட்டு எடுத்துவந்து அகல்யாவுக்கும் தயாவுக்கும் தந்தாள்.காபியும் கணவனும் அகல்யாவுக்கு சிறிது தெம்பேற்றீனார்கள்..

‘’போலீஸ் டிபார்ட்மென்டில் எனக்கு ஒருத்தரைத் தெரியும்..அவருகிட்ட விஷயத்த சொல்லியிருக்கேன்.நீ தைரியமாப் பேசு.. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்’’என்று அகல்யா தளர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டான் தயா.சிறிது நேரத்தில் வந்த அட்வகேட் வழக்கு பற்றிய விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு காவல்துறையினரிடம் பேசவேண்டிய முறைகள் பற்றி அகல்யாவுக்கு சொல்லிக்குடுத்தார்.

ஐந்தரை மணி வாக்கில் காவல்துறையினர் வந்தனர்..கூடவே சுதர்சனும்..காவல்துறைனர் வங்கியை நோட்டமிட்டனர்..பின்னர்

‘’இங்க உங்க ஸ்டாஃப் அகல்யா யாரு?அவங்க மேலதான் சுதெர்சன் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காரு..’’ என்றார்.மானேஜெர் தயங்கியபடியே வாய் திறப்பதற்குள்

‘’நாந்தான் சார்’’என்று முந்திக்கொண்டாள் அகல்யா.

‘’என்னம்மா...அந்த செக்கை எப்பிடி நீங்க பாஸ் பண்ணிங்க?’’

‘’சார் எம்மேல தப்பில்லை’’

‘’சரி உங்க தரப்பு நியாயத்தை சொல்லுங்க’’

‘’சார்,, எங்களுக்கு கையேழுத்து மாட்ச் ஆகனும் ...ஐடி ப்ருஃப் இருக்கனும்.அவ்ளோதான்...இது ரெண்டைத்தான் சார் நாங்க
வெரிபை பண்ணுவோம்...பர்டிகுலர் பர்சன் அக்கவுண்ட்ல பேலன்ஸ் இருந்தா குடுத்துடுவோம் சார்.’’

‘’ம்..மேல சொல்லுங்க’’

‘’அதொட இந்த கேஸ்ல செக் எடுத்துட்டு வந்த ஆளும் எங்களுக்குத் தெரிஞ்சவந்தான் சார்..அவன் ரொம்ப நாளா சுதெர்சன் சார்கிட்ட வேலை பார்க்கிறவந்தான் சார்..அதனாலதான் எங்க்ளுக்கு டவுட் வரலை.’’

‘’சரிதான்மா..உங்க விளக்கமெல்லாம் சரிதான்..உங்க கஸ்டமர்தான் நான் குடுத்தனுப்பலங்கிறாரே’’

‘’சார் பிளீஸ்.ஒரெ ஒரு விஷயம் சொல்றேன்..செக் பாஸ். ஆன டேட் பாருங்க..எட்டு மாசம் ஆச்சு’’ வழக்கறிஞர் வாய்திறந்தார்...

‘’எட்டு மாசம் ஆச்சா..இவ்ளோ நாள் என்ன சார் பண்ணிங்க/’’-அதிர்ந்தது காவல்துறை..

‘’கவனிக்கல சார்’’

‘’சார் பொய் சொல்றாரு..அவரு செல்லுக்கு உடனே மெசேஜ் வந்திருக்கும்’’படபடப்புடன் சொன்னாள்
அகல்யா..

’’எஸ் சார்.ஷீ இஸ் ட்ரு..சுதெர்சன் எட்டு மாசம் கழிச்சி யோசிச்சிப்பார்த்து வேணும்னே எங்க பேங்க் மேல கேஸ் போட்டிருக்காரு’’என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மானேஜெர்..

‘’ஒகே.எனக்கு ஒரளவு பிக்சர் கிடைச்சிருக்கு,,நாங்க சுதெர்சன் கம்பனியில போயி விசாரிச்சிட்டு வர்றோம் அதுவரை நீங்க இருங்க சார்.. மேடம் நீங்களும் இருங்க.’’என்று சொல்லிவிட்டு காவல்துறை பரிவாரங்களுடன் வேளியேற..மற்ற ஊழியர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர் ..தயா அகல்யா இருவருடன் சமுத்ராவும் உடனிருந்தாள்.

தயா எட்டு மணீ வாக்கில் அனைவருக்கும் டிபன் வாங்கி வந்தான்,,நட்பு முறையில் மானேஜரும் சேர்ந்து சாப்பிட்டார். வங்கி வரலாற்றில் நடந்த பழைய கதைகளை எடுத்து விட்டார்..அகல்யாவிற்கு பயம் சற்று தணீந்தது,,சுமார் ஒன்பது மணிபோல மறூபடியும் போலீஸ் ஜீப்..உள்ளே வந்த காவல்துறை அதிகாரி நாற்காலியில் அமர நால்வரும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

‘’சார்.. நோ ப்ராபளம்.எல்லாம் க்ளியராயிடுச்சு..உங்க பேங்க்குக்கு செக் கொண்டுவந்தவன் சுதெர்சனோட எம்ப்ளாயிதான்..ஆனா அவன் ஒரு ஃப்ராடு.,சுதெர்சனுக்கே இப்பதான் விஷயம் தெரியுது பாவம்’’...அவன் என்ன செஞ்சிருக்கான்னா சுதெர்சனோட செக் புக்லேயிருந்து ஒரு லீஃபெடுத்து அவரை மாதிரியே கையெழுத்து போட்டு கொண்டு வந்து குடுத்து ஏமாத்தியிருக்கான்..’’

‘’பொய் கேசு நிக்காதுன்னு தெரியும் எனக்கு,,அதான் தைரியமா இருந்தேன் ..இப்ப ரிலீஃப்’’ என்றார் மானேஜர்..

‘’எப்படி சார் அவனை டிரேஸ் பன்ணிணிங்க’’-சமுத்ரா

‘’சுதெர்சன் கம்பேனி ஸ்டாஃப் எல்லாரையும் விசாரிச்சோம்..இந்த பர்டிகுலர் பர்சன் டக்கு டக்குனு பதில் சொன்னான்..அதாவது எல்லாம் ஏற்கெனவே ரெடி பன்னி வச்ச மாதிரி இருந்துச்சு..’’

‘’அந்த ப்ரிபரேஷனே அவனைக் காட்டிகுடுத்துருச்சு இல்ல சார்’’ தயா.

‘’எஸ் ..டவுட் வந்ததும் விடுவோமா,,தனியாக்கூப்பிட்டு கவனிச்சோம்,,,ஒத்துக்கிட்டான்..’’

‘’ தேங்க்யு சார்,,’’ என்றாள் அகல்யா.

‘’எங்க டூட்டிதனேம்மா இது...சார் நாளைக்கு ஸ்டேஷன் வந்து ஒரு கையழுத்து போட்டுருங்க...எனிவே தேங்க்யு ஃபார் யுவர் கோஆப்பரேஷன்’’என்று சொல்லி காக்கிசட்டை விடை பெற்றுப்போக..மானேஜெர் தயா அகல்யா சமுத்ரா-நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டனர்..

‘’நமக்குன்னு கிளம்பி வர்றானுங்க ‘பாரு’’ என்று சொல்லி சிரிக்க’’பெண்களும்சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்...மானேஜரிடம் விடைபெற்று சமுத்ராவை ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு தயாவும் அகல்யாவும் வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணிபதினோன்று..தயாவின் மொத்தகுடும்பமும் வாசலில் நின்றது,,அவர்களை ப்பார்த்ததும் ஏனோ அகல்யாவின் கண்களீல் நீர் திரண்டது..

தயா சுருக்கமாக நடந்த விபரங்ககளைச் சொல்ல எல்லோரும் நிம்மதி அடைந்தனர்..மணிமாலா மருமகளை அமர வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டாள்..லதா தந்த பாலைக்குடித்துவிட்டு அகல்யா அமைதியாகப் படுத்துக்கொண்டாள்,,ஆனால் மனம் எங்கே அமைதியாக இருக்கிறது? நல்ல மனிதர்களை எல்லாம் உதாசீனப்படுத்தவேண்டிய ஒரு இக்கட்டான மோசமான
சூழ்னிலையில் தன்னை தள்ளீ விட்டு விட்டதாக அகல்யாவ்ற்கு அவளது அப்பாவின் மீது கோபம் அதிகரித்தது.தான் ஒரு சூழ்னிலைக்கைதியாக இருப்பதாக உணர்ந்தாள் அகல்யா..
 
Top