Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

morpheus 5

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
Morpheus 5




" ஓட ஓட ஓட தூரம் கொறையல

பாட பாட பாட பாட்டு முடியல

போக போக போக ஒன்னும் புரியல

ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல"

நமக்குன்னே பாட்டு எழுதுவாங்க போல என்று ரோஹினி இயர்போன்ஸை கலட்டிக் கொண்டிருக்கும் போதே ஹனிஷா ,"மச்சிசிசி….."என கத்திக் கொண்டே ஓடி வந்தாள், பின்னாலே ஜோஸ்னாவும்.

இருவர் முகத்தில் உள்ள மகிழ்வு இவளையும் தொற்றிக் கொண்டது.

"என்ன மச்சி இன்னக்கி ஹெச்.ஓ.டி. க்ளாஸ் முடிஞ்சி செம டோஸ் போல காதுல மூக்குலலாம் இரத்தம் வழிய வந்தயாமே.இன்னக்கி உன் க்ளாஸ் முழுக்க அதே பேச்சுதான்"

நம்ம டோஸ் வாங்றதுல பயபுள்ளக்கி என்ன ஒரு சந்தோசம் பாரு மன்சு ."ஏண்டி பேசமாட்டிங்க ,நீங்க ரெகுலரா க்ளியர் பண்ணிட்டிங்க என்னை பாரு ஆறு மாசம் பெயில் ஆகி தனியா மாட்டிக்கிட்டேன் ஒழுங்கா உங்க கூடவே பாஸ் பண்ணிருக்கலாம்."என சலிப்பாய் கூற.

"விடு மச்சி ..நாங்க நீ சந்தோச படுற மாதிரி ஒரு நியூஸ் சொல்ல போறோம்.1...2..3…"என ஜோஸ்னா ஹனிஷாவைப் பார்க்க "இந்த வாரம் நம்ம கோடிலிங்கா டெம்பிள் போறோம்"என கோரஸாக கத்த

இவர்கள் எதிர்பார்ப்பிற்கு நேர்மறையாக ரோஹினி கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தாள்.அவள் யாகூ என ஆர்ப்பரிப்பாள் என்று நினைக்க இப்படி பார்க்கவும் என்ன ஆயிற்று இவளுக்கு என இருவரும் விழிக்க "நீதான எப்பயும் அங்க போகனும்னு சொல்லிட்டே இருப்ப ,இப்போ ஏன் மொறைக்கிற ?"என ஹனி கேட்டதுதான் தாமதம்.

"ஏன்டி?ஏன்? இன்னக்கி என்னை வெறுப்பேத்தனும்னே கிளம்பி வருவிங்களா ,எத்தன வாட்டி கேட்ருப்பேன்,அப்போல்லாம் அது இது னு காரணம் சொல்லிட்டு .கரக்டா அந்த சிங்கம் வீக் என்ட் ட்யூட்டி போடுறப்போதான் போகலாம்னு சொல்விங்களா ? சோதிக்காதிங்கடி என்ன"என தரையை உதைத்து விட்டு அவர்கள் வழக்கமாக அமரும் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து விட்டாள்.

ஜோஸ்னா ரோஹினி தோளில் கை போட்டு "பேபி..மார்னிங் சாப்டியா "என சம்பந்தம் இல்லாமல் கேட்க ரோஹினி "இல்ல" என்றாள் உதட்டை பிதுக்கி .
"லஞ்ச்?."அதற்கும் உதடு பிதுக்க."இப்போ புரிஞ்சிருச்சி ..பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட..இந்தா ஸ்நிக்கர்ஸ் சாப்டு"என்று சாக்லேட் நீட்ட.சீன் போடாமல் அவளும் உடனே வாங்கி பிரித்து.முதல் வாய் ஜோஸ்னாவுக்கும் அடுத்த வாய் ஹனிக்கும் கொடுத்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டு மிச்சத்தை சாப்பிட்டு முடித்த பிறகே திரும்பினாள்.

" இப்போ சொல்லு என்னாச்சு"என்றாள் ஹனி.

"க்ளாஸ் கவனிக்கல சார்கிட்ட மாட்டிக்கிட்டேன் இந்த மாசம் முழுக்க வீக் என்ட் ட்யூடி பார்க்க சொல்லி பனிஸ்மென்ட் குடுத்துட்டார்"
"க்ளாஸ் கவனிக்காம நீ என்ன பண்ணீட்டு இருந்த??"என்று கேட்ட போதுதான் மார்பியஸ் முகம் பளிச்சீட்டது.

நரசிம்மர் சொன்னதும் அவளுக்கு குற்றவுணர்ச்சி எழுந்துவிட்டது.பொறுப்பான துறையை எடுத்து அலட்சியம் காட்டுகிறோமே என்று .அதிலேயே உழன்றதில் மிளிரொளியை மறந்திருந்தாள்.இப்போது நினைவிற்கு வந்ததும்.அய்யோ என்னாச்சோ என சடசட வென பையிலிருந்த புத்தகத்தை புரட்டினாள்.

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம்28


அரிஸ்டாடில் தியரி…………………
………………………………………..
………………………………………..
(ஜய்யோ இங்கிலிபீஸ்…..)


−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம் 31

நம்ம எல்லாருக்கும் கனவு வரும்……………………………………………………………………………………………………………………………………………
(ம்ச் இது இல்ல இதுக்கும் அப்றம்)

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம்32

கனவினை தேடிச் சென்ற என் தேடல்கள் திசை மாறி அவன் திசை செல்லலாயிற்று…………………………………………………………………………………..(இவ வேற நானே அதிசயமா ஒருத்தன சைட் அடிச்சேன் அதுவும் அட்டை படத்த அது பொறுக்காதே இவளுக்கு ..நீயே வச்சிக்க உன் மார்பியஸ.வா மன்சு திருப்பவோம்)

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பக்கம் 34

அந்த பிரம்மாண்ட பருந்து………………………………………………………………………………………………….(ஆத்தாடி ஓவர் டேக் பண்ணிடமே..ரிவர்ஸ் ரிவர்ஸ்)

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம் 33

நான் மிளிரொளி……………………………….

ஆறு வயதாய் இருக்கும் போது …………….(நெருங்கிட்டோம்)

அந்த பத்தியை அவசரமாக விரல்வழி கடக்க முயன்றாள்……

………...என் கால் பாறை முனையிலிருந்து சரியலாயிற்று.என் பொம்மையை நெருங்கிக் கொண்டே செல்ல …..(ஐ காட் இட்) மேலே படித்தாள்.

சட்டென எங்கிருந்தோ வந்த கழுகொன்று என் பொம்மையை அதன் கூர் கரங்களின் பிடியில் பிடித்துக் கொண்டது .நான் என் பொம்மையின் கால்களை பிடிக்க அது தலையை பற்றிக் கொண்டது .நான் அழுதுகொண்டே என் பிடியினை இருக்கினேன்.

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பக்கம்35

அந்த பிரம்மாண்ட பருந்து என் பொம்மையுடன் உயரப் பறக்க தொடங்க நான் கீழே வீழ்ந்துவிட்டேன்.உடலெல்லாம் ஏதோ ஈரம் பரவுவது போல் தோன்ற மெதுவே கண் விழித்தேன்.என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையில் படுத்திருந்தேன்.என் முக்கின் நுனியில் இருந்த வேர்வை துளிகளை என்னால் பார்க்க முடிந்தது

.நான் கண்டது கனவு என நான் உணர்வதற்கே சிறிது நேரம் பிடித்தது.என் அன்னையை நெருங்கிப் படுத்துக் கொண்டேன்.எப்போதும் என் அன்னை மேல் வீசும் சுகந்தம் எனக்கு பாதுகாப்பான உணர்வு தர பயம் கொஞ்சம் மட்டுபட்டது ஆனால் தூக்கம் வர வில்லை.கண்ணை மூடினாலே அந்த பருந்து என்னையே பார்ப்பது போல் தோன்றியது.தூக்கத்தில் கூட என் துன்பம் உணர்ந்தாள் போலும் என் மீது கைபோட்டு நான் இருக்கிறேன் என்பது போல் கட்டிக் கொண்டாள்.

மறுநாள் காலை கண்விழித்த போது என் அருகில் யாரும் இல்லை ,வழக்கம் போல் என் அம்மாவைத் தேடி நான் போக பின்கட்டில் கிணற்றிற்கு பக்கத்தில் இருந்த பப்பாளி மரத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தாள்.உலகின் மிகச் சிறந்த அழகி என் அம்மாதான்.மஞ்சள் பூசிய அவள் முகமும்,விரித்துவிட்ட கூந்தலும் அம்மன் சிலை உயிர்பெற்றால் இவள்போல் தான் இருக்கும்.

"பாப்பு குட்டி எந்திரிச்சிட்டிங்களா?..ஒரு நிமிசம்டா இதோ பழம் பறிச்சிட்டு அம்மா பால் ஊத்தி தரேன் நீங்க சமத்தா பிரஸ் பண்ணுங்க பாப்போம்"எனவும்

" பாப்பாக்கு முத்தா கொடுக்கல"என முகத்தை தொங்கபோட .

"பாப்பா பிரஸ் பண்ணாம டர்டி கேர்ளா இருக்காங்களே"என முகத்தை சுருக்க

"நான் ஒன்னும் டர்டி இல்லை"என்று சொல்லி நான் பிரஸ் எடுக்க ஓடினேன்.திரும்பி வந்து நான் பார்த்த போது அம்மா நின்று கொண்டிருந்த நாற்காலி வீழ்ந்து கிடந்தது. கிணற்றில் ஏதோ முனகல் போல் கேட்டது.
"மிரும்மா ...மிரும்மா ,""""என்ற அனத்தல்

"அம்மா…..அம்மா எங்க மா ..அம்மா வா..மா"என் உயரத்திற்கு திண்டு எட்டவில்லை. குதித்து குதித்து பார்க்க முயற்சிக்க அம்மா தெரியவேயில்லை.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம் 36


"மிரும்மா "என்ற முனகல் கூட தேய்ந்து கொண்டே போனது."அம்மா பாப்பா தான் அவுட்,பாப்பா அழுகிறேன் தான வாம்மா"என் அழுகை கேட்டு வாக்கிங் முடிந்து உள்ளே வந்த தாத்தா "குட்டிம்மா "என குறல் கொடுத்துக் கொண்டே வந்தார்.தாத்தா குரல் கேட்டதும் ஓடிப் போய் கட்டிக் கொண்டு "தாத்தா அம்மா "பே" ஆடுறாங்க .நான் அழுது கூட வரல வரசொல்லுங்க "என அழ.அவசரமாய் கிணற்றை நோக்கிச் சென்ற தாத்தா"அம்மாடி….ரேகா "என அப்படியே அதிர்ந்து விட்டார்.

அதன் பின் அக்கம்பக்கம் ஆட்கள் வந்து அம்மாவை வெளியே கொண்டு வந்தனர்.தோட்டத்திற்கு சென்ற அப்பாவும் வந்துவிட்டார் அதுவரை கம்பீரமாய் மட்டுமே நான் பார்த்த அப்பா அன்று வெற்றுத்தரையில் நெஞ்சில் அடித்து அழுதுகொண்டிருந்தார். ஏதேதோ பேசிக் கொண்டனர் எனக்கு புரிந்தது ஒன்றுதான்.அம்மா இனி இல்லை, அம்மாவை எங்கோ கூட்டி சென்றனர்.மீண்டும் மாலையில் அழைத்து வந்த போது.முழுதும் வெள்ளை துணியில் கட்டி கூட்டி வந்தனர்.அம்மாவுக்கு வெள்ளையே பிடிக்காது ப்ளூ தான் பிடிக்கும் ஆனா யார்க்கிட்ட சொல்ல .அம்மா அருகில் சென்று.அம்மாவை உலுக்கி "அம்மா பாப்பா டர்டி இல்ல இப்போ முத்தா குடு"என அழைக்க அப்பா இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தார்.அதன்பின் அம்மாவை தூக்கி சென்று விட்டனர்.

அங்கிருந்த அத்தைகள் பேசிக் கொண்டனர் பப்பாளி மரத்தின் பின் இருந்த தேனிகள் கொட்டிவிட்டதாம்.அம்மா நிலைதடுமாறி கிணற்றில் விழுந்துவிட்டாள் .தலையில் பலத்த அடி வெளியில் எடுத்த போதே அம்மா இறந்துவிட்டாளாம்.அப்பா அதன் பிறகு யாரிடமும் பேசவே இல்லை.தாத்தா தான் என்னை பார்த்துக் கொண்டார்.ஒரு நாள் திடீரென்று அப்பா அந்த கிணற்றின் திட்டினை கடப்பாறையால் இடிக்க போக.அப்பாவை மனநோய் தாக்கிவிட்டதாக சொன்னார்கள் கொஞ்ச நாளில் இறந்தும் போனார்"

கனவுகள் வெறும் கற்பனையின் வெளிப்பாடு,அடி மனதின் பயம் என்று என்னிடம் சொன்னாள் நான் என்ன சொல்ல.பட்டாம் பூச்சியாய் இருந்த வாழ்கையை அந்த ஒற்றைக் கனவு புரட்டிப்போட்டு விட்டது.

இந்த புத்தகத்தை நான் என் துன்பத்தை பகிரவோ இல்லை இரக்கம் தூண்டவோ எழுதவில்லை. இது என் கடைசி நம்பிக்கை.என் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.என் கடைசி அத்தியாயம் முடியும் முன் நான் தெரிந்து கொள்ள வேண்டியதும் தெரியப்படுத்த வேண்டிதும் நிறைய இருக்கிறது.இது வாழ்வா?சாவா?போராட்டம்.

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பக்கம் 37


என் இரண்டாம் கனவு என் பதிமூன்றாம் வயதில் வந்தது.அன்று………………………

"ரோஹிஹிஹிஹிஹிஹிிஹிஹிிஹி"என இவர்கள் கத்திய கத்தலில் காதே கிழிந்திருக்கும்."என்னடி.."என கோபமாய் கேட்டாள் பாதியிலேயே தொல்லை செய்த கடுப்பில்.எதிரில் அவளை விட கடுப்பாய் இருந்தனர் இருவரும்."ரொம்ப ஓவரா போற டீ .இங்க இவ்வளவு நேரமா கத்துறோம் நீ அந்த புக்க கட்டிட்டு அழுகுற.நரசிம்மா சார் பண்ணதுல தப்பே இல்ல டி"

"சாரி டி கொஞ்ச நேரம் இருங்க ஒரு பக்கம் பட்டும் படிச்சிட்டு வரேன்"என கெஞ்ச.டக்கென புத்தகத்தை பறித்துக் கொண்டாள் ஹனி. "மூடிட்டு வா டி" என மரியாதையாக கூற.வேறு வழியின்றிஅவளும் பின் தொடர்ந்தாள்.


ஹனிஷாவின் ஸ்கூட்டியில் ரோஹினியும்,ஜோ தனி ஸ்கூட்டியிலும் சென்று கொண்டிருந்தனர்.ஏதோ யோசனையில் இருந்தாள்

ரோஹினி:"ஹனி.."

ஹனி: ம்ம்

ரோஹினி: ஹனினினினி……

ஹனி: என்னடி

ரோஹினி: இன்னக்கி நாளே ஒரு மாதிரி இருக்கு டி

ஹனி: நீ தினமும் அது தானடி சொல்ற.

ரோஹினி: இல்ல டி இன்னக்கி நாள் என்கிட்ட ஏதோ எதிர் பார்க்குது டீ.போஸ்டர்லாம் என்கிட்ட பேசுது தெரியுமா.

" கீர்ச்ச்ச்ச்ச் "என்று சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தி திரும்பி பார்த்தாள்.பின்னே வந்த வாகனங்களின் ஹார்ன் சத்தங்கள் இசைக்கத் துடங்க ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தி இறங்கினர்.
"என்னடி மறுபடியும் ஆரம்பிக்கற முன்னாடி தான் ஏதோ மன்சு கின்சு னு யார்கிட்டயோ தனியா பேசிட்டு இருந்த இப்போ ஏதோ சரியாகிட்டனு பார்த்தா ,ஒரு படி மேல போய் போஸ்டர் பேசுதுங்கிற".என்று ஹனி ஒரு பீதியுடன் கேட்டாள்.

" மன்சு யாரோ இல்லடி என் மனசாட்சி"என்றாள் ரோஹியும் ரோசத்துடன்.
"ஏற்கனவே நீ சைக்கேட்டரி வார்டுக்கு போய் பார்த்து அங்க இருந்த டாக்டரே ஓடிட்டார்,மறுபடியும் ஏதாச்சும் இழுத்து வைக்காத டி".ஹனி கண்ணில் வேதனையும் பயமும் அப்பட்டமாய் தெரிந்தது.காதல் தோல்வி ஆன பின் தானும் துன்புற்று சுற்றத்தாரையும் துன்புறுத்தி இருக்கிறோம் என ரோஹினக்கு புரிந்தது.
"அது இல்ல ஹனி உண்மையாவே நடக்கிறதெல்லாம் ஒன்னோட ஒன்னு சம்பந்த படுற மாறி இருக்கு.இன்னக்கி புக் கடை போனேன்ல அங்க "புத்தகங்களை நாம் தேர்வு செய்வதில்லை புத்தகங்கள் தான் நம்மை தேர்வு செய்கின்றன"னு எழுதி இருந்தது.கரக்ட்டா அப்போ என் பிரேஸ்லெட் ல இந்த புக் மாட்டுச்சு தெரியுமா.அப்றம் அந்த புக் வாங்கி என்டரி போடுற அப்போ அங்க "சில புத்தகங்கள் வாழ்வை மாற்ற வல்லவை"னு போட்ருந்துச்சு தெரியுமா.நம்ம நரசிம்மர் கிட்ட திட்டு வாங்கிட்டு வெளிய வரேன் அங்க அங்க எதுவுமே காரணம் இல்லாம நடக்காது ன்னு போட்ருந்துச்சு .பாத்தியா ஏதோ இந்த நாள் எனக்கு சொல்ல வர மாதிரி இல்ல .

" ச்ச எல்லாம் எதார்த்தமா நடந்திருக்கு புக் ஸாப் னா இப்படி ஏதாச்சும் கவர்ர மாதிரி இருக்கதான் செய்யும்.அந்த சிங்கம் சார் ரூம்ல அது ரொம்ப நாளா இருந்திருக்கும் நீ ரொம்ப யோசிக்ற மொத அந்த புக் படிக்குறத குறை அப்போதா இப்டி கற்பனை பண்றத நிறுத்துவ."

"அப்படிங்கற"

"ஆமாங்கற, இப்போ...ம்ம்ம்...ஹா ….அங்க பாரு அந்த இன்சூரன்ஸ் பேனர் பாரு "என அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு மேல் இருந்த பிளக்ஸ் போர்டை காட்ட அதில்
தாய் பறவை குஞ்சுகளை அணைத்தது போல் படம் இருந்தது கீழே "உங்கள் வாழ்க்கை பாதுகாத்திடுங்கள் எங்கள் கரங்களில்"என எழுதியிருந்தது.

பாத்தியா அது கூட போஸ்டர் தான் அதுல எழுதி இருக்கிறதென்ன நடக்கவா போகுது.சும்மா ஏதோ அட்ராக்ட் பண்றதுக்காக எழுதுரது அவ்வளவு தான் அத விட்டு அது கிட்ட போய் பேச்சு வார்த்தை நடத்திகிட்டு ..கிறுக்குப்பய புள்ள..வா போவோம்" என வண்டியை ஸ்டார்ட் செய்யப்போக ".தடார்"என்ற சத்தம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் என்ன வென்று பார்க்க.அவர்கள் நின்ற இடம் ஒரு கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இடம் அதன் முன்தான் பேனர் இருந்தது ஏதோ கவனக்குறைவு போல கட்டுமான பணிக்காக போட்டிருந்த கம்பிகள் மடமடவென சரிய முதல் கம்பி பேனர் ஏந்தி நின்ற பிடிமானத்தின் மீது பட அது கவிழ்ந்திருந்தது.அது அருகில் நின்ற லாரியன் மீது சாய ஒரு முக்கோண வடிவம் போல் இருந்தது.அதன் கீழ்தான் ஹனியும் ரோஹியும் அவர்கள் ஸ்கூட்டியும்.இருவரும் காதை பொத்தி அப்படியே அமர்ந்து விட அதையும் மீறி ஏதோ எரிகற்களின் மழை பெய்ந்து ஓய்ந்தது போல் இருந்தது.வெகு நேரத்திற்கு பிறகு ரோஹினி காதையும் கண்ணயும் திறக்க எதிரே பரிதாபமாய் ஹனி அமர்ந்து கொண்டிருந்தாள்.அது என்ன புக் டி

தந்தியடித்த படியே குரல் வெளி வந்தது

"மா..ர்..பி..யஸ்"

காண்போம்…..
 
செம சூப்பரா எழுதுறீங்க
வாழ்த்துக்கள், மீனுக்குட்டி
 
Top