Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

My thoughts

Advertisement

Rubyjosy

Active member
Member
#கார்மேக_மின்னல்_நீ

வசீ இந்த கதை முழுவதும் இவனை சுற்றி பின்னபட்டது போலத் தான் எனக்கு தோணுச்சு அண்ட் ஆரம்பம் முதல் இறுதிவரை அப்படி ஈர்க்கிறான் வசீ???

பிஸினஸ் போட்டியால் வசியின் திருமணத்தை இரண்டாம் முறையாக நிறுத்த எதிரி ஜெகதீஷ் போடும் திட்டங்களில் அவள் அறியாமல் மாட்டி வசியை பயங்கரமா பொதுவில் அசிங்கப்படுத்தி விடுறா வித்யூத்தா??? அப்படி என்ன பிரச்சனை ஜெகதீஷ் அண்ட் வசி இடையே? முதல் திருமணம்????? எப்படி வித் உள்ள வந்தா?

ஆரம்ப சந்திப்பே ரொம்ப அமர்களமா போக, அடுத்தடுத்து அடிதடி இல்லாத குறை தான்.. கோபத்தில் வசீ அவளை அவள் மிரட்டி, பாட்டியை காட்டி திருமணம் செய்ய, அடுத்து என்ன ஒரே இடத்தில் இருந்து அவங்க ஆட்டம் ஆரம்பிக்குது???

கிரானிக்காக இருவரும் நடிப்பதும், கிரானி அவன் செய்த எல்லாம் அவனுக்கே திருப்பி கொடுக்க அமைதியா செய்பவனின் செயலுக்கு பின்னான காரணங்கள் தான் என்னவோ???

வித்தை ஒருதலையாய் காதலிக்கும் சித், அது தெரியவந்தால் வசி என்ன செய்வான்? வித் என்ன செய்வா?

அவளின் கனவால் சுயநினைவு இழந்த தந்தை பகடையாக இருக்க, வஸியின் கொடுமையில் இருந்து தப்பவும் முடியாது, நடப்பதை ஏற்கவும் முடியாது தவிப்பவளுக்கு என்று கிட்டுமோ அவள் ஏங்கும் விடுதலை? அவள் கனவு என்ன? நிறைவேறுமா? தந்தையை மீட்பாளா?

கனவுகள் கைக்கு எட்டி கலைந்து போகும் வலியை பலமுறை அனுபவித்த வசியின் கனவு நிறைவேறுமா???

அனைத்தும் அடுத்து என்ன என்ன எதிர்பார்ப்போடு, செயல்களுக்கு பின்னான காரணம் என்ன என்ற கேள்விகளோடு பல எதிர்பாரா திருப்பங்களுடன் அருமையா கொண்டு போய் இருக்காங்க...

கிரன்னி லவ்லி person???

முகிலின் தவறுகளை அவனாக உணர வாய்ப்பு கொடுப்பது (உருவாக்கித் தான், இல்லனா எவன் மதிக்குரான்) சூப்பர்??

தயாநிதி??? வள்ளி கொஞ்சம் யோசித்து இருக்கலாம், அதற்கான தண்டனை அவருக்கு கிடைச்சு இருக்கு.. கற்பகத்தின் பாசம், அன்பு சூப்பர்??? மாறன் எந்த இடத்திலும் நியாயம் என்னவோ அப்படியே இருக்கார்... அண்ணன் மகனை அவனுக்கு தேவையானதை நிறைவேற்றி கொடுக்கிறார்???

நாயகி இந்த மேக் அப் பைத்தியத்துக்கு சாக்ஷி போல ஒரு பெண் அதிசயம் தான்.. அவரின் ஜெராக்ஸ் ஆன மகன் திருந்திய போது கூட இந்தம்மா திருந்தலை?‍♀?‍♀?‍♀

அமுதா எனக்கு ரொம்பவே பிடிச்ச அடுத்த ஆள்❤️❤️❤️ அவர் பேச்சு அப்படி இருந்தாலும் அந்த குடும்பத்தை இன்பத்திலும் துன்பத்திலும் போல அப்படி தாங்குறார்? ரகுபதி அமைதியான பாசமான அண்ணன்??

சாரா ?? சூப்பர் கேர்ள் எந்த இடத்திலும் இவள் நம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தமா நடந்துக்குறா?? நிஜமா இவள் அவனின் வரம்... இவளின் பின்னணியும், அவர்களோடான உறவும் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை.. இவளுக்கு மன அமைதி கொடுக்கும் அவன் செயல்???

சாக்ஷி கியூட் குட்டிப் பொண்ணு.. லவ் குரு??? அவளே சொல்லிப்பா??? இவளின் அத்தனை சொதப்பல் பிளானும் அவன் கொடுக்கும் நோஸ் கட் எல்லாம்???

சித் மீதான மதுரா காதல், அவனின் காதல் பார்த்து வந்தது அழகா இருந்தது??? வித் மேல அவன் வச்ச பாசம், எந்த இடத்திலும் அவளை சரியா புரிஞ்சு, அவளுக்காக நின்னது சூப்பர்.. இருவரின் உறவும் wow...

யுக்தா ஒருவரின் கனவை திருப்பி தருவது, அதுவும் நிறைவேற்றி கையில் தருவது சூப்பர்.. இவளின் காதலும் அழகு தான்?? கொஞ்சம் கொடுமை பண்ணிட்டா??? பாவம் பேபி??

வித் ஆரம்பத்தில் எதையும் யோசிக்காது அவனை திட்டுபோது செம்ம கோபம் வந்தது?? அப்பறம் ஒன்னொண்ணா அவ யோசித்து புரிவது nice...

ரொம்ப பிடிச்சது கரணின் செயல்கள்... சிவகுரு உடனான பந்தம் magical?? எதையுமே அடுத்தவர் நிலையில் இருந்து மட்டுமே யோசித்து செய்தது எல்லாம் அரிதான செயல்??? மெழுகு போல தான் இவன்... அடுத்தவர் ஒளிபெற தன்னை உருக்கும் ஜீவன்❤️❤️❤️ இவனுக்குள் தான் எத்தனை ரகசியம்... எனக்கு இவனை அவ்ளோ பிடிச்சது??? ஜஸ்ட் wow his characterization??? அவ்வளவு வலிகள் ஆனாலும் அடுத்தவருக்கு வலிக்க செய்ய கூடாது என எவ்வளவு யோசனைகள், விட்டு கொடுப்பது, ஒரு துளி அன்பை குடுத்தால் இவன் பதிலாக சமுத்திரத்தையே திருப்பி தாரன்❣❣❣ சாராவிடம் முதல் முதலில் பேசிய இடம் I just loved it... உன்னை கொல்லத்தான் நினைத்தேன் சொன்ன பின்பும் அவனின் பரிவும் அக்கறையும், கற்பகம் மீது அறியாத போதும் கொண்ட அன்பும்???

அம்புஜம் மாமி ப்பா மாடர்ன் அன்னை தெரசா சொல்லலாமா இல்லை அன்னபூரணி சொல்லலாமா இல்லை நடமாடும் தெய்வம் கூட சொல்லலாம்.. ஒரே ஒரு சின்ன செயலில் என்னை ஈர்த்துட்டாங்க??? வாய்தா வாங்காத பட்டம் பெறாத வக்கீல்??????

அவ்வளவு நேர்மறையான கதாப்பாத்திரங்கள்... எதிர்மறை குணம் கொண்டவர்கள் அவரவருக்கான நியாயமும், தண்டனையும் கிடைச்சு இருக்கு...

நான் படிச்ச உங்களின் முதல் கதை.. எனக்கு ரொம்ப பிடிச்சது... Congratulations writer???
 
Wow semma review?????. Thank you so much... @Rubyjosy ????. Ella characterukum feedback superah soliteega. Nan kooda niraya idangalla name marandhutaen. En novel ah vida unga review enaku romba pudichi iruku.
Adhulaum anbai samuthirama sonna vidham. I love it. Once again big thanks for your review....??????. Really I didn't expect dis positive review. Thank you so much... we'll meet soon in next novel
 
Wow semma review?????. Thank you so much... @Rubyjosy ????. Ella characterukum feedback superah soliteega. Nan kooda niraya idangalla name marandhutaen. En novel ah vida unga review enaku romba pudichi iruku.
Adhulaum anbai samuthirama sonna vidham. I love it. Once again big thanks for your review....??????. Really I didn't expect dis positive review. Thank you so much... we'll meet soon in next novel

Eppo varai link irukkum sir?
 
Top