Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Siritha Deepawali 11

Sesily Viyagappan

Well-known member
Member
தனது மனக்குழப்பங்கள்ஒரு புறமிருக்க, வீட்டில எவரும் தயாவிற்கு வாரிசு வரப்போவதை அறிந்தும், வரவேற்பு எதையும் காட்டவில்லையே... உவகை கொள்ளவில்லையே... கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் கம்மென்றிருக்கிறதே...

அது ஏன்? எங்கேயோ இடிக்கிறதே என்று தோன்றியது அகல்யாவிற்கு... மனதில் அரிச்சல் தாங்காமல் மனதில் அரிச்சல் தாங்காமல் ஒருநாள் லதாவை மாடிக்கு அழைத்து தாஜா செய்து விபரம் கேட்டாள் அகல்யா...
“இல்லக்கா... எனக்கொண்ணும் தெரியாது...” என்றாள் அவள்... “ஹ... சும்மா ரீல் விடாத... உனக்குத் தெரியாம இந்த வீட்ல எதுவும் நடக்காதுன்னு எனக்குத் தெரியும்... சும்மா சொல்லு... உன்னை மாட்டி விட மாட்டேன்...”

ஏகமாய் பிகு செய்து கொண்ட பின், மிகுத்த தயக்கத்துடன் லதா விஷயத்தைப்போட்டு உடைத்தாள். “இல்லக்கா... நீங்களும் பெரியண்ணனும் பேசிக்கிறது கூட இல்ல... குழந்தை மட்டும் எப்படின்னு...”

“என்னது...” என்று அகல்யா கத்த...

“அக்கா... இல்லக்கா... இல்லக்கா... எனக்கு ஒண்ணுந்தெரியாதுக்கா... நான் எதுவும் சொல்லல...” என்று பயந்து பிதற்றிய லதாவைத் தள்ளிவிட்டு, பத்ரகாளியாய் படியிறங்கினாள் அகல்யா... கடைசிப்படியில் போய் நின்று கொண்டு, வீட்டிற்குள் பார்த்து குரல் கொடுத்தாள்...

“இந்த வீட்டில மனுஷங்க யாராவது இருக்கீங்களா?”

உள்ளிருந்து வந்த மணிமாலாவும் பதிலுக்கு கத்தினாள். “ஏன் இப்படிதான் கண்ணுக்குத் தெரியுதோ?”

முத்த முதலாய் மாமியாரின் சுடுசொல்... முள்ளாய் குத்தியது... நான் எத்தனை அலட்சியப்படுத்திய போதும், அவமானப்படுத்திய போதும் சினம் கொள்ளாதவர்கள்... இன்று நான் விழுந்து கிடக்கும் நேரத்தில் வீச்சரிவாளை வீசுகிறார்கள்...

“பேச்சு சரியில்லையே...” என்றாள் வேதனையுடன் அகல்யா

“மத்ததெல்லாம் சரியாயிருக்கா” பட்டென்று பதில் வந்தது.

“இப்ப என்ன சரியில்லாமப் போச்சு...” என்ற அகல்யா கைகளை ஆட்டி, கண்களை உருட்டி எகிற...

“அகல்யா... அவ வயசுக்காவது மரியாதை குடுத்துப்பேசு... அடிக்கப் போறாப்புல போற...” மனைவிக்காக வாசித்தார் தமிழரசன்.

“அப்பா என்னப்பா புரியாம பேசறீங்க... அவ என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றா... மரியாதைன்னா என்னன்னு தெரிஞ்சாத்தானே மத்தவங்களுக்குக் கொடுப்பா...” ஜோதியில் கலந்தாள் மித்ரா.

“மரியாதையை கேட்டு வாங்கக்கூடாது... நாமளே தரணும்...” என்று அகல்யா சொல்ல
“குழந்தை மட்டும் தானா வந்திருக்கே... அது எப்படிம்மா அகல்யா?” சசிகுமார் தைரியமாய் சந்தேகத்தைக் கிளப்ப

“ஏய்...சீ... நீ பேசாத...”

“அவரு இந்த வீட்டு மருமகன்... எடுத்தெறிஞ்சு பேசாத...”

“மருமகன் மாதிரியா பேசறாரு...”

“ஏன்? நீ மருமக மாதிரி என்னிக்காவது நடந்திருக்கியா? நீயும் தயாவும் நேருக்குநேர் பார்த்துக்கறது கூட இல்லை.. தெற்குத் திசையும் வடக்குத்திசையுமா இருக்கீங்க... பிள்ளை மட்டும் எப்படி வந்து உதிச்சது... எங்களுக்கு பதில் தெரியணும்...” என்று மைமால நெருப்பைக் காக்க...

“அதான...” என்று சசிகுமார் வலது கையால் இடது கையில் குத்திக்கொண்டு, அகல்யாவை முறைக்க...

“ஏய்... திஸ் இஸ் த லிமிட்... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத... நல்லாயிருக்காது...”

“அவரு மேல பாயாத... அவரு கேக்கறதுல என்ன தப்பு?” - மித்ரா

மாமனார் மாமியாரும் மௌனத்தால் மருமகனை அங்கீகரிக்க கூசிப்போனாள் அகல்யா... தனக்கு மரியாதை இல்லாத கூட்டத்தில் பேசிப் பிரயோசனமில்லை என்று புரிந்தது...

தான் சண்டிக் குதிரையாய், கம்பீரமாய் வளம் வந்த வீட்டில், சாக்கடையாய் ஒதுக்கப்படுவதை அவளால் இம்மியும் ஒப்புக்கொள்ள முடியவில்லை... இந்தக் கோபங்கள் எல்லாம் அப்படியே யூடர்ன் அடித்து, திருநெல்வேலிக்காரர் மீது திரும்பியது...

திருமணத்திற்குப்பின் முதன் முதலாய்த் தன்னைப் பெற்றவருக்கு போன் போட்டாள் அகல்யா.

போனைத் தந்தியாகப் பாவித்து, அடுத்தட பச ஏறி நாகர்கோவில் வந்து சேர்ந்தார் நடேசன்.

அதுவரை தண்ணீர் கூடக் குடிக்காமல், வெறி கொண்ட வேங்கையாய் மாடியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே, தகப்பனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மனதுக்குள் தயார் செய்து கொண்டிருந்தாள் அகல்யா.

இதோ வந்துவிட்டார்... கீழே பேச்சு சத்தம்... பத்து நிமிடத்தில் மாடியேறியும் வந்தார். “வாங்க சார்... உங்களைத்தான் ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்...” என்று அகல்யா கோபத்தை அடக்கிக்கொண்டு சேர...

“ஆச்சரியமாயிருக்கு... என் வாடையே ஆகாது உனக்கு... புதுசா... என்ன அப்பனைத்தேடிட்டு...” மகளின் உபசரிப்பை எதிர்பாராது பேசிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் நடேசன்.

“ஆரம்பி... ஏதோ ஒரு குண்டைத்தூக்கி போடப்போற... போட்டுத்தொலை... பெத்த கடனுக்கு அனுபவிக்கறேன்...” எதிரில் கட்டிலில் ஒரு கால் மடக்கி அமர்ந்த அகல்யா...

“ரொம்ப சலிச்சுக்காதீங்க... இப்ப குண்டைத்தூக்கி போட்டது நான் இல்ல... நீங்க... பெர்சா ஊரு உலகத்துல இல்லாத இடத்துல சம்பந்தம் பேசி முடிச்சிட்டேன்னு மார் தட்டிட்டு அலைஞ்சீங்களே...”

“ஆமா இப்ப அதுக்கென்ன?”

“அதுகேன்னவா... சிம்பிளாச் சொல்லிட்டீங்க... என்ன நடந்திச்சுன்னு தெரியுமா?”

சொன்னாத்தானே தெரியும்!”

தனது மனக்கொதிப்பை அடக்கியபடி கர்ப்பம், வீட்டில நடந்த கலவரம் எல்லாற்றையும் உணர்வு பூர்வமாக அகல்யா விளக்க, தரையைப் பார்த்தபடி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், வெடுக்கென நிமிர்ந்து கேட்டார் ஒரு கேள்வி.

“அதுல என்ன தப்பு?”

“எதுல?” பலவீனமாய்க் கேட்டாள் அகல்யா.

“புரியலையா... மாப்ள வீட்டுல, அவங்கள்லாம் உன்னை கேட்ட கேள்வியில என்ன தப்பு?”

“என்ன தப்பா?”

மாடிக்கூரை இடிந்து தலைமீது விழுந்தது போலிருந்தது அகல்யாவிற்கு... அப்பாவா? என்னைப் பெற்றவரா இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்?

“ஏம்ப்பா... ஏம்ப்பா இப்படி அறிவில்லாம பேசறீங்க?” அகல்யா போட்ட கூச்சலில் கீழிருந்து ஒவ்வொருவராய் மேலேறி வந்து நின்று, அப்பாவையும் மகளையும் மாறி மாறி பார்த்தனர்.

“எனக்கு அறிவிருக்கான்னு கேக்கறயே... நீ அறிவோட வா நடந்துகிட்ட... கட்டுன புருஷனை கால் தூசியா நினைச்ச... அருமையான மனுசங்க அவங்கம்மாப்பா... அவங்களை கொதிக்க கொதிக்கப் பண்ணினே இல்ல

பின்ன... மேலே விட்டெறிஞ்ச கல்லு கீழே வரத்தானே செய்யும்... கொஞ்சம் பின்னால திரும்பிப்பாரு... அவங்க விட்டுக்குடுத்துக் போகப்போக, நீ தல மேல ஏறி உக்காந்த... வானத்துக்கும், பூமிக்கும் குதிச்ச, பொண்ணுக்குப் படிப்பும் பதவியும் இருந்தாப் போதுமா? அவபொண்ணா இருக்கணும்... பிறந்த வீட்டை நல்ல மகளா இருந்து பெருமைப்படுத்தணும்...

பொறுப்பான மருமகளா இருந்து புகுந்த வீட்டை சிறப்பிக்கணும்... அது தான் பொறப்புக்கு அழகு... அதை விட்டுட்டு... டங்கு டங்குன்னு குதிச்சுட்டு, வேலைக்குப் போயிட்டு வந்தா ஆச்சா? என்ன ஈரமண்ணுக்கு அது? மாப்ளைகிட்ட இல்லாத பணங்காசா? அவருக்கில்லாத வருமானமா?

நீ கொண்டு வர முப்பதாயிரம் பிசாத்துப் பணத்துதான் கிழியுதாக்கும்” என்று நடேசன் ஆவேசத்துடன் தன மனதின் நெருனாலைய கடுப்பை போட்டுக்கொட்ட, இயலாமையால் உதடு துடித்து, கண்களில் நீர் முட்டியது அகல்யாவிற்கு...

“சமயம் கிடைச்சிப்போச்சுன்னு பேசாதீங்கப்பா... இப்ப, இந்தப் பிரச்சனைக்கு வாங்க... நான் குழந்தை உண்டானதை மனசாட்சியே இல்லாம இவங்க எப்படி சந்தேகக் கண்ணோட பார்க்கலாம்?” அகல்யா

“பார்க்கத்தான் செய்வாங்க... ஏன்னா, உன்னோட பிஹேவியர் அப்படித்தானேஇருந்துச்சு... நீயே யோசனை பண்ணிப்பாரு... ஒரு நாளும் நீ மாப்ளகிட்ட சிரிச்சுப் பேசுனதில்ல. அவ்வளவு ஏன்? அவரை ஒரு மனுசனாவே நீ மதிச்சதில்லை... அப்படி இருக்கறப்ப, நீஇந்த மாதிரி ஒரு செய்தியைச் சொன்னா, யாராயிருந்தாலும் சந்தேகப்படத்தான் செய்வாங்க...” நடேசன் பேசிக்கொண்டே போக...

தயா படபடவென அருகில் வந்து மாமனாரின் கரங்களைப் பற்றினான். “மாமா. ப்ளீஸ் உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க... இது... இது... எங்க புள்ளதான்... அகல்யா மனசை நோகடிக்காதீங்க...” என்று கெஞ்ச “இவ்ளோ நாலு நம்ம எல்லார் மனசையும் அவ நோகடிச்சா இல்ல...”

“பெத்த அப்பாவே அப்படி சொல்றாரு... நீ ஏன் மாப்ள மென்னு முழுங்கறே...” சசிகுமார் விவகாரத்திற்குள் தலை நீட்ட...

“அத்தான் நீங்க இதுல தலையிடாதீங்க... இது எங்க குடும்ப விஷயம்...” என்றான் தயா.

“ஏண்டா அவருகிட்ட பாயறே... உன் பொண்டாட்டிகிட்ட ஒண்ணும் பேச முடியல... இருக்கறவங்க கிட்டயெல்லாம் எரிகிட்டிருக்க...”

“சரி அத்தான் விடுங்க... மாமா உள்பட யாருமே இந்த விஷயத்துல கேள்வி எழுப்பறது எனக்குப் பிடிக்கலை... என்கிட்டே உரிமை இருக்கு... ஏன்னா, அவ என்னோட மனைவி... பழசை மனசுல வைச்சுக்கிட்டு, அவ கர்ப்பமாயிருக்கிற இந்த நேரத்துல மடத்தனமான சந்தேகங்களை எழுப்புறது முட்டாள்தனம்... மனிதாபிமானம் இல்லாதது”

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது சரிதான் போல... பெற்றவர்களிடம் பெரியவர்களிடம் தலையை உயர்த்தி, கைகளை நீட்டிப் பேசாதவன், இன்று ஆவேசப்படுகிறான்... ஆனால் அது அர்த்தமுள்ள ஆவேசம்...

அகல்யாவிர்க்கு வாய்மூடிக் கொண்டது... கண்கள் திறந்து கொண்டது... தாயுமானவன் அவள் பார்வைக்கு தாயும் ஆனவானாய் தெரிந்தான்... வெட்டி கட்டிய அம்மாவைப் பார்த்தாள்... அவளது தாயின் அதே அன்பு, நம்பிக்கை கருணை, உண்மை, நேர்மை, பழிவாங்கத் தெரியாத அப்பாவித்தனம்.

நான் இத்தனை தூரம் ஓட ஓட விரட்டியும் எப்படி, இவரால் அன்பைப் பொழிய முடிகிறது...

ஆணின் வீரமும், பெண்ணின் ஈரமும் உள்ள ஒருவருக்குத்தான் இப்படி ஒரு மனது இருக்கும்.

அப்பா சொன்னது போல, என் மீது மாறா காதல் கொண்டிருப்பவரின் உள்ளத்தைக் கூட புரிந்து கொள்ளாமல், அறிவிலியாக இருந்திருக்கிறேனே!அப்பா அடிக்கடி சொல்வது போல், இதை விட வேறு என்னதான் வேண்டும் எனக்கு!

ஏன் குதிரைக்கு கண்களை மறைத்து கட்டினாற்போல, நல்லவை எதையுமே காண மறுத்து, எவ்வளவு சுயநலவாதியாக, பிடிவாதக்காரியாக, அல்பத்தனமாக இருந்திருக்கிறேன்... கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறி கோழி பிடிக்கலாம்... வானம் ஏறி வைகுண்டம் போகலாமாம்... இருக்கிறது எனக்கு? பின் எதற்காக, யாருக்காக அஞ்ச வேண்டும்? பொக்கிஷமானகாலங்களை வீணடித்தவள், கணமும் யோசிக்காது, எட்டிக் கணவனின் கையைப் பிடித்து, தனது கண்களில் ஒற்றிக்கொண்டு அழுகிறாள்...

கைகளை நனைக்குமளவு கண்ணீர் விடுகிறாள்... அது புரிதலா, அன்பா, நன்றியா, வேதனையா... எதுவென இனம் காண முடியவில்லை...

காரணங்களைத் தெரிந்து கொண்ட பின்பா, காரியம் நடக்கிறது... இனியும் அவ்விடத்தில் இருப்பது, அவ்வளது நாகரீகமில்லை என்றுணர்ந்து. ஒவ்வொருவராய் மௌனமாய் படியிறங்க...

சூழல அனுமதியும் கிடைக்கவும் கட்டிக்கொண்டு அழுதார்கள்... கரைந்தார்கள்... ஒருவருக்குள் ஒருவர் காணாமல் போனார்கள்.

“கணவனும் மனைவியும் சந்தர்ப்ப வசத்தில் இணைந்து உருவாக்கிய குழந்தை அம்மா அப்பாவை நிரந்தமாய் சேர்த்து வைத்தது...

மூலஸ்தானங்கள் ஒன்றான பின்பு, துணை தெய்வங்களுக்கு இணைவதைத் தவிர என்ன வாய்ப்பு இருக்கிறது...

முற்றும்...
Aduthu varuvathu "sattendru maaruthu vaanilai" novel
It's really a beautiful story kannamma dr
 
Top