Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 8

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 8

ஜீவா கூறியதை கேட்டு திகைத்து போயிருந்த மலர்விழி, சுயநினைவு அடைந்தது தொலைப்பேசி எழுப்பிய சத்தத்தில் தான்! சத்தம் போட்ட போனை காதுக்கு கொடுக்கும் முன், மலர்விழியை பார்த்து, “நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. இப்போ நீ கிளம்பலாம்.” என்றான் ஓர் அழுத்தத்துடன்.

இதற்கு என்ன பதில் கூற முடியும் அவளால்? வேறு வழியின்றி இடத்தை காலி செய்தாள் மலர். போகும் அவளையே யோசனையுடன் தொடர்ந்தது ஜீவாவின் விழிகள். தொலைப்பேசியில் பேசி முடித்ததும், வேலையில் மூழ்கி போனான்.

அதற்கு பின், வினோத்தை பற்றியும் மலர்விழியை பற்றியும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் இரவு அவன் சீக்கிரமாகவே வீடு திரும்பியதால், பசங்களுடன் நன்றாக நேரம் செலவழித்துவிட்டு அவர்களை சாப்பிடவும் பண்ணினான்.

சாப்பிட்டுவிட்டு பாட்டியுடன் படுத்து கொள்வதாக அவனிடம் கூறிவிட்டு, இருவரும் லட்சுமியுடன் சென்றனர். அலுவக வேலையும் முடிந்து, படுக்க செல்லும் வேளையில் அவனின் தந்தை ராகவன் அறையில் தோன்றினார்.

“என்னப்பா? இன்னும் தூங்கலையா நீங்க?” ஜீவாவின் முகத்தை பார்த்து மறுப்பாக தலையசைத்தார் ராகவன். “இல்லடா தூக்கம் வரல… அதான் உன் கூட கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்.”

ஐய்யோ என ஆயிற்று ஜீவாவிற்கு. என்ன பேசப் போகிறார் என அறிந்தவன்னல்லவா?? எதுவும் சொல்லாமல் கை எடுத்து கும்பிட்டபடி கெஞ்சினான் ஜீவா. “ப்ளீஸ்பா, நீங்க எத பத்தி பேசப் போறீங்கனு நல்லாவே தெரியும். தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்கபா…. என்னால முடியல!”

இவன் பேசுவதை பார்த்து மிகவும் நொந்து போன ராகவனோ அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் ஒன்றாய் திரட்டி இவனை பதிலுக்கு கெஞ்சினார். “என்னாலயும் தான்பா முடியல!! உன்னை தயவுசெஞ்சு கேக்கறேன். நீயும் கொஞ்சம் காது குடுத்து நான் பேசுறதை கேளுடா…”

அப்பா கை எடுத்து கும்பிடவும் மகனால் தாங்க முடியாமல் போயிற்று. அவரின் கைகளை அவசர அவசரமாக கீழே இறக்கி, “என்னப்பா.. நீங்க போய் என்கிட்ட… ப்ச்ச், சரிப்பா என்ன பேசனுமோ பேசுங்க!” என்றான் பரிதவிப்புடன்.

“நான் என்னடா சொல்ல போறேன்… உன்னோட, உன் புள்ளைகளோட ஃலைப்பை பத்தி தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா. கல்யாணம் பத்தி பேச்சை எடுத்தாலே நீ ஓடுற.

என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க? எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுடா…”

அப்பாவின் பேச்சை கேட்டு சில நிமிடங்கள் மௌனத்தின் பிடியில் இருந்தான் ஜீவா. “நான் இன்னும் கல்யாணத்துக்கு ரெடியா இல்லப்பா. எனக்கு எப்போ பண்ணிக்கனும்னு தோணுதோ அப்போ உங்க கிட்ட கண்டிப்பா சொல்றேன்.

நீங்களே பொண்ணு பாருங்கபா. இப்போ என்னால முடியாது, முடியவே முடியாதுபா…”

“இல்ல தெரியாம தான் கேக்கறேன், எப்போ தான்பா நீ ரெடியாகுவ? ஒரு பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு ஆயிடுவியா? அது வரைக்கும் நான் இருப்பனான்னு எனக்கு தெரியாது!!”

தலையில் ஓங்கி தன்னையே அடித்து கொண்டு, “என்னப்பா? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? எல்லாம் நீங்க நல்லா தான் இருப்பீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.” என்று தனக்கும் அவருக்கும் சேர்த்தே தேற்றும்படியாக கூறினான்.

“சரிடா இப்போ சுத்தி வளைக்காம ஒழுங்கா பதில் சொல்லு. ஏன் கல்யாணம் வேண்டாம்னு தள்ளி போட்டுட்டே இருக்க?” இதற்கு பதில் மௌனமே!!! ஜீவாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து, அவனின் முகத்தை தன்பக்கம் திருப்பினார் ராகவன்.

“மனசுல இருக்குறத யார்கிட்டயாவது சொல்லனும்டா கண்ணா. அதுக்கு தான் சொல்றேன். அப்பாகிட்ட சொல்லு… ஏதோ உள்ளுக்குள்ள உன்னை திண்ணுட்டே இருக்குனு எனக்கு தெரியும்டா. சொல்லு என்ன பிரச்சனை?”

ராகவனின் அதட்டலுக்கு அடங்காத சிங்கமாக திமிரிய ஜீவா, இந்த அன்பொழுகிய குரலுக்கு முன் குட்டி பூனையாக மாறினான். அவரின் மடியை கட்டிக் கொண்டு, கதற ஆரம்பித்தான்.

“என்னால முடியலபா… என்னால அவள மறக்க முடியல.. சுத்தமா மறக்க முடியல! எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்துட்டேன். இந்த ஜென்மத்துல முடியுமானு எனக்கு இப்போ எல்லாம் தோண ஆரம்பிக்குது.

அந்த அளவுக்கு அவ என்னை டார்ச்சர் பண்றா… இதுல புதுசா இன்னோரு பொண்ணோட வாழ்க்கையும் வேற அழிக்கனுமா? சொல்லுங்கப்பா…”

“இது தான்டா உன்னோட பிரச்சனையே. உன்னால அவள மறக்க முடியலனு சொல்ற சரி. அதுக்கு அவ என்ன பண்ணினா? அவள எதுக்கு குறை சொல்ற? கொஞ்சம் யோசி ஜீவா.

என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டு பேர் மேலையும் தான் தப்பு இருக்கு… சரி, பழைய விஷயத்தை இப்போ கிளற வேண்டாம். சொல்லு, இப்போ என்ன பண்றதா உத்தேசம்?”

அவரை ஒன்றும் புரியாத பாவனையுடன் பார்த்து, தானுமே ஒரு குழந்தையாக மாறினான் ஜீவா. சிறிது நேரம் கழித்து, மெதுவான குரலில் ,“தெரியலப்பா…” என்றான். “நான் ஒண்ணு சொல்லுவேன். ஆனா, நீ அதை கரக்டா புரிஞ்சுக்கனும்.”

தன் மகனின் தலயை கோதிக் கொண்டே, அறிவுரை கூறினார் அந்த பெரியவர். “எனக்கு என்னவோ அன்பரசியும் உன்னை மறந்த மாதிரி தெரியல… நீயும் இப்படி சொல்ற. பேசாம இன்னோரு தடவ அன்புக்கிட்ட பேசிப் பாரேன்.

இவ்வளோ ஆசையை மனசுல வெச்சுக்கிட்டு எதுக்குபா வீண் பிடிவாதம்?? இல்ல, நான் வேணும்னா பேசட்டுமா?”

அவர் கூறியதை கேட்டு, ரூத்தரமூற்த்தியாக மாறினான் ஜீவா. “அப்பாபா!! போதும்பா… யாரும் யார்கிட்டயும் பேச வேணாம். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க! நானே…”

ஜீவா தன் வாக்கியத்தை நிறை செய்யும் முன்பே, ராகவனுக்கு கண்களில் தீப்பொறி பறந்தது! “ஹே, நிறுத்துடா! என்ன சும்மா நானே எல்லாம் பார்த்துக்கறேன், பார்த்துக்கறேன்குற?? எத்தனை நாளைக்கு பசங்கள பார்த்துப்ப? எல்லாம் உங்க அம்மா இருக்குற வரைக்கும் தான்!

அதுக்கப்புறம்? ஆனா, இப்போ ஒண்ணு சொல்றேன்டா ஜீவா. ஒரு நாள் நீ திரும்ப அன்புக்கிட்ட போகனும்னு நினைப்ப… அப்போ அதுக்கான சான்ஸ் உனக்கு கிடைக்காமலே போகலாம்… அப்போ அவளோட அருமை தெரிஞ்சு நீ ஃபீல் பண்ணுவடா!!

கண்டிப்பா பண்ணுவ… என்னை இதுக்கு மேலையும் பேச வைக்காத. இனிமேலாவது கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு எதுவா இருந்தாலும். சொல்லிட்டேன்!”

கத்திவிட்டு அவர் அறையை விட்டு, விறுவிறுவென சென்றுவிட்டார். ஜீவா தான் யோசனையுடன் அப்படியே அமர்ந்துவிட்டான். அவன் தந்தை சட்டென்று பொறுமை இழப்பவர் அல்ல. ஆனால், இழந்த பொழுதுகள் இவனிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அவ்வாரே நடந்தது இப்போதும். முதல் முறையாக தானும் தவறு செய்துவிட்டோமோ, என சிந்திக்கலானான். இதே போன்ற சிந்தனை ஓட்டம் அந்த வாரம் முழுவதும் அவனை ஆக்கிரமித்தது, என சொன்னால் அது மிகையாகாது.

****************************************************************************************************

அவனை போலவே வேறு ஒருவரும் மண்டை காய்ந்து போகும் அளவுக்கு மூளையை உபயோகித்தார். ‘கடவுள் இருக்கிறார்’ என நிரூபிப்பது போல, ஜீவா மலர்விழியை குழப்பிவிட்டான் என்றால், ஜீவாவை அவன் தந்தை குழப்பிவிட்டார்!

அப்படி குழப்ப குட்டையில் மீன் பிடித்து பிடித்து வெறுத்து போன மலர்விழி, சென்று நின்ற இடம் மயிலாப்பூர் பார்த்தசாரதி கோயில்! அங்கே தான் மலர் அன்பரசியை மீண்டும் சந்தித்தாள்.

அன்று சனிக்கிழமை ஆதலால், குழந்தைகளையும் தான் அழைத்து வந்திருந்தாள். தூரத்திலேயே அன்பரசி மலர்விழியை கண்டுக் கொண்டாள் … கோவிலை முழுதும் வலம் வந்துவிட்டு, உட்கார்ந்திருந்த மலரின் அருகில் சென்று குழந்தைகளுடன் அமர்ந்தாள்.

அவளை பார்த்ததும் மலர்விழியின் முகம் அன்று புலர்ந்த தாமரையாக மலர்ந்தது. “ஹே அன்புக்கா… எப்படி இருக்கீங்க?” நிக்கித்தாவை மடியில் அமர்த்திக் கொண்டு கேட்ட மலரை பார்த்து, “நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க?” என்றாள் குதூகலமாக.

“நான் நல்லாயிருக்கேன்கா. ஹே, குட்டீஸ்! உங்க பேரு என்ன??”

குழந்தைகளுடன் பேசியபடியே கண்கள் வினோத்திற்க்காக அலைந்தன. அதை கண்டு நமட்டு சிரிப்பை உதிர்த்து, மலரின் வாயை பிடுங்கினாள் அன்பு. “யாரை தேடுற மலர்? யாராவது வரனுமா?”

“ஹா.. இல்ல இல்லகா… சும்மா தான் பார்த்துட்டு இருந்தேன்”

“அப்படியா சரி சரி!” என சிரித்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். “உங்கிட்ட கொஞ்சம் பேசனும். இப்போ நீ ஃபீரியா? பேசலாமா?”

இதை கேட்டதும் மலர்விழியின் மனதில் தோன்றிய எண்ணம் இதுவே - என்ன இது எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கின்றனர்?? என்னவாக இருக்கும் என யோசித்து கொண்டே, “என்ன பேசனும்கா? சொல்லுங்க…” என்றாள் அன்பரசியை பார்த்து.

அன்பரசியோ அவளை நோக்கி சத்தமில்லாமல் அடுத்த அடியை வைத்தாள்.

“அது இங்க கோவில்ல உட்காந்து பேச முடியாது. நீ என்னோட வீட்டுக்கு வரியா? நாம பேசலாம். நான் கூட்டிட்டு போறேன்.” மலர் சிறிது யோசிப்பது போல் இருக்கவும், அவளின் தயக்கம் புரிந்தது அன்புக்கு.

“கவலைப்படாத… வினோத் ஆபீஸ் விஷயமா பெங்களூர் போயிருக்கான். வர ரெண்டு நாள் ஆகும். அதனால, நீ தாராளமா வரலாம்.” புன்னகையுடன் இடமும் வலமுமாக தலையசைத்து, வேறு காரணம் சொன்னாள் மலர்.

“அதுக்கு இல்லகா. அப்பாகிட்ட சொல்லனும். சரி வாங்க போகலாம்… அப்பாகிட்ட சொல்லிக்கறேன்” அன்பரசி வினோத்தின் காரை எடுத்து வந்திருந்தாள். அதை பார்த்ததும், பழைய ஞாபகங்கள் புடைசூழ காரில் ஏறினாள் மலர்விழி.

அவளின் தந்தையிடமும் எதையும் மறைக்காமல், உண்மையை கூறியே அனுமதி பெற்றாள். போகும் வழியாவும் பெரிதாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மலருக்கு குழந்தைகளை பார்ப்பதே வேலையாக போயிற்று.

வீட்டின் உள்ளே நுழைந்ததும், அனைவரும் மதிய சாப்பாடு முதலில் முடித்தனர். சாப்பாடு முடிந்ததும் நிக்கித்தாவும் நிலேஷும் கண்ணயர, இருவரும் பேசுவதற்க்கு வசதியாக போனது.

மலரை சோபாவில் தன் அருகில் அமர வைத்து, பேச்சை ஆரம்பித்தாள் அன்பு. “எனக்கு சுத்தி வளைக்காம பதில் சொல்லு மலர். உனக்கு வினோத்தை பிடிச்சிருக்கா இல்லையா?”

அன்பின் முகத்தை நேராக பார்க்காமல், கீழே தரையை நோக்கினாள் மலர்விழி. அன்பரசி மீண்டும் வற்புறுத்தவும், அவளால் மௌனமாக இருக்க முடியவில்லை. “எனக்கு பிடிச்சுருக்குகா. ஆனா, என்னோட அப்பாக்கு இதுக்கேல்லாம் சுத்தமா பிடிக்காது. அதுவுமில்லாம…”

“அப்பாகிட்ட நான் பேசறேன்மா. வேற எதாவது பிரச்சனை இருக்கா? சொல்லு…”

ஒரு நிமிடம், அழுத்தமான முகத்துடன் அன்பை நோக்கிவிட்டு, “ஆமாகா, என்னோட பாஸ் ஜீவா, என்கிட்ட வினோத்தை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னாரு.” என்றாளே பார்க்கலாம்.

அதுவரை மனதில் இருந்த சந்தோஷம், அப்பாடா இவளுக்கும் வினோத்தை பிடித்திருக்கிறது என குடிபுகுந்த நிம்மதி எல்லாம் காற்றோடு பறந்தோட, அன்பரசியின் முகம் பேய் அறைந்தது போலானாது.

இறுதியில், தன்னுடைய வாழ்க்கையின் தடம், வினோத்தின் வாழ்க்கையையும் பாதிப்புள்ளாக்கியதா??? “எதுக்கு அப்படி சொன்னாரு… கேட்டியா?” அன்பரசியின் முகம் போன போக்கை பார்த்து என்னவோ ஏதோ என பயந்து, உடனடியாக பதில் கூறினாள் மலர்விழி.

“கேட்டேன்கா… அவனை கல்யாணம் பண்னிக்கிட்டா, லைப் லாங் நீ தான் அவன் பின்னாடி அன்புக்காக போற மாதிரி இருக்கும். அவனுக்கு உன்னை தவிர மத்தவங்க தான் முக்கியமா இருப்பாங்கனு, சொன்னாருகா.”

“ஹோ! இவரு அப்படியே அன்பு மழையில குளிப்பாட்டிட்டு தான் மறுவேலை பாப்பாரு… வினோத்தை பத்தி இவரு எதுக்கு பேசறாரு? என்ன ரைட்ஸ் இருக்கு அவருக்கு?? பெருசா பேச வந்துட்டாரு!!!”

அன்பின் டென்ஷனை குறைக்கும் வழி தெரியாமல், அவளை அறியாமல் அன்பரசிக்கு பிடிக்காத அடுத்த கேள்வியை கேட்டாள். “அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்கா?”

கண்களில் அருவி வெடித்த அதே வேலையில், அன்பரசியின் கைகள் தானாக கழுத்தில் இருந்த தாலிக் கொடியை எடுத்து வெளியே நீட்ட, உதடுகள் வலியுடன் வார்த்தைகளை துப்பின. “அவர் தான் என்னோட புருஷன். ஆனா, இப்போ இல்ல. எங்களுக்கு டிவோர்ஸ் ஆகி மூணு வருஷம் ஆச்சு.”

மலர்விழி ஆதரவாக அன்பரசியின் தோளில் கை வைத்து தேற்ற, அன்பரசி ஜீவாவுடனான தன் வாழ்க்கை பயணத்தை கூறினாள் அவளிடம்.

Superb sis
 
Top